1 டிசம்பர், 2010

நீதி அமைச்சின் கீழ் இராணுவ நீதிமன்றம் இன்மையால் அது சட்டத்துக்குட்பட்டதல்ல: ரணில்

அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டத்தின் பிரகாரம், நீதியமைச்சின் கீழ் வருகின்ற விடயதானங்களில் இராணுவ நீதிமன்றம் குறித்து குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. எனவே இராணுவ நீதிமன்றம் சட்டத்திற்கு உட்பட்டதல்ல என்பதும் தெளிவாகியுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்று சபையில் விளக்கமளித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வரவு செலவுத் திட்ட முதலாவது நாள் குழுநிலை விவாதத்தை ஆரம்பித்து வைத்துப்பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க இங்கு மேலும் கூறுகையில்: இந்நாட்டில் நல்லாட்சியொன்றையே எதிர்பார்த்திருக்கின்றோம். இந்த நிலையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவுத்திட்டத்தின் பிரகாரம் அமைச்சுகளுக்கும் அதன் கீழ் வருகின்ற நிறுவனங்களுக்கும் ஒதுக்கப்படுகின்ற நிதியானது பாராளுமன்றத்தின் அங்கீகாரத்தைப் பெற்றிருக்கவேண்டும்.

அதன்படி இங்கு குறிப்பிடப்பட்டுள்ள நீதியமைச்சின் கீழ் உயர் நீதிமன்றம் ,மேன்முறையீட்டு நீதிமன்றம், மேல் நீதிமன்றம், நீதிவான் நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம் மற்றும் தொழில் நீதிமன்றம் என சகல நீதிமன்றங்கள் குறித்தும் குறிப்பிடப்பட்டிருக்கின்ற அதேவேளை இராணுவ நீதிமன்றம் தொடர்பில் இங்கு எதுவுமே கூறப்பட்டிருக்கவில்லை.

எனவே இராணுவ நீதிமன்றமானது சட்டத்துக்கு அமைவானது அல்ல என்பது தெளிவாகின்றது. வரவு செலவுத்திட்டத்தில் நீதியமைச்சுக்கான விடயதானங்களில் இராணுவ நீதிமன்றம் குறித்து குறிப்பிடப்படாததால் அது சட்டத்துக்கு உட்பட்டதல்ல எனக்கூறுவதற்கு எமக்கு உரிமை இருக்கின்றது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் பாகிஸ்தானின் ஜனாதிபதி இங்கு வந்திருந்தபோது உரையாற்றுகையில் தமது நாட்டில் அரசியல் கைதிகள் என எவரும் இல்லை என்று தெரிவித்தார். அதே போல் மியன்மாரிலும் அரசியல் கைதிகள் இல்லையெனத் தெரிவித்தார். ஆனாலும் எமது நாட்டில் அரசியல் கைதிகள் இருக்கின்றனர். முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா இன்று அரசியல் கைதியாக இருக்கிறார்.

பாகிஸ்தான் ஜனாதிபதி ஆஸிப் அலி சர்தாரி இலங்கையின் நிலைமைகளை அறிந்து கொண்டுதான் இவ்வாறு தெரிவித்திருக்கின்றார். எனவே சரத்பொன்சேகாவை விடுதலை செய்து பாகிஸ்தான் மற்றும் மியன்மாரைப் போன்று அரசியல் கைதிகள் இல்லாத நாடாக இலங்கை மாற்றப்படவேண்டும் என்று கேட்கிறேன் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

சரணடைந்த புலி உறுப்பினர் தப்பியோட்டம்








இறுதிக்கட்ட யுத்தத்தின் போது சரணடைந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த சந்தேக நபர் ஒருவர் ஓமந்தை முகாமில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் திணக்களம் அறிவித்துள்ளது.

கிளிநொச்சியைச் சேர்ந்த ராஜதுரை சசிசந்திரன் என்ற நபரே தப்பிச் சென்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும் இங்கே தொடர்க...

திருக்கோயில் கடலில் காணாமல்போன இளைஞர்களில் ஒருவர் இன்று சடலமாக மீட்பு

அம்பாறை திருக்கோவில் கடலில் நேற்று செவ்வாய்க்கிழமை காணாமல் போன இரு இளைஞர்களில் ஒருவரின் சடலத்தை பொலிஸார் இன்று காலை மீட்டுள்ளனர்.

பதுளையைச் சேர்ந்த வி. செல்வக்குமார் (வயது 21) என்ற இளைஞனின் சடலத்தையே இன்று காலை 9.10 மணியளவில் திருக்கோவில் பொலிஸார் மீட்டுள்ளனர்.

