17 மார்ச், 2011

அதிமுகவின் கூட்டணிக் கட்சிகள் ஆலோசனை


தேமுதிக தலைவர் விஜயகாந்த்
எதிர்வரும் சட்டமன்றத்தேர்தல்களில் அஇஅதிமுக போட்டியிடவிருக்கும் 160 தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள் பட்டியலை அஇஅதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூட்டணிக் கட்சிகளை கலந்தாலோசிக்காமல் வெளியிட்டமையால் அதிருப்தியில் இருக்கும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் வியாழனன்று கூடி தங்கள் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதித்தனர்.

ஆனால் இவர்களிடையே கருத்தொற்றுமை எதுவும் எட்டப்பட்டதாகத் தெரியவில்லை.

நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக பொதுச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் அக்கட்சி போட்டியிட்டு வென்ற சில இடங்களிலும் போட்டியிட விரும்பும் வேறு பல இடங்களிலும் அஇஅதிமுக வேட்பாளர்களை அறிவித்துள்ளதாகக் குறை கூறினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் அதே காரணங்களுக்காக அதிருப்தியில் இருப்பதாகத் தெரிவித்தது.

கூட்டணியில் 41 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ள நடிகர் விஜயகாந்த் தலைமையிலான தேசிய முற்போக்கு திராவிடர் கழகமும் தான் போட்டியிட விரும்பிய 21 தொகுதிகளுக்கு ஜெயலலிதா வேட்பாளர்களை அறிவித்துவிட்டதால் ஆத்திரமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இரண்டு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ள புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, ஓர் இடம் பெற்றுள்ள மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் சேதுராமன் ஆகியோருக்கும் அதே போன்ற சிக்கல் இருக்கிறது.

இந்நிலையில் வியாழனன்று காலை தேமுதிக அலுவலகத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தா.பாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஜி.ராமகிருஷ்ணன், புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் சேதுராமன் ஆகியோர் சென்று விஜயகாந்துடன் அஇஅதிமுக பட்டியல் குறித்து விவாதித்தனர்.

வளாகத்தின் வெளியே தேமுதிக தொண்டர்கள் ஜெயலலிதாவை கண்டித்து முழக்கமிட்டனர். ஏதோ ஒரு உருவபொம்மையும் எரிக்கப்பட்டது. மூன்றாவது அணி உருவாகக்கூடும் எனப் பரபரப்பு எழுந்தது. ஆனால் தலைவர்கள் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர்.

ஆலோசனைக் கூட்டம் முடிந்த பிறகு வெளியே வந்த விஜயகாந்த் எதுவாக இருந்தாலும் நாளை வெள்ளியன்றுதான் செய்தியாளர்களுக்கு விவரங்கள் தெரிவிக்கப்படும் என்றார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தா.பாண்டியனோ திமுகவை ஆட்சியிலிருந்து அகற்றுவதே தங்கள் லட்சியம் என்று கூறியதோடு நிறுத்திக்கொண்டார். மூன்றாவது அணியா என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கவில்லை.

அஇஅதிமுகவை தீவிரமாக ஆதரித்தும் இடங்கள் எதுவும் ஒதுக்கப்படாத மதிமுகவும் நேற்றைய அஇஅதிமுக பட்டியல் குறித்து மௌனம் காக்கிறது.

புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கூட்டணி பெரும் சிக்கலில் மூழ்கியிருப்பதாகவும், அதனைக் காப்பாற்றவேண்டிய பொறுப்பு கூட்டணித் தலைவர் என்ற முறையில் ஜெயலலிதாவிற்கு இருப்பதாகவும் நம்மிடம் தெரிவித்தார்.

மூன்றாவது அணிகான வாய்ப்பு மிகக் குறைவு, அப்படி ஒன்று உருவானால் அது திமுக கூட்டணிக்கு சாதகமாக இருக்கும் என்பதால் பிரச்சினைகளைப் பேசித்தீர்த்துக்கொள்ளவே கட்சிகள் முயலும் என்கின்றனர் நோக்கர்கள்.


மேலும் இங்கே தொடர்க...

ஆச்சரியத்தை ஏற்படுத்தும் இராட்சத விலங்குகளின் எச்சங்கள்

உலகில் இதுவரை வாழ்ந்த மிகப்பெரிய விலங்கினமாக டைனோசரஸ் கருதப்படுகின்றது.

அதனை நேரில் கண்டவர்கள் யாரும் இல்லை என்ற போதிலும் அதன் எச்சங்கள், சுவடுகள் மற்றும் கண்டெடுக்கப்பட்டுள்ள எழும்புக் கூடு என்பவற்றின் அடிப்படையில் முகப்பெரியதாக அது கருதப்படுகின்றது.

அதேபோல வேறு பல மிகப் பெரிய உருவத்திலான விலங்குகளும் இப்பூமியில் வாழ்ந்துள்ளதாக கருதப்படுகின்றன.

அவை அழிந்துவிட்டபோதிலும் அவற்றின் சுவடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட விலங்குகளின் சுவடுகள் பற்றிய தொகுப்பே இது.

1. கொலம்பியாவில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய பாம்பின் சுவடு


இப்பாம்பானது அனெகொண்டாவைப் போன்ற உலகில் வாழ்ந்ததாகக் கூறப்படும் மிகப்பெரிய பாம்பாகும்.

இவை சுமார் 60 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்ததாகக் கணக்கிடப்பட்டுள்ளதுடன் சுமார் 42 அடி நீளமும், 1,135 கிலோ நிறையும் கொண்டவையாக இருந்திருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

2. எருமை உருவ கொறிணிகொறிணி எனப்படுவது அணில் போன்ற விலங்கினமாகும்.

