8 பிப்ரவரி, 2010


ஜெனரல் சரத் பொன்சேகா கைதுமுன்னாள் இராணுவத் தளபதியும் முன்னாள் முப்படைகளின் பிரதானியும் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளருமான ஜெனரல் சரத்பொன்சேகாவும் அவருடைய ஊடகச் செயலாளரான சேனக்க டி சில்வாவும் இன்றிரவு சுமார் 8மணியளவில் இராணுவப் பொலீசாரினால் விசாரணைக்கென கைதுசெய்யப்பட்டுள்ளதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன் தெரிவித்துள்ளார். ஜெனரல் சரத்பொன்சேகா கொழும்பிலுள்ள அவரது அலுவலகத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டிருப்பதை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரசாத் சமரசிங்கவும் உறுதிப்படுத்தியுள்ளார்.
இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையிடம் விளக்கமளிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையிடம் விளக்கமளிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக இறுதிக்கட்ட யுத்தம் தொடர்பில் ஜெனரல் சரத் பொன்சேகா சுமத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அரசாங்கம், மனித உரிமைகள் பேரவைக்கு விளக்கமளிக்கவுள்ளது. ஜெனீவாவில் அமைந்துள்ள ஐ.நா மனிதஉரிமைப் பேரவைக் காரியாலத்தில் வைத்து நவனீதம்பிள்ளையை, மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க சந்திக்கவுள்ளார். அமைச்சர் மஹிந்த சமரசிங்கவுடன், சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ் மற்றும் ஏ.ஜீ.பீரிஸ் ஆகியோரும் ஜெனீவாவிற்கு விஜயம் செய்துள்ளனர். எதிர்வரும் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரில் இலங்கையின் பங்களிப்புக்குத் தேவையான நடவடிக்கைகளும் இந்தக் கூட்டத்தில் எடுக்கப்படவுள்ளது. இறுதிக்கட்ட யுத்தத்தின்போது பாதுகாப்பு படையினர் மனிதஉரிமை மீறல்களில் ஈடுபட்டதாக முன்னாள் இராணுவுத்தளபதி ஜெனரல் பொன்சேகாவை மேற்கோள்காட்டி ஊடகங்களில் வெளியிடப்பட்ட தகவல்கள் குறித்து இலங்கை விளக்கமளிக்கவுள்ளது.


எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிட ஜே.வீ.பீ உள்ளது

 

எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிட ஜே.வீ.பீ தயராகவுள்ளதாகவும் எந்த சின்னத்தில் போட்டியிடுவது என்பது குறித்து அடுத்த சில தினங்களில் தீர்மானிக்க உள்ளதாகவும் ஜே.வீ.பீயின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் தாம் ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச்சின்னத்தில் போட்டியிடுவதில்லை என்ற தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அன்னப்பறவைச் சின்னத்தில் போட்டியிட்ட ஜெனரல் சரத் பொன்சேக்காவை ஆதரித்ததாகவும் அவருக்கு ஆதரவு வழங்க பல கட்சிகள் முன்வந்தன எனவும் அன்னப்பறவைச் சின்னம் முன்னோக்கி செல்ல வேண்டும் என்பதே அந்த கட்சிகக்கு வாக்களித்த மக்களின் எதிர்பார்ப்பு எனவும் ரில்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார். சரத் பொன்சேக்காவுக்கு ஆதரவு வழங்கிய கட்சிகள் பொதுத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து மேற்கொள்ளும் தீர்மானங்களின் அடிப்படையில் தமது கட்சி முனைப்புகளை மேற்கொள்ளும். ஐக்கிய தேசியக் கட்சி யானைச்சின்னத்தில் போட்டியிட வேண்டும் என தனது நிலைப்பாட்டை ஏற்கனவே வெளியிட்டுள்ளதாகவும் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ_ம்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ_ம் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென்று புளொட் தலைவர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். இது வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ்பேசும் மக்களின் பிரச்சினைக்கு தீர்வினைத் தேடித்தரும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வரலாற்று ரீதியான வெற்றியைப் பெற்றுள்ளார். அத்துடன் கடந்த தேர்தலில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை பெருந்தொகையான மக்கள் வெற்றிபெற ஆதரித்துள்ளமை அவருடைய தலைமைத்துவத்தை மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளமையை எடுத்துக் காட்டுகின்றது. எனவே ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் பேசி சிறுபான்மை மக்களின் பிரச்சினையைத் தீர்;த்துக் கொள்ள வேண்டுமென்று அவர் தெரிவித்துள்ளார். கடந்த புலிகளின் யுகத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விட்ட தவறுகளை மீண்டும் விடக்கூடாதென்றும், கடந்த காலங்களில் புலிகளால் முஸ்லிம் மற்றும் தமிழ் மக்களுக்கிடையிலான பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளும் வாய்ப்புகள் முடக்கப்பட்டதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டிள்ளார். ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே புளொட் தலைவர் த.சித்தார்த்தன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இடம்பெயர் முகாம்களில் எஞ்சியுள்ள 97,000அளவிலான வன்னி மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் இழுபறி நிலை


இடம்பெயர் முகாம்களில் எஞ்சியுள்ள 97,000அளவிலான வன்னி மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் இழுபறி நிலையே காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த மக்கள்; அனைவரும் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலின் பின்னரே குடியமர்த்தப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இடம்பெயரந்த் மக்கள் அனைவரையும் அரசாங்கம் ஜனவரி 31ம் திகதிக்குள் மீள்குடியமர்த்துவதாக கூறியிருந்தது. ஆயினும் அந்த உறுதிமொழி நிறைவேற்றப்படவில்லை. ஜனாதிபதி தேர்தல் காரணமாகவே இவை தாமதமானதாக, அனர்த்த நிவாரண மற்றும் மீள்குடியேற்ற அமைச்சகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை ஜனவரி 31ம் திகதிக்கு முன்னர் குடியமர்த்தப்படுவதாக அரசாங்கம் உறுதிமொழி எதனையும் வழங்கவில்லை என ஏற்கனவே அரச தரப்பினர் மறுத்திருந்தனர்.


தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து சிறுவர் போராளிகளும் எதிர்வரும் மேமாதத்துடன் விடுவிக்கப்படுவர் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து சிறுவர் போராளிகளும் எதிர்வரும் மேமாதத்துடன் விடுவிக்கப்படுவர் என சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் ஜெகத் வெல்லவத்தை தெரிவித்துள்ளார். ஒருவருட புனர்வாழ்வு திட்டத்தின் முடிவின் பின்னர், அவர்கள் அனைவரும் அரசாங்கத்தினால் பெற்றோர்களிடம் கையளிக்கப்பட உள்ளதாக அவர் உறுதியளித்துள்ளார். குறிப்பாக தற்போது புனர்வாழ்வு பெற்றுவருகின்ற 11ஆயிரம் முன்னாள் போராளிகளில் 40 சதவீதமானவர்கள் 18 வயதுக்கும் குறைவானவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.. இந்த சிறுவர் போராளிகளை விடுவிப்பது தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் நிதியமும் சர்வதேச மனித உரிமை அமைப்புக்களும் அரசாங்கத்திற்கு பல அழுத்தங்களை கொடுத்து வருகின்றனமை குறிப்பிடத்தக்கது.

 
மேலும் இங்கே தொடர்க...
புலிகளை ஏமாற்றிய சம்பந்தரும் ஐக்கியப்பட மறுக்கும் தமிழ்கட்சித் தலைவர்களும்;தேர்தல் தெருக்கூத்துக்கள் யாவும் முடிந்துவிட்டது மீண்டும் அடுத்த தேர்தலுக்கான சமிஞ்சைகள் வெளிவரத்தொடங்கிவிட்டது தமிழ்கட்சிகளின் தலைவர்கள் தமது வெற்றிக்காக வியுகங்களை நெறிபடுத்த தொடங்கிவிட்டார்கள் யாரும் தமிழ்ர்களின் ஐக்கியத்தைப் பற்றி கவலைப்படுவதாக தெரியவில்லை கூட்டமைப்பும், ஈபிடிபியும் தனித்துபோட்டியிடப் போவதாக அறிவித்துள்ளர்கள் ஏனைய தமிழ்கட்சிகளின் நிலைப்பாடுகளை இன்னும் சில நாட்களில் எதிர்பார்க்கலாம்

இத்தேர்தலிலாவது அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்றிணைந்துபோட்டியிடுவார்களென எதிர்பார்த்த அனைவருக்கும் ஏமாற்றமே எஞ்சியுள்ளது கூட்டமைப்பை வழிநடத்திச் செல்லும் மிதவாத போக்குடைய தலைவர்களினால் எமது மக்களின் அரசியல் அங்கீகாரம் சிதைக்கப்பட்டுவருகின்றது இதனை உணர்ந்தாவது முன்னால் விடுதலை இயக்கங்களின் தலைவர்கள் ஒரு புரிந்துணர்வுடன் செயற்ப்பட முன்வரவேண்டும்என்பது பலரது எதிர்பார்ப்பாகும்