குளிக்கச்சென்ற இடத்திலிருந்து ஒரு மைலுக்கு அப்பால் மேற்படி இளைஞனின் சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விளைஞனின் சடலம் திருக்கோவில் பொது வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

மற்றைய இளைஞனின் சடலத்தை தேடும் பணியில் பொலிஸாரும் பொதுமக்களும் ஈடுப்பட்டுவருகின்றனர்
மேலும் இங்கே தொடர்க...

பிரிட்டன் செல்வோருக்கு ஆங்கிலப் பரீட்சை : நேற்று முதல் அமுல்

பிரிட்டனுக்குள் பிரவேசிக்கும் ஐரோப்பியர் அல்லாதவர்கள் ஆங்கில மொழிப் பரீட்சையொன்றுக்குத் தோற்ற வேண்டும் என்ற புதிய நடைமுறை நேற்று முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

பிரிட்டிஷ் பிரஜைகளுக்கு அல்லது பிரிட்டனில் குடியேறி இருப்பவர்களுக்கு பங்காளிகளாக அல்லது வாழ்க்கைத் துணையாக வர விரும்பி பிரிட்டன் செல்வதற்கு விசா கோரி விண்ணப்பிப்பவர்கள் இந்த ஆங்கிலப் பரீட்சைக்குத் தோற்றவேண்டும்.

தற்காலிக விசாவுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு இது தேவையில்லை. புள்ளி அடிப்படையில் விசா பெறும் மாணவர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் இது தேவையில்லை.

மேற்படி விசாவுக்கு விண்ணப்பிப்போர் அடிப்டையில் தங்களுக்கு ஆங்கிலம் பேசவும், புரிந்து கொள்ளவும் முடியும் என்பதை நிரூபிக்க வேண்டும். பிரிட்டிஷ் எல்லை முகவராண்மையின் அங்கீகாரம் பெற்ற வினாத்தாள் ஒன்றுக்கே இவர்கள் முகம் கொடுக்க வேண்டும்.

விசாவுக்கு விண்ணப்பிப்பதற்கு முன் இந்தப் பரீட்சைக்குத் தோற்றி அதில் சித்தியடைந்த சான்றிதழுடனேயே விசா விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கேட்கப்பட்டுள்ளது.

பிரிட்டனின் பட்டப்படிப்பு கற்கைநெறிச் சான்றிதழ் ஒன்றை சமர்ப்பிப்பதன் மூலமும் இந்தப் பரீட்சைக்குத் தோற்றுவதைத் தவிர்க்கலாம். அப்படியாயின் கற்கை நெறியின் அசல் சான்றிதழழைச் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் இங்கே தொடர்க...

சிரேஷ்ட அமைச்சர்களால் சபையில் எழுந்த சர்ச்சை

2011 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மீதான குழுநிலை விவாதம் நேற்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் ஆரம்பித்துவைக்கப்படுவதற்கு முன்பாக சிரேஷ்ட அமைச்சர்கள் தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவினால் எழுப்பப்பட்ட கேள்வியினால் சபையில் சர்ச்சை ஏற்பட்டது.

சிரேஷ்ட அமைச்சர்களுக்கான நிதியொதுக்கீடு தொடர்பிலேயே எதிர்க்கட்சித் தலைவர் நேற்று சபையில் கேள்வியெழுப்பினார். இதனையடுத்து ஆளும் எதிர்க்கட்சி உறுப்பினர்களிடையே காரசாரமான விவாதங்கள் எழுந்தன. இதன்போது சபாநாயகரின் அறிவுறுத்தல்களும் கவனத்திற்குக் கொள்ளப்படாத நிலையில் இரு தரப்பு உறுப்பினர்களும் உரத்த தொனியில் தமது வாதங்களை முன் வைத்தனர். இதற்கிடையே கூச்சல் குழப்பங்களும் ஏற்பட்டன.

நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பாராளுமன்ற அமர்வுகளின் பிரதான நடவடிக்கைகளின் பின்னர் குழுநிலை விவாதம் நடத்தப்படுவதற்கான அறிவித்தலை சபாநாயகர் விடுத்தார். இதற்கிடையில் ஒழுங்கு பிரச்சினையொன்றைக் கிளப்பிய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, புதிய அமைச்சரவையில் சிரேஷ்ட அமைச்சர்களாக 10 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான நிதியொதுக்கீடுகள் குறித்து இந்த வரவு செலவுத் திட்டத்தில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

மேலும் இந்த அமைச்சர்களுக்கென செயலாளர்கள் இல்லை. இவர்களுக்கு அதிகாரங்கள் இல்லை. சிரேஷ்ட அமைச்சர்கள் என்பதற்குப் பதிலாக இவர்கள் இணை அமைச்சர்களாக நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த வரவு செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற சந்தர்ப்பத்தில் நியமிக்கப்பட்டுள்ள 10 சிரேஷ்ட அமைச்சர்களில் மூவரே இங்கு அமர்ந்துள்ளனர் என்றும் கூறி விட்டு சபையை விட்டு வெளியேறினார்.

இவ்வாறு ரணில் விக்கிரமசிங்க பேசிக் கொண்டிருந்த போதும் வெளியேறிய போதும் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் மற்றும் ஆளும் கட்சி எம்.பி.க்கள் தொடர்ச்சியான இடையூறுகளை ஏற்படுத்திக் கொண்டிருந்தனர். இதன்போது ஒழுங்கு பிரச்சினையொன்றைக் கிளப்பிய அமைச்சர் விமல் வீரவங்ச கூறுகையில், எதிர்க்கட்சித் தலைவரின் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை. ஏனெனில் அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர்களை அறிமுகப்படுத்தியவரே ரணில் விக்கிரமசிங்கதான். எனவே தற்போதைய சிரேஷ்ட அமைச்சர்கள் குறித்து அவரால் கேள்விகளை எழுப்ப முடியாது என்றார்.

இதனையடுத்து கருத்து தெரிவித்த தயாசிறி ஜயசேகர எம்.பி. கூறுகையில், சிரேஷ்ட அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளவர்களுக்கு நிதியொதுக்கப்படுகின்றதா இல்லையா என்ற கேள்வி ஒரு புறத்தில் இருந்தாலும் அவர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கின்ற பொறுப்புக்கள் என்னவென்பதே எமது கேள்வியாக இருக்கின்றது என்றார்.

இதனையடுத்து கூறிய ரவி கருணாநாயக்க எம்.பி. ஐக்கிய தேசியக் கட்சியைப் பொறுத்தவரையில் எமது அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர்கள் நியமிக்கப்பட்டாலும் அவர்கள் விடயத்தில் கட்சி நியாயமாகவே நடந்து கொண்டது. ஆனால் அவ்வாறு இந்த அரசாங்கத்தில் இல்லை. இதனைத்தான் கேட்கிறோம் என்றார்.

இதன்போது பதிலளித்த சபை முதல்வரும் அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா, சிரேஷ்ட அமைச்சர்களுக்கு நிதி ஒதுக்கம் இல்லையென்றும் அவர்களுக்கு பொறுப்புக்கள் கையளிக்கப்படவில்லை என்றும் இங்கு விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. எனினும் அவர்களுக்கு பொறுப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன. நிதிகள் ஒதுக்கப்பட்டள்ளன என்றார்.

அமைச்சர் நிமல் சிறி பால டி சில்வா இவ்வாறு பதிலளித்துக் கொண்டிருந்த சந்தர்ப்பத்திலும் ஆளும் எதிர்க்கட்சிகளிடையே கூச்சலும் குழப்ப நிலையும் காணப்பட்டது.

இந்நிலையில் சிரேஷ்ட அமைச்சர்களுக்கு தேவையான நிதியானது ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவித்த சபாநாயகர் சமல் ராஜபக்ஷ இவ்விடயத்தை இத்துடன் முடித்துக் கொள்ளுமாறு கேட்டதுடன் அடுத்த பணிகளுக்கு செல்ல விருப்பதாகவும் அறிவித்தார்.

சபையின் கூச்சல் குறைந்திராத போதிலும் தயாசிறி எம்.பி. தொடர்ந்தும் ஒழுங்கு பிரச்சினை எழுப்பிக் கொண்டிருந்தார். ஒழுங்கு பிரச்சினைக்கு சந்தர்ப்பம் அளிக்குமாறு வெகு நேரமாக சபாநாயகரைக் கேட்டுக் கொண்டிருந்த தயாசிறிக்கு அதற்கான அனுமதி வழங்கப்பட்டது. சம்பந்தப்பட்ட விடயம் தொடர்பில் எதுவும் பேசக் கூடாது. அது முடிவு அறிவிக்கப்பட்ட விடயம் எனக் கூறி எச்சரித்தார்.