உருகுவே நாட்டில் கடந்த 2008 ஆம் ஆண்டு சுமார் 53 சென்ரி மீற்றர் உயரமுடைய 1000 கிலோ நிறையுடைய கொறிணியின் எழும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது.

இவை இற்றைக்கு சுமார் 2- 4 மில்லியன் வருடங்களுக்கு முதல் வாழ்ந்திருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.

3. மடகஸ்காரில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய தவளைஉலகில் இதுவரை வாழ்ந்தவற்றில் மிகப்பெரியதாக கருதப்படும் பிரமாண்ட தவலை எச்சத்தினை ஆராய்ச்சியாளர்கள் மடகஸ்கார் நாட்டில் கண்டுபிடித்தனர்.

இது 41 சென்றி மீற்றர் உயரமும், 4.5 கிலோ கிராம் நிறையும் கொண்டிருந்திருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

4. பெரு நாட்டில் வாழ்ந்த பிரமாண்ட பென்குயின்கள்

தென் அமெரிக்காவில் சுமார் 35 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்ததாகக் கூறப்படும் பிரமாண்ட பென்குயின்களே இவை.

இவற்றின் சுவடுகள் பெருவுன் அடகாமா பாலைவனத்தில் கண்டுபிடிக்கப்பட்டன.

இவற்றின் உயரம் சுமார் 1.5 மீற்றர்கள் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

5. மனிதனை விட பெரிய கடல் தேள்


மனிதனைவிட பெரியதும் சுமார் 8.2 அடி உயரமானதும் சுமார் 390 மில்லியன் வருடங்கள் பழமையானதுமான கடல் தேளின் எச்சங்கள் 2007 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டன.

இவை அக்காலப்பகுதியில் கடலில் வாழ்ந்த மிகப்பெரிய விலங்கினமென ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

6. வரலாற்றுக்கு முற்பட்ட கங்காருகள்அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த இவ்வகை 7-10 அடி வரையான உயரத்தினை கொண்ட கங்காருகள் மனிதர்களால் வேட்டையாடப்பட்டிருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்

மேலும் இங்கே தொடர்க...

காலி அஹங்கமவில் துப்பாக்கிப் பிரயோகம்: இருவர் பலி


காலி அஹங்கம பிரதேசத்தில் இராணுவத்தினர் இன்று மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் பலியாகியுள்ளனர்.

இவர்கள் பயணம் செய்த மோட்டார் சைக்கிளை இராணுவத்தினர் நிறுத்துமாறு பணிக்கப்பட்ட வேளையில் அதை பொருட்படுத்தாது மீறிச் சென்றுள்ளனர். இதனால் இராணுவத்தினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

ஜப்பானைத் தொடர்ந்து கனடாவிலும் நிலநடுக்கம்

கனடாவின் ஒட்டாவா மற்றும் மொன்றியல் நகரங்களில் அந்நாட்டு நேரப்படி 1.36 மணியளவில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக 10 செக்கன்கள் வரை இந்நடுக்கம் உணரப்பட்டுள்ளது. இது ரிச்டர் அளவுகளில் 4.3 ஆக அளவிடப்பட்டுள்ளது.

சேத விபரங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

இதேவேளை, சிலியிலும் இதே போன்ற நடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன
மேலும் இங்கே தொடர்க...

உயர் கல்விக்குத் 62 சதவீதமானோர் தகுதிபெற்றுள்ளனர்: பரீட்சை ஆணையாளர்


2010 ஆம் ஆண்டு ஜீ.ஸி.ஈ. சாதாரண தரப் பரீட்சையில் முதன் முறையாக 62 சதவீதமானோர் உயர்தரக் கல்வி கற்கத் தகுதி பெற்றுள்ளர் என பரீட்சை ஆணையாளர் நாயகம் அநுர எதிரிசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு பெலவத்தையில் உள்ள பரீட்சைத் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது பற்றி அவர் மேலும் தெரிவிக்கையில்: கடந்த 2010 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற ஜீ.ஸி.ஈ. சாதாரண தரப் பரீட்சைக்கு 3இலட்சத்து 10ஆயிரத்து 642 பாடசாலைப் பரீட்சார்த்திகள் தோற்றினர். அவர்களில் 1இலட்சத்து 82ஆயிரத்து 630 பேர் உயர் தரம் கற்கத் தகைமை பெற்றுள்ளனர்.

பாடசாலை மதிப்பீட்டுப் பரீட்சைகள் மூலம் 12ஆயிரத்து 482 பேர் உயர்கல்விக்கு தகுதிபெற்றுள்ளனர். ஆகவே இம்முறை மொத்தம் 1இலட்சத்து 95ஆயிரத்து 112 பேர் உயர்கல்விக்குத் தகைமை பெற்றுள்ளனர் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

பொன்சேகாவின் சகாக்களுக்கு நேபாளம் அரசியல் தஞ்சம் வழங்க மறுப்பு


முன்னாள் இராணுவத் தளபதியான சரத் பொன்சேகாவின் நெருங்கிய சகாக்களுக்கு நேபாளத்தில் அரசியல் புகலிடம் வழங்குவதற்கு நேபாளம் மறுத்துள்ளது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது சரத் பொன்சேகாவுடன் இணைந்து பணியாற்றிய இவர்கள் நேபாளத்தில் அரசியல் தஞ்சம் கோரி கடந்த சில மாதங்களாக நேபாளத்தில் தங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவர்களுடைய அரசியல் புகலிட கோரிக்கைக்கு நேபாள அரசாங்கம் மறுப்புத் தெரிவித்துள்ள நிலையில் நேபாளத்திலுள்ள இலங்கைத் தூதரகம் இது குறித்து தமக்கு எதுவும் தெரியாதெனக் கூறியுள்ளது.