கூட்டமைப்பு என்றுமே ஏனைய தமிழ்கட்சிகளுடன் இணைவதற்கு முன்வரமாட்டார்கள் காரணம் தமிழ்தேசிய இனவாத சக்திகளின் நிதியில்தான் கூட்டமைப்பு உயிர்வாழ்ந்துகொண்டிருக்கின்றது எனவே அவகளின் கைப்பாவையாக இருக்கும்வரையில் சுயமாக செயற்படுவார்களென எதிர்பார்க்கமுடியாது தமிழீழ கனவை நனவாக்க துடிக்கும் தமிழ் குறுந்தேசியவாதிகளுக்கு கூட்டமைப்பு போன்ற சொல்வதை செய்யும் கோடாரிக் காம்புகள்தான் தேவை அதற்காக முன்னால் போராளிக்குடும்பங்களையும், மாவீரர் குடும்பத்தினரையும் தேர்தல்கால பணிகளில் ஈடுபடவேண்டுமென பணிப்புரைவிடுத்துள்ளார்கள்

கூட்டமைப்பில் அங்கம்வகிக்கும் பலருக்கு தமிழ்கட்சிகளுடன்
ஒன்றினைந்து தேர்தலில் போட்டியிட மனதளவில் விருப்பமிருந்தாலும் தடையாக இருப்பவர்கள் தனிநாட்டு கோரிக்கையை ஆதரிக்கவில்லையென்று கூறும் இரா சம்பந்தன் போன்றவர்களேயாகும் தனிநாட்டு கோரிக்கையை ஆதரிக்காத கூட்டமைப்பு தலைவர் தனது பதவிக்காக தமிழீத்தற்காக போராடிய புலிகளை மட்டுமில்லாது மக்களையும் புத்திசாதுர்யமாக ஏமாற்றியுள்ளார் என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும் பச்சொந்தித் தனமாக பேசும் தலைவர்கள் தமிழ் மக்களுக்கு தேவைதான.

ஆகவே புளொட், ஈபிடிபி,ஈ பி ஆர் எல் எப் ,(நாபாஅணி) டியுஎல்எப் யுடன் ஏனைய தமிழ்கட்சிகளும் ஒருகுடையின் கீழ் தேர்தலில் போட்டியிட்டால் எமது வாக்குகள் சிதறடிக்கபடாமல் ஒருபலமான அரசியல் சக்தியை தோற்றுவிக்கமுடியும் இதற்காக மாற்றுக்கருத்துடைய சாகல இயக்கங்களின் உறுப்பினர்களும் தம்தமது கட்சிகளுக்கு அழுத்தம் கொடுக்க முன்வரவேண்டும் எமக்கிடையே உள்ள கருத்து முரண்பாடுகளை ஒருபுறம் ஒதுக்கிவதை;துவிட்டு தமிழ்மக்களின் எதிர்கால அரசியல் விடிவுக்காக ஐக்கியப்படவேண்டியது காலத்தின் கட்டாயமாகும்

மத்தியகிழக்கிலிருந்து உமாவசந்தன்
மேலும் இங்கே தொடர்க...

பொன்சேகா மீது ஆட்சிக் கவிழ்ப்பு புகார்: பத்திரிகையாளர்களிடம் விசாரிக்க இலங்கை முடிவு


இலங்கையில் ஆட்சிக் கவிழ்ப்பு செய்ய சதித்திட்டம் தீட்டியதாக முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகா மீது எழுந்துள்ள புகாரைத் தொடர்ந்து அவருடன் இருந்த பத்திரிகையாளர்களிடமும் விசாரணை நடத்த இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. இலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையின்போது அதிபர் தேர்தலில் போட்டியிட்ட பொன்சேகா,​​ கொழும்பில் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தனது ஆதரவாளர்களுடன் ஆட்சிக் கவிழ்ப்பு சதியில் ஈடுபட்டதாகவும்,​​ அதிபர் ராஜபட்சவை சுட்டுக்கொல்ல திட்டமிட்டதாகவும் அவர் மீது புகார் எழுந்தது. பொன்சேகாவின் ஆதரவாளர்கள் ஹோட்டலில் 70க்கும் மேற்பட்ட அறைகளில் ​ தங்கியிருந்தனர்.​ அங்கு ராணுவ வீரர்களும்,​​ அதிகாரிகள் சிலரும் இருந்துள்ளனர்.​ அவர்களிடம் ஏராளமான ஆயுதங்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது.​ இதைத் தொடர்ந்து அவர்கள் மீது இலங்கை அரசு வழக்குப் பதிந்து விசாரணை நடத்திவருகிறது.​ இந்நிலையில் பொன்சேகாவுடன் இருந்த பத்திரிகையாளர்களிடமும் விசாரணை நடத்த இலங்கை அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகத்தை மேற்கோள்காட்டி அரசு இணையதளத்தில் செய்தி வெளியாகியுள்ளது. ஹோட்டலில் தங்கியிருந்தபோது ஆட்சிக் கவிழ்ப்பு தொடர்பாக தனது ஆதரவாளர்களுடன் பொன்சேகா மேற்கொண்ட திட்டம் குறித்து அறிவதற்காக பத்திரிகையாளர்களிடம் விசாரணை நடத்த உள்ளதாகத் தெரிகிறது.​ ஏற்கெனவே இந்த புகார் தொடர்பாக ராணுவ அதிகாரிகள் சிலரிடம் இலங்கை அரசு விசாரணையை முடுக்கிவிட்டுள்ளது.​ இந்நிலையில் பத்திரிகையாளர்களிடமும் விசாரணை நடத்தப்படலாம் என்ற செய்தியால் இந்த புகார் மேலும் பரபரப்படைந்துள்ளது.​ இதனிடையே தேர்தலுக்கு முன்பாக தெற்கு இலங்கையிலும்,​​ கொழும்பு புறநகர் பகுதியிலும் சில இடங்களில் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டது தொடர்பாக விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.​ ராஜபட்சவை சுட்டுக்கொல்லும் சதித்திட்டத்துக்கும் இதற்கும் தொடர்பு உள்ளதாக அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.​ பொன்சேகாவிடமிருந்து உத்தரவு வந்தபிறகு சதித்திட்டத்தை நிறைவேற்ற அவர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.இதனிடையே கொழும்பு புறநகர் பகுதியில் உள்ள கோயிலிலிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து புத்தமத பிக்கு ஒருவரை போலீஸôர் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். ஐக்கிய தேசிய கட்சி கண்டனம்:​​ பொன்சேகாவின் ஆதரவாளர்கள் மீது இலங்கை அரசு திட்டமிட்டு பழிபோடுவதாக எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.​ தேர்தல் வெற்றிக்குப் பிறகு எதிர்க்கட்சிகளின் ஆதரவாளர்களை இலங்கை அரசு தேடிப்பிடித்து பழிவாங்குவது கண்டிக்கத்தக்கது என்று ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. இதனிடையே அதிபர் தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளதாக எழுந்த புகாரை தலைமை தேர்தல் ஆணையர் தயானந்த திஸ்ஸநாயக மறுத்துள்ளார்.​ தேர்தல் தொடர்பாக எதிர்க்கட்சிகள் ஊகத்தின் அடிப்படையில் தெரிவித்துள்ள புகார்களை முற்றிலும் மறுப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
விமானங்கள் நடுவானில் மோதல்:​ மூவர் சாவு


கொலராடோ, ​​ பிப்.​ 7:​ அமெரிக்காவில் கொலராடோவில் இரண்டு சிறிய வகை விமானங்கள் வானில் மோதி கீழே விழுந்து நொறுங்கியதில் மூவர் இறந்தனர். கொலராடோ விமான நிலையத்திலிருந்து சனிக்கிழமை கிளைடரை அழைத்துச் செல்லும் சிறிய வகை விமானம் வானில் புறப்பட்டது.​ வானில் கிளைடரை விலக்கிய சிறிது நேரத்தில் மற்றொரு விமானத்துடன் மோதியது.​ விபத்துக்குள்ளான இரு விமானங்களும் தீப்பிழம்புடன் கீழே விழுந்து நொறுங்கின.​ இரு விமானங்களிலும் பயணம் செய்த மூவர் உயிரிழந்தனர். விபத்துக்குள்ளான இரு விமானங்களும் சிறிய வகை வாடகை விமானங்களாகும்.​ அதில் எத்தனை பேர் பயணம் செய்தனர் என்ற விவரம் தெரியவில்லை.​ எனினும் விபத்துக்குள்ளான ஒரு விமானத்தில் இருந்த மூன்று பேர் உயிர்ப் பிழைத்ததாக மற்றொரு தகவல் தெரிவிக்கிறது.மூவாயிரம் டயனோசரஸ் கால் சுவடுகள் சீனாவில் கண்டுபிடிப்புமூவாயிரம் டயனோசரஸ் கால் சுவடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

பலகோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவையாக டயனோசரஸ் கருதப்படுகிறது. இவற்றின் கால் சுவடுகள் சீனாவில் கிழக்கு ஷான் டோங் பகுதியில் உள்ள ஷு செங் நகரில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

மூவாயிரம் டயனோசரஸ்களின் கால் சுவடுகளை அந்நாட்டு விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளதாக ஷின்குவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இவை 10 செ.மீட்டர் முதல் 80 செ.மீட்டர் வரை நீளம் கொண்டவை என்றும் டிரானோசரஸ் கோயெழுரோசரஸ் மற்றும் ஹெட்ரோசரஸ் வகைகளை சேர்ந்தவை என்றும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

இவை மலைப் பகுதியில் உள்ள பாறை களில் 2600 ச.மீட்டர் பரப்பளவில் இருந்து கண்டெடுக்கப்பட்டன

பணிகள் வவுனியாவில் மீண்டும் 15 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன.இத்திட்டத்தின் கீழ் வவுனியா வடக்கில் மீள்குடியேற்றப் படுவோர்க்கென 8 ஆயிரத்து 900 வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படவிருப்பதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சார்ள்ஸ் தெரிவித்தார்.

