15 பிப்ரவரி, 2011

டான்தமிழ்ஒளி தொலைக்காட்சியின் புதிய அலைவரிசை(11938)H



தொழில்நுட்ப காரணங்களால் தற்காலிகமாக ஐரோப்பிய நாடுகளில் இடைநிறுத்தப்பட்டிருந்த டான் தமிழ்ஒளி தொலைக்காட்சி நேற்று முதல் டான் யாழ் ஒளி என்ற பெயரில்(10.02.2011) புதுப்பொலிவுடன் மீண்டும் ஒளிபரப்பாகின்றது
யாழ்ப்பாணத்திலிருந்து மேலும் பல புதிய நிகழ்ச்சிகளுடன் டான் யாழ். ஓளி என்ற புதிய பெயரில் தற்போது ஒளிபரப்பாகி வருகின்றது.
டான்யாழ் ஒளி தொலைக்காட்சியின் அலைவரிசை விபரங்கள்
Eurobird-9 (9˚ East)
FREQUENCY : 11938 H
S/R : 27500, FEC : ¾
Name: Yaarl Oli

மேலும் இங்கே தொடர்க...

நாட்டில் தமிழீழ அரசாங்கத்தை அமைக்கும் முயற்சியில் புதிய பங்குதாரராக ஜே.வி.பி.

உள்நாட்டின் பல தரப்புக்களின் அனுசரணையுடன் தமிழீழ அரசாங்கத்தை அமைப்பதற்கு சர்வதேசத்தில் பாரிய முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இத்திட்டத்தில் புதிய பங்குதாரராக ஜே.வி.பி. இணைந்துள்ளது என்று ஜாதிக ஹெ ல உறுமயவின் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் தலைவருமான எல்லாவல மேதானந்த தேரர் தெரிவித்தார்.

நாட்டைத் துண்டாடும் இவ்வாறான நடவடிக்கைகளினால் மீண்டும் பாதிக்கப்பட போவது அப்பாவி தமிழ் மக்களேயாவர். எனவே அரசாங்கம் நாட்டிற்கு ஏற்படவுள்ள அச்சுறுத்தலான சூழ்நிலையை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் எல்லாவல மேதானந்த தேரர் மேலும் கூறுகையில், அண்மைக் காலமாக நாட்டிற்கு எதிராக செயற்படும் இனவாத சக்திகளின் செயற்பாடுகள் தீவிரமடைந்துள்ளது. ஜே. வி. பி. போன்ற கட்சிகள் சமஷ்டி முறைமை தொடர்பாக பேசும் அளவிற்கு மேற்படி இனவாத சக்திகள் தேசிய அரசியலுக்குள் ஊடுருவியுள்ளன. இதனை சாதாரண விடயமாக கருத முடியாது.

சமஷ்டி ஆட்சி முறைமை என்பது இரண்டு அல்லது அதற்கு மேலான வெவ்வேறு அரசாங்கம் உள்ள ஒரு நாட்டில் முன்னெடுக்கப்படும் ஆட்சியாகும். இதனை இலங்கைக்கு அறிமுகம் செய்வது என்பது நாடு துண்டாடப்பட்டு தமிழீழம் உருவாக்கப்படும் என்பதே ஆகும். எனவே தான் இந்த நாட்டின் மக்களும் தற்போதைய அரசாங்கமும் மேற்படி முறைமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அதே போன்றுதான் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் தற்போது மகாநாயக்க தேரர்களையம் தெற்கின் அரசியல் தலைவர்களையும் சந்தித்து அரசியல் தீர்வு குறித்து பேசப் போகின்றனர். ஒரு அரசாங்கம் உள்ள இலங்கையின் தனி இனத்திற்காக வேறு விசேட வரப்பிரசாதங்களோ அரசியல் உரிமைகளோ வழங்க முடியாது. சகல மக்களிற்கும் அரசியல் மற்றும் ஏனைய உரிமைகளையே வழங்க முடியும்.

இதனை தற்போதைய அரசாங்கம் சிறப்பாக செய்து வருகின்றது எனக் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

நெடுந்தீவு மக்களுக்கு புதிய பயணிகள் போக்குவரத்துக் கப்பல்


நெடுந்தீவு மக்களக்கு பயணிகள் போக்குவரத்துக் கப்பலொன்றை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கியுள்ளார்.

