17 ஏப்ரல், 2010

வவுனியாவில் மாத இறுதிக்குள் 1,500 குடும்பங்கள் மீள்குடியேற்றம்


அரச அதிபர் வவுனியா பிரதேச செயலகத்துக்குட்பட்ட ஆறு கிராம சேவகர் பிரிவுகளில் இம்மாத இறுதிக்குள் 1,500 குடும்பங்கள் மீள்குடியேற்றப்படவிருப்பதாக அரசாங்க அதிபர் திருமதி சார்ள்ஸ் தெரிவித்தார்.

பாலமோட்டை, மருதம்குளம், மருதமடு, பன்றிக்கேதகுளம், சேமமடு, ஆறுமுகத்தான் புதுக்குளம் ஆகிய கிராம சேவகர் பிரிவுகளிலேயே மீள்குடியேற்றம் இடம்பெறவுள்ளது.

இது தொடர்பான தகவல்கள் நிவாரணக் கிராமங்களில் திரட்டப்பட்டு வருகின்றன. அதனைத் தொடர்ந்து உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தங்கியிருக்கும் இடம் பெயர்ந்தோரையும் மேற்படி ஆறு கிராம சேவகர் பிரிவுகளில் மீளக் குடியமர்த்தத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக அரச அதிபர் சார்ள்ஸ் மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

மருத்துவ சிகிச்சைக்காக சென்னை வந்த பிரபாகரன் தாயாருக்கு அனுமதி மறுப்பு




மனிதாபிமானம் இல்லாத செயல் பார்வதி அம்மா பிரபாகரனிடம் போராட்டத்தை விட்டு சும்மா வீட்டில் இரு என்று கூறி இருந்தால் அவர் கேட்டிருப்பார ?
சிகிச்சை பெறுவதற்காக மலேசியாவிலிருந்து விமானம் மூலம் வெள்ளிக்கிழமை இரவு சென்னை வந்த விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதனால் அவர் மீண்டும் மலேசியாவுக்கே திருப்பி அனுப்பப்பட்டார்.

இலங்கையின் இறுதிக்கட்ட போரின்போது, பிரபாகரனின் பெற்றோர்களான வேலுப்பிள்ளை, பார்வதி ஆகியோர் இலங்கை அரசின் முகாமில் தங்கியிருந்தனர். போர் முடிந்த நிலையில், அண்மையில் வேலுப்பிள்ளை மரணமடைந்தார்.

இந்நிலையில் நோயால் பாதிக்கப்பட்ட பார்வதி அம்மாள் மலேசியா சென்றார். சென்னையில் சிகிச்சை பெற விரும்பிய பார்வதி, இந்தியாவில் 6 மாத காலம் தங்குவதற்காக விசா பெற்றுள்ளார் எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து சிகிச்சை பெறுவதற்காக வெள்ளிக்கிழமை இரவு 10.45 மணிக்கு மலேசியா நாட்டிலிருந்து விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்து சேர்ந்தார். அவருடன் உதவிக்கு ஒரு பெண்ணும் வந்ததாகத் தெரிகிறது.

எனினும் அவர்கள் இருவரையும் தமிழகத்துக்குள் அனுமதிக்க மாநில போலீஸக்ஷ்ர் மறுத்துவிட்டனர். அவர்கள் இருவரும் உடனடியாக மீண்டும் மலேசியாவுக்கே திருப்பி அனுப்பப் பட்டுவிட்டனர்.

இதற்கிடையே விமான நிலையத்திலிருந்து பார்வதி அம்மாளை அழைத்துச் செல்வதற்காக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் ஆகியோர் விமான நிலையம் வந்தனர்.

எனினும் விமான நிலைய நுழைவாயிலிலேயே வைகோவும், பழ. நெடுமாறனும் போலீஸக்ஷ்ரால் தடுத்து நிறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர் கடுமையான வாக்குவாதத்துக்குப் பின் அவர்கள் விமான நிலையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

இது குறித்து வைகோ, நெடுமாறன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

80 வயது நிறைந்த பார்வதி அம்மாள் தள்ளாத வயதில், நோயால் மிகவும் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவதற்காக இந்திய அரசின் முறையான விசா அனுமதி பெற்று, சென்னை வந்தார். ஆனால், தமிழக போலீஸக்ஷ்ர் அவரை சென்னைக்குள் நுழைய முடியாதவாறு தடுத்து விட்டனர். தமிழக போலீஸக்ஷ்ரின் இந்த செயல் சட்ட விரோதமானது மட்டுமல்ல, மனிதாபிமானமற்றதும் ஆகும்.

