8 செப்டம்பர், 2010

ராணுவ ஆட்சிக்கு வழி : பொன்சேகா ஆவேசம்







கொழும்பு : இலங்கை பார்லிமென்டில், அதிபர் ராஜபக்ஷேவை மூன்றாவது முறையாக தேர்ந்தெடுக்கும் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்படும் பட்சத்தில் அதுதான், ஜனநாயகம் என்கிற சவப்பெட்டி மீது அடிக்கப்படும் கடைசி ஆணி என, இலங்கை ராணுவத்தின் முன்னாள் தலைமை தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். மேலும், இது போன்ற சட்டத் திருத்தங்கள் ராணுவ ஆட்சிக்கு வழிவகுக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.இலங்கையில் விடுதலைப்புலிகளை ஒழித்ததில் முக்கிய பங்கு வகித்தவர் முன்னாள் ராணுவ தலைமை தளபதி சரத் பொன்சேகா. இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கிய ராஜபக்ஷே அரசு, அவரை கைது செய்து சிறையில் அடைத்தது.இந்நிலையில், இரண்டாவது முறையாக அதிபராக பதவியேற்றுள்ள ராஜபக்ஷேவை, மூன்றாவது முறையாக தேர்ந்தெடுக்கும் அரசியலமைப்பு சட்டத் திருத்த மசோதா, இலங்கை பார்லிமென்டில் தாக்கலாக உள்ளது.இந்த மசோதாவிற்கு சரத் பொன்சேகா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தற்போது இலங்கை எம்.பி.,யாக உள்ள அவர் மேலும் கூறியதாவது:இந்த மசோதா தாக்கல் செய்யப்படும் பட்சத்தில் அதுதான், ஜனநாயகத்தின் இருண்ட நாள். இந்த சட்டத் திருத்தம், ஜனநாயகம் என்கிற சவப்பெட்டி மீது அடிக்கப்படும் கடைசி ஆணி. இந்த திருத்த மசோதா விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் நிலைப்பாடு என்ன என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. தன்னலம் கருதி சில எம்.பி.,க்கள் இந்த மசோதாவை ஆதரிக்கின்றனர். இவ்வாறு சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

18 ஆவது அரசியல் திருத்திற்கு ஸ்ரீரங்கா ஆதரவாக வாக்களிப்பு

ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீரங்கா 18ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளார்.

இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற 18ஆவது அரசியல் திருத்தம் தொடர்பிலான வாக்கெடுப்பின் போது நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீரங்கா சீர்திருத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

18 ஆவது அரசியல் சீர்திருத்தத்துக்கு ஆதரவு தெரிவித்து அக்குறணையில் பேரணி

அக்குறணை பிரதேச சபை அங்கத்தவர்கள் 18ஆவது அரசியலமைப்பு திருத்தத்துக்கு ஆதரவளித்து அக்குறணை நகரில் இன்று பிற்பகல் பேரணியொன்றை நடாத்தினர்.

அக்குறணை பிரதேச சபையின் தலைவர் (ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்) ஏ.எம்.எம். சிம்சான் தலைமையில் இடம்பெற்ற இக்கவனயீர்ப்பு பேரணியில் பிரதேச சபையின் உறுப்பினர்கள் உற்பட பிரதேசவாசிகளும் கலந்து கொண்டனர்.
மேலும் இங்கே தொடர்க...

ஜனாதிபதியின் நடவடிக்கை நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தாது: சோமவன்ச

ஜனாதிபதியின் நடவடிக்கை நல்லிணக்கத்தையோ தேசிய ஒற்றுமையையோ இந்த நாட்டில் ஏற்படுத்துவதாக தெரிய வில்லையென மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்தார்.

