3 டிசம்பர், 2010

நாடு திரும்பிய ஜனாதிபதி விமான நிலையத்தில் மத வழிபாடுகளில் ஈடுபட்டார்

பிரித்தானிய விஜயத்தை முடித்துக்கொண்ட ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ யு.எல் 501 என்ற விசேட விமானம் மூலம் சற்றுமுன் விமானநிலையம் வந்தடைந்ததாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.

ஜனாதிபதியை வரவேற்க அமைச்சர்கள் பலர் விமான நிலையத்தை சென்றடைந்துள்ளனர்.

ஜனாதிபதி விமான நிலையத்தில் மத வழிபாடுகளில் ஈடுபட்டார் (இணைப்பு02)

லண்டன் விஜயத்தை முடித்து விட்டு நாடு திரும்பிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்டி விமான நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட மத வழிபாடுகளில் கலந்துகொண்டதாகவும் அவரை வரவேற்க பெருந்திரளான பொதுமக்கள் வருகை தந்திருந்ததாகவும் எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.



மேலும் இங்கே தொடர்க...

ஜனாதிபதி நாடு திரும்பினார்



பிரித்தானிய விஜயத்தை முடித்துக்கொண்ட ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ யு.எல் 501 என்ற விசேட விமானம் மூலம் சற்றுமுன் விமானநிலையம் வந்தடைந்ததாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.

ஜனாதிபதியை வரவேற்க அமைச்சர்கள் பலர் விமான நிலையத்தை சென்றடைந்துள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

பயங்கரவாதத்தை ஒழிக்கும் விடயத்தில் நாட்டுக்கு நாடு வேறுபடலாகாது: பிரிட்டனில் ஜனாதிபதி

பிரித்தானிய பாராளுமன்றத்தின் சர்வதேச உறவுகள் தொடர்பான குழுவை நேற்று சந்தித்த ஜனாதிபதி ராஜபக்ஷ, பயங்கரவாதத்தை ஒழிக்கும் விடயத்தில் நாட்டுக்கு நாடு வேறுபடக்கூடாது எனத் தெரிவித்துள்ளார்."பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு முழு உலகும் பொதுவான இணக்கப்பாடு ஒன்றிற்கு வருதல் வேண்டும். பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக வழங்கப்படும் ஒத்துழைப்பு மற்றும் செயற்பாடுகள் என்பன நாட்டுக்கு நாடு வேறுபடலாகாது.

உலகின் எந்தப் பாகத்தில் இருந்தாலும் பயங்கரவாதத்தின் மூலம் துன்பப்படும் மக்களுக்காகக் குரல் கொடுக்கப்படும்போது ஒரே விதமான கொள்கையைக் கடைப்பிடிப்பது பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு பெரிதும் துணைபுரியும்.

ஊடக சுதந்திரத்தை உறுதி செய்வதற்காக அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. நாட்டில் வாழும் அனைத்து இன மக்களும் சுதந்திரமாக தமது பணிகளை மேற்கொள்வதற்கான அரசு உருவாக்கியுள்ளது" என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இச்சந்திப்பின்போது பிரித்தானியாவின் சர்வதேச உறவுகள் தொடர்பான குழுவின் தலைவர் ரிச்சர் மற்றும் அவருடைய குழுவினர் பங்கேற்றுள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

லண்டனில் ஜனாதிபதிக்கு எதிராக நடைபெற்ற ஆர்பாப்பாட்டத்தைக் கண்டித்து கொழும்பில் ஆர்ப்பாட்டம்


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக லண்டனில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தைக் கண்டித்து இன்று வெள்ளிக்கிழமை காலை 10.00 மணியளவில் கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது.

சுய தொழில் புரிவோருக்கான சம்மேளனத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த ஆர்ப்பாட்டம், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதித் தலைவரும், மேல் மாகாண ஆளுநருமான அலவி மௌலானா தலைமையில் நடைபெற்றது.

இதன்போது ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவித்தும் வெளிநாடுகளில் விடுதலைப்புலிகளுக்கு வழங்கப்பட்டுவரும் ஆதரவை உடனே நிறுத்தக் கோரியும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கோசம் எழுப்பினர்.
மேலும் இங்கே தொடர்க...

