21 ஜனவரி, 2011

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் கூட்டம்-




தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற கட்சிகளின் கூட்டம் வவுனியா புகையிரதநிலைய வீதி வைரவப்புளியங்குளத்தில் அமைந்துள்ள புளொட் அலுவலகத்தில் இன்றுமாலை 5.00மணியளவில் இடம்பெற்றது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி, தமிழரசுக் கட்சியின் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, ஈ.பி.ஆர்.எல்.எவ் இன் பாராளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிறேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன், தமிழீழ விடுதலை இயக்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், வினோ நோகராதலிங்கம், புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்;த்தன், புளொட் மத்தியகுழு உறுப்பினர்களான சிவனேசன் பவான், வவுனியா நகரசபை எதிர்க்கட்சித் தலைவர் ஜீ.ரி.லிங்கநாதன் ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர். இக்கூட்டத்தின்போது வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களுக்கான வேட்பாளர் நியமனம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. இதில் எந்தவொரு கட்சியையும் சார்ந்தவர்களுக்கு மாத்திரம் முக்கியத்துவம் கொடுக்காமல், மக்கள் மத்தியில் செல்வாக்கு உடையவர்களை வேட்பாளர்களாக நியமிப்பது என்றும், அதன் தேர்வுகளை நாளைமுதல் ஆரம்பிப்பதென்றும் தீர்மானிக்கப்பட்டது.













































மேலும் இங்கே தொடர்க...

போயா தினத்தில் மாடு அறுத்தவர்களுக்கு விளக்கமறியல்

போயாதினமான புதன் கிழமை விற்பனைக்காக மாடுகளை அறுத்த நபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் கே. ஜீவரானி உத்தரவிட்டுள்ளார்.

மன்னார் முருங்கன் பகுதியில் வைத்து புதன்கிழமை அன்று பொலிஸாரால் கைது செய்யப்பட்ட 5 நபர்களையும் முருங்கன் பொலிஸார் நேற்று மன்னார் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தினார்.

விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் சந்தேக நபர்களில் இருவரை சரீரப்பிணையில் விடுதலை செய்ததோடு ஏனைய 3 சந்தேக நபர்களையும் இன்று வெள்ளிக்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...

அரிசிமாவு மூலம் பாண் தயாரிக்க நடவடிக்கை: விமல் வீரவன்ச




அரிசிமாவு மூலம் பாண் தயாரிக்கும் போராட்டம் ஒன்றை பொறியில் சேவை,பொதுவசதிகள் வீடமைப்பு அமைச்சர் விமல் வீரவன்ச முன் எடுத்து வருகின்றார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

வியாங்கொடையில் அவ்வாறான ஒரு அரிசி மாவு பதனிடும் தொழிற்சாலை திறக்கப் பட்டுள்ளதாகவும் 200 வெதுப்பக (பேக்கரி)உரிமையாளர்கள் இதற்கு தமது ஆதரவைத் தெரிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கோதுமை மாவு போல் மிக மெண்மையாக அரிசி மாவை அரைப்பது தொடர்பான தாமதமே இது பின்னடைவாவதற்குக் காரணம் என்றும் தற்போது 50 ற்கு 50 என்ற விகிதத்தில் கோதுமை மாவையும் சேர்த்தே புதிய அரிசிமா பாண் தயாராகவுள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

தலதா மாளிகையில் மரம் ஒன்றை வெட்டிய பொலிஸ் அதிகாரிக்கு விளக்கமறியல்




ஸ்ரீதலதா மாளிகையின் மரம் ஒன்றை வெட்டியதாகக் கூறப்படும் பொலிஸ் அதிகாரி ஒருவரை எதிர்வரும் மூன்றாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி கண்டி மேலதிக நீதவான் ரவீந்திர பிரேமரத்ன உத்தரவிட்டுள்ளார்.

கண்டி தலதாமாளிகைக்குச் சொந்தமான காணியில் உள்ள மரம் ஒன்றை வெட்டியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பேராதனைப் பொலிஸார் செய்து கொண்ட முறைப்பாட்டை அடுத்து மேற்படி உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.