மட்டக்களப்பில் பல் சமய ஒன்றிய பிரதிநிதிகளை இன்று சந்தித்தபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இச்சந்திப்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த சோமவன்ச அமரசிங்க 18ஆவது அரசியல் யாப்பு மாற்றம் அதற்கு முன்னரான சகல திருத்தங்களையும் நீக்கிவிட்டு ஒரு தனி மனிதனுக்கு சகல அதிகாரங்களையும் குவிக்கும் ஒரு நடவடிக்கையாகும்.

இந்த நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்கும் இது பேராபத்தை ஏற்படுத்தும் நடவடிக்கையாகும்.

மக்கள் விடுதலை முன்னணி நிறைவேற்று அதிகாரத்திலுள்ள ஜனாதிபதி முறையை மாற்றி அதிகார பகிர்வு இல்லாமல் அதிகாரப் பரவலாக்கள் என்பதையே வலியுறுத்தி நிற்கின்றது.

இதனாலேயே 18ஆவது அரசியல் யாப்பு மாற்றத்துக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணி நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது.

இலங்கையிலுள்ள சகல மக்களையும் சந்தித்து அவர்களை ஜக்கியப்படுத்தி இந்த அரசியல் யாப்பு பற்றி மக்கள் விடுதலை முன்னணி தெளிவுப் படுத்தி வருகின்றது. அதில் ஒரு கட்டமாகவே உங்களையும் சந்திக்கின்றேன் என்றார்.

இதன் போது தமிழ் மக்களுக்கெதிராக மக்கள் விடுதலை முன்னணி கடந்த காலங்களில் எதிராக நடந்து கொண்டதையும் தற்போது வடக்கு கிழக்கில் திட்ட மிட்ட சிங்கள குடியேற்றம் தொடர்பாகவும் மட்டக்களப்பு பல் சமய ஒன்றிய பிரதி நிதிகள் சோமவன்ச அமரசிங்கவிடம் சுட்டிக்காட்டினர்.
மேலும் இங்கே தொடர்க...

மேர்வின் சில்வாவுக்கு மீண்டும் அமைச்சர் பதவி

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வாவிற்கு மீளவும் பிரதி அமைச்சு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

இன்று இடம்பெற்ற 18 ஆவது அரசியல் சீர்திருத்தம் வாக்கெடுப்புக்கு பிறகு கட்சி செயற்குழு கூட்டத்தினால் இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவரை மரத்தில் கட்டியமைக்காக மேர்வின் சில்வாவின் பிரதி அமைச்சுப் பதவி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்புரிமை மற்றும் தொகுதி அமைப்பாளர் பதவி என்பன பறிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

நாடாளுமன்ற முன்றலில் இன்னமும் நிற்கும் ஆர்ப்பாட்டக்காரர்கள் (பட இணைப்பு)

உத்தேச 18 ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தத்திற்கு ஆதரவளித்தும், எதிர்ப்பு தெரிவித்தும் கொழும்பில் ஆர்ப்பாட்டங்கள் இன்று காலை முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதனிடையே நாடாளுமன்ற முன்றலில் இன்னமும் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருப்பதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.






மேலும் இங்கே தொடர்க...

பெண்ணைக் கடுமையாகத் தாக்கிய பிரிட்டிஷ் பொலிஸாருக்குச் சிறை (காணொளி இணைப்பு

பெண் ஒருவரை மோசமான முறையில் தாக்கிய பொலிஸ் உத்தியோகத்தருக்குப் பிரித்தானிய நீதி மன்றமொன்று 6 மாத சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.

மேற்படி பொலிஸ் உத்தியோகத்தர் 57 வயதான பமீலா சொமர்விலி என்ற பெண்ணை மிகவும் மோசமாக தரையில் இழுத்துத் தள்ளி, அடித்துக் காயப்படுத்தியமை பாதுகாப்பு கெமராவில் தற்செயலாகப் படம் பிடிக்கப்பட்டது.

அவர் இரத்தம் சிந்தும் காட்சி உட்பட அனைத்தும் அதில் உள்ளடக்கப்பட்டிருந்தது.

