7 நவம்பர், 2010

தமிழ் மக்கள்மீதான பாரபட்சங்கள் அவர்களை இரண்டாம்தரப் பிரஜைகளாக அரசு நோக்குவதையே காட்டுகிறதென புளொட் தலைவர் தெரிவிப்பு-


தொழில்துறைகளில் தமிழ்பேசும் மக்களுக்கு தற்போது இழைக்கப்படும் அநீதிகள், பாரபட்சத் தன்மைகள் என்பன விரக்தி மனப்பான்மையுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ் மக்களை இந்நாட்டின் இரண்டாம் தரப் பிரஜைகளாகவே அரசாங்கம் நோக்குகிறது என்பதையே காட்டுகின்றன. இதனை அரசாங்கமே உறுதிப்படுத்துவது போன்றே உள்ளது என புளொட் தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். அது மட்டுமன்றி, இந்நாட்டில் நல்லிணக்கம் உருவாகக் கூடாது என்ற நோக்கில்தான் அரசு செயற்படுகிறதா என்ற கேள்வியையும் இந்த செயற்பாடுகள் எழுப்புகின்றன. அரசாங்கத்தின் இந்தப் புறக்கணிப்பு நடவடிக்கைகளை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். எமது எதிர்ப்பையும் வெளிப்படுத்துகிறோம். அதுமட்டுமல்ல, யுத்தத்தை வெற்றி கொண்ட மனோபாவத்தில் மமதையில்தான் அரசாங்கம் இவ்வாறெல்லாம் செயற்படுவதாகத் தமிழ்மக்கள் இன்று நினைக்கத் தொடங்கியுள்ளனர். தமிழ்மக்கள் தாம் இந்நாட்டின் ஒரு பிரிவினர் அல்லர் என்பதனை அரசாங்கமே அந்த மக்களுக்கு இன்று உணர்த்தியுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

ஜனாதிபதி பதவியேற்பின் போது கிழக்கில் ஒரு இலட்சம் மரக் கன்றுகள் நடப்படும்: சந்திரகாந்தன்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது பதவி ஏற்பு வைபத்தையொட்டியும், ஜனாதிபதியின் பிறந்த நாளை முன்னிட்டும் கிழக்கு மாகாணத்தில் ஒரு இலட்சம் மரக் கன்றுகள் நடப்படவுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு முதலமைச்சர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது முதலைமைச்சர் இதனைத் தெரிவித்தார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் இம்மரக் கன்றுகள் நடப்படவுள்ளன. மாகாண ஆளுனர், முதலமைச்சர், மாகாண அமைச்சர்கள், மாவட்டங்களின் அரசாங்க அதிபர்கள் ஆகியோரின் பங்களிப்புடன் இம்மர நடுகை வைபவங்கள் இடம்பெறவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதுதொடர்பாக எதிர்வரும் 15ம்திகதி இம்மரம் நடுகை கிழக்குமாகாணம் பூராக இடம்பெறவுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

வெலிக்கடை சிறைச்சாலையில் இராணுவம் குவிப்பு

வெலிக்கடை சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலை அடுத்து அங்கு இராணுவம் அழைக்கப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று காலை மேற்கொள்ளப் பட்ட தேடுதல் நடவடிக்கை ஒன்றின் போது கைதிகளுக்கும் பொலிஸாருக்குமிடையே ஏற்பட்ட மோதலில் 42 பொலிஸார் காயமடைந்துள்ளதாகவும் இதன் காரணமாக பாதுகாப்பை உறுதிப் படுத்தும் வகையில் இரணுவப் படைப் பிரிவு இரண்டும் விஷேட படைப் பிரிவும் அனுப்பிவைக்கப் பட்டுள்ளது
மேலும் இங்கே தொடர்க...

இந்திய அரசாங்கம் உதவியால் தலவாக்கலை த/ம/வி க்கு பஸ் ஒன்று வழங்கி வைப்பு

தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான திகாம்பரத்தின் வேண்டுகோளுக்கேற்ப இந்திய தூதரகத்தினால் தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலய மாணவர்களின் நலன் கருதி மினிபஸ் ஒன்று வழங்கப்பட்டுள்ளது.

இந்தப் பஸ்ஸை உத்தியோகப்பூர்வமாக பாடசாலைக்கு கையளிக்கும் நிகழ்வு நேற்று 7 ஆம் திகதி தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தில்; இடம்பெற்ற போது பிரதம அதிதியாக கலந்து கொண்ட இலங்கைக்கான இந்திய தூதுவர் அசோக்.கே.காந்தா தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பி.திகாம்பரம், தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித்தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான எம்.உதயகுமார் இலங்கைக்கான இந்திய தூதரகத்தின் அரசியற்பிரிவு முதன்மைச் செயலாளர் ஸ்ரீவஸ்தா ஆகியோர் மாலையிடப்பட்டு அழைத்து வரப்பட்டனர்.

