29 மே, 2010

நல்லிணக்க ஆணையத்துக்கு ஆதரவு"

செய்தியாளர் சந்திப்பில் ஹில்லாரி கிளிண்டனுடன் ஜி.எல்.பீரிஸ்
செய்தியாளர் சந்திப்பில் ஹில்லாரி கிளிண்டனுடன் ஜி.எல்.பீரிஸ்
அமெரிக்க ராஜாங்க அமைச்சருடன் இலங்கை வெளியுறவு அமைச்சர்
இலங்கயில் யுத்தத்துக்கு பின்னர் நல்லிணக்கத்தைக் கொண்டுவருவது தொடர்பில் அரசாங்கம் தன்னளவில் ஏற்படுத்தியுள்ள ஆணையத்துக்கு அமெரிக்காவின் ஆதரவு கிடைத்துள்ளது.

இலங்கையில் உள்நாட்டளவில் ஆணையம் அமைக்கப்படுதற்கு தான் ஆதரவு தருவதாகக் கூறியுள்ள அமெரிக்க ராஜாங்க அமைச்சர் ஹில்லாரி கிளிண்டன் அம்மையார், இந்த ஆணையத்துக்கு போர்க்குற்ற குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கான அதிகாரமும் வழங்கப்பட வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

போர்க் குற்ற குற்றச்சாட்டுகள் தொடர்பில் சுயாதீன சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என உள்நாட்டளவிலும் சர்வதேச அளவிலும் விமர்சகர்கள் விரும்புகின்றனர்.

ஆனால் இலங்கையில் யுத்தத்தின் கடைசி ஏழு ஆண்டுகள் காலப் பகுதியில் இருந்து படிப்பினைகளைப் பெற்று, இன நல்லிணக்கத்துக்கான வழிவகைகளையும் ஆராய்வதற்காக எட்டு பேர் கொண்ட ஆணையத்தையே இலங்கை அரசாங்கம் அண்மையில் அமைத்துள்ளது.

பீரிஸ்- கிளிண்டன் சந்திப்பு

இந்நிலையில் வாஷிங்டனில் இலங்கை அமைச்சர் ஜி.எல்.பீரிஸுடன் உரையாடிவிட்டு செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட கிளிண்டன் அம்மையார் இந்த ஆணையத்துக்கு தான் ஆதரவு தெரிவிப்பதாகக் கூறினார்.

"இலங்கையில் அரசியல் ரீதியிலும் இன ரீதியிலும் நல்லிணக்கம் ஏற்படுவதை அமெரிக்கா வலுவாக ஆதரிக்கிறது. உள்நாட்டளவில் நெருக்கடி மிக்க காலகட்டங்களில் இருந்து வெளிவந்திருந்த மற்ற நாடுகளில் இப்படியான விசாரணை ஆணையங்கள், நடந்த தவறுகளுக்கு பதில் தருவதிலும், நடந்த சம்பவங்களுக்கு காரணமானவர்கள் அவற்றுக்கு பொறுப்பேற்கவைப்பது என்பதிலும் முன்னேற்றத்தை ஏற்படுத்தியிருந்தன. மற்ற இடங்களில் அமைக்கப்பட்டிருந்த இப்படியான ஆணையங்கள் பயன்படுத்தியிருந்த சிறந்த வழிகளை எல்லாம் இலங்கையில் தற்போது அமைக்கப்பட்டுள்ள ஆணையம் கைகொள்ள வேண்டும்." என்றார் அவர்.

'நடந்த சம்பவங்கள்' என்று குறிப்பிட்டு அந்த சம்பவங்களுக்கு தனிப்பட்ட ரீதியில் யார் பொறுப்பேற்க வேண்டும் என்பதை ஆராய்கின்ற அதிகாரம் இலங்கை நல்லிணக்க ஆணையத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் 'போர்க் குற்றங்கள்' என்பது இந்த ஆணையத்துக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தில் எந்த ஒரு இடத்திலும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களும் இந்த வாரம் அல்ஜசீரா தொலைக்காட்சிக்கு அளித்திருந்த ஒரு செவ்வியில், "குற்றம் இழைத்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படலாம். ஆனால் பயங்கரவாதத்தை தோற்கடித்தமைக்காக எவர் ஒருவரும் தண்டிக்கப்பட மாட்டார்கள்" என்று குறிப்பிட்டிருந்தார்.

