26 செப்டம்பர், 2010

விடுதலை புலிகளின் சர்வதேச வலையமைப்பு தலைவர்களை ஒப்படைக்குமாறு நோர்வேயிடம் கோரிக்கை


விடுதலை புலிகளின் சர்வதேச வலையமைப்பு தலைவர்களை ஒப்படைக்குமாறு நோர்வேயிடம் கோரிக்கை விடுத்துள்ளார் இலங்கை ஜனாதிபதி! இது தொடர்பில் சிங்கள செய்தி தாள் ஒன்று விடுத்துள்ள செய்தியில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

வி.புலிகளின் சர்வதேச வலையமைப்பை இல்லாதொழிப்பதற்கு நோர்வே அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கும் என ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டுள்ளார். ஐ.நாவின் 65 வது மாநாட்டில் கலந்து கொண்ட போது நோர்வே பிரதமரை சந்தித்து இது தொடர்பான கோரிக்கையை விடுத்தார்.

அதற்கு பதில் அளித்த நோர்வே அதிபர் ஜேன்ஸ் டொலன் பெர்க் நோர்வேயில் இயங்கி வரும் வி.புலிகள் உறுப்பினர்கள் தொடர்பான தகவல்களை தமக்கு வழங்குமாறு மஹிந்தவிடம் கோரியுள்ளார்.

இது போன்று சர்வதேச பயங்கரவாத்தை இல்லாதொழிப்பதற்கு உலக தலைவர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார் என அச்செய்தி தெரிவிக்கின்றது.
மேலும் இங்கே தொடர்க...

இரட்டைகோபுர தாக்குதலுக்கு அமெரிக்கா தான் காரணம்: ஈரான் அதிபர்

நியூயார்க் இரட்டைக் கோபுரங்கள் மீது நடத்தப்பட்ட விமானத் தாக்குதலுக்கு அமெரிக்க அரசு தான் காரணம் என்று கூறி ஐக்கிய நாடுகள் சபையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் ஈரான் அதிபர் அகமதிநிஜாத். அவரது பேச்சைக் கண்டித்து அமெரிக்க குழுவினர் ஐ.நா.விலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

ஐ.நா. பொது சபை கூட்டத்தில் ஈரன் அதிபர் அகமதிநிஜாத் பேசியதாவது:-

2001ஆம் ஆண்டு அமெரிக்காவின் மாபெரும் உளவுப் பிரிவையும், பாதுகாப்பு வளையத்தை எல்லாம் மீறி நியூயார்க்கில் செப்டம்பர் 11 இரட்டைக் கோபுர தாக்குதலை அல்-கொய்தா தீவிரவாதிகள் நடத்தியதாகக் கூறுகின்றனர். ஆனால், அந்தத் தாக்குதலை நடத்தியதே அமெரிக்கா தான் என்று தான் உலகின் பெரும்பாலான மக்கள் நினைக்கின்றனர். உலகளவில் சரிந்து வரும் தனது செல்வாக்கை நிலை நிறுத்தவும், சரிந்து விட்ட தனது பொருளாதாரத்தை சரி செய்யவும், வளைகுடாவில் தனது ஆதிக்கத்தை மீண்டும் நிலைநாட்டி, இஸ்ரேலுக்கும் யூத சக்திகளுக்கும் உதவவும் அந்தத் தாக்குதலை திட்டமிட்டு அமெரிக்கா தான் நடத்தியது.

அமெரிக்க அரசில் உள்ள ஒரு சக்தி வாய்ந்த பிரிவினர் தான் இந்தத் தாக்குதலை நடத்தினர் என்று தான் பெரும்பாலான அமெரிக்க மக்களும், உலகின் பெரும்பாலான மக்களும், உலக அரசியல் தலைவர்களும் நினைக்கின்றனர் என்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறேன். அல்லது அந்தத் தாக்குதலை உண்மையிலேயே தீவிரவாதிகள் தான் நடத்தினர். ஆனால், அந்தத் தாக்குதலை தனது சுய லாபத்துக்காக பயன்படுத்திக் கொண்டது அமெரிக்கா என்றும் சொல்லலாம். இந்த நியூயார்க் தாக்குதலை முன் வைத்துத் தான், தீவிரவாதத்தை ஒழிக்கிறோம் என்று சொல்லிக் கொண்டு ஆப்கானிஸ்தான் மீதும் ஈராக் மீதும் அமெரிக்கா போர் தொடுத்தது. இதனால் நியூயார்க் தாக்குதல் குறித்து ஐ.நா. முழுமையான விசாரணை நடத்தி உண்மையில் என்ன நடந்தது என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.

