தனுன திலகரத்னவின் தாயார் பிணையில் செல்ல அனுமதி
திலகரத்னவின் தாயார் அசோகா திலகரத்னவை பிணையில் செல்ல கல்கிஸ்ஸை நீதவான் அனுமதித்துள்ளார். எனினும் அவரை நாட்டைவிட்டு வெளியேற வேண்டாம் என நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
ஜெனரல் பொன்சேகாவின் மருமகன் தனுன திலகரத்னவின் தாயார் குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.நேற்று இரவு இவர் விசாரணைக்குட்படுத்தப்பட்ட பின்னர் கைது செய்யப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
தனுன திலகரத்னவின் தாயாரது வங்கிப் பெட்டகத்திலிருந்து 75 மில்லியன் ரூபா மீட்கப்பட்டுள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் ஏற்கனவே அறிவித்திருந்தனர்.
நீதியான தேர்தலை நடத்த தேர்தல் ஆணையாளர் உறுதி
சுதந்திரமானதுமான தேர்தலை நடத்துவதற்கு உரிய சகல ஏற்பாடுகளையும் செய்துவருவதாக தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திஸநாயக்க உறுதியளித்துள்ளார்.
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவுக்கும் தேர்தல் ஆணையாளருக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.
இதன்போது கருத்து தெரிவத்த ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலை விட மேலதிகமான சில முக்கிய நடைமுறைகளை பின்பற்றவுள்ளதாக தெரிவித்துள்ளார்
கோடன் வைஸின் கருத்து ஐ நா வின் உத்தியோகபூர்வ கருத்தை பிரதிபலிக்காது:ஐ.நா
பயங்கரவாதத்திற்கெதிரான கடைசிகட்ட யுத்தத்தின் போது ஏற்பட்ட உயிர் இழப்புகள் தொடர்பாக முன்னால் ஐ.நா. பேச்சாளர் கோடன் வைஸ் அவுஸ்திரேலிய தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணல் ஐ நா வின் உத்தியோகபூர்வ கருத்தை பிரதிபலிக்காது என ஐ.நா. தெரிவித்துள்ளது.
இலங்கையில் பயங்கரவாதத்திற்கு எதிராக நடைபெற்ற இறுதிக்கட்டப் போரின் போது மிகக்கூடுதலான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக கோடன் வைஸ் தெரிவித்திருக்கும் கூற்று அவரது தனிப்பட்ட கருத்தாகும் என்றும் ஐ.நா. தெரிவித்துள்ளது.
முன்னாள் ஐ.நா. பேச்சாளர் கோடன் வைஸ் அவுஸ்திரேலிய தொலைக்காட்சி நேர்காணலில் தெரிவித்துள்ள கருத்துக்கள் தொடர்பாக ஐ.நா. வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே மேற்படி விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் சமூகங்களுக்கிடையே சமாதானத்தைக் கட்டியெழுப்பவும் ஒரு சமாதானமான தீர்வைப் பெற்றுக்கொள்ளவும் இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுவரும் முயற்சிகளுக்கு ஐ.நா. தொடர்ந்தும் உதவி அளிக்கும் என்றும் அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஐ.நா. பேச்சாளரது கூற்றுக்களை முற்றாக மறுத்துள்ள இடர் முகாமைத்துவ மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க வைஸின் கூற்று போலியானதும் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானதும் என்பதால் அதுபற்றி யாரும் கரிசனைக் கொள்ளத் தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
வைஸ் புதிதாக முன்வைத்திருக்கும் இக்குற்றச்சாட்டுக்கள் முற்றிலும் பிழையானதாகும். இதனை அரசாங்கம் முற்றாக நிராகரிக்கின்றது. அவர் அரசாங்கத்தின் மீது போலியான குற்றச்சாட்டுக்களை சுமத்த முயற்சிக்கின்றார் என தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் லக்ஷ்மன் ஹுலுகல்ல தெரிவித்துள்ளார்.
கடைசிகட்ட போரில் சிவிலியன்கள் உயிரிழப்பு தொடர்பாக திடீரென கருத்துத் தெரிவித்திக்கும் அவரது கூற்றுக்குப் பின்னால் உள்நோக்கங்கள் இருப்பதாக தெரிவித்திருக்கும் ஹ_லுகல்ல இத்தகையதொரு கூற்றை தெரிவிக்க ஏன் எட்டு மாதங்கள் எடுத்தது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜெனரல் பொன்சேகாவின் மருமகன் தனுக திலகரத்ன தலைமறைவு
பொன்சேகாவின் மருமகன் தனுக திலகரத்ன தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஹய் கோப் நிறுவனத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட ஆயுதக்கொள்வனவு விவகாரங்களில் இவருக்கு தொடர்புள்ளதையடுத்து, அவரை கைது செய்து விசாரிப்பதற்கான நீதிமன்ற உத்தரவை புலனாய்வு பிரிவினர் பெற்றிருந்தனர்.
இந்நிலையில் தனுக திலகரத்ன தலைமறைவாகியுள்ளார். இதனை தொடர்ந்து பொலிசார் விசாரனைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது

ஜெனரல் பொன்சேகாவின் மருமகன் தனுன திலகரத்னவின் தாயார் குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.நேற்று இரவு இவர் விசாரணைக்குட்படுத்தப்பட்ட பின்னர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
தனுன திலகரத்னவின் தாயாரது வங்கிப் பெட்டகத்திலிருந்து 75 மில்லியன் ரூபா மீட்கப்பட்டுள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் ஏற்கனவே அறிவித்திருந்தனர்.
அதேவேளை ஹய் கோப் நிறுவனத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட ஆயுதக்கொள்வனவு விவகாரங்களில் தனுன திலகரத்ன தொடர்புள்ளதாக சந்தேகித்து, அவரை கைது செய்து விசாரிப்பதற்கான நீதிமன்ற உத்தரவை புலனாய்வு பிரிவினர் பெற்றிருந்தனர்.
இந்நிலையில் தனுன திலகரத்ன தலைமறைவாகியுள்ளார். இதனை தொடர்ந்து பொலிசார் விசாரனைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ள
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதுவரை காலமும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு முழுமையாக நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில் அனைவரும் சாதாரண பொதுமக்கள் என்னபதால் அவர்களுக்கான பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது என காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரசந்த ஜயகொடி தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கை காவல்துறை மா அதிபர் மஹிந்த பாலசூரியவின் பணிப்புரையின் பேரில் மேற்கொண்டதாக தெரிவித்தார்.
எனினும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 8ம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் மீண்டும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் எனவும் தெரிவத்தார்.
இதேவேளை, பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் நோக்கில் அரசாங்கம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
குறிப்பாக கடந்த காலங்களில் எந்தவொரு அரசாங்கமும் தேர்தலுக்கு முன்னர் பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை களையவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டமை தொடர்பில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்யத் திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பில் தேர்தல் ஆணையாளருக்கும் தெரியப்படுத்த உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்