மேற்படி சம்பவத்தில் கைது செய்யப் பட்டவர் அக்காணியின் பாதுகாப்புடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரியான சேனக ஜகத்குமார என்பவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

ஜனாதிபதி- இந்திய விமானப்படைத் தளபதி சந்திப்பு



இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய விமானப்படைத் தளபதி மார்ஷல் பிரதீப் வாசண்ட் நாயிக் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இன்று சந்தித்து கலந்துரையாடி உள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பின் போது, ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் ரொசான் குணதிலக்க, இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் காந்தா ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் இங்கே தொடர்க...

பொன்சேகாவின் மனு மீதான விசாரணை 5 நாட்கள் தொடர்ந்து நடைபெறும்

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் மனு மீதான விசாரணைகள் ஐந்து நாட்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. அவரின் ஆணைகோரும் மனு மீதான விசாரணையை மே மாதம் 23ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை தொடர்ந்து நடத்துவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று தீர்மானித்துள்ளது.

30 மாத கடூழிய சிறைத்தண்டனை விதித்த 2ஆவது இராணுவ நீதிமன்றின் தீர்ப்பையும் தண்டனையையும் எதிர்த்து சரத் பொன்சேகா மேன்முறையீடு செய்துள்ளார். இந்த மேன்முறையீடு தொடர்பான விசாரணைகள் நீதிபதிகளான எரிக் பஸ்நாயக, உபாலி அபேவர்த்தன ஆகியோர் முன்னிலையில் நடைபெறவுள்ளன.

இந்நிலையில், பெப்ரவரி 21ஆம் திகதிக்கு முன்னர் ஆட்சேபனைகளை தாக்கல் செய்யும்படி பிரதிவாதிகளுக்கு நீதிமன்றம் பணித்தது. இதேவேளை, மனுதாரரை மார்ச் 4ஆம் திகதிக்கு முன் மறுப்பு சத்தியக்கடதாசிகளை தாக்கல் செய்யும்படி பணித்தது.

நீதிமன்ற விசாரணைகள் இடம்பெறும் தினங்களில் மனுதாரரான சரத் பொன்சேகாவை நீதிமன்றத்திற்கு அழைத்து வரவேண்டும் என நீதிமன்றம் பணித்தது.

முன்னாள் இராணுவத் தளபதியான சரத் பொன்சேகாவை, 2 ஆவது மற்றும் 4 ஆவது பிரதிவாதிகளால் தன்னை இரண்டாவது இராணுவ நீதிமன்றில் குற்றவாளியாகக் கண்டதை எதிர்த்தும், 2 ஆவது மற்றும் 4 ஆவது பிரதிவாதிகளால் நடத்தப்பட்ட 2 ஆவது நீதிமன்றின் முழுச்செயற்பாட்டையும் செல்லுபடியற்றது என ஆக்கக்கோரியும் 2 ஆவது மற்றும் 4 ஆவது பிரதிவாதிகளால் தனக்கு விதிக்கப்பட்ட 30 மாத கால சிறைத் தண்டனையையும் செல்லுபடியற்றதாக்கக் கோரியும் மேல்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

கட்டுக்குருந்த ஹோட்டல் அறையில் ஸ்கொட்லாந்து பிரஜையின் சடலம்

களுத்துறை, கட்டுக்குருந்த பகுதியிலுள்ள ஹோட்டலொன்றின் அறையில் 47 வயதான ஸ்கொட்லாந்து பிரஜை ஒருவர் நேற்றுக் காலை உயிரிழந்த நிலையில் காணப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.

நக்வால் வுக்னி என்பவரே உயிரிழந்தவராவார். சடலம் பிரேத பரிசோதனைக்காக களுத்துறை பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கையின் போர்க் குற்றங்களை சுதந்திரமான முறையில் விசாரிக்க வேண்டும்


இலங்கையின் போர்க்குற்றங்களை ஐ.நா. உள்ளிட்ட அமைப்புக்கள் சுதந்திரமான முறையில் விசாரிக்க வேண்டுமென அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.

