18 நவம்பர், 2011

நிலாவுக்கு சென்றவர்களால் கூட பயங்கரவாதத்தை ஒழிக்க முடியவில்லை: பிரதமர்


நிலாவுக்கு சென்றவர்களால் கூட பயங்கரவாதத்தை ஒழிக்க முடியாமல் போனது. ஆனால் இலங்கை, உள்நாட்டு பயங்கரவாதப் போரை பல சவால்களுக்கு மத்தியில் எதிர்கொண்டு வெற்றிகரமாக அழித்துள்ளது என்று பிரதமர் டி.எம். ஜயரத்ன தெரிவித்தார்.

இன்று பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்ற விசேட நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

வெள்ளைக்கொடி விவகார வழக்கில்சரத் பொன்சேகாவிற்கு மூன்று வருட சிறை


வெள்ளைக்கொடி விவகார வழக்கில் முன்னாள் இராணுவத்தளபதியும் கூட்டுப்படைகளின் பிரதானியுமான ஜெனரல் சரத்பொன்சேகாவை குற்றவாளியாக இனங்கண்ட நீதிபதிகள் குழு அவருக்கு 3 வருட சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.

அவருக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களத்தினால் மூன்று குற்றச்சாட்டுகளை முன்வைத்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பை கொழும்பு மேல் நீதிமன்ற நீதவான் தீபாலி விஜயசுந்தர இன்று வெள்ளிக்கிழமை வாசித்தார்.

வடக்கில் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது வெள்ளைக்கொடியுடன் சரணடைவதற்கு வருகை தந்த விடுதலைப்புலிகள் அமைப்பைச்சேர்ந்த முக்கியஸ்தர்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் உத்தரவின் பேரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக முன்னாள் இராணுவத்தளபதி சரத்பொன்சேகா கூறியதாக சண்டே லீடர் பத்திரிகையில் வெளியான செய்தி தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணையே ட்ரயல் அட்-பார் முறையில் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது.

மேல் நீதிமன்ற நீதிபதி தீபாலி விஜயசுந்தர தலைமையிலான எச்.என்.பி.பி வராவௌ, சர்பிக் ரஷீன் ஆகிய நீதிபதிகள் குழு முன்னிலையில் நடைபெற்றது.

மேற்படி வெள்ளைக்கொடி வழக்கினால் நீதிமன்றத்தை அண்மித்த பகுதிகளில் பாதுகாப்பு கடமையில் ஆயிரத்துக்கு மேற்பட்ட பொலிஸார் குவிக்கப்பட்டிருந்ததுடன் தீவிர சோதனை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.மேலும் இங்கே தொடர்க...

பொன்சேகாவின் ஆதரவாளர்கள் நீதிமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம்பொன்சேகாவின் ஆதரவாளர்கள் நீதிமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

வெள்ளைக்கொடி விவகார வழக்கில் முன்னாள் இராணுவத்தளபதியும் கூட்டுப்படைகளின் பிரதானியுமான ஜெனரல் சரத்பொன்சேகாவிற்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ஐந்தாயிரம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டமையையடுத்தே இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
மேலும் இங்கே தொடர்க...

17 நவம்பர், 2011

உதட்டோடு உதடு முத்தமிடும் பிரபலங்கள்: சர்ர்சையைக் கிளப்பியுள்ள புதிய விவகாரம்


இத்தாலியைச் சேர்ந்த பிரபல 'பெனிட்டன்' என்ற ஆடை நிறுவனம் வெளியிட்டுள்ள விளம்பரங்கள் சில பலத்த சர்ச்சையைக் கிளப்பியுள்ளன.

இதில் ஒரு விளம்பரத்தில் கத்தோலிக்க மதத் தலைவர் போப் எகிப்து இமாம் ஒருவருடன் உதட்டோடு உதடு முத்தமிட்டுக் கொள்வது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது.

இன்னொரு விளம்பரத்தில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவும், சீன ஜனாதிபதி ஹூஜிண்டாவோவும் உதட்டோடு உதடு முத்தம் கொடுத்துக் கொள்வது போன்று உள்ளது.