சரத் பொன்சேகா ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் பழிவாங்கப்படக் கூடுமென்ற அச்சத்தில் நேபாளத்திற்கு வந்த அரசியல் தஞ்சம் கோரிய இவர்கள் கைது செய்யப்படலாமென கத்மண்டு போஸ்ட் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

புதையல் தோண்டிய நபர் கைது


விகாரையொன்றில் புதையல் தோண்ட முயற்சி செய்த மந்திரவாதியொருவரைக் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைதான மந்திரவாதி மொனராகலை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தபட்ட போது நீதிபதி ஒரு இலட்ச ரூபாவினை அபராதமாகச் செலுத்துமாறு உத்தரவிட்டார்.

மொனராகலையின் எம்பிலிப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த இந்த மந்திரவாதி, புதையல் தோண்ட முயற்சி செய்துள்ளார். இதனை அறிந்த அயலவர்கள் இது குறித்து மொனராகலைப் பொலிஸாருக்கு தகவல்களை அடுத்தே பொலிஸார் குறிப்பிட்ட மந்திரவாதியைக் கைது செய்துள்ளதுடன் தோண்டுவதற்கு பயன்படுத்தப்படும் ஆயுதங்களையும் மீட்டுள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

அரலகங்விலவில் கிரனைட் தாக்குதல்அரலகங்வில பொலிஸ் பிரிவிலுள்ள ஒரு வாக்குச் சாவடியில் இன்று அதிகாலை கிரனைட் வீச்சு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில் சேவையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரியொருவர் காயமடைந்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

ஜப்பானிய கதிர்வீச்சு காற்றின் மூலம் ரஷ்யா வரை பரவல்

புகுஷிமா அணு மின் நிலையத்தில் ஏற்பட்டுள்ள வெடிப்பை அடுத்து அணுக்கதிர்வீச்சு பரவும் வேகம் அதிகரித்துள்ளது.புகுஷிமா அணுமின் நிலையத்தின் இரண்டாவது நான்காவது ஆகிய இரு உலைகளில் செவ்வாயன்று வெடிப்பு ஏற்பட்டது.

அதேவேளை நான்காவது உலையில் தீ பிடித்ததுடன் எங்கும் ஐதரசன் புகை வெளியேறத்தொடங்கியது.கடந்த சனிக்கிழமை தொடக்கம் ஏற்பட்டுவரும் அணு உலை வெடிப்புக்களால் கதிர்வீச்சு அபாயமும் அதிகரித்துள்ளது. இது தொடர்பில் ஜப்பானிய பிரதமர் நவாடோ கானும் கவலை வெளியிட்டிருந்தார்.

""பாதிக்கப்பட்ட அணு உலையிலிருந்து கதிர்வீச்சு கசியத் தொடங்கிவிட்டது.இது காற்று மண்டலத்தில் பரவ ஆரம்பித்துள்ளது.இதனால் பெரும் அபாயம் உள்ளது'' என்று பிரதமர் தெரிவித்திருந்தார்.

இதேவேளை ஜப்பானிய அணு உலையில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சு காற்றில் பரவி தற்பொழுது ரஷ்யா, ஜப்பான் எல்லையில் இருக்கும் விளாடி வஸ்தக் நகரிலும் ஊடுருவியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதனையடுத்து ரஷ்ய இராணுவம் உஷார் படுத்தப்பட்டுள்ளதுடன் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு வலியுறுத்தப்பட்டுவருகிறது.அத்துடன் சீனா ஏற்கனவே ஜப்பானுக்கான தனது விமான சேவைகளை நிறுத்தியுள்ளது.

ஜப்பானின் கிழக்குப் பகுதியில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் நேற்றைய தினம் பதிவான நிலநடுக்கத்தின் அளவு 6 ரிச்டர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே ஜப்பானிய மக்கள் மத்தியில் அச்சம் அதிகரித்துள்ளது.நான்காம் எண் அணு உலையில் ஏற்பட்ட தீயை அடுத்து டோக்கியோ நகருக்குள்ளும் கதிர்வீச்சு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை பொதுமக்கள் சிலர் தலைநகர் டோக்கியோவிலிருந்தும் வெளியேறுவதாக தெரிவிக்கப்படுகிறது.அத்துடன் நான்காம் எண் அணு உலையில் இருந்த யுரேனியம் அல்லது புளுட்டோனியம் கம்பிகள் உருகி வெப்பம் வெளியேறி இருக்கலாம் எனவும் இதுவே அதிக கதிர்வீச்சுக்கு காரணமாக இருக்கலாம் எனவும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை டோக்கியோ மின்சக்தி நிபுணர்கள் கருத்து வெளியிடுகையில்;ஹெலிகொப்டர்களை பயன்படுத்தி போரிக் அமிலத்தை அணு உலையில் ஊற்றி அதன் வெப்பத்தை தணிக்கலாம் என கருத்து வெளியிட்டுள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பாரிய நில அதிர்வு, சுனாமியை அடுத்து அணு உலைகள் வெடித்து கதிர்வீச்சு பரவி வருகின்றது.அத்துடன் அணு உலைகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் எந்தளவுக்கு நேர்ந்துள்ளது என்று குறிப்பாக கூறமுடியாது என கூறியுள்ள நிபுணர்கள் அதில் துவாரங்கள் ஏற்பட்டிருக்கலாம் அல்லது உருகி இருக்கலாம் என தெரிவிக்கின்றனர்.