தான் மட்டும் அணு ஆயுதங்களை குவித்து வைத்துக் கொண்டு, நாங்கள் (ஈரான்) அணு ஆயுதம் தயாரிக்கிறோம் என்று சொல்லிக் கொண்டு எங்களையும் அமெரிக்கா வம்புக்கு இழுத்து வருகிறது. அணு ஆராய்ச்சி விசயத்தில் நாங்கள் பேச்சுவார்த்தைக்குத் தயார். ஆனால், அது நேர்மையாகவும் மரியாதையுடனும் நடக்க வேண்டும். அடுத்த நாட்டுக்கு மரியாதை தராமல் செயல்பட்டால் பதிலுக்கு மரியாதை கிடைக்காது என்பதை அனைவரும் உணர வேண்டும். அதே போல ஈரான் மீது தொடர்ந்து பொருளாதாரத் தடைகளை விதித்து நமது வழிக்குக் கொண்டு வந்துவிடலாம் என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நினைத்தால் அதன் மீது கொஞ்ச நஞ்சம் உள்ள நம்பிக்கையும் போய்விடும். சர்வதேச அணு ஆராய்ச்சி மையத்தின் சட்டதிட்டத்துக்கு உட்பட்டே ஈரானிய ஆராய்ச்சிகள் நடக்கின்றன. மற்றபடி யாருடைய நெருக்குதலுக்கும் ஈரான் பணிந்ததில்லை, இனியும் பணியாது. இவ்வாறு அவர் பேசினார்.

அகமதிநிஜாத் இவ்வாறு பேசிக் கொண்டிருக்கும்போதே அமெரிக்க ஐ.நா. குழுவினர் வெளிநடப்பு செய்தனர். அவர்களைத் தொடர்ந்து பல ஐரோப்பிய நாடுகளின் தூதர்களும் குழுவினரும் வெளிநடப்பு செய்தனர்.
மேலும் இங்கே தொடர்க...

பெண் மீது பாலியல் பலாத்காரம் புரிய முயன்ற கான்ஸ்டபில் கைது

கண்டி மாவடத்;திலுள்ள தவுலகலை பொலிஸ் நிலைய கான்ஸ்டபில் ஒருவர் இன்று காலை தனிமையில் வீட்டிலிருந்த பெண் ஒருவர் மீது பாலியல் பலாத்காரம் புரிய முட்பட்டார் என்ற குற்றச் சாட்டில் கைது செய்யப் பட்டுள்ளார்.

விசாரணை ஒன்றிற்காக வீடொன்றிற்குச் சென்ற சமயம் தனிமையில் இருந்த அப் பெண்மீது மேற்படி கான்ஸ்டபில் தவறாக நடக்க முற்பட்டதாக அப் பெண் செய்த முறைப்பாட்டை அடுத்தே பொலிஸ் குறித்த கான்ஸ்டபிளை கைது செய்துள்ளதோடு மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
மேலும் இங்கே தொடர்க...

இந்திய இலங்கை கடற்படைகளின் அதிகாரிகள் 29 ஆம் திகதி சந்திப்பு

இந்தியக் கடற்படை மற்றும் கடலோரக் காவல்படையுடனான சந்திப்பு எதிர்வரும் 29ஆம் திகதி நடைபெறும் என்று இலங்கைக் கடற்படைப் பேச்சாளர் கப்டன் அதுல சேனரத் தெரிவித்துள்ளார்.

இந்தச் சந்திப்பு, இந்திய இலங்கைக் கடல் எல்லையில் இந்தியக் கடற்படைக் கப்பல் ஒன்றில் இடம்பெறவுள்ளது. இலங்கைக் கடற்படையின் உயர்மட்டத் தளபதிகள் பலர் இந்திய கடற்படைத் தளபதிகளுடன் இதன்போது பேச்சு நடத்தவுள்ளனர்.