மக்களின் பிரச்சினைகளை கண்டறிந்து 3 மாதத்திற்குள் அறிக்கை

:


மேர்வின்
பொதுமக்களின் பிரச்சினைகளை கண்டறிந்து 3 மாதத்திற்குள் ஜனாதிபதியிடம் அறிக்கை சமர்ப்பிப்பேன் என பொதுமக்கள் தொடர்பாடல் அமைச்சர் மேர்வின் சில்வா நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

அமைச்சர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
மேலும் இங்கே தொடர்க...

நோர்வேயின் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் இருவருக்கு விசா மறுப்பு

நோர்வேயின் சமாதான முயற்சிகள் ஏன் தோல்வி அடைந்தன என்று ஆய்வு நடத்த அந்நாட்டில் இருந்து வருகை தர இருந்த அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் இருவருக்கும் விசா அனுமதி வழங்க இலங்கை மறுத்துள்ளது.

நோர்வே 1997ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை அரசுக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான சமாதான அனுசரணையாளராகப் பணி ஆற்றியது. ஆனால் இவ்வனுசரணைப் பணி தோல்வி அடைந்து விட்டது.

இத்தோல்வியின் காரணம் என்ன என்பதைக் கண்டறிய இருவரும் இலங்கை வர இருந்தனர். இவர்களில் ஒருவர் நோர்வேயைத் தளமாக கொண்டு இயங்கும் இகீஙு. ஙடுஷகீடீங்ஙூடீடூ'ஙூ ஐடூஙூசிடுசிசீசிடீ இன் தலைவரான கினர்சோர்போ ஆவார்.

இவர் அண்மையில் நோர்வேக்கு விஜயம் செய்திருந்த எதிர்க்கட்சித் தலைவர் ரணில்விக்கிரமசிங்கவைச் சந்தித்து உரையாடி இருந்தார். இலங்கைக்கு வந்து அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள், ஊடகவியலாளர்கள் ஆகியோரைச் சந்தித்து நோர்வேயின் தோல்விக்கான காரணங்கள் குறித்து அபிப்பிராயம் பெற அரச சார்பற்ற நிறுவனப் பிரதிநிதிகள் இருவரும் உத்தேசித்து இருந்தனர். விசாக்கள் மறுக்கப்பட்ட நிலையில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்தி இருக்கின்றனர். நோர்வேயின் முயற்சி இலங்கைக்கு பிடிக்கவில்லை என்று தெரிவித்து இருக்கின்றார்கள்.
மேலும் இங்கே தொடர்க...

ஜனாதிபதி மஹிந்தவின் உரை ரத்து செய்யப்பட்டதன் பின்னணியில் பிரிட்டன் : விமல்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒக்ஸ்போர்ட் யூனியனில் ஆற்றவிருந்த உரையை ரத்துச் செய்ததன் பின்னணியில் பிரித்தானிய அரசாங்கமே இருப்பதாக அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ச குற்றம் சாட்டியுள்ளார்.

பத்தரமுல்லையிலுள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கு பிரித்தானிய அரசாங்கம் ஆதரவு வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் மேலும் கருத்து வெளியிட்ட அமைச்சர் விமல்,

யுத்தம் நடைபெற்ற போது இலங்கைக்கு பலநாடுகளில் இருந்தும் இராஜதந்திரிகள் வந்தனர். இவர்களை நாட்டுக்குள் வருவதற்கு நாம் அனுமதித்தோம். நாட்டிற்கு நன்மையைக் கொண்டு வருவதற்கு அவர்கள் வரவில்லை என்ற போதிலும் இராஜதந்திர முறையில் அவர்களை வரவேற்று கடினமான பகுதிகளுக்கும் அழைத்துச் சென்றோம். ஆனால் வேறு நாட்டு இராஜதந்திரிகள் பிரித்தானியாவிற்கு சென்ற போது பாதுகாப்பு வழங்க முடியவில்லை. இந்த வகையில் பிரித்தானியாவை தோல்வியடைந்த ஒரு நாடாகவே கருத வேண்டும்.