அணு உலைகளிலிருந்தும் வெளியாகும் கதிர்வீச்சின் அளவு அதிகரித்திருப்பதையடுத்து அங்கு கடமையில் இருந்த பணியாளர்கள் தங்கள் நடவடிக்கைகளை நிறுத்தி வெளியேறியுள்ளனர்.

இதேவேளை 3 ஆம் எண் அணு உலையில் இருந்து புகை மேலெழுந்து வருவதாகவும் கடந்த இரு தினங்களில் இரண்டாவது தடவையாக நான்காம் அணு உலை வெடித்து தீப்பற்றிக் கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் இப்பகுதியில் நான்கு தடவைகள் வெடிப்புச் சத்தம் கேட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.மேலும் கடந்த 11 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கம் 8.9 ரிச்டர் என்று கூறப்பட்ட போதும் அது 9 ரிச்டர் என தற்பொழுது கூறப்படுகிறது.இதனிடையே கதிர்வீச்சு தொடர்பில் ஜப்பான் முறையான தகவல்களை வெளியிடவில்லையென குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

நேற்று புதன்கிழமை ஜப்பானிய அமைச்சரவை செயலர் யூக்சியோ எடோனோ கருத்து வெளியிடுகையில்; புகுஷிமா அணு உலைப்பகுதியில்கடமையில் இருந்த ஊழியர்கள் அங்கிருந்தும் வெளியேறியுள்ளதாக தெரிவித்தார்.

சுமார் 50 ஊழியர்கள் அங்கு கடமையாற்றி வருகின்றனர்.அதேவேளை தற்பொழுது அணுக் கதிர்வீச்சு அளவு குறைந்து வருவதாகவும் எடோனோ மேலும் தெரிவித்தார். இதேவேளை கியூடோ செய்திச்சேவை தகவலின்படி அணு உலைகள் கொதித்துக் கொண்டிருப்பதால் மேலும் கதிர்வீச்சு அச்சம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அணு உலைகள் வெடிப்பதை கட்டுப்படுத்தும் நோக்குடன் கடல் நீரையும் போரிக் அமிலத்தையும் ஹெலிகொப்டரிலிருந்து ஊற்றுவதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது.
மேலும் இங்கே தொடர்க...

234 உள்ஃராட்சி சபைகளுக்கு இன்று தேர்தல் 3036 உறுப்பினர்கள் தெரிவு: 29,108 பேர் போட்டி 7,396 நிலையங்களில் வாக்களிப்பு

வாக்களிப்புகாலையிலேயே வாக்களியுங்கள்

234 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் இன்று காலை 7.00 மணி முதல் பிற்பகல் 4.00 மணி வரை நாடு முழுவதும் நடைபெறுகிறது. 3036 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான இந்தத் தேர்தலில் 29,108 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

3 மாநகர சபைகள், 30 நகர சபைகள், 201 பிரதேச சபைகளுக்கான தேர்தலில் 94 இலட்சத்து 38,132 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாக தேர்தல் திணைக்களம் தெரிவித்தது.

7396 நிலையங்களில் வாக்களிப்பு இடம்பெற உள்ளதோடு வாக்குகள் எண்ணுவதற்காக 1077 நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தேர்தல் கடமைகளில் 80 ஆயிரத்திற்கும் அதிகமான அரச ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பாதுகாப்புக் கடமைகளில் 50 ஆயிரம் பொலிஸாரும் 20 ஆயிரம் இராணுவத்தினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேர்தல் கடமைகளில் ஈடுபடும் அரச ஊழியர்களும் பொலிஸாரும் நேற்று காலை முதல் தமக்கு ஒதுக்கப்பட்ட பிரதேசங்களுக்கு சென்று கடமைகளை பொறுப்பேற்றனர்.

வாக்குப் பெட்டிகளும் பொலிஸ் பாதுகாப்புடன் வாக்களிப்பு நிலையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. தேர்தலை முன்னிட்டு கிளிநொச்சி மற்றும் யாழ். மாவட்டங்கள் தவிர்ந்த சகல பாடசாலைகளும் நேற்று முதல் மூடப்பட்டுள்ளன.

தேர்தல் மோசடிகள், வன்முறைகள் என்பவற்றைத் தடுக்க விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தேர்தல் செயலகம் கூறியது. வாக்களிப்பு நிலையங்களுக்குச் செல்லும் வீதிகளில் சுமார் 500 வீதித் தடைகள் இடப்பட்டுள்ளதோடு மோசடி இடம்பெறலாமென சந்தேகிக்கும் பகுதிகளில் விசேட பாதுகாப்பு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். 33 கலக மடக்கும் பொலிஸாரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஏதும் வாக்களிப்பு நிலையங்களில் மோசடி இடம்பெற்றால் குறித்த வாக்களிப்பு நிலைய வாக்குகள் ரத்துச் செய்யப்பட்டு அங்கு மீண்டும் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் எச்சரித்துள்ளார். வாக்காளர்கள் காலையிலேயே சென்று வாக்களிக்குமாறும் அவர் பொதுமக்களைக் கோரியுள்ளார்.

