28 டிசம்பர், 2010

முன்னாள் புலி உறுப்பினர்களின் விபரம் சேகரிக்கப்படுவதால் யாழில் அச்ச நிலை

undefined


யாழ்ப்பாணத்தில் விடுவிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களின் வீடுகளுக்குச் செல்லும் புலனாய்வுப் பிரிவினர் அவர்கள் தொடர்பான தகவல்களை திரட்டிவருவதால் மீண்டும் ஓர் அச்ச நிலை ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.

யாழில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் கொலை, கொள்ளைச் சம்பவங்களுடன் முன்னாள் புலி உறுப்பினர்களுக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறி இவ்வாறு விபரம் சேகரிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எனினும் மறுவாழ்வுத் திட்டத்;தின் கீழ் புனர்வாழ்வளிக்கப்பட்டவர்களின் விபரங்களைப் பெறுவதற்காகவே இவ்வாறு விபரங்கள் கோரப்படுவதாக இராணுவத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

வடகொரியாவின் அணு ஆயுதம் தொடர்பாக தகவல் அறிய முயன்ற தென் கொரிய இராணுவ அதிகாரி சீனரினால் கைது




சீன இராணுவ அதிகாரிக்கு இலஞ்சம் கொடுத்து வட கொரியாவின் அணு ஆயுதம், ஏவுகணை தயாரிப்பு ஆகியன தொடர்பான தகவல்களை பெற முயன்ற தென் கொரிய இராணுவ அதிகாரியை சீனா கைது செய்து சிறையில் வைத்துள்ளது.

வட கொரிய அரசின் அதிகாரபூர்வ நாளிதழான யானோப் செய்தி நிறுவனமும், தென் கொரியாவின் ஜூங் ஆங் நாளிதழும் இந்த செய்தியை வெளியிட்டுள்ளன.

தென் கொரிய இராணுவத்தின் இடை நிலை தளபதியாக பணியாற்றிவரும் சோ என்பவர், சீன நாட்டின் ஷெங்கியாங் நகருக்கு வந்திருந்தபோது, சீன இராணுவ அதிகாரி ஒருவரிடம் வட கொரியாவின் அணு ஆயுதம், ஏவுகணைகள் தொடர்பான இரகசியங்களைப் பெறுவதற்கு இலஞ்சம் தர முற்பட்டபோது, அவரை கண்காணித்து வந்த சீன உளவுப் பிரிவினர் கைது செய்ததாக அச்செய்திகள் கூறுகின்றன. வட கொரியாவின் ஆயுத அமைப்புகள் குறித்து தென் கொரியா உளவறிய முற்படுவதை தடுப்பதில் சீனா மிக அதிகமான கவனம் செலுத்தி வருகிறது என்பதையே இந்நடவடிக்கை உறுதி செய்கிறது என்றும், வட கொரியா தொடர்பாக உளவில் ஈடுபட்ட மேலும் ஒரு தென் கொரிய உளவாளி சீனாவின் பிடியில் உள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

சோ என்கிற அந்த தென் கொரிய இராணுவ மேஜர் கடந்த 14 மாதங்களாக சீன சிறையில் உள்ளதாக அச்செய்திகள் கூறுகின்றன.

அதே நேரத்தில் வட கொரியாவின் அணு ஆயுத நிலைகளை அறிந்துகொள்வதில் தென் கொரிய அதீத கவனம் செலுத்தி வருவது, அந்த இலக்குகளை துல்லியமான தாக்குதல் நடத்தி அழிக்கும் இராணுவ நடவடிக்கை எடுப்பதற்கே என்றும் கூறப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...

இவ்வருடம் 2 இலட்சம் பேருக்கு வெளிநாட்டில் வேலைவாய்ப்பு

undefined
இவ்வருடம் இரண்டு இலட்சம் பேர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்று நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக வெளிநாட்டு அமைச்சு தெரிவிக்கின்றது.

மொத்தம் 2 இலட்சத்து 3 ஆயிரத்து 488 பேர் வெளிநாட்டு வேலை வாய்ப்பை பெற்றுள்ளதாகவும், இவர்களில் 1 இலட்சத்து ஆயிரத்து 140 பேர் ஆண்களும், 89ஆயிரத்து 409 பேர் பெண்களும் ஆவர்.

90 ஆயிரம் பேர் சவூதி அரேபியாவில் வேலை பெற்றுள்ளதாகவும் தற்போது சவூதி அரேபியாவில் 56 ஆயிரத்து 100 இலங்கையர்கள் தொழில் புரிவதாகவும் அமைச்சு தெரிவிக்கின்றது.