பிரித்தானிய ஆர்ப்பாட்டத்தின் பின்னணியில் ஜனநாயக தேசிய முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் விடுதலைப் புலிகள் இயக்கம் ஆகியன பின்னணியில் உள்ளன. புலிகளின் கொடிகளை ஏந்தி ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது. விடுதலைப் புலிகள் இயக்கம், பிரித்தானியாவில் தடை செய்யப்பட்ட இயக்கமாகும். அப்படியானால் சட்டம் அமுல் நடத்தப்படாததற்கு காரணம் என்ன?

பிரித்தானியாவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களும் நடவடிக்கைகளும் இலங்கையின் ஜனாதிபதியை பழிவாங்கும் செயல் அல்ல. மாறாக நாட்டையே பழிவாங்கும் செயலாகும். பிரித்தானியா வேலுப்பிள்ளை பிரபாகரன் தலைமையில் தனி நாடு உருவாகும் என நினைத்திருந்தது. அவ்வாறு நடைபெறாதமையினாலேயே இலங்கைக்கு எதிராக தற்போது துரோகமிழைக்கின்றது.

பிரிக்கப்படாத ஒரே இலங்கை இருப்பதை தாங்கிக் கொள்ள முடியாமலேயே இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளனர். இலங்கையின் நற்பெயரை கெடுக்க அமெரிக்காவும் பிரித்தானியாவும் இணைந்து செயற்படுகின்றன.

ஜனாதிபதி ஆற்றவிருந்த உரையை ஒக்ஸ்போர்ட் அதிகாரிகள் நிறுத்தவில்லை. இந்த உரையை நிறுத்தியதன் பின்னணியில் பிரித்தானிய அரசாங்கமே உள்ளது. விடுதலைப் புலிகளும் ஐக்கிய தேசியக் கட்சியும் இன்றும் இணைந்தே செயற்படுகின்றன. ஜனாதிபதி வெளிநாடு செல்லும் முன்பாக இணையத்தளங்களில் இலங்கையில் யுத்த குற்றம் இடம்பெற்றது போன்ற காட்சிகள் வெளியாகியுள்ளன.

இதன் பின்னணியில் அரச சார்பற்ற நிறுவனங்களைச் சேர்ந்த பாக்கியசோதி சரவணமுத்து ஜெஹான் பெரேரா போன்றோரே உள்ளனர். இவர்களை சட்டத்தின் முன் கொண்டு வாருங்கள். பிரித்தானியாவை மையப்படுத்தியுள்ள ஊடகங்களே புலிகளுக்கு உயிரூட்ட முனைகின்றன.

விடுதலைப் புலிகளைத் தோற்கடித்தாலும் அவர்களின் எச்சங்கள் இன்றும் உள்ளன. விடுதலைப் புலிகளைத் தோற்கடித்த ஜனாதிபதி மீது இன்று பழி சுமத்துகின்றனர். இன்று காலை 11 மணிக்கு கொழும்பிலுள்ள பிரித்தானிய தூதரகத்திற்கு முன் பாரிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
மேலும் இங்கே தொடர்க...

புலம்பெயர் தமிழ் அமைப்புடன் இணைந்து அரசுக்கு எதிராக பொய்க் குற்றச்சாட்டு அரசியல்வாதிகள் மீது பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை

புலம்பெயர் தமிழ் அமைப்புகளுடன் இணைந்து இலங்கைக்கு எதிராக பொய்க் குற்றச்சாட்டு களை பரப்பும் அரசியல்வாதிகள் குறித்து பாது காப்பு அமைச்சு கவனம் செலுத்தி யுள்ளது.

இவர்க ளுக்கு எதிரான முழு அறிக்கை யும் கிடைத்த பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய பாதுகாப்பு தொடர்பாக ஊடக மத்திய நிலைய பணிப்பாளர் லக்ஷ்மன் ஹுலுகல்ல கூறினார்.

பொலிஸ் மா அதிபரின் தலைமையில் பொலிஸ் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அவர்,

முதன் முறையாக இலங்கைக்கு எதிரான அபகீர்த்தியை ஏற்படுத்தும் வீடியோ காட்சியை செனல் 4 அலை வரிசை காண்பித்த போது உரிய ஆதாரங்களுடன் நிரூபித்தோம். ஆனால் மீண்டும் அந்த வீடியோ காட்சிகளை செனல் 4 அலைவரிசை காண்பித்துள்ளது. இது முற்றிலும் பொய்யான வீடி யோவாகும்.
மேலும் இங்கே தொடர்க...