இதேவேளை, இடம்பெயர்ந்த சுமார் 9 ஆயிரம் வாக்காளர்களுக்கு வாக்களிக்கச் செல்வதற்காக விசேட இ. போ. ச. பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. புத்தளம் மற்றும் வவுனியா நலன்புரி முகாம்களில் உள்ள இவர்கள் மன்னார் வவுனியா மற்றும் முல்லைத்தீவுக்கு வாக்களிக்கச் செல்வதற்காக தேர்தல் ஆணையாளரின் பணிப்பில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வாக்குகள் எண்ணும் பணிகள் இன்று மாலை முதல் ஆரம்பிக்கப்பட உள்ளதோடு முதலாவது பெறுபேறு இரவு 11.00 மணியளவில் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.

உலகக் கிண்ண போட்டிகள் காரணமாக 335 உள்ளூராட்சி சபைகளில் 301 உள்ளூராட்சி சபைகளுக்கு தேர்தல் நடத்த வேட்பு மனு கோரப்பட்டது. இதில் 452 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இதற்கு எதிராக பல கட்சிகள் வழக்குத் தாக்கல் செய்ததையடுத்து 67 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டன. அவற்றுக்கான தேர்தல் பின்னர் நடைபெறும்.
மேலும் இங்கே தொடர்க...

3059 பேருக்கு ‘9A’ 1,95,112 பேர் A/L கற்க தகுதி


2010 ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சையில் இம்முறை 195,112 பேர் உயர்தரம் கற்க தகுதி பெற்றுள்ளனர்.
இத் தொகையை சென்ற வருட பரீட்சார்த்திகளோடு ஒப்பிடும் போது 10.28 சத வீதம் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக பரீட்சைகள்ஆணையாளர் அநுர எதிரிசிங்க தெரிவித்தார்.

பரீட்சை திணைக்களத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், கடந்த பத்து ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் இம்முறை மாணவர்கள் அதிக ஆர்வத்துடன் பரீட்சைக்குத் தோற்றினர்.

சகல பாடசாலைகளிலும் மாணவர்கள் பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில், கல்வி நடவடிக்கையில் ஈடுபட்டனர். சில பிரதேசங்களில் மாணவர்கள் அதிகாலையில் சென்று பாடசாலைகளில் ஆர்வத்துடன் கல்வி பயின்றதை காணக் கூடியதாக இருந்தது.

கஷ்டப் பிரதேசங்களில் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை அதிகாலையில் அழைத்துச் சென்று மாலை 6 மணிக்கு பாடசாலையை விட்டு அழைத்து வந்த நிலைமையும் காணப்பட்டது. இதன் மூலமே இவ்வருடம் சிறந்த பெறுபேற்றை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

வழமையாக நாங்கள் வெளியிடும் பரீட்சை பெறுபேறுகளை 3 வார காலத்திற்கு முன்னதாக வெளியிட்டுள்ளோம். இதற்கு உதவியாக பரீட்சை திணைக்களம் உட்பட பலரும் செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த க. பொ. த. சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை பார்க்கின்றபோது இம்முறை 3059 மாணவர்கள் சகல பாடங்களிலும் “ஏ” தர சித்திகளை பெற்றுள்ளனர்.

கணித பாடத்தில் 61.61 சதவீதமானோரும், விஞ்ஞான பாடத்தில் 59.80 சதவீதமானோரும், ஆங்கில பாடத்தில் 41.41 சதவீதமானோரும் சித்தியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அவ்வாறே பெளத்த சமயத்தில் 81 வீதமானோரும், இந்து சமயத்தில் 90.2 சதவீத மானோரும் இஸ்லாம் பாடத்தில் 91.65 சதவீதமானோரும் இம்முறை சித்தியடைந்துள்ளனர்.

முதன் மொழிப் பாடங்களான சிங்களத்தில் 82.89 சதவீதமானோரும், தமிழ் மொழியில் 80.65 சதவீதமானோரும் சித்தியடைந்துள்ளனர்.
இம்முறை நடைபெற்ற க. பொ. த. சாதாரண தரப் பரீட்சைக்கு மொத்தமாக 310,642 மாணவர்கள் தோற்றினர். இவர்களில் 14,961 மாணவர்கள் சகல பாடங்களிலும் சித்தியடையவில்லை.

பரீட்சை பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்கான இறுதித் திகதி ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதியாகும். விண்ணப்பதாரிகள் அதற்கு முன்னர் விண்ணப்பிக்கும்படி பரீட்சைகள் ஆணையாளர்கள் வேண்டுகோள் விடுத்தார்.

கொழும்பு மாவட்டம் மற்றும் கொழும்பு ஜயவர்த்தனபுரயிலுள்ள பாடசாலைகள் இன்று நேரடியாக சென்று பரீட்சை பெறுபேறுகளை பெற்றுக் கொள்ளலாம். அதேவேளை, ஏனைய 8000 பாடசாலைகளுக்கும் பரீட்சை பெறுபேறுகள் தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளதாகவும், தனியார் பரீட்சார்த்திகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள தாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் இங்கே தொடர்க...

இந்திய விசா விண்ணப்ப படிவம் இணையத்தில்
இந்திய உயர் ஸ்தானிகராலயம், இம்மாதம் 25ம் திகதி முதல் இந்தியாவுக்குச் செல்வதற்கான விசா விண்ணப்ப ஒழுங்குகள் இணையத் (on line) தொடர்பு மூலம் நடைபெறுமென்பதைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றது.

இத்திகதியின் பின்னர் விண்ணப்பதாரர்கள் என்ற இணைய முகவரியின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இந்தப் புதிய முறையான விசா வழங்கும் சேவையை இந்திய விசா விண்ணப்ப நிலையம் www.indiavisaonline.gov.in/visa (VFS Global) கொழும்பு கண்டி மற்றும் யாழ்ப்பாணம்

மற்றும் இந்திய உதவித் தூதரகம் அம்பாந்தோட்டை ஆகியன மூலம் பெற்றுக் கொள்வதை இலகுவாக்கும் நோக்கத்தைக் கொண்டது.

