13 பிப்ரவரி, 2010

வேட்புமனுத் தாக்கலுக்கு இன்னும் 5 தினங்கள்:
தேர்தல் கூட்டு, வேட்பாளர் தெரிவில் கட்சிகள் இறுதிக்கட்ட பிரயத்தனம்



பொதுத்தேர்தலுக்கான வேட்பாளர் நியமனப்பத்திரங்களைத் தாக்கல் செய்வதற்கு இன்னும் ஐந்து நாட்களே எஞ்சியுள்ள நிலையில், தேர்தல் கூட்டுக்களை அமைப்பதிலும் வேட்பாளர்களைத் தெரிவதிலும் அரசியல் கட்சிகள் இறுதிக்கட்ட பிரயத்தனத்தில் ஈடுபட்டுள்ளன.

கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு ஆசனங்களை ஒதுக்கிக் கொடுப்பதிலேயே இறுக்கமான நிலை காணப்படுவதாக அரசியல் கட்சி வட்டாரங்கள் வாரமஞ்சரிக்குத் தெரிவித்தன.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட் பாளர்களைத் தெரிவு செய்வதற்கான நேர்முகத்லீ தர்வுகளை ஏற்கனவே நடத்தி முடித்துள்ளன. அவற்றின் விபரங்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்குக் கையளிக்கப்பட்டுள்ளதுடன், சில மாவட்டங்களின் விபரங்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை (14) அல்லது நாளை திங்கட்கிழமை கையளிக்கப்படுமென எதிர்பார்க் கப்படுகிறது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் கூட்டுக் கட்சிகள் பெரும்பாலும் அரசாங்கத் தரப்புடன் இணைந்தே போட்டியி டலாமென நம்பப்படுகிறது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ், இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, இலங்கை சமசமாஜக் கட்சி, தேசிய சுதந்திர முன்னணி, ஜாதிக ஹெல உறுமய உள்ளிட்ட கட்சிகள் அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.

எனினும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி, மலையக மக்கள் முன்னணி ஆகிய கட்சிகள் தனித்துக் களமிறங்குவதாகத் தெரிவித்துள்ள போதிலும், இன்னமும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக ஆளுந்தரப்பு முக்கியஸ்தர் ஒருவர் வாரமஞ்சரிக்குத் தெரிவித்தார். அதே போல், தமிஸழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்), பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஆகிய கட்சிகள் இன்ன மும் ஆலோசனை நடத்தி வருகின்றன.

இதேவேளை, கூட்டணிக் கட்சிக ளுக்கு ஆசனங்களை ஒதுக்குவது தொடர்பான இறுதித் தீர்மானத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே மேற்கொள்வாரென்று வேட்பாளர் தெரிவுக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான மேல் மாகாண ஆளுநர் எஸ். அலவி மெளலானா தெரிவித் தார்.

இது குறித்து அரசியல் கட்சிகளு டன் கலந்தாலோசனைகள் இடம் பெற்று வருவதாக ஆளுநர் குறிப்பி ட்டார்.

இது இவ்வாறிருக்க, ஐக்கிய தேசி யக் கட்சியின் தலைமையிலான எதி ர்க் கட்சிக் கூட்டணி பல பிரிவுக ளாகப் பிளவுபடும் சூழல் ஏற்பட் டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதித் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை அடுத்து பொதுத் தேர் தலில் யானைச் சின்னத்தில் போட்டி யிடுவதென ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது. எதிர்காலத்தில் அனைத்துத் தேர்தல்களிலும் யானைச் சின்னத்திலேயே போட்டியிடுவ தென முடி வெடுக்கப்பட்டுள்ளதாக வும் கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார். இந் நிலையில் ஜன நாயக மக்கள் முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சி களும் யானைச் சின்னத்திலேயே களமிறங்கவுள்ளன.

பொதுத் தேர்தலில் யானைச்சின் னத்தில் போட்டியிடத் தீர்மானித்து ள்ளதால் மக்கள் விடுதலை முன் னணி தனித்து விடப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள் ளது. இந் நிலையில் ஜே.வி.பி. அதன் மணிச் சின்னத்தில் போட்டியிடுமெனத் தெரியவருகிறது.

மேலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அதன் வேட்பாளர் பட்டி யலை எதிர்வரும் 20 ஆம் 21 ஆம் திகதியளவில் பூர்த்தி செய்துவிடு மென முன்னாள் அமைச்சர் ஒருவர் தெரிவித்தார்.

ஏனைய கட்சிகளும் வேட்பாளர்க ளைத் தெரிவதில் தீவிரம் காட்டி வருகின்றன.

கூட்டணியில் இருந்து தனித்து விடப்பட்டிருக்கும் கட்சிகள் இறுதி நேரத்தில் வேட்பாளர்களைத் தேடு வதில் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றன.


அரசியல் தீர்வு பற்றி இவர்கள் பேசுவது தமிழ் மக்களின் துரதிஷ்டம்

கடந்த சில நாட்களாக சரத் பொன்சேகாவின் கைது தான் சூடான விவகாரம். ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின் சோர்ந்து போயிருந்த எதிரணிக் காரர்கள் அவல் கிடைத்தது போல நன்றாக மெல்கிறார்கள்.

பொன்சேகாவின் கைதுக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சியும் ஜே. வி. பியும் கடந்த புதன்கிழமை உச்ச நீதிமன்றத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.

உச்ச நீதிமன்றத்தை எதற்காகத் தேர்ந் தெடுத்தார்களோ தெரியாது. இது பெரும்பாலும் ஐக்கிய தேசியக் கட்சியின் தெரிவாக இருக்கலாம். நீதிமன்றத்துடனும் நீதியரசர்களுடனும் முரண்படும் பாரம்பரியம் அந்தக் கட்சிக்குத் தாராளமாக உண்டு.

ஜே. ஆர். ஜயவர்த்தன புதிய அரசியலமைப்பை நடைமுறைக்குக் கொண்டுவந்த வேளையில் உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் எல்லோரையும் இராஜினாமா செய்ய வைத்துத் தான் விரும்பியவர்களை நியமித்தார். அரசாங் கத்துக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளின் வீடுகளுக்குக் கல்லெறிந்த கதையும் உண்டு.

இந்த ஆர்ப்பாட்டம் நடக்கவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டதென்பதை விளங்கிக் கொள்வ தற்கு அதிக நேரம் எடுக்காது. எதிர்ப்புத் தெரிவிக்கும் ஆர்ப்பாட்டமென்றால் அமைதியாக எதிர்ப்பைத் தெரிவித்திருக் கலாம்.

இவர்கள் குழப்பம் விளைவிக்கும் நோக்கத்துடனேயே வந்திருக்கின்றார்கள். அதனாலேயே பொலிசாருக்கு ஆத்திர மூட்டும் விதத்தில் நடந்திருக்கின்றார்கள்.

அதன் மூலம் பொலிசாரைக் கடுமையான நடவடிக்கை எடுக்க வைப்பதே அவர்களின் நோக்கம். அதைத் தேர்தல் மேடைகளில் பிரசாரம் ஆக்கலாமே.

பொன்சேகாவின் கைதுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியும் ஜே. வி. பியும் பிழையான ஒரு கோஷத்தை முன்வைக்கின்றன.

பொன்சேகா சட்டவிரோதமாகக் கைது செய்யப்பட்டார் என்பதே அந்தக் கோஷம். எந்தச் சட்டத்துக்கும் உட்படாத வகையில் கைது செய்யப்படுவதே சட்டவிரோதமான கைது.

பொன்சேகா சட்டத்துக்கு உட்பட்ட வகையிலேயே கைது செய்யப்பட்டார். இராணுவ சட்டத்தின் 57வது சரத்தின் கீழேயே அவர் கைது செய்யப்பட்டிருக்கின்றார். அந்தச் சரத்தில் இவ்வாறு சொல்லப்பட்டுள்ளது.

புஇராணுவச் சட்டத்துக்கு உட்பட்ட ஒருவர் ஏதாவது குற்றச் செயலைப் புரிந்து அதன்பின் இராணுவச் சட்டத்துக்கு உட்படாதவர் என்ற நிலையை அடையும் பட்சத்திலும் அவரைக் கைதுசெய்து இராணுவப் பாதுகாப்பில் வைத்திருப் பதற்கும் இராணுவ நீதிமன்றத்தினால் விசாரித்துத் தண்டனை வழங்குவதற்கும் முடியும்.

குறித்த குற்றச் செயல் இராணுவக் கிளர்ச்சி, இராணுவத்தைக் கைவிட்டுச் செல்லல், முறைகேடான ஆட்சேர்ப்பு ஆகியவை அல்லாததாயின் அக் குற்றச்செயல் இடம்பெற்று ஆற மாத காலம் கடந்த பின் அவரைக் கைது செய்து விசாரிக்க முடியாது.பூ

பொன்சேகா மீதான குற்றச்சாட்டுகளை இராணுவ நீதிமன்றம் விசாரித்து அதன் தீர்ப்பை வழங்கும்.

பொன்சேகாவின் கைது விடயத்தில் ஐக்கிய தேசியக் கட்சியும் ஜே. வி. பியும் ஒன்றாகச் செயற்படுகின்ற போதிலும் பாராளுமன்றத் தேர்தலில் அதற்கான வாய்ப்பு இல்லை.

பாராளுமன்றத் தேர்தலில் அன்னம் சின்னத்தில் கூட்டாகப் போட்டியிடுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியைச் சம்மதிக்க வைக்கும் தீவிர முயற்சியில் ஜே. வி. பி ஈடுபட்டிருக்கின்ற போதிலும் அது சாத்தியமாகுவதற்கான அறிகுறிகள் இல்லை.

ஜே. வி. பியைப் பொறுத்தவரையில் பிரதான கட்சியொன்றுடன் கூட்டுச் சேராவிட்டால் பாராளுமன்ற அங்கத்து வத்தை முழுமையாக இழக்கும் நிலை. சென்ற தடவை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்து பாராளு மன்றத்தில் கணிசமான ஆசனங்களைப் பெற்றார்கள்.