தூத்துக்குடி - கொழும்பு கப்பல் சேவை; இந்திய அமைச்சரவை அனுமதி


தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையே கப்பல் போக்குவரத்து சேவையை ஆரம்பிப்பதற்கு இந்திய மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இந்தியத் தலைநகர் புதுடில்லியில் பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் நேற்று முன்தினம் கூடிய அமைச்சரவை இதற்கான அனுமதியை வழங்கியுள்ளதாக இந்திய மத்திய கப்பல் துறை அமைச்சர் ஜி. கே. வாசன் கூறினார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்:-

இந்தியா - இலங்கை இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்திற்கு மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கி உள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

உள்நாட்டு, வெளிநாட்டு சதிகளை எதிர்த்து கொழும்பில் ஆர்ப்பாட்டம்



அரசாங்கத்திற்கு அபகீர்த்தியை ஏற்படுத்துவதற்காக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் மேற்கொள்ளப்படும் சதி முயற்சியை முறியடிக்கும் வகையில் இன்று (03) காலை 9.30 இற்குக் கொழும்பு- கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக மாபெரும் ஆர்ப்பாட்டமொன்று நடைபெறுகிறது.

மேல் மாகாண ஆளுநர் எஸ். அலவி மெளலானா இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்துள்ளார். பல்வேறு அமைப்புகளும் இதற்கு ஆதரவைத் தெரிவித்துள்ளதாக அலவி மெளலானா ‘தினகரனு’க்குத் தெரிவித்தார்.

“ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் அரசாங்கத்திற்கும் எதிராக அபகீர்த்தியை ஏற்படுத்துவதற்கு வெளிநாட்டிலும், உள்நாட்டிலும் சிலர் சதி முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதனை முறியடிக்க அனைவரும் ஒன்றுபட வேண்டும் என தெரிவித்த ஆளுநர் மெளலானா, இன்றைய ஆர்ப்பாட்டம் அந்த முயற்சிகளை முறியடிக்கும் வகையில் அமையுமென கூறினார். ஜனாதிபதிக்கு எதிராக வெளிநாடுகளில் ஆர்ப்பாட்டம் நடத்துவது கண்டனத்துக்கு உரியது என்று குறிப்பிட்ட ஆளுநர், இதில் நம்நாட்டு அரசியல்வாதிகள் பங்கேற்பது மிகவும் மோசமான நிலையாகுமென்றும் சுட்டிக்காட்டினார்.

ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜயலத் ஜயவர்தன அண்மையில் இவ்வாறான ஒரு முயற்சிக்குத் துணை போனார் எனத் தகவல் வெளியாகியுள்ள நிலையில், இவ்வாறான அரசியல்வாதிகளு க்கு எதிராக பாதுகாப்பு அமைச்சு நடவ டிக்கை எடுக்குமென்று தேசிய பாதுகாப் புக்கான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஷ்மன் ஹுலுகல்ல தெரிவித்துள்ளதையும் ஆளுநர் சுட்டிக்காட்டினார்.
மேலும் இங்கே தொடர்க...

லண்டன் உரை இரத்தானதன் எதிரொலி:



ஜயலத் எம்.பிக்கு எதிராக கோஷம்; குழப்பம் சபையில் பதற்றம்; அமளி துமளி
சபை நடவடிக்கை 40 நிமிடம் ஒத்திவைப்பு
லண்டன் ஒக்ஸ்போர்ட் யூனியனில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிகழ்த்தவிருந்த உரை ரத்துச் செய்யப்பட்டதன் எதிரொலியாக நேற்று பாராளுமன்றத்தில் அமளிதுமளி ஏற்பட்டது.

ஆளுந்தரப்பு பிரதம கொறடா தினேஷ் குணவர்தன தலைமையிலான ஆளுந் தரப்பு உறுப்பினர்கள் எதிர்க்கட்சி முன்வரிசையில் அமர்ந்திருந்த ஜயலத் ஜவர்த்தனவை நோக்கி பாய்ந்து சென் றனர். இதனால் ஏற்பட்ட குழப்ப நிலை யால் பாராளுமன்றம் சுமார் 40 நிமிடங்களு க்கு ஒத்திவைக்கப் பட்டது.