அதன் பின்பு பஸ்ஸை பாடசாலை அதிபர் கிருஷ்ணசாமியிடம் அதிதிகள் ஒப்படைத்தனர். தோட்டத்தொழிலாளர்களின் பிள்ளைகள் அதிகமாக கல்விக்கற்கின்ற தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்திற்கு எமது தலைவரின் வேண்டுகோளுக்கேற்ப இந்த மாணவர்களின் நலன்கருதி இலங்கைக்கான இந்திய தூதரகத்தின் அனுசரணையுடன் பஸ் ஒன்று கிடைப்பதையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன் என்றும் இந்தப் பஸ் மூலமாக பாடசாலையின் மாணவர்கள் கல்விச்சுற்றுலாக்களை மேற்கொள்வதற்கு பெரிதும் உதவுமென்றும் நாடாளுமன்ற உறுப்பினர் திகாம்பரம் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

தமிழ் மக்களின் அபிவிருத்திபற்றிச் சிந்திப்போரும் சர்வதேசத்தில் உளர் : தூதுவர் ரவிநாத்

தமிழ் மக்களின் அபிவிருத்தி தொடர்பாக சிந்திக்கும் தரப்பினரும் சர்வதேச ரீதியாக உள்ளனர் என ஐரோப்பிய ஒன்றியம், பெல்ஜியம் மற்றும் லக்ஷம்பர்க் ஆகியவற்றின் இலங்கைக்கான தூதுவர் ரவிநாத் ஆரியசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஆனந்தா கல்லூரியில் நேற்று இடம்பெற்ற ஒல்கட் ஞாபகார்த்த நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

"புலம்பெயர்ந்த தமிழர்களின் உண்மையான தன்மையை சர்வதேசம் இனங்கண்டு கொள்ள வேண்டியதவசியம்.

பிரிவினைவாதம் மற்றும் பயங்கரவாதத்தை நோக்கமாக கொண்டுள்ள புலம்பெயர்ந்தவர்களைப் போன்று, தமிழ் மக்களின் அபிவிருத்தி தொடர்பாக சிந்திக்கும் தரப்பினரும் சர்வதேச ரீதியாக உள்ளனர். இதில் சிறந்த சிந்தனையுடையவர்கள் தொடர்பாக தெளிவினை சர்வதேச சமூகத்தினர் பெற்றுக்கொள்ள வேண்டும்.

எதிர்காலத்தில் இலங்கை தனது தோற்றத்தை சர்வதேச ரீதியாக மேம்படுத்திக் கொள்ள முடியும்.

தமிழீழ விடுதலைப்புலிகளுடனான பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலமே தீர்க்க முடியும் என அனைவரும் எதிர்பார்த்திருந்தனர்.

எனினும், இந்த விடயத்தில் இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட பல சமாதான பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தன. இதனையடுத்தே யுத்தத்தின் மூலமாகவே பயங்கரவாதத்தை முறியடிக்க முடியும் என்ற உண்மையை அரசாங்கம் இனங்காட்டியது.

இலங்கையின் நிலைப்பாட்டை உலகுக்கு வெளிப்படுத்தத் தற்போது தருணம் ஏற்பட்டுள்ளது. எதிர்வரும் உலகக் கிண்ணப் போட்டியை இதற்கான வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ள முடியும்.

நாட்டின் உள்விவகார பிரச்சினைகளுக்கு சுயமாகவே தீர்வுகளை காண முயற்சிக்க வேண்டும்" என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

'ஹார்ட் டு ஹார்ட்' இறுதி நிகழ்வில் பங்கு கொள்ள பிரி. தமிழருக்கு அழைப்பு

142 கிலோ மீற்றரைக் கடந்து இன்றைய இறுதி நாளில் எழுச்சி கொண்ட பிரித்தானிய தமிழர்களின் 'ஹார்ட் டு ஹார்ட் வோக்' - நிறைவு நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

கடந்த நான்கு நாட்களாக பிரித்தானியாவில் தமிழர்களால் தொடரப்பட்டுவரும் போர்வீரர்களை நினைவுகூரும் 'ஹார்ட் டு ஹார்ட் வோக்' நடைபயணத்தில் ஐந்தாவது நாளான நேற்று பிரித்தானிய தமிழர் பேரவையின் உறுப்பினர்களுடன் பலர் இணைந்து, தொடர்ந்தும் நடந்து வருகின்றனர்.

ஐந்தாவது நாளில் எழுச்சி கொண்டுள்ள இந்த நடைபயணத்தை இன்று காலை 9:00 மணியளவில் லூட்டனில், அப்பகுதி மேஜர் கிஸ் வோர்ஸிப் (ஏஐந ரஞதநஏஐட) என்பவரும், கவுன்ஸிலர் ரொம் ஸோ (பஞங நஏஅர) என்பவரும் மெழுகுவர்த்தி ஏற்றி அகவணக்கம் செலுத்தி அனைவரையும் வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.

ஆரம்ப நிகழ்வில் றோயல் அங்கிலிக்கன் றெஜினெண்ட் ஐ சேர்ந்த ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி பேர்ட்டன் ( ஆமதபஞச - ல தச்ஞிஹங் அடூகிடுஹடூ தடீகிடுஙிடீடூசி) உட்பட அப்பகுதி வாழ் பல்லின மக்களும் கலந்துகொண்டிருந்தனர்.

இதில் சிறப்பு விடயமாக நடைபயணத்தை மேற்கொள்ளும் நபர்களை வாழ்த்திய லூட்டன் மேயர் கிஸ் வோர்ஸிப் தனது ஆடையில் அணிந்திருந்த கமபஞச ஐச ஏஅதஙஞசவ எனும் பதக்கத்தைக் கழற்றி 'ஹார்ட் டு ஹார்ட் வோக்' இன் ஏற்பாட்டாளரான ஜோகணேஸுக்கு அணிவித்தார். அத்தோடு நடைபயணத்தில் பங்குகொள்ளும் ஏனையோருக்கும் அதேபோன்ற பதக்கங்களை வழங்கிக் கெளரவித்தார்.

