3 அக்டோபர், 2010

அமெரிக்காவில் பாம்புகளை கொல்ல விஷ எலிகள் வீச்சு: விஞ்ஞானிகள் நூதன திட்டம்

அமெரிக்காவில் பசிபிக் கடலில் உள்ள குவாம் தீவில் விஷ பாம்புகள் அதிக அளவில் உள்ளன. இவை அங்குள்ள வனப்பகுதியில் மரங்களில் சர்வ சாதாரண மாக உலா வருகின்றன. மக்களின் உயிருக்கு அச்சுறுத் தலாக அவை திகழ்கின்றன.

அவை ராணுவத்துக்கு அனுப்பப்பட்ட சரக்கு வாகனங்களில் ஊடுருவி வந்துள்ளன. இதனால் கடந்த 1980-ம் ஆண்டு முதல் பாம்புகளின் தீராத தொல்லை இங்கு அதிகரித்துள்ளது.

எனவே அங்குள்ள விஷ பாம்புகளை கொல்ல அமெரிக்க வேளாண் விஞ்ஞானிகள் நூதன திட்டத்தை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர். எலி என்றால் பாம்புகளுக்கு கொள்ளை பிரியம்.

அவற்றை விழுங்கி உணவாக்கி கொள்ளும். எனவே எலிகளின் உடலில் “அசிடோமினாபென்” என்ற விஷ மருந்தை செலுத்தி காட்டுக்குள் உலவ விட்டால் அவற்றை சாப்பிடும் பாம்பு களை செத்து மடியும் என்று கருதினர்.

அதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். கடந்த மாதம் குவாம் தீவில் உள்ள 20 ஏக்கர் வனப்பகுதியில் 200 எலிகளை ஹெலிகாப்டர் மூலம் வீசினர். இதில் நல்ல பலன் கிடைத்துள்ளது.

எனவே இதே திட்டத்தை பெருமளவில் செயல்படுத்த உள்ளனர். ஹெலிகாப்டர் மூலம் அட்டைப் பெட்டிக்குள் அடைக்கப்பட்ட விஷ எலிகள் வீசப்பட உள்ளன. இதன் மூலம் அங்குள்ள விஷ பாம்புகளின் எண் ணிக்கை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...

ஜனாதிபதி தலைமையில் திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக் கூட்டம்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நாளை திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக் கூட்டம் நடைபெறவுள்ளது.

திருகோணமலை அபிவிருத்திக் கூட்டத்தின் போது மாவட்டத்தில் நிலவும் பிரச்சினைகள் மற்றும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் அபிவிருத்தித் திட்டங்கள் என்பன குறித்து கலந்துரையாடப்படவுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

2010-10-03 தமிழ்க் கட்சிகளின் அரங்கம் கிளிநொச்சியில் சந்திப்பு- தமிழ்க் கட்சிகளின்

நேற்று (02.10.2010) கிளிநொச்சியில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன. கிளிநொச்சியிலுள்ள தமிழர் விடுதலைக் கூட்டணியின் அலுவலகத்தில் அதன் தலைவர் வீ.ஆனந்தசங்கரி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் பொதுச்செயலர் எம்.கே.சிவாஜிலிங்கம், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் சார்பில் பி.பிரசாந்தன், சிறீ தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலர் ப.உதயராசா, சுரேந்திரன், பத்மநாபா ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி சார்பில் முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் மற்றும் மோகன், புளொட் சார்பில் அதன் செயலாளர் சு.சதானந்தம் ஆகியோரும் மேற்படி கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர். இந்த சந்திப்பின்போது வட பகுதியில் இராணுவ நிர்வாகத்தினை இல்லாதுசெய்து சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்த வேண்டும், வெள்ள அபாயமுள்ள காரணத்தினால் அடுத்த பருவப்பெயர்ச்சி மழைக்கு முன்னர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியமர்த்த வேண்டும், இந்திய அரசினால் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படுவதற்கு முன்பதாக அவர்களுக்கு சொந்தக் காணிகளை வழங்க வேண்டும், இனப்பிரச்சினைத் தீர்வுக்கான அரசியல் தீர்வினை தீவிரப்படுத்த வேண்டும் என அரசாங்கத்திடம் வலியுறுத்துவதென தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
மேலும் இங்கே தொடர்க...

மன்னாரில் தடை செய்யப்பட்ட உபகரணக்களை கொண்டு மீன்பிடிக்க தடை

மன்னார் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட மீன் பிடி உபகரணங்களை பைத்து மீன் பிடித் தொழிலில் ஈடுப்படுவதற்கு வழங்கப்பட கால அவகாசம் இன்று முடிவடைந்துள்ளதாக மன்னார் மாவட்ட கடற்தொழில் உதவிப்பணிப்பாளர் சந்திரசேகரப்பிள்ளை தெரிவித்துள்ளார்.

வலை,இழுவை வலை, போன்ற வலைகளும் கடற்பகுதியில் பற்றைவைத்து மீன்பிடித்தல் போன்ற முறையும் தடைசெய்யப்பட்டிருந்தது.எனினும் மேற்படி கடற்தொழில் உபகரணங்களை வைத்தே மன்னார் மாவட்டத்தில் அதிகளவான மீனவர்கள் கடற்தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டுவந்தனர்.

வர்தமானி அறிவித்தலின் பிரகாரம் மேற்படி உபகரணங்களை கையாண்டு மீன் பிடித்தல் தடைசெய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்ததாகவும் இது தொடர்பாக மாவட்டத்தில் உள்ள மீபவர் கூட்டுறவு சங்கங்களின் ஊடாக மாணவர்களுக்கு தெரியப்படுத்த இருந்ததாகவும் கடற்தொழில் உதவி பணிப்பாளர் தெரிவித்தார்.

