அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தேடப்படும் குற்றிவாளியா என சென்னை உயர் நீதிமன்றம் எதிர்வரும் நவம்பர் 2 ஆம் திகதி தீர்ப்பு வழங்க உள்ளது.
சென்னையில் 24 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொலை வழக்கில் டக்ளஸ் தேவானந்தா மீது குற்றச்சாற்று பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்த வழக்கில் ஆஜராகாததால் தேடப்படும் குற்றவாளியாக டக்ளஸ் தேவானந்தா நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டார்.
சமீபத்தில் டெல்லி வந்த டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை நடந்து கொண்டிருந்தபோது இலங்கை சென்று விட்டார் டக்ளஸ் தேவானந்தா.
இந்நிலையில்இ தேடப்படும் குற்றவாளி என அறிவித்ததை நீக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா மனுத் தாக்கல் செய்தார்.
இந்த மனு மீதான விசாரணை இன்று முடிந்ததைத் தொடர்ந்து தீர்ப்பை நவம்பர் 2ஆம் தேதிக்கு நீதிபதி அக்பல் அலி தள்ளிவைத்துள்ளார்