மசாசூசெட்ஸ் பிராந்தியத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினரான எட்வர்ட் ஜே. மார்க்கி என்பவரே கடந்த செவ்வாய்க்கிழமை காங்கிரஸில் உரையாற்றும்போது மேற்குறித்த கருத்தைத் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நடைபெற்றுள்ளதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பில் சுதந்திரமான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதே தனது நிலைப்பாடு என்று தெரிவித்துள்ள அவர், தனது கருத்துக்கு ஆதரவாக இன்னும் 57 உறுப்பினர்களும் இணைந்துகொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தாங்கள் அனைவரும் இணைந்து, குறித்த வேண்டுகோளை ஐ.நா. செயலாளர் நாயகத்திடம் முன்வைத்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

அமெரிக்கா சென்றுள்ள ஜனாதிபதியிடம் விசாரணை நடத்துமாறு கோரிக்கை


அமெரிக்கா சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் விசாரணை நடத்த வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை விடுத்துள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று முன்தினம் காலை 20 பிரதிநிதிகளுடன் அமெரிக்கா சென்றுள்ளார். சர்வதேச சட்டங்கள் மீறப்பட்டுள்ளமைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டிய கடமை அமெரிக்காவுக்கு இருப்பதாக சர்வதேச மன்னிப்புச் சபையின் ஆசிய பசுபிக் பிராந்திய பணிப்பாளர் சேம் சரிப் தெரிவித்துள்ளார்.

கடத்தல், துன்புறுத்தல், நீதிக்குப் புறம்பான கொலைகள், மனித உரிமை மீறல்களுக்கு எதிராக அமெரிக்கா நடவடிக்கை எடுக்கவேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

ஏப்ரல் மாத இறுதிக்குள் எஞ்சியோர் மீள்குடியேற்றம்


வவுனியா நலன்புரி முகாம்களில் எஞ்சியுள்ள சுமார் 20 ஆயிரம் அகதி மக்களை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதிக்குள் மீள்குடியேற்றவே முயற்ச்சிக்கின்றோம். நிலக்கண்ணிவெடிகளே மீள்குடியேற்றத்துக்கு தடையாக அமைந்துள்ள பிரதான காரணியாகும் என்று மீள்குடியேற்ற அமைச்சர் குணரட்ன வீரக்கோன் தெரிவித்தார்.

இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றும் பணிகள் எவ்வாறு அமைந்துள்ளன என்பது தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் இது தொடர்பில் மேலும் கூறியதாவது,

இடம்பெயர்ந்த நிலையில் வவுனியா நலன்புரி நிலையங்களில் தங்கியிருந்த மிக அதிகமான மக்கள் மீள்குடியேற்றப்பட்டுவிட்டனர். தற்போதைய நிலைமையில் சுமார் 20 ஆயிரம் அகதி மக்களே எஞ்சியுள்ளனர்.

இந்நிலையில் முகாம்களில் எஞ்சியுள்ள மக்களை ஏப்ரல் மாதம் 31க்குள் மீள்குடியேற்றிவிடவே முயற்சிக்கின்றோம். இடம்பெயர்ந்த மக்களை விரைவில் மீள்குடியேற்றவேண்டும் என்பதே எமது ஆர்வமாகும்.

ஆனால் நிலக்கண்ணிவெடிகளே இந்த செயற்பாட்டில் பிரதான தடையாகவுள்ளது. நிலக்கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுவிட்டதாக பிரதேச செயலகம் எங்களுக்கு உறுதிபடுத்தவேண்டும். மேலும் ஐக்கிய நாடுகள் சபையின் சான்றிதழ் பெறப்பவேண்டியதும் அவசியமாகும்.

அதன் பின்னரே குறிப்பிட்ட பிரதேசங்களில் மக்களை குடியேற்ற முடியும். எனவே நிலக்கண்ணிவெடிகள் அகற்றப்படும் வரையே நாங்கள் காத்திருக்கின்றோம். இதேவேளை மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான வசதிகளை முடியுமானவரை நிறைவேற்றி வருகின்றோம்.