மீள்குடியேற்றப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ள அதேவேளை எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் வவுனியா வடக்கில் மீள்குடியேற்றப் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கமைய ஐரோப்பிய ஆணைக்குழு 3 ஆயிரத்து 900 வீடுகளையும் உலக வங்கி 5 ஆயிரம் வீடுகளையும் அமைத்துக்கொடுக்க முன்வந்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

வவுனியா நிவாரணக் கிராமங்களில் தற்போது சுமார் 75 ஆயிரம் பேரும் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் சுமார் 20 ஆயிரம் பேர் வரையிலுமே மீளக் குடியமர்த்தப்படவிருக்கின்றனர்.

நிலக்கண்ணிவெடி அகற்றலில் ஏற்பட்ட தாமதத்தினால் சிறிய இடைவெளிக்குப் பின்னர் மீள்குடியேற்றப் பணிகள் கடந்த 02 ஆம் திகதி முதல் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்ட பகுதிகளில் கட்டம் கட்டமாக மீள்குடியேற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.

கடந்த 02 ஆம் திகதி பூநகரிக்கு ஆயிரம் பேர் அனுப்பி வைக்கப்பட்டனர். அதேவேளை இன்று கிளிநொச்சி மாவட்டம் கரச்சி பிரதேசத்தில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீட்டில் தங்கியிருக்கும் 300 குடும்பங்கள் மீளக்குடியமர்த்தப் படவிருப்பதாகவும் அரச அதிபர் தெரிவித்தார்.ஆளும் ஐ.ம.சு.முன்னணிக்கு மீண்டும் ஆதரவு : மட்டு. முதல்வர்


முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவாக செயற்பட்ட மட்டக்களப்பு மாநகர முதல்வர் சிவகீதா பிரபாகரன் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு ஆதரவாக செயற்படத் தீர்மானித்துள்ளார்.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் குறித்து வீரகேசரி இணையத்தளத்துக்குக் கருத்து தெரிவித்த அவர்,

“ஜனாதிபதித் தேர்தலின்போது ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரித்தேன். எனினும் ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணையவில்லை. இன்னும் நான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினராகவே இருந்து வருகிறேன்.

அந்தக் கட்சிக்கு ஆதரவு வழங்குவதே பொருத்தமானது என நினைக்கிறேன். எனினும் எனது நிலைப்பாடு தொடர்பாக கட்சியின் உயர்மட்ட தீர்மானங்களை கருத்திற்கொள்ள வேண்டியதும் அவசியமாகும்"என்றார்.
மேலும் இங்கே தொடர்க...
மி ழீ க்ள் விடுலை ம்

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் Germanகிளைக் கூட்டம்.06.02 .2010 Stuttgartஇல் நடைபெற்றது. இக்கூட்டத்தில்இலங்கையில் தமிழ் மக்களுடைய எதிர்கால அரசியல்உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளைமுன்னெடுப்பதற்கு அரசியல் கட்சியினுடைய அவசியம் புரிந்துகொள்ளப்பட்டதுடன் எதிர்காலத்தில் ஐனநாயக மக்கள்விடுதலை முன்னணிக் கட்சியை (PLOTE -D.P.L.F) தேர்தலில்வெற்றியடைய முழுமுயற்சியுடன் செயற்படுவதெனவும்தீர்மானிக்கப்பட்டது. மேலும் கழக அனுசரணையுடன் ஐனநாயகமக்கள் விடுதலை முன்னணி (D.P.L.F) யின் செயற்பாட்டுக்குயின் அனைத்து பிராந்தியங்களுக்கும் பிராந்தியஅமைப்பாளர்களை நியமிப்பதுடன் கழக கடந்தகாலஆதரவாளர்களின் ஒத்துழைப்பையும் ஆதரவையும்பெறுவதற்கான முயற்சிகளையும் மேற்கொள்வதெனதீர்மானிக்கப்பட்டது. எனவே கடந்தகால ஆதரவாளர்களையும்அங்கத்தவர்களையும எம்முடன் இணைந்து செயற்படுவதற்குபின்வரும் தொலைபேசியுடன் தொடர்பு கொள்ளுமாறுவேண்டுகின்றோம். நன்றி! - 6.2.2010 Germany தொடர்புகட்கு: 07154181312 (00497154181312), E-Mail: dplfgermany@ymail.com

மேலும் இங்கே தொடர்க...
எனக்கு வழங்கிய டொக்டர் பட்டம் இலங்கை மக்கள் அனைவருக்கும் கிடைத்த வெற்றி:மொஸ்கோவில் ஜனாதிபதி


ரஷ்யாவின் நட்புறவு பல்கலைக்கழகம் எனக்கு வழங்கிய டொக்டர் பட்டம் எனக்கு கிடைத்த தனிப்பட்ட வெற்றி அல்ல. அது இலங்கை மக்கள் அனைவருக்கும் கிடைத்த பொதுவான வெற்றியாகும். என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ரஷ்யாவில் தெரிவித்தார்.

ரஷ்யாவின் நட்புறவு (லுமும்பா) பல்கலைக்கழகம் ஜனாதிபதிக்கு கௌரவ டொக்டர் பட்டம் வழங்கி கௌரவித்ததையடுத்து உரையாற்றியபோதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறியதாவது:-

"இந்தப் பட்டம் வழங்கப்படுவதற்கு உலக சமாதானத்துக்கு நாம் ஆற்றிய பங்களிப்பே காரணம் என்று பட்டம் வழங்கல் தொடர்பான குறிப்பில் கூறப்பட்டுள்ளது.முழு உலகிலும் கொடூரமான புலிகள் பயங்கரவாத சவால் மக்களின் அமைதி, சௌபாக்கியம் மட்டுமன்றி உயிர்களுக்கும் அச்சுறுத்தலாக இருந்தது.

பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினையை தீர்க்க நாம் மேற்கொண்ட முயற்சிகள் பயங்கர வாதிகளால் நிராகரிக்கப்பட்டதையடுத்தே நாம் யுத்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போது பணயக் கைதிகளாக பயங்கரவாதிகள் பிடித்திருந்த பொது மக்களை பாதுகாக்க நாம் மனிதாபிமான நடவடிக்கையில் இறங்கினோம். இதனையடுத்து நான் மக்கள் ஆணையை மீண்டும் கேட்டேன். நியாயமான அமைதியான தேர்தல் மூலம் சில தினங்களுக்கு முன் தெரிவாகிய நான் இன்று இலங்கையின் 6 ஆவது ஜனாதிபதியாக உங்கள் முன் தோன்றுகிறேன்.

அந்த தேர்தலில் எதிர்க்கட்சியினால் மேற்கொண்ட வன்முறைகளுக்கு மத்தியில் சமாதானம், ஜனநாயகம் மற்றும் முன்னேற்றம் கருதி மக்கள் 58 சதவீத அதிக வாக்குகளால் என்னை மீண்டும் தெரிவு செய்துள்ளனர்.

கடந்த நான்கு வருடங்களில் அபிவிருத்தி என்ற ரீதியில் இது வரை இருந்ததற்கு மேலான இடத்துக்கு எனது நாட்டை கொண்டு செல்ல எனக்கு முடிந்திருக்கிறது. உலகளாவிய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் எமது பொருளாதார நிலை கடந்த நான்கு வருடங்களில் மேலும் வலுவடைந்துள்ளது.

வியாபார உலகில் நாம் இப்போது கட்டியெழுப்பியுள்ள நம்பிக்கையானது உயர்ந்த மட்டத்தில் உள்ளது. சக்தி, மனித வளம், வங்கி நடவடிக்கைகள் ஆகியவை தொடர்பான எதிர்கால திட்டங்கள் ஏற்கனவே பூரணப்படுத்தப்பட்டுள்ளன. இந் நிலையில் வறுமை பிரச்சினையும் குறைந்து வருகிறது.

அது மட்டுமன்றி சர்வதேச ரீதியில் நாம் வளர்ந்து வரும் நடுத்தர வருமானத்தை பெறும் சந்தையை கொண்டுள்ளதாக கணிக்கப்படுகிறது. இந்த காரணங்களால் உலக நாடுகளின் பல்வேறு முதலீடுகளில் இலங்கை பிரபல சந்தை கேந்திரமாக மாறி வருகிறது.

அத்துடன் மக்களின் சமூக கலாசாரம் மற்றும் அனைத்து துறைகளிலும் எமது நிலையில் முன்னேற்றத்தை காண முடிகிறது.இலங்கை மக்கள் என் மீது வைத்துள்ள விசுவாசத்தையிட்டு நான் என்ன பிரதியுபகாரம் செய்யப் போகிறேன் என்ற எண்ணம் எனது 40 வருட கால அரசியல் வாழ்க்கை முழுவதும் இருந்து வந்துள்ளது.

நாட்டை ஐக்கியப்படுத்தியதையடுத்து நாட்டு மக்களின் மன வேதனையை தீர்ப்பதற்கு எனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பது எனது பூரண நம்பிக்கை.எமது நாட்டு மக்களின் எதிர்பார்ப்பும் அதுவாகும். நட்புறவு பல்கலைக்கழ கமானது பல்வேறு இன, வர்க்க, மற்றும் மதங்களை சேர்ந்தவர்களிடையே ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்காக அர்ப்பணிப்புடன் செயல்படும் ஒரு நிறுவனமாகும்.