இந்தத் தடவை அதே பாணியில் ஐக்கிய தேசியக் கட்சியின் வாக்குகளால் பாராளுமன்ற ஆசனங்களைத் தக்க வைத்துக்கொள்ள முயற்சிக்கின்றார்கள். ஆனால் ஐக்கிய தேசியக் கட்சி அதற்கு இடங்கொடுப்பதாக இல்லை.

எந்தச் சின்னம் என்பது ஐக்கிய தேசியக் கட்சிக்கு இப்போது ஜீவமரணப் போராட்டம் ஆகிவிட்டது. ஜனாதிபதித் தேர்தலில் அன்னம் சின்னத்தை ஏற்றுக்கொண்டதால் ஐக்கிய தேசியக் கட்சித் தலைமைக்கு எதிரான உணர்வலை கட்சியின் சகல மட்டங்களிலும் வளர்ந்திருக்கின்றது.

மீண்டும் அன்னம் சின்னத்தை ஏற்றால் கட்சி கரைந்துவிடும் என்பது ரணிலுக்குத் தெரியும். அதனால் யானைச் சின்னத்திலேயே போட்டி என்பதில் ரணில் உறுதியாக நிற்கின்றார்.

இந்த நிலையில், பாராளுமன்றத் தேர்தலுக்காக வேறு சில கட்சிகளுடன் சேர்ந்து கூட்டணி அமைக்கும் முயற்சி யிலும் ஜே. வி. பி இறங்கியிருக்கின்றது. ஜே. வி. பிக்கு எப்படியாவது வேறு கட்சிகளின் உதவி தேவை. இல்லையெ ன்றால் பாராளுமன்றத்தை நினைத்தும் பார்க்க முடியாது.

இந்தக் கூட்டணி அமைப்பதற்கான ஆலோசனைக் கூட்டங்களில் மனோ கணேசனும் பங்குபற்றியிருக்கின்றார். இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் பிரமுகர் யோகராஜன் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்த பின் மனோ கணேசனுக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையிலான உறவில் ஒரு கீறல் ஏற்பட்டிருக்கின்றது.

யோக ராஜனும் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளராகக் கொழும்பு மாவட்டத்தில் களமிறங்குவது தனக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்று மனோ கணேசன் கருதுகின்றார் போலும்.

ஜே. வி. பி அமைக்கவுள்ள புதிய கூட்டணி அன்னம் சின்னத்தில் போட்டி யிட முடியாது. அந்தச் சின்னத்துக்குரிய கட்சியான புதிய ஜனநாயக முன்ன ணியை ஸ்தாபித்தவர் ஐக்கிய தேசியக் கட்சியின் ரவி கருணாநாயக்க.

சின்னத்தை ஜே. வி. பி கூட்டணிக்கு வழங்க அவர் தயாராக இல்லை. இப்போது ஐக்கிய ஜனநாயக முன்னணியின் முயல் சின்னத்தில் போட்டியிடுவது பற்றி ஆராய்கின்றார்கள்.

ஜனாதிபதித் தேர்தலின் போது ஐக்கிய தேசியக் கட்சியின் அணியில் நின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இனங்காட்ட விரும்பவில்லை.

தனித்துப் போட்டியிடப் போவதாகக் கூட்டமைப்பின் சில முக்கிஸ்தர்கள் கூறுகின்றார்கள். அதே நேரம், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் சேர்ந்து போட்டியிடப் போவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் சொல்கிறார்.

ஹக்கீம் தமிழ் மக்களின் வாக்குகளுக்குள் ஒழிந்துகொண்டு பேசுகின்றார் என்று அமைச்சர் அதாஉல்லா அண்மையில் ழிடுசிச்:!சிநியிருந்தார்.

கிழக்கில் ஜனாதிபதிக்கு எதிராக அளிக்கப்பட்ட வாக்குகளில் பெரும்பான்மையானவை தமிழ் மக்களின் வாக்குகள் என்பதும் அந்த வாக்குகளையும் முஸ்லிம் காங்கிரஸின் கணக்கில் போட்டு ஹக்கீம் உரிமை கோருகின்றார் என்பதும் அமைச்சர் அதாஉல்லாவின் குற்றச்சாட்டு.

கூட்டாகச் செயற்பட்டு இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அணி சேர்வதாக ரவூப் ஹக்கீம் கூறுவது வேடிக்கையாக இருக்கின்றது.

ஏனென் றால் இரண்டு கட்சிகளிடமும் இனப் பிரச்சினைக்கான தீர்வுத் திட்டம் இது வரையில் இல்லை.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தில் பங்காளியாக இருந்த காலத்திலேயே புலிகளுடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

ரவூப் ஹக்கீம் அப் பேச்சுவார்த்தைகளில் பங்குபற்றினார். பேச்சுவார்த்தையின் போதென்றாலென்ன வேறு சந்தர்ப்பத்தி லென்றாலென்ன இனப் பிரச்சினையின் தீர்வுக்கான கட்சிக் கொள்கையை முஸ்லிம் காங்கிரஸ் முன்வைக்கவில்லை. முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் தீர்வுக் கொள்கை என்னவென்பது இன்று வரை எவருக்கும் தெரியாது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திரிசங்கு சொர்க்கத்தில் நிற்கின்றது. புலிகளின் நிகழ்ச்சி நிரலை முழுமையாக ஏற்றுத் தனிநாட்டுப் போராட்டத்துக்குக் கைகொடுத்தார்கள். இப்போது புலிகள் இல்லை. தனிநாட்டுக் கோரிக்கையும் இல்லை.

கூட்டமைப்பினர் தாங்கள் தனிநாட்டுக் கொள்கையைக் கைவிட்டுவிட் டதாக வெளிப்படையாகச் சொல்லவும் முடியவில்லை. ஐக்கிய இலங்கையில் அரசியல் தீர்வு என்ற நிலைப்பாட்டுக்கு வந்திருப்பதாகச் சொல்லவும் முடியவி ல்லை.

அதனால், தீர்வுத் திட்டமொன்றைத் தயாரித்துக் கொண்டிருக்கிறோம் என்கின்றார்கள். எவ்வளவு காலத்துக்கு இந்தத் திட்டம் தயாரிப்பு நிலையில் இருப்பது? இனப் பிரச்சினையின் தீர்வுக்கான கொள்கை எதுவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் இல்லை என்பதே உண்மையான நிலை.

கொள்கை இல்லாத இரண்டு கட்சிகள் சேர்ந்து இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணப் போவதாகச் சொல்கின்றார்கள். ஆண்டிகள் மடம் கட்டின கதை நினை வுக்கு வருகின்றது-

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முடிவுக்குக் கட்டுப்படாமல் ஜனாதிபதித் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்ட சிவாஜிலிங்கம் பாராளுமன்றத் தேர்தலிலும் தனி வழி போகின்றார் என்று செய்திகள் வெளிவருகின்றன.

ஜனாதிபதித் தேர்தலில் இவர் சேர்ந்திருந்த விக்கிரமபாகு கருணாரட்னவுடன் பாராளுமன்றத் தேர்தலிலும் கூட்டுச் சேரப் போகின்றாராம். பிபுதிய இடதுசாரி விடுதலை முன்னணிபீ என்ற பெயரில் ஒரு அமைப்பைப் பாராளுமன்றத் தேர்தலுக்காக இருவரும் சேர்ந்து உருவாக்கப் போகின்றார்கள் என்று அரசியல் வட்டாரங்களில் பேச்சு அடிபடுகின்றது-

ஜனாதிபதித் தேர்தல் பிரசார மேடைகளில் சிவாஜிலிங்கமும் விக்கிரமபாகுவும் தமிழ் மக்களின் துன்பங்கள் பற்றியும் இனப் பிரச்சினையின் தீர்வு பற்றியும் அதிகம் பேசினார்கள். ஆனால் தாங்கள் முன்வைக்கும் அரசியல் தீர்வு என்ன என்பதை இவர்களில் ஒருவராவது தெளிவுபடுத்தவில்லை.

தனிநாடு நடைமுறைச் சாத்தியமில்லை என்பது புலிகளின் தோல்விக்குப் பின் நிரூபணமாகியுள்ளது. இந்த நிலையில், இனப்பிரச்சினை பற்றிப் பேசும் தலைவர்கள் தாங்கள் முன்வைக்கும் தீர்வு என்ன என்பதைத் தெளிவாகக் கூறுவதற்குக் கடமைப்பட்டுள்ளனர். சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தீர்வு என்று விக்கிரமபாகு கருணாரட்ன நீண்ட காலமாகக் கூறிவருகின்றார்.

சுயநிர்ணய உரிமையைப் பிரி ந்துசெல்வதற்காகப் பிரயோகிக்க வேண்டுமா அல்லது ஐக்கிய இலங் கைக்குள் பிரயோகிக்க வேண்டுமா என்பது பற்றி மக்களுக்குக் கூறும் அறிவுரை என்ன என்ற கேள்விக்கு அவரிடம் தெளிவான பதில் இல்லை.

அதைத் தமிழ் மக்கள் தீர்மானிக்க வேண்டும் என்று கூறிச் சமாளிக்கிறார். தமிழ் மக்கள் தீர்மானிக்க வேண்டும் என்பதில் கருத்துவேறுபாடு இல்லை. சுயநிர்ணய உரிமை பற்றிப் பேசும் எல்லா அரசியல் கட்சிகளும் அதை எவ்வாறு பிரயோகிப்பது என்று தமிழ் மக்களுக்கு அறிவுரை கூறக் கடமைப்ப ட்டுள்ளன.

அதாவது சுயநிர்ணய உரி மையின் பிரயோகம் பற்றிய கட்சியின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தக் கட மைப்பட்டுள்ளன. அதை வெளிப்படுத்தா விட்டால் கட்சியிடம் திட்டவட் டமான கொள்கை இல்லை என்று அர்த்தம்.

இனப் பிரச்சினையைப் பிரதான பேசுபொருளாகக் கொண்டு பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட இருப்பவர்களிடம் பிரச்சினையின் தீர்வுக்கான கொள்கை எதுவும் இல்லாதிருப்பது தமிழ் மக்களின் துரதிஷ்டம்.