நேற்றுக்காலை சபாநாயகர் சமல் ராஜபக்ஷ ததீமையில் பாராளுமன்றம் கூடியது. வழமையான கேள்வி நேரத்தின் பின்னர் அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீட்டு குழுநிலை ஆரம்பமானது. ஊடகத்துறை அமைச்சுக்கான விவாதத்தை ஐ. தே. க. எம்.பி. கயந்த கருணாதிலக்க ஆரம்பித்தார்.

இச்சந்தர்ப்பத்தில் ஆளுந் தரப்பு பிரதம கொறடா தினேஷ் குணவர்தன ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பினார்.

லண்டன் ஒக்ஸ்போர்ட் யூனியனில் ஜனாதி பதியின் உரை ரத்துச் செய்யப்பட்ட விடயம் தொடர்பா கவே அவர் ஒழுங்குப் பிரச்சினை எழுப் பினார்.

அமைச்சர் தினேஷ் பேசும் போது : லண்டனில் ஜனாதிபதி

மஹிந்த ராஜபக்ஷவினால் நிகழ்த்தப்படவிருந்த உரை பாதுகாப்பு காரணங்களுக்காக ரத்துச் செய்யப்பட்டுள்ளது. இது ஜனாதிபதிக்கும் நாட்டிற்கும் ஏற்பட்ட மிகப் பெரிய அகெளரவமாகும். நாட்டில் 30 வருடங்களாக இடம்பெற்ற பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்துவிட்டு ஜனநாயக ஆட்சியை உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஜனாதிபதியினால் சுதந்திரமாக நிகழ்த்தப்படவிருந்த உரை ரத்துச் செய்யப்பட்டது. இது சர்வதேச மட்டத்தில் ஊடகங்களின் மூலம் ஒலி, ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளன. இது எமது ஜனாதிபதிக்கும், நாட்டிற்கும் அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட சதியும் துரோகமும் ஆகும்.

தடை செய்யப்பட்ட பிரிவினைவாத இயக்கமான தமிஸழ விடுதலைப் புலிகளும், நேரடியாகவும் மறைமுகமாகவும் அதற்கு ஆதரவு வழங்கும் தீய தேசத் துரோக சக்திகளும் லண்டன் விமான நிலையத்தில் ஜனாதிபதிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தது.

இந்த ஆர்ப்பாட்டத்தை காரணம் காட்டி, பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் ஜனாதிபதியினால் நிகழ்த்தப்படவிருந்த உரை ரத்துச்செய்யப்பட்டது.

இந்தக் கேவலமான நிகழ்ச்சியின் பின்னணியில் இந்த பாராளுமன்றத்தில் அரசியலமைப்பை முற்றாக ஏற்பதாக சத்தியப் பிரமாணம் செய்துகொண்ட ஒரு உறுப்பினர் கலந்துகொண்டுள்ளார்.

அவர்தான் ஐ. தே. க எம்.பி. டொக்டர் ஜயலத் ஜயவர்தன என தினேஷ் குணவர்தன கூறினார்.

இதனைத் தொடர்ந்தே ஜயலத் ஜயவர்தனவை நோக்கி ஆளுந் தரப்பினர் பாய்ந்து சென்று தாக்க முயற்சித்தனர்.

ஜயலத் ஜயவர்தன எம்.பியை இவர்கள் தாக்கி விடாமலிருக்க ஜோன் அமரதுங்க அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட சில உறுப்பினர்கள் அவர்களை கட்டிப்பிடித்து தடுத்து நிறுத்தினர். இவர்களில் ஜகத் புஷ்பகுமார, ஏ. எச். எம். அஸ்வர், நிர்மல கொத்தலாவல, கீதாஞ்சன குணவர்தன, லசந்த அழகியவன்ன ஆகியோரும் சபா மண்டபத்துக்கு நடுவே வந்து ஜயலத் ஜயவர்தனவின் முன் ஆசனப் பகுதிக்குச் சென்று கூச்சலிட்டனர். இச்சம்பவம் நடைபெற்ற போது பார்வையாளர் கலரியில் இருந்த பாடசாலை மாணவர்கள் வெளியேற்றப்பட்டனர்.