இந்த பல்கலைக்கழகத்தின் ஆரம்ப கர்த்தாவான பட்ரிக் லுமும்பாவின் உன்னத நோக்கம் ஒருவரின் அரசியல் நிலைப்பாடு எதுவாக இருப்பினும் அவருடன் நட்புறவை பேணுவதாகும். எதிர்காலத்தில் முகம் கொடுக்க நேரும் பாரிய சவாலின் போதும் நான் இந்த கொள்கையையே பின்பற்றப் போகிறேன்.

அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் உள்ள ஆயிரக்கணக்கானோருக்கு உயர்ந்த மட்ட பல்கலைக்கழக கல்வியை மனித குலத்துக்கு வழங்கும் உன்னத சேவை பங்களிப்பினை மேற்கொள்ளும் நிறுவனமான நட்புறபு பல்கலைக்கழத்தின் 50 ஆண்டு நிறைவினைக் கொண்டாடும் சந்தர்ப் பத்தில் உரையாற்றுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி தருவதாக உள்ளது.

அத்துடன் எனது இளைய சகோதரர் இந்த சிரேஷ்ட பல்கலைக்கழகத்தின் பட்டதாரி என்று கூறிக் கொள்வதிலும் மகிழ்ச்சியடைகிறேன்.அத்துடன் 70 ஆம் ஆண்டுகளில் இந்த உன்னத பல்கலைக்கழகத்துக்கு வருகை தரும் பாக்கியம் எனக்கு கிடைத்திருந்ததையும் இங்கு நான் குறிப்பிட்டாக வேண்டும்" என்று ஜனாதிபதி அங்கு கூறினார்.தேர்தல் குறித்து வார இறுதியில் ததேகூ கலந்தாலோசனை
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக இந்தவார இறுதியில் கலந்தாலோசிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவிக்கிறது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகிய முக்கிய உறுப்பினர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாகவும் அவர்கள் நாளை நாடு திரும்பக் கூடிய சாத்தியம் உள்ளதாகவும் அக்கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.துரைரட்ணசிங்கம் எமது இணையத்தளத்துக்குத் தெரிவித்தார்.

இந்த வார இறுதியில் உறுப்பினர்கள் அனைவரும் கலந்தாலோசித்த பின்னர் தேர்தலில் தமது நிலைப்பாடுகள் குறித்து அறிவிக்கவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்ஆளும் கட்சியிலோ,எதிர்கட்சியிலோ போட்டியிடும் எண்ணம் இல்லை:சிவாஜிலிங்கம்பொதுத்தேர்தலில் ஆளும் கட்சியுடனோ அல்லது எதிர்க் கட்சியுடனோ இணைந்து போட்டியிடும் எண்ணம் தனக்கு இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் எமக்கு மேலும் தெரிவிக்கையில்," ஆளும் கட்சியுடனோ, அல்லது எதிர்கட்சியுடனோ இணைந்து தேர்தலில் போட்டியிடும் எண்ணம் எனக்கு இல்லை.தமிழ் தேசியம் என்ற நிலைப்பாட்டிலேயே நான் உள்ளேன். தற்போதும் நான் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒரு உறுப்பினர் . எனவே தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிட பேச்சு வார்த்தைகள் மேற்கொள்ளவுள்ளேன்.

இதில் இணக்கப்பாடுகள் ஏற்பட்டால் கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிடுவேன். பொது தேர்தலில் போட்டியிடுவது தொடர்பான எனது நிலைப்பட்டை இவ்வாரம் அறிவிப்பேன்" எனத் தெரிவித்தார்
மேலும் இங்கே தொடர்க...
..முன்னணிக்குள் பிளவு : ..முன்னணியில் பாரதிதாசன் இணைவுமலையக மக்கள் முன்னணியின் உபதலைவரும் சிரேஷ்ட உறுப்பினருமான பாரதிதாசன் சுமார் 2000 ஆதரவாளர்களுடன் ஜனநாயக மக்கள் முன்னணியுடன் இணைந்துள்ளார். கட்சியில் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளே இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

மலையக மக்கள் முன்னணியின் தலைவராக இருந்த அமைச்சர் சந்திரசேகரனின் மறைவையடுத்து அவரது மனைவி தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். இதனால் கட்சியின் சில உறுப்பினர்களுக்கிடையே கருத்து முரண்பாடு நிலவி வந்ததாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்நிலையில் சுமார் 2000 பேர் வரையிலான ஆதரவாளர்களுடன் பாரதிதாசன் தமது கட்சியில் இணைந்து கொண்டதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் வீரகேசரி இணையத்தளத்துக்குத் தெரிவித்தார்.

பாரதிதாசனை கட்சியின் உபதலைவர்களுள் ஒருவராக இணைத்துக் கொண்டுள்ளதாகவும் இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பினை இன்று மாலை வெளியிடவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்ஜனாதிபதி மஹிந்த நாடு திரும்பியதும் சத்தியப்பிரமாணம் செய்துகொள்வார்?உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு ரஷ்யாவிற்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த நாடு திரும்பியதும் ஆறாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பிரதம நீதியரசர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொள்வார் என நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.

அவர் நாளை மறுதினம் புதன்கிழமை அல்லது வெள்ளிக்கிழமை சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 26 ஆம் திகதி நடத்தப்பட்ட ஆறாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெற்றியீட்டினார்.

இதனையடுத்து தனது இரண்டாவது தவணைக்காலம் எப்போது ஆரம்பமாகி எப்போது நிறைவு பெறுகின்றது என்பது தொடர்பிலான ஆலோசனைகளை வழங்குமாறு உயர்நீதிமன்றத்திடம் எழுத்து மூலமாக கோரியிருந்தார்.

அது தொடர்பில் பிரதம நீதியரசர் அசோக என் சில்வா தலைமையிலான நீதியரசர்களான ஷிராணி பண்டாரநாயக்க, பாலபெத்த பெந்தி, ஸ்ரீபவன், ஏக்கநாயக்க, சந்திரா ஏக்கநாயக்க, இமாம் ஆகிய ஏழு நீதியரசர்கள் குழு கடந்த முதலாம் திகதி திங்கட்கிழமை (10) விரிவாக ஆராய்ந்தனர்.

இந்த ஆலோசனைகள் மறுநாள் செவ்வாய்க்கிழமை ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது , அதன் பிரகாரம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது பதவிக்காலம் 2010 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19 ஆம் திகதி ஆரம்பமாகின்றது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது அதன் பிரகாரமே ஜனாதிபதி பதவிப்பிரமாணம் செய்துகொள்ளவிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது

ஒரு லட்சம் தொழிலாளரின் தொழிலை பாதுகாக்க அரசின் மாற்றுத் திட்டம் என்ன?
ஒன்றியம் இலங்கைக்கு வழங்கி வருகின்ற ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகைத்திட்டம் நிறுத்தப்படவுள்ளதாக தெரிகின்றது. அவ்வாறெனின் சுமார் ஒரு இலட்சம் தொழிலாளர்களின் தொழில்களை பாதுகாப்பதற்கு அரசாங்கத்திடம் உள்ள மாற்றுத்திட்டம் என்னவென்று கேட்கின்றோம் என ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

இலங்கைக்கான ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையை நிறுத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளமை குறித்து கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ரவி கருணாநாயக்க எம்.பி. இது தொடர்பில் தொடர்ந்து கூறியதாவது

"ஐரோப்பிய ஒன்றியத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்டு வருகின்ற ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகைத்திட்டத்தை நிறுத்துவதற்கு ஒன்றியம் தீர்மõனித்துள்ளதாக தெரியவருகின்றது.

இது மிகவும் அவதானமான நிலைமை என்பதனை குறிப்பிடுகின்றோம். இதன் மூலம் எமது நாட்டின் ஏற்றுமதிகள் பாதிக்கப்பட்டு சிக்கல்கள் ஏற்படலாம். அத்துடன் பொருளாதாரத்தில் தாக்கம் ஏற்படலாம்.

இவற்றையெல்லாம் விட முக்கிய விடயமாக சுமார் ஒரு இலட்சம் பேர் தொழில் வாய்ப்பை இழக்கும் நிலைமை காணப்படுகின்றது. எனவே ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையை நாங்கள் இலகுவில் கருதிவிட முடியாது.

அந்தவகையில் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகைத்திட்டத்தை எமது நாடு இழக்கும் பட்சத்தில் குறித்த ஒரு இலட்சம் பேரின் தொழில்வாய்ப்புக்களை பாதுகாப்பதற்கு அரசாங்கத்திடம் மாற்றுத்திட்டம் ஒன்று கட்டாயம் இருக்கவேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.

அதனடிப்படையில் அரசாங்கத்திடம் காணப்படுகின்ற மாற்றுத்திட்டம் என்னவென்று பிரதான எதிர்க்கட்சி என்ற வகையில் நாங்கள் வினவுகின்றோம். ஒரு இலட்சம் பேரின் தொழில்வாய்ப்பை பாதுகாப்பதற்கான அரசின் திட்டம் என்பது தொடர்பில் தெரிந்து கொள்ள விரும்புகின்றோம்.வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படும் மாணவ விசாக்களின் தொகையை குறைக்க பிரிட்டன் முடிவு
வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் மாணவ விசாக்கள் பிரிட்டனில் துஷ்பிரயோகம் செய்யப்படுவதால் அத்தகைய விசாக்களின் எண்ணிக்கையை குறைப்பதென பிரிட்டன் முடிவு செய்துள்ளது என்று உள்துறை அமைச்சர் அலன் ஜோன்ஸன் தெரிவித்துள்ளார். இரண்டு வாரங்களுக்குள் இப்புதிய கட்டுப்பாடுகள் அமுலுக்கு வரவிருக்கின்றன.