இந்திய திஹிணி வலையமைப்பில் இணைய இலங்கை வங்கி திட்டம்

பிடாடாபீ நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை



இந்தியாவில் உள்ள சகல வங்கிகளினதும் ஏ.ரி.எம். (திஹிணி) வலையமைப்புடன் இணைந்து கொள்வதற்கு இலங்கை வங்கி நடவடிக்கை எடுத்து வருவதாக வங்கியின் தலைவர் கலாநிதி காமினி விக்கிரமசிங்க தெரிவித்தார்.

இது தொடர்பாக பிடாடாபீ நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக வங்கியின் தலைவர் கூறினார். இந்தியாவில் உள்ள பத் தாயிரத்திற்கும் அதிகமான ஏ.ரி.எம். வலையமை ப்புகளுடன் இலங்கை வங்கி இணைந்துகொள் வதன் மூலம், இலங்கையில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் இந்தியாவில் எந்தவொரு வங்கியின் ஏ.ரி.எம். இயந்திரத்திலும் பணத்தை மீளப்பெற முடியும் என கலாநிதி காமினி விக்கிரமசிங்க கூறினார்.

இந்தியாவின் சென்னை மாநகரத்தில் மட்டுமே தற்போது இலங்கை வங்கியின் கிளை இயங்கி வருகிறது. அதனால் இலங்கை வங்கியின் ஏ.ரி.எம். அட்டைகளைப் பயன்படுத்தி சென்னையில் மட்டுமே பணத்தை மீளப்பெற முடிகிறது.



ரூ. 285 மில். பெறுமதியான இயந்திர உபகரணங்கள் சீனாவினால் கையளிப்பு


வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் முல்லைத் தீவு, கிளிநொச்சி, மன்னார், வவுனியா பகுதி களில் வீதி அபிவிருத்தி, உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவென சீன அரசு 285 மில்லியன் ரூபா பெறுமதியான இயந்திர உபகரணங்களை நேற்று வழங்கியது.

இலங்கையிலுள்ள சீனத் தூதுவர், பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்காவிடம் இவற்றை உத்தியோகபூர்வமாக கையளித்தார்.

பெக்கோ இயந்திரங்கள், மோட்டார் கிறேடர்கள், புல்டோசர்கள் என்பன இவற்றில் அடங்குகின்றன. கொழும்பு காலிமுகத்திடலில் கையளிப்பு வைபவம் நடைபெற்றது.

சீன நாணயப்படி 17 மில்லியன் யுவான்கள் என கணக்கிடப்பட்டுள்ளதுடன் இவை சீன அரசு அன்பளிப்பாகவே வழங்குகிறது என தேச நிர்மாண அமைச்சின் செயலாளர் டபிள்யூ. கே. கே. குமாரசிறி தெரிவித்தார்.

நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை மேலும் 5 மிதிவெடிகள், கண்ணிவெடிகள் அக ற்றும் இயந்திரங்களும் கொண்டு வரப்படவுள்ளன.

ஐக்கிய நாடுகள் மேலும் 5 இயந்திரங்களை இலங்கைக்கு வழங்குகிறது என்றும் செயலர் குமாரசிறி தெரிவித்தார்.



எனது கணவருக்கு செய்த பாவத்தின் பழியை பொன்சேகா அனுபவிக்கிறார்

மேஜர் ஜெனரல் பராக்கிரம பன்னிபிட்டியவின் மனைவி



சரத் பொன்சேகா எனது கணவரை நியாயமற்ற வகையில் இராணுவத்திலிருந்து ஒதுக்கியபோது மிகவும் வேதனைப்பட்டேன். ஒரு பெண்ணாக தனிமைப்படுத்தப்பட்டது போன்று உணர்ந்தேன். அதற்காக ஒவ் வொருவரிடமும் முறையிடப் போகவில்லை. பெண்கள் அமைப்புக்களின் ஆதரவைத்திரட்ட முனையவில்லை. கடவுளிடம் மட்டுமே முறையிட்டேன்.

ஆனால், எனது கணவருக்கும் ஏனை யோருக்கும் செய்த பாவத்தையும் பழி யையும் இன்று சரத் பொன்சேகாவும் அவரது மனைவி அனோமாவும் அனு பவித்துக் கொண்டிருக்கிறார்கள் என கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பாகவிருந்த இராணுவத்தளபதி மேஜர் ஜெனரல் பராக்கிரம பன்னிபிட்டியவின் மனைவி அச்சினி இரோமா தெரிவித்துள்ளார்.

எனது கணவரும் சிங்க ரெஜிமன்ட்டைச் சேர்ந்தவர்தான். அநாமதேய அவதூறு குற்றச்சாட்டை வைத்துக் கொண்டு எனது கணவரை இராணுவத்திலிருந்து விலக்கினார். சரத் பொன்சேகாவின் மனைவியுடன் மிகவும் நெருங்கிய உறவுகளை நான் வைத்திருந்த போதும் எனது கணவருக்கு இவ்வாறு நடந்தது.

ஆனால் இன்று சரத் பொன்சேகாவுக்கு இப்படி நடந்தவுடன் அவரது மனைவி ஒவ்வொருவரிடமும் முறையிடுவதும் பெண்கள் அமைப்புக்களை ஆதரவு வழங்கக்கோரி அழைப்பு விடுப்பதுமாக இருக்கிறார். முன்செய்த பாவங்கள் பலித்துக் கொண்டிருப்பதாகவே நான் கருதுகிறேன் என்றும் அவர் தெரிவித்தார்.

சரத் பொன்சேகா இன்று தண்டனை பெறும் போது அவரது பிள்ளைகள் பெரியவர்களாக இருக்கிறார்கள். எனது கணவர் விலக்கப்படும் போது எனது மூத்த பிள்ளைக்கு 12 வயது. ஏனைய இரண்டு பிள்ளைகளும் 4 வயதையும், 5 வயதையும் உடையவர்களாக இருந்தனர்.

கணவர் கைது செய்யப்பட்ட போது இந்தக் குழந்தைகளுடன் தனிமைப்படுத்தப் பட்டேன்.

குழந்தைகளுடன் வீதியிலிறங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. உத்தியோக பூர்வ இல்லத்திலிருந்து ஒரு மாதத்திற்குள் வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்தச் சந்தர்ப்பத்தில் எமக்கு உதவியது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே.

அவரது மனிதாபிமானம், காருண்யம் என்பவற்றால்தான் அதிக பெரும்பான்மை வாக்குகளால் வென்று மீண்டும் ஜனா திபதியாகியிருக்கிறார் என்றும் அவர் தெரிவித்தார்

மாத்தளை: சத்துணவு நஞ்சாகிய விவகாரம்:
பாடசாலைக்கு உணவு வழங்கிய கொந்தராத்துக்காரர் கைது




சத்துணவு நஞ்சாகி 10 வயது மாணவி பலியாகி 129 மாணவர்கள் சுகவீனமடைந்தது தொடர்பாக பாடசாலைக்கு உணவு வழங்கிய கொந்தராத்துக்காரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாத்தளை, பலாபக்வெல புத்தகோஸ சிங்கள மகா வித்தியாலயத்தில் சத்துணவு உட்கொண்ட மாணவர்களில் தனஞ்சனி கமகே என்ற 10 வயது மாணவி மரணமடைந்தார். மேலும், 129 மாணவர்கள் சுகவீனமடைந்து மாத்தளை ஆஸ்பத்திரியில் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டனர்.

கொந்தராத்துக்காரரால் பாடசாலை மாணவர்களுக்கென வழங்கப்பட்ட சத்துணவு நஞ்சாகியதாலேயே இந்த சம்பவம் நடத்திருக்கிறதென மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்தே கொந்தராத்துக்காரர் கைது செய்யப் பட்டிருப்பதாக மாத்தளை பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த மாணவர்களில் 60க்கும் மேற்பட்டவர்கள் வீடு திரும்பியுள்ளனர். ஏனையவர்களின் இரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட பின்னர் அவர்களையும் வீடுகளுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படுமென மாத்தளை ஆஸ்பத்திரி அத்தியட்சகர் டாக்டர் கே. டபிள்யூ. எஸ். குமாரவன்ச தெரிவித்தார். எவருக்கும் உயிராபத்தில்லை யெனவும் அவர் கூறினார்.

மேற்படி பாடசாலை உட்பட தொம்பவெல மற்றும் கவட்டயாமுன பாடசாலைகளில் கல்வி கற்கும் கீழ் பிரிவு மாணவர்களே மாத்தளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

போஷாக்கு உணவாக வழங்கப்பட்ட நூடில்ஸ் முட்டை, சொதி என்பனவுடன் மாணவர்களின் வாந்தி மற்றும் மலம் என்பன மேலதிக ஆய்வுகளுக்காக உடனடியாக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வைத்திய அதிகாரி கே. டப். எஸ். குமார வன்ஸ மேலும் தெரிவிக்கின்றார்.

இது சம்பந்தமான பொலிஸ் விசாரணை மாத்தளை சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி திலக் அபேசிரிவர்தனவின் பணிப்புரையின் பேரில் இன்ஸ்பெக்டர் ஜயம்பதா பண்டார மேற்கொண்டுள்ளார்.

ஊழல் மோசடிக் குற்றச்சாட்டு:
கண்டி மேயர் அலுவிகார பதவியிலிருந்து நீக்கம்



ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிப் பொறுப்பிலுள்ள கண்டி மாநகர சபையின் மேயர் எல். பி. அலுவிகாரவை பல்வேறு ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்கள் காரணமாக அப்பதவியிலிருந்து தற்காலிகமாக நீக்கியுள்ளதாக மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கா தெரிவித்தார்.

மேயர் எல். பி. அலுவிகார தொடர்பாகக் கிடைத்த பல்வேறு ஊழல் மோசடிகள் தொடர்பான ஆரம்ப விசாரணைகளின் பின்னரே அவரை அப்பதவியிலிருந்து உடனடியாக நீக்கத் தீர்மானித்ததாக முதலமைச்சர் தெரிவித்தார்.

தொடர்ந்தும் இக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக முழுமையான விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேபோன்று, இதற்கு முன்னர் உடபலாத்த பிரதேச சபைத் தலைவர் - பாத்ததும்பர நகர சபைத் தலைவர், கங்க வட்ட கோறளை பிரதேச சபைத் தலைவர்களும் இவ்வாறான மோசடிக் குற்றச் சாட்டுக்களின் பேரில் அப்பதவிகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. என்றும் முதமலமைச்சர் சரத் ஏக்க நாயக்க தெரிவித்தார்.