லூட்டனில் இருந்து காலை புறப்பட்ட இவர்கள் நேற்று சென். ஹோல்பன்ஸ் எனும் இடத்தில் நடைபயணத்தை நிறைவுசெய்து மீண்டும் அங்கிருந்து இறுதி நாளான இன்று ஞாயிறு காலை 9:00 மணிக்கு புறப்பட்டனர். லண்டன் வெஸ்மினிஸ்டர் பகுதியை மாலை 6:00 மணியளவில் இவர்கள் சென்றடையவுள்ளனர்.

இன்று லண்டன் வெஸ்ட்மினிஸ்ரர் பகுதியில் நிறைவடையவுள்ள இந்த நடைபயணத்தை வரவேற்கவும், அங்கு இடம்பெறவுள்ள இறுதி நிகழ்வில் கலந்துகொள்ளவும் பிரித்தானிய பிரதமரின் காரியாலயமான இலக்கம் 10 டவுனிங்க் ஸ்ட்ரீட்டில் மாலை 6:00 மணிக்குப் பிரித்தானியத் தமிழர்களை ஒன்றுகூடுமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

வெலிக்கடைச் சிறையில் பொலிஸ்-கைதிகள் மோதல் : இரு தரப்பிலும் பலர் காயம்

வெலிக்கடைச் சிறைச்சலையில் இன்று காலை பொலிசாருக்கும் கைதிகளுக்குமிடையில் கைகலப்பு ஏற்பட்டது. இதன் போது இரு தரப்பிலிருந்தும் பலர் காயமடைந்ததாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

காயமடைந்தோர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.

இரு தரப்பிலிருந்தும் சுமார் 44 பேர் காயமடைந்துள்ளனர் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இவர்களில் 42 பேர் பொலிசார் எனவும், இருவர் கைதிகள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இவர்கள் அனைவரும் அவசர சிகிச்சைப் பிரிவில் தீவிர சிகிச்சைக்குட்படுத்தப்பட்டுள்ளனர் என தேசிய வைத்தியசாலைப் பணிப்பாளர் ஹெக்டர் வீரசிங்க தெரிவித்தார். பொலிசாரிடம் இதுபற்றிக் கேட்டதற்கு, எதுவித விபரங்களையும் தர அவர்கள் மறுத்து விட்டதாக எமது செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

தெல்லிப்பளை துர்க்கையம்மன் ஆலயத்துக்கு லண்டனிலிருந்து காண்டாமணி

தெல்லிப்பளை துர்க்கையம்மன் ஆலயத்திற்குச் சுமார் இருபத்தெட்டாயிரம் பவுண்கள் பெறுமதியில் காண்டாமணி ஒன்று இங்கிலாந்தில் உள்ள லண்டன் மாநகரிலுள்ள துர்க்கையம்மன் ஆலய அடியவர்களினால் செய்யப்பட்டுள்ளது.

ஆலயத்திற்கான காண்டாமணி செய்யப்பட்டு தற்போது குறிப்பிட்ட தொழிற்சாலையில் வைத்து பூசை வழிபாடுகள் நடைபெற்றதைத் தொடர்ந்து இந்த மணி இந்தவாரம் லண்டனில் இருந்து கப்பலில் கொழும்புக்கு அனுப்பப்படவுள்ளது.

தற்போது துர்க்கையம்மன் ஆலயத்தில் சுமார் 924 கிலோ நிறையுடைய இந்த காண்டாமணியைப் பொறுத்துவதற்கு வசதியாக மணிக்கூண்டுக் கொபுரம் அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்த மணியின் ஓசை சுமார் நான்கு கிலோ மீற்றர் துராத்தில் இருந்து ஐந்து கிலோ மீற்றர் தூரம் வரை கேட்கக் கூடியதாகும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தவாரம் கப்பலில் ஏற்றப்படும் மணியானது அடுத்த மாத முற்பகுதியில் கொழும்பை வந்தடையும் எனவும் அங்கிருந்து இந்த காண்டாமணி தரைவழிப்பாதையூடாக ஆலயத்திற்கு எடுத்து வரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

தமிழ் படித்தால் ஊக்கத்தொகை: இலங்கை அரசு திடீர் அறிவிப்பு







அரசு ஊழியர்கள் தமிழ் படித்தால் ஊக்கத்தொகை வழங்கப்படும்,'' என, இலங்கை அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக இலங்கை பிரதமர் டி.எம்.ஜெயரத்னே கூறியுள்ளதாவது: இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகள், சிங்களர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் நாட்டின் மற்ற பகுதிகள் இடையே தகவல் தொடர்பில் பெரும் இடைவெளி உள்ளது. இந்த தகவல் தொடர்பு இடைவெளியை குறைக்க இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது. இதனால், தமிழ் உட்பட உள்ளூர் மொழிகளை கூடுதலாக படிக்கும் அரசு ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

ஒவ்வொருவரும் கூடுதலாக ஒரு மொழியை கற்றுக் கொண்டால், இன்றைய நாளில் நாம் சந்திக்கும், பெரும்பாலான பிரச்னைகளை தவிர்க்க முடியும். கடந்த 1956ம் ஆண்டில் அமலுக்கு வந்த, சிங்கள மொழி மட்டுமே என்ற அரசின் கொள்கையால், நாட்டில் 1980ம் ஆண்டுகளில் இன ரீதியான பதட்டம் உருவாகி போர் நிகழ்ந்தது. இருந்தாலும், இந்தியா - இலங்கை அமைதி ஒப்பந்தம் ஏற்பட்ட பின், 1988ம் ஆண்டில் சிங்கள மொழிக்கு இணையாக தமிழையும் அலுவலக மொழியாக்க முடிவு செய்யப்பட்டது. ஆனாலும் இந்த முடிவால், பிரிவினைவாதிகளின் போரை முடிவுக்கு கொண்டுவர முடியவில்லை.
மேலும் இங்கே தொடர்க...

