23 ஏப்ரல், 2010

சம்பந்தனின் கருத்தினை வரவேற்கிறோம் : அரசாங்கம் தெரிவிப்பு ஒரே இலங்கைக்குள் தீர்வுத்திட்டம்

சம்பந்தனின் கருத்தினை வரவேற்கிறோம் : அரசாங்கம் தெரிவிப்பு
ஒரே இலங்கைக்குள் தீர்வுத்திட்டம் தொடர்பாக கலந்துரையாட தயராக இருப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளதை வரவேற்பதாக அரசாங்கம் தெரிவிக்கின்றது.

கொழும்பில் அமைந்துள்ள மகாவலி கேந்திர நிலையத்தில் இன்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளரும் அமைச்சருமான டளஸ் அழஹப்பெரும இக்கருத்தினை வெளியிட்டார்.

தமிழ் தரப்பிலிருந்து கடந்த 30இ 40 வருடங்களில் கிடைக்கபெற்ற சிறந்த சமிக்ஞை இதுவென தெரிவித்துள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளர் டலஸ் அழஹப்பெரும அவர்களுடன் கலந்துரையாடுவதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்துமாறு கட்சியின் சிரேஷ்;ட உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளதாக குறிப்பிட்டார்.

சார்க் சம்மேளனம் நிறைவடைந்த பின்னர் இந்த கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்படும் எனவும் யுத்தம் கொழுந்துவிட்டு எரிந்த நாட்டில் மீண்டும் யுத்தம் நடைபெறாத பின்னணியை ஏற்படுத்த வேண்டியது எமது அனைவரினதும் பொறுப்பு என அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

புதிய அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம்
புதிய அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்யும் வைபவம் ஜனாதிபதி செயலகத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்றது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் புதிய அமைச்சர்களும், பிரதி அமைச்சர்களும் பதவிப்பிரமாணம் செய்தனர்.

அமைச்சர்கள் விபரம்

1. பிரதமர் தி. மு. ஜெயரட்ன : பௌத்த, மத விவகாரங்களுக்கான அமைச்சர்
2. சுசில் பிரேமஜயந்த : எரிபொருள், கனியவள அமைச்சர்
3. ரட்ணசிறி விக்ரமநாயக்க : அரச உள் நாட்டலுவல்கள் அமைச்சர்
4. ஜீ.எல்.பீரிஸ் : வெளிநாட்டலுவல்கள் அமைச்சர்
5. நிமல் சிறிபால டி சில்வா : நீர்வழங்கல், நீர்முகாமைத்துவ, நீர்வள அமைச்சர்
6. திஸ்ஸ கரலியத்த : சிறுவர், மகளிர் விவகார அமைச்சர்
7. ராஜித சேனாரத்ன : கடற்றொழில் அமைச்சர்
8. மைத்திரிபால சிறிசேன : சுகாதர அமைச்சர்
9. தினேஷ் குணவர்த்தன : நீர்ப்பாசன, நீர் முகாமைத்துவ அமைச்சர்
10. டக்ளஸ் தேவானந்தா : பாரம்பரிய, சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர்
11. டபிள்யூ. டி. ஜே. செனவிரத்ன : பொது நிர்வாக அமைச்சர்
12. ரிஷாட் பதியுதீன் : கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சு
13. பசில் ராஜபக்ஷ : பொருளாதார அபிவிருத்தி அமைச்சர்
14. ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ : கூட்டுறவு, நுகர்வோர் விவகார அமைச்சர்
15. மில்ரோய் பெர்னாண்டோ : மீள் குடியேற்ற அமைச்சர்
16. குமார வெல்கம : போக்குவரத்து அமைச்சர்
17. ஜனக பண்டார : காணி விவகார, காணி அபிவிருத்தி அமைச்சர்
18. டியூ. குணசேகர சிறைச்சாலை, புனர்வாழ்வு அமைச்சர்
19. பந்துல குணவர்த்தன : கல்வி அமைச்சர்
20. சம்பிக்க ரணவக்க : மின்சக்தி எரிபொருள் அமைச்சர்
21. விமல் வீரவன்ச : வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சர்
22. மஹிந்த யாப்பா அபயவர்த்தன : விவசாய அமைச்சர்
23. டளஸ் அழகபெரும இளைஞர், வேலை வாய்ப்பு அமைச்சர்

24. சி.பி.ரத்நாயக்க : விளையாட்டு அமைச்சர்
25. சுமேதா டி ஜெயசேன : நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர்
26. அநுர பிரியதர்சன யாப்பா : சுற்றாடல்துறை, பாதுகாப்பு அமைச்சர்

