3 நவம்பர், 2010

சந்திரனுக்கு எந்திர மனிதனை அனுப்ப “நாசா” திட்டம்


சந்திரனுக்கு மீண்டும் விஞ்ஞானிகளை அனுப்ப அமெரிக்காவின் “நாசா” விண்வெளி நிறுவனம் முடிவு செய்திருந்தது. அதற்காக ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் கோடி செலவிட முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் இதற்கு அதிக அளவு செலவாகும் என கருதி அதிபர் ஒபாமாவின் அரசு இந்த திட்டத்தை கைவிட்டது.

இந்த நிலையில், சந்திரனுக்கு எந்திர மனிதனை (ரோபாட்) அனுப்ப “நாசா” முடிவு செய்துள்ளது. இதற்காக ரூ.1000 கோடிக்கும் குறைவாகவே செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த தகவலை ஹீவ்டனில் உள்ள ஜான்சன் விண்வெளி மைய நாசா என்ஜினீயர்கள் தெரிவித்துள்ளனர்.

மனித குணங்களை கொண்ட எந்திர மனிதனை சந்திரனுக்கு பாதுகாப்பாக அனுப்ப திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கான பணி 1000 நாட்களில் முடியும் என்றும் தெரிவித்துள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

இந்தோனேசியாவில் எரிமலைச் சீற்றம்: விமானங்கள் ரத்து


இந்தோனேசியாவின் அபாயகரமான எரிமலையான மெராபி திங்கள்கிழமை முதல் தீக்குழம்பை கக்க ஆரம்பித்துள்ளது.

இதையடுத்து அப்பகுதியில் உள்ள விமான நிலையத்தில் இருந்து விமானங்கள் புறப்படுவதற்கும், தரையிறங்குவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

யோக்யகர்த்தாவில் மெராபி எரிமலை அமைந்துள்ளது. இந்த எரிமலை தீக்குழம்பை கக்குவதால் அப்பகுதி முழுவதும் அனல் காற்று, தூசுவினால் நிரம்பியுள்ளது. இதனால் அப்பகுதியில் வசித்த மக்கள் வீடுகளை காலி செய்து கொண்டு இடம்பெயர்ந்துள்ளர். சுமார் 70 ஆயிரம் பேர் இடம்பெயந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மெராபி எரிமலை தீக்குழம்பை கக்குவதால் ஏற்பட்ட உயிரிழப்பு குறித்து எவ்விதத் தகவலும் இல்லை. இந்த எரிமலைச் சீற்றம் இன்னும் ஒருவாரத்துக்கு தொடர வாய்ப்புள்ளதாக அந்நாட்டு விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுயதொழில் உபகரணங்கள் : மத்திய வங்கி விநியோகம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வவுணதீவு உன்னிச்சைப்பகுதி மக்களுக்கு சுயதொழில் நடவடிக்கைகளில் ஈடுபடவென ஆடு, மாடு, மற்றும் மீன்பிடி உபகரணங்களை மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி அஜித் நிவாட் கப்ரால் வழங்கினார்.

இதன்போது பிரதியமைச்சர் விநாயகமூகீத்தி முரளீதரன் உட்பட பலர் சமூகமளித்திருந்தனர். பலநூறு குடும்பங்கள் இதனால் நன்மையடைந்துள்ளன.
மேலும் இங்கே தொடர்க...

தீபாவளி விடுமுறையை முன்னிட்டு கடுகதி ரயில் சேவை

தீபாவளி விடுமுறையை முன்னிட்டு கொழும்பு பறக்கோட்டைக்கும் நானுஓயாவிற்கும் இடையே இரு தினங்களுக்கு கடுகதி ரயில் சேவை இடம்பெறும் என போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

கொழும்பு புறக்கோட்டை ரயில் நிலையத்திலிருந்து காலை 8.35 மணிக்கு நானுஓயா நோக்கி புறப்படும். அதேவளை நானுஒயாவிலிருந்து புறக்கோட்டை நோக்கி பிற்பகல் 3.15 மணிக்கு ரயில் சேவை இடம்பெறும்.

இப்புகையிரதம் பேராதனை, கம்பளை, நாவலப்பிட்டி, ஹட்டன் மற்றும் தலவாக்கலை ஆகிய புகையிரத நிலையங்களில் தரித்து நிற்கும் என தெரிவித்துள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

ஜேர்மனியின் Schmalkalden நகரைச்சேர்ந்த மக்கள்



ஜேர்மனியின் Schmalkalden நகரைச்சேர்ந்த மக்கள் இன்று காலை எழுந்து தமது வீடுகளின் கதவுகளையும் யன்னல்களையும் திறந்து பார்த்தபோது அதிர்ச்சியில் உறைந்துவிட்டனர்.