மேலும் ஒபாமா, ஹூகோ சாவேஸை முத்தமிடுவது போலவும், சர்கோஸி ஏஞ்சலா மேர்கலை முத்தமிடுவது போலவும், வடகொரியத் தலைவர் கிம் ஜொங்கும் தென்கொரிய ஜனாதிபதி மயுங்கும் முத்தமிடுவது போலவும் விளம்பரங்களை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

மசஏஅபஉ" (வெறுப்பில்லை) என்ற தொனிப்பொருளில் கிரபிக்ஸ் கலை மூலம் இவ்விளம்பரத்தை உருவாக்கி அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதேபோல இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பாலஸ்தீனத் தலைவர் முகம்மது அப்பாஸ் ஆகியோர் முத்தமிடும் நிலையில் உள்ள விளம்பரத்தினையும் அந்நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த விளம்பரங்களை இத்தாலியின் முக்கிய இடங்களில் வைத்துள்ளதோடு, உலகம் முழுவதும் கொண்டு செல்லவும் திட்டமிட்டுள்ளது.

இந்த விளம்பரங்கள் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

போப்பின் புகைப்படத்தினை உபயோகித்தமைக்காக வத்திக்கான கடும் கண்டனத்தினை தெரிவித்துள்ளது.

மேலும் பல நாடுகள் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.மேலும் இங்கே தொடர்க...

அஷ்ரப் நகர் காணிப்பிரச்சினை: உரிய ஆவணங்கள் வைத்திருப்போர் வெளியேற்றப்படமாட்டார்கள் அமைச்சர் ஹக்கீமிடம் வனபாதுகாப்பு அதிகாரி உறுதி

அம்பாறை மாவட்டத்தில் சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் அஷ்ரப் நகரின் காணிப் பிரச்சி னையை பொறுத் தவரை அங்கு சட்ட பூர்வமாக வசிப்பவர்களும், சட்ட ரீதியான உறுதிப் பத்திரங்களை யும், உரிய ஆவணங்களையும் தம் வசம் வைத்திருப்போரும் அங்கிருந்து வெளியேற்றப்பட மாட்டார்கள் என்றும் அம்மாவட்டத்திற்கு பொறுப்பான வனப் பாதுகாப்பு அதிகாரி லலித் கமகே. நீதியமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங் கிரஸ் தலைவ ருமான ரவூப் ஹக்கீமிடம் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ஹக்கீமுக்கும், அம்பாறை மாவட்ட வன பாதுகாப்பு அதிகாரி லலித் கமகேயிற்கும் இடையிலான இந்தச் சந்திப்பு கொழும்பில் அமைச்சரின் இல்லத்தில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் இடம்பெற்றது.

இந்தச் சந்திப்பை தொடர்ந்து அடுத்த கட்டமாக வன பாதுகாப்பு உயர் அதிகாரி லலித் கமகே உடன் அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தலைவர் ஏ.எல்.எம். நகூர் மற்றும் ஒலுவில் பள்ளிவாசல் நிருவாக சபையினர் சந்தித்து கலந்துரையாடவும், பின்னர் வன வள பாதுகாப்பு அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா, தாம் உயர் அதிகாரிகள் மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டிருப்பதாகவும் அவசியமேற்படின் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாண்கவும் அமைச்சர் ஹக்கீம் தெரிவித்தார்.

இந்தச் சந்திப்பின் போது மாவட்ட வனப் பாதுகாப்பு அதிகாரி வரைபடங்கள் மற்றும் ஆவணங்கள் சகிதம் அமைச்சர் ஹக்கீமிடம் சம்பந்தப்பட்ட பிரதேசத்தில் நில அமைப்பை விளக்கிக் கூறியதோடு, சர்ச்சைக்குள்ளாகியுள்ள இடங்களையும் சுட்டிக்காட்டி விபரித்தார். சட்ட விரோதமான குடியிருப்புகளே பிரச்சினையை ஏற்படுத்தக் கூடியன எனவும் அவர் கூறினார்.

சம்பந்தப்பட்ட பிரதேசத்தில் மிக நீண்டகாலமாக வசிப்போர் சட்ட பூர்வமான உறுதிப்பத்திரங்களையும் ஆவணங்களையும் வைத்திருப்பதாகவும், அவர்களை அங்கிருந்து வெளியேற்ற மேற்கொள்ளப்படும் முயற்சி குறித்து மக்கள் அச்சமடைந்துள்ளதாகவும், அதன் விளைவாக பதற்ற நிலை தோன்றியுள்ளதாகவும், அவ்வாறான நடவடிக்கை கைவிடப்பட வேண்டுமென்றும் அமைச்சர் ஹக்கீம் வனப் பாதுகாப்பு அதிகாரியிடம் கூறினார்.