கடந்த டிசம்பர் மாதம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்கினோம். அமைச்சுக்கு இதுவரை 250 மில்லியன் ரூபா நிதி ஒதுக்க்பபட்டுள்ளது. தேவைப்படின் மேலும் நிதியை பெற முடியும். தற்போது கிடைத்துள்ள நிதியை ஒவ்வொரு மாவட்டத்துக்குமாக பிரித்து செலவிடவுள்ளோம்.
மேலும் இங்கே தொடர்க...

அவசரகாலச் சட்ட பிரேரணை மீது விவாதமின்றி இன்று வாக்கெடுப்பு

அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பதற்கான பிரேரணை, விவாதமின்றி இன்று வெள்ளிக்கிழமை வாக்கெடுப்புக்கு விடப்படவிருக்கின்றது. சபாநாயகர் தலைமையில் நேற்று மாலை நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்திலேயே இம் முடிவு எட்டப்பட்டது.

பாராளுமன்றத்தில் இன்று முதியோர் உரிமைகளை பாதுகாத்தல் (திருத்த), மத்தியஸ்த சபைகள் (திருத்த) ஆகிய சட்டமூலங்கள் தொடர்பிலான விவாதம் நடத்தப்படும்.

பாராளுமன்றம் இம் மாதத்தில் இன்று மட்டுமே கூடவிருக்கின்றது இந்நிலையில், தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டு அமெரிக்க சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தலில் கடந்த 18 ஆம் திகதி கையொப்பமிட்டுள்ளார்.

அந்த வர்த்தமானி அறிவித்தல் 10 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்பதனால் அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பதற்கான பிரேரணை மீது இன்று வாக்கெடுப்பை நடத்தி, பிறிதொரு தினத்தில் விவாதத்தை நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

ஐ. நா. பிரதி செயலர் வன்னி, கிழக்கு விஜயம்

மூன்று நாள் விஜயமாக கொழும்பு வந்திருந்த ஐக்கிய நாடுகள் சபையின் மனிதநேய விவகாரங்களுக்கான பிரதிச் செயலாளர் நாயகமும் அவசர நிவாரண உதவிகளின் பிரதி இணைப்பதிகாரியுமாகிய கத்தரின் பிரசுங் நேற்று வியாழன் காலை வவுனியா மற்றும் மட்டக்களப்புக்கு விஜயம் செய்தார்.

வவுனியா விமான நிலையத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் பாதுகாப்பு படை உயர் அதிகாரிகளை சந்தித்து நிலைமைகள் குறித்து அவர் கேட்டறிந்தார்.

அநேநேரத்தில், ஐ. நா. சபையின் அதிகாரிகள் மட்டத்திலான நான்கு பேர்கொண்ட குழுவினர் வவுனியா பெரியதம்பனை கிராமத்திற்கு விஜயம் மேற்கொண்டனரெனவும் அரச அதிபர் திருமதி பீ. எம். எஸ். சார்ள்ஸ் தெரிவித்தார்.

இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியேறியுள்ள முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தில் சில பகுதிகளுக்கும் வெள்ளப் பாதிப்பு பிரதேசங்களுக்கும் அவர், விஜயம் செய்தார்.

குறிப்பாக வவுனியா மனிக்பாம் பகுதியில் மீளக்குடியமர்த்தப்படவுள்ள மக்களின் விபரம் பற்றி கேட்டறிந்து கொண்டதுடன் வவுனியா மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டுள்ள பகுதிகள் குறித்தும் கேட்டறிந்துகொண்டார்.