ஏற்கெனவே 4 மணி நேரம் விமானத்தில் பயணம் செய்து வந்த பார்வதி அம்மாளை, உடனே திருப்பி அனுப்பியதால், அவரது உயிருக்கு எந்த பாதிப்பாவது ஏற்பட்டால் அதற்கு தமிழக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் இங்கே தொடர்க...

பிரபாகாரனின் தாயாரைத் திருப்பி அனுப்பியதைக் கண்டித்து மதிமுக உண்ணாவிரதம்




சென்னை வந்த பிரபாகரனின் தாயாரை திருப்பி அனுப்பியதைக் கண்டித்து மதிமுக சார்பில் வரும் 23-ம் தேதி உண்ணாவிரதம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலர் வைகோ அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மையார் நேற்றிரவு, மலேசியாவில் இருந்து விமானத்தில் புறப்பட்டு தமிழகத்துக்கு வந்தபோது, சென்னை விமான நிலையத்தில் கீழே இறங்கவிடாமல், இந்திய அரசின் அதிகாரிகள் அதே விமானத்தில் அவரை திரும்பவும் மலேசியாவுக்கே அனுப்பிவிட்டனர்.

80 வயதாகும் அவர், சில ஆண்டுகளுக்கு முன்னரே பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு, ஒரு கையும், காலும் செயல் இழந்த நிலையில் அவதிப்படுகிறார். இந்நிலையில், கனடாவில் வசிக்கும் அவர்களது மகள் வினோதினி, தாயாரைத் தன்னோடு கனடாவுக்கு அழைத்துச் செல்ல விரும்புகிறார்.

இந்நிலையில், இலங்கையில் இருந்து சிவாஜிலிங்கம் எடுத்துக்க கொண்ட முயற்சியால், பார்வதி அம்மையார் மலேசியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கே தங்கி இருக்கின்ற அனுமதிக் காலம், நேற்று முடிவு அடைய இருந்தது. இந்நிலையில், உயர்ந்த நவீன மருத்துவ சிகிச்சைக்கு வாய்ப்பு உள்ள தமிழகத்துக்கு அவரை அழைத்து வந்து சிகிச்சை அளித்து, அதன் பின்னர் கனடாவுக்குச் செல்லும் அனுமதியைப் பெற்று அனுப்பி வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்தியா வருவதற்கு முறைப்படி அனுமதி பெற பார்வதி அம்மையார் விண்ணப்பித்ததன்பேரில், இந்திய அரசு அனுமதி தந்து விசாவும் வழங்கி விட்டது. எனவே, இந்தியாவில் தமிழகத்துக்கு வருவதற்கான சட்டப்படியான அனுமதியும், ஆவணங்களும் கொண்டு பார்வதி அம்மையார், நேற்று மலேசியாவில் இருந்து மாலை விமானத்தில் புறப்பட்டு, இரவு 10.45 மணிக்கு சென்னை விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்தார். அவர்களையும், அவருக்கு உதவியாக வந்த விஜயலெட்சுமி என்பவரையும் விமானத்தில் இருந்து இறங்க விடாமல் அதிகாரிகள் தடுத்த கன்வேயர் பெல்ட் வழியாக விமான நிலையத்துக்கு உள்ளே வந்து விட்ட அவரது பெட்டிகளைத் திரும்ப எடுத்துக்கொண்டு போய் விமானத்திலேயே வைத்து விட்டார்கள்.

நள்ளிரவில், அதே விமானத்தில் திருப்பி அனுப்பி விட்டார்கள். ஏற்கனவே உடல் நலிவுற்று இருக்கின்ற அந்த மூதாட்டி, இந்த விமானப் பயணத்திலேயே மேலும் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருப்பார். ஏற்கனவே மத்திய அரசு விசா வழங்கிய நிலையில், திருப்பி அனுப்பியதன் மர்மம் என்ன?

