வவுனியா
நலன்புரி முகாம்களில் தற்போதைய நிலைமையில் 17 ஆயிரத்து 677 பேர் மட்டுமே தங்கியுள்ளனர்.
தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு நிலைமைக்கு தீர்வுகண்டதும் முகாம்களில் எஞ்சியுள்ள மக்களை முடியுமானவரை விரைவில் மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று மீள்குடியேற்ற அமைச்சர் குணரட்ன வீரக்கோன் தெரிவித்தார்.
கொழும்பில் அமைந்துள்ள மீள்குடியேற்ற அமைச்சில் நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
அமைச்சர் அங்கு மேலும் கூறியதாவது:
என்மீது பாரிய நம்பிக்கை வைத்து ஜனாதிபதி இந்த பதவியை எனக்கு வழங்கியுள்ளார். சர்வதேச மட்டத்திலும் அடிக்கடி பேசப்படுகின்ற அமைச்சாக இது உள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்குதல் மற்றும் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றுதல் போன்ற வேலைத்திட்டங்களை எமது அமைச்சு மேற்கொண்டுவருகின்றது.
நான் கடந்த 2006 ஆம் ஆண்டிலிருந்தே இந்த மீள்குடியேற்றம் மற்றும் புனரமைப்பு தொடர்பில் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுடன் செயற்பட்டு வந்துள்ளேன். 30 வருடங்களக்ஷிக ஏற்பட்ட பிரச்சினையின் விளைவாக நேர்ந்த சேதங்களை புனரமைப்பது என்பது இலகுவான விடயமல்ல. எனினும் நாங்கள் செய்து வருகின்றோம். வவுனியா நலன்புரி முகாம்களில் தற்போதைய நிலைமையில் 17 ஆயிரத்து 677 பேர் மட்டுமே தங்கியுள்ளனர். தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு நிலைமைக்கு தீர்வு கண்டதும் முகாம்களில் எஞ்சியுள்ள மக்களை முடியுமானவரை விரைவில் மீள்குடியேற்ற முயற்சிப்போம்.
ஆரம்பத்தல் சுமார் 3 இலட்சம் மக்கள் நலன்புரி முகாம்களில் இருந்தமை உங்களுக்கு தெரியும். புலிகளிடம் மனித கேடயமாக இருந்த மக்களை இராக்ஷிணுவத்தினர் மீட்டனர். தமிழ்ச் செல்வனின் மனைவி என தெரிந்திருந்தும் அவரை மீட்டனர். அந்த வகையில் விரைவான முறையில் அதிகமான மக்கள் குடியேற்றப்பட்டுள்ளனர். ஈராக் ஆப்கானிஸ்தான் நாடுகளில் இடம்பெயர்ந்த மக்களுக்கான சேவைகளுடன் ஒப்பிடுகையில் எமது நாடு சிறப்பாக செய்துள்ளது. மக்களை விரைவாக மீள்குடியேற்றுவதில் நிலக்கண்ணிவெடிகளே தடையான விடயமாகவுள்ளது. அவற்றை முடியுமானவரை விரைவாக அகற்றி வருகின்றோம். நிலக்கண்ணிவெடி அகற்றல் தொடர்பான சான்றிதழ் கிடைத்ததும் மக்களை மீள்குடியேற்றுவோம்.
மீள்குடியேறும் மக்கள் தொடர்பில் காணிப் பிரச்சினைகள் உள்ளன. அவற்றை தீர்த்துவைக்க அரசாங்க அதிபர் மற்றும் பிரதேச செயலாளர்கள் நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர். இதற்காக நடமாடும் சேவைகளும் இடம்பெறுகின்றன. 30 வருட யுத்தகாலத்தின்போது மக்களினால் காணி உறுதிகளை பேணுவது கடினமான விடயமாகும். எனவே இவற்றுக்கும் தீர்வுகாணப்படவேண்டும்.
ஒன்றிணைந்து செயற்பட தயார்:
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் எம்.பி. க்களும் விஜயகலா மகேஷ்வரன் எம்.பி.யும் தொடர்ந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மீள்குடியேறிய மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் பாராளுமன்றத்தில் பேசி வருகின்றனர். எனவே அவர்களுடன் ஒன்றிணைந்து செயற்படவே நான் எதிர்பார்க்கின்றேன். ஒன்றிணைந்து செயற்பட்டால்தான் முன்னோக்கி செல்ல முடியும்.
இதேவேளை யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் புத்தளத்தில் தங்கியுள்ள முஸ்லிம் மக்கள் விரும்பினால் அவர்களை சொந்த இடங்களில் மீள்குடியேற்ற தயக்ஷிராக இருக்கின்றோம். ஆனால் அவர்களில் பெரும்பாலானோர் மீள்குடியேற விரும்பவில்லை என்றே தெரிகின்றது. புத்தளத்தில் அம்மக்களுக்கு 6000 வீடுகளை கட்டிக்கொடுக்கும் திட்டம் இடம்பெறுகின்றது. அவர்களின் தொழில் நடவடிக்கைகளும் இடம்பெற்றுவருகின்றன. வர்த்தகங்களிலும் ஈடுபடுகின்றனர். எனவே அவர்கள் மீண்டும் யாழ்ப்பாணம் செல்ல விரும்பவில்லை என்றே தெரிகின்றது. ஆனால் விரும்பினால் நாங்கள் மீள்குடியேற்றுவோம்.
மேலும் இந்தியாவின் தமிழகத்தில் தங்கியுள்ள சுமார் ஒரு இலட்சம் இலங்கை அகதி மக்கள் மீண்டும் இலங்கை வருவதானது இலங்கை மற்றும் இந்திய நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு இராஜதந்திர கலந்துரையாடல்களில் உள்ள விடயமாகும். ஆனால் தற்போது மக்கள் அங்கிருந்து வர ஆரம்பித்துள்ளதாக தெரிகின்றது. மக்கள் இங்கு வருவது ஆரம்பித்துவிட்டது என்று கூறலாம்.