இலங்கை வங்கிக்கு புதிய ஆட்சேர்ப்பு

1100 பேர் விரைவில் சேர்ப்பு



இலங்கை வங்கிக்கு நாடளாவியரீதியில் ஆயிரத்து நூறுபேர் புதிதாக சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர்.

இவர்களுள் யாழ்ப்பாணத்தில் 40 பேர் விசேடமாக சேர்த்துக்கொள்ளப்படவுள்ளனர். இந்த ஆட்சேர்ப்புக்கான நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படவுள்ளதாக இலங்கை வங்கியின் தலைவர் கலாநிதி காமினி விக்கிரமசிங்க தெரிவித்தார்.

புதிதாக ஆட்சேர்ப்பதற்காக ஏற்கனவே போட்டிப் பரீட்சை நடத்தப்பட்டுள்ளது. ஒரு இலட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்திருந்த நிலையில் சுமார் 60 ஆயிரம் பேர் பரீட்சைக்குத் தோற்றியுள்ளனர். எனினும் ஆட்சேர்ப்பு இன்னமும் மேற்கொள்ளப்படவில்லை.

இதேவேளை யாழ்ப்பாணத்துக்கென 40 உத்தியோகத்தர்கள் விசேட தகுதியின் அடிப்படையில் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர். தமிழ் மொழியுடன் விவசாயத்துறையில் பட்டம்பெற்றவர்களே இவ்வாறு சேர்த்துக்கொள்ளப்படவுள்ளனர். விவசாயத் துறையினருக்குக் கடன் வழங்குவதுடன் அது தொடர்பான செயற்பாடுகளைக் கையாள்வதற்கே 40 பேர் விசேடமாக சேர்த்துக்கொள்ளப்படவுள்ளனர்.

இதேவேளை, அடுத்த 2012 ஆம் ஆண்டில் 10 பில்லியன் ரூபாய் இலாபத்தை ஈட்டுவதுடன் ஒரு ரில்லியன் (ஒரு இலட்சம் கோடி) ரூபாய் தொகையை ஐந்தொகை இருப்பாகப் பேணுவதற்குமான இலக்கை நோக்கி வங்கியின் செயற்பாடுகளை விரிவுபடுத்தி வருவதாகவும் கலாநிதி விக்கிரமசிங்க மேலும் தெரிவித்தார்.

மட்டக்களப்பு நாவற்காடு பிரதேசம்:
விமானத்தை தாக்கியழிக்கும் ஆயுதங்கள் உட்பட பெருமளவு வெடிபொருட்கள் மீட்பு



மட்டக்களப்பு நாவற்காடு பிரதேசத்தில் புலிகளால் முன்னர் புதைத்து வைக்கப்பட்ட பெருந்தொகையான ஆயுதங்கள் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை கண்டெடுக்கப் பட்டுள்ளன.

லிகளுடன் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போர் நடவடிக்கையின் போது புலிகளின் பிராந்திய தளபதியாக இருந்த 34 வயதுடைய மோகன் என்றழைக்கப்படும் மகேந்திரராஜா வழங்கிய தகவலுக்கிணங்க விமானத்தை தாக்கியழிக்கும் ஆயுதங்கள், கைக்குண்டுகள், ஸ்னைப்பர் ரக ஆயுதங்கள் உட்பட பெரும் எண்ணிக்கையிலான வெடி பொருட்கள் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறிப்பிடப்பட்ட புலி முக்கியஸ்தர் கொழும்பில் புலனாய்வு பொலிஸாரின் விசாரணையில் தொடர்ந்தும் இரு க்கிறார்.

நாவற்காடு வைத்தியசாலையில் கடமையாற்றிய சிங்கள வைத்தியரொருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் இவருக்கு தொடர்பிருப்பதாகவும் பொலிஸாருக்கு தகவல் கிடைத் துள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

பொன்சேகா கைதுக்கு எதிரான மனு ஏற்பு
இலங்கை சுப்ரீம் கோர்ட்டில் 23-ந் தேதி விசாரணை



இலங்கை ராணுவ முன்னாள் தளபதி சரத் பொன்சேகா கைதை எதிர்த்து அவரது மனைவி அனோமா, இலங்கை சுப்ரீம் கோர்ட்டில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்தார். இம்மனு மீதான விசாரணை முடிவடையும்வரை, இடைக்கால ஏற்பாடாக, பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு அவர் கேட்டுக்கொண்டார். இம்மனுவை நேற்று சுப்ரீம் கோர்ட்டு விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. மனு மீதான விசாரணை, வருகிற 23-ந் தேதி நடைபெறுகிறது. அப்போது, பொன்சேகா விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால உத்தரவு பிறப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, பொன்சேகாவை தற்போது சிறை வைத்துள்ள இடத்தில் இருந்து வேறு இடத்துக்கு மாற்ற மாட்டோம் என்று சுப்ரீம் கோர்ட்டில் அட்டர்னி ஜெனரல் உறுதி அளித்துள்ளார்.



கடற்படையினர் அழைத்துச் சென்றவர்களே காணாமல் போயுள்ளனர் : உறவினர்கள் தகவல்



மாவட்டத்தில் காணாமல் போனவர்களில் அதிக எண்ணிக்கையானோர் கடற்படையினரால் விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்டவர்களே என உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

மன்னார் மாவட்டத்தில் காணாமல் போனவர்கள் தொடர்பான விபரங்களைத் திரட்டும் நிகழ்வொன்று நேற்று வெள்ளிக்கிழமை மன்னார் பிரதேச செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.

இந்த நிகழ்வினை வவுனியா வன்முறையற்ற சமாதான அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. இதன் போது வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழு ஆணையாளர் ரோகிதவும் வருகை தந்து மக்களுடன் உரையாடினார்.

மன்னார் மாவட்டத்தில் காணாமல் போனவர்களில் அதிகமானோர் கடற்படையினரால் அழைத்துச் சென்றவர்களே என்றும் அவர்கள் குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை எனவும் உறவினர்கள் இந்நிகழ்வின்போது தெரிவித்தனர்.

கடந்த 2 வருடங்களில் மன்னார் மாவட்டத்தில் 150க்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளமையும் குறிப்பிடத்தக்கது



லண்டனில் 'இலங்கை வங்கி யூ. கே. லிமிடெட்' : தலைவர் தகவல்



லண்டனில் உள்ள இலங்கை வங்கிக் கிளையை பிரதான வங்கியாக மாற்றியமைத்து அதனூடாக உலக நாடுகளில் கிளைகளைத் திறக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக வங்கியின் தலைவர் கலாநிதி காமினி விக்கிரமசிங்க தெரிவித்ததாக அரச இணையத்தளத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

அச்செய்தியில்,

'இலங்கை வங்கி யூ. கே. லிமிடெட்' என்ற பெயரில் லண்டனில் ஆரம்பிக்கப்படும் இந்த வங்கியே உலக நாடுகளில் உள்ள இலங்கை வங்கிக் கிளைகளை நிர்வாக மேற்பார்வை செய்யும் என்று தெரிவித்த கலாநிதி விக்கிரமசிங்க, அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளில் கிளைகளைத் திறக்க எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.

வங்கியின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த கலாநிதி விக்கிரமசிங்க, தற்போது லண்டனிலிருந்து இலங்கை வங்கி ஊடாக மேற்கொள்ளப்படும் அனைத்துவித பணப்பரிமாற்றங்களுக்கும் கட்டணம் எதுவும் அறவிடப்பட மாட்டாதென்றும் குறிப்பிட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமுர்த்தி வங்கிகள் கணினிமயமாகும்

அதே வேளை, நாடளாவிய ரீதியில் செயற்பட்டுவரும் சமுர்த்தி வங்கிகளைக் கணினிமயப்படுத்த உள்ளதாக சமுர்த்தி பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி ஆர்.பி.பி. திலகசிறி தெரிவித்தார்.

கணினிகளைக் கொள்வனவு செய்வதற்கான சுற்று நிருபங்கள் சமுர்த்தி வங்கிகள் மற்றும் மகாசங்கம் என்பவற்றுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

கணினிகளைக் கொள்வனவு செய்வதுடன் ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்திலிருந்து இணையத்தள வசதிகளை பெற்றுக் கொள்வதற்கான அங்கீகாரமும் வழங்கப்பட்டுள்ளதாக பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

களனிவெளி வரை மட்டுப்படுத்தப்பட்ட ரயில் சேவை : திணைக்களம் அறிவிப்பு



களனிவெளி வரையிலான ரயில் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்த மட்டுப்படுத்தப்பட்ட ரயில் சேவை இன்றும் நாளையும் இடம்பெறுமென ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொட்டாவை மற்றும் ஹோமாகம ஆகிய பகுதிகளுக்கான ரயில் பாதையில் திருத்தப் பணிகள் மேற்கொள்வதன் காரணமாகவே குறித்த பகுதிக்கான ரயில் சேவையை மட்டுப்படுத்த தீர்மானித்துள்ளதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

அவிசாவளையில் இருந்து இன்று காலை 6.00 மணிக்கு புறப்பட்ட ரயில் இன்று காலை 7.43 அளவில் கொட்டாவை ரயில் நிலையத்தை வந்தடைந்த பின்னர் அந்த பகுதிகளுக்கான சேவையானது நாளை பிற்பகல் வரை இடம்பெறாது என திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் அவிசாவளையில் இருந்து கொட்டாவை வரையிலான ரயில் சேவையானது நாளை பிற்பகல் 4.10 அளவில் இடம்பெறுமென அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் கொழும்பு கோட்டையில் இருந்து கொட்டாவை வரையிலான ரயில் சேவையானது இன்று பிற்பகல் 2.25 மணிக்கும் கொட்டாவையில் இருந்து கொழும்பு கோட்டை வரையிலான ரயில் சேவை மீண்டும் நாளை காலை 7.43மணிக்கும் இடம்பெறுமென ரயில்வே திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது


கண்டியில் 18ஆந் திகதி அனைத்து பௌத்த பிக்குகள் மாநாடு




நான்கு பிரதான பௌத்த பீடாதிபதிகள் தற்போது உருவாகியிருக்கும் நிச்சயமற்ற நிலையைப் பற்றி விவாதிக்க கண்டியில் எதிர்வரும் 18ஆம் திகதி மாநாடு ஒன்றை கூட்டியுள்ளனர் என பிபிசி இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

நாட்டின் அனைத்து புத்த மத பிக்குகளுக்கும் அனுப்பியுள்ள கடிதம் ஒன்றில், நாட்டின் ஜனநாயகம் மற்றும் நல்ல அரச பரிபாலனம் ஆகியவற்றைச் சூழ்ந்திருக்கும் நிச்சயமற்ற தன்மை என்று அவர்கள் குறிப்பிடும் விஷயம் குறித்து விவாதிக்க கண்டி வருமாறு, இந்த நான்கு பீடாதிபதிகள் கோரியுள்ளனர்.