மத்திய அரசில் தி.மு.க. அங்கம் வகிக்கிறது. பார்வதி அம்மையார் வருகின்ற செய்தி, முதல் அமைச்சர் கலைஞர் கருணாநிதிக்குத் தெரியும். இந்திய உளவுத்துறை தகவல் தந்து விட்டது. இது மத்திய அரசின் நடவடிக்கை என்று கருணாநிதி, தப்பித்துக் கொள்ள முடியாது.

பார்வதி அம்மையார் அவர்களை, திருப்பி அனுப்பிய அநீதியைக் கண்டித்து, தலைநகர் சென்னையில், ஏப்ரல் 23 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று, மதிமுக சார்பில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும்.
மேலும் இங்கே தொடர்க...

தமிழ் மக்கள் இன்னமும் அரசியலில் தெளிவுறவில்லை : கிழக்கு மாகாண முதலமைச்சர்



வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் இன்னமும் அடைய முடியாத இலக்குகளை நோக்கிச் சிந்திப்பதாகவும் அல்லது அரசியலில் இன்னும் தெளிவுறவில்லை என்றும் கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சந்திரகாந்தன் தெரிவித்தார்.

வீரகேசரி இணையத்தளத்துக்கு வழங்கிய விசேட நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

"ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பெரும்பான்மையான வெற்றியைப் பெற்றிருக்கிறது. ஆகையால் இந்தமுறை எந்தவித பிரச்சினையும் இல்லாமல் உறுதியான அரசாங்கம் அமையப் போகின்றது என்பது உண்மை. அந்தவகையில் இந்த வெற்றிகளுக்கெல்லாம் பொறுப்பாக இருந்தவர் எமது மதிப்புக்குரிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களே.

வடக்கு கிழக்கு மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கும் வாக்களித்திருக்கிறார்கள், தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் வாக்களித்திருக்கிறார்கள். அந்த அடிப்படையில் நோக்குகின்ற பொழுது தமிழ் மக்கள் இன்னமும் அடையமுடியாத இலக்குகளை நோக்கிச் சிந்திப்பதாகவும் அல்லது அரசியலில் இன்னமும் தெளிவுறவில்லை என்ற ஒரு விடயத்தையும் எங்களால் காணக் கூடியதாக இருக்கின்றது.

ஒருங்கிணைந்த இலங்கைக்குள் பிரச்சினையை முடித்துக்கொள்ளப் போகின்றோம் என்று சொன்னால், நாங்கள் அரசாங்கத்தோடு இணைந்து முரண்பாடில்லாமல் எங்களுடைய பிரச்சினையை தீர்த்துக்கொள்ள வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி இருக்கிறது" என அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

கூட்டமைப்புடன் தொடர்ந்து பேச்சுக்களை நடத்த மு.கா. தயார் : செயலாளர்நாயகம் தெரிவிப்பு

தேசிய பிரச்சினை தீர்வு விடயம் தொடர்பில் தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் தொடர்ந்து பேச்சுக்களை நடத்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தயாராகவே இருக்கின்றது என்று அதன் செயலாளர் நாயகம் ஹசன் அலி தெரிவித்தார்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் பேச்சுக்களை நடத்த தயார் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளதாக வெளிவந்துள்ள தகவல்கள் குறித்து கருத்து வெளியிடுகையிலேயே ஹசன் அலி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் இது தொடர்பில் மேலும் கூறுகையில்,

"வடக்கு கிழக்கு விடயம் தொடர்பில் நிரந்தர அரசியல் தீர்வு ஒன்றை பெற்றுக் கொள்ளும் நோக்கம் தொடர்பாக தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் தொடர்ந்து பேச்சுக்களை நடத்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தயாராகவே இருக்கின்றது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் இணைந்து ஒரு இணக்கப்பாட்டுக்கு வந்தால்தான் தேசிய பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் இரண்டு சமூகங்களும் திருப்தியடைக்கூடிய ஒரு பொதுவான முடிவுக்கு வர முடியும் என்று நாங்கள் நம்புகின்றோம்.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளும் இந்த விடயத்தையே வலியுறுத்துகின்றன. முஸ்லிம் மக்கள் மத்தியில் முஸ்லிம் காங்கிரஸும் தமிழ் மக்கள் மத்தியில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் சிங்கள மக்கள் மத்தியில் அரசாங்கமும் பெரும்பான்மை பலத்தை பெற்றுக்கொண்டுள்ளன.