மாணவ விசாக்களை வழங்குவதற்கான விதிகள் கடுமையாக்கப்பட்டு, விண்ணப்பதாரர்களுக்கு ஒரு குறிப்பிட்ட மட்டத்திற்கு ஆங்கிலம் பேசும் ஆற்றல் இருக்க வேண்டும் என்பதும் குறுகியகால பிரிட்டிஷ் கற்கை நெறிகளுக்கு வருவோர் அவர்களில் தங்கியிருப்போரையும் தம்முடன் அழைத்து வருவதை தடை செய்தல் போன்றவை உட்பட பல கட்டுப்பாடுகள் அமுல்செய்யப்பட இருக்கின்றன என்று அமைச்சர் ஜோன்ஸன் தெரிவித்தார்.

உண்மையாக கல்வி கற்க வருவோரை இலக்கு வைத்து இந்த கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படவில்லை என்று தெரிவித்த அமைச்சர், தொழில் செய்வதை முக்கிய நோக்கமாகக் கொண்டு பிரிட்டன் வருவோருக்காகவே இந்த நடவடிக்கை என்றும் கூறினார்.

தோல்வியில் முடிவடைந்த சிக்காகோ விமானக் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக பிரதம மந்திரி கோர்டன் பிரவுணின் உத்தரவின் பேரில் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று அமைச்சர் ஜோன்ஸன் மேலும் தெரிவித்தார்.

மேற்படி நத்தார் தின குண்டு வெடிப்பை நடத்தியதாக கூறப்படும் உமர் பாரூக் அப்துல் முதலாப் லண்டனில் கல்வி கற்றவர் என்றும் பிரிட்டனிலிருந்து சென்ற பின்னர் யெமெனில் அல்குவைதா இயக்கத்துடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டவர் என்றும் பிரதமர் கூறியதன் பின்னர் இந்த மதிப்பீட்டுக்கு உத்தரவிடப்பட்டது.

2008 / 2009 ஆண்டு காலத்தில் பிரிட்டன் சுமார் 2 இலட்சத்து 40 ஆயிரம் மாணவ விசாக்களை வழங்கியது. தற்போதைய நடவடிக்கையால் வெளிநாட்டு மாணவ விசாக்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு குறையலாம் என்று தெரிவித்த உள்துறை அலுவலக பேச்சாளர், எவ்வாறாயினும் பல்லாயிரக்கணக்கில் வீழ்ச்சி ஏற்படும் என்று வெளியான அறிக்கைகளை நிராகரித்தார்.

ஒரு சில வாரங்களுக்குள் அமுல் செய்யப்படவிருக்கும் இந்த நடவடிக்கை தொடர்பாக சட்டம் ஒன்று இயற்ற வேண்டிய தேவை இல்லை. நேபாளம், வட இந்தியா, பங்களாதேஷ் ஆகிய நாடுகளிலிருந்து பெறப்பட்ட மாணவ விசாக்கள் அதிக அளவில் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதால் அந்நாடுகளிலிருந்து சமர்ப்பிக்கப்படும் மாணவ விசாக்கள் இடைநிறுத்தப்பட்டு ஒரு வாரத்திற்குள் மேற்படி புதிய நடவடிக்கை அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உச்சவரம்பை உயர்த்துதல்

பிரிட்டனுக்கு வரவிரும்பும் மாணவர்களுக்கான தகைமையில் 40 புள்ளிகளை பெறவேண்டும் என்ற தேவையை கடந்த வருடம் பிரிட்டன் அறிமுகம் செய்தது. ஆனால் பயங்கரவாதிகளும் ஏனையோரும் இதன் மூலம் பிரிட்டனுக்குள் நுழைந்து விடுவார்களெனக் கூறி பல விமர்சனங்கள் எழுந்தன.

தற்போது கல்வி கற்கும் நோக்கத்தை தவிர்த்து முக்கியமாக வேலை செய்யும் முக்கிய நோக்கத்துடன் பிரிட்டன் வருவோரை தடுப்பதற்காக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஜோன்ஸன் தெரிவித்தார்.

தற்போதைய தீர்மானத்தின்படி எடுக்கப்படும் நடவடிக்கைகளாவன:

* ஐரோப்பிய ஒன்றிய நாடுகளைத் தவிர்ந்த ஏனைய நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் ஆங்கிலம் பேசுவதில் தற்போதுள்ள ஆரம்ப மட்ட அறிவிலும் பார்க்க ஜி சி எஸ் ( ) தரத்திற்கு சிறிது குறைந்த மட்ட அறிவையேனும் பெற்றிருக்க வேண்டும்.

* பட்டப்படிப்பு மட்டத்திற்கு குறைந்த கற்கைநெறிகளை பின்பற்றுவோர் தற்போதுள்ள 20 மணிநேர வேலைக்கு பதிலாக இனிமேல் 10 மணி நேர வேலை செய்வதற்கே அனுமதிக்கப்படுவார்கள்.

* 6 மாதங்களுக்கு குறைந்த கற்கைநெறிகளுக்காக வருவோர் அவர்களில் தங்கியிருப்போரை அழைத்து வர அனுமதிக்கப்பட மாட்டார்கள். மேலும் பட்டப்படிப்பு நெறிகளுக்கு குறைந்த நெறிகளை பின்பற்றுவோருடன் வரும் அவர்களில் தங்கியிருப்போர் பிரிட்டனில் வேலை செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

* இவற்றுக்கு மேலாக, மாணவர்களை அனுமதிக்கும் கல்வி நிறுவனங்கள் அதி உயர் நம்பக தன்மையைக் கொண்ட அனுசரணையாளர்கள் பட்டியலில் இடம்பெற்றிருந்தால் மட்டுமே அங்கு பட்டப்படிப்பு மட்டத்திற்கு குறைந்த நெறிகளை பின்பற்றுவதற்கான விசாக்கள் வழங்கப்படும்.பாராளுமன்றம் கலைக்கப்படுவதற்கு முன்னரே கட்சிகளுக்கிடையிலான தேர்தல் பணிகள் சூடுபிடிப்புகலைக்கப்படாதிருக்கின்ற நிலையில் அடுத்து நடைபெறவிருக்கின்ற பொதுத் தேர்தலுக்கான அரசியல் நடவடிக்கைகள் பிரதான கட்சிகளிடையே சூடு பிடித்துள்ளன.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பிரதானமாக கொண்டுள்ள ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சியை பிரதானமாக கொண்டுள்ள ஐக்கிய தேசிய முன்னணி மற்றும் ஜே.வி.பி. ஆகிய முன்னணிக் கட்சிகள் பொதுத் தேர்தலில் எவ்வாறு களமிறங்குவது என்று வியூகம் அமைத்து வருகின்ற அதேவேளை வேட்பாளர்களை தெரிவு செய்வதிலும் முனைப்பான நடவடிக்கைகளைக் கொண்டுள்ளன.

இதேவேளை கடந்த 26ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் முடிவுகளுக்கு ஆட்சேபனை தெரிவித்து எதிர்க்கட்சிகளின் கூட்டணியால் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் சத்தியாக்கிரக எதிர்ப்புக் கூட்டங்கள் நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் தான் பொதுத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை அரசியல் கட்சிகள் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றன.

ஆளும் கட்சி

அந்த வகையில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கின்ற அரசியல் கட்சிகள் மற்றும் மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் ஆகியோரைக் கருத்திற் கொண்டு தமது முன்னணியூடாக களமிறங்கும் வேட்பாளர்களைத் தெரிவதற்கென ஒரு குழுவும் அதே நேரம் வேட்பாளர் தெரிவில் சிக்கல் நிலை தோன்றும் பட்சத்தில் அதனைத் தீர்த்து வைப்பதற்கு மற்றுமொரு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

அமைச்சர்களான ஜோன் செனவிரட்ண, அனுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் நிமல் சிறிபால டி சில்வா ஆகியோரைக் கொண்ட வேட்பாளர் தெரிவு அதிகாரிகள் நாட்டின் அனைத்து தேர்தல் தொகுதிகளையும் மூன்றாக பிரித்து அதனடிப்படையில் வேட்பாளர்களை தெரிவு செய்வதற்கு அக்கட்சி தீர்மானித்துள்ளது.

இன்று கூடுகிறது

இதன்படி கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் இன்றும் நாளையும் கூடுகின்ற மேற்படி தெரிவுக் குழுவினூடாக ஆளும் கட்சி சார்பிலான வேட்பாளர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

பிரதமர் தலைமையில்

இதேவேளை பிரதமர் ரட்ணசிறி விக்கிரம நாயக்க தலைமையில் பஷில் ராஜபக்ஷ எம்.பி. அமைச்சர்களான மைத்திரிபால சிறிசேன மற்றும் டளஸ் அழகப் பெரும ஆகியோரைக் கொண்ட விசாரணைக் குழுவிடம் வேட்பாளர் தெரிவு தொடர்பில் குளறுபடிகள் அல்லது பக்கச்சார்பு இடம்பெற்றிருப்பின் முறையிட்டு அக்குழுவினூடாக பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

ஐ.தே.க.