குறிப்பிட்ட பிரதேசத்தில் இராணுவ முகாம் அமைக்கப்படுவது பற்றி அமைச்சர் ஹக்கீம் கூறியபோது, அது தற்காலிகமான தென்று தெரிய வருவதாக வனப் பாதுகாப்பு அதிகாரி பதிலளித்தார். படையினர் அங்கு நிலைகொண்டுள்ளது பற்றி அமைச்சர் தெரிவித்த போது அண்மையில் அப் பகுதி மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தை அடுத்து இராணுவத்தினரது எண்ணிக்கை அப் பிரதேசத்தில் சற்று அதிகரிக்கப்பட்டிருப்பதாக அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை இரவு நிந்தவூரில் தமக்கும், அஷ்ரப் நகரில் காணிப் பிரச்சினை காரணமாக பாதிப்புக்குள்ளாகி இருக்கும் மக்களுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பை தொடர்ந்து, மறு நாள் சனிக்கிழமை தாம் அப்பிரதேசத்திற்கு நேரில் சென்று இராணுவ பிரிகேடியர் சூள அபய நாயக்க மற்றும் கொமாண்டர் உஷான் ஆகியோரை அங்கு வரவழைத்து வன பாதுகாப்பு அதிகாரியுடனும் சம்பந்தப்பட்ட அமைச்சருடனும் கலந்தாலோசித்து இப் பிரச்சினைக்கு சுமுகமான தீர்வை காணும் வரை அம் மக்களை வற்புறுத்தி வெளியேற்ற வேண்டாம் என்றும் கூறியதாகவும் தெரிவித்தார்.

சர்ச்சைக்குரியதென கூறப்படும் பிரதேசம் எழுபத்தாறு ஏக்கர் விஸ்தீரணத்தை கொண்டது என்றும், அந்த காணிகளுக்கு சொந்தமான பதினாழு குடும்பத்தினரில் ஏழு குடும்பத்தினர் சம்பந்தப்பட்ட வழக்கில் அவர்களுக்கு சாதகமான தீர்வுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் ஏனைய ஏழு குடும்பத்தினர் சம்பந்தப்பட்ட வழக்குகள் விசாரணையில் இருப்பதாகவும் நீதியமைச்சர் ஹக்கீம் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

இவ்வாறான சூழ்நிலையில் அத்தகையோரை அங்கிருந்து வெளியேற்றுவதற்கு முயற்சி மேற்கொள்ளப் படுமானால், அது முற்றிலும் அநீதியானதென்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

2 மணி நேரத்தில் அடையாள அட்டை ஜனவரி முதல் புதிய நடைமுறை இரட்டைப் பிரஜகீவுரிமை உள்ளோருக்கும் வசதி தாயகம் திரும்புவோரும் விண்ணப்பிக்கலாம்'ஒரே நாள்' சேவையின் கீழ் இரண்டு மணி நேரத்தில் தேசிய அடையாள அட்டை வழங்கும் நடவடிக்கை 2012 ஜனவரி மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் ஜகத் பீ. விஜேவீர தெரிவித்தார்.

தினமும் சுமார் 1000 பேர் ஒரே நாள் சேவையின் கீழ் அடையாள அட்டையை பெற்றுக் கொள்வதற்காக திணைக்களத்துக்கு வருகை தருகின்றனர். திணைக்களத்தின் ஏனைய கருமங்களுடன் ஒரே நாள் சேவை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது காலதாமதம் ஏற்படுவதுடன் விண்ணப்பதாரிகளும் அசெளகரியங்களுக்குள்ளாகின்றனர்.

இதன் காரணமாக திணைக்கள பிரதேச கட்டடத்துடன் கூடிய புதிய கட்டடத்தினுள் ஒரே நாள் சேவை மையம் அமையவுள்ளது.

விண்ணப்பதாரிகளின் படிவங்களை பெற்றுக்கொள்வது முதல் அடையாள அட்டையை வழங்குவது வரை இலத்திரனியல் முறையில் இலக்கங்கள் வழங்கப்படும். திரையில் தமக்குரிய இலக்கம் தெரிந்தவுடன் விண்ணப்பத்தை ஒப்படைக்கலாம். அதேபோன்று புதிய அடையாள அட்டை 2 மணி நேரத்துள் தயாரானவுடன் விண்ணப்பதாரிக்குரிய இலக்கம் திரையில் தெரிவிக்கப்படும்.

