28 ஏப்ரல், 2011

போர்க்குற்ற செயல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்

இலங்கையின் போர்க் குற்ற செயல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண் டும் என்று தி.மு.க. உயர்நிலை செயல்திட்டக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஸ்பெக்ட்ரம் வழக்கில் முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழியின் பெயர் கூட்டுச் சதியாளராக சேர்க்கப்பட்டுள்ள நிலையில் தி.மு.க. நேற்று தனது உயர் நிலை செயல் திட்டக் குழுக் கூட்டத்தைக் கூட்டியது.

அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், இலங்கை போர்க்குற்ற செயல்களுக்கு எதி ராக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இக் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் கருணாநிதி, இலங் கை யில் நடந்த போர்க்குற்றத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என் பதை தி.மு.க. வலியுறுத்துகிறது. அங்கு வாழும் மக்களிடையே சமத்துவ நிலை ஏற் பட வழி வகுக்கப்பட வேண்டும்.

இலங்கையில் நடந்த போரின் போது மனித உரிமை மீறலில் ஈடுபட்டு அதற்குக் கார ண மானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சர்வதேச ஆணையம் இந்த மனித உரிமை மீறல் குறித்து விசாரிக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என் று தெரிவித்தார்.

தனி ஈழமே தி.மு.க.வின் குறிக்கோள்: இதற்கு முன்னதாக கூட்டத்தில் பேசிய கருணாநிதி, தனி ஈழமே தி.மு.க.வின் குறிக் கோள். இலங்கை போர் குற்றத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல ங் கைப் போரில் மனித உரிமை மீறலுக்கு காரணமானோர் மீது நடவடிக்கை தேவை. சர்வதேச ஆணையம் விசாரிக்க இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்றார்.

காங்கிரஸுக்குப் பதிலடியாக இலங்கை விவகாரம்:

சி.பி.ஐ. மூலம் மத்திய அரசு, தி.மு.க.வுக்கு அடுத்தடுத்து நெருக்கடி கொடுத்து வரு வதற்கு பதிலடியாக, தி.மு.க. இலங்கை விவகாரத்தை கையில் எடு த் துள்ளதாகவே தெரிகிறது.

இலங்கையில் நடந்த போர்க்குற்றம் தொடர்பாக விசாரிக்க நியமிக்கப்பட்ட ஐ.நா. நிபுணர் குழு தனது அறிக்கையை வெளியிட்டுள்ளதைத் தொடர்ந்து இதுதொடர்பாக இந் திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி.மு.க. தீர்மானம் நிறைவேற்றியி ரு ப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

மேலும் இதுதொடர்பாக தி.மு.க., போராட்டங்களையும் அறிவிக்கலாம் என்றும் எதிர் பார்க்கப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...

ஐ.நா.வுக்கும் இலங்கைக்கும் இடையில் ஆரோக்கியமான உறவு நிலவுகின்றது: டலஸ்

ஐக்கிய நாடுகள் சபைக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இடையில் எவ்விதமான முரண்பாடுகளும் இல்லை. ஐ.நா.வுக்கும் இலங்கைக்கும் இடையில் மிகவும் ஆரோக்கியமான உறவு நிலவுகின்றது. தற்போதைய நிலைமையில் சர்வதேச நாடுகள் இலங்கையின் பக்கத்தில் நிற்கவேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றோம் என அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் கூறியதாவது ஐக்கிய நாடுகள் சபைக்கும் இலங்கைக்கும் இடையிலேக்ஷி அல்லது பான் கீ மூனுக்கும் எமக்கும் இடையிலோ எவ்விதமான தனிப்பட்ட பிரச்சினையுமில்லை. செயலாளரினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் செயற்பாட்டையே நாங்கள் எதிர்க்கின்றோம். அதாவது ஐக்கிய நாடுகள் சபையில் அங்கத்துவம் பெற்றிருப்பதை நாங்கள் பெருமையாகவும் கௌரவமாகவும் கருதுகின்றோம்.

தற்போது இலங்கையை அசௌகரியப்படுத்தும் வகையில் ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.“ இந்நிலையில் ஒரு விடயத்தை நினைவுபடுத்தவேண்டும். 2001 ஆம் ஆண்டு அமெரிக்காவில் பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றதன் பின்னர் அமெரிக்கா பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தத்தை ஆரம்பித்தது.

இந்நிலையில் அமெரிக்கா உள்ளிட்ட பயங்கரவாதத்துக்கு எதிராக யுத்தம் செய்யும் அனைத்து நாடுகளுக்கும் இந்த அறிக்கை சவால் விடுத்துள்ளது என்பதனை வலியுறுத்துகின்றோம். எனவே உலக நாடுகள் இந்த அறிக்கை விடயத்தில் தவறான முன்னுதாரணத்தை வெளிக்காட்டிவிடக் கூடாது.

இந்த விடயத்தில் உலக நாடுகள் எமது பக்கமே இருக்கவேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றோம். நாங்கள் எமது கால்களில் எழுந்து நிற்க முயற்சிக்கையில் அதற்கு தடையாக இருக்கவேண்டாம் என்று கோருகின்றோம்.

ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையை வெளியிட்ட ஏப்ரல் 24 ஆம் திகதி நாங்கள் முன்னாள் போராளிகள் 700 பேரை விடுவித்தோம். முன்னாள் போராளிகளின் சித்திரக் கண்காட்சி கொழும்பில் ஆரம்பமாகியது. எனவே இந்த விடயத்தில் நாட்டின் சகல அரசியல் கட்சிகளும் எம்முடன் ஒன்றிணைந்து செயற்படவேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றோம்.
மேலும் இங்கே தொடர்க...