எனவே தேசிய பிரச்சினை தீர்வு விடயத்தில் இதய சுத்தியுடன் செயற்பட்டால்தான் ஒரு நிரந்தர தீர்வைப் பெற்று இலங்கையை ஒரு சுபீட்சமான நாடாக மாற்ற முடியும் என்பது எமது நம்பிக்கையாகும்.

தேர்தலுக்கு முன்னரும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பேச்சுக்களை நடத்தி வந்துள்ளது. அதன்படி எதிர்காலத்திலும் தொடர்ந்து அவர்களுடன் பேச்சு நடத்தத் தயார் என்பதனைக் குறிப்பிடுகின்றோம்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் இணைந்து பொதுவான இணக்கப்பாட்டுக்கு வந்து ஒரு வேலைத்திட்டத்தை தயாரித்து அரசாங்கத்துடன் பேச்சு நடத்தினால் அதற்கு பலம் அதிகமாகும்.
தேசிய பிரச்சினை தீர்வு விடயம் தொடர்பில் தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் தொடர்ந்து பேச்சுக்களை நடத்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தயாராகவே இருக்கின்றது என்று அதன் செயலாளர் நாயகம் ஹசன் அலி தெரிவித்தார்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் பேச்சுக்களை நடத்த தயார் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளதாக வெளிவந்துள்ள தகவல்கள் குறித்து கருத்து வெளியிடுகையிலேயே ஹசன் அலி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் இது தொடர்பில் மேலும் கூறுகையில்,

"வடக்கு கிழக்கு விடயம் தொடர்பில் நிரந்தர அரசியல் தீர்வு ஒன்றை பெற்றுக் கொள்ளும் நோக்கம் தொடர்பாக தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் தொடர்ந்து பேச்சுக்களை நடத்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தயாராகவே இருக்கின்றது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் இணைந்து ஒரு இணக்கப்பாட்டுக்கு வந்தால்தான் தேசிய பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் இரண்டு சமூகங்களும் திருப்தியடைக்கூடிய ஒரு பொதுவான முடிவுக்கு வர முடியும் என்று நாங்கள் நம்புகின்றோம்.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளும் இந்த விடயத்தையே வலியுறுத்துகின்றன. முஸ்லிம் மக்கள் மத்தியில் முஸ்லிம் காங்கிரஸும் தமிழ் மக்கள் மத்தியில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் சிங்கள மக்கள் மத்தியில் அரசாங்கமும் பெரும்பான்மை பலத்தை பெற்றுக்கொண்டுள்ளன.

எனவே தேசிய பிரச்சினை தீர்வு விடயத்தில் இதய சுத்தியுடன் செயற்பட்டால்தான் ஒரு நிரந்தர தீர்வைப் பெற்று இலங்கையை ஒரு சுபீட்சமான நாடாக மாற்ற முடியும் என்பது எமது நம்பிக்கையாகும்.

தேர்தலுக்கு முன்னரும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பேச்சுக்களை நடத்தி வந்துள்ளது. அதன்படி எதிர்காலத்திலும் தொடர்ந்து அவர்களுடன் பேச்சு நடத்தத் தயார் என்பதனைக் குறிப்பிடுகின்றோம்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் இணைந்து பொதுவான இணக்கப்பாட்டுக்கு வந்து ஒரு வேலைத்திட்டத்தை தயாரித்து அரசாங்கத்துடன் பேச்சு நடத்தினால் அதற்கு பலம் அதிகமாகும்.
மேலும் இங்கே தொடர்க...

40 பேரைக் கொண்ட சிறிய அமைச்சரவை அமையும் சாத்தியம் :

சுசில் நம்பிக்கை
எண்ணிக்கையை குறைக்கும் அரசாங்கத்தின் முயற்சிக்கு எமது கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்கும் என எதிர்பார்ப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்தார்.