விமான தயாரிப்பில் இந்தியாவுடன் ரஷ்யா கைகோர்ப்பு






வளர்ந்த நாடுகளை மிஞ்சும் வகையில், விண்வெளித் துறையில் இந்தியா பல்வேறு சாதனைகளை செய்து வருகிறது. ராக்கெட்டுகளை செலுத்துவதில் முன்னோடி நாடுகளில் ஒன்றாகத் திகழ்கிறது. இருப்பினும், விமான தயாரிப்பில் நாடு இன்னும் பின்தங்கியே உள்ளது. கடந்த ஆண்டுகளில், பல்வேறு திட்டங்கள் துவக்கப்பட்டாலும் அவை முழுமையான பலனைத் தரவில்லை. இந்நிலையில், இந்தியாவிலேயே சிறந்த விமானங்களை தயாரிக்கும் திட்டத்திற்கு ரஷ்யா உதவ முன் வந்துள்ளது.

இது குறித்து, இந்தியாவும், ரஷ்யாவும் பலமுறை பேச்சுவார்த்தை நடத்திய பின், பல வழிகளில் விமான போக்குவரத்தை மேம்படுத்தி இயக்கத் தேவையான முயற்சிகளை செய்து வருகின்றன. இந்தியாவில் விமான போக்குவரத்து ஆண்டிற்கு 21 சதவீதம் அதிகரித்து வருகிறது. எனவே, புதிய விமானங்களின் தேவை அதிகமாகி உள்ளது. புதிய விமான உற்பத்தி குறித்து இந்தியாவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே பலசுற்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இறுதியாக, 2 ஆயிரத்து 700 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தை உடனடியாக செயல்படுத்த இந்திய அரசும், ரஷ்ய அரசும் ஒப்புதல் அளித்துள்ளன. இதன்படி, 15 முதல் 20 டன் குறைவான எடையுள்ள விமானங்களை இந்தியாவும், ரஷ்யாவும் பயன்படுத்தும். இந்த ஒப்பந்தத்தில் இந்தியா சார்பில் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனமும், ரஷ்யா சார்பில் ரோசோபோரோ எக்ஸ்போர்ட் ஏஜன்சியும் கையொப்பமிட்டுள்ளன. விமான தயாரிப்பிற்கான பணிகள் பெங்களூரில் நடைபெறும். இங்கு 205 விமானங்கள் தயாரிக்கப்பட உள்ளன. இவை, 800 கி.மீ., வேகத்தில் 12 ஆயிரம் மீட்டர் உயரத்தில், 2 ஆயிரத்து 700 கி.மீ., தூரம் பறக்க வல்லவை.

இந்த விமானங்கள் இரட்டை இன்ஜின் கொண்டவையாகவும், இன்ஜின் கட்டுப்பாடு முழுவதும் டிஜிட்டல் தொழில் நுட்பம் கூடியதாகவும் இருக்கும். விமானி அமரும் இடம் முற்றிலும் நவீன முறையில் கண்ணாடியால் அமைக்கப்பட்டிருக்கும். இந்தியாவில் உள்நாட்டு விமான உற்பத்தி அதிகரிக்கும் போது, சிறிய நகரங்களுக்கான உள்நாட்டு விமான போக்குவரத்து மேம்படும். மேலும், கடலோர பாதுகாப்பு, விமானப்படை போன்ற பாதுகாப்பு அமைப்புகள் கூடுதல் விமானங்களைப் பெற்று, சிறப்பாக பணிபுரிய வாய்ப்பு ஏற்படும்.
மேலும் இங்கே தொடர்க...

முன்னாள் புலி உறுப்பினர்கள் மீது புனர்வாழ்வு முகாம்களிலேயே நீதிமன்ற விசாரணை






புனர்வாழ்வு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு எதிரான விசாரணைகளை துரிதப்படுத்துவதற்காக புனர்வாழ்வு முகாம்களிலேயே நீதிமன்ற விசாரணைகளை நடத்துவது குறித்து கவனம் செலுத்தப் பட்டுள்ளதாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு பிரதி அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா தினகரன் வாரமஞ்சரிக்கு கூறினார்.

படை வீரர்களிடம் சரணடைந்த சுமார் 12 ஆயிரம் முன்னாள் புலி உறுப்பினர்களில் 3 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர். எஞ்சியவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கவும் குற்றங்களுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக விசாரணை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.

ஐ.நா. அபிவிருத்தித் திட்டத்தின் 14 மில்லியன் அமெரிக்க டொலர் உதவியுடன் சரணடைந்த முன்னாள் புலி உறுப் பினர்களுக்கு புனர்வாழ்வளிக்க விசேட திட்டமொன்றும் முன்னெடுக்கப்பட உள்ளதாகவும் பிரதி அமைச்சர் கூறினார்.

சிறைச்சாலைகளில் நீண்டகாலம் தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகள் மற்றும் சரணடைந்த புலி உறுப்பினர்கள் குறித்து பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் தலைமையில் அண்மையில் விசேட கூட்டம் நடத்தப்பட்டது.