இலங்கையிலிருந்து சென்றுள்ள ஏனையவர்கள் பஹ்ரைன், ஓமான்,கட்டார், குவைத், இஸ்ரவேல், சிங்கப்பூர், மலேசியா, ஜோர்தான்,சைபிரஸ், மாலைத்தீவு, தென்கொரியா போன்ற நாடுகளில் பணி புரிகின்றனர்.
மேலும் இங்கே தொடர்க...

யாழில் தொடரும் கொள்ளையர்களின் அட்டகாசம் - தனிமையில் இருந்த பெண்ணிடம் கைவரிசை

undefined
யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணையில் தனிமையில் இருந்த பெண்ணை மிரட்டி கொள்ளையிட்ட சம்பவம் ஒன்று நேற்று மதியம் இடம்பெற்றுள்ளது.

வீடியோ இறுவட்டுக்கள் விற்கும் வீட்டுக்கு வாடிக்கையாளர்கள் போல வந்த கொள்ளையர்கள் தங்க நகைகளையும் பணத்தையும் பறித்துச் சென்றுள்ளதுடன் அப் பெண்ணை கடுமையாகத் தாக்கியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.
மேலும் இங்கே தொடர்க...

இந்திய இராணுவ வீரர்களின் நினைவுத் தூபிக்கு பிரதீப் குமார் அஞ்சலி




பத்தரமுல்லையில் அமைந்துள்ள இந்திய இராணுவ வீரர்களின் நினைவுத் தூபிக்கு இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பிரதீப் குமார் சற்றுமுன் அஞ்சலி செலுத்தினார்.
இந் நிகழ்வில் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோருடன் இராணுவ உயர் அதிகாரிகள் கலந்துகொண்டுள்ளதாக அங்கிருக்கும் எமது அலுவலக செய்தியாளர் தெரிவிக்கிறார்.
மேலும் இங்கே தொடர்க...

5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் வெட்டுப்புள்ளி அறிவிப்பு

2010 ஆகஸ்undefinedட் மாதம் நடைபெற்ற 5 ஆம் தரப் புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தமிழ் மொழியில் தோற்றி சித்தியடைந்த மாணவர்களை 2011 ஆம் ஆண்டில் 6 ஆம் தரத்தில் பிரபல தமிழ் மொழி மூலப் பாடசாலைகளில் சேர்ப்பதற்கான வெட்டுப்புள்ளிகளை கல்வி அமைச்சு நேற்று வெளியிட்டுள்ளது. இப்புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய 3 இலட்சத்துக்கும் அதிகமான மாணவர்களில் 31 ஆயிரம் மாணவர்கள் புலமைப்பரிசில் பெறுவதற்கு தகைமை பெற்றுள்ளனர். இவ்வாறு தகைமை பெற்றவர்களில் 15 ஆயிரம் மாணவர்கள் குடும்ப வருமானம் அடிப்படையில் புலமைப்பரிசில் நிதியினைப் பெறுவதற்கு தகைமை பெற்றுள்ளதுடன் பிரபல பாடசாலைகளில் 6 ஆம் தரத்தில் கல்வி கற்பதற்கு தகைமை பெற்றுள்ளனர்.

புலமைப்பரிசில் பெறும் மாணவர்களில் 5 ஆயிரம் மாணவர்கள் தமிழ் மொழியில் பரீட்சையில் சித்தியடைந்தவர்களாவர். வெளியிடப்பட்டுள்ள பிரபல பாடசாலைகளுக்கான வெட்டுப் புள்ளிகளில் ஒரு சில பாடசாலைகளுக்கான வெட்டுப் புள்ளி சென்ற வருடத்திலும் பார்க்க கூடுதலாகவும், குறைவாகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த வகையில் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள வெட்டுப் புள்ளிகளின் விபரம் வருமாறு:

ஆண்கள் பாடசாலைக்கான வெட்டுப்புள்ளி

கொழும்பு றோயல் கல்லூரி 177

கொழும்பு டி.எஸ். சேனாநாயக்க கல்லூரி 167

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி 149

கல்முனை ஸாஹிறா கல்லூரி 146

திருகோணமலை ஆர்.கே.எம். ஸ்ரீ கோணேஸ்வரா இந்து மத்திய வித்தியாலயம் 144

கொழும்பு இந்துக் கல்லூரி 141



பெண்கள் பாடசாலைக்கான வெட்டுப்புள்ளி

கொழும்பு முஸ்லிம் மகளிர் கல்லூரி 164

கொழும்பு இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி 157

கண்டி பதியூதீன் மகளிர் கல்லூரி 156

கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி 154

கொழும்பு புனித கிளாரி கல்லூரி 151

மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர்தரப் பாடசாலை 151

யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர் கல்லூரி 147



கலவன் பாடசாலைக்கான வெட்டுப் புள்ளிகள்

ஹற்றன் ஹைலன்ட்ஸ் மத்திய மகா வித்தியாலயம் 157

மாவனெல்லை ஸாஹிரா கல்லூரி 152

ஹபுகஸ்தலாவ அல் மின்ஹாஜ் மத்திய மகா வித்தியாலயம் 150

மடவளை பஸார் மதீனா முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயம் 149

மாவனெல்லை பதுரியா முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயம் 148

கெடுண கொல்வா முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயம் 147

கொக்குவில் இந்து வித்தியாலயம் 146

நுவரெலியா புனித ரைனிட்டி தமிழ் மகா வித்தியாலயம் 145

கொடகல கேம்பிரிஜ் தமிழ் வித்தியாலயம் 140
மேலும் இங்கே தொடர்க...

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தினால் 2,12,211 பேர் பாதிப்பு; 2951 பேர் இடம்பெயர்வு

கிழக்கு undefinedமாகாணத்தில் பெய்துவரும், வடகீழ் பருவமழை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தத்தினால் 55 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த இரண்டு இலட்சத்து 12 ஆயிரத்து 211 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதென அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் மாவட்ட இணைப்பாளர் ஏ.எம்.எம். ஹஸீர் தெரிவித்தார்.

744 குடும்பங்களைச் சேர்ந்த 2957 பேர் இடம்பெயர்ந்து ஏறாவூர்ப்பற்று செங்கலடி, கிரான், வாகரை, ஏறாவூர் நகர் ஆகிய பிரதேசங்களில் அமைக்கப்பட்டுள் பத்து முகாம்களில் தங்கியுள்ளனர்.

வாகனேரி உறுகாமம் உன்னிச்சை ஆகிய குளங்கள் திறந்து விடப்பட்டதன் காரணமாக வெள்ள அனர்த்தத்தினால் 99 வீடுகள் களிமண் குடிசைகள் முழுமையாகச் சேதமடைந்துள்ளன.

பகுதியளவில் 433 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்தது. வெருகல் துறை ஊடான பாதை தடைசெய்யப்பட்டதன் காரணமாக மட்டக்களப்பு திருகோணமலை வாகரை ஊடான போக்குவரத்துச் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளது.கொம்மாந்துறை தீவு, ஈரளக்குளம்,கிரான் மற்றும் வெல்லாவெளி ஆகிய பிரதேசங்களில் வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் தரைவழிப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

ஏறாவூர்பற்று செங்கலடி பட்டிப்பளை வாகரை ஆரையம்பதி ஆகிய இடங்களில் வீடுகள் குடிசைகள் சேதமடைந்துள்ளன. இதையடுத்து பாதுகாப்பான இடங்களில் தங்கியுள்ள குடும்பங்களுக்கு அரசு மற்றும் தொண்டர் நிறுவனங்களின் உதவியுடன் பாவனைப்பொருட்கள் மற்றும் உணவு வழங்கப்படுகின்றது.

இதேவேளை ஏறாவூர்பற்று செங்கலடி பிரதேசசபைக்குட்பட்ட சித்தாண்டி, மாவடிவேம்பு, வந்தாறுமூலை,பலாச்சோலை, ஐயங்கேணி போன்ற இடங்களில் வெள்ள நீர் வடிந்தோடச் செய்யும் நடவடிக்கைகளை பிரதேசசபைத் தவிசாளர் எஸ். ஜீவரங்கன் முன்னெடுத்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

குடாநாட்டில் தொடரும் கொலை,கொள்ளை சம்பவங்களுக்கு அரசாங்கமே பொறுப்பு:த.தே.கூ

undefined


இராணுவ மற்றும் பொலிஸ் மயமாக்கப்பட்டிருக்கின்ற யாழ்ப்பாணத்தில் துணிகரமாக இடம்பெற்று வருகின்ற தொடர் படுகொலைகள், கொள்ளைச் சம்பவங்களுக்கு அரசாங்கமே பொறுப்புக் கூற வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. இந்த கொலை கொள் ளைச் சம்பவங்களுக்கு கடுமையான கண்டனங்களையும் கவலையையும் வெளியிட்டுள்ள கூட்டமைப்பு, இவ்விடயத்தை எதிர்வரும் நான்காம் திகதி பாராளுமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வரவுள்ளதாகவும் அறிவித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வருகின்ற தொடர் அசம்பாவிதங்கள் குறித்து கருத்து வெளியிடுகையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும் யாழ். மாவட்ட எம்.பி.யுமான மாவை சேனாதிராஜா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரையில் அங்கு ஒவ்வொரு வீட்டின் முன்பகுதியிலும் இராணுவம் நிறுத்தப்பட்டுள்ளது. பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். ஏராளமான சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு இராணுவ அல்லது பொலிஸ் மயமாக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணத்தில் இனம் தெரியாத வகையில் கொள்ளைச் சம்பவங்களும் படுகொலைகளும் இடம்பெறுவதானது ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கும் ஆச்சரியத்தைத் தருகின்றது.