இந்த நிச்சயமற்ற நிலை நாட்டின் எதிர்காலத்துக்குப் பேரழிவைத் தரக்கூடிய ஒரு விஷயம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

நாட்டின் முன்னேற்றத்துக்கு புத்த பிக்குகள் நெடுங்காலமாகவே பங்களிப்பு செய்துள்ளதாகவும் இந்த கடிதம் குறிப்பிடுகிறது.

கடிதத்தில் மல்வத்தை, அஸ்கிரிய, அமரபுர மற்றும் ராமன்ன பீடங்களின் தேரர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

இந்த மாநாடு சுதந்திரம் அடைந்த இலங்கையின் வரலாற்றில் முக்கியமானதொன்றாக அரசியல் நோக்கர்களால் கணிக்கப்படுகிறது.என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது

அரசுடன் பேச்சு நடத்த உத்தியோகபூர்வ அழைப்பு விடுக்கப்படவில்லை : ததேகூ



ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுக்கப்படவில்லை. எனினும் தாம் அழைக்கப்பட்டால் மக்களின் தேவை கருதி பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளத் தயாராக இருப்பதாக கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.துரைரட்ணசிங்கம் வீரகேசரி இணையத்தளத்துக்குத் தெரிவித்தார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து போட்டியிடுவது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அழைப்பு விடுத்திருந்தார்.

இது குறித்து கருத்து தெரிவித்தபோதே துரைரட்ணசிங்கம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

புதமிழ்பேசும் மக்களின் நலன் கருதியே நாம் பல முக்கிய தீர்மானங்களை எடுத்து வருகிறோம். ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்துவது தொடர்பிலும் எமது மக்களின் நலனையே முதன்மையாக நோக்குகிறோம். ஆகவே, உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுக்கப்படும் பட்சத்தில் நிகழ்ச்சித் திட்ட அடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்தத் திட்டமிட்டுள்ளோம்" என்றார்



தமிழ் வர்த்தகரிடம் கப்பம்பெற முயன்றவர்கள் வெள்ளவத்தையில் கைது


பிரதேசத்தைச் சேர்ந்த பிரபல தமிழ் வர்த்தகர் ஒருவரிடமிருந்து 70 லட்சம் ரூபாவைக் கப்பமாகப் பெற முயற்சித்த இராணுவ கப்டன் ஒருவர் உட்பட இருவர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதியின் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கெனக் கூறி கேட்கப்பட்டுள்ள இந்த கப்பப் பணத்தை உடனடியாக பெற்றுக் கொள்ளுமாறு பாதுகாப்பு செயலாளர் ஆலோசனை வழங்கியதாகக் கூறியே இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்ட மேற்படி சந்தேக நபர்களில் ஒருவர் கப்பம் கோரப்பட்ட வர்த்தகரின் உதவியாளர் எனவும் அவரே குறித்த கப்டனுக்கு வர்த்தகர் தொடர்பான தகவல்களை வழங்கியுள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் தடுத்து வைக்கப்பட்டு தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி பிரதி பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்க தகவல் வழங்குகையில்,

"கொழும்பு வெள்ளவத்தைப் பிரதேசத்தைச் சேர்ந்த கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரிடமிருந்து ரூ.70 லட்சத்தினை கப்பமாகப் பெற முயற்சித்த இராணுவ கப்டன் ஒருவர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அவரிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய வர்த்தகரின் நிறுவனத்தில் கடமையாற்றி வந்த அவருடைய உதவியாளர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெள்ளவத்தை பிரதேசத்தில் பயணித்துக் கொண்டிருந்த வர்த்தகரின் மோட்டார் வாகனத்தை மறித்துள்ள மேற்படி கப்டன், விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்பிலும் அவ்வியக்கத்துடனான தொடர்புகள் குறித்துமான விசாரணைகளுக்காக அவரைக் கைது செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேற்படி கைதினைத் தவிர்க்க வேண்டுமாயின் 70 லட்சம் ரூபாவினை கப்பமாக வழங்க வேண்டும் என்றும் அந்தப் பணம் ஜனாதிபதியின் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப் போவதாகவும் அவர் கூறியுள்ளார். அத்துடன் வர்த்தகரின் தொலைபேசி இலக்கத்தைப் பெற்றுக்கொண்டு அவரை விடுவித்துள்ளார் என்று விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இதனையடுத்து குறித்த வர்த்தகர் இந்த சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு முறைப்பாடு செய்துள்ளார். இந்நிலையில் வர்த்தகரின் தொலைபேசிக்கு அழைப்பு விடுத்துள்ள கப்டன் உரிய பணத்தையும் எடுத்துக்கொண்டு பம்பலப்பிட்டி பிரதேசத்துக்கு வருமாறு அறிவித்துள்ளார். இவ்வாறான சந்தர்ப்பத்திலேயே சந்தேக நபரான கப்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட கப்டன் கண்டியைச் சேர்ந்தவர் என்பதுடன் பிரமுகர்கள் பயணிக்கும் சந்தர்ப்பங்களின் போது பிரதான வீதிகளின் பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்குப் பொறுப்பாளராக கடமையாற்றி வந்துள்ளார்.

கைதான இருவரும் தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் தடுத்து வைக்கப்பட்டு தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்" என்றார்.



டிவி நிகழ்ச்சிகளில் பங்குபற்ற இராணுவத்தினருக்குத் தடை




நிகழ்ச்சிகளில் பங்குபற்ற இராணுவ அதிகாரிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் அவர்களை தங்களது நிகழ்ச்சிகளில் இணைத்துக் கொள்ள வேண்டாம் என சகல தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும், பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச சார்பில் கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஷ்மன் ஹுலுகல்லவின் கையெழுத்துடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ள இந்த கடிதத்தில் இராணுவ அதிகாரிகள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்குபற்றுவதானது இராணுவ சட்ட விதிமுறைகளுக்கு முரணானது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இராணுவ அதிகாரிகளை இணைத்துக் கொள்வதை உரிய தொலைக்காட்சி நிறுவனங்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு அவர்கள் நிகழ்ச்சிகளில் பங்குபற்றுவதானது இராணுவ சட்டத்தை மீறும் செயலாகும்.

ஆளுமையினை வெளிப்படுத்தும் நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள் மற்றும் கலந்துரையாடல்கள் என எந்தவொரு நிகழ்ச்சியிலும் இராணுவ அதிகாரிகள் பங்குபற்றுவதானது இராணுவ சட்டத்துக்கு முரணான செயற்பாடாகும்.

இதனையும் மீறிச் செயற்படுபவர்களுக்கு எதிராக இராணுவ சட்டத்தின் பிரகாரம் தகுந்த தண்டனைகளை வழங்க இடமுண்டு என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள போதிலும், அதில் தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஷ்மன் ஹுலுகல்லவே கைச்சாத்திட்டுள்ளார்.

அனைத்து தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ள இந்த கடிதத்தின் பிரதிகள் பொலிஸ் மா அதிபர் மற்றும் முப்படைத் தளபதிகள் ஆகியோருக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.



நோர்வே-அமெரிக்க நாடுகளின் மறுப்பை ஏற்றார் வெளியுறவு அமைச்சர்



இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் குற்றச்சாட்டுக்கு நோர்வே தூதரகமும் அமெரிக்கத் தூதரகமும், அளித்த மறுப்பை இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஏற்றுக்கொண்டுள்ளார்.

முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா, கடந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டபோது அவருக்கு நோர்வேயும் அமெரிக்காவும் நிதியுதவிகளை வழங்கியதாக கோத்தபாய ராஜபக்ச குற்றம் சுமத்தியிருந்தார்.

இந்தக் குற்றச்சாட்டை குறித்த இரண்டு நாடுகளின் தூதரகங்களும் கடுமையான தொனியில் நிராகரித்திருந்தன. அத்துடன் அந்த தூதரகங்கள் இரண்டும், நிராகரிப்பு ஆவணத்தை வெளியுறவுத்துறை அமைச்சரிடம் கையளித்திருந்தன.

இந்தநிலையில் குறித்த நிராகரிப்புகள் தமக்கு கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் ரோஹித்த போகல்லாகம, இந்த விடயத்தை தொடர்ந்தும் விவாதிக்கப் போவதில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, சரத் பொன்சேகாவை, கைது செய்தமைக்காக தகுந்த காரணங்கள் உள்ளதாக ரோஹித்த போகல்லாகம, நேற்று வெளிநாட்டு ராஜதந்திரிகள் மத்தியில் தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய இராணுவச் சட்டப்படி, இராணுவ சட்டம் இலக்கம் 17,1949 ஆம் ஆண்டுக்கமைய சரத் பொன்சேகா, கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இராணுவத்தில் இருந்து விலகி ஒன்றரை வருடங்களுக்கு இராணுவ சட்டத்தின் மூலம் வீரர் ஒருவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கமுடியும் என்ற அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டதாக அவர் தெளிவுப்படுத்தியுள்ளார்.

இந்தநிலையில், இராணுவ நீதிமன்றத்தில் பிரதிவாதியான சரத் பொன்சேகா தமக்காக வழக்காட எத்தனை சட்டத்தரணிகளையும் நியமிக்கலாம் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். இது இராணுவ நீதிமன்ற ஒழுங்கில் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...