மனிக்பாம் முகாமில் தங்கியிருக்கும் மக்கள் எந்தெந்த பகுதிகளில் குடியமர்த்தப்பட்டுள்ளனர் குறித்தும் வவுனியா அரச அதிபர் கத்தரினுக்கு விளக்கமளித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

பசும்பால் கொள்வனவு விலை ரூ. 12 ஆல் அதிகரிப்பு






பசும்பாலைக் கொள்வனவு செய்யும் விலை லீற்றருக்கு ரூபா 12.00 படி வெகு விரைவில் அதிகரிக்கப்படும் என்று கால்நடை வள மற்றும் கிராமிய அபிவிருத்தி பிரதியமைச்சர் எச். ஆர். மித்ரபால நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

வரவு-செலவுத் திட்டத்தில் அறிவித்தபடி பசும்பாலை லீற்றருக்கு ஐம்பது ரூபா (50) படி கொள் வனவு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

அமைச்சரவையின் அங்கீகாரத்திற்கு ஏற்ப பசும்பாலை லீற்றருக்கு ஐம்பது ரூபாய்ப் படி கொள்வனவு செய்வதற்கான சுற்றறிக்கை அடுத்துவரும் சில தினங்களுக் குள் வெளியிடப்படுவதுடன், அவை பசும்பாலைக் கொள்வனவு செய்யும் நிலையங்க ளுக்கும் அனுப்பி வைக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஐ.தே.க. பாராளுமன்ற உறுப் பினர் அனோமா கமகே கேட்டிருந்த வாய்மூல விடைக்கான வினாவுக்கு பதிலளிக்கும் வகையிலேயே பிரதிய மைச்சர் மேற்கண்டவாறு பதிலளித் தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற் றுகையில்;

கிழக்கு மாகாணத்தில் பாற் பண்ணை விவசாயிகள் 49 ஆயிரத்து 415 பேர் உள்ளனர். இவர்களில் 24 ஆயிரத்து 60 பேர் மட்டக்களப்பு மாவட்டத்திலும் 18 ஆயிரத்து 210 பேர் அம்பாறை மாவட்டத்திலும், 7 ஆயிரத்து 145 பேர் திருமலை மாவட்டத்திலும் வாழுகின்றனர்.

மாதா மாதம் கிழக்கு மாகாண த்தில் மாத்திரம் 30 இலட்சத்து 50 ஆயிரம் லீற்றர் பசும்பால் உற்பத்தி செய்யப்படுகின்றது.

இவற்றில் மட்டு மாவட்டத்தில் 18 இலட்சம் லீற்றர்களும், அம் பாறை மாவட்டத்தில் 15 இலட்சம் லீற்றர்களும் கிடைக்கப்பெறுகின் றன.

இந்த வகையில் கிழக்கு மாகா ணத்தில் உற்பத்தி செய்யப்படும் பசும்பாலில் 82 இலட்சத்து 48 ஆயிரத்து 153 லீற்றர்களை அரசா ங்கம் வருடா வருடம் கொள்வனவு செய்து வருகின்றது.

தற்போது ஒரு லீற்றர் பசும்பால் 38.00 ரூபாபடி கொள்வனவு செய்யப்படுகின்றது. இதனை வரவு- செலவுத் திட்டத்தில் அறிவித்தபடி ஐம்பது ரூபாப்படி கொள்வனவு செய்யவிருக்கின்றோம். இதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கி யுள்ளது என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

யாழ். குடாவில் மக்கள் அச்சமின்றி வாழும் சூழல் ஏற்படுத்தப்படும் “யாழ். வன்முறைகளை கட்டுப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி கூடுதல் கரிசனை "






யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் வன்முறைச் சம்பவங்களை தடுக்க அரசாங்கம் சகல நடவடிக்கை களையும் எடுத்துள்ளது. அங்குள்ள மக்கள் அச்சமின்றி வாழும் சூழல் ஏற்படுத்தப்படும் என பிரதமர் டி.எம். ஜயரத்ன கூறினார்.

ஏனைய பகுதிகளுடன் ஒப்பிடுகையில் மிகக் குறைந்தளவு சம்பவங்களே அங்கு இடம்பெற்றுள்ளதாகக் கூறிய அவர், இவற்றை தடுப்பது குறித்து இராணுவத்தரப்பினருடன் ஜனாதிபதி ஆராய்ந்து வருவதாகவும் கூறினார்.

யாழ். குடாவில் இடம்பெறும் கொலை, கொள்ளை, ஆட்கடத்தல் சம்பவங்கள் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்.பி, எம். சுமந்திரன் இது தொடர்பான பிரேரணையை சபையில் முன்வைத்தார்.