இங்கு சட்டவிரோதமான குழுக்கள் செயற்படுவதாக இருப்பின் அவ்வாறு நடைபெறுகின்ற படுகொலைகள், கொள்ளைச் சம்பவங்கள், ஆயுதமுனை மிரட்டல்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் ஆகியவற்றுக்கு யாழ்ப்பாணத்திற்கு பொறுப்பான பொலிஸ் உயரதிகாரிகளும் இராணுவ உயரதிகாரிகளும் மற்றும் அரசாங்கமுமே பொறுப்புக் கூற வேண்டும்.

ஏனெனில் யாழ்ப்பாணத்தில் இடம்பெறுகின்ற இந்த படுகொலைகளுக்கு காரணங்களே இல்லாதிருக்கின்றன. குவிக்கப்பட்டுள்ள பொலிஸாரும் இராணுவமும் அறியாது இந்த அசம்பாவிதங்களும் அருவருப்பான செயற்பாடுகளும் நடந்தேறுவதற்கு இடமில்லை. எனவே இத்தகைய சம்பவங்களுக்கு பாதுகாப்பு தரப்பும் அரசாங்கமுமே பொறுப்புக் கூற வேண்டும். அண்மையில் சங்கானையில் குருக்கள் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். அவர் எதற்காக கொல்லப்பட்டார் என்ற காரணத்தைக்கூட பொலிஸார் தமக்கு அறிவிக்கவில்லையென அவரது குடும்பத்தினர் எம்மிடம் தெரிவித்தனர்.

நேற்று அதிகாலை வலிகாமம் உதவிக் கல்விப் பணிப்பாளர் மார்க்கண்டு சிவாஜிலிங்கம் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவங்கள் எமக்கு கவலையையும் அதிர்ச்சியையுமே தருகின்றன. அரசாங்கம் என்னதான் கூறினாலும் எமது மக்கள் மீதான அச்சுறுத்தல்கள், ஆட்கொலைகள், அடக்குமுறைகள் குறைந்தபாடில்லை. இதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றது. மேலும் ஜனவரி நான்காம் திகதிய பாராளுமன்ற அமர்வின்போது வடக்கில் இடம்பெற்று வருகின்ற படுகொலைகள் மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் குறித்து கவனத்திற்கு கொண்டுவர கூட்டமைப்பு நடவடிக்கை எடுத்துள்ளது.

எது எப்படி இருப்பினும் இந்த காட்டுமிராண்டித் தனமான செயற்பாடுகளை ஏற்க முடியாது அரசாங்கத்தினாலேயே இதனை தடுத்து நிறுத்த முடியாதிருப்பதுதான் வேடிக்கையானது என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

யாழ். வலிகாமம் பிரதி கல்வி பணிப்பாளர் சுட்டுக் கொலை மோட்டார் சைக்கிளில் வந்த கொள்ளையர்கள் சுட்டுவிட்டு தப்பியோட்டம்


வலிகாமம் பிரதிக் கல்விப் பணிப்பாளர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று முன்தினம் 11.30 மணியளவில் உரும்பிராய் மேற்கு பகுதியில் நடைபெற்றதாக பொலிஸார் கூறினர்.

வீட்டுக்கு கொள்ளையிட வந்த ஆயுதக் குழுவே இவரை கொலை செய்து விட்டுத் தப்பியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வலிகாமம் பிரதிக் கல்விப் பணிப்பாளரின் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் இனந்தெரியாத ஆயுதக் குழுவொன்று கொள்ளை முயற்சியில் ஈடுபட வந்துள்ளது. வீட்டிலுள்ளவர்களின் நகைகளை தருமாறு ஆயுத முனையில் அச்சுறுத்திய கும்பல் நகைகளை கொள்ளையிட்டுள்ளது.

பிரதிக் கல்விப் பணிப்பாளரின் மகள் அணிந்திருந்த நகைகளை பறிக்க முயன்ற சந்தேக நபர்கள், அவருடன் தவறாக நடக்க முயன்றதாக அறிவிக்கப்படுகிறது. கொல்லப்பட்டவர் மகளின் அருகில் வந்து இதனை தடுக்க முயன்ற போது சந்தேக நபர்கள் அவரைச் சுட்டு விட்டு தப்பியோடியுள்ளனர். சுடப்பட்ட பிரதிக் கல்விப் பணிப்பாளர் மார்கண்டு சிவலிங்கம் (52) யாழ். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட பின் இறந்ததாக பொலிஸார் கூறினர்.