பிரதான எதிர்க்கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியும் தமது வேட்பாளர் தெரிவு நடவடிக்கைகளை நாளை மறுதினம் புதன்கிழமை ஆரம்பிக்கின்றது.

கட்சியின் நாடு முழுவதிலுமுள்ள தேர்தல் தொகுதிகளின் அமைப்பாளர்களையும் அதன் தலைமையகமான ஸ்ரீ கொத்தாவுக்கு அழைத்திருக்கின்ற கட்சியின் உயர் மட்டம் அவர்களுடன் கலந்துரையாடலிலும் ஈடுபடவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் செய்திகள் தெரிவிக்கின்றன.

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெறவுள்ள இந்த முக்கிய கலந்துரையாடலுக்கு அனைத்து அமைப்பாளர்களும் இதில் கட்டாயமாக கலந்து கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சியைப் பிரதானமாகக் கொண்டுள்ள ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கின்ற அரசியல் கட்சிகளுக்கும் வேட்பாளர்கள் ஒதுக்கப்பட வேண்டியிருப்பதால் அது தொடர்பிலும் பேச்சுக்கள் இடம்பெற்று வருவதாகவும் எதிர்க் கட்சிகள் குறிப்பிட்டுள்ளன.

ஐக்கிய தேசிய முன்னணியில் தற்போது 16 அரசியல் கட்சிகள் அங்கம் வகித்து வருகின்ற அதே வேளை ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக களமிறக்கப்பட்ட ஜெனரல் சரத் பொன்சேகாவை யானைச் சின்னத்தின் கீழ் போட்டியிட வைப்பதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதிலும் சில சிக்கல்கள் தோன்றியிருப்பதாகவும் அரசியல் வட்டாரங்களில் இருந்து தெரிய வருகின்றது.

ஜே.வி.பி. மந்திராலோசனை

இது இவ்வாறிருக்க எதிர்வரும் பொதுத் தேர்தலில் எவ்வாறு களமிறங்குவது என்பது தொடர்பில் மந்திராலோசனைகள் இடம்பெற்று வருவதாக ஜே.வி.பி. தெரிவித்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தலின் போது இணைந்திருந்த எதிர்க் கட்சிகளின் கூட்டணியுடன் இணைந்து போட்டியிடுவதா என்பது தொடர்பிலும் அதே நேரம் எந்த சின்னத்தின் கீழ் போட்டியிடுவது என்பது தொடர்பிலும் இங்கு கட்சிகளிடையே சிறிதளவான முரண்பாடுகள் ஏற்பட்டிருப்பதாகவும் எனினும் இந்த முரண்பாடுகளுக்கு இலகுவான தீர்வு எட்டப்படும் என்றும் அக்கட்சி வட்டாரத்தில் இருந்து தெரிய வருகின்றது.

தே.சு.மு. 19;ஹெல உறுமய 5

அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளான தேசிய சுதந்திர முன்னணி மற்றும் ஜாதிக ஹெல உறுமய ஆகிய கட்சிகளும் தமது வேட்பாளர்களை களமிறக்குவது தொடர்பில் தீர்மானித்துள்ளன.

இதன்படி தேசிய சுதந்திர முன்னணி வடக்கைத் தவிர்ந்த ஏனைய அனைத்துப் பிரதேசங்களிலும் போட்டியிட தீர்மானித்துள்ள அதேவேளை தமது கட்சியின் சார்பில் 19 பேரை வெற்றிலைச் சின்னத்தில் களமிறக்குவதாகவும் அது தொடர்பிலான பெயர்ப் பட்டியலை ஆளும் கட்சியின் தெரிவுக் குழுவிடம் சமர்ப்பித்திருப்பதாகவும் அந்த முன்னணி தெரிவித்துள்ளது.

அதே போல் ஜாதிக ஹெல உறுமயவைப் பொறுத்தவரையில் தமது கட்சி கொழும்பு உட்பட 5 மாவட்டங்களில் மாத்திரமே 5 வேட்பாளர்களை களமிறக்குவதாகவும் ஏனைய பகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்துவதற்கான நிதி வசதிகள் இல்லையென்றும் அக்கட்சியின் சட்ட ஆலோசகரும் மேல் மாகாண சபை உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

முடிவெடுக்கவில்லை

இதேவேளை எதிர்வரும் பொதுத் தேர்தலில் எவ்வாறு போட்டியிடுவது என்பது குறித்து மலையக மக்கள் முன்னணியும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் இதுவரையில் தீர்மானங்கள் எதுவும் எடுக்கவில்லையென தெரிவித்துள்ளன.

பாராளுமன்றம் கலைக்கப்பட்டதன் பின்னரே அது குறித்து சிந்திக்க வேண்டியிருப்பதாகவும் மலையக மக்கள் முன்னணியின் தலைவி திருமதி சந்திரசேகரனை தேர்தலில் போட்டியிட வைப்பதா என்பது தொடர்பிலும் பின்னரே முடிவெடுக்கப்படும் என்றும் பிரதியமைச்சர் இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இ.தொ.கா. வெற்றிலையில்

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் நாடு முழுவதிலும் வெற்றிலைச் சின்னத்திலேயே போட்டியிடவிருப்பதாக அறிவித்துள்ளது.

ஐ.ம.மு.

இதேவேளை, ஜனநாயக மக்கள் முன்னணி ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிப்பதால் அது யானைச் சின்னத்திலேயே போட்டியிடவுள்ளது. வடக்கு, கிழக்கு தவிர்ந்த தமிழ் மக்கள் செறிந்து வாழும் சகல பிரதேசங்களிலும் ஜனநாயக மக்கள் முன்னணி வேட்பாளர்கள் களமிறங்குவர்.


நாளை நள்ளிரவு பாராளுமன்றம் கலைக்கப்பட்டு ஏபரல் 8 இல் தேர்தல்:அமைச்சர் ராஜித சேனாரட்ண தகவல்
நாளை 9 ஆம் திகதி கலைக்கப்படும். பெரும்பாலும் ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறும் சாத்தியமுள்ளது என்று பொறியியல் மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் ராஜித சேனாரட்ண தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இம்முறை தேர்தலில் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் கூட்டணி அமைத்துப் போட்டியிடும். ஜனாதிபதி தேர்தலில் போன்றே பொதுத் தேர்தலிலும் நாங்கள் வெற்றியடைவோம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் குறித்து கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் இந்த விடயங்களை குறிப்பிட்டார். அமைச்சர் ராஜித சேனாரட்ண இவ்விடயம் குறித்து மேலும் கூறியதாவது நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மகத்தான வெற்றியை பெற்றது. மக்கள் எமது வேலைத்திட்டங்களை அங்கீகரித்துள்ளனர்.

இந்நிலையில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் நாட்டின் பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. அதிலும் மக்கள் எங்களை அமோக வெற்றியடையச் செய்வார்கள் என்று நம்புகின்றோம்.

அந்தவகையில் பாராளுமன்றம் நாளை மறுதினம் 9 ஆம் திகதி கலைக்கப்படும். இது நம்பகரமான தகவலாக உள்ளது. அதேபோன்று எதிர்வரும் ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறும் சாத்தியம் அதிகமுள்ளது.

இம்முறை பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வடக்கு கிழக்கு உள்ளிட்ட நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் போட்டியிடும். மேலும் கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட எதிர்பார்க்கின்றோம்.

இதேவேளை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எதிர்கால திட்டங்கள் தொடர்பில் அரசாங்கத்துடன் பேச்சு நடத்த தயார் நிலையில் இருப்பதாக தெரிகின்றது. எனவே இந்த தேர்தலில் கூட்டமைப்பு சிந்தித்து செயற்படும் என்று நம்புகின்றோம்.

வடக்கு கிழக்கு மக்கள் நாட்டின் தேசிய அரசியல் செயற்பாட்டில் இணைந்துகொள்ளவேண்டும். தொடர்ந்து எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு பேசிக்கொண்டிருப்பதில் அர்த்தம் இல்லை. எனவே வடக்கு கிழக்கு மக்கள் தெளிவான முடிவை எடுக்கவேண்டும்.

முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மகத்தான வெற்றியை பெற்றது. மக்கள் எமது வேலைத்திட்டங்களை அங்கீகரித்துள்ளனர். இந்நிலையில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் நாட்டின் பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.

அதிலும் மக்கள் எங்களை அமோக வெற்றியடையச் செய்வார்கள் என்று நம்புகின்றோம். அந்தவகையில் பாராளுமன்றம் நாளை மறுதினம் 9 ஆம் திகதி கலைக்கப்படும். இது நம்பகரமான தகவலாக உள்ளது. அதேபோன்று எதிர்வரும் ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறும் சாத்தியம் அதிகமுள்ளது.

இம்முறை பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வடக்கு கிழக்கு உள்ளிட்ட நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் போட்டியிடும். மேலும் கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட எதிர்பார்க்கின்றோம்.

இதேவேளை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எதிர்கால திட்டங்கள் தொடர்பில் அரசாங்கத்துடன் பேச்சு நடத்த தயார் நிலையில் இருப்பதாக தெரிகின்றது. எனவே இந்த தேர்தலில் கூட்டமைப்பு சிந்தித்து செயற்படும் என்று நம்புகின்றோம்.