அறிக்கை குறித்து விவாதிக்க பாராளுமன்றத்தை கூட்டவும்: திருமாவளவன்

ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பில் விவாதிப்பதற்கு பாராளுமன்றக் கூட்டத் தொடரை உடனடியாக கூட்ட வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும் எம்.பியுமான தொல். திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, படுகொலைகளை உறுதிப்படுத்தி ஐ.நா. அறிக்கை வெளிவந்துள்ள நிலையில் இலங்கை அரசு மீது சர்வதேச நெறிமுறைகளுக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு இந்திய அரசு ஐ.நா. மன்றத்தை வலியுறுத்த வேண்டும். ஐ.நா. அறிக்கையை விவாதிப்பதற்காக பாராளுமன்றக் கூட்டத்தை உடனடியாகக் கூட்ட வேண்டும்.

இலங்கைப் போரின் இறுதிக்கட்டத்தில் பல்லாயிரக் கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதை ஐ.நா. அறிக்கை உறுதிப்படுத்தியிருக்கிறது. இலங்கை அரசாங்கம் ஈவிரக்கமற்ற முறையில் தமிழர்களைக் கொன்றதையும், உலக நாடுகளை ஏமாற்றியதையும் செஞ்சிலுவைச் சங்கம், ஐ.நா. மன்றம் முதலான சர்வதேச அமைப்புகளையும் அங்கே செயல்பட விடாமல் தடுத்ததையும் ஐ.நா. அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.

போர் முடிந்ததற்குப் பிறகும் இலங்கை அரசு ஏராளமான தமிழர்களைப் படுகொலை செய்து வருவதையும் தமிழ்ப் பெண்களை பாலியல் வல்லுறவுக்கு ஆட்படுத்தி வருவதையும் ஐ.நா. அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது. இத்தகவல்கள் வெளியுலகைச் சென்றடையாதவாறு ஊடகவியலாளர்களையும் மனித உரிமை ஆர்வலர்களையும் வெள்ளை வேன்களில் கடத்திக் கொலை செய்வதையும் ஐ.நா. அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.

அது மட்டுமன்றி இலங்கையில் நீதித்துறை சுதந்திரமாக இயங்கவில்லை என்பதையும் தற்போது இலங்கை அரசால் அமைக்கப்பட்டுள்ள விசாரணை ஆணையம் கண் துடைப்புக்காக அமைக்கப்பட்ட ஓர் அமைப்புதான் என்பதனையும் ஐ.நா. அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இலங்கையில் நடைபெற்ற இனப் படுகொலைகளை விசாரித்து அதற்குக் காரணமான ராஜபக்ஷ உள்ளிட்டவர்களைத் தண்டிப்பதற்கு சர்வதேச அளவிலான நடவடிக்கைகள் அவசியம் என்பதையும் ஐ.நா. அறிக்கை தெளிவுப்படுத்தியுள்ளது. அங்கு தமிழ் மக்கள் சமத்துவத்தோடு வாழ்வதற்குத் தேவையான அரசியல் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதை ஐ.நா. அறிக்கை வலியுறுத்தியுள்ளது.

நாம் இதுவரையில் கூறி வந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மையானவைதான் என்பதை ஐ.நா. அறிக்கை உறுதிப்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் இந்திய அரசும், இங்குள்ள அரசியல் கட்சிகளும் மற்றும் தமிழ்த் தேசிய அமைப்புகளும் உறுதியாகக் குரல் எழுப்பி ஈழத் தமிழர்களின் உரிமைகளைக் காப்பாற்றிட முன்வர வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் வலியுறுத்துகிறது.

1. இலங்கையில் நடைபெற்றது போர்க்குற்றங்கள்தான் என ஐ.நா. அறிக்கை கூறியிருக்கிறது. அவை போர்க் குற்றங்கள் மட்டுமல்ல. அது ஓர் இனப் படுகொலை. அங்கு கொல்லப்பட்டவர்கள் ஒரு குறிப்பிட்ட சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் என்கிற காரணத்தாலேயே கொல்லப்பட்டுள்ளனர். இந்த அம்சத்தை ஐ.நா. அறிக்கை கவனத்தில் கொள்ளவில்லை. எனவே இலங்கையில் நடந்தவற்றை போர்க்குற்றங்கள் (ஙிச்ணூ இணிட்ஞுண்) என்று மட்டும் பார்க்காமல் அவற்றை ஓர் இனப் படுகொலையாகப் பார்க்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் வலியுறுத்துகிறது.

2. இலங்கை இறுதி யுத்தத்தின்போது சீனா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் இலங்கை அரசுக்கு உதவியதாக செய்திகள் வெளிவந்தன. ஐ.நா. அமைப்பைச் சார்ந்த சில அதிகாரிகளும் கூட உதவி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது. இத்தகைய குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஐ.நா. மனித உரிமை அமைப்பு தனியே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் வலியுறுத்துகிறது.

3. இலங்கை அரசின் மீது போர்க் குற்ற விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என முயற்சிகள் எடுக்கப்பட்டபோது கியூபா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட கம்யூனிஸ நாடுகள்தான் அம்முயற்சியைத் தடுத்து இலங்கையை கைப்பற்றின. கம்யூனிஸ நாடுகள் என்ற போர்வையில் தமிழினப் படுகொலையை ஊக்குவித்த இந்நாடுகளின் நோக்கம் அம்பலப்படுத்தப்பட வேண்டும். இந்தியாவில் உள்ள இடதுசாரிக் கட்சிகள் மேற்கண்ட நாடுகளோடு அரசியல் ரீதியாக எந்தத் தொடர்பையும் வைத்துக் கொள்ள மாட்டோம் எனப் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் வலியுறுத்துகிறது.

4. பாதுகாப்புக் காரணம் என்று சொல்லி சர்வதேச அரங்குகளில் இலங்கையை இந்தியா ஆதரித்து வருகிறது. இனிமேல் அந்த நிலை தொடரக்கூடாது. இலங்கையுடனான வெளியுறவுக் கொள்கையை மறு ஆய்வு செய்ய தமிழக அரசோடும் தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளோடும் இந்திய அரசு கலந்தாலோசிக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் இந்திய அரசை வலியுறுத்துகிறது.