விமர்சனங்கள்

இலங்கை அரசாங்கத்தால் அமைக்கப்பட்டுள்ள ஆணையம் தொடர்ந்து சர்வதேச அளவிலும் உள்நாட்டு அளவிலும் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது.

புதிய ஆணையத்துக்கு எதிராக எழுந்துள்ள சமீபத்திய விமர்சனம் என்பது, இலங்கை அரசாங்கத்தில் முந்தைய விசாரணைக் குழுக்களின் உறுப்பினராகவும் இலங்கை அரசாங்கத்தின் ஆலோகராகவும் இருந்த எம்.சி.எம். இக்பால் என்பவரிடமிருந்து வந்துள்ளது.

"இப்படியான விசாரணை ஆணையங்கள் நீதியை நிலைநாட்டுவதில் அடுத்ததுடுத்து ஆட்சியில் இருந்தவர்களும் தொடர்ந்தும் தவறிவந்துள்ளனர் . தவிர தற்போது நியமிக்கப்பட்டுள்ள ஆணையத்தின் உறுப்பினர்கள் பக்கச்சார்பின்றி செயல்படக்கூடியவர்கள் அல்ல." என்றும் இவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

மனித உரிமை தொடர்பில் அரச ஆணைக்குழுவின் விசாரணை போதுமானது என பாலித கொஹன தெரிவிப்பு

மனித உரிமை மீறல் தொடர்பான விசாரணைகளை நடத்த அரசாங்கத்தின் ஆணைக்குழு போதுமானதென ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் வதிவிடப் பிரதிநிதி பாலித கொஹன தெரிவித்துள்ளார். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவிற்கு பூரண அதிகாரங்கள் காணப்படுவதாகவும், வேறு ஓர் சர்வதேச ஆணைக்குழுவின் விசாரணைகள் தேவையில்லையெனவும் அவர் கூறியுள்ளார். பாராளுமன்ற சட்டத்தின் அடிப்படையில் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு உருவாக்கப்பட்டுள்ளதாகவும், விசாரணைகளை நடாத்துவதற்கு தேவையான சகல அதிகாரங்களும் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இருதரப்பினராலும் உரிமைமீறல்கள் இடம்பெற்றிருக்கலாமெனவும், விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமெனவும் பல்வேறு மனிதஉரிமை அமைப்புக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றன. மற்றுமொரு ஆணைக்குழு விசாரணை நடத்தினால் குழப்பநிலை உருவாகும். உரிய ஆதாரங்களின்றி இவ்வாறான விசாரணைகளை நடத்த சர்வதேச அமைப்புக்கள் வலியுறுத்தக்கூடாது. குற்றாவாளிகளை கண்டுபிடிப்பதனை மட்டும் நோக்காகக் கொண்டு ஆணைக்குழு உருவாக்கப்படவில்லை. ஏனைய விடயங்கள் தொடர்பிலும் ஆணைக்குழு கவனம் செலுத்தும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்
மேலும் இங்கே தொடர்க...

வவுனியாவில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள்-


வவுனியாவில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்கு பல மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன் அபிவிருத்திப் பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வவுனியா மாவட்ட அரசஅதிபர் பீ.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். ஹேன்ரிப் திட்டத்தின் ஊடாக 43கிராமங்கள் அடையாளம் காணப்பட்டு 100மில்லியன் ரூபா செலவில் நெடுங்கேணி பகுதிக்கு நீர்விநியோக திட்டத்தை அமுல்படுத்தவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை 43மில்லியன் ரூபாய் செலவில் நவீனசந்தை மற்றும் பஸ் நிலையமும், 23மில்லின் ரூபாய் செலவில் பயிற்சி நிலையமொன்றும், பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்திற்கு அரிசி ஆலையொன்றும் அமைக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே வவுனியா பஸ் நிலையத்தினுள் தனியார் வாகனங்கள் செல்வதற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது. வவுனியா நகரசபையின் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி உறுப்பினர் எஸ்.குமாரசாமி இவ்விடயத்தை கவனத்திற்கு கொண்டுவந்தையடுத்து தடை நீக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கை ஆணைக்குழுவின் செயற்பாட்டில் ஹிலாரி கிளிண்டன் நம்பிக்கை