அமைச்சரவை குறைப்பு விடயம் குறித்து கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேம்ஜயந்த இது தொடர்பில் மேலும் கூறுகையில்,

"மக்களின் அமோக ஆதரவை பெற்றுக் கொண்டுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் அடுத்த அமைச்சரவை நிச்சயம் சிறியதாகவே அமையும் என்று நாங்கள் தேர்தல் காலத்தில் கூறிவந்தோம்.

அதற்கேற்ப இம்முறை எமது அரசாங்கத்தின் அமைச்சரவை அமைச்சர்களின் எண்ணிக்கை குறைவானதாக அமையும் என்பதனை பொறுப்புடன் கூறுகின்றோம். 35 இலிருந்து 40 வரையான அமைச்சரவை அமைச்சர்களே நியமிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் என்ற வகையில் என்னால் அமைச்சரவை அமைச்சர்களின் எண்ணிக்கையை துல்லியமாக கூற முடியாது. ஆனால் அமைச்சர்களின் எண்ணிக்கை குறையும் என்பதனை உறுதியாக கூற முடியும்.

மேலும் அமைச்சரவை அமைச்சர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் அரசாங்கத்தின் முயற்சிக்கு கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகள் ஆதரவு வழங்கும் என்று முழுமையாக நம்புகின்றோம்.

அதேவேளை, பெரும்பாலும் ஒவ்வொரு மாவட்டமும் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் வகையில் அமைச்சரவை அமைச்சுப் பதவி ஒன்று வழங்கப்படலாம்" என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

'த.தே.கூ. உடன் இணைந்து செயற்படுவோம்'





சம்பந்தனுடன் ஹக்கீம்(கோப்பு)

அரசியல் தீர்வு முயற்சிகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்துள்ளது.

ரவூப் ஹக்கீம் செவ்வி

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் விடுத்த அழைப்பை ஏற்றுக்கொண்டே இரு தரப்பு பிரதிகளும் இணைந்து செயற்பட வேண்டும் என்ற தீர்மானம் எடுக்கப்பட்டதாக ரவூப் ஹக்கீம் தமிழோசையிடம் கூறினார்.

தமிழ்,முஸ்லிம் மக்களின் அதிகபட்ச ஆதரவைப் பெற்றுள்ள கட்சிகள் என்ற வகையில் இரண்டு கட்சிகளுக்கும் ஒன்றிணைந்து செயற்படவேண்டிய தார்மீக பொறுப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.


கூட்டமைப்பு தலைவர்களுடன் ஹக்கீம் (கோப்பு)

எதிர்கால அரசியல் களச்சூழ்நிலையை எதிர்கொள்வது, இனப்பிரச்சனைத் தீர்வுக்கான வழிமுறைகள் மற்றும் யாப்பு சீர்திருத்தத்தில் இடம்பெறவேண்டிய அம்சங்கள் குறித்து உடன்பாடுகளை எட்டுவதற்காக கூட்டிணைந்து செயற்பட வேண்டுமென்பதை இரு தரப்பினருமே உணர்ந்துள்ளதாகவும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் கூறினார்.

அரசாங்கம் சிறுபான்மை சமூகங்களின் அரசியல் உரிமைப் பிரச்சனைகள் தொடர்பில் அலட்சியப் போக்கை முன்னெடுக்கக் கூடிய அபாயத்தை தடுப்பதற்கு இவ்வாறான இணைந்த அரசியல் நடவடிக்கை அவசியம் எனவும் ஹக்கீம் சுட்டிக்காட்டினார்.

தேர்தலுக்கு முன்னர் இரண்டு கட்சிகளும் இணைந்து செயற்படுவதற்கு தேர்தல் முறைமைகளில் உள்ள சிக்கல்களே தடையாக இருந்ததாகவும் அவர் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

அமெரிக்கா, இலங்கை படைகள் மனிதாபிமான கூட்டு செயற்பயிற்சி


அமெரிக்கக் கடற்படையும் இலங்கை இராணுவமும் கூட்டு மனிதாபிமான செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளன. திருகோணமலைத் துறைமுகத்தில் இதற்கான பயிற்சிகள் முன்னெடுக்கப்பட் டதாக அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது.