பிரதமர் மேலும் கூறியதாவது, உலக நாடுகளில் நாளுக்கு நாள் பல்வேறு அசம்பாவிதங்கள் இடம்பெறுகின்றன. அந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் குறைந்தளவு சம்பவங்களே இடம்பெற்றுள்ளன. இலங்கையின் ஏனைய பகுதிகளுடன் ஒப்பிடுகையில் யாழ்ப்பாணத்தில் மிகக் குறைந்தளவு வன்முறைகளே நிகழ்ந்துள்ளன.

கடந்த வருடம் நவம்பர் 10 ஆம் திகதி முதல் இந்த வருடம் ஜனவரி மாதம் வரை 16 சம்பவங்களே யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளன. அதற்காக நாம் இதனை குறைத்து மதிப்பிடவில்லை.

கடந்த 30 வருட யுத்தத்தின் போது இடம்பெற்ற சம்பவங்களுடன் பார்க்கையில் யானையின் வாலில் உள்ள ஒரு முடியின் அளவு சம்பவங் களே இங்கு இடம்பெற்றுள்ளன. அந்த சிறு சம்பவங்களையும் முற்றாக ஒழிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. 3 ஆயிரம் இளைஞர் களுக்கு புனர்வாழ்வளிக்கப்பட்டு வருகிறது.

யாழ். குடாநாடு, கிழக்கு மாகாணங்கள் மட்டுமன்றி ஏனைய பகுதிகளிலும் வன்முறைகள் நிகழ்கின்றன. அவற்றை ஒழித்து பயமின்றி வாழக்கூடிய சூழலை ஏற்படுத்துவதே அரசின் நோக்கமாகும்.

உலக நாடுகளில் யுத்தம் முடிவடைந்த பின்னரும் அசம்பாவிதங்கள் தொடருகின்றன. இங்கு சிறியளவான சம்பவங்கள் நடந்தாலும் கூட அதற்கு இடமளிக்க முடியாது.

இது தொடர்பில் ஜனாதிபதி வாராந்தம் இராணுவ அதிகாரிகளைச் சந்தித்து ஆராய்ந்து வருகிறார். இதற்கு முடிவு கட்டுவது குறித்து தினமும் கவனம் செலுத்தப்படுகிறது.

யாழ். குடாவிலும் கிழக்கிலும் சிறந்த தமிழ் மக்கள் வாழ்கின்றனர். சிறு பகுதியினரே தவறு செய்கின்றனர். ஆனால் நாட்டு மக்களில் ஒருவருக்காவது பாதிப்பு ஏற்படுவதை அனுமதிக்க முடியாது.

சிங்கள, தமிழ், முஸ்லிம் என்ற பாகுபாடின்றி இலங்கையர் என்றே நாம் சிந்திக்க வேண்டும்.

இலங்கையிலுள்ள ஒவ்வொரு அங்குலமும் சகல மக்களுக்கும் உரிமையானதாகும். அனைத்து மக்களும் அச்சமின்றி வாழக்கூடிய சூழலை கட்டியெழுப்புவதற்கு சகல தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
மேலும் இங்கே தொடர்க...

கொழும்பு துறைமுகத்துக்கு 31 கம்பனிகளின் சேவைகள்




30 வருட கால யுத்தம் காரணமாக கொழும்பு துறைமுகத்துக்கு விதிக்கப்பட்டிருந்த கூடுதல் காப்புறுதி வரி மற்றும் லொயிட்ஸ் காப்புறுதி நிறுவனம் விதித்திருந்த தடைகள் ஆகியவை நீக்கப்பட்டதை அடுத்து உலகின் சிறந்த 31 கப்பல் கம்பனிகள் கொழும்பு துறைமுகத்துக்கான சேவை களை ஆரம்பித்துள்ளன.

மஹிந்த சிந்தனை எதிர்கால நோக்கின் காரணமாகவே இவ்வாறு நடந்துள்ளது என்று துறைமுக மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் ரோஹித அபேகுண வர்தன தெரிவித்துள்ளார்.