மேற்படி தடைசெய்யப்பட்ட மீன் பிடி உபகரணங்களை மன்னர் கடற்தொழில் திணைக்களத்தில் ஒப்படைக்குமாறு அதற்கான கால அவகாசம் செப்டெம்பர் 03 ஆம் திகதி முதல் ஒக்டோபர் 3 ஆம் திகதி வரை வழங்கப்பட்டதாகவும் மாற்று பொருட்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் இது வரை தடைசெய்யப்பட்ட மீன் பிடி உபகரணங்கள் எவையும் ஒப்படைக்கவில்லை எனுனும் இன்று 3 ஆம் திகதி முதல் தடைசெய்யப்பட்ட மீன் பிடி உபகரணங்களை வைத்து கட்ற்தொழிலில் ஈடுபப்டும் பட்சத்தில் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்களை கைது செய்வதற்கு முப்படையினருக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

தங்களை விடுதலை செயயுமாறு மட்டு.அரசியல் கைதிகள் த.தே.கூ.விடம் கோரிக்கை

எவ்வித விசாரணைகளுமின்றி மிக நீண்டகாலமாக சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தங்களை விடுதலை செய்ய உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மட்டக்களப்பு சிறைச்சாலையில் விசாரணையின்றி பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இன்று மாலை மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு கைதிகளைப்பார்வையிடச்சென்ற தமிழ் தேசிய கூட்டமைப்புமட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரனிடம் அரசியல் கைதிகள் இக்கோரிக்கையை விடுத்துள்ளனர்..

இதற்கு பதிலளித்த அரியநேத்திரன் எம்.பி.இது தொடர்பாக பலமுறை ஜனாதிபதியிடம் கேட்டுள்ளோம் ஆனால் விடுதலை தொடர்பாக ஆரோக்கியமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்டபட்டதாக தெரியவில்லை என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கைக்கு செல்லும் ஜேர்மனியர்களுக்கு கட்டுப்பாட்டில் தளர்வு

இலங்கைக்கு செல்லும் ஜேர்மனியர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப் பாட்டினை மேலும் தளர்த்த உள்ளதாக ஜேமன் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இலங்கையில் தற்பொழுது நிலவும் அமைதியான சூழ் நிலையை தொடர்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான ஜேமன் தூதுவர் ஜென்ஸ் புலோட்னர் தெரிவித்துள்ளார்.

இந்த தளர்வு இம்மாதம் முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.இதேவேளை வடகிழக்கு மாகாணங்களில் மிதிவெடிகளை அகற்றும் நடவடிக்கை அபிவிருத்தி மற்றும் வறுமை ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக ஜேர்மனிய அரசங்கம் 15 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

ஆஸி. நோக்கிச் சென்ற படகொன்று கிறிஸ்மஸ் தீவில் மடக்கிப்பிடிப்பு

37 பேருடன் அவுஸ்ரேலியா நோக்கி பயணித்த படகை அவுஸ்ரேலிய கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். அவுஸ்ரேலியா நோக்கி பயணித்த இலங்கைத் தமிழ் அகதிகளின் படகினையே அவுஸ்ரேலிய கடற்படையினர் பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று காலை 37 பேருடன் அவுஸ்ரேலியா நோக்கி பயணித்துக்கொண்டிருந்த இலங்கைத் தமிழ் அகதிகளின் படகு ஒன்றினை கிறிஸ்மஸ் தீவிற்கு அருகில் வைத்து அவுஸ்ரேலிய கடற்படையினர் கைப்பற்றியுள்ளதாகவும் அதில் இருந்தவர்கள் அனைவரும் கிறிஸ்மஸ்தீவு அகதிகள் முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

தமிழ் மக்கள் கௌரவத்துடன் வாழும் பின்னணி மூலமே நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த முடியும்:ரொபர்ட் பிளெக்

தமிழ்மக்கள் சுய கௌரவத்துடன் வாழக் கூடிய ஒரு பின்னணியை உருவாக்கி, அதன் மூலம் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த முடியுமே தவிர, பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்துவதன் மூலம் மட்டும் இலங்கையில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்திவிட முடியாதென தென், மத்திய ஆசியாவிற்கான அமெரிக்காவின் துணை இராஜாங்கச் செயலாளர் ரொபர்ட் ஓ பிளெக் கூறியுள்ளார்.

சன்டியாகோவில் நடைபெற்ற உலகப் பொருளாதார விவகாரப் பேரவை மகாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றுகையில்,

பொருளாதார நன்மைகளை வழங்குவதன் மூலம் மட்டும் யுத்தத்தினால் ஏற்பட்ட காயங்களை ஆற்றிவிட முடியாது. அத்துடன் இலங்கைக்கான நீண்டகால சமாதானம் மற்றும் சுபிட்சத்தையும் அடைய முடியாது. தமிழ் மக்களின் மனிதாபிமான, அரசியல் மற்றும் ஏனைய உரிமைகளை உறுதிப்படுத்தக் கூடிய வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

தமிழ் மக்கள் சுய கௌரவத்துடன் வாழக் கூடிய ஓர் பின்னணியை உருவாக்குவதன் மூலமே நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த முடியும். யுத்தம் காரணமாக இடம்பெயர் முகாம்களில் தங்கியிருந்த 3 இலட் சம் பேரில் அநேகமானவர்கள் மீள் குடியேற்றப்பட்டுள்ளனர். தமிழர் பிரதேச மற்றும் மாகாணசபைத் தேர்தல் களை கூடிய விரைவில் நடத்தி சிவில் நிர்வா கத்தை ஏற்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் முக்கிய கடமையாகும். 30 ஆண்டுகளின் பின் னர் சுதந்திரமான அரசியல் தலைமைகள் உரு வாவதற்கு இது நல்லதொரு சந்தர்ப்பமாகும்

நிலையான சமாதானத்தை ஏற்படுத்த வேண்டுமாயின், நிஜமான நல்லிணக்கம் ஏற்படுத்தப்பட வேண்டும். குறிப்பாக யுத்தக் குற் றச் செயல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு குற்றவா ளிகளுக்குத் தண்டனை விதிக்கப்படவும் வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள உண் மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் நட வடிக்கைகள் வரவேற்கப்பட வேண்டியன. சர்வதேச மானிதாபிமான சட்டங்களை மீறிய வர்களுக்கு எதிராக விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பல்லின ஜனநாயகத்தை நாட்டில் கட்டியெழுப்ப வேண்டியது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கடமையாகும் எனவும் ரொபர்ட் ஓ பிளேக் தெரிவித்துள்ளார்.