இருந்தும் தயாசிறி எம்.பி அரசியலமைப்பைச் சுட்டிக்காட்டி பழைய கதைக்கே வந்த போது அவரது ஒலிவாங்கி முடக்கப்பட்டு விட்டது.
மேலும் இங்கே தொடர்க...

பலாலியில் இந்திய சர்வதேச விமானநிலையம்?:உண்மைத்தன்மையை வெளிப்படுத்த கோரிக்கை

இந்திய விமான சேவைகள் அதி கார சபையினூடாக பலாலியில் சர்வதேச இந்திய விமான நிலையம் ஒன்று அமைக்கப்படவிருப்பதாகவும், இது தொடர்பிலான மதிப்பீட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் வெளிவருகின்ற தகவல்கள் தொடர்பிலான உண்மைத் தன்மையை அரசாங்கம் பாராளுமன்றத்துக்கு அறிவிக்கவேண்டும் என்று ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்த நாயக்க நேற்று சபையில் அரசாங்கத்தை வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வரவு செலவுத் திட்டம் மீதான குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு வலியுறுத்தினார்.

திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி. இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில் இந்திய விமான சேவை அதிகார சபை இங்கு விமான நிலையம் ஒன்றை அமைப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் இதனடிப்படையில் பலாலி விமான தளம் தொடர்பிலான மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த செய்திகளுக்கு அரச தரப்பிலிருந்து இதுவரையில் மறுப்புகள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

இது இவ்வாறிருக்க எமது நாட்டில் விமான நிலையம் ஒன்றை அமைக்கவேண்டும் என்றும் அதற்கு 400 முதல் 450 கோடி ரூபா வரையில் செலவிடவிருப்பதாகவும் இந்திய விமான சேவை அதிகார சபை அறிவித்திருக்கின்றது.

வடக்கிற்கான படைக் கட்டளைத் தலைமையகம் பலாலியிலேயே அமைத்துள்ளது. பலாலி விமான தளமானது பாதுகாப்பு மற்றும் சிவில் விமானப் போக்குவரத்துக்காகவும் பயன்படுத்தப்படுகின்றது. இவ்வாறானதோர் இடத்தில் சர்வதேச விமான நிலையமொன்றை அமைக்கும் பட்சத்தில் அங்கு பாதுகாப்பு சேவைகளுக்கு இடையூறுகள் ஏற்படும் அதுமட்டுமன்றி இந்திய விமான சேவை அதிகார சபைக்கு பலாலியை கொடுப்பதானது இரகசியமாக மேற்கொள்ளப்படவேண்டிய விடயமல்ல இதிலுள்ள உண்மை நிலைவரங்கள் தொடர்பில் அரசாங்கம் இந்த பாராளுமன்றத்துக்கு அறிவிக்க வேண்டும் எனக்கேட்டுக்கொள்கிறோம்.

அரசியலமைப்பின் 18 ஆவது திருத்தத்தை அவசர அவசரமாகக் கொண்டு வந்து நிறைவேற்றிக்கொண்டது மட்டுமல்லாது சுயாதீன ஆணைக்குழுக்களை நியமிப்பதே இதன் முக்கிய நோக்கம் என்றும் பாராளுமன்ற சபையை ஸ்தாபித்து அதனூடாக ஆணைக்குழுக்களை அமைப்பதாகவும் அரசாங்கத்தினால் கூறப்பட்டது. ஆனால் 18 ஆவது திருத்தத்தை கொண்டு வந்து நிறைவேற்றிக் கொள்வதற்கு இருந்தவேகம் சுயாதீன ஆணைக்குழுக்களை நியமிப்பதில் அரசாங்கத்திடம் இல்லை.

இது ஒரு புறமிருக்க நடை முறையிலுள்ள ஆணைக்குழுக்கள் அனைத்தும் செயலிழந்து கிடக்கின்றன. எனவே சுயாதீன ஆணைக்குழுக்களை உடனடியாக நியமிக்கவேண்டும், மேலும் கஷ்டப்படுகின்றவர்களுக்கும் தொழில் இல்லாதவர்களுக்கும் என்றே ஜனாதிபதி நிதியம் ஆரம்பிக்கப்பட்டது. எனினும் அந்த நிதியத்தின் நோக்கம் நிறைவேற்றப்படுவதாகத் தெரியவில்லை.