இப்புதிய நடைமுறையானது விண்ணப்பதாரர்கள் தங்கள் வீடு, கந்தோர் மற்றும் கணனி நிலையங்கள் போன்ற இடங்களிலிருந்து நேரடியாகவே விண்ணப்பிக்க வழிவகுக்கும்.

இணையத்தளத்தில் பூரணப் படுத்தப்பட்ட விண்ணப்பங்களைப் படியிறக்கம் செய்து (2.5 கீ 2.5 அங்குலம் வெள்ளை நிறப் பின்னணியுடனான) இரண்டு புகைப்படங்களை இணைத்து விண்ணப்பத்தில் கையொப்பமிட்டுக் கடவுச்சீட்டு மற்றும் தேவையான ஆவணங்களுடன் இந்திய விசா விண்ணப்ப நிலையம் கொழும்பு, கண்டி, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களிலும் மற்றும் இந்திய உதவித் தூதரகம் அம்பாந்தோட்டையிலும் கையளிக்க வேண்டும். மேலதிக தகவல்களுக்கு சூசூசூ.கீஷடுஷச்ங்ச்ஙிஸச்.ச்ஙுகி என்ற இணையத் தளத்தைப் பார்வையிடவும்.

விசாக்களை விரைவாக வழங்குவதை உறுதிப்படுத்துவதில் இந்திய உயர் ஸ்தானிகராலயம் அர்ப்பணிப்புடனுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

தொகுதி ஒதுக்கீடு: வைகோவை கைவிட்டார் ஜெயலலிதா ம.தி.மு.க திண்டாட்டம்
தமிழக சட்ட சபைக்கான தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அ.தி.மு.க. கூட்டணியிலிருந்து ம.தி.மு.க. ஓரங்கட்டப்பட்டுள்ளமை ஜெயலலிதா- வைகோ அரசியல் உறவில் பிளவை ஏற்படுத்தியுள்ளது.

நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் ஜெயலலிதா ம.தி.மு.க.வுக்கு 16 ஆசனங்களையாவது ஒதுக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் ம.தி.மு.க.வுக்கு 8 ஆசனங்களை மட்டுமே ஒதுக்க முடியும் என அறிவித்திருப்பது வைகோவுக்கு பெரும் ஏமாற்றத்தை உருவாக்கியுள்ளது.

இதனையடுத்து அ.தி.மு.க. கூட்டணியில் தொடர்ந்து இருப்பதா இல்லையா என்ற இறுதி முடிவை எடுப்பதற்காக ம.தி.மு.க.வின் முக்கியஸ்தர்கள் நாளை மறுநாள் 19ம் திகதி வைகோ தலைமையில் ஒன்று கூடி ஆலோசிக்கவுள்ளனர். ம.தி.மு.க. கூட்டணியிலிருந்து பல கட்சிகள் பிரிந்து சென்ற போதும் இறுதி வரை ஜெயலலிதாவுக்கு உறுதுணையாக இருந்த தம்மை அவர் ஏமாற்றிவிட்டார் எனவும்,

இதற்கு காரணம் விஜயகாந்த் - ஜெயலலிதாவுக்கிடையான புதிய கூட்டணி எனவும் ம.தி.மு.கவினர் கவலை தெரிவிக்கின்றனர்.

ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள தமிழக சட்டசபை தேர்தலில் தமக்கு 35 தொகுதிகளை வழங்குமாறு முதலில் ம.தி.மு.க. கோரியிருந்தது. எனினும் கடந்த தேர்தலில் 35 தொகுதிகளை வழங்கிய போதும் அதில் 8 தொகுதிகளிலேயே ம.தி.மு.க. வெற்றிபெற்றது என்பதை காரணம் காட்டிய ஜெயலலிதா அக் கோரிக்கையை நிராகரித்து விட்டார்.

இதனையடுத்து தமக்கு 25 தொகுதிகளையாவது வழங்குமாறு வைகோ இறங்கி வந்தார். அதனையும் ஜெயலலிதா ஏற்க மறுத்த நிலையில் குறைந்த பட்சம் 18 ஆசனங்களையாவது வழங்குமாறு கோரினார் வைகோ.

இருப்பினும் ம.தி.மு.க.வை நம்பி 18 தொகுதிகளை வழங்க முடியாது என்று கூறி 10 ஆசனங்களை மட்டுமே தரமுடியும் என ஜெயலலிதா தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இந்த ஆசனங்களின் தொகை 10 இலிருந்து 8 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அது மட்டுமின்றி அ.தி.மு.க. கூட்டணியில் புதிதாக இணைந்து கொண்ட விஜயகாந்தின் தே.மு.தி.கவுக்கு ஜெயலலிதா 41 தொகுதிகளை ஒதுக்கியுள்ளமை ம.தி.மு.க. வினரை மேலும் அதிருப்திக்குள்ளாகியுள்ளது.

இந்நிலையிலேயே அ.தி.மு.க. கூட்டணியில் தொடர்வதா இல்லை பிரிந்து செல்வதா என்பது குறித்து முடிவு செய்வதற்கான உயர்மட்ட கூட்டத்தை வைகோ நாளை மறுநாள் கூட்டுகிறார்.
மேலும் இங்கே தொடர்க...

ஜப்பான்: கதிர்வீச்சை தடுக்கும் பணிகள் மீண்டும் ஆரம்பம் புகுஷிமா பகுதியில் தொடர்ந்து பதற்றம்
ஜப்பான் புகுஷிமா அணுமின் நிலையத்தில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சை தடுக்கும் பணிகள் நேற்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன.