இடம்பெயர்ந்த மக்களுக்காக அமெரிக்கா இதுவரையில் 89 மில்லியன் அமெரிக்க டொலர்களை உதவியாக வழங்கியுள்ள தெனவும் வடக்கில் வாழும் மக்களின் வாழ் வாதாரத்தை அபிவிருத்தி செய்யும் முகமாக தனியார்துறை பங்காளித்துவம் மற்றும் விவசாய அபிவிருத்திக்கு 25 மில்லியன் டொலர்களையும் வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...

நண்பர்கள் யார் என்பதை இனங்கண்டு செயற்பட்டால் தீர்வு சாத்தியமாகும்

அரசியல் தீர்வு முயற்சியைக் கணிசமான சிங்கள மக்கள் பிரிவினை முயற்சியாகச் சந்தேகிக்கின்ற நிலையில் அவர்களின் ஆதரவைப் பெறுவதற்கான மார்க்கம் என்ன?தமிழ் மக்களுக்கு இன்று அவசியமாகத் தேவைப்படுவது அரசியல் தீர்வா அல்லது அபிவிருத்தியா என்ற கேள்வி எழுகின்றது. சிலர் அரசியல் தீர்வு என்கின்றனர். வேறு சிலர் அபிவிருத்தி என்கின்றனர். அபிவிருத்தி எனக் கூறும் போது மீள்குடியேற்றமும் உள்ளடங்குகின்றது.

இது கோழி முந்தியதா முட்டை முந்தியதா என்ற கேள்வியைப் போன்றது.

தமிழ்ப் பிரதேசங்கள் அபிவிருத்தியில் பின்தங்கியிருப்பதால் அபிவிருத்தி அவசியமாகத் தேவைப்படுகின்றது. இராணுவ நடவடிக்கை காரணமாக வீடு வாசல்களை இழந்து இடம் பெயர்ந்த மக்களை முறைப்படி மீள்குடியேற்ற வேண்டியதும் ஒரு அத்தியாவசியமான தேவை.

இவ்விரு தேவைகள் காரணமாக அரசியல் தீர்வு முயற்சியைக் கைவிடலாமா என்பது அடுத்த கேள்வி.

தமிழ்ப் பிரதேசங்கள் அபிவிருத்தியில் பின்தங்கியதற்கும் இராணுவ நடவடிக்கை காரணமாக மக்கள் வீடுவாசல்களை இழந்து இடம் பெயர நேர்ந்ததற்கும் அடிப்படையான காரணம் என்னவென்று பார்த்தால் அரசியல் தீர்வு இல்லாமையே என்ற முடிவுக்கு வரலாம்.

எனவே, அபிவிருத்தி எவ்வளவுக்கு அவசியமோ அதே அளவுக்கு அரசியல் தீர்வும் அவசியம். மக்களின் பிரதிநிதிகள் என்று உரிமை கோருபவர்கள் அபிவிருத்தி மற்றும் மீள்குடியேற்ற நடவடிக்கைகளில் செயலீடுபாட்டுடன் பங்கேற்கின்ற அதேவேளை அரசியல் தீர்வு முயற்சியையும் சிரத்தையுடன் முன்னெடுக்க வேண்டும்.

இந்த முயற்சி சரியான முறையில் முன்னெடுக்கப்படாத காரணத்தால் அரசியல் தீர்வு சாத்தியமில்லாது போனது மாத்திரமன்றித் தமிழ் மக்கள் பல இன்னல்களுக்கும் உள்ளாகினர் என்பதை இப்பத்தி பல தடவைகள் சுட்டிக்காட்டியிருக் கின்றது. எனவே அதுபற்றி இப்போது அதிகம் கூற வேண்டிய தில்லை.

இனப்பிரச்சினை தொடர்பான இன்றைய நிலை திருப்தி தருவதாக இல்லை. நியாயமான அரசியல் தீர்வுக்குச் சாதகமான சூழ்நிலை இன்று தென்னிலங்கையில் இல்லை. பதின் மூன்றாவது அரசியலமைப்புத் திருத்தம் நியாயமான தீர்வல்ல என்பதில் தமிழ் மக்கள் மத்தியில் மாறுபட்ட கருத்து இல்லை. எனினும் இத்திருத்தத்தைக் கூட முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்குச் சாதகமற்ற சூழ்நிலையே இன்று தென்னிலங்கை யில் நிலவுகின்றது.

இத்திருத்தம் நிறைவேற்றப்பட்டு இருபது வருடங்களுக்கு மேலாகிவிட்டது. தமிழ் மக்களுக்கு அரசியல் தலைமை தாங்கியவர்கள் தூரநோக்குடனும் சிந்தனைத் தெளிவுடனும் இத்திருத்தத் தைக் கையாண்டிருந்தால் இக் காலப்பகுதியில் சாதகமான மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கலாம். பதின்மூன்றாவது திருத்தத்திலும் பார்க்கக் கூடுதலான அதிகாரங்களைக் கொண்ட அரசியல் தீர்வுக்குச் சாதகமான சூழ்நிலையைத் தென்னிலங்கை மக்கள் மத்தியில் தோற்றுவிக்கவும் முடிந்திருக்கும். விட்ட தவறைப் பற்றிப் பேசிக் காலத்தைக் கடத்தாமல் இப்போது செய்ய வேண்டியது என்ன என்ற சிந்தனையே இன்றைய தேவை.

தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக் கோரிக்கையைக் கணிசமான சிங்கள மக்கள் பிரிவினையின் முதலாவது படியாகச் சந்தேகிக்கின்ற பின்னணி யிலேயே அரசியல் தீர்வு முயற்சியை முன்னெடுக்க வேண்டியவர்களாக நாம் இருக்கின்றோம். சிங்கள மக்கள் என்ன நினைத்தாலும் பரவாயில்லை என்ற இறுமாப்பு மனோபாவம் அரசியல் தீர்வை வென்றெடுப்பதற்கு எவ்விதத்திலும் உதவப் போவதில்லை.

அரசியல் தீர்வுக்குச் சிங்கள மக்களின் பங்களிப்பு இன்றியமையாதது என்ற நிலையை 1978 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்த இன்றைய அரசியலமைப்பு தோற்றுவித்திருக் கின்றது. சில திருத்தங்களுக்குச் சர்வசன வாக்கெடுப்பில் மக்களின் அங்கீகாரம் பெற வேண்டியதைக் கட்டாயமாக்கும் ஏற்பாடு இன்றைய அரசியலமைப்பில் உண்டு. அரசியல் தீர்வுக்கான அரசியலமைப்புத் திருத்தங்களும் இந்த ஏற்பாட்டின் செயல் வரம்புக்குள் அடங்குகின்றன.

ஆயுதப் போராட்டத்தின் மூலம் தீர்வு காண முடியாது என்பது அனுபவ ரீதியாக நிரூபணமாகிவிட்டது. எந்த விதத்திலாவது அரசாங்கத்துடன் உடன்பாடு கண்டு அரசியல் தீர்வுக்கான அரசியலமைப்புத் திருத்தமொன்றை நிறைவேற்றினாலும் கூட, சர்வசன வாக்கெடுப்பில் மக்களின் அங்கீகாரம் பெறப்படாவிட்டால் அரசியல் தீர்வை நடைமுறைப்படுத்த முடியாது. சிங்கள மக்களின் ஆதரவு இல்லாமல் சர்வசன வாக்கெடுப்பில் வெற்றி பெறுவது சாத்தியமில்லை.

எனவே, இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வில் சிங்கள மக்களின் பங்களிப்பு முக்கிய இடம் வகிக்கின்றது.

அரசியல் தீர்வு முயற்சியைக் கணிசமான சிங்கள மக்கள் பிரிவினை முயற்சியாகச் சந்தேகிக்கின்ற நிலையில் அவர்களின் ஆதரவைப் பெறுவதற்கான மார்க்கம் என்ன?

தேசிய அணுகுமுறை

தேசிய ரீதியான அணுகுமுறைக்கூடாகவே சிங்கள மக்களின் ஆதரவை வென்றெடுக்க முடியும். தமிழ் அரசியல் தலைமைகள் இதுவரை தேசிய ரீதியாகச் செயற்படவில்லை. இத்தலைவர்கள் தேசிய ரீதியாக இடைக்கிடை செயற்பட்டதெல்லாம் வர்க்க நலனை முன்னிறுத்துவதாக இருந்ததேயொழிய இனப் பிரச்சினை யின் தீர்வுக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை. சுருக்கமாகக் கூறுவதானால் தமிழ்த் தலைமைகளின் தேசிய ரீதியான செயற்பாடுகள் ஐக்கிய தேசியக் கட்சியின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவானவையாகவே இருந்தன. இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்விலும் பார்க்கத் தேசியமயக் கொள்கையை எதிர்ப்பதற்கும் இடதுசாரி எதிர்ப்புக்கும் தமிழ்த் தலைவர்கள் முன்னுரிமை அளித்துச் செயற்பட்டதே இதற்கும் காரணம்.

சுதந்திர இலங்கையின் முதலாவது தசாப்த காலத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் குறிப்பிட்டுக் கூறக்கூடிய அளவுக்கு இடதுசாரிக் கட்சிகளின் செல்வாக்கு இருந்தது. பல உள்ளூராட்சி சபைகளுக்கு இடதுசாரிகள் தலைமை வகித்தனர். பாராளுமன்றத் தேர்தல்களில் அவர்கள் கணிசமான வாக்குகளைப் பெற்றனர். 1956 ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்றத் தேர்தலில் பருத்தித்துறைத் தொகுதியில் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பொன் கந்தையா வெற்றி பெற்றார். வட்டுக்கோட்டைத் தொகுதியில் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் வயித்திலிங்கமும் யாழ்ப்பாணத் தொகுதியில் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் கார்த்திகேசனும் கணிசமான வாக்குகள் பெற்றனர்.

இலங்கைத் தமிழ் மக்களின் அப்போதைய அரசியல் தலைமை யாழ்ப்பாணத்தையே மையமாகக் கொண்டிருந்தது. அதேவேளை இத்தலைவர்கள் வலதுசாரிகளாகவும் இருந்தனர். இடதுசாரிகளின் செல்வாக்கு வளர்ச்சியடைவதைத் தடுப்பது இத் தலைவர்களின் அன்றைய பிரதான நோக்கமாக இருந்தது. இடதுசாரிகளுக்கு எதிராக இவர்கள் மேற்கொண்ட பிரசாரம் சிங்கள எதிர்ப்புப் பிரசாரமாக வும் வடிவெடுத்தது. இப்பிரசாரத்தினால் போஷிக்கப்பட்டு வளர்ந்த குறுந்தேசிய வாதம் இனப் பிரச்சினையின் தீர்வுக்காகத் தேசிய ரீதியாகச் செயற்பட வேண்டியதன் அவசியத்தை உணரவில்லை. இதன் பாதகமான விளைவை இன்று அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம்.