ஜனாதிபதி நிதியத்தின் கட்டுப்பாட்டுச் சபையானது நீண்ட நாட்களாக கூடாமல் இருக்கின்றது. நிதியத்தின் செயற்பாடுகளிலும் வெளிப்படைத் தன்மையைக் காண முடியவில்லை. நிதியத்திலிருந்து வசதியில்லாதவர்களுக்கும் கஷ்ட நிலைக்கு உள்ளாகியவர்களுக்கும் நிதியுதவி வழங்கப்படுகின்றனவா என்பதில் சந்தேகம் தான் நிலவுகின்றது என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

முல்லைத்தீவு மாவட்டம் எஞ்சியுள்ள குடும்பங்கள் இம்மாத இறுதிக்குள் மீள்குடியேற்றம் அரசாங்க அதிபர் வேதநாயகம்


முல்லைத்தீவு மாவட்டத்தில் எஞ்சியுள்ள சுமார் ஆறாயிரம் குடும்பங்களை இந்த மாத இறுதிக்குள் தங்களது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்த தேவையான சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் என். வேதநாயகம் தெரிவித்தார்.

மீள்குடியேற்ற நடவடிக்கைகளை விரைவில் பூர்த்தி செய்யும் வகையில் கண்ணிவெடிகளை அகற்றும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து இடம்பெயர்ந்தவர்களில் இதுவரை 22 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 62 ஆயி ரம் மக்கள் தத்தமது சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள துணுக்காய், மாந்தை கிழக்கு, ஒட்டுசுட்டான், கரைதுறைப்பற்று மற்றும் புதுக்குடியிருப்பு ஆகிய ஐந்து உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளிலுள்ள ஆறாயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 19 ஆயிரம் பொதுமக்கள் மாத்திரமே மீளக் குடியமர்த்தப்படவுள்ளனர் என்றும் அரசாங்க அதிபர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைய பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி ஆகியோரின் வழிகாட்டலில் இதற்கான சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார். இதேவேளை, எதிர்வரும் வெள்ளிக் கிழமை முறிகண்டி பிரதேசத்தில் 150 குடும்பங்கள் மீளக் குடியமர்த்தப் படவுள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உள்ள தேவாவில் கிராம சேவகர் பிரிவில் 224 குடும்பங்களைச் சேர்ந்த 722 மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்டதாகவும் என். வேதநாயகம் தெரிவித்தார்.

இதேவேளை முல்லைத்தீவு நகர், ஒட்டுசுட்டான், முள்ளியாவளை, பாண்டியன் குளம் மற்றும் மல்லாவி ஆகிய பகுதிகளுக்கு தற்போது மின்சார விநியோகம் வழங்கப்பட்டுள் ளதாகவும் எஞ்சிய பகுதிகளுக்கு அடுத்த ஆண்டு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...

டெங்கு ஒழிப்புக்கென 500 மில். ரூபா ஒதுக்கீடு


டெங்கு ஒழிப்பு செயற்திட்டங்களுக்கென அரசாங்கம் 500 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதாக பிரதி சுகாதார அமைச்சர் லலித் திசாநாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அரசாங்கம் டெங்கு ஒழிப்புக்கான சவாலை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளதால் டெங்கு நோய் பரவுதல் பெருமளவு கட்டுப்படுத்தப்பட் டுள்ளது எனக் குறிப்பிட்ட பிரதி அமைச்சர் கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் டெங்கு நோய் வெகுவாகக் குறைந் துள்ளதாகவும் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வாய் மூல விடைக்கான வினாக்கள் வேளையில் ஐ. தே. க. எம்.பி ரவி கருணாநாயக்க எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளித்த பிரதியமைச்சர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்:- 2005ம் ஆண்டு முதல் டெங்கு ஒழிப்புத் திட்டத்திற்காக 50 மில்லியன் ரூபா நிதியே ஒதுக்கப்பட்டுள்ளது. 2010ம் ஆண்டில் அது 500 மில்லியன் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கம் டெங்கு நோய் பரவும் மாவட்டங்களில் அதனை ஒழிப்பதற்கான பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. இதனால் கடந்த மூன்று மாதங்களில் டெங்கு நோயினால் பாதிக் கப்படுவோர் தொகை குறைவடைந்துள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