பொலிஸ் மா அதிபர், சட்ட மா அதிபர், புலனாய்வுப் பிரிவு உயரதிகாரிகள், நீதி அமைச்சு அதிகாரிகள், பகுப்பாய்வுத் திணைக்கள அதிகாரிகள் போன்றோர் இதில் பங்கேற்றனர்.

நீண்டகாலம் தடுத்து வைத்துள்ளவர்களின் வழக்குகளை துரிதப்படுத்துவது குறித்தும் இங்கு ஆராயப்பட்டது.

புனர்வாழ்வு முகாம்களுக்குச் சென்று அங்குள்ள முன்னாள் புலி உறுப்பினர் தொடர்பான வழக்கு விசாரணைகளை முன்னெடுப்பது குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது என அவர் மேலும் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

சம்பூர், நீர்கொழும்பில் வெடி பொருட்கள்


சம்பூர் மற்றும் நீர்கொழும்பு ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் களில் பல வெடிபொருட்கள் மீட்கப்பட்ட தாக பொலிஸார் கூறினர்.

சம்பூர் கைமுந்தகுளத்திற்கு அருகில் புலிகள் இயக்கத்தின் பங்கர் ஒன்றுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த அதிசக்தி வாய்ந்த வெடிபொருட்கள் அடங்கிய 7 சிறிய பக்கெட்டுகள், 10 மிதிவெடிகள், ஒரு சயனைட் குப்பி என்பன மீட்கப்பட்டன. நீர்கொழும்பு கொப்பரா சந்தியில் வைத்து மன்னாரில் இருந்து மீன் எடுத்து வந்த லொறியில் இருந்து ஆயிரம் டெடனேட்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
மேலும் இங்கே தொடர்க...

ஜனாதிபதியின் போதைப் பொருள் ஒழிப்புத் திட்டம் 24 நாட்களில் 9,062 கிலோ கிராம் போதைப் பொருட்கள் மீட்பு: 11,639 பேர் கைது






ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷவின் ‘போதை ஒழிப்பு’ திட்டத்தின் பிரகாரம் கடந்த 24 நாட்களுக்குள் நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்ட சுற்றி வளைப்பு தேடுதல்களில் ஹெரோயின் உட்பட 9062 கிலோ போதைப் பொருட்கள் மீட்கப்பட்டதோடு 11,639 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய கூறினார்.

யுத்தத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த தேசிய பிரச்சினையாக கருதப்படும் போதைப் பொருள் பாவனைக்கு முற்றுப்புள்ளி வைக்க ஜனாதிபதியும் பாதுகாப்பு செயலாளரும் ஆலோசனை வழங்கியுள்ளனர். போதைப் பொருள் பாவனையை நாட்டிலிருந்து முழுமையாக ஒழிக்கும் வரையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

போதைப் பொருள் ஒழிப்பது தொடர்பில் முன்னெடுக்கப்படும் சுற்றிவளைப்புகள் குறித்து விளக்கமளிக்கும் விசேட ஊடகவியலாளர் மாநாடு நேற்று பொலிஸ் தலைமையகத்தில் நடைபெற்றது.

இங்கு கருத்துத் தெரிவித்த பொலிஸ் மா அதிபர் மேலும் கூறியதாவது,

போதைப் பொருள் ஒழிப்பது தொடர் பான சுற்றிவளைப்புகள் கடந்த மாதம் 13ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டன. குறுகிய காலத்தினுள் ஹெரோயின், கஞ்சா மற்றும் பாபுல், லேகியம் போன்ற பெரு மளவு போதைப் பொருட்கள் மீட்கப்பட்டன.

நாடு முழுவதுமுள்ள 425 பொலிஸ் நிலையங்களினூடாக இந்த சுற்றிவளைப் புகள் முன்னெடுக்கப்பட்டன. இந்த நடவடிக்கைகளுக்கு எதுவித தலையீடுகளோ தடங்கலோ ஏற்படவில்லை. மேல் மாகாணத்திலே கூடுதலான போதைப் பொருட்கள் மீட்கப்பட்டன.

ஹெரோயின்

இதுவரை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் போது 4 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின் மீட்கப்பட்டது 3135 பேர் இது தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதோடு 260 பேருக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. நீர்கொழும்பில் கடந்த வியாழனன்று 2 கிலோ ஹெரோயின் பிடிபட்டது. பிரதான வியாபாரியும் கைதானார். சர்வதேச வலையமைப்பு குறித்து தகவல் கிடைத்துள்ளது.

கஞ்சா

கஞ்சா 7448.7 கிலோ கிராம் மீட் கப்பட்டதோடு 7305 பேர் கைது செய்யப் பட்டனர். 235 பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ஊவா மாகாணத்திலே கூடுதலான கஞ்சா சேனைகள் பிடிபட்டன. இங்கிருந்து 7221 கிலோ கிராம் கஞ்சா மீட்கப்பட்டது. விசேட அதிரடிப் படையின் உதவியுடன் கஞ்சா சேனைகளை ஒழிக்க ஆலோசனை வழங்கியுள்ளேன்.

பாபுல், லேகியம்

பாபுல், லேகியம் போன்ற போதைப் பொருட்கள் தொடர்பில் 1199 பேர் கைது செய்யப்பட்டதோடு இவர்களிட மிருந்து 1608.89 கிலோ கிராம் போதைப் பொருட்கள் மீட்கப்பட்டன.