தமிழ்நாடு மீனவர்கள் தாக்கப்பட்டது தொடர்பான விடயங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்தும் இந்தச் சந்திப்பில் கலந்துரையாடப்படவுள்ளது. இது வருடத்தில் இரண்டு முறை நடைபெறுகின்ற வழக்கமானதொரு சந்திப்புத்தான் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

அதுவேளை முன்னதாக இலங்கைக் கடற்படையை அவசர சந்திப்புக்கு அழைத்திருப்பதாகவும், இதன்போது தமிழ்நாடு மீனவர்கள் தாக்கப்படுவது தொடர்பாக பேசப்படவுள்ளதாகவும் மண்டபத்திலுள்ள இந்தியக் கடலோரக் காவல்படை கட்டளை அதிகாரி சைனி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

அமைச்சர் பசில் இன்று மட்டு. விஜயம்


உலக சுற்றுலா தினத்தையொட்டி பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இன்று மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்கிறார். இவர் சுமார் 10 கோடி ரூபாய் செலவிலான அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்து வைப்பார்.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் ‘நெக்டெப்’ திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீட்டிலிருந்து இவ் அபிவிருத்திப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு நகரில் சுமார் 3 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட வாவியோர சுவர், கல்லடி கடற்கரையில் 3 கோடி ரூபாய் செலவில் நிர்மாணிக்கப் பட்டுள்ள நடைபாதைக் கூடாரம் மற்றும் சிறுவர் விருந்தகம் உட்பட பல உல்லாசப் பயணிகளைக் கவரும் இடங்களை அவர் திறந்து வைப்பாரென மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

தமிழ் தலைவர்களை சரியான பாதையில் வழிநடத்தி ஜனாதிபதி ஒன்றுபடுத்துவார் நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் வன்னி மக்கள் நம்பிக்கை தெரிவிப்பு


தமிழ் அரசியல் தலைவர்கள் மக்க ளைத் தவறாக வழி நடத்திவிட்ட தாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அவர்களைச் சரியாக வழிநடத்தி ஒன்றுபடுத்துவாரெனத் தாம் திடமாக நம்புவதாக நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்த வன்னி மக்கள் தெரிவித்தனர்.

அரசியலமைப்பில் திருத்தங்களைச் செய்யக் கூடிய பெரும்பான்மை பலத்தை ஜனாதிபதி கொண்டிருக் கிறார். எனவே, இந்தப் பிரச்சி னையைத் தீர்ப்பதற்கும் ஜனாதி பதியால் முடியும் என்றும் பூநகரியில் சாட்சியமளித்த விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தரான நடராசா சுந்தரமூர்த்தி தெரிவித்தார்.

புலிகளின் பிடியிலிருந்து மீண்டு வந்தபோது தமக்கு ஏற்பட்ட அனுபவங்களை விபரித்த அவர், மக்களைத் தவறாக வழிநடத்தி யவர்கள் தண்டிக்கப்பட வேண்டு மெனக் கோரிக்கை விடுத்தார்.

கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் பற்றிய ஆணைக்குழுவின் பகிரங்க அமர்வு பூநகரி பிரதேச செயலகத்தில் அண்மையில் நடைபெற்றபோது சாட்சி யமளித்த சுந்தரமூர்த்தி ஆணைக்குழுவின் தலைவரும் உறுப்பினர்களும் எழுப்பிய கேள்விகளுக்கும் பதில் அளித்தார்.

அவர் மேலும் சாட்சியமளிக்கையில், “நாம் இலங்கையர்களாக வாழ வேண்டு மாயின் எமக்கு உரிமைகள் வேண்டும். சமூக, கலாசார, பொருளாதார உரிமைகள் வழங்கப்பட வேண்டும். எமது அரசிய லமைப்பில் இன, மத சார்பு அல்லாத நாடாகப் பிரகடனப்படுத்த வேண்டும்.

அப்போது தான் ஐக்கிய இலங்கையைக் கட்டியெழுப்ப முடியும். இலங்கையின் தன்னாதிக்க இறைமையில் எமக்கும் பங்கு தேவை. ஜே. ஆர்., பிரேமதாச, சந்திரிகா ஆகியோர் தீர்வொன்றைக் கண்டிருந்தால் வன்னி மக்கள் இந்தத் துன்பத்தை அனுபவித்திருக்க மாட்டார்கள்.