ஐ. தே. க. ஆட்சியிலேயே புதுப்புது பெயர்களில் அமைச்சுக்கள்



ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக் காலத்தில் அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர்கள், மாவட்ட அமைச்சர்கள், ராஜாங்க அமைச்சர்கள் என புதுப்புது பெயர்களில் அமைச்சர் பதவிகளை வழங்கிய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு தற்போதைய அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர்கள் பற்றி பேசுவதற்கு எந்த அருகதையும் கிடையாது என அமைச்சர் விமல் வீரவன்ச பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க முன்வைத்த சர்ச்சையொன்றுக்குப் பதிலளித்த போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வரவு-செலவுத் திட்டம் மீதான குழு நிலை விவாதத்தில் எதிர்க்கட்சியின் சார்பில் ஜோன் அமரதுங்க எம்.பி. உரையாற்றிக் கொண்டிருந்தபோது இடை நடுவில் குறுக்கிட்ட எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க; புதிய அமைச்சரவை நியமனத்தில் சிரேஷ்ட அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம், பொறுப்புகள் மற்றும் நிதியொதுக்கீடு சம்பந்தமாக கேள்வியெழுப்பினார்.

இதன்போது அமைச்சர் விமல் வீரவன்ச புதிய சிரேஷ்ட அமைச்சர்கள் தொடர்பாக தெளிவுபடுத்தினார். சகல சிரேஷ்ட அமைச்சர்களுக்கும் உரிய பொறுப்புகளும் அதற்கான நிதியொதுக்கீடுகளும் வழங்கப்பட்டுள்ளன என்பதை எதிர்க்கட்சித் தலைவர் விளங்கிக்கொள் வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதன்போது விளக்கமளித்த சபை முதல்வர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, மேற்படி சிரேஷ்ட அமைச்சர்களின் செயற்பாடுகள் சம்பந்தமாக வர்த்தமானியில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் அவர்களுக்கான நிதி ஒதுக்கப்படவில்லை என்பதையும் திட்டவட்டமாக நிராகரித்தார். மூலதன செலவினம் உட்பட சகலவற்றிற்கும் அவர்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 45வது சரத்துக்கமைய பிரதமருடன் கலந்துரையாடி ஜனாதிபதியானவர் சிரேஷ்ட அமைச்சர்களை நியமிக்கமுடியும். இவர்களுக்கு வெவ்வேறாக நிதி ஒதுக்கப்படாவிட்டாலும் பொதுவாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

இது தொடர்பான சர்ச்சை நேற்று சபையில் சில நிமிடங்கள் நீடித்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் ஜனாதிபதி நாளை உரை

ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத் தின் மாணவர் சங்கத்தின் கூட்டத்தில் நாளை (02) ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விசேட உரையாற்றுகிறார்.

1823 முதல் 187 வருட ஒக்ஸ் போர்ட் பல்கலைக்கழக சரித்திரத்தில் உரையாற்றுமாறு இரண்டு முறை அழைக்கப்பட்ட ஒரேயொரு நாட்டுத் தலைவர் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆவார்.

அத்துடன் அண்மைக் காலத்தில் ஆசிய வலயத்தில் உருவான தரிசனத்துடன் கூடிய நாட்டுத் தலைவராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இனங்காணப்பட்டுள்ளமை இதற்கு காரணமாகும்.

இதற்கு முன் 2008 ஆம் ஆண்டு மே மாதம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ‘கிராமிய பொருளாதாரத்தை பலப்படுத்துதல் மற்றும் தேசிய அபிவிருத்திக்கான உபாய மார்க்கங்கள்’ என்ற தொனிப்பொரு ளில் ஒக்ஸ்போர்ட் மாணவர் சங்கத்தில் உரையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உலகின் பழைமையான பல் கலைக்கழகங்களில் ஒன்றாகும். உலகின் உயர் மட்ட வல்லுனர்கள் மற் றும் அரசியல் தலைவர்கள் பலர் இங் கிருந்து உருவாகியுள்ளனர். அத்துடன் உலகின் உயர்மட்ட தலைவர்கள், வல்லுனர்கள் பலர் ஒக்ஸ்போர்ட் மாணவ சங்கத்தில் உரையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆசிய தலைவர்களான ஜவஹர்லால் நேரு, பெனாசிர் பூட்டோ, லீக்வான் யு, மஹதீர் மொஹமட் மற்றும் இலங்கையைச் சேர்ந்த எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்க, லலித் அத்துலத் முதலி ஆகியோர் அங்கு விசேட உரையாற்றியுள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

உணவுப் பொருட்கள் கூ.மொ.வி. கடைகளில் இன்று முதல் விலை குறைப்பு அரிசி, ரின்மீன், பயறு, கடலை, நெத்தலி, பாஸ்மதி உள்ளடக்கம்


பண்டிகைக் காலத்தில் அரிசி விலை உயர்வதை கட்டுப்படுத்துவதற்காக இன்று முதல் அரசாங்க களஞ்சியங்களில் உள்ள அரிசி, குறைந்த விலையில் சந்தையில் விற்பனை செய்யப்பட உள்ளதாக வர்த்தக நுகர்வோர் விவகார அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாந்து தெரிவித்தார்.