மேற்படி பெண், விசாரணைகளுக்கு ஒத்துழைக்க மறுத்தமையையடுத்து பொலிசாரால் கைதுசெய்யப்பட்டார்.

அதனைத்தொடர்ந்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர் இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார்.

மேற்படி வழக்கினை விசாரித்த ஒக்ஸ்போர்ட் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அவருக்கு மேற்படி தண்டனையை வழங்கியது.
மேலும் இங்கே தொடர்க...

அரசியலமைப்பு திருத்தத்துக்கு மேல் மாகாண சபை ஆதரவு இதற்கான பிரேரணை நிறைவேற்றம்


அரசியலமைப்புத் திருத்தத்துக்கு மேல் மாகாண சபை ஆதரவு தெரிவித்துள்ளது. இதற்கான பிரேரணை நேற்று நிறைவேற்றப்பட்டது.

மேல் மாகாண சபையின் மாதாந்த கூட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை (07) இடம் பெற்றது. இம் மாதாந்த கூட்டத்தில் இது தொடர்பான பிரேரணை நிறைவேற்றப்பட்டது. மேல் மாகாண சபையின் கூட்டம் தலைவர் சுனில் விஜேரத்ன தலைமையில் ஸ்ரீ ஜயவர்தனபுரவிலுள்ள மாகாண சபையின் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.

கம்பஹா மாவட்ட உறுப்பினர் முக்கியத்துவமிக்க பிரேரணையாக அரசியலமைப்புத் திருத்தத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் பிரேரணையை சபையில் சமர்ப்பித்தார். எதிர்க்கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியும், ஜே. வி. பியும் மேற்படி பிரேரணை தொடர்பான விடயம் நீதிமன்றில் இருப்பதால் விவாதத்துக்கு எடுத்துக் கொள்வதனை எதிர்த்தனர்.

இவற்றை செவிமடுத்த மாகாண சபையின் தலைவர் சபையின் நட வடிக்கைகளை இடைநிறுத்தி விவாதத் துக்கு அனுமதி வழங்கினார். இதனை யடுத்து எதிர்க்கட்சியினர் வெளிநடப்புச் செய்தனர்.

ஆளும் தரப்பினர் மாத்திரம் விவாதத்தில் கலந்து கொண்டனர். கொழும்பு மாவட்ட ஜனநாயக ஐக்கிய முன்னணி உறுப்பினர் எம். பாயிஸ் விவாதத்தின் போது சபையில் அமர்ந்திருந்தார்.
மேலும் இங்கே தொடர்க...

ஜே.ஆரும் சந்திரிக்காவும் இரண்டாவது பதவிக் காலத்தில் தன்னிச்சையாக செயற்பட்டவர்கள்






முன்னாள் ஜனாதிபதிகளான ஜே. ஆர். ஜெயவர்த்தனவும், சந்திரிகா குமாரதுங்கவும் தமது இரண்டாவது பதவிக் காலத்தில் ஜனநாயகத்திற்கு சவாலான வகையில் தன்னிச்சையாக செயற்பட்டனர். மூன்றாவது தடவையாக பதவிக் காலத்தை நீடிக்கவும் முயற்சி செய்து தோல்வி அடைந்ததாக அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

மகாவலி நிலையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது :-

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை உருவாக்கப்பட்டு 32 வருடங்கள் நிறைவடைகின்றன. இதில் ஜே. ஆர். ஜெயவர்த்தனவும் சந்திரிகா குமாரதுங்கவும் மட்டுமே 2 தடவைகளும் முழுமையாக பதவியில் இருந்தனர். முதலாவது பதவிக் காலத் துடன் ஒப்பிடுகையில் தமது இரண்டாவது பதவிக் காலத்தில் அவர்கள் ஜனநாயகத்திற்கு சவாலான முடிவுகளை எடுத்தனர்.