இறந்தவரின் சடலம் யாழ் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் நடந்த வீட்டில் இருந்து 9 மி.மி. வெற்று ரவையொன்றும் மீட்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக யாழ். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பத்மதேவவின் பணிப்புரையின் பேரில் கோப்பாய் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை நடத்த உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் இருவர் தலைமையில் விசேட பொலிஸ் குழு நியமிக்கப்பட் டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இதேமாதிரியான சம்பவம் ஒன்று இரண்டு வாரத்துக்கு முன்பு சங்காணையில் இடம்பெற்றது. இதன் போது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான ஆலயக் குருக்களுக்கு சிகிச்சைபலனளிக்காமல், நான்கு தினங்களில் மரணமானார். இவ்விரு சம்பவங்களும் யாழப்பாண மக்களிடம் அச்ச நிலையை தோற்றுவித்துள்ளது. யாழ். மாவட்டத்தில் இடம்பெற்று வரும் கொள்ளைச் சம்பவங் களை உடன் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரு மாறு யாழ். மாவட்ட பாதுகாப்பு அதி காரிக்கும், பொலிஸ் மா அதிபருக்கும் அவசர பணிப்புரைகளை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் விடுத்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

வடக்கில் 5 மாவட்டங்களுக்கு 12 பிரதேச செயலர்கள் நியமனம் நேர்முகப் பரீட்சைகள் நேற்று பூர்த்தி; ஜனவரி முதலாம் திகதி நியமனம்

வட மாகாணத்தி லுள்ள ஐந்து மாவட்டங்களுக்கு புதிதாக 12 பிரதேச செயலாளர்கள் நியமிக்கப்படவுள்ள தாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி தெரிவித்தார்.

புதிதாக நியமிக்கப்படவுள்ள பிரதேச செயலாளர்களை தேர்ந்தெடுப்பதற்கான நேர்முகப் பரீட்சை நேற்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

யாழ். நகரிலுள்ள வட மாகாண ஆளுநரின் உப அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நேர்முகப் பரீட்சையை மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறி, ஆளுநரின் செயலாளர், எஸ். ரங்கராஜா மற்றும் மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் திருமதி ஆர்.

விஜயலட்சுமி ஆகியோர் நடத்தினர். இந்த நேர்முகப் பரீட்சையின் மூலம் 12 பேர் புதிதாக பிரதேச செயலாளர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு மாவட்ட ரீதியில் நியமிக்கப்படவுள்ளனர்.

கல்வித் தகைமை, தரம் என்பவற்றுடன் இளம் வயதுடையவர்களே இம்முறை புதிதாக தேர்ந்தெடுக்கப்படவுள்ளதாக தெரிவித்த ஆளுநர், 2011 ஜனவரி மாதம் 1ம் திகதி கொழும்பில் இவர்களுக்கான நியமனக் கடிதம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படும் என்றார்.

தற்பொழுது வட மாகாணத்திலுள்ள பிரதேச செயலாளர்களில் 60 வயதை தாண்டிய பலர் இருப்பதாகவும் இவர்களது சேவை க்காலம் முடிவுற இருக்கும் நிலையிலேயே இளம் பிரதேச செயலாளர்களை புதிதாக நியமிக்க தீர்மானித்ததாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

வடக்கில் தற்பொழுது பெருமளவிலான நிதி ஒதுக்கீட்டில் பாரிய அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் துரித மாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் அவற்றை மேலும் துரிதமாக அமுல்படுத்து வதற்கு இளம் பிரதேச செயலாளர்கள் அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அடுத்த ஆண்டு தொடக்கம் வடக்கிலுள்ள ஐந்து மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள் ஊடாக திட்ட மிடப்பட்ட சீரான சேவையை உரிய முறையில் முன்னெடுக்க திட்டமிட்டுள் ளதாகவும் ஆளுநர் சுட்டிக்காட்டினார். இதற்குத் தேவையான அறிவுறுத்தல்களை மாவட்டச் செயலாளர்களுக்கும், பிரதேச செயலாளர்களுக்கும் வழங்கவுள்ளதாகவும் ஆளுநர் குறிப்பிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...