5. ஐ.நா. அறிக்கை ஈழத் தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல தமிழ் இனம் முழுமைக்குமே ஒரு முக்கிய அறிக்கையாகும். அது மட்டுமல்லாமல் தெற்காசியாவில் முக்கியத்துவத்தோடு திகழும் இந்தியாவுக்கும் இந்த அறிக்கை முக்கியமானதாகும். எனவே இந்த அறிக்கையை விவாதிப்பதற்காக உடனடியாக நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என இந்திய அரசை விடுதலைச் சிறுத்தைகள் வலியுறுத்துகின்றது.
மேலும் இங்கே தொடர்க...

காட்டுப்புலி வசமாக மாட்டிக்கொண்டது : பலாங்கொடையில் சம்பவம்

பலாங்கொடை மாராத்தென்ன தோட்டப் பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த புலி ஒன்றிறை வன ஜீவராசிகள் பிரிவினரும் பொலிஸாரும்; இணைந்து நேற்று பிற்பகல் வேளையில் பிடித்துள்ளனர்.

மாராத்தென்ன தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் தேயிலைச் செடிகளுக்கிடையில் ஒரு வித சத்தம் கேட்டதைத் தொடர்ந்து அங்கு ஆராய்ந்து பார்த்த போது மஞ்சள் நிறத்துடன் கூடிய விசாலமான புலி ஒன்றிருப்பதைக் கண்டுள்ளனர்.

இந்தப்புலிக் குறித்து தோட்டத் தொழிலாளர்கள் தோட்ட முகாமையாளரின் ஊடாக மாராத்தென்ன பொலிஸாருக்கும் வன ஜீவராசிகள் பிரிவினக்கும் அறிவித்தனர். அந்தப்பகுதிக்கு வருகைத்தந்த பொலிஸாரும் வன ஜீவராசிகள் பிரிவினரும் பல மணிநேர போராட்டத்திற்குப் பிறகு புலியைப் பிடித்துள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

ஜனாதிபதி, இராணுவத்தினர் மீது சேறுபூசுவதற்கு அனுமதியோம்

ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழுவுக்கு அறிக்கை ஒன்றை தயாரிப்பதற்கு எவ்விதமான அதிகாரமுமில்லை. அதேபோன்று அந்த அறிக்கையை வெளியிடுவதற்கு பான் கீ மூனுக்கு எந்தவிதமான உரிமையுமில்லை. இந்த அறிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரிப்பதுடன் கடுமையாக எதிர்க்கின்றது. ஜனாதிபதி, பாதுகாப்பு செயலாளர் மற்றும் இராணுவ வீரர்கள் மீது சேறுபூசப்படுவதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம் என்று நான்கு முக்கிய அமைச்சர்கள் ஒன்றிணைந்து அறிவித்தனர்.

ஐ.நா. குழுவின் இந்த செயற்பாடு தொடர்பில் உள்நாட்டில் மக்களை தெளிவுபடுத்தவுள்ளதுடன் சர்வதேச மட்டத்தில் எமது நிலைப்பாட்டை விளக்கிக்கூறவுள்ளோம். மேலும் நிபுணர் குழு விவகாரம் தற்போது முடிந்துவிட்டது. இதற்கு அப்பால் செயற்பட தனக்கு அதிகாரம் இல்லை என்று பான் கீ. மூன் கூறிவிட்டார். ஆனால் ஐ.நா. பாதுகாப்பு சபையும் மனித உரிமை பேரவையும் கோரிக்கை விடுத்தால் அடுத்தக்கட்ட நகர்வு இடம்பெறும். ஆனால் அந்த அமைப்புக்கள் கோரிக்கை விடுக்காது என்று நம்புகின்றோம் எனவும் அமைச்சர்கள் சுட்டிக்காட்டினர்.

நேற்று கொழும்பில் நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டனர். அமைச்சர்களான சரத் அமுனுகம, நிமால் சிறிபால டி. சில்வா, டலஸ் அழகப்பெரும, சுசில் பிரேம்ஜயந்த ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.

அமைச்சர் நிமால் சிறிபால டி. சில்வா குறிப்பிடுகையில் : இந்த குழுவின் நியமனம் அவசியமற்றது என்று நாங்கள் ஆரம்பத்தில் இருந்தே கூறிவருகின்றோம். இந்தக் குழுவானது தனக்கு ஆலோசனை வழங்கவே நியமிக்கப்பட்டதாக பான் கீ. மூன் கூறினார். அந்த வகையில் நிபுணர் குழுவுக்கு அறிக்கை தயாரித்து வெளியிட சட்டம் யாப்பு மற்றும் பண்பியல் ரீதியாக எவ்வித அதிகாரமும் இல்லை. இது பாதுகாப்பு சபையினதோ அல்லது மனித உரிமை பேரவையினதோ அனுமதியுடன் நியமிக்கப்படவில்லை.

வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ள விடயங்கள் பக்கச்சார்பானவையாகும். இலங்கைக்கு பாதகமான வகையில் வெளியிடப்பட்டுள்ளது. புதிய பயணம் ஒன்றை நாங்கள் செல்ல ஆயத்தமாகும்போது இவ்வாறு எம்மை அசௌகரியப்படுத்த முயற்சிப்பது தொடர்பில் கவலையடைகின்றோம். எமது எதிர்ப்பை வெளியிடுகின்றோம். சர்வதேச ஊடங்களுக்கும் புலம்பெயர் மக்களுக்கும் இது மகிழ்ச்சியான விடயமாக இருக்கலாம். நாங்கள் இந்த அறிக்கையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டோம். ஜனாதிபதி பாதுகாப்பு செயலாளர் மற்றும் இராணுவ வீரர்கள் மீது சேறுப்பூசப்படுவதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம். இலங்கைக்கு எதிராக சர்வதேச மட்டத்தில் பாரிய சதித்திட்டம் ஒன்று மேற்கொள்ளப்படுகின்றது. ஆரம்பத்திலிருந்து புலிகள் இந்த நாட்டை பிரிப்பதற்கு முயற்சித்தனர். தற்போது அதனை வேறு வடிவத்தில் சர்வதேச மட்டத்தில் புலிகளும் புலம்பெயர் மக்களும் மேற்கொள்வதை காண முடிகின்றது. ஐ.நா. குழுவின் இந்த செயற்பாடு குறித்து உள்நாட்டில் மக்களை தெளிவுபடுத்தவுள்ளதுடன் சர்வதேச மட்டத்தில் எமது நிலைப்பாட்டை விளக்கிக்கூறவுள்ளோம்.