இதில் 10 சேவைகள் 2010 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டன. இந்த கப்பல் சேவைகளை எதிர்காலத்தில் அம்பாந்தோட்டை துறைமுகத்துக் கும் பரிமாறிக்கொள்வதற்கான நட வடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
மேலும் இங்கே தொடர்க...

வீடுகளை நிர்மாணிக்க கட்டிட ஆராய்ச்சி நிலையத்தின் அனுமதி வேண்டும்’






நாட்டில் எப்பாகத்திலும் வீடுகளை நிர்மாணிப்பதற்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையத்தின் அனுமதியைப் பெறவேண்டும். இத்திட்டம் அடுத்த வாரத்தில் அமைச்சரவையின் அனுமதி பெறப்பட்டு உள்ளூராட்சி சபைகள் ஊடாக அமுல்படுத்தப்படுமென அனர்த்த நிவாரண அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

நாரஹேன்பிட்டியில் உள்ள தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதில் அவர் மேலும் கூறியதாவது,

நாடு முழுவதிலும் வீடுகளை நிர்மாணிப்பதற்காக மாநகர சபைகள், பிரதேச சபைகளே அனுமதி வழங்கி வந்தன. ஆனால் அனர்த்தம் பற்றிய சான்றிதழ் வழங்கப்படவில்லை. இனிவரும் காலங்களில் வீடுகளை நிர்மாணிப்போர் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையத்தின் அனுமதியைப் பெறுவது அவசியமாகும். இதற்கான சட்டமூலத்தை அனர்த்த நிவாரண அமைச்சு தயாரித்து அமுல்படுத்த உள்ளது.

ஏற்கனவே இயற்கை அனர்த்தங்கள் இடம்பெறும் பிரதேசங்களில் நிர்மாணிக்கப்பட்டிருந்த வீடுகளை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையம் அடையாளம் கண்டுள்ளது. இவர்களுக்கான மாற்று காணிகள் இனம் காணப்பட்டு அவற்றில் வீடுகள் நிர்மாணித்துக்கொடுக்கப்படும்.

கடந்த வாரம் பெய்த மழையினால் கிழக்கு மாகாணம், பொலன்னருவை, அநுராதபுரம் போன்ற பிரதேசங்களில் 24, 966 வீடுகள் முற்றாகவும், பகுதியாகவும் அழிந்துள்ளன.

இவ்வீடுகளை மீள நிர்மாணித்துக் கொடுப்பதற்கு அனர்த்த நிவாரண அமைச்சு சம்பந்தப்பட்ட அமைச்சுக்களுக்குரிய நிதியை வழங்க உள்ளது. அத்துடன் பொருளாதார அமைச்சு, மகாவலி அமைச்சு, சில அரச சார்பற்ற நிறுவனங்கள் நிதி உதவி அளிக்க இணக்கம் தெரிவித்துள்ளன என அமைச்சர் தெரிவித்தார். கடந்த வாரம் பெய்த மழையினால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் மட்டக்களப்பு மாவட்டமும், அம்பாறை மாவட்டமுமே வெகுவாகப் பாதிக்கப்பட்டன. அண்மைய அனர்த்த அறிக்கையின்படி மட்டக்களப்பில் 14 4081 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 22 பேர் இறந்துள்ளனர். ஒருவர் காணாமல் போயுள்ளார்.

4060 வீடுகள் முற்றாகவும், 8989 வீடுகள் பகுதி அளவிலும் சேதமடைந்துள்ளன. 10 அகதி முகாம்களில் 515 குடும்பங்கள் தங்கியுள்ளனர்.

அதேபோன்று அம்பாறையில் 120732 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 6 அகதிமுகாம்களில் 486 குடும்பங்கள் தங்கியுள்ளனர். 1148 வீடுகள் முற்றாகவும் 4674 வீடுகள் பகுதி அளவிலும் சேதமுற்றுள்ளன. இதேபோன்று திருகோணமலை, பொலன்னருவை, அநுராதபுரம் போன்ற மாவட்டங்களும் பாதிக்கப்பட்ட பிரதேசங்களாகும்.
மேலும் இங்கே தொடர்க...