தனது வயது, அரசியல் நோக்கம் கட்சி என்பவற்றுக்கு ஏற்றவாறே ஜே. ஆர். 2 தடவைகளாக ஜனாதிபதி பதவிக் காலத்தை மட்டுப்படுத்தினார். இரண்டாவது பதவிக் காலம் முடிவடைகையில் ஜே. ஆருக்கு 84 வயதாக இருந்தது. ஆனாலும் அவர் 3 ஆவது தடவையாகவும் பதவிக் காலத்தை நீடிக்க முயன்றார்.

இத்தகைய பிரச்சினைகளுக்கு தீர்வாகவே 2 தடவை என மட்டுப்படுத்தப்பட்டுள்ள பதவிக் கால எல்லையை நீக்கியுள்ளோம்.

மஹிந்த ராஜபக்ஷவின் குடும்ப அதிகாரத்தை தக்க வைக்கவோ அவரின் மகனுக்கு அவகாசம் வழங்கவோ இந்தத் திருத்தம் செய்யப்படவில்லை. இதனூடாக சர்வாதிகார ஆட்சியே உருவாகும் என்ற எதிர்க் கட்சிகளின் குற்றச்சாட்டை நிராகரிக்கிறோம். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை உருவாக்க கை உயர்த்திய ரணில் தலைமையிலான ஐ. தே. கவுக்கு யாப்புத் திருத்தம் குறித்துப் பேச அருகதை கிடையாது என்றார்.

பிரதி அமைச்சர் சரத் அமுனுகம கூறியதாவது :-

உலகில் சிறந்த எதிர்காலமுள்ள நாடாக இலங்கை காணப்படுகிறது. ஆசியாவில் சிறந்த பாதுகாப்புள்ள நாடாக இலங்கை இருப்பது அபிவிருத்திக்கு முக்கிய அடித்தளமாகும். 7 வீதமாக உள்ள பொருளாதார அபிவிருத்தி 8 வீதமாக உயரும் போது இவ்வாறு முன்னேற்றம் ஏற்படும். நாட்டின் அபிவிருத்திக்கு இந்த யாப்புத் திருத்தம் முக்கியமாகும். மஹிந்த ராஜபக்ஷவின் பதவிக் காலத்தை நீடிப்பதற்காக இந்தத் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவில்லை. அவரை மூன்றாவது தடவையும் தெரிவு செய்வதா என்பதை மக்களே முடிவு செய்வர் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

நல்லூர்க் கந்தன் தேர்த் திருவிழாவில் நேற்று வரலாறு காணாத ஜன சமுத்திரம்






நல்லூர்க் கந்தன் ஆலய தேர்த்திருவிழா நேற்று 7ம் திகதி நடைபெற்ற போது பெருமளவிலான பக்தர்கள் கலந்துகொண்டனர். தேர்த்திருவிழா நேற்று அதிகாலை ஆரம்பமானது.

தேர்த்திருவிழாவினைக் காண யாழ். குடாநாட்டில் இருந்தும் தென் இலங்கையின் பல பாகங்களிலிருந்தும் பெருந்தொகையான மக்கள் வருகை தந்திருந்தனர். இலங்கையில் இருந்து புலம் பெயர்ந்து வெளிநாடுகளில் வாழ்வோரும் பெருமளவில் வருகை தந்திருந்தனர்.

நேற்று அதிகாலை தொடக்கம் ஆலயத்தை நோக்கி பெருந்தொகையான பக்தர்கள் கூடத்

தொடங்கியதால் ஆலயப் பிரதேசம் சமுத்திர வெள்ளமாகக் காட்சியளித்தது. பொலிஸார் ஆலய வளாகத்தில் காவல் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

காவல் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்த அனைத்து பொலிசாரும் தங்களினது பாதத்தில் இருந்த பாதணிகளை அகற்றிய நிலையில் காணப்பட்டனர்.

ஆலயத்திற்குள்ளேயும் ஆண் பொலி ஸாரும், பெண் பொலிஸாரும் சாதாரண பொதுமக்களைப் போல உடையணிந்து காவல்கடமைகளில் ஈடுபட்டுக்கொண்டி ருந்தனர்.