வடக்குக்கும் தெற்குக்குமிடையே கோடு கீறி ஒதுங்கி நிற்பதன் மூலம் அரசியல் தீர்வுக்குச் சிங்கள மக்களின் ஆதரவைப் பெற முடியாது. சிங்கள மக்கள் மத்தியில் செயற்படுவனவும் நியாயமான அரசியல் தீர்வுக்குச் சாதகமான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளனவுமான அரசியல் கட்சிகளுடனும் அமைப்புகளுடனும் தமிழ்க் கட்சிகள் நேச உறவை வளர்த்துச் செயற்பட வேண்டும். இவ்வாறு செயற்படுவதன் மூலம் அரசியல் தீர்வின் அவசியம் பற்றியும் நாட்டின் ஆள்புல ஒருமைப்பாட்டுக்கு அரசியல் தீர்வினால் பங்கம் ஏற்படாது என்பது பற்றியும் சிங்கள மக்களுக்குத் தெளிவுபடுத்த முடியும். அவர்களிடம் தோன்றியுள்ள சந்தேகத்தைத் தீர்ப்பதற்கும் அரசியல் தீர்வுக்கு அவர்களின் ஆதரவைப் பெறுவதற்கும் இதைத் தவிர வேறு வழி இல்லை.

கூடா நட்பு

மேலே கூறியது போல, தமிழ்த் தலைவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியுடனேயே நேச உறவைப் பேணி வந்திருக்கின்றார்கள். இப்போதும் இந்த நிலையையே காண்கிறோம். ஐக்கிய தேசியக் கட்சியுடனான உறவு இனப்பிரச்சினையைப் பொறுத்த வரையில் எந்தவொரு நன்மையையும் தரவில்லை. இனிமேல் தரப்போவது மில்லை.

தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாகச் சாதக மனோபாவத்துடன் நடந்து கொள்வது போலப் பாவனை செய்வதும் உரிய நேரத்தில் காலை வாரிவிடுவதும் ஐக்கிய தேசியக் கட்சியின் வழமை. அக்கட்சியுடன் நேச உறவு கொண்டுள்ள தமிழ்த் தலைவர்களுக்கு இது தெரியாது எனக் கூறுவதற்கில்லை. இனப் பிரச்சிதீக்கு அப்பாற்பட்ட ஒரு பிணைப்பு இத் தலைவர்களுக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்குமிடையே இருப்பதாலேயே இவர்கள் அக்கட்சியுடன் நிரந்தரமாக உறவு பேணுகின்றார்கள்.

1965 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியும் தமிழரசுக் கட்சியும் கூட்டாக ஆட்சி அமைத்தன. மாவட்ட சபைகளை அமைப்பதென்ற உறுதிமொழியின் அடிப்படையிலேயே ஐ.தே.க அரசாங்கத்தில் தமிழரசுக் கட்சி பங்காளி ஆகியது. ஆனால் சிறிது காலம் சென்றதும், மாவட்ட சபை தருவது சாத்தியமில்லை என்று பிரதமர் டட்லி சேனநாயக கையை விரித்துவிட்டார். அதற்குப் பின்னரும் தமிழரசுக் கட்சி ஐக்கிய தேசியக் கட்சியுடனான உறவைக் கைவிடவில்லை. அந்த அரசாங்கத்தைத் தொடர்ந்து ஆதரித்தது. தமிழ்த் தலைவர்களுக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்குமிடையே இனப் பிரச்சினைக் குப் புறம்பான பிணைப்பொன்று இருக்கின்றது என்பதற்கு இது ஒரு உதாரணம்.

இப்போதும் ஐக்கிய தேசியக் கட்சி அதன் வழமையான பாணியில் செயற்பட்டிருக் கின்றது.

சமஷ்டி அடிப்படையில் தீர்வு காண்பதற்கு ஒஸ்லோ அறிக்கையில் ஐக்கிய தேசியக் கட்சி சம்மதம் தெரிவித்த போது தமிழ்த் தலைவர்கள் அது பற்றிப் பெரிதாகப் பேசினார்கள். அக்கட்சியுடன் தாங்கள் கொண்டிருக் கும் நட்பை நியாயப் படுத்துவதற்காக ஒஸ்லோ அறிக்கையைச் சுட்டிக் காட்டினார்கள்.

சமஷ்டி நிலைப்பாட்டைக் கைவிடுவதாக இப்போது திஸ்ஸ அத்தநாயக்க உத்தியோகபூர்வமாக அறிவித்திருக் கின்றார். மாற்றுத் தீர்வுத்திட்டம் எதையும் முன்வைக்காமலேயே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கின்றார். இனப் பிரச்சினைக்கான தீர்வில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு அறவே அக்கறை இல்லை என்பதே இதன் அர்த்தம்.

ஐக்கிய தேசியக் கட்சியுடனான நட்பு கூடா நட்பு என்பதைத் தமிழ்த் தலைவர்கள் இப்போதாவது புரிந்துகொள்ளத் தவறுவார்களேயானால் இனப் பிரச்சினையின் தீர்வுக்கு அவர்கள் முன்னுரிமை அளிக்க வில்லை என்றாகிவிடும்.
மேலும் இங்கே தொடர்க...

யாழ். கிளிநொச்சி நீர் விநியோக திட்டம் ரூ. 2000 கோடியில் ஆரம்பம்


யாழ். கிளிநொச்சி பாரிய நீர் விநியோகத் திட்டம் (இரணை மடுத் திட்டம்) இரண்டாயிரம் கோடி ரூபா செலவில் ஆரம்பிக்கப்பட வுள்ளது.

2002 இல் ஆசிய அபிவிருத்தி வங்கி, தேசிய நீர் வழங்கல் வடிகால் அமைப்பு சபை மற்றும் யாழ். கிளிநொச்சி அரச அதிபர் பிரிவுக்குட்பட்ட 55 கூட்டங்களில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரதிபலிப்பாகவே இத்திட்டம் முழுமை பெற்று ஆரம்பிக்கப்படவுள்ளது.

தேசிய நீர் வழங்கல் வடிகால் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி இவ்வாறு தெரிவித்தார்.