சிறுபான்மை சட்டம் குறித்த சர்வதேச கருத்தரங்கை இலங்கையில் நடத்த திட்டம்

உலகில் சிறுபான்மை சம்பந்தமான சட்ட விதிமுறைகள் மற்றும் அதற்கான உரிய தீர்வுகள் என்பனவற்றை பெற்றுக்கொள்ளும் வகையில் அவை தொடர்பான சர்வதேச மட்டத்திலான கருத்தரங்கொன்றை இலங்கையில் நடாத்த தீர்மானித்திருப்பதாக நீதி அமைச்சரும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான றவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

நீதி அமைச்சின் அனுசர ணையுடன் மேற்கொள்ளப்படும் இந்த சர்வதேச கருத்தரங்கிற்கு இந்த நூற்றாண்டில் மிகவும் தலைசிறந்த திறமையான மார்க்க சட்ட வல்லுநர்கள் அழைக்கப்படுவார்கள் எனவும் அமைச்சர் கூறினார்.

மடவளை பஸார் வை. எம். எம். ஏ. ஏற்பாடு செய்திருந்த விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு பேசும்போது அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். வை. எம். எம். ஏ. யின் தலைவர் ஜே. எம். சித்தீக் தலைமையில் மடவளை மதீனா தேசிய கல்லூரி அஷ்ரஃப் நினைவு மண்டபத்தில் நேற்று முன்தினம் (26) இடம்பெற்றது.

இஸ்லாமிய புதுவருடத்தில் (1432) நினைவு தினம், அஹதியா, அறநெறி பாடசாலையின் 10வது சேவை நிறைவு விழா மற்றும் வை.எம்.எம்.ஏ. வினது 26 வருட சேவை பாராட்டு விழா ஆகிய மூன்று விழாக்களும் ஒரே மேடையில் இடம்பெற்றன. இதில் அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

நாம் ஒரு பெரும்பான்மை சமூகத்தின் மத்தியில் வாழ்ந்து வருகின்றோம் என்ற எண்ணம் எமது மனதில் இருக்கவேண்டும். பெரும்பான்மை மக்களையும் ஏனைய மாற்று மதத்தினரதும் மனம் புண்படாதவாறு எமது மத அனுட்டானங்களுக்கான வழி முறைகளை எமது அடிப்படை உரிமை களுக்கு மாற்றமல்லாத வழியில் வீழ்வது எப்படி? இருந்த போதிலும் இவ்வாறான வாழ்க்கை வழிமுறைகளில் சில இடங் களில், சில சந்தர்ப்பங்களில் தாம் விட்டுக் கொடுக்க வேண்டிய தேவைகள் ஏற்படு கின்றன. ஆனால் எல்லா விடயங்களிலும் விட்டுக்கொடுக்கவும் முடியாது. ஆனால் இவைகளை எவ்வாறு எல்லா தரப்பு களுக்கும் புரிந்துணர்வோடு தெளிவுபடுத்து வது என்பது மிக முக்கியமான விடய மொன்றாகும்.

மேலும், முஸ்லிம் சமூகம் சார்ந்த சில ஒழுக்க விதிமுறைகள் இருக்கின்றன. இந்த விதிமுறைக்கேற்ப நாம் ஒரு பெரும்பான்மை சமூகத்தின் மத்தியில் வாழ்கின்றோம். எமது அடிப்படை நிபந்தனைகளுக்கு மாற்றமில்லாத வாழ்க்கை நடவடிக்கை களுக்கான வழிமுறைகள் என்ன என்பது பற்றி நாம் அறிய வேண்டியவர்களாக உள்ளோம்.

மேலும், யுத்தம் முடிந்த பிறகு இந்த நாட்டில் பெரும்பான்மை சமூகம் சிறு பான்மை சமூகத்தோடு ஒரு இரக்கத் தீர்வு டனான புதிய வழிமுறைகள் பற்றி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் திட்டமிட்டு ஒரு நல்ல அறிவிப்பை செய்துள்ளார். அதாவது இந்த நாட்டிலே இனியாரும் சிறுபான்மை சமூகம் என்று பேச முடியாத நிலையில் அனைவரும் சமமானவர்கள் என்ற அனுகுமுறையை கையாண்டுள்ளனர்.

அடுத்ததாக நாடு பூராகவும் நிலவுகின்ற அஹதிய்யா பாடசாலைகள் எதுவித கொடுப்பனவுமின்றி வார இறுதி நாட்க ளில் பகுதிநேர வகுப்பாக இயங்குவது இந்நாட்டு முஸ்லிம் சமூகத்திற்கு மிகப் பெரிய சேவையாக அமைந்துள்ளதை நாம் பெருமையாக பேசவேண்டும்.

எந்த கட்சி தேர்தலுக்கு வந்தாலும் முஸ்லிம் சமூகத்திலிருந்து விடுக்கப்படுகின்ற மிக முக்கியமான கோரிக்கையொன்றுதான் பாடசாலைகளில் மெளலவி ஆசிரியர் நியமனம் தொடர்பான குறைபாட்டை தீர்த்துத் தரவேண்டும் என்பது. இந்த கோரிக்கைக்கு இந்த அரசாங்கம் இதுவரை நூறு மெளலவி ஆசிரியர்கள் நியமித்துள்ளது.