இராஜதந்திர ரீதியாகவும் பல நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளோம். பேசிக்கொண்டிருப்பதைவிட இந்த விடயத்தை செயலில் காட்டுவோம். ஐ.நா. பாதுகாப்பு சபை மற்றும் மனித உரிமை பேரவைக்கும் தெளிவுபடுத்துவோம். மேலும் இந்த அறிக்கை சமநிலையானது என்பதனை காட்டுவதற்காக புலிகளின் மீறல்களையும் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் புலிகளுக்கு இதில் சிறந்த சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. எப்படியிருப்பினும் நாங்கள் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்ட மற்றும் வெளியிடப்பட்ட விதம் சட்டவிரோதமானது என்ற நிலைப்பாட்டில் இருக்கின்றோம் என்றார்.

சரத் அமுனுகம அமைச்சர் சரத் அமுனுகம குறிப்பிடுகையில் :

பான் கீ. மூன் இந்த அறிக்கையை ஒருபக்கச்சார்பாகவே வெளியிட்டுள்ளார். இதனை நாங்கள் கண்டிக்கின்றோம். அத்துடன் நிராகரிக்கின்றோம். இவ்வாறு விசாரணை ஒன்று நடத்த ஐ.நா. விடம் யார் கோரிக்கை விடுத்தது என்று கேள்வியெழுப்புகின்றோம். அதாவது நாடு ஒன்றில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தால் இவ்வாறான கோரிக்கைகள் விடுக்கப்படும். ஆனால் இலங்கையிலிருந்து அவ்விதத்தில் எந்த கோரிக்கையும் விடுக்கப்படவில்லை. இந்த நாட்டு மக்கள் மிக அண்மையில் மூன்று தடவைகள் ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் பாரிய விதத்தில் அங்கீகரித்துள்ளனர்.

இதேவேளை எமது உள்ளக விடயங்களை ஆராய கற்றறிந்த பாடங்களும் நல்லிணக்கமும் குறித்த ஆணைக்குழுவை நியமித்துள்ளோம். அந்தக் குழு சிறப்பாக செயற்பட்டுள்ளது. இந்நிலையில் ஐ.நா.“வின் குழுவானது எங்கிருந்து தகவல்களை பெற்றது என்று வினவுகின்றோம். எவ்விதமான ஆதாரங்களோ ஆவணங்களோ இன்றி குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. முன்னாள் இலங்கை ஐ.நா. அலுவலகத்தின் பேச்சாளர் கோர்டன் வைஸ் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார். ஆனால் அவ்வாறு உத்தியோகத்தர் ஒருவர் ஐ.நா. சட்டத்தின் பிரகக்ஷிரம் தகவல்களை வெளியிட முடியாது. நானும் ஐ.நா. வில் பணிபுரிந்துள்ளேன். ஐ.நா. உத்தியோகத்தர் என்ற வகையில் பெறும் தகவல்களை வெளியிட முடியாது என்றார்.

அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த கருத்து வெளியிடுகையில் :

சர்ச்சையை ஏற்படுத்திய இந்த அறிக்கையை நாங்கள் எதிர்க்கின்றோம். நிராகரிக்கின்றோம். நிரூபிக்கப்பட முடியாத குற்றச்சாட்டுக்களை அறிக்கையில் முன்வைத்துள்ளனர். ஐக்கிய நாடுகள் சபை சமாதானத்தை ஏற்படுத்தவே முயற்சிக்கவேண்டும். மாறாக பிரிவினை ஏற்படுத்த முயற்சிக்கக்கூடாது. புலிகள் மிகப்பெரிய பயங்கரவாத அமைப்பாகும். இந்திய நாட்டின் முன்னாள் பிரதமரை கொலை செய்த குற்றச்சாட்டில் பிரபாகரனுக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ள மூன்று உறுப்பினர்கள் தொடர்பிலும் நம்பகத்தன்மை இல்லாமல் உள்ளது. அவர்களின் கடந்தகால வரலாறுகள் குறித்து எங்களுக்கு தெரியும். நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை மே மாதம் 15 ஆம் திகதி வெளிவரவுள்ளது. அதற்கிடையில் பாரிய இடைவெளியை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். வடக்கு கிழக்கில் பல மடங்கு அபிவிருத்திகள் இடம்பெற்றுவருகின்றன.

இந்நிலையில் நாங்கள் இவ்வாறு அபிவிருத்தியை நோக்கி செயற்படுகையில் ஜனாதிபதியை இலக்குவைத்து சில தரப்புக்கள் செயற்பாடுகளை மேற்கொள்கின்றன. இவ்வாறான முயற்சிகளை தோற்கடிக்க இராஜதந்திர முயற்சிகளை நாங்கள் மேற்கொள்வோம். இராணுவத்தினருக்கு களங்கம் ஏற்பத்தும் செயற்பாடுகளுக்கு இடமளிக்கமாட்டோம் என்றார்.

அமைச்சர் டலஸ் அமைச்சர் டலஸ் அழகப்பெரும குறிப்பிடுகையில் :

மீண்டும் உலகில் பாரிய யுத்தம் ஒன்று இடம்பெறக்கூடாது என்பதற்காகவே இந்த ஐக்கிய நாடுகள் சபை ஸ்தாபிக்கப்பட்டது. ஆனால் 1945 ஆம் ஆண்டிலிருந்து மூன்று தசாப்தங்களாக பணிப்போரை சமாளிப்பதிலேயே ஐ.நா. காலத்தை கழித்தது. அதன் பின்னர் எந்தவொரு விடயத்தையும் யுத்தத்தினால் தீர்க்க முடியாது என்றும் பேச்சுவார்த்தையினாலேயே தீர்க்க முடியும் என்றும் ஒரு கொள்கையை ஐ.நா. கொண்டுவந்தது. அது தொடர்பில் பல்கலைக்கழகங்களில் பாடத்திட்டங்கள் வந்தன. முரண்பாட்டு தீர்வு முரண்பாட்டு முகாமைத்துவம் என பாடத்திட்டங்கள் உருவெடுத்தன. இவ்வாறான காலகட்டத்தில் ஜனாதிபதி எமது நாட்டின் பிரச்சினையை தீர்த்து வைத்தார்.