இரவோடு இரவாக அந்த நகரின் வீதியில் பாரிய குழி ஏற்பட்டிருந்தது தான் அவர்களது அதிர்ச்சிக்குக் காரணம்.

இந்தக் குழியால் வீதி இரண்டாகப் பிளந்து காணப்பட்டது. வீதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஒரு கார் இந்தப் பாரிய குழியின் அந்தரத்தில் தொங்கியபடி காணப்பட்டது. வழமையான வாழ்விட நகரமான இந்த நகரில் பல கராஜுகள் திடீரென இடிந்து விழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.
இது ஒரு மண்சரிவு அல்லது நில அதிர்வு போல் காணப்படுகின்றது. 20 மீட்டர் ஆழமும்இ 40 மீட்டர் அகலமும் கொண்டதாக இந்தக் குழி காணப்படுகின்றது. அண்மையிலுள்ள 23 கட்டிடங்களிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இதற்கான காரணத்தை கண்டறிவதில் சம்பந்நப்பட்ட அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஆச்சரியத்தக்க வகையில் யாருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை.
மேலும் இங்கே தொடர்க...

ஆஸ்திரேலிய ஆழ்கடலில் எரிமலை கண்டுபிடிப்பு

ஆழ்கடல் பகுதியில், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உயிருடன் இருக்கும் எரிமலையை, ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.கிரேட் ஆஸ்திரேலியன் வளைகுடா கடல் ஆய்வு மையம் உள்ள பாதுகாக்கப்பட்ட பகுதியில் இருந்து, 100 கடல் மைல் தொலைவில், இரண்டாயிரம் மீட்டர் ஆழத்தில் எரிமலை ஒன்றை, ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.ஆழ்கடல் பகுதியில், கூம்பு வடிவில் உள்ள இந்த எரிமலை 800 மீட்டர் விட்டத்தை கொண்டுள்ளது. இது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உயிருடன் இருந்து வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அந்த பகுதியில், மேலும் இதுபோன்ற எரிமலைகள் இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...

ஒபாமாவுடன் இந்தியாவரும் 'கெடிலாக் வன்' பிரத்தியேக கார்


அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா எதிர்வரும் சனிக்கிழமை இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார். இவர் இந்தியாவில் நான்கு நாட்கள் தங்கவுள்ளார்.

ஒபாமாவின் விஜயத்தையொட்டி அவருக்கான பிரத்தியேக காரும் இந்தியாவுக்குக் கொண்டுவரப்படவுள்ளது. அதிநவீன 'கெடிலாக் வன்' (இஹக்ஷடுங்ங்ஹஷ-ச்டூடீ) எனப்படும் இக்காரானது சுமார் 7000 கிலோகிராம் நிறை கொண்டது.

இக்காரானது இரசாயன, உயிரியல் மற்றும் வெடிகுண்டுத் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பு அளிக்கக்கூடியது.

அமெரிக்காவின் பிரபல வாகன தயாரிப்பு நிறுவனமான ஜெனரல் மோட்டர்ஸ் நிறுவனம் தயாரித்த கார் இது.

துப்பாக்கிக் குண்டுகள் துளைக்கமுடியாத வெளிப்பரப்பு மற்றும் 5 அங்குல தடிமன் கொண்ட கண்ணாடிகள், காருக்குள் இருந்தபடியே வெள்ளை மாளிகையுடன் தொடர்பு கொள்ளக் கூடிய வசதி , காருக்குள் இருந்தபடி அணுஆயுத தாக்குதலுக்கு உத்தரவிடும் வசதி என்பன இதன் மேலதிக சிறப்பம்சங்களாகும்.

மேலும் அமெரிக்காவில் இருந்து 40 விமானங்கள், 6 ஆயுதம் தாங்கிய கார்கள் ஆகியவையும் இந்தியாவுக்குக் கொண்டுவரப்படவுள்ளன.

அமெரிக்க உளவுப் பிரிவினரின் இரண்டு சிறப்பு முகாம்கள் மும்பை மற்றும் டில்லியில் அமைக்கப்பட்டுள்ளன.

ஒபாமாவின் இந்திய விஜயத்தை ஒட்டி இந்தியாவில் வரலாறு காணாத பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும் இங்கே தொடர்க...