உரிய விண்ணப்பதாரி கால் கடுக்க நீண்ட நேரம் வரிசையில் நிற்க வேண்டிய தேவை ஏற்படமாட்டாது. தினமும் பிற்பகல் 2.00 மணி வரை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் ஆட்பதிவு ஆணையாளர் ஜகத் பீ. விஜேவீர தெரிவித்தார்.

கொழும்பு - 05 கெப்பிட்டிபொல மாவத்தையிலுள்ள ஆட்பதிவு திணைக்களத்தில் நேற்று விசேட செய்தியாளர் மாநாடொன்று நடைபெற்ற போதே ஆணையாளர் ஜகத் பீ. விஜேவீர மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதேவேளை புலம்பெயர்ந்துள்ள இலங்கையர் தாம் இரட்டைப் பிரஜாவுரிமையை பெற்றிருந்தால் தேசிய அடையாள அட்டையை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் ஜகத் பி. விஜேவீர தெரிவித்தார்.

அத்துடன் தமிழகத்திலிருந்து நாடு திரும்பும் தமிழர்களும் தேசிய அடையாள அட்டைக்காக விண்ணப்பிக்க முடியும் என அவர் தெரிவித்தார்.

புலம்பெயர்ந்துள்ள எமது இலங்கையர்கள் இரட்டைப் பிரஜாவுரிமை பெற்றிருக்காவிடின் அதற்காக விண்ணப்பித்த பின்னர் பிரஜாவுரிமை கிடைத்த தினத்திலிருந்து அவர் தேசிய அடையாள அட்டையை பெற தகுதியுடையவராக கருதப்படுவார். இரட்டை பிரஜாவுரிமை பெற்றுக்கொண்ட ஒருவர் ஆட்பதிவு திணைக்களத்தின் 009411583122, 009411585043 என்ற தொலைபேசி இலக்கத்துடன் அல்லது 0094 11 593634, 009411583190 என்ற பெக்ஸ் இலக்கத்தின் மூலமோ அல்லது (info@rpd.gov.lk) என்ற ஈமெயில் ஊடாகவோ தொடர்புகொண்டு அறிய முடியும் எனவும் ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் தெரிவித்தார்.

இதேபோன்று தமிழகத்திலிருந்து நாடு திரும்பும் இலங்கையர் தாங்கள் நாடு திரும்பியதற்கான கப்பல் மூலம் அல்லது விமானம் மூலம் ஆவணத்துடன் தாங்கள் வதியவிருக்கும் பகுதி பிரதேச செயலாளரூடாக தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க முடியும் என்றும் ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

நோர்வே அறிக்கையை ஆராய்ந்ததன் பின்னரே நிலைப்பாட்டை அறிவிக்கலாம்: ஐ.தே.க.

இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட சமாதான பேச்சுவார்த்தைகளின் தோல்வி தொடர்பில் நோர்வேயில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையை ஆராய்ந்துகொண்டிருக்கின்றோம். அறிக்கையை ஆராய்ந்ததன் பின்னரே அது தொடர்பில் கருத்து வெளியிட முடியும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளரும் எம்.பி. யுமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

இலங்கை சமாதான பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தமை தொடர்பில் நோர்வேயில் அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கை தொடர்பில் விபரிக்கையிலேயே திஸ்ஸ அத்தநாயக்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...

என்னை வீட்டுக்கு அழைத்துச் செல்லுங்கள் "கண்ணீருடன் பெற்றோரிடம் கூறிய ரிஸானா

குழந்தையொன்றைக் கொலை செய்ததாகக் கூறி சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கைப் பணிப்பெண்ணான ரிஸானாவை அவரது பெற்றோர்கள் சந்தித்தபோது, 'என்னை வீட்டுக்கு அழைத்துச் செல்லுங்கள்" என்று அழுது கொண்டே கெஞ்சியுள்ளார்.