மீண்டும் ஆட்சிக்கு வந்தால் விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தை ஒழிப்போம்: இலங்கைப் பிரதமர்


கொழும்பு, பிப். 12: நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணிக்கு (யு.பி.எஃப்.ஏ.) மூன்றில் இரு மடங்கு பெரும்பான்மை கிடைத்து மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இப்போது அமலில் இருக்கும் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையை ரத்து செய்துவிடுவோம் என்று பிரதமர் ரத்னசிறீ விக்ரமநாயக அறிவித்தார்.

இலங்கையில் இப்போது நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படும் 196 உறுப்பினர்களும் கட்சிகளுக்குக் கிடைக்கும் வாக்குகள் அடிப்படையில் கட்சி அளிக்கும் தேசியப் பட்டியலிலிருந்து தெரிந்தெடுக்கப்படும் 26 உறுப்பினர்களும் நாடாளுமன்றத்தில் இடம் பெறுகின்றனர்.

"இப்போதுள்ள தேர்தல் முறை சரியில்லை என்பது என்னுடைய கருத்து. இப்போது உள்ள உறுப்பினர்களை நம்முடைய உறுப்பினர்கள் என்றே நாம் அழைக்க முடியாது.

இந்த ஹோரண தொகுதியிலிருந்து ஒருவர் தேர்ந்தெடுக்கப்படலாம், மற்றவர்கள் தோல்வி அடையலாம். ஆனால் இப்போதுள்ள விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையில் ஹோரணவைச் சேர்ந்தவருக்கு பிரதிநிதித்துவம் இல்லாமல் வேறு பகுதியைச் சேர்ந்தவரைக் கூட கட்சிகள் தங்களுடைய பிரதிநிதியாக நியமிக்கலாம்.

இந்த சட்டத்தை மாற்ற நாடாளுமன்றத்தில் மூன்றில் இரு மடங்கு உறுப்பினர்கள் தேவை. எனவே எங்கள் கூட்டணிக்கு அந்த ஆதரவை வழங்கினால் இந்தத் தேர்தல் முறையையே மாற்றிவிடுவோம்' என்றார் விக்ரமநாயக.

இப்போதைய நாடாளுமன்றம் 2004-ல் தேர்ந்தெடுக்கப்பட்டது. இதன் பதவிக்காலம் ஆறு ஆண்டுகள். பதவிக்காலம் முடிவதற்கு 2 மாதங்களுக்கு முன்னரே தேர்தலைச் சந்திக்கத் தயாராகிவிட்டார் அதிபர் மகிந்த ராஜபட்ச.

வேட்பு மனு தாக்கல் பிப்ரவரி 19 தொடங்கி 26-ல் நிறைவடைகிறது. ஏப்ரல் 8-ம் தேதி வாக்குப் பதிவு.

இப்போது ஆளும் கூட்டணிக்கு 105 உறுப்பினர்களும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிக்கு 82 உறுப்பினர்களும் உள்ளனர். விடுதலைப் புலிகளுக்கு ஆதரவானவர்கள் என்று கருதப்படும் தமிழ் தேசிய கூட்டணிக்கு 22 உறுப்பினர்களும் ஜாதிகா ஹேள உருமய என்ற கட்சிக்கு 9 உறுப்பினர்களும் உள்ளனர்.

ஆளும் கூட்டணியில் இலங்கை சுதந்திரக் கட்சி, ஜனதா விமுக்தி பெரமுன, இலங்கை மகாஜன பட்சய, முஸ்லிம் தேசிய ஐக்கிய கூட்டணி, மகாஜன ஏக்சத் பெரமுன, ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி, தேச விமுக்தி ஜனதா கட்சி ஆகியவை இடம் பெற்றுள்ளன.
மேலும் இங்கே தொடர்க...

ஜெனரல் பொன்சேகாவின் உடல் நிலைமைகளை கவனிக்க விசேட வைத்தியர்கள் குழு.




ஜெனரல் பொன்சேகாவின் உடல் நிலைமைகளை கண்காணிக்க விசேட வைத்தியர்கள் குழுவொன்று தயார்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜகத் ஜெயசூரியா தெரிவித்துள்ளார்.

இவ்வைத்தியக் குழு 24 மணி நேரம் விழிப்பாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், தேவை ஏற்படின் இராணுவ வைத்தியசாலையில் வைத்திய ஆலோசர் மேஜர் ஜெனரல் எஸ்-எச் முனசிங்கவிற்கு ஜெனரல் பொன்சேகாவோ அவரது மனைவியோ எந்த நேரத்திலும் அழைப்பபை ஏற்படுத்த முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெனரல் பொன்சேகாவின் மனைவி அனோமா பொன்சேகா நேற்று சர்வதேச செஞ்சிலுவைச் சங்கதினரை தொடர்பு கொண்டு தனது கணவனுக்கு தேவையான மருத்துவ வசதிகளை வழங்குவதில் காணப்படும் குறைபாடுகளை தீர்பதற்கு உதவுமாறு கேட்டிருந்தார்.

ஜெனரல் பொன்சேகா மூன்று தடவைகள் குண்டுத்தாக்குதல்களுக்கு உட்பட்டுள்ளதாகவும் அதன்போது அவரது உடலில் புகுந்துள்ள சில குண்டுத்துகள்கள் இதுவரை நீக்கப்படவில்லை எனவும் , இறுதியா இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குலில் தனது கணவரில் ஈரலுக்கு அண்மித்தபகுதில் 1 அங்குல நீழமான குண்டுத்துகள் ஒன்று இருப்பதாகவும் அதனால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை தவிர்க்கும் பொருட்டு அவர் ஒவ்வொரு ஆறுமணி நேரமும் மாத்திரைகள் எடுக்கவேண்டியுள்ளதாகவும் தெரிவித்த அவர், தனது கணவனின் உடல் நிலைமை தொடர்பான முழு விபரமும் இராணுவ வைத்தியசாலையின் இயக்குனருக்கே தெரியும் எனவும் அவரை தொடர்ந்தும் தனது கணவனின் உடல் நலத்தினை கவனிக்க அனுமதிக்குமாறும் வேண்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.



25-ந் தேதி நிபந்தனையற்ற பேச்சுக்கு பாகிஸ்தான் சம்மதம்










அமெரிக்காவின் வேண்டுகோளை ஏற்று, பாகிஸ்தானுடன் பேச்சு நடத்த இந்தியா சம்மதம் தெரிவித்தது. வருகிற 18 அல்லது 25-ந் தேதியில் இஸ்லாமாபாத்தில் இந்த பேச்சுவார்த்தையை நடத்தலாம் என்று பாகிஸ்தானுக்கு கடிதம் அனுப்பியது. இதில், 25-ந் தேதியை பாகிஸ்தான் ஏற்றுக்கொண்டு இருக்கிறது.

இதன் படி இந்த பேச்சுவார்த்தையில் இந்திய வெளியுறவு செயலாளர் நிருபமா ராவும், பாகிஸ்தான் வெளியுறவு செயலாளர் சல்மான் பஷீரும் கலந்துகொள்கிறார்கள். இந்த பேச்சுவார்த்தை இரு தரப்பிலும் நிபந்தனையற்றதாக அமையும் என்று பாகிஸ்தான் வெளியுறவு அலுவலக செய்தித்தொடர்பாளர் அப்துல் பாசித் தெரிவித்தார்.

வெளிநாட்டு வினோதம்
மனிதர்களை தோற்கடித்த மாடுகள்



உலகின் தென்கோடியில் ஆஸ்திரேலியாவுக்கு அருகே உள்ளது நிïசிலாந்து. இந்த நாட்டில் மனிதர்களை விட மாடுகள் அதிக அளவில் இருப்பது தெரியவந்துள்ளது. 2009-ம் ஆண்டு ஜுன் மாதம் எடுத்த கணக்கெடுப்பில் 58 லட்சம் பசுமாடுகள் இருப்பது தெரியவந்து உள்ளது. அந்த நாட்டு மொத்த மக்கள் தொகை 43 லட்சம் தான்.

மாடுகளின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதற்கு மாட்டு பண்ணைகள் லாபகரமாக இயங்குவது தான் காரணம் ஆகும். அதனால் ஆடு முதலிய மிருகங்களை வளர்த்தவர்கள் அதை கைவிட்டு விட்டு மாடுவளர்க்க தொடங்கி உள்ளனர்.



முகத்தில் தாடி முளைத்த மனைவியை விவாகரத்து செய்த அரேபிய தூதர்

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டின் தூதர் ஒருவருக்கும் ஒரு பெண்ணுக்கும் திருமணம் நிச்சயமானது. அந்த பெண்ணுக்கு முகத்தில் முடி முளைத்து இருக்கும். மாறுகண் வேறு. இதை அவர் பர்தா மூலம் மறைத்து இருந்தார். திருமணம் நிச்சயமான பிறகு இருவரும் சந்தித்தபோது எல்லாம் அந்த பெண் பர்தா அணிந்து இருந்ததால், அவர் முகத்தில் முடி இருந்ததை கண்டு பிடிக்க முடியவில்லை.

திருமண ஒப்பந்தத்தில் இருவரும் கையெழுத்திட்ட பிறகு அவர் மனைவியின் முகத்தில் முத்தமிட குனிந்தபோது தான் அவர் முகத்தில் தாடி இருப்பதை கவனித்தார். அதோடு மாறுகண் என்பதும் தெரியவந்தது. அதன் பிறகு இருவரும் சந்திக்கும்போது எல்லாம் அந்த பெண் பர்தா மூலம் மறைத்துக்கொண்டு கணவருடன் பழகி வந்தார். தாம்பத்திய உறவின் போது கூட அவர் பர்தாவுடன் இருந்ததால் அவரால் மனைவி முகத்தில் தாடி இருப்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. உடனே அவர் இஸ்லாமிய கோர்ட்டில் விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்தார். தன் தாயாரே அந்த பெண்ணின் தங்கை போட்டோவை காட்டி தன்னை ஏமாற்றி விட்டார் என்று குற்றஞ்சாட்டி இருந்தார். நகை மற்றும் புடவை வாங்குவதற்காக கொடுத்த பணம் ரூ.68 லட்சத்தை திருப்பி தரவேண்டும் எனறும் அதோடு தனக்கு நஷ்டஈடு தரவேண்டும் என்றும் அவர் கோரி இருந்தார்.