பேருவளை பகுதியில் 1154 லேகியப் பக்கெட்டுகள் மீட்கப்பட்டதோடு டேம் வீதியிலும் பெருமளவு பாபுல் போதைப் பொருள் பக்கெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

மடுல்சீமையில் 10,226 பக்கெட் பாபுல் மற்றும் லேகியம் என்பன மீட்கப்பட்டன. திருகோணமலையில் 37,054 பக்கெட் பாபுல் மற்றும் லேகியப் பக்கெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

மேல் மாகாணத்தில் 3 கிலோ கிராம் ஹெரோயின் பிடிபட்டதோடு 176 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. கஞ்சா 33.5 கிலோ கிராம் பிடிபட்டதோடு ஏனைய போதைப் பொருட்கள் 1369 கிலோ கிராம் மீட்கப்பட்டன. கஞ்சா தொடர்பில் 54 பேருக்கு எதிராக வழக்கு பதியப்பட்டுள்ளது.

போதைப்பொருள் பாவிப்போர், விநியோகிப்போர் மற்றும் பிரதான போதைப் பொருள் வியாபாரிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

எமது நடவடிக்கை குறிப்பிட்டளவு வெற்றி கண்டுள்ளது. பொலிஸாரும் ஊக்கத்துடன் செயற்பட்டு வருகின்றனர். மக்களும் இந்த தேடுதல் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர். பாரியளவிலான தேடுதல்களும் கடந்த நாட்களில் முன்னெடுக்கப்பட்டன.

கசிப்பு மற்றும் கஞ்சா வியாபாரிகளுக்கு உதவும் பொலிஸாருக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

ஒரு சிலரே இவ்வாறு தொடர்புபட் டுள்ளனர். போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்காத பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலைய பணிப்பாளர் நாயகம் லக்ஷ்மன் ஹுலுகல்லவும் இங்கு கருத்துத் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

வடக்கு, கிழக்கின் துரித அபிவிருத்தி அரசின் துரித நடவடிக்கை கண்டு ஜேர்மன் குழு மகிழ்ச்சி

வடக்கு, கிழக்கு மாகாணங்களை அபி விருத்தி செய்யவும் புனரமைக்கவும் அரசாங் கம் மேற்கொண்டுவரும் துரித நடவடிக்கை குறித்து ஜேர்மன் பாராளுமன்ற உறுப்பி னர்கள் குழு மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பீட்டர் ஏர்னஸ்ட்பேர்கர் தலைமையிலான 6 பேரடங்கிய ஜேர்மன் பாராளுமன்ற உறுப் பினர்கள் குழு நேற்று முன்தினம் மாலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தது. இந்த சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

இங்கு கருத்துத் தெரிவித்த ஜேர்மன் தூதுக்குழு, தங்களுக்கு வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு சென்று பார்வை யிட அனுமதி வழங்கியது குறித்து ஜனாதி பதிக்கு விசேட நன்றியைத் தெரிவித்தது.

பயங்கரவாதத்தை வெற்றிகொண்ட நிலையில் நாட்டை அபிவிருத்தி செய்யும் சவாலை வெற்றிகொள்வதே எமது அடுத்த இலக்கு என்று தான் நம்புவதாகவும் ஜனாதிபதி குழுவினரிடம் குறிப்பிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கையின் வடகிழக்கு கடற்பரப்பின் ஊடாக ‘ஜல்’ சூறாவளி இன்று கரையை கடக்கிறது

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள தாழமுக்கம் ‘ஜல்’ சூறாவளியாக உருமாறி இன்று மாலை அல்லது இரவு இலங்கையின் வடக்கே தமிழக கரை நோக்கி செல்லும் என வானிலை அவதான நிலையம் தெரிவிக்கிறது.

நேற்று காலை நிலவரப்படி யாழ்ப்பாணத் திலிருந்து 600 கிலோ மீற்றர் தொலைவிலுள்ள ‘ஜல்’ சூறாவளி மணிக்கு 15 கிலோ மீற்றர் வேகத்தில் நகர்ந்து வருவதுடன் சூறாவளிக் காற்றின் வேகம் மணிக்கு 90 முதல் 100 கிலோ மீற்றர் வேகத்தில் வீசும் எனவும் வானிலை அவதான நிலையத்தின் கடமைநேர அதிகாரியான கயனா ஹெந்த விதாரண தெரிவித்தார்.

‘ஜல்’ புயலின் தாக்கம் காரணமாக இலங்கையின் வடக்கு, கிழக்கில் தொடர்ச்சியான மழை பெய்வதுடன் கடல் பரப்பிலும் கொந்தளிப்பு ஏற்படும். நாட்டின் ஏனைய பகுதிகளிலும் மழை பெய்வதுடன் அது தொடர்ச்சியான மழையாக இருக்க மாட்டாது.

காலநிலை மந்தமாகவே காணப்படும். யாழ்ப்பாணம், மன்னார், முல்லைதீவு, அம்பாறை மாவட்ட கரையோர மீனவர்கள் கடலுக்குச் செல்வதை தவிர்த்துக் கொள்ளுமாறும், இப்பகுதிகளில் இடைவிடாத கடும் மழை பெய்வதுடன் இடி மின்னலின் தாக்கமும் அதிகமாக காணப்படுவதால் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும் வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை விடுக்கிறது.

‘ஜல்’ புயல் இலங்கையை அண்மிப் பதற்கு முன்னரேயே நேற்று வடக்கு, கிழக்கு கடற் பகுதி கொந்தளிப்பாகவே காணப் பட்டதுடன் மழை பெய்யவும் ஆரம்பித்தது.

‘ஜல்’ புயல் காற்று இலங்கைக்கு வடக்கே நகரும் போது இன்று மாலை அல்லது இரவு வடக்கு, கிழக்கில் கடும் மழையுடன் பலத்த காற்றும் வீசும் எனவும் வானிலை அவதான நிலையம் தெரிவிக்கிறது.