எங்கள் தலைவர்களான அமிர்தலிங்கம், சம்பந்தம் ஆகியோரும் எம்மைத் தவறாக வழிநடத்தி உள்ளார்கள். எமது தமிழ்த் தலைவர்களை ஒன்றுபடுத்த ஜனாதிபதியால் முடியும். நாம் இனிமேலாவது நிம்மதியாக வாழ இந்த ஆணைக்குழுவின் பரிந்துரைகள் வழிவகுக்கும் என நம்புகிறேன்.

என் இளம் பராயத்தில் சன்சோனி ஆணைக்குழு விசாரணைகளைப் பார்த்திருக்கிறேன். அதன் பின்னர் பல குழுக்கள் அமைக்கப்பட்டன. ஆனால், எந்தப் பயனும் ஏற்படவில்லை. அந்த நிலை இந்தக் குழுவுக்கு ஏற்பட்டு விடக் கூடாது” என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

இந்தியா வழங்கும் 6000 வீடுகளைக் கொண்டு இவ்வருட இறுதிக்குள் ஆரம்பம்


மலையகப் பெருந்தோட்டங்களில் உள்ள தொழிலாளர்களின் ‘லயன்’ வரிசைக் குடியிருப்புகளை இடித் தழித்துவிட்டுத் தனித் தனி வீடுகளைக் கொண்ட கிராமங்களை அமைப் பதற்கு விரைவில் அடித்தளமிடப் படவுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் முத்து சிவலிங்கம் வாரமஞ்சரிக்குத் தெரி வித்தார்.

இந்தியா வழங்கும் ஆறாயிரம் வீடுகளைக் கொண்டு, ‘லயன்’ குடியிருப்புகளைத் தரைமட்ட மாக்கிவிட்டுத் தனித் தனி வீடுகளைக் கொண்ட கிராமம் உருவாக்கப்படு மென்று பிரதியமைச்சர் குறிப்பிட்டார்.

இவ்வருட இறுதிக்குள் இதற்கான அத்திவாரம் இடப்படுமென்றும் மூன்றாண்டுகளுக்குள் ஆறாயிரம் வீடுகளும் நிர்மாணிக்கப்பட்டு விடுமென்றும் பிரதியமைச்சர் கூறினார். தோட்டங்களில் கிரா மங்களை அமைப்பதற்காகத் தொழி லாளர்களின் ‘லயன்’ வரிசை குடி யிருப்புகள் தொடர்பான மதிப் பீடொன்றை மேற்கொள்வதாகத் தெரிவித்த பிரதியமைச்சர், முதற் கட்டமாக எந்தத் தோட்டத்தில் எத்தனை வீடுகள் அமைக்கப்படும் என்பதைப் பற்றிப் பின்னர் அறிவிக்கப்படும் என்றார்.

‘தேயிலைத் தோட்டத் தொழிற் துறை படிப்படியாக நலிவடைந்து வருகிறது. இலங்கையிலும் இதே நிலைதான்.

இன்னும் பதினைந்து ஆண்டு களில் தோட்டத் தொழில் அருகி விடக்கூடும். அதற்கு முகங் கொடுக் கும் வகையில் தொழிலாளர்களின் வாழ்க்கை முறை, வாழ்வாதாரம் என்பவற்றில் மாற்றங்களைக் கொண்டு வரவேண்டும் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

விசாரணை செய்யும் அதிகாரம் நிபுணர் குழுவுக்கு இல்லை ஜனாதிபதியிடம் பான் கீ மூன் தெரிவிப்பு
இலங்கைக்கு எதிரான குற்றச் சாட்டுகளை விசாரணை செய்யும் சட்ட ரீதியான அதிகாரம் எதுவும் தமது நிபுணர் குழுவுக்குக் கிடை யாதென்று ஐக்கிய நாடுகள் சபை யின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷவிடம் மீண்டும் வலியுறுத்தித் தெரிவித்துள்ளார்.

நியுயோர்க்கில் ஐக்கிய நாடுகள் சபை தலைமையகத்தில் ஜனாதிபதி யுடன் நடந்த சந்திப்பின்போதே பான் கீ மூன் இதனைத் தெரி வித்துள்ளார்.