வழக்கை விசாரித்த கோர்ட்டு அவருக்கு விவாகரத்து வழங்கியது. மேலும், பணத்தை திரும்ப தர உத்தரவிடவும் இழப்பீடு தரவும் கோர்ட்டு மறுத்து விட்டது.

***

முன்னாள் மனைவியிடம் மன்னிப்பு கேட்டதாம் மைக்Úல் ஜாக்சன் ஆவி



பாப் இசை உலகில் உலகப்புகழ் பெற்றவர் மைக்கேல் ஜாக்சன். இவர் கடந்த ஆண்டு தன் 50 வயதில் மரணம் அடைந்தார். இவர் மனைவி மேரி பிரஸ்லி (வயது 42). இவரை 1994-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு 18 மாதங்கள் கழித்து அவர்கள் பிரிந்து விட்டனர்.

பிரஸ்லியும், மைக்கேல் ஜாக்சனின் மேக் அப் கலைஞர் கரேன் பயேகாஸ்சும் ஒரு மீடியம் மூலம் அவரது ஆவியுடன் பேசினார்கள். அப்போது அவர் உனக்கு (பிரஸ்லி) செய்த தவறுக்காக என்னை மன்னித்து விடு என்று ஆவி கேட்டுக்கொண்டதாக கரேன் பயேகாஸ் தெரிவித்தார்.

மீடியமாக செயல்பட்டவருக்கு நாங்கள் யார் என்பதும், எங்களுக்கும் அவருக்கும் உள்ள தொடர்பு பற்றியும் எதுவும் தெரியாது என்று கரேன் பயேகாஸ் தெரிவித்தார்.

அவரது தனி டாக்டர் கொனார்டு முர்ரே பற்றியும் அவர் மீதான கொலைக்குற்றச்சாட்டு பற்றியும் கூற மைக்கேல் ஜாக்சன் மறுத்து விட்டார்.


இஸ்ரேலுக்கு ஈரான் எச்சரிக்கை
ராணுவ நடவடிக்கை எடுத்தால் உங்களை இல்லாமல் செய்து விடுவோம்



இஸ்ரேல் இந்த பிராந்தியத்தில் ஏதேனும் ராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டால், அதை எதிர்த்து நடவடிக்கை எடுப்போம். அதன்பிறகு இஸ்ரேல் என்ற நாடே இருக்காது என்று ஈரான் நாட்டு அதிபர் மக்மூத் அகமதினிஜாத் எச்சரித்தார்.

ஈரான் அதிபர், சிரியா அதிபர் பாஷர்அல் ஆசாத்திடம் டெலிபோனில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது

2006-முதல் 2009-ம் ஆண்டு கால கட்டங்களில் காசா மக்களிடமும், லெபனான் ஹிஸ்பொல்லா தீவிரவாதிகளிடமும் ஏற்பட்ட தோல்விக்கு எந்த வகையிலும் பழி வாங்கலாம் என்று இஸ்ரேல் ஆலோசித்து வருவதாக நம்பகமான தகவல் எனக்கு கிடைத்து உள்ளது. இஸ்ரேல் மீண்டும் ராணுவ நடவடிக்கை எடுத்தால் அதை எதிர்த்து முழு அளவில் போர் நடத்தப்பட வேண்டும். இந்த போர் மூலம் எதிரியை இல்லாமல் ஒழிக்கவேண்டும்.

இவ்வாறு அகமதினிஜாத் கூறினார்.


மேலும் இங்கே தொடர்க...
பொன்சேகாவுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை?




பொன்சேகாவுக்கு 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம் என இலங்கை பாதுகாப்புச் செயலர் கோத்தபய ராஜபட்ச கூறியுள்ளார். இது குறித்து அதிபர் மகிந்த ராஜபட்ச சகோதரரும்,​​ பாதுகாப்புச் செயலருமான கோத்தபய ராஜபட்ச கூறியதாக மலேசியாவில் இருந்து வெளியாகும் பத்திரிகை வெளியிட்ட செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது: முன்னாள் ராணுவத் தளபதி பொன்சேகா மீதான குற்றச்சாட்டுகள் கடுமையானவை.​ எனவே,​​ அவருக்கு 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது. அவர் மீதான ராணுவ விசாரணை விரைவில் தொடங்கும்.​ அவர் தனது பதவியை தவறாகப் பயன்படுத்தி ராணுவத்தில் பிளவை உண்டாக்க முயன்றார்.​ ராணுவத்தில் அரசியலை நுழைக்க முயன்றார். தமிழர்களின் மறுவாழ்வுப் பணிகளுக்கு முட்டுக்கட்டையாக இருந்தார்.​ இலங்கையில் ராணுவ ஆட்சி கொண்டு வர சதித் திட்டம் தீட்டினார். 2009 ஜனவரியில் பத்திரிகையாளர் லசந்தா விக்ரமதுங்கே கொலை செய்யப்பட்டது தொடர்பாகவும் பொன்சேகா மீது சிவில் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறும். லசந்தா விக்ரமதுங்கே கொல்லப்பட்டது தொடர்பாக ​ உண்மை விரைவில் வெளிவரும். அமெரிக்கா, ​​ நார்வே மீது குற்றச்சாட்டு:​ அதிபர் தேர்தலில் பொன்சேகா பிரசாரத்துக்கு சில மேற்கத்திய நாடுகள் உதவி செய்துள்ளன.​ அமெரிக்கா,​​ நார்வே உள்ளிட்ட நாடுகள் ஏராளமாக பணம் செலவழித்துள்ளன. இலங்கை அரசுக்கு எதிராக எழுத பத்திரிகையாளர்களுக்கு நார்வே அரசு பணம் கொடுத்துள்ளது என்பதற்கு என்னிடம் ஆதாரங்கள் உள்ளன என்றார்.​ ​ பொன்சேகாவுக்கு அமைச்சர் கண்டனம்:​​ போர் சமயத்தில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து உண்மைகளை வெளியிடுவேன் என பொன்சேகா கூறியதற்கு செய்தித் துறை அமைச்சர் லட்சுமண் யப அபேயவர்தனே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். போர் சமயத்தில் நடந்தவை தொடர்பாக சர்வதேச அமைப்புகளிடம் கூறுவேன் என ஒருவர் கூறினால்,​​ அதுபோன்ற ராணுவ அதிகாரியிடம் விசாரணை நடத்த ராணுவத்துக்கு உரிமை உண்டு என்றார் அவர். பொன்சேகா இதுபோன்று பேசுவது துரோகமாகும் என ஆளும் கூட்டணியில் உள்ள தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சா கூறினார். மகிந்த ராஜபட்சவுக்கு எதிராக அதிபர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த பொன்சேகா கடந்த திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார். இதை எதிர்த்து அவரது மனைவி அனோமா,​​ உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.​ அந்த வழக்கின் மீதான விசாரணை வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. விடுதலைப் புலிகளுடனான போரின்போது இலங்கை அரசு அப்பட்டமாக மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டது என மனித உரிமை அமைப்புகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.​ பொன்சேகா மீதான குற்றச்சாட்டுகள் குறித்து சிவில் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றால் உண்மைகள் வெளிவரக் கூடும் என்பதால் ராணுவ நீதிமன்றத்தில் விசாரிக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

பொன்சேகாவின் கைது இராணுவ ஒழுக்கம் சார்ந்த நடவடிக்கை
எதிர்க்கட்சித் தலைவரிடம் ஜனாதிபதி தெரிவிப்பு



ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்குமிடையிலான விசேட சந்திப்பொன்று நேற்று ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது.

இச்சந்திப்பின் போது பல்வேறு விடயங்கள் சம்பந்தமாகக் கலந்துரையாடப் பட்ட போதும் சரத் பொன்சேகாவின் கைது தொடர்பிலேயே விசேட கவனம் செலுத்தப் பட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ; சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டுள்ளமை எவ்வகையிலும் அவருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டதொன்றல்ல. இராணுவ ஒழுக்கம் மற்றும் இராணுவ சட்டத்திற் கிணங்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை யாகும் எனத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த ஜனாதிபதி,

தடுத்து வைக்கப்பட்டுள்ள சரத் பொன் சேகாவுக்குத் தேவையான சகல வசதிகளும் எவ்வித குறைபாடுகளுமின்றி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவர் கைது செய்யப்பட்டமை சம்பந்தமாக நீதிமன்றத்திற்குச் செல்வதற்கும் உரிய வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

சரத் பொன்சேகா தொடர்பான விசா ரணை நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டு ள்ளதுடன் அவர் குற்றமிழைத்திருக்காவிட் டால் அவரை விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க; தடுத்து வைக்கப்பட்டுள்ள சரத் பொன் சேகாவிற்கு உணவு எடுத்துச் செல்லும் அவரது மனைவி அனோமா பொன்சேகா வுக்குப் பதிலாக வேறு ஒருவரை அனுமதிக்க முடியுமா என ஜனாதிபதியிடம் கேட்டுக் கொண்டார். அதற்குப் பதிலளித்த ஜனாதிபதி; அதனை இராணுவத் தளபதியே தீர்மானிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

தமது கணவரைப் பார்ப்பதற்கு சந்தர்ப்பம் பெற்றுக்கொடுக்க வேண்டுமென அனோமா பொன்சேகா தொடர்ந்தும் ஊடகங்களினூடாக வேண்டுகோள் விடுத்ததை தாம் பார்த்ததாக ஞாபகப்படுத்திய ஜனாதிபதி; அனோமா பொன்சேகா விரும்பினால் அவரது கையினாலேயே உணவு வழங்குவது மிகவும் பொருத்தமானது எனவும் குறிப் பிட்டுள்ளார்.

அன்று நாம் மக்களுக்காகச் செயற்படப் போய் சிறையிலடைக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் கர்ப்பிணியாகவிருந்த ஷிரந்தி ராஜபக்ஷ காலையிலும் மாலையிலும் தமக்கு உணவு எடுத்துக் கொண்டு தம்மைப் பார்க்க வந்ததை ஜனாதிபதி இங்கு நினைவுகூர்ந்துள்ளார்.