இறுதிக்கட்ட யுத்தம் தொடர்பிலான உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு உறுதிமொழிகளை நிறைவேற்றுமென அமெரிக்க இராஜாங்கச்செயலர் கிலாரி கிளிண்டன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். குறித்த ஆணைக்குழு யுத்தக்குற்றச் செயல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக பக்கச் சார்பற்ற விசாரணைகளை நடத்தி தண்டனை வழங்குமென எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இலங்கை மக்களின் விருப்பங்களையும் அபிலாசைகளையும் பூர்த்திசெய்யும் வகையில் ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் அமையவேண்டுமென்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ_டன் நேற்றையதினம் நடைபெற்ற சந்திப்பின் பின்னரான ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இவற்றைத் தெரிவித்துள்ளார். மூன்று தசாப்தகால யுத்தத்தில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டவர்கள் இலங்கை மக்களே. இலங்கை அரசு யுத்தக் குற்றங்கள் தொடர்பில் நிச்சயமாக விசாரணை மேற்கொள்ள வேண்டுமென உள்நாட்டு மனித உரிமைக் குழுக்கள் வலியுறுத்துகின்றன. இலங்கையில் யுத்தக் குற்றங்கள் தொடர்பாக ஆராய்வதற்கு நியமிக்கப்பட்டுள்ள விசேட குழுவிடம் நம்பிக்கை வைக்க முடியும். இதன்மூலம் இலங்கையின் நிரந்தர சமாதானத்தை நிலைநாட்ட முடியும். இந்தக்குழு சுயாதீனமாகவும், நீதியாகவும் தமது கடமைகளை நிறைவேற்றி வருகின்றது. இதற்கு அமெரிக்கா பூரண ஒத்துழைப்பினை வழங்கும் என்றும் ஹிலாரி கிளிண்டன் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

கீரிமலை வைரவர் ஆலயத்தில் பொங்கலிட ஒருசிலருக்கே அனுமதி

கீரிமலை கவுனாவத்தை ஆலயத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற வருடாந்த பொங்கல் நிகழ்விலும் மற்றும் வேள்வியிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டார்கள். அதிகாலை முதல் மக்கள் யாழ். குடாநாட்டின் பல பகுதிகளிலிருந்தும் வேள்வி நடைபெற்ற இடத்தில் கூடினார்கள்.

ஆலயம் உயர் பாதுகாப்பு வலயத்தில் இருப்பதனால் கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக கவுனாவத்தை வைரவர் ஆலயம் அமைந்துள்ள இடத்தில் மக்கள் சென்று தமது நேர்த்திக் கடனை நிறைவேற்ற அனுமதிக்காத நிலைமை தொடர்ந்து காணப்படுகின்றது.

இந்த வகையில் இவ்வாண்டும் ஆலய பிரதம குரு உட்பட மட்டுப்படுத்தப்பட்ட மக்கள் அங்கு பொங்கலிடவும் ஒரு கடா, ஒரு கோழி வெட்டவும் அனுமதிக்கப்பட்டது.

ஏனைய பல நூற்றுக்கணக்கான கடாக்கள் மற்றும் கோழிகள் ஆலயம் அமைந்துள்ள இடத்திலிருந்து சுமார் இரண்டு கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள தனியார் காணியொன்றில் வெட்டப்பட்டன. கடாக்கள் மிகவும் கோலாகலமாக உழவு இயந்திரங்களில் ஏற்றப்பட்டு, மாலைகள் அணிவிக்கப்பட்டு அதிகாலை 3.30 மணி முதல் கடா வெட்டப்படும் இடத்திற்குக் கொண்டு வரப்பட்டன.
மேலும் இங்கே தொடர்க...