தனது தந்தை மற்றும் தாயைக் கண்ட ரிஸான இருவரையும் கட்டிப்பிடித்து கதறி அழுதுள்ளார். எல்லாம் வல்ல அல்லாஹ் எனது குழந்தையைத் திரும்பப் பெற வழி செய்வார் என ரிஸானாவின் தாய் இதன்போது கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரிஸானாவைக் காப்பாற்ற வேண்டுமாயின் அது குழந்தையைப் பறிகொடுத்த பெற்றோரினால் மாத்திரமே முடியும் என்று சட்ட வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். ரிஸானா இலங்கையை விட்டுச்சென்றபின் முதன்முதலாக நேரில் சந்திப்பதற்கு சந்தர்ப்பம் கொடுத்தமைக்கு நன்றியும் தெரிவித்துள்ளனர்.

ரிஸானாவைக் காப்பாற்றும் பொருட்டு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைவர் கிங்ஸிலி ரணவக்க, வெளிவிவகார அமைச்சின் மேலதிகச் செயலாளர் இப்ராஹிம் அன்சார் மற்றும் மொஹமட் றொப் உட்பட பலர் ரியாத்துக்குச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

வட, கிழக்கு மீள்குடியேற்றத்துக்காக 1336 மில்லியன் ரூபா ஒதுக்கீடு: கெஹலிய

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 97 வீதமானோர் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர். மேலும் 3110 குடும்பங்கள் மீள்குடியேற்றப்பட உள்ளதோடு மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்காக ஆயிரத்து 336 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் சற்றுமுன் நடைபெற்ற அமைச்சரவையின் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே மேற்கண்ட தீர்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவில் ஆயிரத்து 672 குடும்ங்களும் திருகோணமலை மூதூர் பகுதியில் 1272 குடும்பங்களும் மன்னாரில் 166 குடும்பங்களும் மீள்குடியேற்றப்பட உள்ளன.
மேலும் இங்கே தொடர்க...

வெள்ளைக்கொடி வழக்கு வெள்ளியன்று தீர்ப்புமுன்னாள் இராணுவத்தளபதியும் கூட்டுப்படைகளின் பிரதானியுமான ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களத்தினால் மூன்று குற்றச்சாட்டுகளை முன்வைத்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நாளை வெள்ளிக்கிழமை வழங்கப்படவிருக்கின்றது.

வடக்கில் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது வெள்ளைக்கொடியுடன் சரணடைய வந்த விடுதலைப் புலிகள் அமைப்பைச்சேர்ந்த முக்கியஸ்தர்கள் பாதுகாப்பு அமைச்சு செயலாளரின் உத்தரவின் பேரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா கூறியதாக சண்டே லீடர் பத்திரிகையில் வெளியான செய்தி தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணையே ட்ரயல் அட்-பார் முறையில் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

மேல் நீதிமன்ற நீதிபதி தீபாலி விஜயசுந்தர தலைமையிலான எச்.என்.பி.பி வராவெல, சர்பிக் ரஷீன் ஆகிய நீதிபதிகள் குழு முன்னிலையில் நடைபெற்ற மேற்படி வழக்கின் தீர்ப்பை நாளை வெள்ளிக்கிழமை வழங்குவதற்கு நீதிபதிகள் குழு 2011 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 18 ஆம் திகதி தீர்மானித்தது.
மேலும் இங்கே தொடர்க...

16 நவம்பர், 2011

மீள்குடியமர்த்தப்படாதிருக்கும் மக்கள் : அரசின் திட்டமிட்ட சதி என்கிறார் யோகேஸ்வரன்


அம்பாறை மாவட்டத்துக்குட்பட்ட தங்கவேலாயுதபுரம்இ கஞ்சிகுடிச்சாறு ஆகிய பிரதேச மக்களை மீள்குடியேற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டு. மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ. யோகேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

லண்டன் நலன்புரிச் சங்கத்தின் உதவிக்கரம் அமைப்பின் அனுசரணையில் மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு தங்கவேலாயுதபுரம் பாடசாலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்இ தங்கவேலாயுதபுரத்தில் இருந்து 425 குடும்பங்களும்இ கஞ்சிக்குடிச்சாறு கிராமத்திலிருந்து 406 குடும்பங்களும் இடம்பெயர்ந்துள்ளன. இவர்கள் இன்னும் மீள்குடியேற்றப்படவில்லை. இந்நிலையில் அரசாங்கம்இ கிழக்கு மாகாணத்திலிருந்து இடம்பெயர்ந்த அனைத்து மக்களையும் மீள்குடியேற்றிவிட்டோம் என சர்வதேசத்துக்கும் அறிவித்துள்ளது. இது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.