வடக்கு கிழக்கு மக்கள் நாட்டின் தேசிய அரசியல் செயற்பாட்டில் இணைந்துகொள்ளவேண்டும். தொடர்ந்து எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு பேசிக்கொண்டிருப்பதில் அர்த்தம் இல்லை. எனவே வடக்கு கிழக்கு மக்கள் தெளிவான முடிவை எடுக்கவேண்டும்.
மேலும் இங்கே தொடர்க...

சுதந்திரக் கட்சி வேட்பாளர் தெரிவு நேர்முகப்பரீட்சை இன்றும் நாளையும்

ஐ.ம.சு.மு. கூட்டுக் கட்சிகள் வெற்றிலை சின்னத்தில் களமிறங்க முடிவுபாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை தெரிவு செய்யும் பணிகள் எதிர்வரும் 15 ஆம் திகதியளவில் பூர்த்தி செய்யப்பட உள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பொதுச் செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

இம்முறை தேர்தலில் ஐ. ம. சு. முன்னணியில் உள்ள சகல கட்சிகளும் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடவுள்ள தாகவும் கூட்டுக்கட்சிகள் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் கள் கிடைத்து வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

தேர்தலில் போட்டியிடுவது குறித்து சகல கூட்டுக் கட்சிகளுடனும் பேசி வருவதாகவும் அவர் தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை தெரிவு செய்வதற்காக மூன்று வேட்பு மனுக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வேட்பாளர்களை தெரிவு செய்வதற்கான நேர்முகப் பரீட்சைகள் இன்றும் (8) நாளையும் (9) கொழும்பு மகாவலி நிலையத்தில் இடம்பெற உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர் பட்டியல் இந்த வாரத்தில் பூர்த்தி செய்யப்படும் எனவும் வேட்பாளர் தெரிவில் ஏதும் அநீதி இடம்பெற்றிருந்தால் பிரதமர் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள வேட்பு மனு மேன்முறையீட்டு குழுவிற்கு மேன்முறையீடு செய்யலாம் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

வடமேல், வட மத்திய மற்றும் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கான வேட்பாளர் குழு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு முன்னிலையில் வேட்பாளர்களுக்கான நேர்முகப் பரீட்சைகள் இன்று நடைபெறும் என மேற்படி வேட்பு மனுக் குழு உறுப்பினர் மேல் மாகாண சபை ஆளுநர் அலவி மெளலானா தெரிவித்தார்.

மேல், மத்திய மற்றும் ஊவா மாகாணத்தில் இருந்து வேட்பாளர்களை தெரிவு செய்வதற்காக அமைச்சர் டபிள்யூ. டி. ஜே. செனவிரத்னவின் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள குழுவும் இன்று கூடி வேட்பாளர்களை தெரிவு செய்ய உள்ளது.

தென், சப்ரகமுவ மாகாணத்தில் இருந்து வேட்பாளர்களை தெரிவு செய்வதற்கான நேர்முகப் பரீட்சைகள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தலைமையிலான வேட்பு மனுக்குழு முன்னிலையில் நாளை (9) இடம் பெறவுள்ளது. பிரதமர் தலைமையிலான வேட்புமனு மேன்முறையீட்டு குழுவில் அமைச்சர்களான தி. மு. ஜயரத்ன, மைத்திரிபால சிரிசேன, டளஸ் அழகப்பெரும, பசில் ராஜபக்ஷ எம்.பி., சட்டத்தரணி டபிள்யூ. கருணாஜீவ ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து போட்டியிடும் கூட்டுக்கட்சி வேட்பாளர்களின் பட்டியல்கள் இந்த வாரம் கிடைக்கும் எனவும் அதன்படி 15 ஆம் திகதியளவில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினர் வேட்பாளர் பட்டியல் பூர்த்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

பாராளுமன்றம் இந்த வாரத்தில் கலைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை கட்சி முன்னெடுத்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். தேர்தலில் பல புதுமுகங்கள் போட்டியிட உள்ளதாகவும் சட்டத்தரணிகள், கலைஞர்கள் ஊடகவியலாளர்கள், சமூக சேவகர்கள் போன்றோர் இதில் அடங்குவர் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

இதேவேளை கூட்டுக் கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் வேட்பாளர்களின் தொகை குறித்து பேச்சு நடத்தப்பட்டு வருவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி செயலாளர் அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த் தெரிவித்தார். இம்முறை தேர்தலில் பலம்வாய்ந்த வேட்பாளர் குழுவொன்றை நிறுத்த உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இதேவேளை எதிர்க்கட்சிகள் கூட்டாக இணைந்து போட்டியிடுவது தொடர்பில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி வட்டாரங்கள் கூறின.

ஐ. தே. முன்னணி யானை சின்னத்தில் போட்டியிட முடிவு செய்துள்ள அதேவேளை ஜே. வி. பி. அடங்கலான சில கட்சிகள் அன்னச் சின்னத்தில் போட்டியிடுவதில் உறுதியாக உள்ளதாக கட்சி வட்டாரங்கள் கூறின.

சரத் பொன்சேகாவுக்கு கட்சி பிரதித் தலைவர் பதவி வழங்கி அவரை ஐ. தே. மு. பட்டியலில் போட்டியிட வைக்க ஐ. தே.க. முயன்று வருகிற போதும் மேற்படி பதவியை ஏற்க சரத் பொன்சேகா மறுத்துள்ளதாக அறிய வருகிறது. இதேவேளை தமிழ் தேசிய கூட்டமைப்பு தனித்துப் போட்டியிட உள்ளதாகவும் மு. கா. தனித்தா இணைந்தா போட்டியிடும் என்பது குறித்து ஆராய்ந்து வருவதாகவும் அறிய வருகிறது.


வடக்கு அரச நிறுவனங்களில் மும்மொழி பெயர்ப் பலகை

ரூ. 75 இலட்சம் அமைச்சு ஒதுக்கீடு


வடக்கிலுள்ள சகல அரசாங்க நிறுவனங்களிலும் மும்மொழிகளிலும் பெயர்ப் பலகைகளை தொங்க விடுவதற்காக நிதி ஒதுக்கியுள்ளதாக அரசியல் விவகார தேசிய நல்லிணக்க அமைச்சர் நேற்று தெரிவித்தது.

இதன்படி வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் புதிதாக அமைக்கப்பட்டுவரும் மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலகங்கள் மற்றும் அரச நிறுவனங்களில் மும்மொழிகளிலும் பெயர்ப்பலகைகள் பொருத்தப்பட்டு வருவதாக அமைச்சு செயலாளர் திருமதி எம். எஸ். விக்ரமசிங்க தெரிவித்தார்.

மும்மொழிகளிலும் பெயர்ப்பலகைகளை பொருத்த 75 இலட்சம் ரூபா வழங்கப்பட்டு ள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

சகல அரச நிறுவனங்களிலும் மும் மொழிகளிலும் பெயர்ப் பலகைகளை பொருத்துவதில் வட மாகாணத்திலுள்ள மாவட்ட செயலாளர்கள் மிகவும் கரிசனை யாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை வட மாகாணத்தில் உள்ள அரச ஊழியர்களுக்கு இரண்டாம் மொழியான சிங்களம் மொழியை கற்பிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு ள்ளதாக செயலாளர் தெரிவித்தார். நாட்டின் ஏனைய பகுதிகளில் உள்ள அரச நிறுவனங்களிலும் மும்மொழிகளிலும் பெயர்ப் பலகைகளை தொங்கவிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அறிவிக்கப்படுகிறது.

வவுனியா வடக்கு மீள்குடியேற்றம்

15 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பம்

மீள்குடியேறுவோருக்கு 8900 வீடுகள் நிர்மாணம்
வவுனியா வடக்கில் மீள்குடியேற்றப் படுவோர்க்கென 8 ஆயிரத்து 900 வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படவிருப்பதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி சார்ள்ஸ் தெரிவித்தார்.

அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கமைய ஐரோப்பிய ஆணைக்குழு 3 ஆயிரத்து 900 வீடுகளையும் உலக வங்கி 5 ஆயிரம் வீடுகளையும் கட்டிக் கொடுக்க முன்வந்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். மீள்குடியேற்றப் பணிகள் துரிதப்படுத்தப் பட்டுள்ள அதேவேளை எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் வவுனியா வடக்கில் மீள்குடியேற்றப் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவிருப்ப தாகவும் அவர் தெரிவித்தார்.

வவுனியா நிவாரணக் கிராமங்களில் தற்போது சுமார் 75 ஆயிரம் பேரும் நண்ப ர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் சுமார் 20 ஆயிரம் பேர் வரையிலுமே மீளக் குடியமர்த்தப்படவிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். நிலக்கண்ணிவெடி அகற்றலில் ஏற்பட்ட தாமதத்தினால் சிறிய இடைவெளிக்குப் பின்னர் மீள்குடியேற்றப் பணிகள் கடந்த 02 ஆம் திகதி முதல் மீள ஆரம்பிக்கப்பட்டு ள்ளன.

கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்ட பகுதிகளில் கட்டம் கட்டமாக மீள்குடியேற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. கடந்த 02 ஆம் திகதி பூநகரிக்கு ஆயிரம் பேர் அனுப்பி வைக்கப்பட்டனர். அதேவேளை இன்று (08) கிளிநொச்சி மாவட்டம் கரச்சி பிரதேசத்தில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீட்டில் தங்கியிருக்கும் 300 குடும்பங்கள் மீளக்குடியமர்த்தப் படவிருப்பதாகவும் அரச அதிபர் தெரிவித்தார்.