ஆலய உள்வீதிகளில் திருடர்களைக் கண்டுபிடிப்பதற்கென வீடியோக் கமெராக் கள் பொருத்தப்பட்டிருந்தன. இவ்வருடத்தில் அதிகளவில் திருட்டுச் சம்பவங்கள் இடம்பெறவில்லை. ஒருசிலரின் நகைகளே திருடப்பட்டுள்ளன.

ஆலயத்திற்கு வருகை தந்த பெரும்பாலான பக்தர்கள் நகைகளை கூடுதலாக அணிந்து வரவில்லை. பொலிஸாரும், யாழ் மாநகர மேயரும் கேட்டுக்கொண்டதற்கு அமைய மக்கள் இம்முறை அவதானமாக இருந்தனர்.

தேர்த்திருவிழா நேற்றுக் காலை ஆரம்பமானதும் கொடித்தம்பபூசை, வசந்த மண்டப பூசை என்பன நடைபெற்றன. நல்லை கந்தன், வள்ளி தெய்வானை சமேதராக காலை 7 மணிக்கு தேருலாவுக்காக ஆரோகணித்து வந்தார். காலை 7.15 மணிக்கு முருகப் பெருமானின் தேர்பவனி ஆரம்பமானது.

பெருந்திரளான மக்களின் அரோகரா கோஷம் ஒலிக்க பஜனைக் கோஷங்களின் பண்ணிசை ஒலிக்க முருகப் பெருமான் வீதியுலா வந்தார். தேரினைத் தொடர்ந்து பெருந்தொகையான ஆண்களும் பெண்களும் அங்கப் பிரதிஷ்டை செய்தும் அடியழித்தும் முருகப் பெருமானைத் தரிசித்தனர்.
மேலும் இங்கே தொடர்க...

மட்டு. மாவட்ட மீனவருக்கு தோணிகள் அன்பளிப்பு

கிழக்கு மாகாண சபையின் விவசாய மீன்பிடி அமைச்சினால் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மீனவர்களுக்கு மீன்பிடி தோணிகள் மற்றும் மீன்பிடி உபகரணங்கள் என்பன நேற்று மாலை வழங்கப்பட்டன.

மட். களுதாவளை மகா வித்தியாலத்தில் மீன்பிடி தோணிகள் வழங்கும் வைபவம் நடைபெற்றது.

இதில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் கிழக்கு மாகாண விவசாய மீன்பிடி அமைச்சர் துரையப்பா நவரத்தின ராஜா சபை உறுப்பினர் பிரசாந்தன் கிழக்கு மாகாண அமைச்சின் செயலாளர் கே.பத்மநாதன் உட்பட அதிகாரிகள், மீனவர்கள் இதில் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 90 மீனவர்களுக்கு 45 தோணிகளும் 600 வலைகளும் இதன்போது வழங்கப்பட்டன.
மேலும் இங்கே தொடர்க...
கண்ணீர் அஞ்சலி
எமது இதயத்தில் பூ விலங்கு இட்ட முரளிக்கு கண்ணீர் அஞ்சலி




மேலும் இங்கே தொடர்க...

சீமானுடன் வைகோ, நெடுமாறன் சிறையில் சந்திப்பு


வேலூர் மத்திய சிறையில் தண்டனையை அனுபவித்து வரும் சீமானை நேற்று மாலை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தமிழர் தேசிய இயக்க நிறுவனர் பழ.நெடுமாறன் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.

இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதைக் கண்டித்து சீமான் ஒரு கூட்டத்தில் பேசினார்.

இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாகக் கூறி, தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அவர், வேலூர் மத்திய சிறையில் தண்டனையை அனுபவித்து வருகிறார்.