இலங்கையுடனான எதர்கால உறவு எவ்வாறு அமைய வேண்டும் என்பதைப் பற்றியே நிபுணர் குழு தமக்கு ஆலோசனை வழங்கு மென்றும், இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் அதிகாரம் எதுவும் அதற்குக் கிடையாதென்றும் செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்ததாக ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் லுசியன் ராஜகருணாநாயக்க நியூயோர்க்கிலிருந்து தெரிவித்துள்ளார்.

இடம்பெயர்ந்தவர்களை மீள்குடி யமர்த்துவதற்காக மேற்கொண்ட துரித நடவடிக்கைகளை ஐ. நா. செயலாளர் பாராட்டியதுடன், புலிகள் இயக்கத்தினரால் பல தசாப்தங்களாகப் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் மற்றும் சிறுவர் களுக்குப் புனர்வாழ்வளிக்க மேற் கொண்ட நடவடிக்கைகளையும் பான் கீ மூன் பாராட்டியுள்ளார்.

புத்தாயிரமாம் ஆண்டின் அபிவிரு த்தி இலக்கை அடைவதற்கான முன்னேற்றத்தையும் அதற்கான செயற்பாடுகளையும் அவர் பாராட் டியுள்ளார். அரசியல் தீர்வு, நல்லிணக் கம் மற்றும் பொறுப்புக் கூறும் தன்மை ஆகிய விடயங்கள் குறித்தும் ஜனாதிபதிக்கும் ஐ. நா. செயலாள ருக்குமிடையிலான சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

நீண்ட நாளைய முரண்பாடுகளுக் கான காரணத்தையும் அவை மீண்டும் ஏற்படாதிருப்பதற்கான வழிமுறைகளையும் கண்டறிவதற்காக பொறுப்புக் கூறும் தன்மையின் கொள்கைகளுக்கு அமைவாக கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல் லிணக்கம் பற்றிய ஆணைக்குழு அமைக்கப்பட்டிருப்பதாக சுட்டிக் காட்டிய ஜனாதிபதி ராஜபக்ஷ அந்தக் குழு முற்றிலும் வெளிப்படைத் தன்மையுடன் செயற்படுவதாகவும் குறிப்பிட்டார்.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிர தேசங்களுக்குச் சென்று ஆணைக்கு விசாரணை மேற்கொண்டமை குறித்தும் ஜனாதிபதி விபரித்துள்ளார். இலங்கையில் நீதியை நிலைநாட்டு வதற்கும், நல்லிணக்கத்தை ஏற்படுத்து வதற்குமான தகவல்களை எந்தத் தனி நபரோ அல்லது அமைப்போ கொண்டிருந்தால் அதனைச் செவி மடுப்பதற்கு ஆணைக்குழு தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி எடுத் துரைத்துள்ளார்.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதே சங்களிலுள்ள மக்களின் இயல்பு வாழ்க்கையைத் தோற்றுவிப்பதற்காக நிர்வாக ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று இக்குழு தனது இடைக்கால அறிக்கையில் பரிந்துரைத்துள்ளதையும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

புலிகள் தோற்கடிக்கப்பட்டு கடந்த 16 மாதங்களில் 90% மீள்குடி யேற்றம் நிறைவடைந்துள்ளதுடன், யுத்தத்திற்குப் பின்னரான அபி விருத்திப் பணிகள் குறித்தும் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

இலங்கையின் சமூக, பொருளாதார அபிவிருத்தியில் ஐ. நா. சபையும் அதன் முகவர் அமைப்புகளும் பங்கெடுப்பதற்கான வாய்ப்புகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதேவேளை, இரண்டு தேர்தல் களிலும் ஜனாதிபதிக்குக் கிடைத் துள்ள வெற்றி குறித்து ஐ. நா. செய லாளர் நாயகம் பான் கீ மூன் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இந்த அரசியல் ஸ்திரத்தன்மையின் ஊடாக நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான செயற்பாடு சிறந்த இலக்கை அடையுமென்று தெரிவித்துள்ளதுடன் தேசிய தலைவரொருவர் மூன்றிலிரண்டுக்கும் கூடுதலான பெரும்பான்மையைப் பெறுவது அரிதாகவே இடம்பெறும் எனவும் இதனை ஜனாதிபதி பெற்றிருப்பது அவரது தலைமைத்துவ தகைமைக்கு ஓர் எடுத்துக்காட்டு என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...