இடர் முகாமைத்துவ நிலையம், சுகாதார அமைச்சு ஆகியவற்றிலிருந்து சிவிலியன்களும் இந்த செயற்திட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மனிதாபிமான பயிற்சிகள் வழங்கப்பட்டு 27 கிராமங்களுக்கு அனுப்பப்படுவார்கள். அதேநேரம், 700க்கும் மேற்பட்ட குடும்பங்க ளுடன் தொடர்பு கொள்ள வைக்கப்படுவார்கள்.

இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த லெப். கேர்ணல் லறி சிமித்; மனிதாபிமான செயற் திட்டம், மனிதாபிமான சவால்களை எதிர்கொள்வதற்கு வாய்ப்பாக அமையும் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

ஆறு கிராமசேவகர் பிரிவுகளில் 1500 குடும்பங்கள் மீள்குடியேற்றம்




இம்மாத இறுதிக்குள் வவுனியாவில் குடியமர்வு


வுனியா பிரதேச செயலகத்துக்குட்பட்ட ஆறு கிராம சேவகர் பிரிவுகளில் இம்மாத இறுதிக்குள் 1500 குடும்பங்கள் மீள்குடியேற்றப்படவிருப்பதாக வவுனியா அரசாங்க அதிபர் திருமதி சார்ள்ஸ் தெரிவித்தார்.

பாலமோட்டை, மருதம்குளம், மருதமடு, பன்றிக்கேதகுளம், சேமமடு, ஆறுமுகத்தான் புதுக்குளம், ஆகிய கிராம சேவகர் பிரிவுகளிலேயே மீள்குடியேற்றம் இடம்பெறவுள்ளது.

இது தொடர்பான தகவல்கள் நிவா ரணக் கிராமங்களில் திரட்டப்பட்டு வருகின்றன. அதனைத் தொடர்ந்து உற வினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தங்கியிருக்கும் இடம் பெயர்ந்தோ ரையும் மேற்படி ஆறு கிராம சேவ கர் பிரிவுகளில் மீளக் குடியமர்த்தத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாகவும் அரச அதிபர் சார்ள்ஸ் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

நாவலப்பிட்டி, கும்புறுப்பிட்டி பகுதியில் பொலிஸ், முப்படைகளின் பாதுகாப்பு


மீள்வாக்குப் பதிவுக்கான பிரசாரங்கள் இன்றுடன் முடிவு;

150க்கும் மேற்பட்டோர் கண்காணிப்பு பணிகளில்


நாவலப்பிட்டி மற்றும் கும்புறுப்பிட்டிய தேர்தல் தொகுதிகளில் எதிர்வரும் 20 ஆம் திகதி நடத்தப்படவிருக்கும் மீள்வாக்களிப்பில் கண்காணிப்புப் பணிகளை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுத்திருப்பதாக சுதந்திர தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.

உள்நாட்டைச் சேர்ந்த சுமார் 150இற்கும் மேற்பட்ட கண்காணிப்பாளர்கள் இவ்விரு தேர்தல் தொகுதிகளிலுமுள்ள 38 வாக்குச் சாவடிகளிலும் கடுமையான கண்காணிப்புப் பணிகளை முன்னெடுக்கவிருப்பதாக பெப்ரல் சி. எம். இ. வி. மற்றும் கபே அமைப்புக்களின் பிரதிநிதிகள் கூறினர்.

பாராளுமன்றத் தேர்தல்கள் தினத்தன்று மேற்படி தேர்தல் தொகுதிகளில் மோசடி இடம்பெற்றமை காரணமாக வாக்களிப்பு இரத்துச் செய்யப்பட்டு எதிர்வரும் 20ம் திகதி மீள் வாக்களிப்பை நடாத்த தேர்தல்கள் ஆணையாளரால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மீள்வாக்களிப்பு நடத்தப்படவிருக்கும் 38 வாக்காளர் பிரிவுகளுக்குமென 50 கண்காணிப்பாளர்களை பணியில் ஈடுபடுத்த பெப்ரல் அமைப்பு தீர்மானித்திருப்பதாக அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி கூறினார்.