உல்லாச பிரயாணிகளின் வருகை அதிகரிப்பு ஹோட்டல் அறைகளை 35,000 வரை அதிகரிக்க இலக்கு



உல்லாச பிரயாணிகளின் வருகை அதிகரிப்பதால் ஹோட்டல் அறை களின் எண்ணிக்கையை 35,000 வரை அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

தற்போது ஹோட்டல்களில் சுமார் 14,000 அறைகள் வரையிலேயே உள் ளன.

2016 ஆம் ஆண்டளவில் 2.5 மில் லியன் உல்லாசப் பிரயாணிகளின் வருகைக்கும் இலக்கு கொள்ளப் பட்டுள்ளது.

சர்வதேச தரங்களுக்கு ஏற்ப ஹோட் டல் சேவை வசதிகள் தரம் உயர்த் தப்பட வேண்டுமென உல்லாச பிர யாணத் தலைவர் கலாநிதி நாலக்கா கொடஹேவா தெரிவித்துள்ளார்.

இவ்வருடத்தில் 07 இலட்சம் உல்லாச பிரயாணிகள் வரை இலங் கைக்கு விஜயம் செய்வதென எதிர் பார்க்கப்பட்டுள்ளது.

2004 ஆம் ஆண்டில் 4,80,000 உல் லாசப் பிரயாணிகள் இலங்கை வந்தனர். கடந்த ஆண்டில் வந்த உல் லாச பிரயாணிகளின் எண்ணிக்கை 6,54,476 பேர்களாகும்.
மேலும் இங்கே தொடர்க...

கிழக்கில் விவசாயத்துறைக்கு பத்தாண்டு காலம் பின்னடைவு நிவாரணங்களை மேலும் 6 மாதம் நீடிப்பது பற்றி ஆராய்வு








கிழக்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உலக உணவுத் திட்டத்தின் நிவாரணங்களை மேலும் ஆறு மாத காலத்திற்கு நீடிப்பதற்கு அரசாங்கம் பரிசீலித்து வருவதாக பொருளாதார பிரதியமைச்சர் முத்து சிவலிங்கம் தினகரனுக்குத் தெரிவித்தார்.

அண்மையில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தின் காரணமாக கிழக்கில் மக்களின் வாழ்வாதாரமான விவசாயத்துறையில் பத்தாண்டு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட பிரதியமைச்சர் சிவலிங்கம், இந்த நிலைமையின் கீழ், பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உலக உணவுத் திட்டத்தின் கீழான உலருணவு நிவாரணத்தை ஆறு மாத காலத்திற்கு வழங்குவது பற்றி ஆராய்வதாகக் கூறினார்.

நிவாரணம் வழங்குவதற்காக ஏற்கனவே பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் மூலம் 55 மில்லியன் ஒதுக்கப்பட்டதாகக் குறிப்பிட்ட பிரதியமைச்சர் சிவலிங்கம், இதன் மூலமாக மேற்கொள்ளப்படும் நிவாரண உதவிகள் கிரமமாக மக்களைச் சென்றடைகின்றனவா என்பதை அறிய கிழக்குக்கு நேரடியாகச் சென்று அறிந்துகொண்டதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை, பகுதி அளவு வீடுகள் சேதமடைந்துள்ள சுமார் 3500 குடும்பங்களுக்கு உடனடியாக உதவி அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு ள்ளது. இதற்கென முதற்கட்டமாக 50 மில்லியன் ரூபாவை வழங்க பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ முடிவு செய்துள்ளதாகவும் பிரதியமைச்சர் குறிப்பிட்டார்.

விவசாயத்தை ஜீவனோபாயமாகக் கொண்ட கிழக்கு மக்களுக்கு இந்தப் பெருமழை வெள்ளம் பாரிய சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அவர்களுக்கு நட்டஈடு வழங்குவதற்கான ஏற்பாடுகளை மாவட்டச் செயலாளர்கள் ஊடாக ஆராய்ந்து வருவதாகவும் பிரதியமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...