பிரிட்டனில் குடியேற கட்டுப்பாடு: புதிய அரசு முடிவு

நாடுகளிலிருந்து பிரிட்டனில் குடியேறுவோர் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த புதிதாக பொறுப்பேற்றுள்ள டேவிட் கேமரூன் அரசு முடிவு செய்துள்ளது. குறிப்பாக ஐரோப்பிய நாடுகள் அல்லாத பிற நாடுகளிலிருந்து அதாவது இந்தியா போன்ற நாடுகளிலிருந்து பிரிட்டன் குடியுரிமை கோருவோரைக் கட்டுப்படுத்த முடிவு செய்துள்ளது. இத்தகவலை குடியேற்றத்துறை அதிகாரி டேமியன் கிரீன் தெரிவித்துள்ளார்.

÷பிரிட்டன் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு இத்தகைய முடிவை எடுத்துள்ளதாக அவர் கூறினார்.

÷2009-ம் ஆண்டில் பிரிட்டனில் நிரந்தர குடியுரிமை கோரி குடியேறியவர்களில் முதலிடத்தில் இந்தியர்கள் உள்ளனர். கடந்த ஆண்டில் மட்டும் 26,535 பேர் பிரிட்டனில் குடியேறியுள்ளனர். இது ஒட்டுமொத்தமாக குடியேறியவர்களுடன் ஒப்பிடுகையில் 13 சதவீதம் அதிகமாகும். ஆனால் முந்தைய ஆண்டைக் காட்டிலும் 124 சதவீதம் அதிகமாகும்.

÷இந்தியர்களுக்கு அடுத்தபடியாக பாகிஸ்தானிலிருந்து குடியேறியவர்களின் எண்ணிக்கை 20,945 மற்றும் வங்கதேசத்தவர்களின் எண்ணிக்கை 12,040 ஆகும்.

÷1990-ம் ஆண்டுகளில் கடைப்பிடிக்கப்பட்டதைப் போன்று கடுமையான கட்டுப்பாடுகளைப் பின்பற்றுவதன் மூலம் பிரிட்டனில் குடியேறுவோரின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த முடியும் என்று நம்புவதாக கிரீன் குறிப்பிட்டார்.

÷மாணவர்கள், பணியாளர்கள், திருமணம் முடிந்து இங்கு குடியேறுவோர் என பல தரப்பினரையும் எவ்விதம் கட்டுப்படுத்தப் போகிறோம் என்பதை வரும் வாரங்களில் பார்க்கலாம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

÷அரசு கொண்டு வர உள்ள இத்தகைய கட்டுப்பாடுகள் நடைமுறை சாத்தியமில்லாதது. இதை எதிர்த்து நீதிமன்றம் செல்லப் போவதாக பிரிட்டனில் பணிபுரியும் பிற நாட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கைப் பிரச்னைக்கு அரசியல் தீர்வு காண ராஜபட்சவிடம் வலியுறுத்த வேண்டும்: பிரகாஷ் காரத்


சென்னை, மே 28: இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு அரசியல் தீர்வு காண அந்த நாட்டு அதிபர் ராஜபட்சவிடம் இந்தியா வலிறுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத் கூறினார்.

வரும் ஜூன் 8-ம் தேதி இந்தியாவுக்கு வரும் ராஜபட்சவிடம், போரினால் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களுக்கு விரைந்து மறுவாழ்வு அளிக்குமாறு வலியுறுத்தவும் மத்திய அரசுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இலங்கைத் தமிழர் பிரச்னைக்குத் தீர்வு என்ற தலைப்பிலான கருத்தரங்கம் சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அதில் பங்கேற்று பிரகாஷ் காரத் பேசியது: இலங்கையில் போர் முடிந்து ஓராண்டாகிறது. அந்த நாட்டில் ஜனநாயகத்தை முன்னெடுத்துச் செல்ல இப்போது வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிப்பது குறித்து இலங்கையில் அரசியல் தலைவர்கள் பேசி வந்தனர்.