பிரிவினைவாத துரோகிகளுடன் இணைந்து நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் துரோகமிழைக்கும் துரோகியே சபையை விட்டு வெளியேறு என கூச்சலிட்டனர். எதிர்க்கட்சி தரப்பின் பின் ஆசன வரிசையில் அமர்ந்திருக்கும் ஆளுந்தரப்பு இளம் எம்.பிக்களும் ஜயலத் ஜயவர்தனவை வெளியேறுமாறு கூச்சலிட்டனர்.

ஆளுந்தரப்பு பிரதம கொறடா தினேஷ் குணவர்தனா, ஜனாதிபதியின் உரை ரத்துச் செய்யப்பட்ட விடயம் தொடர்பாக ஜனாதிபதி செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றை சபையில் வாசித்த பின்னரேயே ஜயலத் ஜயவர்தனாவை துரோகி என்றும் வெளியேறுமாறும் தெரிவித்தனர்.

இதனையடுத்தே சபையில் அமளிதுமளிகள் ஏற்பட்டன. எனினும், ஜயலத் ஜயவர்தன எம்.பி. ‘குறிப்பிட்ட தினம் நான் லண்டனில் இருக்கவில்லை’ இத்தாலியில் மிலானோ நகரில் இருந்தேன். இதோ எனது கடவுச்சீட்டு இருக்கிறது. வேண்டுமானால் பாருங்கள் என கூறினார். சபைக்குள் இருந்த கூச்சலுக்கு மத்தியில் ஜயலத் ஜயவர்தனாவின் குரல் ஒலிக்கவில்லை. அவரது விளக்கத்தை எவரும் செவி மடுக்கவும் இல்லை.

ஆனால், சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, ஆளுந்தரப்பு அமைச்சர்கள், எம்.பிக்கள் அமைதியடையுமாறும் ஆசனங்களில் அமருமாறும் பலமுறை கூறினார். அதனையும் எவரும் காதில் போட்டுக் கொண்டதாக தெரியவில்லை. தொடர்ந்தும் ஜயலத் ஜயவர்தனாவை வெளியேறுமாறு கூச்சலிட்டனர்.

இந்த பிரச்சினையை சமரசமாக தீர்ப்பதற்காக சஜித் பிரேமதாஸ, தயாசிறி ஜயசேக்கர எம்.பிக்கள் ஆளுந்தரப்பினருடன் சபா மண்டப நடுவில் நின்றவாறே பேசினர். அதற்கும் ஆளுந்தரப்பினர் இசையவில்லை. கூச்சல் குழப்பம் தொடர்ந்தும் நடைபெற்றதால் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ சபையை 10 நிமிடம் ஒத்திவைப்பதாக அறிவித்தார்.

நேற்றுக்காலை 10.20க்கு சபை ஒத்திவைக்கப்பட்டது.

ஜயலத் ஜயவர்தனாவிடமிருந்த கடவுச்சீட்டை புத்திக பத்திரன, சஜித் பிரேமதாஸ ஆகியோர் வாங்கி பரிசீலித்தனர்.

சபை ஒத்திவைக்கப்பட்ட பின்னரும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆளும் தரப்பினருடன் சமரசம் பேசினர். எனினும் ஏ. எச். எம். அஸ்வர், மஹிந்தானந்த அழுத்கமகே, ஜகத் புஷ்பகுமார, தினேஷ் குணவர்தன, நிர்மல கொத்தலாவல, அனுர பிரியதர்ஷன யாப்பா உட்பட பலர் ஜயலத் ஜயவர்தனா வெறியேறியே ஆகவேண்டும் எனத் தெரிவித்தனர்.

ஜோன் அமரதுங்க, தயாசிறி ஜயசேக்கர, புத்திக்க பத்திரன, சஜித் பிரேமதாஸ ஆகியோர் ஜயலத் ஜயவர்தனாவை வெளியே அழைத்துச சென்றனர்.

சுமார் 40 நிமிட அமைதிக்குப் பின்னர் மீண்டும் பாராளுமன்றம் ஆரம்பமானது.