இந்த வெற்றியை ஒரு சிலரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அதனால் இவ்வாறான விடயங்களை கொண்டுவருகின்றனர். செயலாளர் நாயகம் நியமித்த நிபுணர் குழுவுக்கு அறிக்கை ஒன்றை வெளியிடுவதற்கு எவ்விதமான உரிமையும் இல்லை.

அறிக்கையை வெளியிடுவதற்கு ஐ.நா. வின் யாப்பு சட்டம் மற்றும் பண்பியல் ரீதியாக எவ்விதமான உரிமையும் இல்லை. எனவே அந்த அறிக்கையை நாங்கள் நிராகரிக்கின்றோம். அதன் உள்ளடக்கங்கள் குறித்து பேசிக்கொண்டிருக்க தயாரில்லை. அதாவது இதனை உலகில் தோன்றியுள்ள புதுவிதமான நவீன அரசியல் காலணித்துவம் என்று கூற முடியும்.
மேலும் இங்கே தொடர்க...

விலை அதிகரிப்பு, வரி விதிப்பு மதுபானம், சிகரட் மூலம் ரூ. 17,000 கோடி வருமானம்




மதுபானம் மற்றும் சிகரட் என்பன மீதான விலைகள் அதிகரிக்கப்பட்டதாலும் வரி விதிக்கப்பட்டதன் மூலமும் கடந்த 10 வருட காலத்தில் 17,074 கோடி ரூபா வருமானம் பெறப்பட்டதாக பிரதிநிதி அமைச்சர் கீதாஞ்சன குணவர்தன நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

வாய் மூல விடைக்காக ரவி கருணாநாயக்க எம்.பி. எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர் மேலும் கூறியதாவது, 2000 ஆம் ஆண்டில் 247 ரூபாவாக இருந்த வெளிநாட்டு மதுபான விலை 2011ல் 1003 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 2003ல் 190 ரூபாவாக இருந்த வைன் 718 ரூபாவாகவும் 2000 ஆம் ஆண்டில் 213 ரூபாவாக இருந்த தென்னை மற்றும் பதப்படுத்திய மதுபானம் 213 ரூபாவில் இருந்து 863 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

2000 ஆம் ஆண்டில் 4.82 ரூபாவாக இருந்த 84 மி.மீ.க்கு அதிகமான சிகரெட் 2010 டிசம்பர் ஆகும் போது 15 ரூபாவாக உயர்த்தப்பட்டது. 84 மி.மீ. ரக சிகரெட் 4.30 ரூபாவில் இருந்து 12.10 ரூபாவாக உயர்த்தப்பட்டது.

கடந்த 10 வருட காலத்தில் மதுவரி மூலம் 1,62,108.90 மில்லியன் ரூபா வருமானம் பெறப்பட்டது. சிகரெட் விலை அதிகரிப்பின் மூலமாக 9,635 மில்லியன் வருமானம் கிடைத்தது.

சிகரெட் மீது 12 வீத பெறுமதி சேர் வரியும் 2 வீத சேதக் கட்டுமான வரியும் பெறப்படுவதோடு ஒரு கிராம் புகையிலைக்கு 10 ரூபா வரி அறவிடப்படுகிறது.

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் ஒரு லீற்றர் மதுபானத்திற்கு 12 வீத பெறுமதி சேர் வரியும் 2 வீத தேசக்கட்டுமான வரியும் ஒரு வீத பொருளாதார சேவைக் கட்டணமும் அறவிடப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...

பாராளுமன்றம் 35 நிமிடங்களில் ஒத்திவைப்பு

பாராளுமன்ற அமர்வு நேற்றைய தினம் 35 நிமிடங்களில் ஒத்திவைக்கப்பட்டது.

நேற்றைய தினம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவிருந்த நான்கு சட்ட மூலங்கள் பிற்போடப்பட்டதால் 35 நிமிடங்களுக்குள் பாராளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டது.

நேற்றுப் பிற்பகல் ஒரு மணிக்குப் பாராளுமன்றம் பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடியின் தலைமையில் கூடியது. ஊழியர் ஓய்வூதிய நன்மைகள் நிதியச் சட்ட மூலம் உட்பட நான்கு சட்ட மூலங்கள் நேற்று சபையில் சமர்ப்பிக்கப்படவிருந்தன. எனினும் ஊழியர் ஓய்வூதிய நன்மைகள் நிதியச் சட்ட மூலத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டதையடுத்து மேற்படி நான்கு சட்ட மூலங்களும் விவாதத்துக்கு எடுத் துக் கொள்ளப்படாமல் ஒத்திப் போடப்பட்டன. இதன் காரணமாகவே நேற்றைய சபை அமர்வு 1.35 மணியுடன் நிறைவு பெற்றன.
மேலும் இங்கே தொடர்க...

4 எயார் பஸ் விமானங்கள் டிசம்பருக்குள் கொள்வனவு முதல் விமானம் அடுத்த மாதம்




ஸ்ரீலங்கன் மற்றும் மிஹின் லங்கா விமான நிறு வனங்களுக்கு மேலும் நான்கு புதிய எயார் பஸ் விமானங் கள் இவ்வாண்டு முடிவடைவதற்குள் கொள் வனவு செய்யப்படும்.

இதன் மூலம் இவ்விரு விமான நிறுவனங்களுக்கு இருக்கும் விமானங்களின் எண்ணிக்கை 30 ஆக அதிகரிக்கப்படும் என்று சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பிரியங்கர ஜெயரத்ன தெரிவித்தார்.