27.அத்தாவுத செனவிரத்ன : நீதி அமைச்சர்
28.மஹிந்த சமரசிங்க : பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர்
29.ஜீவன் குமரதுங்க : தபால்துறை அமைச்சர்
30.பவித்ரா வன்னியாராச்சி : தேசிய மரபுரிமைகள், கலாசார அமைச்சர்
31.காமினி லொக்குகே : தொழில் உறவு உற்பத்தி மேம்பாட்டு அமைச்சர்
32.பியசேன கமகே : சுதேச வைத்தியத்துறை அமைச்சர்
33. எஸ்.பி.நாவின்ன : தேசிய மொழி, சமூக நல்லிணக்க அமைச்சர்
34.பீலிக்ஸ் பெரேரா : சமூக சேவைகள் அமைச்சர்
35..எச்.எம்.பௌசி : இடர் முகாமைத்துவ அமைச்சர்
36. .எல்.எம். அதாவுல்லாஹ் : பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர்
37. பி. ஜெயரட்ன :

பிரதி அமைச்சர்கள் விபரம்

ஜயரட்ண ஹேரத் - கைத்தொழில் மற்றும் வர்த்தகம்
தயாசித திசேரா - துறைமுக பொது விமானத்துறை
ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய - பொருளாதார அபிவிருத்தித் துறை
லசந்த அழகியவண்ண - வீடமைப்பு நிர்மாணத்துறை
ரோஹன திசாநாயக்க - போக்குவரத்து
நிர்மல கொத்தலாவல - நெடுஞ்சாலைத் துறை
பிரேமலால் ஜயசேகர - மின் வலுத்துறை
துமிந்த திநாநாயக்க - தபால் மற்றும் தொலைத் தொடர்புத் துறை
கீதாஞ்சன குணவர்தன - வெளிவிவகாரத் துறை
விநாயகமூர்த்தி முரளிதரன் - மீள் குடியேற்றத்துறை
எச்.ஆர்.மித்ரபால - கால்நடை அபிவிருத்தி
இந்திக பண்டாரநாயக்க - உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் துறை
முத்து சிவலிங்கம் - பொருளாதார அபிவிருத்தி
டபிள்யூ பீ ஏக்கநாயக்க - அனர்த்த முகாமைத்துவத் துறை
நியோமல் பெரேரா - கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தகம்
சரத் குமார குணரட்ன - அரச வழங்கல் மற்றும் கைத்தொழில் அபிவிருத்தி
நந்தி மித்ர ஏக்கநாயக்க - உயர் கல்வி அமைச்சு
சிறிபால கம்லத் - காணி மற்றும் காணி அபிவிருத்தி
நிருபமா ராஜபக்ச - நீர்ப்பாசன மற்றும் நீர் விநியோகத் துறை
லலித் திசாநாயக்க - தொழில்நுட்பத் துறை
சரண குணவர்த்தன - கனியவள மற்றும் கைத்தொழில் துறை
ரெஜினோல்ட் குரே - நீதித்துறை
விஜித முனி சொய்சா - புனர் வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் துறை
எம்.எல்..எம். ஹிஸ்புல்லா - சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளீர் விவகாரம்
வீர குமார திசாநாயக்க - கலாச்சாரத்துறை
சந்திரசிறி சூரியாராச்சி - சமூக சேவைகள்
சுசந்த புஞ்சிநிலைமை மி மீன்பிடி மற்றும் கடற்தொழில்த்துறை
திலான் பெரேரா மி பொது நிர்வாக மற்றும் உள்விவகாரம்
லக்ஷ்மன் யாப்பா அபயவர்தனா மி பொருளாதார அபிவிருத்தி
சந்திரசிரி கஜதீர மி நிதி மற்றும் திட்டமிடல் துறை
ஜெகத் புஷ்பகுமார மி விவசாயத் துறை
ரி.பீ. ஏக்கநாயக்கா மி கல்வித் துறை
மகிந்த அமரவீர மி சுகாதாரம்
ரோஹித்த அபயகுணவர்தன - துறைமுக மற்றும் பொது விமானத்;துறை
எஸ்.எம். சந்திரசேன மி நீர்ப்பாசனம் மற்றும் நீர் வள முகாமைத்துவம்
குணரட்ன வீரக்கோன் - தேசிய மரபுரிமை மற்றும் கலாச்சாரத் துறை
மேவின் சில்வா மி ஊடகத்துறை
பந்து பண்டாரநாயக்கா மி தேசிய வைத்தியத்துறை
சாலிந்த திசாநாயக்க மி பெருந்தோட்ட கைத்தொழில் துறை
மேலும் இங்கே தொடர்க...