தமிழகத்தை நோக்கி புயல்காற்று நகர்ந்து செல்வதால் தமிழக வாநிலை அவதான நிலையம் தமிழக மக்களையும் உஷார் நிலையில் வைத்துள்ளது. இது தொடர்பாக சென்னை காலநிலை அவ தான நிலையம் தெரிவிக்கையில்,

கடும் புயலாக உருவெடுத்துள்ள ‘ஜல்’ நேற்றுக்காலை நிலவரப்படி வங்கக் கடலில் சென்னையிலிருந்து 650 கி. மீ. தூரத்தில் நிலை கொண்டுள்ளது.

இந்தப் புயல் மேலும் வலுவடைந்து இன்று மாலை அல்லது இரவு புதுச்சேரி, நெல்லூருக்கு இடையே சென்னைக்கு அருகே கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என சென்னை வாநிலை ஆய்வு நிலையம் கூறுகிறது.

இன்று அதிகாலை முதல் காற்றின் வேகம் மேலும் அதிகரித்து 120 முதல் 140 கி. மீ. வரை புயல் காற்று வீசும்.

புயல் காரணமாக அடுத்த 24 மணி நேரத்துக்கு கடலோர வடக்கு, தெற்கு தமிழகம், புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திராவில் மிக பலத்த கன மழை பெய்யும்.

24 மணி நேரத்துக்குப் பின் தமிழகத்தின் சில இடங்களிலும் ராயல்சீமா உள்ளிட்ட சில ஆந்திர கடலோரப் பகுதிகளிலும் 25 செ. மீ. வரை மிக மிக பலத்த மழை பெய்யவும் வாய்ப்புண்டு.

கடல் மிக மிக கொந்தளிப்பாக இருக்கும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப் பட்டுள்ளனர்.

திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம் மாவட்டத்தின் தாழ்வான கடலோரப் பகுதிகளில் அலைகள் புகவும் வாய்ப்புண்டு. இப் பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். என சென்னை வானிலை ஆய்வு நிலையமும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில் திருகோணமலை கடல் பிரதேசம் கொந்தளிப்பாகவுள்ளதால் மீனவர்கள், கடற் பிரயாணிகள், கடலை அண்டிய பகுதியில் வாழும் மக்கள் அவதானமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும்படி அறிவுறுத்தப்படுகின்றது.

மீனவர்கள் கிண்ணியா, மூதூர், திருகோணமலை பிரதேசங்களில் தங்களது மீன்பிடி வலைகளையும் வள்ளங்களையும் கரையோரத்தில் ஏற்றி வைத்துள்ளதை கரையோரத்தில் அவதானிக்க முடிகிறது.

கிழக்கில் அம்பாறை மற்றும் மட்டக் களப்பு மாவட்ட கரையோர பகுதிகளில் கடலின் சீற்றம் நேற்று முதல் அதிகமாக காணப்படுகின்றன.

மேலும் சூறாவளியின் காரணமாக கடலுக்குச் செல்வதை தவிர்த்துக் கொள்ளுமாறும் கிழக்குப் பள்ளிவாசல்களில் அறிவிக்கப்பட்டுள்ளதுடன் ஆழ் கடலுக்குச் சென்ற படகுகளை கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று வாழைச்சேனை துறைமுகத்தில் உள்ள கடற்படையினர் திருப்பி அனுப்பியுள்ளனர்.

கிழக்கு மாகாணத்தில் கால நிலை கடந்த இரு தினங்களாக மப்பும் மந்தாரமுமாக காணப்படுவதோடு இடையிடையே மழை பெய்தும் வருகின்றது. இதனால் கிழக்கு மாகாணத்தில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

மீனவர்கள் கடலுக்குச் சென்று மீன் பிடிக்கவில்லை. இதனால் நேற்று கிழக்கு மாகாணத்தில் உள்ள பொதுச் சந்தைகளில் மீனுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டு இருந்தது.
மேலும் இங்கே தொடர்க...

பருத்தித்துறை முதல் தேவேந்திரமுனை வரை ஒரு சட்டமே நடைமுறையில் உள்ளது தங்காலையில் ஜனாதிபதி






சட்டம் சகலருக்கும் சமமானது அரசியல் மற்றும் குறுகிய நோக்கங்களுக்காக சட்டத்தைக் கையிலெடுக்க எவருக்கும் இடமளிக்க முடியாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

நீதிமன்றத் தீர்ப்புக்குச் சகலரும் தலைவணங்க வேண்டியது அவசியம். தற்போது நாட்டில் சகலருக்கும் பொதுவான ஒரே சட்டமே உள்ளது. பருத்தித்துறை முதல் தேவேந்திரமுனை வரை அதுவே நடைமுறை யிலுள்ளது எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

தங்கல்லையில் புதிய நீதிமன்றக் கட்டடத் தொகுதியை நேற்று உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைத்து உரையாற்றிய ஜனாதிபதி தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது,

சட்டம் சகலருக்கும் பொதுவானது. நீதிமன்றத்தின் தீர்ப்புகளுக்குச் சகலரும் தலைவணங்க வேண்டும். எனது மனித உரிமை மீறப்பட்டுள்ளமை தொடர்பில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு நான் மதிப்பளித்தேன். அதற்குத் தலைவணங்கினேன். அதற்கெதிராக ஆர்ப்பாட்டங்களைச் செய்யவில்லை.