இதனைத் தொடர்ந்து நேற்றுக்காலை மக்கள் தொடர்பாடல், தகவல், தொலை தொடர்புகள், தகவல் தொழில்நுட்பவியல், தபால் அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடு விவாதம் ஆரம்பமானது. ஆளுந்தரப்பு எதிர்த்தரப்பு எம்.பிக்கள் சபைக்குள் வந்தனர். எனினும் ஜயலத் ஜயவர்தனா மட்டும் சபைக்குள் வரவில்லை. அமைதியான முறையில் விவாதங்கள் ஆரம்பமாகின.

சபைக்குள் அமளிதுமளி நடைபெறும்போது பார்வையாளர் கலரியில் பாடசாலை மாணவர்கள் அமர்ந்திருந்தனர். அவர்கள் அனைவரும் அச் சந்தர்ப்பத்தில் வெளியே அனுப்பப்பட்டனர்.
மேலும் இங்கே தொடர்க...

பயங்கரவாதம் தொடர்பில் கையாளும் கொள்கைகள் பொதுவாக அமைதல் வேண்டும் பிரிட்டனில் ஜனாதிபதி




பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு முழு உலகும் பொதுவான இணக்க ப்பாடு ஒன்றிற்கு வருதல் வேண்டும் என்று வலியுறுத்திய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பயங்கரவாத த்தை ஒழிப்பதற்காக வழங்கப்படும் ஒத்துழைப்பு மற்றும் செயற்பாடுகள் என்பன தரத்திற்கேற்ப நாட்டிற்கு நாடு வேறுபடலாகாது என்றும் கேட்டுக்கொண்டார்.

நேற்று (02) பிரிட்டிஷ் பாராளு மன்றத்தின் சர்வதேச உறவுகள் தொடர்பான குழுவை சந்தித்த போதே ஜனாதிபதி மேற்கண்ட வாறு வலியுறுத்தினார்.

உலகின் எந்தப் பாகத்திலாக இருந்தாலும் பயங்கரவாதத்தின் மூலம் துன்பப்படும் மக்களுக்காக குரல் கொடுக்கப்படும்போது ஒரே விதமான கொள்கையைக் கடைப்பிடிப்பது பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு பெரி தும் துணைபுரியுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதன்போது தெரிவித்தார்.

அமைதியான இலங்கை தேசத்தில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்திப் பணிகள் பற்றி பிரித்தானிய பாராளுமன்றக் குழுவி டம் விளக்கிக் கூறிய ஜனாதிபதி, வடக்கு, கிழக்கு அபிவிருத்திப் பணி களுக்கு பிரிட்டன் வழங்கி வரும் ஒத்துழைப்பினை பாராட்டினார்.

இலங்கையில் 90 இற்கும் அதிகமான அரச சார்பற்ற அமைப்பு கள் இயங்கி வருவதாகவும், அந்த அமைப்புகள் வடக்குப் பிரதேசத்தின் மீள்குடியமர்த்தல் மற்றும் அபிவிருத் திப் பணிகள் என்பவற்றினை வெற்றிகரமாக மேற்கொள்வதற்கு பெரிதும் எதுவிதத் தடையுமின்றி தமது பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் இதன் போது சுட்டிக்காட்டினார்.

ஊடக சுதந்திரத்தை உறுதி செய்வ தற்காக அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக குறிப்பிட்ட ஜனா திபதி மஹிந்த ராஜபக்ஷ, நாட்டில் வாழும் அனைத்தின மக்களும் சுதந்திர மாக தமது பணிகளை மேற்கொள் வதற்கான சூழ்நிலை உருவாகியுள்ள தாகவும் மேலும் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

ஒன்றரை மாதத்தில் 3 இலட்சத்து 67,000 லீற்றர் மதுபானவகை 53,617 கிராம் போதைப்பொருள் கண்டுபிடிப்பு



கடந்த ஒன்றரை மாதத்தில் நாடு பூராவும் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதல்களின் போது போதைப் பொருள் மற்றும் மதுபானம் தொடர்பில் 20,722 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ்மா அதிபர் மஹிந்த பாலசூரிய கூறினார்.