இது தவிர இன்று முதல் லக்சதொசவில் டின் மீன், பயறு, கடலை, நெத்தலி, பாஸ்மதி அரிசி, ஆகிய அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

கடந்த பெரும் போகத்தின் போது கொள்வனவு செய்யப்பட்டு ஹிங்குரக்கொட அரிசி ஆலையில் அரிசியாக மாற்றப்பட்ட 300 மெற்றிக் தொன் அரிசியை சந்தைக்கு விநியோகிக்கும் வைபவம் நேற்று கொழும்பு 10 இல் உள்ள சதொச களஞ்சியத்தில் இடம்பெற்றது. இதனை முன்னிட்டு இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கையிலே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர்,

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்புரைக்கமைய எமது களஞ்சியங்களில் வைக்கப்பட்டுள்ள அரிசியை விலையேற்றத்திற்கு ஏற்ப சந்தையில் இட நடவடிக்கை எடுத்துள்ளோம். இதன்படி முதற் கட்டமாக 300 மெற்றிக் தொன் அரிசி நாடு பூராகவும் உள்ள லக் சதொசகளுக்கு விநியோகிக்கப்பட்டு இன்று முதல் குறைந்த விலைக்கு விற்கப்படும். மொத்த விற்பனையாளர்களுக்கும் குறைந்த விலையில் வழங்கப்படும்.

சந்தையில் சம்பா 70 ரூபாவுக்கும் நாட்டரிசி 60 ரூபாவுக்கும், வெள்ளைப் பச்சை அரிசி 54 ரூபாவுக்கும், சிகப்பு பச்சை அரிசி 60 ரூபாவுக்கும் விற்கப்படுகிறது. ஆனால் இன்று முதல் லக்சதொச ஊடாக சம்பா அரிசி 63.50 ரூபாவுக்கும், நாட்டரிசி 58.50 ரூபாவுக்கும், வெள்ளை பச்சை அரிசி 45.50 ரூபாவுக்கும் சிகப்பு பச்சை அரிசி 53.50 ரூபாவுக்கும் விற்கப்படும். பண்டிகை காலத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரிக்க இடமளிக்க மாட்டோம்.

இதேவேளை சந்தை விலைகளைவிட சதொசவில் குறைந்த விலைக்கு அத்தியாவசி யப் பொருட்கள் விற்கப்படுகின்றன.

ன்று முதல் அவற்றின் விலைகள் மேலும் குறைக்கப்படும். சதொசவில் 185 ரூபாவாக உள்ள டின் மீன் 5 ரூபாவினாலும் 85 ரூபாவாக உள்ள பாஸ்மதி அரிசி 5 ரூபா வினாலும் பயறு 5 ரூபாவினாலும் கடலை 7 ரூபாவினாலும் நெத்தலி மீன் 10 ரூபாவினாலும் குறைக்கப்பட்டு ள்ளன.

அரசாங்கம் அதிக வரி விதித்துள்ளதாலேயே அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளதாக ஐ. தே. க. தெரிவிக்கும் குற்றச்சாட்டு முற்றிலும் தவறானதாகும். மொத்த வியாபாரிகள் செயற்கையாக விலைகளை உயர்த்துவதே விலை உயர்வுக்குக் காரணம். தேவையின்றி அரிசி விலைகளை உயர்த்தினால் கட்டுப்பாட்டு விலை அமுல்படுத்தப்படும்.

உலக சந்தையிலும் உள்நாட்டு சந்தையிலும் பொருட்களின் விலைகள் குறித்து 24 மணி நேரமும் கவனித்து வருகிறோம் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

Shri. S.M.Krishna M.P.,















01.12.2010.
தமிழ் கட்சிகளின் அரங்கத்தின் மகஜர் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் கையளிப்பு- இந்திய வெளியுறவமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணாவிடம் கையளிப்பதற்காக தமிழ் கட்சிகள் அரங்கத்தினால் தயாரிக்கப்பட்ட தமிழ் மக்களின் பிரச்சினைகள் அடங்கிய மகஜர் நேற்றையதினம் காலை கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் கையளிக்கப்பட்டுள்ளது. தமிழ்க் கட்சிகளின் அரங்கத்தில் அங்கம் வகிக்கும் புளொட் அமைப்பின் தலைவர் த.சித்தார்த்தன், ஈழ ஏதிலியர் மறுவாழ்வுக் கழகத்தின் தலைவர் செ.சந்திரகாசன், பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பின் பொதுச்செயலாளர் ரி.சிறிதரன் உள்ளிட்ட பிரதிநிதிகளால் மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது. இந்திய வெளியுறவமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணாவுடனான சந்திப்பு சீரற்ற காலநிலை காரணமாக இடம்பெறாத நிலையில் அவரிடம் கையளிப்பதற்காகவே இந்த மகஜர் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