எமது நாடு சுதந்திரமடைந்து கெளரவமான சமாதானம் உருவாகியுள்ளது. சுதந்திரமும் சமாதானமும் கிடைத்துள்ளதால் நாம் திருப்திப்பட முடியாது. நீதியும் நியாயமும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

நீதிமன்றங்கள் வணக்கஸ்தலங்கள் போன்றவை மக்கள் நம்பிக்கைமிக்கதாக அவை அமைய வேண்டும். நீதி நியாயத்திற்கான உந்துசக்தியாக நீதிமன்றங்கள் மக்களுக்கான சேவைகளை நிறைவேற்ற வேண்டும்.

மக்களுக்கு சேவை செய்வதே எம் அனைவரினதும் பொறுப்பாக வேண்டும். நீதிமன்றங்களில் வழக்குகள் அளவுக்கதிகமாக தாமதமாகியுள்ளன. பல வழக்குகள் 25 வருடங்களுக்கு மேல் நீள்கின்றன. இதில் ஜோர்ஜ் ராஜபக்ஷவின் தங்கையின் வழக்கும் 25 வருடங்கள் பழமை வாய்ந்ததாகியது.

இத்தகைய நிலை மேலும் நீடிக்க இடமளிக்க முடியாது. இதனால் நாடளாவிய ரீதியில் 74 மேன் முறையீட்டு நீதிமன்றங்களை அமைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கான இணக்கப்பாடும் நீதியரசர்களிடமிருந்து பெறப்பட்டுள்ளது.

நீதியை நிலைநாட்டுவதற்கு சகலரும் முன்வர வேண்டும். நீதிமன்றங்கள் நீதி நியாயத்தை நிலைநாட்டும் மக்கள் சேவையை முழுமையான அர்ப்பணிப்புடன் நிறைவேற்ற வேண்டும்.

கடந்த காலங்களில் வவுனியாவிற்கு அப்பால் நீதிமன்றங்கள் இருக்கவில்லை. யாழ்ப்பாணத்தில் மட்டுமே எமது நீதிமன்றம் இருந்தது. வவுனியாவிற்கு அப்பாலுள்ள பிரதேசங்களில் நீதிமன்றங்களும் சட்ட நிறுவனங்களும் புலிகளின் அதிகாரத்திற்கு உட்பட்டதாக இயங்கின.

தற்போது பருத்தித்துறை முதல் தேவேந்திரமுனை வரை ஒரே நீதி ஒரே சட்டம் என நடைமுறையிலுள்ளது. அதற்கேதுவாக நாடு உருவாக்கப்பட்டு விட்டது. அரசியல் தேவைகளுக்காக எவரும் சட்டத்தில் கைவைக்க முடியாது. சட்டத்தை எவரும் கையிலெடுக்கவும் இடமளிக்க முடியாது. சகல மக்களுக்கும் சட்டம் பொதுவானது. சுயாதீனத்தில் கைவைப்பதற்கான உரிமை எவருக்கும் கிடையாது. சிலர் வெளிநாடுகளுக்குச் சென்று எமது நீதிமன்ற சுயாதீனம் தொடர்பாக பேசுகின்றனர். நானும் நீதிமன்றத்தில் ஒரு சட்டத்தரணி அதே நேரம் ஒரு வழக்காளியாக இருந்தவன். எனினும் நான் நீதிமன்றத் தீர்ப்பிற்கு தலை வணங்கினேன். மூன்று தடவை சிறையிலிருந்த அனுபவமும் எனக்குண்டு. எனது மனித உரிமை மீறல் தொடர்பாக நான் ஜெனீவாவுக்குச் சென்றேன். எனது ஆவணங்கள் அபகரிக்கப்பட்ட நிலையில் என்னுடன் வந்த பொலிஸ் அதிகாரி எனது நிலைப்பாட்டை அங்கு தெளிவுபடுத்தினார்.

எவ்வாறெனினும் நீதிமன்றமானது எனக்கு எவ்வித மனித உரிமை மீறலும் இடம்பெறவில்லையென தீர்ப்பளித்தது. அதற்கு நான் தலை வணங்கினேன். நான் மட்டுமல்ல நீதிமன்றத் தீர்ப்பிற்குத் தலைவணங்க நாம் அனைவரும் கட்டுப்பட்டுள்ளோம்.

நீதிமன்றத்தின் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கைக்குப் பங்கம் ஏற்பட்டுவிடக் கூடாது. தங்கல்ல தற்போது அபிவிருத்தியில் வளர்ச்சி காணும் ஒரு பிரதேசமாகும் இத்தருணத்தில் இங்கு நீதிமன்றம் அமைவது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும். இப்பிரதேசத்தில் மட்டுமன்றி நாட்டின் எப்பிரதேசத்திலும் மக்கள் தேவையை நிறைவேற்ற நாம் எந்நேரத்திலும் தயாராகவுள்ளோம்.

மக்கள் நம்பிக்கைக்குரியதாக நீதிமன்றங்கள் மாற்றப்பட வேண்டும். அவை, மக்களுக்கு பிரச்சினைகளிலிருந்து நிவாரணமளிப்ப தாகவும் தமைய வேண்டும். அதற்கான சகல வேலைத்திட்டங்களையும் நாம் முன்னெடுத்து வருகிறோம் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

நேற்றைய இந்நிகழ்வில் அமைச்சர் அதாவுத செனவிரத்ன, சபாநாயகர் சமல் ராஜபக்ஷ உட்பட அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
மேலும் இங்கே தொடர்க...