அவரை நேற்று மாலை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தமிழர் தேசிய இயக்க நிறுவனர் பழ.நெடுமாறன் ஆகியோர் சந்தித்துப் பேசிவிட்டு வந்தனர்.



"இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு குரல் கொடுத்ததற்காக டைரக்டர் சீமான் மீது அடக்குமுறை ஏவப்பட்டு தேசிய பாதுகாப்பு சட்டத்தில் அவரை கைது செய்துள்ளனர். டைரக்டர் சீமான் பேசியதில் எந்தத் தவறும் இல்லை" என்று வைகோ கூறினார்.

தமிழர் தேசிய இயக்க நிறுவனர் பழ.நெடுமாறன்,

"டைரக்டர் சீமானை விடுதலை செய்யவேண்டும்" என்று கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

அதிபர் பதவிக்கு 2 முறைதான் போட்டி என்ற வரம்பை நீக்கும் மசோதா: இலங்கை நாடாளுமன்றத்தில் இன்று நிறைவேறுகிறது






அதிபர் பதவியை ஒருவர் இரண்டு முறைதான் வகிக்க முடியும் என்று உள்ள வரம்பை நீக்க வகை செய்யும் மசோதா புதன்கிழமை இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேறும் எனத் தெரிகிறது. இந்நிலையில் இது தொடர்பான சட்டத் திருத்தத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.

ஆனால் 18-வது திருத்தத்தின்கீழ் உருவாகும் அரசமைப்புச் சட்டம் அதிபரின் அதிகாரத்தை வெகுவாகக் குறைத்துவிடும் என்று இலங்கை அதிபர் மஹிந்த ராஜபட்ச தெரிவித்தார். இந்த மசோதா மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு இருந்தால் இந்த மசோதா நிறைவேறிவிடும். சில எதிர்க்கட்சி எம்.பி.க்களின் ஆதரவுடன் இந்த மசோதாவை அரசு நிறைவேற்றத் திட்டமிட்டுள்ளது.

இதனிடையே இந்த மசோதாவுக்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இந்த மசோதாவைக் கொண்டு வர பொது மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தத் தேவையில்லை என்றும், நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு இருந்தால் நிறைவேற்றலாம் என்றும் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் இந்த மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இது தொடர்பான விவாதம் புதன்கிழமை நாடாளுமன்றத்தில் நடைபெற்று நிறைவேற்றப்பட உள்ளது.

இது தொடர்பாக தனது வீட்டில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை பேசிய அதிபர் ராஜபட்ச மேலும் கூறியது:

இந்த மசோதாவை நிறைவேற்றுவதில் அவசரம் காட்டுவதாகக் கூறப்படுவது தவறானது.

18-வது திருத்தத்தின்கீழ் உருவாகும் அரசமைப்புச் சட்ட கவுன்சில், நாடாளுமன்றத்தின் மேலதிகாரத்தை உறுதி செய்வதாக அமையும். இந்தக் கவுன்சிலில் இடம்பெறும் உறுப்பினர்கள் அனைவரும் எம்.பி.க்கள்தான் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இதில் அதிபர் தரப்பு பிரதிநிதிகள் இடம்பெறமாட்டார்கள். 17-வது திருத்தத்தின் கீழான அரசமைப்புக் கவுன்சில் குழுவில் அதிபரின் பிரதிநிதிகள் இடம்பெற்றிருந்தனர். புதிதாக ஏற்படுத்தப்படும் குழுவில் 5 பேர் இடம்பெற்றிருப்பர். பிரதமர், நாடாளுமன்றத் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் 2 எம்.பி.க்கள் இக்கவுன்சிலில் இருப்பர்.

எதிர்க்கட்சி உறுப்பினர்களில் எவரேனும் ஒருவர் இந்தக் குழுவுக்கு தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் இந்தக் குழுவின் செயல்பாடு முழுக்க முழுக்க எதிர்க்கட்சி வசம் சென்றுவிடும் என்று அதிபர் தெரிவித்ததாக வெளியான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மசோதா குறித்து ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. குறிப்பாக பிரதான எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கருத்துகளும் இதில் சேர்க்கப்பட்டதாக ராஜபட்ச தெரிவித்தார்.