நல்லிணக்க ஆணைக்குழு சாட்சியம் வழங்க அழைப்பு சம்பந்தன் எம்.பியிடமிருந்து பதில் இல்லை


கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் பற்றிய ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிப்பது தொடர்பில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவர் இரா. சம்பந்தன், இன்னமும் சாதகமான பதில் எதனையும் வழங்கவில்லையென்று ஆணைக் குழு வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்க வருமாறு கடந்த ஜுலை மாதத்திலிருந்து சம்பந்தனைக் கேட்டு வந்தபோதிலும், அவர் இதுவரை எந்தவிதமான பதிலையும் அளிக்கவில்லை என்று ஆணைக்குழுவின் முக்கியஸ்தர் ஒருவர் தினகரனுக்குத் தெரிவித்தார்.

சாட்சியமளிப்பதற்குச் சம்பந்தன் தயாராக இருப்பதாகவும் ஆணைக்குழு அவருக்குத் திகதி வழங்கவில்லையென்று கூறப்படுவதில் உண்மை கிடையாதென்றும் அவர் கூறினார். சம்பந்தன் எம். பி.யின் சாட்சியத்தை வரவேற்றுக் காத்திருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

இறுதிப் போரில் இடம்பெயர்ந்தோர்: மூன்று மாதங்களுக்குள் மீள்குடியமர்த்தப்படுவர்


இறுதிக் கட்ட யுத்தத்தின்போது இடம் பெயர்ந்த மக்களில் 11, 643 பேர் மட்டுமே வவுனியா மெனிக்பாம் நிவாரணக் கிராமங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சு கூறியது.

இவர்களை 2 அல்லது 3 மாதங்களுக்குள் முழுமையாக மீள்குடியேற்ற திட்டமிட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் எம்.பி. திசாநாயக்க கூறினார்.

இதேவேளை 5, 773 பேர் தமது உறவினர் நண்பர்களின் வீடுகளில் தங்கியுள்ளதாகவும் இவர்களையும் துரிதமாக சொந்த இடங்களில் மீள்குடியேற்ற உள்ளதாகவும் செயலாளர் குறிப்பிட்டார்.

இடம்பெயர்ந்த மக்களில் 6, 896 குடும்பங்களைச் சேர்ந்த 18,126 பேர் மீள்குடியேற்றப்படவுள்ளனர். இவர்களில் கதிர்காமர் நலன்புரிக் கிராமத்தில் 1,938 பேரும், ஆனந்த குமாரசுவாமி கிராமத்தில் 4,482 பேரும், வலயம் 2 இல் 2,127 பேரும் வலயம் 3 இல் 951 பேரும் வலயம் 4 இல் 2,145 பேரும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் 162 குடும்பங்களைச் சேர்ந்த 716 பேர் உள்ளனர்.

ஜனாதிபதியின் பணிப்பின் பேரில் மீளக்குடியேற்றப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளனர் கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் பெருமளவு நிறைவடைந்துள்ளதோடு முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு, மரிச்சியம்பற்று ஆகிய பிரதேசங்களில் அதிக மிதிவெடிகள் புதைக்கப்பட்டுள்ளதால் அப்பகுதிகளில் மீள்குடியேற்றம் தாமதமடைந்துள்ளது. எனவே அங்கு மிதிவெடி அகற்றும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.

இதேவேளை 1990 களில் இடம்பெயர்ந்த மற்றும் வெளியேற்றப்பட்ட மக்களை மீள்குடியேற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள் ளதோடு இதுவரை சுமார் 6 ஆயிரம் பேர் மீள்குடியேற்றப்பட்டுள்ளதாக செயலாளர் தெரிவித்தார். அடுத்த வருட முடிவுக்குள் இவர்களை முழுமையாக மீள்குடியேற்றவுள்ளதாகவும் அவர் கூறினார்.

இவர்களில், ஒரு பகுதியினர் தற் பொழுது தாம் வசிக்கும் பிரதேசங்க ளில் வாழ விரும்புவதாகவும், மீள் குடியேறவிருப்பமானவர்கள் குறித்து ஆய்வு நடத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...

ஜனாதிபதிக்கு வாழ்த்துக்களை தாங்கி யாழ். மக்கள் அம்பாந்தோட்டை நோக்கி நடைப்பயணம்


ஜனாதிபதிக்கு தமிழ் மக்களின் நல்லெண்ணத்தை வெளிப்படுத்துமுகமாக யாழ்ப்பாணத்தில் இருந்து அம்பாந்தோட்டைக்கான நடைப்பயணம் நேற்றுக்காலை யாழ்ப்பாணம் ஸ்ரீநாகவிகாரை முன்பாக பெளத்த இந்து மதத் தலைவர்களின் ஆசியுடன் ஆரம்பமாகியது.