தென்னிலங்கை காதலர்களால் யாழ்.போதனா வைத்தியசாலை கண்சிகிச்சை நிலையத்தில் பதற்றம்யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை கண்சிகிச்சைப் பிரிவில் நேற்று இடம்பெற்ற கத்திக் குத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.

சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

தென்னிலங்கையிலிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் கண்சிகிச்சைப் பகுதிக்கு தொழில்நுட்பவியலாளராக நியமனம் பெற்று கடந்த சில நாட்களுக்கு முன்னர் 26 வயதுடைய கமகே என்பவர் வந்திருந்தார். அவரைச் சந்திப்பதற்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தாதியாகப் பணிபுரியும் 22 வயதுடைய அஞ்சலி என்பவர் வந்திருந்தார்.

காதலர்களான இருவரும் உரையாடிக் கொண்டு இருக்கையில் இருவருக்கும் இடையில் சண்டை மூண்டது. இருவரும் தம் கைகளில் வைத்திருந்த கத்தியினால் மாறி மாறி குத்திக் கொண்டனர்.

இதனால் கண்சிகிச்சை பிரிவில் இருந்த நோயாளர்கள் கதிகலங்கினர். கத்திக்குத்துப்பட்ட காதலர்கள் இருவரும் தற்போது யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் இங்கே தொடர்க...

நான்கு பிரிவுகளில் நளினிமீது வழக்குத் தாக்கல்ராஜீவ்காந்தி கொலைக் குற்றவாளி நளினி மீது மேலும் நான்கு குற்றங்கள் சுமத்தப்பட்டு 4 பிரிவுகள் சட்டத்தின்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குத் தொடரப்பட்டால், நளினிக்கு 9 ஆண்டுகள் ஜெயில் தண்டனை கிடைக்லாம் என்று கூறப்படுகிறது.

வேலூர் பெண்கள் சிறையில் ஆயுள் தண்டனையை அனுபவித்து வருகிறார் நளினி. நேற்று முன்தினம் நளினியின் அறையில் ஜெயில் அதிகாரி ராஜலெட்சுமி தலைமையில் காவலர்கள் சோதனை நடத்திய போது, அவரிடமிருந்து செல்போன் ஒன்று கைப்பற்றப்பட்டது.

இந்த நிலையில் நேற்று மாலை வேலூர் பாகாயம் பொலிஸ் நிலையத்தில் நளினி மீது ஜெயில் அதிகாரி ராஜலட்சுமி புகார் கொடுத்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் வேலூர் பாகாயம் பொலிசார், குற்ற உணர்வோடு செயல்படுதல் (இந்திய தண்டனை சட்டம் 353), குற்றத்தை மறைக்க முயன்றமை (201), அரசு ஊழியரை கடமை செய்ய விடாமல் தடுத்தல் (186), சிறைத்துறை 42ஆவது சட்டத்தின் படி தடை செய்யப்பட்ட பொருளை வைத்திருத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் நளினி மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்த 4 பிரிவு சட்டத்தின்படி வழக்கு தொடர்ந்தால் நளினிக்கு 9 ஆண்டுகள் ஜெயில் தண்டனை கிடைக்கும் என்று கூறப்படுகிறது. .

புகார் குறித்து பாகாயம் பொலிஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி நளினியிடம் விசாரணை நடத்துகிறார். வேலூர் ஜெயிலுக்குச் சென்று நளினியிடம் இன்று அவர் விசாரணையைத் தொடங்கினார்.
மேலும் இங்கே தொடர்க...

75 இலங்கையருடன் ஆஸி. சென்ற படகு மலேசியாவில் சுற்றி வளைப்புஇலங்கையிலிருந்து 75 பேரை ஆஸ்திரேலியாவுக்கு ஏற்றிச் சென்ற படகை இன்று அதிகாலை மலேசியா கடலில் வைத்துப் பொலிஸார் சுற்றி வளைத்துள்ளனர்.

மலேசிய பொலிஸார் அவர்களை தரையிறங்குமாறு வற்புறுத்தியும் அவர்கள் மறுப்புத் தெரிவித்து வருவதாகக் கூறப்படுகிறது.