இவர்களிடமிருந்து 53,617 கிராம் போதைப் பொருட்களும் 3 இலட்சத்து 67,098 லீட்டர் மதுபான வகைகளும் மீட்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

பொலிஸ் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

கடந்த காலத்தில் போதைப் பொருள் மற்றும் சட்டவிரோத மதுபானம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட தேடுதல்கள் பற்றி விளக்கமளித்த பொலிஸ் மா அதிபர் மேலும் கூறியதாவது,

கடந்த ஒக்டோபர் 15ஆம் திகதி முதல் நாடு பூராவும் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புத் தேடுதல்களில் பெருமளவு போதைப் பொருட்கள் பிடிபட்டன. சட்டவிரோத சாராயம் தொடர்பில் தனியான பொலிஸ் குழுக்கள் தேடுதல் நடத்தின. போதைப் பொருட்கள் தொடர்பில் 16,111 சுற்றிவளைப்புகள் நடத்தப்பட்டன. இதன் போது 16,401 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டனர். 670 பேருக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஹெரோயின் பாவனை மற்றும் விற்பனை தொடர்பில் 4412 சுற்றிவளைப்புகள் நடத்தப்பட்டதில் 7.51 கிலோ கிராம் போதைவஸ்துக்கள் பிடிபட்டன. 4413 பேர் கைது செய்யப்பட்டனர். 363 பேருக்கு எதிராக வழக்கு தொடர்ந் துள்ளோம்.

கஞ்சா தொடர்பான 10,149 சுற்றிவளைப்புகள் நடத்தப்பட்டதில் 10,107 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதன் போது 51.57 கிலோ கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது. 307 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளோம். பாபுல் மற்றும் லேகியம் தொடர்பிலான தேடுதல்களின் போது 1535 பேர் கைது செய்யப்பட்டதோடு 2034 கிலோ கிராம் போதைப் பொருட்கள் பிடிபட்டன.

பேருவளை பகுதியில் ஆயிரம் கிலோவுக்கும் அதிகமான பாபுல் மற்றும் லேகியம் என்பன மீட்கப்பட்டன.

மதுபானம் தொடர்பிலான 4417 சுற்றிவளைப்புத் தேடுதல்கள் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப் பட்டன.

இதன் போது 4321 பேர் கைதானதோடு 3,67,098 லீட்டர் சட்ட விரோத மதுபானங்கள் கைப்பற்றப்பட்டன.

மதுபானம் தயாரிக்கும் இடங்களை சுற்றிவளைத்து தேடுதல் நடத்தியதில் 1044 பேர் கைதானார்கள். இவர்களிடமிருந்து 3,11,000 லீட்டர் மதுபானம் கைப்பற்றப்படடது. மதுபான கடத்தல் தொடர்பில் 1054 பேர் கைதானதோடு 2452 லீட்டர் மதுபானம் மீட்கப்பட்டது. மதுபானம் விற்பனை செய்வோர் 855 பேரை கைது செய்ததோடு இவர்களிடமிருந்து 9319 லீட்டர் கைப்பற்றினோம்.

விளையாட்டு சங்கங்கள் மற்றும் இரவு நேர களியாட்ட விடுதிகளில் சட்டவிரோதமாக மதுபானம் விற்றது தொடர்பாக 301 பேர் கைதானார்கள். இவர்களிடமிருந்து 9820 லீட்டர் மதுபானம் கைப்பற்றப்பட்டது.

மதுபான வகைகளை சட்டவிரோதமாக வைத்திருந்தது தொடர்பில் 1970 பேர் பிடிபட்ட அதேவேளை இவர்களிடமிருந்து 9820 லீட்டர் மதுபானத்தை கைப்பற்றியுள்ளோம்.

ஜனாதிபதியின் ‘மதட தித்த’ திட்டத்திற்கமைவாக இந்த தேடுதல்கள் முன்னெடுக்கப்பட்டன. குறுகிய காலத்தில் குறிப்பிடத்தக்க வெற்றி கண்டுள்ளோம். மதுபானம் மற்றும் போதைப் பொருள் பாவனையை முற்றாக ஒழிக்கும் வரை எமது நடவடிக்கை தொடரும் என்று அவர் மேலும் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

லண்டன் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் இலங்கை சங்கத்தின் தலைவர்



லண்டன் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் இலங்கை சங்கத்தின் தலைவர் டிலான் பெர்னாந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு விருதொன்றை வழங்கினார். ஜனாதிபதி இலங்கைக்கு ஆற்றிய சேவையைப் பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் பொதுச்சங்கத்தின் தலைவர் ஜேம்ஸ் லென் மன்ட்டும் அருகிலுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...