இதற்காக 50 தொழில் நுட்பவியலாளர் களை அங்கு அனுப்ப ஜப்பான் அரசு அனுமதி அளித்துள்ளது. முன்னதாக மூன்றாவது அணு உலையில் ஏற்பட்ட வெடிப்பை தொடர்ந்து புகுஷிமா அணுமின் நிலையத்தில் பணியாற்றிய 750 பணியாளர்கள் அங்கிருந்து வெளியேற்றப் பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மூன்றாவது அணு உலையில் இருந்து தொடர்ந்தும் புகை கக்கி வருவதாக வும் அதன் உட் புறத்தில் ஏதாவது கோளாறு ஏற்பட்டிருக்கலாம் எனவும் அணுமின் நிலையத்தை பராமரிக்கும் டோக்கியோ மின்சக்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் 5 மற்றும் 6 ஆவது அணு உலைகளிலும் வெடிப்பு ஏற்படாமல் தடுக்கும் முயற்சியில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த அணு உலைகளை குளிர்விப்பதற்காக அமெரிக்க இராணுவமும் உதவ முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே புகுஷிமா அணு உலைகளில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சு குறித்து மக்கள் தொடர்ந்தும் பீதியில் உள்ளனர். கதிர்வீச்சு புகுஷிமாவில் இருந்து 240 கிலோ மீற்றருக்கு அப்பால் உள்ள தலைநகர் டோக்கியோ வரை எட்ட ஆரம்பித்துள்ளது. 4 ஆம் பிரிவில் தீ ஏற்பட்ட பின்னர் கதிர்வீச்சு காற்றில் கலப்பது அதிகரித்துள்ளது.

இதனால் டோக்கியோ நகரில் 18 பேரிடம் கதிர்வீச்சு பாதிப்பு ஏற்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்படுள்ளது.

எனினும், கதிர்வீச்சு அபாயப் பகுதியாக இருக்கும் புகுஷிமாவை அண்டிய 20 கிலோ மீற்றர் தூரப் பகுதி மேலும் அதிகரிக்கப்படாது என ஜப்பான் அரசு நேற்று அறிவித்தது. இந்த பகுதியில் இருந்து ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்நிலையில் புகுஷிமா அணுமின் நிலையத்திற்கு அப்பால் 20 இல் இருந்து 30 மீற்றருக்குள் 140,000 பேர் அளவில் உள்ளனர்.

இதேவேளை, நேற்று பிந்திக் கிடைத்த தகவலின்படி சுனாமி அனர்த்தத்தினால் கொல்லப்பட்டோரின் எண்ணிக்கை 4, 255 ஆக அதிகரித்திருந்தது. அத்துடன் இதுவரை 8, 194 பேரளவில் காணாமல் போயுள்ளதோடு 2, 282 பேர் காயமடைந்துள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

கறிவேப்பிலையின் மகத்துவம்
உணவின் வாசனையை அதிகரிக்கத்தான் கறிவேப்பிலை பயன்படுகிறது என்று பலர் கருதுகின்றனர். இதனால்தான் சாப்பிடும் போது உணவில் கிடக்கும் கறிவேப்பிலையை எடுத்து கீழே போட்டு விடுகிறார்கள். ஏனெனில் கறிவேப்பிலையில் பல்வேறு மருத்துவக் குணங்கள் இருப்பதாக ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது.

கறிவேப்பிலையை உணவில் சேர்த்துக் கொள்ளும் போது ஈரல் மற்றும் ஈரல் தொடர்பான நோய்களும், உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு போன்ற நோய்களுக்கு மிகச் சிறந்த மருந்தாகவும் காணப்படுகிறது.

கறிவேப்பிலை இரத்தத்தில் இருக்கும் கொழுப்பைக் குறைக்கவும், அறிவைப் பெருக்கவும் உதவுகின்றது. கறிவேப்பிலையை பச்சையாகவே மென்று தின்றால் குரல் இனிமையாகும். சளியும் குறையும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

இது தொடர்பாக பெலியத்தையில் அரசாங்க ஆயுர்வேத வைத்தியசாலையில் பணியாற்றும் வஜிர பி. எஸ். செனவிரட்ன வைத்தியர் கருத்து தெரிவிக்கையில்:- கறிவேப்பிலையில் 18 வகையான அமினோ அமிலங்கள் காணப்படுகின்றன. அத்துடன் சமையலுக்கு பயன்படுத்தும் போது மிகவும் வாசனையாகவும் காணப்படும்.

கறிவேப்பில்லை சமிபாட்டுப் பிரச்சினை, மலச்சிக்கல். வாயு தொல்லை போன்றவற்றுக்கும் சிறந்த மருந்ததாகக் காணப்படுகிறது.

கறிவேப்பிலை வாரத்திற்கு இரண்டு முறை சம்பல் செய்து சாப்பாட்டில் சேர்த்துக் கொள்ளும் போது வாழ்நாளில் சுகதேகியாக வாழ முடியுமென வைத்தியர் செனவிரட்ன மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

ஜனசெவன வீடமைப்பு திட்டம் நாட்டின் பாரிய அபிவிருத்தி முன்னெடுப்பு
‘ஜனசெவன’ தேசிய வீடமைப்புத் திட்டம் நாட்டில் முன்னெடுக்கப்படுகின்ற பாரிய அபிவிருத்தி வேலைத் திட்டமாக அமைந்திருப்பதாக லேக்ஹவுஸ் நிறுவனத்தின் தலைவரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான பந்துல பத்மகுமார நேற்றுத் தெரிவித்தார்.