தாம் மலேசியாவில் கரை இறங்கினால் மீண்டும் இலங்கைக்கே திருப்பி அனுப்பபடுவோம் என்ற காரணத்தினால் இவர்கள் தரையிறங்க மறுப்பதாகவும் கூறப்படுகிறது.

தங்களை ஏதிலிகளாக ஏற்று கொள்ளக்கூடிய ஏதாவது ஒரு நாட்டுக்கு அனுப்பி வைக்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக மலேசிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்தோனேஷிய மெராக் துறைமுகத்தில் ஏற்பட்ட நிலை இவர்களுக்கும் ஏற்படலாம் என அஞ்சப்படுகின்றது.
மேலும் இங்கே தொடர்க...

கிளிநொச்சி ரயில் பாதையோரங்களில் கடைகள் அமைக்கத் தடைகிளிநொச்சி ரயில் பாதையின் இருமருங்கிலும் கடைகள், வியாபார ஸ்தபானங்களை அமைக்க வேண்டாம் என கரைச்சி பிரதேச சபை அறிவித்துள்ளது.

கிளிநெச்சியில் தற்போது மீள் குடியேற்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் கிளிநெச்சி ரயில் பாதையில் வடக்கு – தெற்கு பக்கமாக இருமருங்கிலும் தற்போது வியாபார ஸ்தபானங்கள் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ளன.

வவுனியாவுக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான ரயில் பாதை அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருவதால், இவ்வாறு அமைக்கப்பட்டு இருக்கும் கடைகள், வியாபார ஸ்தாபனங்களால் இடையூறு ஏற்படலாம் என்பதால் இவ்வாறான அறிவுறுத்தல் ஒன்றினை வழங்குவதாக கரைச்சி பிரதேச சபைச் செயலாளர் வெ.குலேந்திரன் தெரிவுத்துள்ளார்.

அதேவேளை கிளிநொச்சி வீதியின் இருமருங்கிலும் உள்ள மரங்களை வெட்ட வேண்டாம் எனவும் கரைச்சி பிரதேச சபை அறிவித்துள்ளது.

கிளிநொச்சியில் தற்போது மீளக் குடியேற்றம் நடைபெற்று வருகின்றமையினால் மக்கள் தமது வீடுகளை அமைப்பதற்காக வீதிகளின் ஓரங்களிலுள்ள மரங்களை வெட்டி அகற்றி வருகின்றனர்.

கடந்த கால யுத்தங்களினால் கிளிநொச்சிப் பிரதேசத்தில் பெருமளவான மரங்கள் அழிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்தும் மரவளம் அழிந்து போவதைத் தடுக்கும் முகமாகவே இவ்வாறான அறிவித்தலை வெளியிட்டதாக கிளிநெச்சி பிரதேச சபை அறிவித்துள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

உரிமைகளை மதிக்காவிடின் மக்கள் வீதியில் இறங்குவர் : சபையில் ரணில்அரசாங்கம் எதிர்க்கட்சிகளின் உரிமைகளை மட்டுமன்றி நாடாளுமன்றத்திற்குத் தெரிவான ஒவ்வொரு உறுப்பினரதும் உரிமைகளையும் பாதுகாக்க வேண்டும். இல்லையேல் உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்வதற்காக மக்கள் வீதியில் இறங்குவர் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

ஏழாவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. சபாநாயகர் தெரிவுக்கு பின்னர் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

"கடந்த முறை சபாநாயகரை இரவு சாப்பாட்டுக்குப் பின்னரே தெரிவு செய்தோம். 1989 ஆம் ஆண்டு அரசாங்கமும் எதிர்க்கட்சியும் இணைந்து செயற்பட்டது போல இம்முறையும் செய்தோம்.

எனக்கும் புதிய சபாநாயகருக்கும் இடையில் அரசியல் ரீதியில் கருத்து மோதல்கள் இருந்த போதிலும் தனிப்பட்ட ரீதியில் எவ்விதமான பிரச்சினைகளும் இல்லை. அவர் இந்த இடத்தில் ஒரு கட்சியின் பிரதிநிதியாக அமரவில்லை. முழு நாடாளுமன்றத்தின் பிரதிநிதியாகவே அமர்ந்திருக்கின்றார்.

சபாநாயகரின் பொறுப்பு என்ன என்பது தொடர்பில் கூடிய கவனம் செலுத்த வேண்டும். நாடாளுமன்றத்தின் உரிமைகளைப் பாதுகாக்கவேண்டும். அரசியலமைப்புக்குக் கட்டுப்பட்டு நிறைவேற்று அதிகாரத்தை நாடாளுமன்றத்தின் மூலமாகக் கட்டுப்படுத்த வேண்டும். இவற்றை பாதுகாக்கவில்லையாயின் நாடு உங்களைப் பாதுகாக்காது.

அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சிகளின் உரிமைகளை மட்டுமன்றி நாடாளுமன்றத்திற்குத் தெரிவான ஒவ்வொரு உறுப்பினரதும் உரிமைகளையும் பாதுகாக்க வேண்டும். 1835 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஆசியாவிலேயே பழைய நாடாளுமன்றம் என்ற வரலாற்றை, பெருமையை எமது நாடாளுமன்றம் கொண்டிருக்கின்றது.

உரிமைகளைப் பாதுகாக்கவேண்டும். இல்லையேல் உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்வதற்காக மக்கள் வீதியில் இறங்குவர். மலையகத்திலிருந்து தெரிவான பிரதமருக்கு வாழ்த்து தெரிவிக்கும் அதேவேளை பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு ஒரு பொறிமுறைகள் இருக்கவேண்டும். அதனை வசனத்தில் மட்டுப்படுத்தக் கூடாது"என்றார்.

பிரதமர் வாழ்த்து

பிரதமர் தி.மு. ஜயரட்ன வாழ்த்து தெரிவிக்கையில், "சபாநாயகராக உங்களை தேர்ந்தெடுத்தமையை இட்டு நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம். உங்களுடைய அரசியல் வாழ்க்கை சுத்தமானது என்பது மட்டுமன்றி பிரதேச மக்களின் மனங்களையும் வென்றெடுத்துள்ளீர்கள்.

நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் ஜனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவும் பேச்சுவார்த்தை நடத்தி எடுத்துள்ள தீர்மானம் முக்கியமானது. அதனையிட்டு சந்தோஷமடைகின்றேன்.

30 வருடகால யுத்தம் நிறைவுக்குக் கொண்டுவரப்பட்டதை அடுத்து நாட்டை பொருளாதார ரீதியில் கட்டியெழுப்புவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதேபோல நாடாளுமன்றத்தின் கௌரவம் பாதுகாக்கப்படும் என்றும் நம்புகின்றேன்.

அரசாங்கத்தைச் சரியான பாதையில் இட்டுச் செல்வதற்கான உரிமை எதிர்க்கட்சியிடமே இருக்கின்றது. அதனை அவர்கள் செய்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கின்றது. தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களுக்கு பிரச்சினைகள் இருக்கின்றன. அவை தொடர்பில் பல்வேறு சந்தர்ப்பங்களில் பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

ஒரே இனமாக இருந்து செயற்படவேண்டும் என்பதுடன் மக்கள் மூன்றிலிரண்டு பெரும்பான்மைக்கு மிக அருகில் அதிகாரத்தை வழங்கியுள்ளனர் என்பதனால் எங்களுக்கு எதிரான சர்வதேசத்தின் குரலை எதிர்ப்பதற்கு ஐக்கியப்படவேண்டும்" என்றார்
மேலும் இங்கே தொடர்க...

கற்பழிப்பு புகார்: நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை


இமாசலபிரதேசத்தில் வாடகை வீட்டில் தங்கியிருந்த நித்யானந்தா 4 சீடர்களுடன் கைது செய்யப்பட்டார். நித்யானந்தாவும், ஷீலம் ரெட்டியும் அந்த வீட்டை விட்டு வெளியில் எங்கும் செல்வது கிடையாது. மற்ற 3 பேர்தான் அருகில் உள்ள மார்க்கெட்டுகளுக்கும், பிற இடங்களுக்கும் சென்று வந்துள்ளனர்.

நித்யானந்தா தங்கி இருந்த வீட்டில் இருந்து ரூ.1 லட்சம் ரொக்கப்பணம், 7 ஆயிரம் அமெரிக்க டாலர்கள், 3 வீடியோ கேமரா, 3 லேப்- டாப் கம்ப்யூட்டர்கள் கைப்பற்றப்பட்டன. போலீசார் இன்று நித்யானந்தாவை பெங்களூர் கொண்டு வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்துகிறார்கள்.

அவர் மீது இளம்பெண் ஒருவர் பெங்களூர் கோர்ட்டில் கற்பழிப்பு புகார் கூறியுள்ளார். இதையடுத்து போலீசார் நித்யானந்தாவுக்கு முதலில் ஆண்மை பரிசோதனை நடத்த முடிவு செய்துள்ளனர். கோர்ட்டு அனுமதியுடன் பெங்களூர் ஆஸ்பத்திரிரியில் நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை நடைபெறும். அதன்பிறகு மற்ற புகார்கள் மீதான விசாரணை தொடங்கும்.