பாதயாத்திரைக்கு முன்பாக அழகிய முத்துப்பல்லாக்கு பொருத்தப்பட்ட வாகனத்தில் ஜனாதிபதியின் உருவப் படம் சகல இன மக்களுக்கும் வணக்கம் கூறுவதாக கட்டப்பட்டிருந்தது. இரண்டாவது வாகனத்தில் மத நல்லிணக்கத்தை சித்தரிக்கும் அலங்கார ஊர்தி வடிவமைக்கப்பட்டிருந்தது. மற்றுமொரு வாகனமும் அலங்கார ஊர்தியாக நடைபவனியில் சென்றது.

இந்த நடைப்பயணத்தில் தேசிய நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் தமிழ் இளைஞர்கள், சிங்கள மக்கள், பெளத்ததுறவிகளும் பங்கு கொண்டு சென்றனர்.

ஆரம்ப வைபவத்தில் யாழ்ப்பாணம் சிறி நாகவிகாரை சர்வதேச பெளத்த நிலைய வளாகத்துக்குரிய தேரர் கருத்துரைக்கையில், நாட்டின் தலைவருக்கு நாம் செய்யும் கைமாறாகஇப்பயணம் யாழ். மக்கள்... (தொடர்)

நடை பெறுகின்றது. சகல இனங்களும் ஐக்கியமாகவும், ஒற்றுமையாகவும் பயமின்றியும் மகிழ்ச்சியாக வாழ வழிவகுத்தவர் எமது ஜனாதிபதி என்றார்.

யாழ். மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி பிரமுகர்கள் எஸ். தங்கராஜா, என். யோகராஜன் ஆகியோரும் மக்களும், நடைப்பயணம் சென்றவர்களை வழியனுப்பிவைத்தனர்.

நடைப்பயணக் குழுவினர் யாழ். மக்களின் செய்தியை 19 ஆம் திகதி அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நடைபெறும் நிகழ்வில் ஜனாதிபதியிடம் கையளிப்பர்.
மேலும் இங்கே தொடர்க...

நாட்டின் எப்பகுதியிலும் புதிய காவலரண்கள் அமைக்கப்படவில்லை

வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் எந்த பகுதிகளிலும் இராணுவம் புதிதாக காவலரண்கள் எதனையும் அமைக்கவில்லை என்று இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் உதய மெதவல தெரிவித்தார்.

வட பகுதியில் படையினர் புதிதாக இராணுவ காவலரண்களை அமைத்து வருவதாக கூறப்படும் செய்திகளில் எந்தவித உண்மையும் இல்லை என்று தெரிவித்த அவர், அதனை முற்றாக மறுப்பதாகவும் குறிப்பிட்டார்.

குறித்த பிரதேசங்களிலுள்ள மக்களின் பாதுகாப்பை கருத்திற் கொண்டு அவ்வப்போது தேவைப்படும் சந்தர்ப்பங்களில் மாத்திரம் திடீர் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்த அவர்; இதற்கு மாறாக புதிதாக நிரந்தர காவலரண்கள் எதுவும் அமைக்கப் படுவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

கொலை, கொள்ளை, போதைப் பொருள் கடத்தல் போன்ற குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் நோக்குடனேயே திடீர் சோதனைச் சாவடிகளும் அமைக்கப்படுவதாக இராணுவப் பேச்சாளர் மேலும் சுட்டிக்காட் டினார்.

நாட்டினதும் மக்களினதும் நன்மைகளை கருத்திற் கொண்டே இவ்வாறான திடீர் சோதனைச் சாவடிகள் அவ்வப்போது அமைக்கப்படுவதாக தெரிவித்த அவர் இதன் மூலம் மக்களுக்கு எந்தவொரு இடையூறுகளையும் ஏற்படுத்தும் நோக்கம் எதுவும் கிடையாது என்றும் இராணுவப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.

மேலும் போதைப்பொருள் பாவனைகளையும், போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுக்களையும் நாட்டிலிருந்து முற்றாக இல்லாதொழிக்கும் பாரிய நடவடிக்கைகளை பொலிஸார் உட்பட பாதுகாப்புப் படையினர் ஆரம்பித்துள்ளதாக தெரிவித்த அவர், இது போன்ற நடவடிக்கைகளை முற்றாக கட்டுப்படுத்துவதற்கு இவ்வாறான திடீர் சோதனைச் சாவடிகள் அவசியம் என்றும் குறிப்பிட்டார்.

இது தவிர நிரந்தர சோதனைச் சாவடிகளை புதிதாக அமைக்கும் எந்த ஒரு தேவையும் பாதுகாப்புப் படையினருக்குக் கிடையாது என்றார்.

போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு பாதுகாப்புப் படையினரும் பொலிஸாருக்கு பூரண ஒத்துழைப்புக்களை வழங்கி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும் இங்கே தொடர்க...