சத்துணவு நஞ்சாகியதில் 10 வயது மாணவி மரணம்

மேலும் 62 மாணவர் ஆஸ்பத்திரியில் அனுமதி: மாத்தளை சிங்கள மகா வித். பரிதாபம்



சத்துணவு விஷமாகியதால் பத்து வயது பாடசாலை மாணவி ஒருவர் மரணமடைந்துள்ளதாக மாத்தளைப் பொலிஸார் தெரிவிக்கின்றனர். இதனால் பாதிக்கப்பட்ட மேலும் 62 மாணவர்கள் மாத்தளை ஆதாரவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள் ளனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவர்களின் ஒரு சிலரின் நிலை கவலை க்கிடமாக உள்ளதென வைத்தியசாலை வட்டார ங்கள் தெரிவிக்கின்றன.

பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்ட சத்துணவை உண்டதையடுத்து மாணவர்கள் மயக்கமுற்றதாகவும் சிலர் வாந்தி எடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இறந்துபோன மாணவி மாத்தளை பலாபத்வெல புத்தகோஸ சிங்கள மகா வித்தியாலயத்தில் ஐந்தாம் ஆண்டில் கல்வி பயிலும் பத்து வயதுடைய தனஞ்சனி கமகே என பொலிஸார் தெரிவிக்கின்றனர். பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்கள் பலாபத்வெல புத்தகோஸ தொம்பவெல, கவட்டயாமுனை ஆகிய மூன்று பாடசாலை மாணவர்கள் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். மாத்தளை பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


கடன் வட்டி வீதம் குறைப்பால் கிராமிய பொருளாதாரத்துக்கு புத்தூக்கம்

இலங்கை வங்கியின் தலைவர்


கடன்களுக்கான வட்டி வீதம் குறைக்க ப்பட்டதையடுத்து கிராமிய பொருளாதாரம் புத்தூக்கம் பெற்றிருப்பதாக இலங்கை வங்கியின் தலைவர் கலாநிதி காமினி விக்கிரமசிங்க தெரிவித்தார்.

தொழில் முயற்சிகளுக்காகப் பெறப்படும் கடனுக்கான வட்டி 12% ஆகக் குறைக்கப்ப ட்டுள்ளது. இதனையடுத்து கிராமங்களில் பொருளாதார மேம்பாட்டுக்கான முயற்சிகள் புத்தூக்கம் பெற்றுள்ளன. புதிய புதிய தொழில் வாய்ப்புகளும் உருவாகின்றன. இதனால் கிராமத்தில் சலக மட்டத்திலும் பொருளாதாரத்துக்கான நகர்வுகள் சுறுசுறுப்படைந்துள்ளதென்று கலாநிதி விக்கிரமசிங்க தெரிவித்தார்.

இலங்கை வங்கி தலைமையக த்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் வேண்டுகோளுக் கமைய நாட்டின் பொருளாதார த்தில் ஒரு மலர்ச்சியை ஏற்படுத்துவ தற்கான சகல நடவடிக்கைகளையும் இலங்கை வங்கி மேற்கொண்டு ள்ளது.

புதிய புதிய துறைகளிலும் கால் பதித்து முதலீட்டுச் செயற்பாடுக ளையும் முன்னெடுக்கிது. இதன் மூலம் அரசாங்கத்தின் செயற்றி ட்டங்களுக்குக் கைகொடுப்பதற்கு இலங்கை வங்கி தயாராக உள்ளதென்றும் கலாநிதி காமினி விக்கிரமசிங்க தெரிவித்தார்.

புகடன்களுக்கான வட்டி வீதத்தை நான்கு தடவை குறைத்துள்ளோம். நாம் வட்டியில் தங்கியிருப்பதால் கடன்களுக்கான வட்டியைக் குறைத் ததால் தாக்கம் ஏற் பட்டது. எனினும் அதனைச் சமப்படுத்துவ தற்கான ஏனைய நடவடிக்கைகளை வெற்றிகரமாக மேற்கொண்டோம். கிராமத்தில் பெண்களை வலுவூட்டு வதற்காக ஆயினும் மகளிர் குழுக் களை அமைத்துச் செயற்படுத்துகின் றோம்பூ என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

வயிற்றுக்குள் ஹெரோயின் உருண்டைகள்;
மூன்று பாக். பிரஜைகள் மடக்கிப்பிடிப்பு



பாகிஸ்தானிலிருந்து இலங்கைக்கு ஹெரோயின் போதைப் பொருளை கடத்திவந்த மூன்று பாகிஸ்தானியர்களை சுங்கத்திணைக்களத்தினர் கைது செய்ததாக சுங்கத்திணைக்கள உதவிப் பணிப்பாளர் மாலி பியசேன தெரிவித்தார்.

ஹரோயின் போதைப்பொருளை உருண்டைகளாக விசேட பாதுகாப்பு உரையில் இட்டு விழுங்கியே ஹெரோயின் போதைப் பொருளை இலங்கைக்கு கடத்தி வந்துள்ளனர்.

சந்தேகத்திற்கிடமான இம்மூவரையும் சுங்கத் திணைக்களத்தினர் ஸ்கேன் செய்தபோதே வயிற்றுக்குள் ஹெரோயின் உருண்டைகள் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. சுமார் 40 க்கும் மேற்பட்ட ஹெரோயின் உருண்டைகள் நேற்று மாலை வரை கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கின்றனர்.

குழப்பத்தை ஏற்படுத்தி சமூக ஒற்றுமையை சீர்குலைக்க முயல்வோர் மீது கடும் நடவடிக்கை

மட்டக்களப்பு பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் மார்க்
சமூகங்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி சமூக ஒற்றுமையைச் சீர்குலைக்க முயல்கின்றவர்கள் மீது பொலிஸார் கடும் சட்ட நடவடிக்கை எடுப்பார்கள் என மட்டக்களப்பு பிராந்தியத்திற்குப் பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் மார்க் தெரிவித்தார்.

ஆரையம்பதி பிரதேசத்தின் சிகரம் கிராமத்திலுள்ள ஜும்ஆப்பள்ளிவாசலில் நேற்று முன்தினம் வியாழக்கிழமையன்று நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்துரையாற்றிய மட்டக்களப்பு பிராந்தியத்திற்குப் பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் மார்க்; இக்கிராமத்தின் மையவாடியில் அடக்கம் செய்யப்பட்டிருந்த இரண்டு மாதக் குழந்தையின் சடலம் தோண்டப்பட்டு காணாமற்போயுள்ளது.

இதையடுத்து இக்கிராமத்தில் பதற்ற நிலை தோன்றியுள்ளது. கடந்த இரண்டு தினங்களாக பொறுமை கார்த்தது போன்று பொதுமக்கள் தொடர்ந்து பொறுமை காக்க வேண்டும்.

இனங்களுக்கிடையில் ஒற்றுமையை ஏற்படுத்தி சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்ட பொலிஸார் தம்மாலான முழு முயற்சிகளையும் மேற்கொள்வார்கள் என்றார்.

இதேவேளை, ஆரையம்பதி சிகரம் கிராமத்திலுள்ள மையவாடியில் அடக்கம் செய்யப்பட்டிருந்த இரண்டு மாதக் குழந்தையின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு காணாமற்போன விடயம் தொடர்பாக மூன்று பேரை சந்தேகத்தின்பேரில் பொலிஸார் கைது செய்துள்ளதாக காத்தான்குடிப் பிரதேசத்துக்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஹேர்திவத்த தெரிவித்தார்.

கடந்த 10.02.2010 புதன்கிழமை அதிகாலை இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இதுவரையில் மூன்று பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.இது விடயத்தில் இன்னும் சில சந்தேகநபர்களை கைது செய்யவேண்டியுள்ள தாகவும் அச்சந்தேக நபர்கள் தேடப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்

இராணுவ வாகனம் விபத்து சாரதி உட்பட மூவர் காயம்


இராணுவ பயிற்சியில் ஈடுபட்டுள்ள இராணுவ வீரர்களுக்கு மதிய உணவினை வழங்கி விட்டு, தியத்தலாவை இராணுவ முகாமுக்கு திரும்பிக் கொண்டிருந்த இராணுவ வாகனம், ரிதிபான என்ற இடத்தில் விபத்துக்குள்ளானது. இச்சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றது.

இவ்விபத்தில், இராணுவ வாகனத்தில் வந்த சாரதி உட்பட மூன்று பேர் காயங்களுக்குள்ளாகி, பதுளை அரசினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, விசேட சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வேகமாக வந்து கொண்டிருந்த இராணுவ வாகனத்தின் சில்லுகள் இரண்டு கழன்றதினாலேயே, இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக, விசாரணைகளை மேற்கொண்ட பதுளைப் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்தின் போது இராணுவ வாகன சாரதி, வாகன இயந்திரத்திற்குள் சிக்கியதினால் பெரும் தீக்காயங்களுடன், ஆபத்தான நிலையில் இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அத். பொருட்களின் விலைக் கட்டுப்பாடு; தேவைகள்;



மாவட்டங்களின் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைக்கட்டுப்பாடு மற்றும் உணவுத் தேவைகள், உணவுப் பாதுகாப்பு குறித்து விசேட கூட்டமொன்று நேற்று கொழும்பில் நடைபெற்றது. வடக்கு, கிழக்கு உட்பட

நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட ங்களிலுமுள்ள மாவட்ட செயலா ளர்கள் இதில் கலந்து கொண்டனர்.

நிதி அமைச்சின் செயலாளரின் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் ஒவ்வொரு மாவட்டங் களினதும் உணவுத் தேவை மற்றும் அந்தந்த மாவட்டங்களில் உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட் களின் தொகை அத்துடன் உணவுப் பாதுகாப்பு குறித்தும் ஆராயப்பட்டு ள்ளது.

நேற்று முன்தினம் ஆரம்பமான இக்கூட்டம் நேற்றும் நடைபெற்றது. ஒவ்வொரு மாவட்டத்திலுமுள்ள சனத் தொகைக்கு ஏற்றவாறு உண வைக் கையிருப்பில் வைத்திருப்பது தொடர்பாகவும், மேலதிக உணவை பற்றாக்குறை நிலவும் மாவட்ட த்திற்கு பகிர்ந்தளிப்பது குறித்தும் இக் கூட்டத்தில் ஆராயப்பட் டுள்ளது.


மேலும் இங்கே தொடர்க...