சாமியாருக்கு பெங்களூரிலும், தமிழ்நாட்டிலும், அமெரிக்காவிலும் கோடிக் கணக்கான சொத்துக்கள் உள்ளன. அவற்றை முடக்கவும் வங்கி கணக்குகளை சீல் வைக்கவும் கர்நாடக சி.ஐ.டி. போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

நித்யானந்தா மீது இந்திய தண்டனை சட்டம் 420 (மோசடி), 376 (கற்பழிப்பு), 377 (இயற்கைக்கு மாறான உறவு), 295ஏ (மத உணர்வை புண்படுத்துதல்), 506 (1) (மிரட்டல்), 120 (கூட்டுசதி) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவை ஜாமீனில் வர முடியாத பிரிவுகள் ஆகும்.

எனவே நித்யானந்தா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டபின் உடனே சிறையில் அடைக்கப்படுவார் அல்லது போலீஸ் காவலில் வைக்கப்படுவார்.
மேலும் இங்கே தொடர்க...

இந்தச் சபையின் உரிமைகளைப் பாதுகாப்பீர்கள் என நம்புகிறேன்.
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தமது கருத்துகளைச் சுதந்திரமாகக் கூறுவதற்கான உரிமை பேணப்படுவதுடன் சபையின் கெளரவமும் பாதுகாக்கப்பட வேண்டும் என்று ஐ. தே. க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

புதிய சபாநாயகரைப் பாராட்டி உரையாற்றும் போதே அவர் மேற் கண்டவாறு கூறினார். “நாம் எல்லோரும் சேர்ந்து சபாநாயகரைத் தெரிவு செய்துள்ளோம். 1989 முதல் உங்களுடன் (சபாநாயகருடன்) பழகி இருக்கிறேன்.

இதுவரை எந்தப் பிரச்சினையும் ஏற்படவில்லை. நான் சபையில் இல்லாதபோது தான் எங்கள் கட்சியினர் உங்களைத் தெரிவு செய்திருக்கிறார்கள். நீங்கள் இங்கு ஒரு கட்சியின் சார்பில் அமரவில்லை. முழுப் பாராளுமன்றத்தின் சார்பிலும் தெரிவாகியுள்ழர்கள்.

எனவே நீங்கள் இந்தப் பாராளுமன்றத் தைப் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும். எமது கருத்துக்களைத் தெரிவிப்பதற்கு சுதந்திரமும் உரிமையும் இருக்க வேண்டும். 1835 இலிருந்து ஆசியாவின் பழைமையான பாராளுமன்றமாக இது விளங்குகிறது.

இந்தச் சபையின் உரிமைகளைப் பாதுகாப்பீர்கள் என நம்புகிறேன். புதிய பிரதமருக்கு வாழ்த்துக்களைத் தெரிவிப்பதுடன் முன்னாள் பிரதமருக்கு நன்றிகளைத் தெரிவிக்கிறேன். புதிய உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்கள்” என்றும் ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்தார்
மேலும் இங்கே தொடர்க...

ஏழாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு நேற்று ஆரம்பமானபோது புதிய சபாநாயகரைத் தெரிவுசெய்த பின்னர் பிரதமர் ஜயரட்ன உரையாற்றினார்.


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஒத்துழைப்பை வழங்கி இலங்கையராக ஒன்றிணைந்து எமது சக்தியை உலகுக்கு வெளிப்படுத்துவோம் எனப் புதிய பிரதமர் டி. எம். ஜயரட்ன பாராளுமன்றத்தில் தனது கன்னி உரையில் குறிப்பிட்டார்.

அரசாங்கத்தைச் சரியாக வழிநடத்துவதற்குப் பாரிய பொறுப்பு எதிர்க்கட்சிக்கு உண்டு எனச் சுட்டிக்காட்டிய பிரதமர் ஜயரட்ன, சபாநாயகரைத் தெரிவு செய்ய ஒத்துழைப்பு வழங்கியதைப் போன்று அடுத்த ஆறு வருட காலத்திற்கும் அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பை வழங்க வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார்.

ஏழாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு நேற்று ஆரம்பமானபோது புதிய சபாநாயகரைத் தெரிவுசெய்த பின்னர் பிரதமர் ஜயரட்ன உரையாற்றினார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் :-

‘முழு நாட்டு மக்களுக்கும் சேவையாற்றக் கூடிய ஒரு வாய்ப்பு இப்போது கிடைக்கின்றது. புதிய சபாநாயகர் (சமல் ராஜபக்ஷ) புரிந்துணர்வுடன் செயற்படக்கூடியவர், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமது தந்தையாரின் அரசியல் வழியைப் பின்பற்றி 30 வருட கால யுத்தத்தை ஒழித்துக்கட்டி நாட்டை அபிவிருத்தி செய்து வருகிறார். அவரது சகோதரர் சபைக்குத் தலைமைதாங்குவது சிறப்பானதாகும்.

இந்த நாட்டில் ஐந்து இனத்தவர்கள் வாழ்கிறார்கள்.

அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தீர்க்க ஒரே இலங்கையர்கள் என்ற ரீதியில் செயற்படுவோம். எமது மக்கள் அனைவரும் எந்தப் பாகுபாடும் இன்றி வாழ வழிசமைக்க நாட்டு மக்கள் ஆணை வழங்கியுள்ளார்கள். மக்களின் ஆணையை நடைமுறைப்படுத்தும் போது நாம் எமது கருத்துகளைப் பகிர்ந்துகொள்ள வேண்டும்.

இலங்கையை உலகின் உன்னத நாடாக்க வேண்டுமென்ற ஜனாதிப தியின் இலக்கை அடைய நாம் பாடு படுவோம்’ என்றும் பிரதமர் மேலும் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

புதிய சபாநாயகராக சிரேஷ்ட அரசியல்வாதியும் ஜனாதிபதியின் மூத்த சகோதரருமான சமல் ராஜபக்ஷ ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஏழாவது பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகராக சிரேஷ்ட அரசியல்வாதியும் ஜனாதிபதியின் மூத்த சகோதரருமான சமல் ராஜபக்ஷ ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

முதலாவது அமர்வு நேற்று 22 ஆந் திகதி வியாழக்கிழமை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பமான போது ஆளுந்தரப்பால் முன்மொழியப்பட்டு எதிர்க்கட்சியினரால் வழிமொழியப்பட்டு புதிய சபாநாயகராக சமல் ராஜபக்ஷ ஏகமனதாகத் தெரிவானார்.

பாராளுமன்றத்திற்கு நேற்றுக் காலை எட்டு மணியிலிருந்தே உறுப்பினர்கள் வருகை தந்தனர்.

மீண்டும் தெரிவாகி வந்த முன்னாள் உறுப்பினர்கள், புதிய உறுப்பினர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் கைலாகு கொடுத்து ஆரத்தழுவி வாழ்த்துகளையும் மகிழ்ச்சியையும் பரஸ்பரம் வெளிப்படுத்திக் கொண்டனர்.

புதிய பிரதமர் டி. எம். ஜயரட்ன, முன்னாள் பிரதமர் ஆகியோருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர்.

காலை 8.40 அளவில் பெருமளவான உறுப்பினர்கள் பிரசன்னமாகியிருக்க ஜே. வி. பி., ஐ. தே. க உறுப்பினர்கள் சகிதம் முன்னாள் ஜெனரல் சரத் பொன் சேகா சபைக்குள் வந்தார். அப்போது அவருக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் உட்பட எதிரணியினர் கைலாகு கொடுத்து வரவேற்றனர்.

சபைக்கு வந்த பொன்சேகா பார்வையாளர் கலரியிலிருந்த வெளிநாட்டு இராஜ தந்திரிகளுக்குக் கையசைத்துவிட்டுப் பின் மனைவி அமர்ந்திருந்த பக்கமாகப் பார்த்து கையசைத்தார்.

காலை 8.45 இற்குப் படைக்கலச் சேவிதர் சபைக்கு செங்கோலை எடுத்து வந்தார்.

அதனைத் தொடர்ந்து பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகம் தம்மிக்க கித்துல்கொட ஜனாதிபதியின் பிரகடனத்தை வாசித்தார். அதன் பின் சபாநாயகர் தெரிவு செய்யப்பட வேண்டுமென்று உறுப்பினர் ஒருவரின் பெயரை முன்மொழியுமாறு சபையினரிடம் கேட்டுக்கொண்டார். இதன்போது பிரதமர் டி. எம். ஜயரட்ன, சமல் ராஜபக்ஷவின் பெயரை சபாநாயகர் பதவிக்கு முன்மொழிந்தார்.