இனிவரும் காலங்களில் முந்நூறாவது மெளலவி ஆசிரியர்கள் நியமித்தால்தான் ஓரளவாவது திருப்தியான சேவைகளை மேற்கொள்ளலாம். இவ்வாறு முன்வைக் கின்ற குறைபாடுகளை தீர்த்து வைக்க திரைசேரியில் நிதி ஒதுக்கீட்டில் பிரச்சினை இருப்பதாக தெரிய வருகிறது. இவ்வாறு அமைச்சர் ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டார்.

கண்டி மாவட்ட ஜம் இய்யத்துல் உலமா சபைத் தலைவர் மெளலவி எம்.எச்.எம். புர்ஹான் உள்ளிட்ட பலர் இங்கு உரையாற்றினர். நினைவுப் படிவம், பரிசில்கள், சான்றதழ்கள் வழங்கும் நிகழ்வுகளும் இடம்பெற்றன.
மேலும் இங்கே தொடர்க...

தென்னை அபிவிருத்தி செயற்பாடுகளில் படை வீரர்கள்


தென்னை செய்கை அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு சிவில் பாதுகாப்புப் படைவீரர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளன.

இந்த நடவடிக்கைகளுக்குத் தேவையான அறிவுறுத்தல்களை பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ வழங்கியுள்ளதாக சிவில் பாதுகாப்புத் திணைக்கள பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் ஆனந்த பீரிஸ் தினகரனுக்குத் தெரிவித்தார்.

பராமரிப்பு அற்ற நிலையில் காணப்படும் தெங்கு செய்கை நிலங்களை அமைச்சு எமது பொறுப்பில் தரும்பட்சத்தில் அவற்றை சிறந்த முறையில் மேம்படுத்திக்கொடுப்பதுடன் தெங்கு செய்கையை மேலும் அபிவிருத்தி செய்ய முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

தெங்கு அபிவிருத்தி மற்றும் மக்கள் தோட்ட அபிவிருத்தி அமைச்சர் ஜகத் புஷ்பகுமாரவுடன் இது தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டார்.

இதற்கான நடவடிக்கையை ஜனவரி முதல் ஆரம்பிக்க தயார் நிலையில் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இதேவேளை, தெங்கு அபிவிருத்தி சபையின் பாதுகாப்புக்கு சிவில் பாதுகாப்பு படையினர் ஈடுபடுத்தப்ப ட்டுள்ளன ரென்றும் ரியர் அட்மிரல் ஆனந்த பீரிஸ் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

இறக்குமதி செய்யப்பட்ட கோழி இறைச்சி, முட்டை நேற்று முதல் சந்தையில் * கோழி இறைச்சி 350 ரூபா * முட்டை 12 ரூபா


இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கோழி இறைச்சி, முட்டை என்பன நேற்று முதல் சந்தையில் குறைந்த விலைக்கு விற்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு கூறியது.

பண்டிகை காலத்தில் தட்டுப்பாடின்றி குறைந்த விலையில் கோழி இறைச்சி மற்றும் முட்டை என்பன வழங்குவதற்காக இந்தியாவில் இருந்து 500 மெற்றிக் தொன் கோழி இறைச்சியும் 2 மில்லியன் கோழி முட்டைகளும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

கடந்த நாட்களில் கோழி இறைச்சி முட்டை என்பவற்றின் விலைகள் அதிகரித்ததையடுத்து அவற்றை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்தது. இதன்படி, இறக்குமதி செய்யப்பட்ட கோழி இறைச்சி ஒரு கிலோ 350 ரூபாவுக்கும் முட்டை 11 முதல் 12 ரூபாவிற்கும் விற்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் வர்த்தக அமைச்சு கூறியது.

இதேவேளை, 16 ரூபாவுக்கு விற்கப்பட்ட முட்டை தற் பொழுது 14 ரூபாவாக குறைந்துள்ளதாகவும் முட்டை குறைந்த விலைக்கு விற்கப் படுவதோடு சந்தையில் முட்டை விலை மேலும் குறையும் எனவும் அமைச்சு தெரிவித்தது. சதொச ஊடாக மட்டுமன்றி தனியார் துறையினூடாகவும் கோழி இறைச்சி மற்றும் முட்டை என்பன விற்கப்படவுள்ளன.
மேலும் இங்கே தொடர்க...