Shri. S.M.Krishna M.P.,

Honorable Minister for External Affairs,

Government of India.



Dear Sir,



We wish to thank you for the opportunity afforded to us to meet with you today.



We, the Tamil political parties have come to an understanding and constituted a common forum to strive for a permanent political solution to the ethnic problem and also to work towards solving the immediate issues faced by the Tamil people.



In this context, we have initiated discussions with the other concerned political parties including the TNA with a view to forge a consensus on the question of a political solution to the national question of Sri Lanka.



We believe that the political solution should be found within the frame work of a united Sri Lanka thus enabling the Tamil people to participate fully in their own governance in the North – East. The implementation of the 13th amendment in full will be a positive beginning of the political process in this regard.



Fully conscious of the historical, cultural, religious and linguistic ties the Tamil people of Sri Lanka have been having with the people of your great country since times immemorial and recognizing the efforts taken and endeavours made by your great country with the noble objective of ensuring equality and justice to the Tamil people during the last several decades, it is our fond hope and fervent appeal that these efforts and endeavours should be taken forward in order to culminate soon in the evolution of a viable political solution to the national question of Sri Lanka that shall redress the long – felt political grievances of our people and satisfy their legitimate political aspirations within the frame work of a united Sri Lanka.



It is against this background we seek your kind indulgence to submit for your kind and urgent attention some important issues that concern the interests and well being of our people.



  1. Meaningful Resettlement



Although majority of the Internally Displaced Persons have been sent back to their former places of habitation, they have not been settled with adequate basic facilities.

a) They are living in temporary shelters and tents.

b) Some of the IDP’s have not been allowed to access their houses and properties on different grounds including the objection that they do not possess documents in proof of their claim.

c) The return and resettlement of the people who still remain in the welfare camps needs to be given priority.

  1. Providing adequate compensation for the people who lost their limbs, bread winners, family members and properties



While expressing our appreciation and gratitude for the various forms of assistance committed and provided by the government of India for the affected people in the North – East towards their resettlement and rehabilitation, we request that the Government of India be pleased to consider granting of more support and assistance to these people including:

(a) Livelihood assistance to widows and their dependant children, and orphaned children who have lost both their parents,

(b) Artificial limbs and other help to those who have lost their limbs.

(c) Support and assistance to repair / rebuild / improve their damaged or destroyed houses.

(d) Assistance to resettled farmers to restart / improve the cultivation of their lands.

(e) Support to improve animal husbandry and livestock.

(f) Support for fishing activities.

3. Steps taken to disturb the demographic composition and thereby disrupt national reconciliation



One of the main reasons for the discontent between the communities was the state sponsored colonization by successive governments in the past with the motive of altering the demographic composition in the North – East. Even today attempts are being made to do the same that obstructs the reconciliation between the communities.

We are concerned that the proposal to establish settlements of the members of the security forces and their families numbering many thousands will drastically alter the demographic composition in the Northern and Eastern provinces that had been recognized as the areas of historical habitation in the Indo-Sri Lanka accord of 1987. We are of the firm view that nothing should be done to disturb the demographic composition of the Northern and Eastern provinces and cause disruption of the process of national reconciliation.

  1. Civil Administration



We are of the considered view that the establishment of a full and complete civil administration without any involvement of the Security Forces in the Northern and Eastern provinces is the need of the hour to facilitate and ensure normalcy and the rule of law in this region.



We assure our cooperation in and support to every effort that the Government of India may take to achieve national reconciliation in Sri Lanka.


Thanking You,

Yours Sincerely,



V. Anandasangaree TULF

A. Rajamanickam EPDP

S.C. Chandrahasan TPF

S. Chandrakanthan TMVP

D. Sithadthan PLOTE

M.K. Shivajilingam TNLA

T. Sritharan P-EPRLF

P. Uthayarajah Sri-TELO

N. Kumaraguruparan DPF



மேலும் இங்கே தொடர்க...