யாழ். கிளிநொச்சி நீர் விநி யோகத் திட்டத்தின் அபிவிருத்தி எனும் தலைப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தேசிய நீர் வழங்கல் வடிகால் அமைப்பின் அமைச்சர் தினேஷ் குணவர்தன ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் மேற்கொண்ட முயற்சியை அடுத்து 2000 கோடி ரூபா நிதி யாழ். கிளிநொச்சி நீர் விநியோகத் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிதியானது வடக்கு பிர தேசத்தின் குடிநீர் பற்றாக் குறையான அனைத்து பிரதேச மக்களின் தேவைக்கும் பயன் படுத்தப்படவுள்ளது.

அரசின் தேசிய கொள்கை பிரகாரம் 2015 இல் 85%மான மக்களுக்கு பாதுகாப்பான குடிதண்ணீர் வழங்க வேண்டும். 2025 இல் 100 வீதமான குடி தண்ணீர் தேவை பூர்த்தி செய் யப்பட வேண்டும்.

ஆனால், தற்போது பிரதேச சபை நீர் வழங்கல் வடிகால் சபை மூலம் யாழ்ப்பாணத்திற்கு 3.2 வீத நீரும் கிளிநொச்சிக்கு 1.1 வீத நீரும் மன்னாருக்கு 20.3 வீத நீரும் வவுனியாவுக்கு 4.5 வீத நீரும் வழங்கப்படுகிறது.

தற்போது ஆசிய அபிவிருத்தி வங்கியானது, பாரிய முதலீட்டுத் திட்டத்தின் கீழ் கிளிநொச்சி, மன்னார், யாழ்ப்பாணம், வவுனியா ஆகிய மாவட்டங்களில் நீர் விநியோகத் திற்காக பெரும் நிதியை செலவு செய்கின்றது.

இதில் கிளிநொச்சி – யாழ். நீர் விநியோகத் திட்டத்தின் கீழ் (இரணை மடு) ஒரு நாளைக்கு 27 ஆயிரத்து 500 மீற்றர் கீயுப் குடி தண்ணீர் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆனால், 88 ஆயிரத்து 500 மீற்றர் கீயுப் குடிதண்ணீர் ஒருநாளைக்கு யாழ். கிளிநொச்சி நீர் விநியோகத்திற்கு முழுமையாக தேவையாக உள்ளது.

மிகுதியான 61 ஆயிரம் மீற்றர் கீயுப் குடிதண்ணீரை நிலத்தடி நீரை பாதுகாத்து வழங்க உத்தேசித்துள்ளோம்.

இதற்காக குறைந்தது 40 வருடங்கள் தேசிய நீர் வழங்கல் வடிகால் அமைப்பு சபை போராட வேண்டியுள்ளது.

இதேவேளை, இரணைமடுத் நீர்த் திட்டத்தை 2 அடி உயரம் உயர்த்தி தேவை யான நீரை தேக்கி, வான் பாயும் வாய்க் கால் தொகுதி, பாரிய கடவை பாலம், திருவையாறு ‘லிப்ற்’ விவசாய நீர்ப்பாசன திட்டம் என்பவற்றை விரைவில் புனரமைத்து கொடுக்கவுள்ளோம்.
மேலும் இங்கே தொடர்க...

வடக்கில் மீள்குடியேறியோரின் கட்டட பணிகளுக்கு தட்டுப்பாடின்றி மணல்

கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியேறும் மக்கள் தமது வீடுகளின் திருத்த வேலைகளுக் குத் தேவையான மணலை தட்டுப்பாடின்றி பெற்றுக்கொள்வதற்கு வழிவகைகள் செய்யப்பட்டுள்ளதாக அரச அதிபர் ரூபவதி கேதிஸ்வரன் தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்ட மக்களுக்குத் தேவையான மணலை பெறுவதற்கு கண்டாவளை, தன்னங்கண்டி மற்றும் பூநகரியில் இரண்டு இடங்களும் இனங்காணப்பட்டுள்ளன.

மீளக்குடியேறும் மக்கள் தமது கட்டட தேவைக்காக மேற்படி இடங்களிலிருந்து மணலை பெற்றுக்கொள்ள முடியும்.

தமது தேவை குறித்து கிராம சேவகரின் ஊடாக தமது பிரதேச செயலாளரின் அனுமதியுடன் மேற்குறிப்பிட்ட பகுதிகளிலிருந்து மணல் பெறலாம்.

மணல் அகழும் பிரதேசங்கள் புவிச்சரித வியல் சான்றிதழ் பெற்ற சங்கங்கள் மணல் அகழ்வதற்கு அனுமதி வழங்கியுள்ளன. மீள்குடியேறும் மக்கள் தமது வீட்டுத் தேவைக்காக பெறுவதாயின், மணல் கியூப் ஒன்றுக்கு 250 ரூபாவை மேற்படி சங்கங்களுக்கு வழங்க வேண்டும். ஒப்பந்தக்காரர்களாயின் கியூப் ஒன்றுக்கு 1500 ரூபாவை வழங்க வேண்டும் எனவும் தீர்மாணிக்கப் பட்டுள்ளதாகவும் அரச அதிபர் ரூபவதி கேதிஸ்வரன் தெரிவித்தார்.

எனினும் மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு கொண்டு செல்வதாக கூறி மணல் விற்பனையில் ஈடுபடுவதை தடுக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட் டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

பொன்சேகா முறைப்படி மன்னிப்பு கோரினால் கவனம் செலுத்தப்படும் - ஜனாதிபதிசரத் பொன்சேகாவிற்கு எதிரான தீர்ப்பினைத் தாம் ஏற்றுக்கொண்டமை தனிப்பட்ட பழிவாங்கலல்ல என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

தாமே நியமித்த இராணுவ நீதிமன்றத்தின் தீர்ப்பை தாமே ஏற்காவிட்டால் அந்த நீதிமன்றக் கட்டமைப்பிற்கே பங்கம் ஏற்படுமெனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, சரத்பொன்சேகாவிற்கு மன்னிப்பளித்தல் சம்பந்தமாக முறைப்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டால் அப்போது அது விடயத்தில் கவனம் செலுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.