நாட்டில் சமாதானம் மலர்ந்துள்ள இக்காலப் பகுதியில் இப்பகுதி மக்கள் இதுவரை மீள்குடியேற்றப்படாதுள்ளமை அரசின் திட்டமிட்ட சதி நடவடிக்கை என்றே கருத வேண்டியுள்ளது.

ஆகவேஇ மேற்படி கிராமங்களில் சகல அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தி அம்மக்களை அங்கு மீள்குடியமர்த்த அரசாங்கம் துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென வேண்டுகோள் விடுக்கின்றேன் எனவும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

மறைந்த தோழர் சிவதாசன் அவர்களுக்கு புளொட் அஞ்சலி-

தோழர் சிவதாசன் அவர்களின் மறைவையொட்டி அன்னாருக்கு புளொட் அமைப்பு தனது அஞ்சலியினைத் தெரிவித்துக் கொண்டுள்ளது.
தோழர் சிவதாசன் அவர்கள் தனது இளம்பராயத்திலேயே பொதுவுடமைக் கொள்கையினால் ஈர்க்கப்பட்டு இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டு இடையறாது ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல்கொடுத்து வந்தவர். அத்துடன் தொழிற்சங்க இயக்கத்திலும் தொழிலாளர் நலன்சார்ந்த போராட்டங்களிலும் அவர் ஆற்றிய பங்கு அளப்பரியது. தீண்டாமைக்கெதிரான போராட்டங்களில் மிகவும் தீவிரமாக ஈடுபட்ட தோழர் சிவதாசன் அவர்கள் தனது இறுதி மூச்சுவரை தான் கொண்டிருந்த கொள்கையினின்று வழுவாது இயங்கியவர்.
80களில் தமிழ்த்தேசிய விடுதலைப் போராட்டம் முனைப்புப் பெற்றிருந்த வேளையில் அவர் தன்னை முற்போக்கு சக்திகளுடன் இணைத்துக்கொண்டு இயங்கினார். முதலாவது வடக்கு-கிழக்கு மாகாணசபையிலும் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியில் இணைந்து இரண்டு தடவைகள் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டிருந்தார் அவ்வேளைகளில் அடித்தட்டு மக்களுக்கு தன்னாலான அனைத்து உதவிகளையும் தான் சார்ந்த அமைப்பின் ஊடாக செய்துவந்தார். சிறந்த அரசியல் அனுபவம் கொண்டவரும், அடித்தட்டு வர்க்க மக்களின் சிறப்பான வாழ்வுக்காக பல்வேறு நெருக்குவாரங்களுக்கும் மத்தியிலும் அயராது தன்னை ஈடுபடுத்தி வந்தவருமான தோழர் சிவதாசன் அவர்களின் மறைவு சமூகத்திற்கு ஒரு பேரிழப்பாகும்.
அன்னாருக்கு புளொட் அமைப்பினராகிய நாம் எமது இதய அஞ்சலிகளைத் தெரிவிப்பதுடன், அன்னாரின் மறைவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அவர் சார்ந்த கட்சியினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.
மேலும் இங்கே தொடர்க...

கொழும்பு பல்கலைக்கழக வளவுக்குள் பிரவேசிக்க விஞ்ஞான பீடத்தினருக்குத் தடை

கொழும்பு பல்கலைக்கழகத்தின் கலை மற்றும் விஞ்ஞான பிரிவு மாணவர்களுக்கு நேற்று 15ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பகல் 12 மணி முதல் பல்கலைக்கழக வளவுக்குள் உட்பிரவேசிக்கத் தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது என்று பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட மாணவர் ஆலோசகர் பேராசிரியர் பிரேம குமார டி சில்வா தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் இரவு கொழும்பு பல்கலைக்கழக கலை மற்றும் விஞ்ஞான பிரிவு மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் மோதலில் முடிந்து மூன்று மாணவர்கள் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதனால் பல்கலைக்கழகத்தில் முறுகல் நிலை ஏற்படுவதைத் தவிர்க்க இரு பீட மாணவர்களுக்கும் பல்கலைக்கழக வளவுக்குள் பிரவேசிக்க நேற்று தடை விதிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அமைதியை நிலை நாட்ட பல்கலைக்கழக வளாகத்தில் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...