இரண்டு குழுக்களாக இவர்கள் செயற்படுவர். எட்டுப் பேர் கொண்ட குழு கும்புறுபிட்டியவிலும் மிகுதி 42 பேர் கொண்ட குழு நாவலப்பிட்டியிலும் கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளனர்.

இதற்கு மேலதிகமாக பெப்ரல் 04 வாகனங்களை கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்த விருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, சி. எம். இ. வி. அமைப்பு ஒரு வாக்காளர் பிரிவுக்கு ஒருவர் வீதம் 38 பேரையும் 02 வாகனங்களையும் கண்காணிப்பில் ஈடுபடுத்தவிருப்பதாக அதன் பேச்சாளர் கெ. திசாநாயக்க தெரிவித்தார். கடந்த முறை மேற்படி தேர்தல் தொகுதிகளில் வாக்குச் சாவடிக்கு வெளியிலேயே கூடுதலான மோசடிகள் குறித்து முறையிடப்பட்டமையினால் வாக்குச் சாவடிகளுக்கு வெளியிலேயே கூடிய கண்காணிப்பு பணிகளை முன்னெடுக்க விருப்பதாகவும் அவர் கூறினார்.

கபே அமைப்பு நேற்று முதல் கண்காணிப்பாளர்களை வாக்காளர் பிரிவுகளுக்கு அனுப்பி நிலைமையை அவதானித்து வருவதுடன் தேர்தல்கள் தினத்தன்று சுமார் அறுபதுக்கு மேற்பட்ட கண்காணிப்பாளர்களை வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பி வைக்க தீர்மானித்திருப்பதாகவும் அதன் பேச்சாளர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்தார்.

அதேவேளை, தேர்தல் பிரசாரப் பணி கள் இன்று (17) நள்ளிரவுடன் நிறைவடைவ தனால் நாவலப்பிட்டி மற்றும் கும்புறுப் பிட்டி தேர்தல் தொகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருப்பதாக தேர்தல்களுக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மாஅதிபர் காமினி நவரட்ன சுட்டிக்காட்டினார்.

வாக்களிப்பு தினமான எதிர்வரும் 20ம் திகதி வாக்குச் சாவடிகளுக்கும் வேட்பாளர்களுக்கும் உரிய பாதுகாப்பு வழங்கப்படுமெனவும் மோசடிகள் அசம்பாவிதங்கள் இடம்பெறும் பட்சத்தில் பாரபட்சமின்றி சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்து நடவடிக்கை எடுக்கும் வகையில் பொலிஸ் நிலையங்கள் உசார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.

மீள்வாக்களிப்புக்கான வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. தேர்தல் நடவடிக்கைகளை கவனிக்கவென கொழும்பிலிருந்து விசேட குழுவொன்று அப்பிரதேசங்களுக்கு அனு ப்பிவைக்கப்படவுள்ளன. வாக்குச் சாவடி களில் பணியாற்றுவதற்காக 380 உத்தி யோகத்தர்கள் நியமிக்கப்பட்டிருப்பதாகவும் வாக்கு எண்ணுவதற்கு 650 உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்படவிருப்பதாகவும் தேர்தல்கள் செயலகத்தின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

காதல் காவியம் 'மாதா' கணனியிலிருந்து திருட்டு ரூ. 4 கோடியில் தயாரிக்கப்பட்ட விவரணச் சித்திரம்



வன்னியில் இடம்பெற்ற மனிதாபிமான நடவடிக்கையைச் சித்திரிக்கும் வகையில் தயாரிக்கப்பட்ட விவரணத் திரைப்படம் கணனியின் ‘ஹார்ட் டிஸ்க்’ இல் இருந்து முழுமையாகக் களவாடப்பட்டுள் ளதாக மிரிஹான பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