இந்த நான்கு புதிய எயார் பஸ் விமா னங்களில் முதலாவது விமானம் அடுத்த மாதம் இங்கு வந்து சேரும். எஞ்சிய விமானங்கள் இவ்வாண்டு முடிவடைவதற்குள் இலங்கைக்கு வந்து சேரும். சிவில் விமான சேவை போக்குவரத்து அமைச்சில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அமைச்சர் ஆசியாவிலுள்ள விமான நிறுவனங்களில் ஸ்ரீலங்கன் விமான நிறுவனம் முதல் தரத்திற்கு உயர்த்தப்படும் என்று தெரிவித்தார்.

இதே வேளையில் எமது நாட்டின் விமான நிலையங்கள் அனைத்தும் அபிவிருத்தி செய்யப்படும். ஹம்பாந்தோட்டையில் மத்தளயில் இலங்கையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையம் ஆரம்பிக்கப்படும் என்றும் கூறினார். மத்தள விமான நிலையத்தை நிர்மாணிப்பதற்கு அரசாங்கம் 209 மில்லியன் டொலர்களை செலவிட இருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

தருஸ்மன் அறிக்கை சட்டரீதியானதல்ல ஒருதலைப்பட்சம் என சு.க நிராகரிப்பு






சர்ச்சைக்குரிய தருஸ்மன் அறிக்கை சட்ட ரீதியானது அல்ல. ஒரு தலைப்பட்சமாக வெளியிடப்பட்ட ஒரு அறிக்கை. இதனை முழுமையாக நிராகரிப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைவர்கள் நேற்று தெரிவித்தனர். அறிக்கை வெளியிடப்பட்டமைக்கு கட்சி என்ற வகையில் தமது கண்டனத்தையும், அதிருப்தியையும் தெரிவித்துக்கொள்வதாகவும் தலைவர்கள் தெரிவித்தனர்.

இவ்வாறான ஒரு அறிக்கையை வெளியிடவோ, தயாரிப்பதற்கோ, சட்ட ரீதியான, சாசன ரீதியான, ஒழுக்க ரீதியான உரிமை கிடையாது என்றே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவிக்கிறது என கட்சியின் சிரேஷ்ட தலைவர்களான அமைச்சர்களான நிமால் சிறிபால டி சில்வா, சுசில் பிரேம ஜயந்த, சரத் அமுனுகம, டலஸ் அழகப்பெரும ஆகியோர் நேற்று தெரிவித்தனர்.

சர்ச்சைக்குரிய தருஸ்மன் அறிக்கை பற்றி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடு தொடர்பாக தெரிவிக்கும் நோக்குடன் மகாவலி கேந்திர நிலையத்தில் நடத்தப்பட்ட விசேட செய்தியாளர் மாநாட்டின்போதே அவர்கள் இதனைத் தெரிவித்தனர்.இது ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்திற்கு ஆலோசனை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட ஒரு ஆலோசனைக் குழு மட்டுமே.

இந்த குழு நியமிக்கப்படும் போதே அதனை இலங்கை அரசு எதிர்த்தது. இவ்வாறான ஒரு குழு நியமிப்பதற்கான அவசியம் இல்லை என்பதை ஆரம்பம் முதலே எமது அரசு வலியுறுத்தி வந்தது. இதுவே எமது அரசினதும் கட்சியினதும் நிலைப்பாடாகும்.

ஐ.நா. செயலாளர் நாயகத்திற்கு ஆலோசனை வழங்குவதற்காகவே குழு நியமிக்கப்படுகிறதே தவிர இலங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படும் சம்பவங்கள் தொடர்பாக விசாரணைகள் நடத்துவதற்கல்ல என்பதையும் ஐ.நாடுகள் செயலாளர் நாயகமும் தெரிவித்திருந்தார்.

எனவே இந்த குழுவின் அறிக்கையை வெளியிடவோ அல்லது வேறு எந்த விதமான நடவடிக்கைகளுக்காகவும் பயன்படுத்தவோ அவர்களுக்கு சட்ட ரீதியான, சாசன ரீதியான, ஒழுக்க ரீதியான உரிமை கிடையாது. அவர்கள் ஐ.நா. செயலாளருக்கு ஆலோசனை வழங்குவதற்காக மட்டும் இதனை பயன்படுத்த வேண்டும்.

ஐ.நா. சபையின், ஐ.நாவின் பாதுகாப்பு சபையின் அல்லது, வேறு அமைப்பின் அனுமதி பெறப்படாமலேயே இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. எனவே ஒருதலைப்பட்சமாக ஐ.நா. செயலாளரினால் எடுத்த முடிவுக்கமைய அமைக்கப்பட்ட குழு அத்துடன் ஒருதலைப்பட்சமாக நடத்தப்பட்ட விசாரணைகளின் அறிக்கையே இது என ஸ்ரீல. சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உபதலைவர் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவர் அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம

இலங்கையில் நடைபெற்றதாக கூறப்படும் சம்பவங்கள் தொடர்பாக விசாரணைகள் நடத்துவதற்கு நல்லிணக்க ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு மிகவும், சுதந்திரமாக வடக்கு, கிழக்கு உட்பட நாடு முழுவதும் சென்று விசாரணை நடத்துகிறது. இந்த விசாரணைகள் அனைத்தும் வெளிப்படைத் தன்மையாக நடத்தப்படுகிறது.

இவ்வாறான விசாரணைகளின் அறிக்கை வெளியிடப்படும் வரை அறிக்கையை வெளியிடவேண்டாம் என இந்த நாட்டிலுள்ள புத்தி ஜீவிகள், அமைப்புகள் பல வேண்டுகோள் விடுத்திருந்தன. எனினும் இவற்றை பொருட்படுத்தாமல் தருஸ்மன் அறிக்கை வெளியிடப்பட்டது.

இதனை ஐ.நா. நிபுணர் குழு என ஊடகங்கள் தப்பான அர்த்தத்துடன் அழைக்கிறது. இது ஒன்றும் நிபுணர் குழு அல்ல. ஐ.நா. செயலாளருக்கு ஆலோசனை வழங்க நியமிக்கப்பட்ட ஆலோசனைக் குழு மட்டுமே.