இந்திய பாதுகாப்பு செயலர் நேற்று இலங்கை வருகை


உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று இலங்கை வந்திருக்கும் இந்தியப் பாதுகாப்புச் செயலாளர் பிரதீப் குமார் இரு நாட்டுக்கும் இடையி லான பாதுகாப்பு ஒத்துழைப்புத் தொடர்பான பேச்சுவார்த் தைகளில் ஈடுபடவுள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை சந்திக்கவிருக்கும் அவர் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இரு தரப்பு உறவுகள் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்புத் தொடர்பாக விரிவான பேச்சுவார்த்தைகளை நடத்தவிருப்பதாக இந்திய உயர் ஸ்தானிகராலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியப் பாதுகாப்புச் செயலாளர் பாராளுமன்றக் கட்டடத் தொகுதிக்கு அருகில் அமைக்கப்பட்டிருக்கும் இந்திய அமைதிகாக்கும் படையினரின் நினைவுத் தூபிக்கு நேரடியாக விஜயம் செய்து மலர் அஞ்சலி செலுத்தவுள்ளார்.

இலங்கை விஜயத்தின் போது பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவைச் சந்திக்கவிருப்பதுடன், வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிசையும் இந்தியப் பாதுகாப்புச் செயலாளர் சந்திப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக வெளிவிவகார அமைச்சக அதிகாரி ஒருவர் தினகரனுக்குத் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

தனியார் வகுப்புக்களால் மாணவருக்கு ஏற்படும் பாதிப்பை ஆராய குழு தேசிய கல்வி ஆணைக்குழு பரிந்துரை


தனியார் வகுப்புகளின் மூலம் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து ஆராய்வதற்கு கல்வி அமைச்சின் தலைமையில் தேசிய குழுவொன்று நியமிக்கப்பட வேண்டுமென தேசிய கல்வி ஆணைக்குழு பரிந்துரை செய்து ள்ளது.

தேசிய கல்வி ஆணைக்குழு 15 மாவட்டங்களில் முன்னெடுத்த ஆய்வுகளையடுத்தே இந்தப் பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த தேசிய குழுவில் மாகாண கல்வி அலுவலகம், தேசிய கல்வி நிறுவனம், சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை என்பன உள்ளடக்கப்படவேண்டும் எனவும் தேசிய கல்வி ஆணைக்குழு குறிப்பிட்டு ள்ளது.

10ஆம் ஆண்டு மாணவர்களில் 91.84 வீதமானவர்களும் 12ம் ஆண்டு மாணவர்களில் 98 வீதமானவர்களும் உயர் தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் நூறு வீதமானவர்களும் மேலதிக வகுப்புகளுக்கு செல்வதாக தேசிய கல்வி ஆணைக்குழுவின் ஆய்வு மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

10ஆம் ஆண்டில் கற்கும் மாணவர்களிடையே பாடசாலை பற்றிய நம்பிக்கை இல்லாமை, ஆசிரியர் பற்றாக்குறை, ஆசிரியர்கள் அடிக்கடி விடுமுறைபெறுவது, பாடத்திட்டங்கள் பூர்த்தி செய்யப்படாமை என்பனவே மாணவர்கள் மேலதிக வகுப்புகளுக்குச் செல்வதற்கு பிரதான காரணமாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. போட்டி நிறைந்த உயர்தர வகுப்புகளுக்கு முகம்கொடுப்பதற்கு மேலதிக வகுப்புகளினூடாக வெற்றிகரமாக தயார்படுத்துவதோடு சிறப்பாக கற்பிப்பதாக சாதகமான விடயமாக உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

10,000 ரூபா முதல் 20,000 ரூபா வருமானம் பெறும் குடும்பங்கள் மேலதிக வகுப்புகளுக்கு செல்லும் மாணவர்களு க்காகவே கூடுதலாக செலவிடுகின்றனர். 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை, உயர்தரப் பரீட்சை வகுப்புகளுக்காகவும் அதிகம் செலவிடப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

பாடத்திட்டத்தில் விடயதானம் அதிகமாக உள்ளதால் மேலதிக வகுப்புகளுக்கு செல்வது கட்டாயம் எனவும் மேலதிக வகுப்பு மூலம் பிரதான பரீட்சைகளில் கூடுதலான மாணவர்கள் சித்தியடைவதாகவும் மேலதிக வகுப்புகளின் மூலம் அழுத்தம் வழங்கப்படுகிறது என தெரியவந்துள்ளது.

இந்த ஆய்வின் அடிப்படையில், பாடசாலை மாணவர்கள் தனியார் வகுப்புகளுக்கு செல்வது தொடர்பில் மாற்றுக் கொள்கைத் திட்டமொன்றை அறிமுகப்படுத்துவது தொடர்பில் இன்று பரீட்சைத் திணைக்களத்தில் மாநாடொன்று நடத்தப்பட உள்ளது.
மேலும் இங்கே தொடர்க...