நிர்மாண, பொறியியல் சேவைகள் மற்றும் வீடமைப்பு, பொது வசதிகள் துறை அமைச்சின் ‘ஜனசெவன’ பத்திரிகையின் வெளியீட்டு வைபவம் லேக்ஹவுஸ் நிறுவனத்தின் கேட்போர் கூட்டத்தில் இடம்பெற்றது. அமைச்சர் விமல் வீரவன்ச பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு இந்நிகழ்வில் உரையாற்றும்போதே லேக்ஹவுஸ் நிறுவனத் தலைவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இந்த ‘ஜனசெவன பத்திரிகை லேக் ஹவுஸ் நிறுவனத்தின் சிங்கள மொழிப் பத்திரிகையான தினமினவுடன் இணைப்பாக 18ம் திகதி முதல் வெள்ளிக்கிழமைகளில் வெளிவரவிருக்கின்றது.

இந்நிகழ்வில் லேக்ஹவுஸ் நிறுவனத் தலைவரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான பந்துல பத்மகுமார தொடர்ந்தும் உரையாற்றுகையில் ‘ஜனசெவன’ தேசிய வீடமைப்புத் திட்டம் ஒருபாரிய அபிவிருத்தித் திட்டமாகும். இத்திட்டத்தைச் சரியான முறையில் வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு செயல்திற னும் தூர நோக்கும் மிக அவ சியம். இதற்கேற்ப இப்பாரிய அபிவிருத்தி திட்டத்தை அமைச்சர் விமல் வீரவன்ச சிறந்த முறையில் முன்னெடுக்கின்றார். இது மிகவும் சிறந்த பணியாகும். இந்த நல்ல பணிக்கு எமது பங்களிப்பை அளிப்பதை எமது பொறுப்பாகக் கருதுகின்றோம்.

‘ஜனசெவன’ பத்திரிகை தினமின பத்திரிகையுடன் இணைப்பாக மக்களைச் சென்றடையும்போது ஜனசெவன திட்டம் குறித்து தகவல்களும், விபரங்களும் மக்களைச் சென்றடையும்.

இந்த நாட்டில் சமூக, கலாசார, அரசியல், மேம்பாட்டுக்கு எமது நிறுவனம் பாரிய பங்களிப்பு செய்து வருகின்றது. அந்த வகையில் ‘ஜன செவன’ பத்திரிகை எமது பத்திரிகையுடன் இணைப்பாகச் செல்லுவதைப் பெருமையாகக் கருதுகின்றோம் என்றார்.

இந்நிகழ்வில் ஆசிரிய பீடப் பணிப்பாளர் சீலரட்ன செனரத் உரையாற்றுகையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நாட்டைத் துரிதமாக கட்டியெழுப்புவதற்கு நடவடி க்கை எடுத்து வருகின்றார். அதனால் செயல் திறன் மிக்க வர்களை அவர் அமைச்சராக நியமித்துள்ளார். அவர்களில் அமைச்சர் விமல்வீரவன்ச சிறந்த ஆக்கபூர்வமான அமைச்சராவார். இவருக்கு ஜனாதிபதி அவர்கள் வழங்கியுள்ள பொறுப்புக்களை அவர் சிறந்த முறையில் மேற்கொள் ளுகின்றார்.

எமது நிறுவனத்தின் தலைவரும், சிரேஷ்ட ஊடகவிலாளருமான பந்துல பத்மகுமாரவின் தலைமையின் கீழ் எமது வெளியீடுகள் அனைத்தும் சிறந்த முறையில் தரமானவையாக வெளிவருகின் றன. அவர் சிரேஷ்ட ஊடகவியலாளராக இருப்பதால் இதற்கு சிறந்த வழிகாட்டலை அவர் வழங்கி வருகின்றார்.

வீடு மக்களுக்கு முக்கியமான தேவையாகும். அதனை நிறைவேற்றி வைப்பதில் அரசாங்கம் விஷேட கவனம் செலுத்தியுள்ளது. இது தொடர்பான தகவல்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல ஜனசெவன பத்திரிகை பெரிதும் உதவும் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

ஜப்பானிலிருந்து இலங்கையரை அழைத்துவர விசேட ஏற்பாடுஇரு விமானங்கள் அவசரமாக அனுப்பிவைப்பு

ஜப்பானிலுள்ள இலங்கையரை நாட்டுக்கு அழைத்து வருவதற்காக இரு ஸ்ரீலங்கன் விமானங்கள் நேற்று ஜப்பானுக்கு அனுப்பப்பட்டதாக சிவில் விமானச் சேவை அமைச்சு தெரிவித்தது.

சுனாமி அனர்த்தம் காரணமாக ஜப்பானில் பெருமளவு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு 12 ஆயிரத்துக்கும் அதிகமான இலங்கையர் உள்ளதோடு அவர்களில் நாடு திரும்ப விருப்பமானவர்களை அழைத்து வர நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு கூறியது.

சுனாமி அனர்த்தத்தினால் இலங்கையர் எவருக்கும் பாதிப்பு ஏற்படாத போதும் வெளிவிவகார அமைச்சின் வேண்டுகோளுக்கு இணங்க விசேட விமானங்கள் அங்கு அனுப்பப்பட்டுள்ளன. ஜப்பானிலுள்ள இலங்கையர் கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக இன்று நாடு திரும்புவர் என சிவில் விமானச் சேவை அமைச்சு கூறியது.
மேலும் இங்கே தொடர்க...