பொதுசன ஐக்கிய முன்னணியின் பொதுச் செயலாளர் அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த எம்.பி.

ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தின் பிரகாரம் உலக நாடுகள் மத்தியில் சமாதானத்தையும் ஐக்கியத்தையும் ஏற்படுத்துவதே பிரதான நோக்கம்.

எனினும் அறிக்கை வெளியிட்டதன் மூலம் ஐக்கியப்படுத்துவதற்கு பதிலாக பிளவை ஏற்படுத்துவதுடன் பிளவை மேலும் மேலும் அதிகரிப்பதாக அமையும்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையிலான எமது அரசு புலிகள் இயக்கத்தை முற்றாக ஒழித்துள்ளது. இன்னும் உலக நாடுகள் சில புலிகள் இயக்கத்தை தடைசெய்துள்ளது. புலிகள் இயக்கம் ராஜீவ் காந்தியை படுகொலை செய்தார்கள். நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு பிரபாகரன் தான் குற்றவாளி என்பதையும் நிரூபித்தார்கள்.

இந்தியாவின் இந்த நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு எதிராக எவரேனும் சவால் விடுத்தார்களா? இல்லை. உலகில் எந்த ஒரு நாடும், எந்த ஒரு அமைப்பும் இது தவறு எனக் கூறவில்லை.

இவ்வாறான ஒரு புலிகள் அமைப்பை பரிசுத்தமானவர்கள் என காண்பிக்கப் பார்க்கிறார்கள்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளர் அமைச்சர் டலஸ் அழகப் பெரும எம்.பி

ஐக்கிய நாடுகள் சபைக்கும் இலங்கைக்கும் இடையே முரண்பாடு என்றும், ஐ.நா. செயலாளருக்கும் இலங்கைக்கும் இடையே முரண்பாடு என்றும் ஐ.நா. வுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கும் இடையே தனிப்பட்ட முரண்பாடு ஏற்பட்டுள்ளது என்றும் சிலர் வெளிக்காட்ட முனைகிறார்கள் என்பது எமக்கு நன்றாக தெரிகிறது.

எனினும் ஐ.நாவுக்கும் இலங்கைக்கும் ஐ.நா. செயலாளருக்கும் ஜனாதிபதி அவர்களுக்கும் இடையில் எந்தவொரு தனிப்பட்ட முரண்பாடுகளும் கிடையாது என்பதை பொறுப்புடன் கூற விரும்புகிறேன். இவ்வாறான ஒரு சந்தர்ப்பத்திலும் ஐ.நாவின் உறுப்புரிமை பெற்றுள்ளமையின் ஊடாக அதன் கெளரவத்தை பேணுவோம். உறுப்புரிமை பெற்றுள்ளதை கெளரவமாகவும் கருதுகிறோம்.

ஐ.நா செயலாளர் நாயகத்திற்கு ஆலோசனை வழங்கவென நியமிக்கப்பட்ட குழு உறுப்பினர் சிலரது தனிப்பட்ட கருத்துக்களை அமைப்பின் கருத்துக்களாக அர்த்தப்படுத்துவதற்கு எடுக்கப்பட்ட ஒரு முயற்சியே இது என்றும் டலஸ் அழகப்பெரும குறிப்பிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...

வடக்கு சிவில் நிர்வாகத்தில் இராணுவ தலையீடு இல்லை

நாட்டின் வடபகுதியில் சிவில் நிர்வாகம் செயலிழந்து அங்கு இராணுவ ஆட்சியே நடைபெறுகிறதென்று ஜே.வி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்த கருத்துக்கு வட இலங்கையில் உள்ள அரச ஊழியர்களும், பொதுமக்களும் தங்கள் வன்மையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

யாழ் மாவட்டத்தில் அரசாங்க நிர்வாகத்தின் தலைமை அதிகாரியான யாழ் அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமாருடன் தினகரன் நிருபர் தொடர்பு கொண்டு பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்தின் இந்தக் கூற்றில் உண்மை இருக்கிறதா? என்று வினவிய போது, இது அப்பட்டமான தவறான கருத்து என்றும், வேண்டுமென்றே அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்தும் எண்ணத்துடன், விஜித ஹேரத் நடந்து கொள்வது நல்லதல்ல என்று சொன்னார்.

இராணுவத்தினரும், பொலிஸாரும் சிவில் நிர்வாகத்தில் தலையிட்டு வருகிறார்களா? என்று நாம் கேட்ட கேள்விக்கு தொடர்ந்தும் பதிலளித்த யாழ் அரசாங்க அதிபர், இராணுவத்தினரும், பொலிஸாரும் சிவில் நிர்வாகத்தை சீரான முறையில் நடத்துவதற்கு தனக்கும் தனது அதிகாரிகளுக்கும் பூரண ஒத்துழைப்பை நல்குகிறார்கள் என்று தெரிவித்தார்.

இராணுவத்தினர் தன்னுடன் ஒன்றிணைந்து யாழ் மாவட்டத்தின் சகல அரச பணிகளுக்கும் உதவியையும், ஒத்துழைப்பையும் மனமுவந்து தருகிறார்கள். இராணுவத்தினர் எந்நேரமும் தங்களுக்கு உதவி செய்ய தயாராக இருக்கிறார்கள் என்று பாராட்டுத் தெரிவித்தார்.

யாழ் மாவட்டத்தில் அதி உயர் பாதுகாப்பு வலயத்தில் புதைக்கப்பட்டிருந்த தரைக்கண்ணி வெடிகளை அகற்றுவதற்கு இராணுவத்தின் பொறியியல் பிரிவு செய்த உதவியை தம்மால் மறக்க முடியாது என்றும், அதனால் தனது நிர்வாகத்திற்கு அங்கு 17,000 குடிபெயர்ந்த மக்களை மீள் குடியேற்றும் சாதனையை வெற்றிகரமாக நிறைவேற்ற முடிந்தது என்றும் கூறினார்.