பொலன்னறுவையில் பெளத்த மதத் தலைவர்கள் பங்கேற்ற நிகழ்வொன்றில் இது தொடர்பில் (நேற்று முன்தினம்) கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, இது நிதி மோசடி சம்பந்தமான குற்றமாகும். “என்னைக் கொலை செய்வதாகக் கூறிய போதும் நான் அது சம்பந்தமாக ஒரு வார்த்தையேனும் பேசவில்லை” எனவும் தெரிவித்தார்.

ஜனாதிபதி என்ற வகையில் எனக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டால் மன்னிப்பளிக்க முடியுமென அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கேற்ப முறைப்படி செயற்பட்டால் அது தொடர்பில் கவனத்திற்கொள்ள முடியுமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

வடமத்திய மாகாண பெளத்த மதத் தலைவர்களுக்கான விசேட நிகழ்வொன்று நேற்று முன்தினம் மாலை பொலன்னறுவை ‘சுது அரலிய’ ஹோட்டலில் நடைபெற்றது. அமைச்சர்கள் மைத்திரிபால சிறிசேன, பந்துல குணவர்தன, பவித்ரா வன்னியாராச்சி உட்பட அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், வவுனியா, திருகோணமலை, அநுராதபுரம், பொலன்னறுவை மாவட்டங்களைச் சேர்ந்த பெளத்த மதத் தலைவர்கள் பங்கேற்ற இந்நிகழ்வில் கருத்துத் தெரிவித்த போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், இராணுவ நீதிமன்றத்தில் இத்தீர்ப்பு ஒன்றும் புதியதல்ல. இந்த நீதிமன்றத்தின் மூலம் சுமார் 8000 பேர் தண்டனைக்குள்ளாக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்தார்.

பெளத்த மதத் தலைவர் ஒருவர் இங்கு கருத்துத் தெரிவிக்கும் போது, தமது மாவட்டத்தின் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதிக்குத் தெளிவுபடுத்திக்கொண்டிருக் கும் போது சரத் பொன்சேகாவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு மிகச் சரியானது எனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 30 வருடங்கள் ஆயினும் நல்லாட்சி புரிய வேண்டுமெனவும் குறிப்பிட்டார். அதனையடுத்தே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெளிவுபடுத்தினார்.
மேலும் இங்கே தொடர்க...

பிள்ளைகளை பாடசாலை அனுப்பாத பெற்றோர் மீது கடும் நடவடிக்கை

பாடசாலைகளுக்கு அனுமதி பெறும் வயதையுடைய சகல பிள்ளைகளும் கட் டாயமாக பாடசாலைகளுக்கு அனுப் பப்பட வேண்டும். கல்வி கற்பதற்காக தமது பிள் ளைகளை பாடசாலைக்கு அனுப்பாத பெற்றோர் மீது சட்ட நட வடிக்கையை எடுக்க அரசாங்கம் ஆயத்தமாக இருக்கிறது என அரசின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

நாட்டின் ஏதாவது ஒரு பகுதியில் கல்வி கற்பதற்காக பாடசாலைக்கு செல்லாத பிள்ளைகள் இருப்பின் அவர் கள் பற்றிய விபரங்களை அப் பகுதிக்கு பொறுப்பான கிராம சேவகர் சேகரித்து அதற்கான காரணத்தை கண்டறிந்து அறிக்கையொன்றை சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு செயற்படாத கிராம சேவகர் கள் மீதும் கடும் சட்ட நடவடிக்கை எடுக் கப்படும் எனவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

பாடசாலைக்கு செல்லும் வயதுடைய பிள்ளைகள் சுமார் 2,50,000 பேர் வரையில் பாடசாலைகளுக்கு செல்லாமல் உள்ளனர் என்பதும் அண்மையில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பொன்றின் மூலம் தெரிய வந்துள்ளது.

புள்ளி விபரங்கள் திணைக்களம் இந்த கணக்கெடுப்பை செய்திருந்தது. இந்த கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு உடனடியாக தமக்கு அறிக்கை யொன்றை சமர்ப்பிக்குமாறும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதனோடு தொடர்பு டைய அதிகாரிகளுக்கும் அண்மையில் பணிப்புரை களை விடுத்திருந்தமையையும் அந்த அதிகாரி நினைவு கூர்ந்தார்.

பாடசாலைக்கு செல்லாமல் இருக்கும் பிள்ளைகளின் விபரங்கள் பகுதி, பெயர், விலாசம் என்பவற்றை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவும், அவர்களை பாடசாலைக்கு அனுப்பாமல் தடுத்து நிறுத் தும் பெற்றோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் வழிவகை செய்யப்படவுள்ளது.

சகலருக்கும் இலவசக் கல்வி என்ற அடிப்படையில் சகல பிள்ளைகளும் கட்டாயக் கல்விக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பதன் அடிப்படையிலும் எதிர்கால சந்ததியினர் கல்வியில் சிறந்து விளங்குபவர்களாகவும் நாட்டின் எதிர்காலத்தை ஏற்று நடத்தவுள்ள வர்கள் என்பதாலும் மஹிந்த சிந்தனையின் அடிப்படையில் அரசு முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அந்த அதிகாரி குறிப்பிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...

சிறுவயதுத் திருமணம் பதிவாளர்கள் மீது சட்ட நடவடிக்கை


குறைந்த வயது சிறுவர்களுக்குத் திரு மணம் செய்துவைக்கும் பதிவாளர்களை வேலை நீக்கம் செய்து, அவர்களுக்கெதி ராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உரிய அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார்.

நாட்டின் எப்பகுதியாயினும் இவ் வாறு செயற்படும் திருமணப் பதிவாளர் களுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்து தண்டனை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி கேட்டுக் கொண்டார்.