இக்கப்பலானது 800 இலட்சம் ரூபா பெறுமதியானது. சமய வழிபாடுகளைத் தொடர்ந்து இக்கப்பல் நெடுந்தீவிற்கான தனது பயணத்தினை ஆரம்பித்தது. இந்நிகழ்வில் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா, யாழ். மேலதிக அரசாங்க அதிபர் ரூபிணி வரதலிங்கம், தீவகம் வடக்கு பிரதேச செயலாளர் சிறிமோகனன், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் வட மாகாணப் பணிப்பாளர் மரியதாஸ் ஆகியோர் உடனிருந்தனர்.
மேலும் இங்கே தொடர்க...

வெள்ளை வானில் சுற்றிய ஐவர் கைது: சாவகச்சேரியில் சம்பவம்



வெள்ளை வானில் சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றித்திரிந்த ஐவரை பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்துள்ளனர். இந்தச் சம்பவம் சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியிலேயே நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.

வீதி ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸாரே இவர்களை கைதுசெய்துள்ளதாகவும், அவர்களில் ஒருவர் தப்பியோடிவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. சாவகச்சேரி இந்துக் கல்லூரிக்குப் பின்புறமாகவுள்ள வீதிவழியாக வந்துகொண்டிருந்த மேற்படி வெள்ளை வானை மறித்து சோதனையிட்ட பொலிஸார், அதில் பயணம் செய்த மேற்படி ஐவரையும் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்துள்ளனர்.

பொலிஸார் தம்மை நோக்கி வருவதைக் கண்ட அவர்களில் ஒருவர், வானிலிருந்து இறங்கி தப்பியோடிவிட்டதாகவும், அவரைத் தேடும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் இங்கே தொடர்க...

தபால் மூலம் வாக்களிப்பதற்கு 3,21,595 பேர் விண்ணப்பம்



உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கு 3,21,595 பேர் விண்ணப்பித்துள்ளனர். கடந்த காலத் தேர்தல்களுடன் ஒப்பிடுகையில் இந்தத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கு விண்ணப்பித்தோரின் எண்ணிக்கை மிகவும் குறைவானதாகும் என்று தேர்தல்கள் திணைகளம் தெரிவித்துள்ளது.

2010 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலுடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை குறைந்துள்ளது. அந்தத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கு 4,77,742 பேர் விண்ணப்பித்திருந்தனர். மார்ச் 17ஆம் திகதி நடைபெறவிருக்கின்ற உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலுக் கான தபால்மூல வாக்குப்பதிவை மார்ச் 8ஆம், 9 ஆம் திகதிகளில் நடத்துவதற்கு தேர்தல்கள் திணைக்களம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் இங்கே தொடர்க...

ரயிலின் முன் பாய்ந்து யுவதி தற்கொலை: சீனன்குடாவில் சம்பவம்





கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கி சென்று கொண்டிருந்த ரயிலின் முன்னால் பாய்ந்து யுவதி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். நேற்றுக் காலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் சீனன்குடக்ஷிவை சேர்ந்த யுவதியே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டவராவார்.

கிணற்றடியில் உடைகளை கழுவிக் கொண்டிருந்த வேளையில் வந்த தொலைபேசி அழைப்பில் பேசிக் கொண்டிருந்த மகள் ரயிலைக் கண்டதும் அதன் முன் பாய்ந்ததாக அவரின் தந்தை பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் திருகோணமலை வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமான விசாரணைகளை சீனக்குடா பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

விபத்தில் ஒன்றரை வயது குழந்தை உட்பட இருவர் பலி


நிட்டம்புவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தனியார் பயணிகள் பஸ்ஸும் முச்சக்கர வண்டியொன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் பலியானதுடன் நால்வர் காயங்களுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர். குறித்த விபத்தின் போது முச்சக்கர வண்டியில் பயணித்த கடுகஸ்தோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய பாத்திமா சரீனா என்பவரும் அதே பிரதேசத்தைச் சேர்ந்த ஒன்றரை வயது குழந்தையொன்றும் பலியானதுடன் முச்சக்கர வண்டியில் பயணித்த சாரதி உட்பட ஏனையோரே காயமடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நேற்று முன்தினம் மாலை 4 மணியளவில் நிட்டம்புவ பொலிஸ் பிரிவில் கஜிகம பகுதியிலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

இவ்விபத்தின் போது முச்சக்கர வண்டியில் சென்ற ஆறு பேரும் காயமடைந்த நிலையில் வதுபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் இருவரே பலியாகியுள்ளனர்.

இந்த விபத்துடன் தொடர்புடைய தனியார் பஸ் சாரதியை கைது செய்துள்ள நிட்டம்புவ பொலிஸார் சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும் இங்கே தொடர்க...