ஆனால், போரில் இலங்கைக்கு கிடைத்த ராணுவ வெற்றி, அதிகாரப் பகிர்வு குறித்த பேச்சுகளை பின்னுக்குத் தள்ளியுள்ளது. இலங்கையைப் பொறுத்தவரை இரண்டு முக்கியமானப் பிரச்னைகள் இப்போது உள்ளன. தமிழர் பகுதிகளில் மீண்டும் சகஜ நிலையை ஏற்படுத்த வேண்டும்.

இலங்கைத் தமிழர் மறுவாழ்வு தொடர்பாக பேசியுள்ள ராஜபட்ச, போரினால் இடம்பெயர்ந்த தமிழர்கள் அனைவரையும் மீண்டும் அவர்களது பகுதிகளில் குடியமர்த்த மேலும் 3 மாதம் ஆகும் என்று தெரிவித்துள்ளார். ஏற்கெனவே, இந்த ஆண்டு ஜனவரிக்குள் அனைத்துத் தமிழர்களும் வீடுகளுக்கு அனுப்பப்படுவார்கள் என்று அவர் தெரிவித்திருந்தது குறிஷீப்பிடத்தக்கது.

தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு கிடைக்கும் வகையில் அரசியல் சட்டத்தை சீரமைக்க வேண்டும். இலங்கையில் உள்ள சிங்களர்கள் மற்றும் தமிழர்களின் அரசியல் தலைவர்கள் அரசியல் தீர்வை நோக்கி பணியாற்ற வேண்டும். பிரச்னைகளை ஜனநாயக ரீதியில் பேசித் தீர்ப்பதற்கு பொதுவான தளம் உருவாக்கப்பட வேண்டும். ராஜபட்ச இந்தியாவுக்கு ஜூன் 8-ம் தேதி வருகிறார்.

அப்போது, இலங்கைத் தமிழர்களுக்கு விரைந்து மறுவாழ்வு அளிக்கவும், இந்தப் பிரச்னைக்கு அரசியல் தீர்வு காணவும் ராஜபட்சவை இந்தியா வலியுறுத்த வேண்டும் என்றார் பிரகாஷ் காரத். இந்தக் கருத்தரங்கில் மார்க்சிஸ்ட் கட்சியின்

மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக் குழு

உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் உள்ளிட்டோர்

பங்கேற்றனர்.
மேலும் இங்கே தொடர்க...

குப்பைத்தொட்டியிலிருந்து சிசு மீட்பு; பிரசவித்து வீசிய தாயும் கைது





மஸ்கெலியா - லக்கம் கடை வீதியில் குப்பைத்தொட்டி ஒன்றிலிருந்து நேற்றுக் காலை சிசுவொன்று மீட்கப்பட்டுள்ளது.

காலை 5.45 அளவில் கடைவீதியில் குப்பை கொட்டுவதற்காகச் சென்ற ஒருவர் வழங்கிய தகவலையடுத்து மஸ்கெலியா பொலிஸார் ஸ்தலத்திற்கு விரைந்து சிசுவை மீட்டெடுத்தனர். சிசு எறியப்படுவதற்கு ஒரு மணித்தியாலத்திற்கு முன்பு பிறந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

குப்பைத் தொட்டியில் சிசுவின் அழுகைச் சத்தத்தைக் கேட்டவர் ஏனையவர் களுக்கும் கூறியுள்ளார். எனினும், உயிருடன் கிடந்த சிசுவை காலை 6.45 அளவில் பொலிஸார் வந்து மீட்டு மஸ் கெலியா வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றனர். பின்னர் சிசு நாவலப்பிட்டி வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்ல ப்பட்டது. சிசு தேகாரோக்கியமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. இதேவேளை, இந்தச் சிசுவைப் பிரச வித்துக் குப்பைத் தொட்டியில் எறிந்த தாயை நேற்றுக் காலை 9 மணியளவில் பொலிஸார் கண்டு பிடித்தனர். குப்பைத் தொட்டியிலிருந்து குறித்த ஒரு வீடுவரை உதிரச் சொட்டுகள் காணப் பட்டதை அடிப்படையாக வைத்து அந்த இளம் தாய் கண்டறிப்பட்டாள்.
மேலும் இங்கே தொடர்க...