17-வது அரசியல் சாசன திருத்தத்தின் கீழான கவுன்சில் உறுப்பினர்கள் நிர்வாக ரீதியில் முட்டுக்கட்டை போடுவதாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கூறியதாக ராஜபட்ச தெரிவித்தார்.

அடுத்து அதிபராக வரவிருப்பவரைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரம் இலங்கை சுதந்திர கட்சிக்கு உண்டு. இருப்பினும் நாட்டின் அதிபராக யார் வர வேண்டும் என்பதைத் தீர்மானிப்பவர்கள் மக்களே. இப்போது கொண்டு வரப்படும் மசோதா மக்களின் இறையாண்மையை மேம்படுத்தும் என்று அவர் மேலும் கூறினார்.

அடுத்த அதிபராக மூத்த மகன் நமல் ராஜபட்ச வருவாரா? என்று கேட்டதற்கு, அதிபர் பதவிக்கு வருவதற்கு குறுக்கு வழி ஏதும் கிடையாது. 40 ஆண்டுகளுக்குப் பிறகுதான் தான் அதிபர் பதவியை அடைந்ததாக அவர் குறிப்பிட்டார். 23 வயதில் நாடாளுமன்றத்தில் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு நுழைந்ததாகக் குறிப்பிட்ட அவர், அதிபர் பதவி என்பது 50 மீட்டர் அல்லது 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் போன்றதல்ல. இது மாரத்தான் போன்ற நெடுந்தொலைவு ஓட்டம் என்றார். அரசியலுக்கு வர விரும்பும் அனைவருக்கும் இதுதான் தனது ஆலோசனை என்று குறிப்பிட்ட அவர் இதில் குறுக்கு வழியில் முன்னேற நினைப்பவர்கள் தோல்வியைத்தான் அடைவர் என்று குறிப்பிட்டார்.

அதிபர் தேர்தலில் இரண்டு முறைக்கு மேல் போட்டியிட முடியாது என்றாலே இப்பதவிக்கு வரும் எவரும் இரண்டாவது முறை பதவிக் காலத்தில் மக்களிடமிருந்து அன்னியப்பட்டு போய்விடுவார். இதற்குக் காரணமே அடுத்த தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்பதுதான். இதனாலேயே அவர்கள் முழு ஈடுபாட்டுடன் சேவையாற்றமாட்டார்கள். மீண்டும் மக்களைச் சந்திக்க வேண்டும் என்றால்தான் மக்கள் நலத் திட்டங்களை மிகுந்த ஈடுபாட்டுடன் அவர்கள் செயல்படுத்துவர். புதிய மசோதா மக்களுக்கும் நல்லது, நாட்டுக்கும் நல்லது என்று குறிப்பிட்டார் ராஜபட்ச.
மேலும் இங்கே தொடர்க...

திரைப்பட நடிகர் முரளி இன்று காலை மாரடைப்பால் காலமானார்






சென்னை, செப்.8: பிரபல திரைப்பட நடிகர் முரளி, இன்று காலை மாரடைப்பால் காலமானார்.

நடிகர் முரளிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால், உடனடியாக அவர் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தார். இன்று காலையில், சிகிச்சை பலன் இன்றி அவருடைய உயிர் பிரிந்தது.

தமிழ்த் திரையுலகில் 1984இல் பூவிலங்கு படத்தின் மூலம் அறிமுகமானார். புதுவசந்தம், இதயம் ஆகிய படங்கள் அவருக்கு ரசிகர்களிடையே நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது.