இவ்விதம், எவ்வித பிரச்சினையுமின்றி அமைதியான முறையில் இந்த மக்களை உயர் பாதுகாப்பு வலயத்தில் மீள்குடியேற்றிமை குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா மற்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் தன்னை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்ததாகவும் திருமதி இமெல்டா சுகுமார் கூறினார்.

யாழ் மாவட்டத்தில் உயர்பாதுகாப்பு வலயத்தில் தொடர்ந்தும் மக்களை பாதுகாப்பான முறையில் மீள் குடியமர்த்த வேண்டுமென்று இவ்விரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் விடுத்த வேண்டுகோளை இராணுவத்தினர் மற்றும் பொலிஸாரின் பூரண ஒத்துழைப்புடன் தற்போது ஒழுங்குகளை செய்து வருவதாகவும் கூறினார்.

யாழ் மாவட்டத்தில் இன்று வன்முறைகள், கொலை, குடும்பத்தகராறுகள் போன்ற பிரச்சினைகள் அதிகரித்து வருவதாக சில ஊடகங்கள் வெளியிடும் கருத்துக்கள் யதார்த்த பூர்வமானவையல்ல. இது யாழ்ப்பாண மாவட்டத்திற்கு மாத்திரம் உரித்தான ஒரு பிரச்சினையல்ல என்றும், இது நாட்டின் நாலா பக்கங்களிலும் இருந்து வரும் சமூகப் பிரச்சினை என்றும் தெரிவித்தார்.

இத்தகைய குடும்பத் தகராறுகளை நல்ல ஆலோசனைகளின் மூலம் இல்லாமல் செய்வதற்கு சிவில் நிர்வாகம், இராணுவ மற்றும் பொலிஸ் உத்தியோகத்தரின் உதவியுடன் அறிவுறுத்தல் பயிற்சி பாசறைகளை நடத்துவதுடன் விளையாட்டு விழாக்கள், கலைநிகழ்ச்சிகள், மத நிகழ்ச்சிகள் போன்றவற்றையும் ஒழுங்கு செய்து வருவதாகவும் கூறினார்.

வெளிநாடுகளில் சொகுசான வாழ்க்கையை மேற்கொண்டுவரும் புலம்பெயர்ந்த தமிழர்கள், தொடர்ந்தும் அந்நாடுகளில் அகதி அந்தஸ்துடன் செல்வாக்குடன் வாழ வேண்டுமென்ற சுயநல நோக்கத்துடன் டயஸ்போரா என்று அழைக்கப்படும் இந்த புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்கள், இலங்கையில் தமிழர்கள் கொடுமைப்படுத்தப்படுகிறார்கள் என்ற போலிப் பிரசாரத்தை இனிமேலாவது நிறுத்திவிட்டு வடபகுதியில் உள்ள தமிழ் மக்களின் நல்வாழ்விற்கு அவர்கள் பொருளாதார ரீதியில் உதவி செய்ய முன்வர வேண்டும் என்றும் யாழ் அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்.

சமீபத்தில் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டப்பிரிவு வடபகுதியில் மேற்கொண்ட தரைக்கண்ணி வெடிகளை அகற்றும் நிகழ்வின் ஆரம்ப நாள் வைபவத்தில் தன்னால் தவிர்க்க முடியாத காரணங்களினால் கலந்து கொள்ள முடியவில்லை என்றும் அதற்கு அவுஸ்திரேலியாவில் உள்ள புலம்பெயர்ந்த தமிழர்கள் தன்னை நியாயமற்ற முறையில் குற்றம் சுமத்தி கண்டித்திருப்பதாக அவர் தெரிவித்தார்.

தாம் பல வருடங்கள் முல்லைத்தீவின் அரசாங்க அதிபராக இருந்த காரணத்தினால் அங்குள்ள இராஜ கோபுர திறப்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு தமக்கு அவ் ஆலயத்தின் அரங்காவலர்கள் விடுத்த ‘8!ரிக்கையை ஏற்றுக்கொண்டு சென்றமையால்தான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லையென அவர் தெரிவித்தார்.

யாழ் மாவட்டத்தின் அரச ஊழியர்களும், இராணுவத்தினரும் பொலிஸாரும் ஒரே அணியாக இணைந்து ஒருவருக்கொருவர் பரஸ்பரம் உதவிகளை நல்கி, அப்பகுதி மக்களின் மீள்குடியேற்றம், விவசாய அபிவிருத்தி உட்பட பலதரப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களுக்கு சிறந்த சேவைகளை செய்து வருவதாகவும், இராணுவத்தினர் சிவில் நிர்வாகத்தில் அநாவசியமாக தலையிடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டில் எவ்வித உண்மையுமில்லை என்று யாழ் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

வடபகுதியில் தற்போது பூரண சமாதானம் நிலவியுள்ளமையால் அங்குள்ள ஹோட்டல்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் சிறப்பான முறையில் தமது நடவடிக்கை களை மேற்கொண்டு வருகின்றன.

அத்துடன், உல்லாச பிரயாணிகளின் வருகையும் நாளாந்தம் அதிகரித்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

ஐ.நா. அறிக்கைக்கு எதிராக மட்டு.மாநகர சபையில் கண்டனத்தீர்மானம்



ஐ.நா. நிபுணர்குழு அறிக்கைக்கு எதிராக மட்டக்களப்பு மாநகர சபை கண்டனத் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.

இன்று காலை மாநகர மேயர் திருமதி சிவகீதா பிரபாகரன் தலைமையில் கூடிய மாநகர சபை உறுப்பினர்கள் கண்டனத்தீர்மானத்தை நிறைவேற்றினர்.

ஸ்ரீலங்காசுதந்திரக் கட்சி மற்றும் புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப் உறுப்பினர்கள் இவ்வமர்வில் கலந்து கொண்டனர்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஈரோஸ், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிகளின் உறுப்பினர்கள் சபையில் சமுகமளித்திருக்கவில்லை. இதேவேளை கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் உறுப்பினரும் பிரதி மேயருமான ஜோர்ஜ் பிள்ளையும் இவமர்விற்கு சமுகமளித்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...