பொலன்னறுவையில் நேற்று நடை பெற்ற வடமத்திய மாகாண அபிவிருத்தி செயற்பாட்டு மீளாய் வுக் கூட்டத்தின் போது வெலிக்கந்தை பிரதேசத்தில் பெரு மளவு சிறுமிகள் குறைந்த வயதில் திருமணம் முடித்து ள்ளதாகவும், 15 வயதிற்கு மேற்ப ட்ட ஒரு சிறுமி கூட அப்பிரதேசத்தில் தற்போது இல்லை யென ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பான முறைப்பாடு தமக் குக் கிடைக்கப் பெற்றுள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அவ்வாறு அங்கு சிறுவயதில் திருமணம் முடிந்த சிறுமிகளின் புகைப் படத்தையும் ஆதாரமாகக் காட்டினார். தனித்தனியே காணிகளைப் பெற்றுக் கொள்வது போன்ற காரணங் களுக்காக பெற்றோர் சிறு வயதிலேயே தமது பிள்ளைகளுக்குத் திருமணம் செய்து வைக்கின்றனர்.

இத்தகைய சிறு பிள்ளைகள் இன்னும் சில மாதங்களில் பிள்ளைகளைப் பெற்று எவ்வாறு அவற்றை வளர்க்கப் போகின் றார்கள் என்பதை அந்த பெற்றோர் ஏன் சிந்திக்கவில்லையெனவும் ஜனாதிபதி கேள்வியெழுப்பினார்.

சிறுவர் தினம் கொண்டாடப்படும் இவ் வாரத்தில் இத்தகைய அநியாயங்கள் நடப்பதைத் தடுக்க சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஜனாதிபதி கடுமையான உத்தரவு பிறப் பித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

அரசு விடுதலை புலிகளின் புனர் வாழ்வில் அ திக கவனம்
தமிழ் கட்சிகளின் அரங்கத்தின் கூட்டதொடரில் முடிவு

2.தமிழ் மக்கள் இன்று எதிர்நோக்கியுள்ள உடனடி தேவைகள் குறித்து இன்றைய தமிழ் கட்சிகளின் அரங்கம் கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளது என ஸ்ரீ டெலோ சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

இன்று சனிக்கிழமை காலை 8.00 மணியளவில் தமிழ் கட்சிகளின் அரங்கத்தின் கூட்டதொடர் கிளிநொச்சியில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரியின் தலைமையில் அவரது இல்லத்தில் இடம்பெற்றது.

ஈ.பி.டி.பி.செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, ஈ.பி.ஆர்.எல்.எப். சார்பில் வரதராஜபெருமாள்,தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் பூ.பிரசாந்தன், தமிழ் தேசிய விடுதலை கூட்டமைப்பு செயலாளர் கே.சிவாஜிலிங்கம், புளோட் சார்பில் உதயன் உட்பட கட்சி முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

இந்த கலந்துரையாடலில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் மிக முக்கிய பிரச்சினைகளில் ஐந்து விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டதாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளரும் மாகாணசபை உறுப்பினருமான பூ.பிரசாந்தன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தாவது, வடகிழக்கில் யுத்த காலத்தில் கொல்லப்பட்ட போராளிகள் உட்பட பொதுமக்களின் மரணச் சான்றிதழை பெற்றுக்கொடுள்வதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கிவருகின்றனர்.

பொதுவாக ஒருவர் காணாமல்போகும் பட்சத்தில் அவர் 5வருடங்களில் திரும்பிவராவிட்டால் அவருக்கு மரணச் சான்றிதழ் கொடுக்கப்படுகின்றது. எனினும் ஜே.வி.பி.யினர் கொண்டு வந்த தீர்மானம் ஒன்றின் படி இரண்டு வருடங்களில் அவர்களுக்கு மரணச் சான்றிதழ் வழங்கப்பட்டன.

இதன் காரணமாக யுத்த காலத்தில் கொல்லப்பட்ட போராளிகள் மற்றும் கொல்லப்பட்ட பொதுமக்கள் இதுவரையில் மரணச்சான்றிதழ் பெற்றுக்கொள்வதில் பலத்த சிரமத்தினை எதிர்நோக்கிவருகின்றனர்.

இதேபோன்று யுத்த காலத்தில் பிறந்த பிள்ளைகளுக்கான பிறப்புச்சான்றிதழை பெற்றுக்கொள்ளமுடியாத நிலை இருந்தது.அதனை பெற்றுக்கொடுப்பது சம்பந்தமான நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பில் முடிவெடுக்கப்பட்டன.

அத்தோடு வடகிழக்கில் காணி உரிமையற்றவர்கள் குடியேறுதல் தொடர்பிலான தகவல்களை திரட்டி இது விடயமாக ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுசெல்ல தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மழைகாலம் ஆரம்பமாகியுள்ளதால் வடக்கில் மீள்குடியேற்றப்பட்ட மக்கள் பல சிரமங்களை எதிர்நோக்கவேண்டியுள்ளது. ஆதலால் அந்த மக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்திசெய்ய நடவடிக்கை மேற்கொள்வதாகவும் தீர்மானிக்கப்பட்டது.

யுத்தம் முடிவடைந்து யுத்த நடவடிக்கையில் ஈடுபட்ட விடுதலைப்புலி உறுப்பினர்களுக்கு மாத்திரமே அரசாங்கம் புனர்வாழ்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு அவர்கள் பக்கமே அரசு முழுமையான கவனத்தை செலுத்திவருகின்றது.

ஆனால் யுத்த நிலையின்போது விடுதலைப்புலிகளினால் பாதிக்கப்பட்டு இன்று எதுவும் அற்ற நிலையில் உள்ள ஏனைய இயக்க உறுப்பினர்கள் தொடர்பில் அரசு இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. அவர்கள் நலன் தொடர்பில் அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று அவர்களின் புனர்வாழ்வு நடவடிக்கைக்கு உதவுதல் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டதாக தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...