இரண்டு நாள்களுக்கு முன்னர்தான் அவர் தன்னுடைய 100 ஆவது படத்துக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதுவசந்தம், , இதயம், தங்க மனசுக்காரன், சின்னப் பசங்க நாங்க, பூமணி, காலமெல்லாம் காதல் வாழ்க, பொற்காலம், காதலே நிம்மதி, கனவே கலையாதே, இரணியன், அள்ளித் தந்த வானம், சுந்தரா டிராவல்ஸ், நம்ம வீட்டு கல்யாணம், காதலுடன், பாசக்கிளிகள் உள்ளிட்ட படங்கள் அவர் நடித்த படங்களில் குறிப்பிடத்தகுந்தவை.

சிவாஜி, விஜயகாந்த், பிரபு, சத்யராஜ், பிரபுதேவா, சூர்யா, பார்த்திபன், சரத்குமார் உள்ளிட்ட பல நடிகர்களுடன் முரளி இணைந்து நடித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

அரசியலமைப்பு திருத்தம்: 16 ஐதேக உறுப்பினர் ஆதரவு என்கிறார் பிரதமர்

உத்தேச 18 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஆதரவாக ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்த 16 உறுப்பினர்கள் வாக்களிக்கவுள்ளனர் என பிரதமர் டி.எம் ஜயரத்ன நாடாளுமன்றத்தில் இன்று முற்பகல் தெரிவித்தார்.

அரசியலமைப்பின் 18 ஆவது திருத்தத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை இலகுவாக வெற்றி கொள்வோம் என அரசு சூளுரைத்துள்ளது.

அதேவேளை, அதற்கு ஆதரவு தெரிவித்தும் எதிர்ப்பு தெரிவித்தும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நேற்றும் இன்றும் பல ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

ஆளும் கட்சிக்கு 144 பேருடன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 8 உறுப்பினர்கள், ஐதேகவின் 6 உறுப்பினர்கள் மற்றும் அரசுடன் இணைந்த ஜனநாயகக் கட்சி உறுப்பினர் பிரபா கணெசன், தொழிலாளர் தேசிய முன்னணி உறுப்பினர் திகாம்பரம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.பியசேன ஆகியோர் ஆதரவாக வாக்களிப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.

மொத்தமாக 159 விருப்பு வாக்குகள் பெறப்பட்டுள்ள நிலையில், சர்வஜன வாக்கெடுப்புகள் நடத்தத் தேவையில்லை என உயர் நீதிமன்றம் உறுதிபட தெரிவித்துள்ளதாக சபாநாயகர் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
மேலும் இங்கே தொடர்க...

அரசியலமைப்பு சீர்திருத்தம் : ஆதரவாகவும்,எதிராகவும் ஆர்ப்பாட்டங்கள்


உத்தேச 18 ஆவது அரசியமைப்பு சீர்திருத்தத்திற்கு ஆதரவளித்தும், எதிர்ப்பு தெரிவித்தும் கொழும்பில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

இதனால் நாடாளுமன்றம் வரையிலான பாதையில் பாரிய வாகன நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...

18 ஆவது அரசியல் சீர்திருத்தம் தொடர்பான விவாதம் இன்று ஆரம்பம்




18 ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பான விவாதம் இன்று முற்பகல் இடம்பெறவுள்ளது.

பிரதமர் டி எம் ஜெயரட்ன, 18 ஆவது அரசியலமைப்பு சீர்திருத்த சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் நேற்று சமர்ப்பித்தார்.

இதனையடுத்து இன்று நடைபெற உள்ள விவாதத்தின் போது வாக்கெடுப்பு, பெயர் குறிப்பிட்டு இடம்பெறவுள்ளது.

இந்தஙூ சட்டமூலத்தை மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்ற 150 வாக்குகள் தேவை.

எனினும் அரசாங்கத்தில் ஏற்கனவே உள்ள 144 ஆசனங்களுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 8 ஆசனங்களும் ஐக்கிய தேசியக்கட்சியின் 7 ஆசனங்களுமாக மொத்தமாக 159 ஆசனங்கள் அரசாங்கத்துக்கு சார்பாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...