16 நவம்பர், 2011

மீள்குடியமர்த்தப்படாதிருக்கும் மக்கள் : அரசின் திட்டமிட்ட சதி என்கிறார் யோகேஸ்வரன்


அம்பாறை மாவட்டத்துக்குட்பட்ட தங்கவேலாயுதபுரம்இ கஞ்சிகுடிச்சாறு ஆகிய பிரதேச மக்களை மீள்குடியேற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டு. மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ. யோகேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

லண்டன் நலன்புரிச் சங்கத்தின் உதவிக்கரம் அமைப்பின் அனுசரணையில் மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு தங்கவேலாயுதபுரம் பாடசாலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்இ தங்கவேலாயுதபுரத்தில் இருந்து 425 குடும்பங்களும்இ கஞ்சிக்குடிச்சாறு கிராமத்திலிருந்து 406 குடும்பங்களும் இடம்பெயர்ந்துள்ளன. இவர்கள் இன்னும் மீள்குடியேற்றப்படவில்லை. இந்நிலையில் அரசாங்கம்இ கிழக்கு மாகாணத்திலிருந்து இடம்பெயர்ந்த அனைத்து மக்களையும் மீள்குடியேற்றிவிட்டோம் என சர்வதேசத்துக்கும் அறிவித்துள்ளது. இது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.

நாட்டில் சமாதானம் மலர்ந்துள்ள இக்காலப் பகுதியில் இப்பகுதி மக்கள் இதுவரை மீள்குடியேற்றப்படாதுள்ளமை அரசின் திட்டமிட்ட சதி நடவடிக்கை என்றே கருத வேண்டியுள்ளது.

ஆகவேஇ மேற்படி கிராமங்களில் சகல அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தி அம்மக்களை அங்கு மீள்குடியமர்த்த அரசாங்கம் துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென வேண்டுகோள் விடுக்கின்றேன் எனவும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

மறைந்த தோழர் சிவதாசன் அவர்களுக்கு புளொட் அஞ்சலி-

தோழர் சிவதாசன் அவர்களின் மறைவையொட்டி அன்னாருக்கு புளொட் அமைப்பு தனது அஞ்சலியினைத் தெரிவித்துக் கொண்டுள்ளது.
தோழர் சிவதாசன் அவர்கள் தனது இளம்பராயத்திலேயே பொதுவுடமைக் கொள்கையினால் ஈர்க்கப்பட்டு இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டு இடையறாது ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல்கொடுத்து வந்தவர். அத்துடன் தொழிற்சங்க இயக்கத்திலும் தொழிலாளர் நலன்சார்ந்த போராட்டங்களிலும் அவர் ஆற்றிய பங்கு அளப்பரியது. தீண்டாமைக்கெதிரான போராட்டங்களில் மிகவும் தீவிரமாக ஈடுபட்ட தோழர் சிவதாசன் அவர்கள் தனது இறுதி மூச்சுவரை தான் கொண்டிருந்த கொள்கையினின்று வழுவாது இயங்கியவர்.
80களில் தமிழ்த்தேசிய விடுதலைப் போராட்டம் முனைப்புப் பெற்றிருந்த வேளையில் அவர் தன்னை முற்போக்கு சக்திகளுடன் இணைத்துக்கொண்டு இயங்கினார். முதலாவது வடக்கு-கிழக்கு மாகாணசபையிலும் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியில் இணைந்து இரண்டு தடவைகள் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டிருந்தார் அவ்வேளைகளில் அடித்தட்டு மக்களுக்கு தன்னாலான அனைத்து உதவிகளையும் தான் சார்ந்த அமைப்பின் ஊடாக செய்துவந்தார். சிறந்த அரசியல் அனுபவம் கொண்டவரும், அடித்தட்டு வர்க்க மக்களின் சிறப்பான வாழ்வுக்காக பல்வேறு நெருக்குவாரங்களுக்கும் மத்தியிலும் அயராது தன்னை ஈடுபடுத்தி வந்தவருமான தோழர் சிவதாசன் அவர்களின் மறைவு சமூகத்திற்கு ஒரு பேரிழப்பாகும்.
அன்னாருக்கு புளொட் அமைப்பினராகிய நாம் எமது இதய அஞ்சலிகளைத் தெரிவிப்பதுடன், அன்னாரின் மறைவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அவர் சார்ந்த கட்சியினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.
மேலும் இங்கே தொடர்க...

கொழும்பு பல்கலைக்கழக வளவுக்குள் பிரவேசிக்க விஞ்ஞான பீடத்தினருக்குத் தடை

கொழும்பு பல்கலைக்கழகத்தின் கலை மற்றும் விஞ்ஞான பிரிவு மாணவர்களுக்கு நேற்று 15ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பகல் 12 மணி முதல் பல்கலைக்கழக வளவுக்குள் உட்பிரவேசிக்கத் தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது என்று பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட மாணவர் ஆலோசகர் பேராசிரியர் பிரேம குமார டி சில்வா தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் இரவு கொழும்பு பல்கலைக்கழக கலை மற்றும் விஞ்ஞான பிரிவு மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் மோதலில் முடிந்து மூன்று மாணவர்கள் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதனால் பல்கலைக்கழகத்தில் முறுகல் நிலை ஏற்படுவதைத் தவிர்க்க இரு பீட மாணவர்களுக்கும் பல்கலைக்கழக வளவுக்குள் பிரவேசிக்க நேற்று தடை விதிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அமைதியை நிலை நாட்ட பல்கலைக்கழக வளாகத்தில் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...