வன்னியில் இடம்பெற்ற இறுதிநேர நடவடிக்கையின் போது இடம்பெற்றதாகச் சித்திரிக்கப்பட்டுத் தயாரிக்கப்பட்ட அற்புதமானதொரு காதல் களவியமாக வடிவமைக்கப்பட்டிருந்த இந்த விவரணச் சித்திரம் சர்வதேச விருதுக்கு போட்டியிடு வதற்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன் சுமார் நான்கு கோடி ரூபா செலவில் தயாரிக்கப்பட்டிருந்த ‘மாத்தா’ (மாதா) என்ற இந்தச் சிங்கள விவரணச் சித்திரம் மிகவும் நுட்பமான முறையில் கணனியின் ஹார்ட்டிஸ்க்கிலிருந்து முழுமையாகக் களவாடப்பட்டிருப்பதாக அதன் தயாரிப்பாளர் விஸ்வநாத் புத்திக்க கீர்த்திசேன தினகரனு க்குத் தெரிவித்தார்.

முழுக்க முழுக்க உள்ளூர்க் கலைஞர்களைக் கொண்டு இந்த விவரணச் சித்திரம் தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார். சில இடங்களில் இராணுவ வீரர்களும் நடித்துள்ளனர்.

மனிதாபிமான நடவடிக்கைகளின் இறுதிக் காலகட்டத்தில் நடந்த சம்பவங்களை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்பட்ட ‘மாதா’ படம் 120 நிமிடங்கள் ஓடக்கூடிய விவரணச் சித்திரமாகும்.

பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன் நான்கு கோடி ரூபா செலவில் சுமார் ஒரு வருட காலமாக வட மாகாணத்தில் வைத்து இது படமாக்கப்பட்டுள்ளது.

சர்வதேச விருதில் போட்டியிடும் வகையில் இந்த விவரணச் சித்திரம் தயார்படுத்தப்பட்டிருந்த நிலையிலேயே கடந்த இரு தினங்களுக்கு முன்னர் விவரணச் சித்திரம் அடங்கிய சகல ஆவணங்களும் கொண்ட ஹார்ட் டிஸ்க் களவாடப்பட்டிருப்பதாக அதன் தயாரிப்பாளர் கூறினார்.

நாவலையில் அமைந்துள்ள அவர்களது, ‘ரூம் சினிமா கிரியேஷன்ஸ் ஹவுஸ்’ எனும் ஸ்டூடியோவில் வைத்தே திட்டமிட்ட சதிகார கும்பலொன்று கணனியிலிருந்து இதனை திருடிச் சென்றிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

வரணச் சித்திரமடங்கிய ஹார்ட் டிஸ்க் திருட்டுப் போன சம்பவம் குறித்து மிரிஹானை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பொலிஸார் சந்தேக நபர்களை தேடிக் கண்டுபிடிக்கும் நோக்கில் பல்வேறு கோணங்களிலும் விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ள னர்.

இலங்கைக்கு எதிரான அவதூறுப் பிரசாரங்களை முன்னெடுக்கும் வகையில் சில சதிக் கும்பல்கள் இதனைத் திருடியிரு க்கலாமென பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
மேலும் இங்கே தொடர்க...

இராணுவ வீரர்களை ஏற்றி வந்த பஸ் மாத்தளையில் விபத்து


இராணுவ வீரர்களை ஏற்றி வந்த பஸ் ஒன்று வில்கமுவவில் பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் ஒரு இராணுவ வீரர் உயிரிழந்தார். மேலும் ஆறு இராணுவ வீரர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

புது வருடத்தைக் கொண்டாட விடுமுறையில் வந்த இராணுவ வீரர்களே இவ்வாறு விபத்துக்குள்ளாகினர்.

60 இராணுவ வீரர்களை ஏற்றி வந்த மேற்படி பஸ் மாத்தளை வில்கமுவ எலவனாகந்த என்ற இடத்தில் பள்ளத்தில் வீழ்ந்து சேதத்திற்குள்ளானது. காயமடைந்த வீரர்கள் தம்புள்ள, மகியங்கனை, வில்கமுவ,பேராதனை ஆகிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்தில் மரணமான இராணுவ வீரர் இலங்கை இராணுவத்தின் கெமுனு படையணியைச் சேர்ந்த ஹப்புத்தளை பிரதேசவாசி எனக் கூறப் படுகிறது. வில்கமுவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இங்கே தொடர்க...