இலங்கைரஷ்யாவில் கெளரவ டொக்டர் பட்டம் வழங்கி கெளரவிக்கப்பட்ட விழாவில் ஜனாதிபதிஜனாதிபதி மஹிந்தவுக்கு டொக்டர் பட்டம்; ரஷ்ய பல்கலைக்கழகம் கெளரவம்
உலக சமாதானத்துக்கு ஆற்றிய சீரிய பங்களிப்பு, பயங்கரவாதத்தை முறியடித்தமை மற்றும் இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் கல்வி, கலாசாரம் உட்பட பல்வேறு துறைகளில் பங்களிப்பு செய்தமைக்காகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ரஷ்யாவின் மொஸ்கோ நட்புறவு (பட்ரிக் லுமும்பா) பல்கலைக்கழகம் விசேட கெளரவ டொக்டர் பட்டமொன்றை வழங்கி கெளரவித்துள்ளது.

ரஷ்யாவின் தலைநகரான மொஸ்கோவில் கிரெம்ளின் மண்டபத்தில் வைத்து நட்புறவு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பிலிபோவ் இந்த கெளரவ டொக்டர் பட்டத்தை நேற்று முன்தினம் ஜனாதிபதிக்கு வழங் கினார். மொஸ்கோவின் பிபட்ரிக் லுமும்பாபீ பல்கலைக்கழகம் பின்னர் நட்புறவு பல்கலைக்கழகம் என அழைக்கப்பட்டது.

1995 முதல் உலகில் பல்வேறு துறைகளில் மேற்கொள்ளும் சேவைகள் தொடர்பில் அரச தலைவர்களுக்கு இந்த டொக்டர் பட்டம் வழங்கப்படுகிறது.

இந்த வகையில் மேற்படி டொக்டர் பட்டத்தை பெறும் 6 ஆவது அரச தலைவர் இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆவார்.

இதன் பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று (07) ரஷ்ய தலைநகரில் ரஷ்ய புரட்சிக்கு முன்னரும் பின்னரும் அரச நிகழ்வுகள் இடம்பெற்ற கிரெம்ளின் மண்டபத்தை பார்வையிட்டார்.

அத்துடன் ரஷ்ய புரட்சியின் பின்னர் தொழிலாளர்களின் வெற்றியின் ஞாபகார்த்தமாக விளங்கும் செஞ் சதுக்கத்தையும் ஜனாதிபதி பார்வையிட் டார்.

கிரெம்ளின் நூதனசாலைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சார் மன்னர்கள் காலத்தில் உபயோகித்த உடைகள் மற்றும் ஆபரணங்கள் ஆகியவற்றை பார்த்தார்.

அதன்பின் 17ஆம் நூற்றாண்டில் நிர்மாணிக்கப்பட்ட தேவாலயமொன்றுக்கும் ஜனாதிபதி விஜயம் செய்தார்.
உலக நாடுகளின் முதலீடுகளை கவரும் பிரபல கேந்திர சந்தையாக


வியாபார உலகில் நாம் இப்போது கட்டியெழுப்பியுள்ள நம்பிக்கையானது உயர்ந்த மட்டத்தில் உள்ளது. சக்தி, மனித வளம், வங்கி நடவடிக்கைகள் ஆகியவை தொடர்பான எதிர்கால திட்டங்கள் ஏற்கனவே பூரணப்படுத்தப்பட்டு ள்ளன. இந் நிலையில் வறுமை பிரச்சினையும் குறைந்து வருகிறது.

அது மட்டுமன்றி சர்வதேச ரீதியில் நாம் வளர்ந்து வரும் நடுத்தர வருமானத்தை பெறும் சந்தையை கொண்டுள்ளதாக கணிக்கப்படுகிறது. இந்த காரணங்களால் உலக நாடுகளின் பல்வேறு முதலீடுகளில் இலங்கை பிரபல சந்தை கேந்திரமாக மாறி வருகிறது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ரஷ்யாவில் நட்புறவு பல்கலைக்கழகம் ஜனாதிபதிக்கு கெளரவ டொக்டர் பட்டம் வழங்கி கெளரவித்ததையடுத்து உரையாற்றியபோது தெரிவித்தார்.

தொடர்ந்து அங்கு உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது:-

ரஷ்யாவின் நட்புறவு பல்கலைக்கழகம் எனக்கு வழங்கிய டொக்டர் பட்டம் எனக்கு கிடைத்த தனிப்பட்ட வெற்றி அல்ல. அது இலங்கை மக்கள் அனைவ ருக்கும் கிடைத்த பொதுவான வெற்றியாகும்.

இந்தப் பட்டம் வழங்கப்படுவதற்கு உலக சமாதானத்துக்கு நாம் ஆற்றிய பங்களிப்பே காரணம் என்று பட்டம் வழங்கல் தொடர்பான குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

முழு உலகிலும் கொடூரமான புலிகள் பயங்கரவாத சவால் மக்களின் அமைதி, செளபாக்கியம் மட்டுமன்றி உயிர்களுக்கும் அச்சுறுத்தலாக இருந்தது.

பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினையை தீர்க்க நாம் மேற்கொண்ட முயற்சிகள் பயங்கர வாதிகளால் நிராகரிக்கப்பட்டதையடுத்தே நாம் யுத்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போது பணயக் கைதிகளாக பயங்கரவாதிகள் பிடித்திருந்த பொது மக்களை பாதுகாக்க நாம் மனிதாபிமான நடவடிக்கையில் இறங்கினோம்.

இதனையடுத்து நான் உங்கள் முன் மக்கள் ஆணையை மீண்டும் கேட்டேன். நியாயமான அமைதியான தேர்தல் மூலம் சில தினங்களுக்கு முன் உங்களால் தெரிவாகிய நான் இன்று இலங்கையின் 6 ஆவது ஜனாதிபதியாக உங்கள் முன் தோன்றுகிறேன்.

அந்த தேர்தலில் எதிர்க்கட்சியினால் மேற்கொண்ட வன்முறைகளுக்கு மத்தியில் சமாதானம், ஜனநாயகம் மற்றும் முன்னேற்றம் கருதி மக்கள் 58 சதவீத அதிக வாக்குகளால் என்னை மீண்டும் தெரிவு செய்துள்ளனர்.

கடந்த நான்கு வருடங்களில் அபிவிருத்தி என்ற ரீதியில் இது வரை இருந்ததற்கு மேலான இடத்துக்கு எனது நாட்டை கொண்டு செல்ல எனக்கு முடிந்திருக் கிறது.

உலகளாவிய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் எமது பொருளாதார நிலை கடந்த நான்கு வருடங்களில் மேலும் வலுவடைந்துள்ளது.

அத்துடன் மக்களின் சமூக கலாசாரம் மற்றும் அனைத்து துறைகளிலும் எமது நிலையில் முன்னேற்றத்தை காண முடிகிறது.

இலங்கை மக்கள் என் மீது வைத்துள்ள விசுவாசத்தையிட்டு நான் என்ன பிரதியுபகாரம் செய்யப் போகிறேன் என்ற எண்ணம் எனது 40 வருட கால அரசியல் வாழ்க்கை முழுவதும் இருந்து வந்துள்ளது.

நாட்டை ஐக்கியப்படுத்தியதையடுத்து நாட்டு மக்களின் மன வேதனையை தீர்ப்பதற்கு எனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பது எனது பூரண நம்பிக்கை.

எமது நாட்டு மக்களின் எதிர்பார்ப்பும் அதுவாகும். நட்புறவு பல்கலைக்கழ கமானது பல்வேறு இன, வர்க்க, மற்றும் மதங்களை சேர்ந்தவர்களிடையே ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்காக அர்ப்பணிப்புடன் செயல்படும் ஒரு நிறுவனமாகும்.

இந்த பல்கலைக்கழகத்தின் ஆரம்ப கர்த்தாவான பட்ரிக் லுமும்பாவின் உன்னத நோக்கம் ஒருவரின் அரசியல் நிலைப்பாடு எதுவாக இருப்பினும் அவருடன் நட்புறவை பேணுவதாகும். எதிர்காலத்தில் முகம் கொடுக்க நேரும் பாரிய சவாலின் போதும் நான் இந்த கொள்கையையே பின்பற்றப் போகிறேன்.

அபிவிருத்தியடைந்து வரும் நாடு களில் உள்ள ஆயிரக்கணக்கானோ ருக்கு உயர்ந்த மட்ட பல்கலைக்கழக கல்வியை மனித குலத்துக்கு வழங் கும் உன்னத சேவை பங்களிப்பினை மேற்கொள்ளும் நிறுவனமான நட் புறபு பல்கலைக்கழத்தின் 50 ஆண்டு நிறைவினைக் கொண்டாடும் சந்தர்ப் பத்தில் உரையாற்றுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி தருவதாக உள்ளது.

அத்துடன் எனது இளைய சகோதரர் இந்த சிரேஷ்ட பல்கலைக்கழகத்தின் பட்டதாரி என்று கூறிக் கொள்வதிலும் மகிழ்ச்சியடைகிறேன்.

அத்துடன் 70 ஆம் ஆண்டுகளில் இந்த உன்னத பல்கலைக்கழகத்துக்கு வருகை தரும் பாக்கியம் எனக்கு கிடைத்திருந்ததையும் இங்கு நான் குறிப்பிட்டாக வேண்டும் என்று ஜனாதிபதி அங்கு கூறினார்.

மேலும் இங்கே தொடர்க...