அந்தப் பெயரை வழிமொழியுமாறு செயலாளர் நாயகம் கேட்டுக் கொண்டதும் எதிரணிப் பக்கமிருந்து ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய எழுந்து சமல் ராஜபக்ஷவின் பெயரை வழிமொழிந்து ஏற்றுக்கொள்வதாகக் கூறினார். வேறு பெயர்கள் எதுவும் முன்மொழியப்படாததால், சமல் ராஜபக்ஷ சபாநாயகராக ஏகமனதாகத் தெரிவாகியதாக செயலாளர் நாயகம் அறிவித்தார்.

அதனைத் தொடர்ந்து பிரதமர் டி. எம். ஜயரட்னவும், ஐ. தே. க. பிரதித் தலைவர் கரு ஜயசூரியவும் சபாநாயகர் சமல் ராஜபக்ஷவை சபா பீடத்துக்கு அழைத்துச் சென்றனர். சபா பீடத்தைப் பொறுப்பேற்ற சபாநாயகர் அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துத் தமது கடமைகளை உறுதிப் பிரமாணத்துடன் ஆரம்பித்தார்.

முதலில் பிரதமர் ஜயரட்னவை கன்னி உரை நிகழ்த்த சபாநாயகர் அழைத்தார். அப்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், உறுப்பினர்கள் சத்தியப் பிரமாணம் செய்துகொள்ளாமல் எவ்வாறு உரையாற்ற முடியும்? என்று கேள்வி எழுப்பினார். அதன்பின்னர் சபாநாயகரின் வேண்டுகோளின்படி சகல உறுப்பினர்களும் எழுந்து நின்று, தமக்கு வழங்கப்பட்டிருந்த உறுதியுரையினை வாசித்து சத்தியப் பிரமாணம் செய்துகொண்டு அதற்கான புத்தகத்தில் கையொப்பமிட்டனர். ஐ. தே. க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க உட்பட எதிரணியில் சில உறுப்பினர்கள் இறுதி நேரத்திலேயே சபைக்கு வந்து சேர்ந்தனர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாரியார் சகிதம் பாராளுமன்றத்திற்கு வந்திருந்த போதிலும் அவர் ஆரம்ப சம்பிரதாயபூர்வ மான நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை. அவரது புதல்வர் நாமல் ராஜபக்ஷ சத்தியப் பிரமாணம் செய்வதையொட்டியே அவர் நேற்று வருகை தந்திருந்தார். ஜனா திபதியின் பாராளுமன்ற வருகையையொட்டி பாராளுமன்றத்துக்குச் செல்லும் வீதியிலும், வளாகத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டிருந்தது. ஊடகவியலாளர்களும் ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவினராலேயே பாராளுமன்றத்திற்குக் கொண்டுசெல்லப் பட்டனர்.

வழமையாகப் பாடசாலை மாணவர்களால் நிரம்பி வழியும் பார்வையாளர் கலரியில், நேற்று பாராளுமன்ற உறுப்பினர்களின் குடும்ப உறுப்பினர்கள் நிறைந்து காணப்பட்டனர். வெளிநாட்டு இராஜதந்திரிகளும் பெருமளவில் வருகை தந்திருந்தனர்.
மேலும் இங்கே தொடர்க...

பசில் ராஜபக்சவுக்கு சுற்றுலாத்துறை, துறைமுக, பொது வானூர்தி சேவை அமைச்சுப்பதவி கிடைக்க வாய்ப்பு-

இம்முறை அமைச்சரவையில் அதிகளவு விருப்புவாக்குகளைப் பெற்றுள்ள பசில் ராஜபக்ச மற்றும் விமல் வீரவன்ச ஆகியோர் மாத்திரமே புதிதாக இணைத்துக் கொள்ளப்படவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்தமுறை அமைச்சுப் பதவிகள் வகித்த அமைச்சர்களது பல பதவிகள் மாறுவதுடன் சில அமைச்சர்களுக்கு மாத்திரமே இம்முறையும் அதே அமைச்சுப் பதவிகள் கிடைக்கவுள்ளது. பசில் ராஜபக்சவுக்கு சுற்றுலாத்துறை மற்றும் துறைமுக பொது வானூர்திசேவை அமைச்சுப் பதவியும், ஜீ.எல்.பிரிசுக்கு வெளியுறவமைச்சர் பதவியும், குமார வெல்கமவுக்கு போக்குவரத்து அமைச்சர் பதவியும், பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் பதவியும் வழக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பந்துள குணவர்த்தன மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகிய முன்னாள் அமைச்சர்களுக்கு முன்னர் வகித்த அமைச்சுப் பதவிகளே வழங்கப்படுமென்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் இங்கே தொடர்க...