24 ஜனவரி, 2010

சுற்றுலாத் தளமாக மாறியுள்ள பிரபாகரனின் வல்வெட்டித்துறையிலுள்ள வீடு




விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வல்வெட்டித்துறை வீடு தென்னிலங்கை சிங்களச் சுற்றுலாப் பயணிகளின் சுற்றுலாத்தளமாக மாறியுள்ளது.

யுத்தம் தற்போது முடிவடைந்து சுமூகமான சூழ்நிலை ஏற்பட்டுள்ள நிலையில் ஏ மி 9 வீதியினூடாக அதிகளவிலான தென்னிலங்கை சிங்கள சுற்றுலாப் பயணிகள் யாழ்ப்பாணம் வருகை தருகின்றனர்.

இவர்கள் யாழ்ப்பாணத்தில் பல இடங்களினை பார்வையிடுகின்றனர். இவர்கள் பார்வையிடும் இடங்களில் ஒன்றாக தற்போது விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் வாழ்ந்த வல்வெட்டித்துறை வீடும் மாறியுள்ளது.

உடைந்த நிலையில் உள்ள பிரபாகரனின் வீட்டிற்கு முன்னாள் நின்று இவர்கள் புகைப்படங்கள் எடுத்துக் கொள்கின்றனர். அத்துடன் பிரபாகரன் வீட்டு முற்ற மண் சிறிதளவை தம்முடன் எடுத்துச் செல்வதையும் காணக் கூடியதாகவிருக்கின்றது.

கடந்த சில நாட்களாக இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துக் காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது
மேலும் இங்கே தொடர்க...
பொது வேட்பாளார் சரத் பொன்சேகாவை ஆதரித்து த.தே.கூ யாழ்ப்பாணத்தில் பொதுக்கூட்டம்


எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளார் சரத் பொன்சேகாவை ஆதரித்து தமிழ் தேசிய கூட்டமைப்பினால் நேற்று பிற்பகல் 4.30 மணிக்கு நல்லூர் சட்டநாதர் சங்கிலியன் தோப்பில் பொதுக்கூட்டம் இடம்பெற்றது. யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ்பிறேமச் சந்திரன் தலைமையில் இப்பொதுக்கூட்டம் இடம்பெற்றது.

இந்தக் கூட்டத்தில் பல வருடங்களின் பின்னர் பல ஆயிரக்கணக்கான பொது மக்கள் யாழ், குடா நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் கலந்து கொண்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இதில் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, சொலமன் சிறில், பத்மினி சிதம்பரநாதன், திருமலை நாடாளுமன்ற உறுப்பினர் துரைரட்ண்ச்சிங்கம், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், இமாம் மற்றும் தமிழ் தேசியக் கூட்மைப்பின் தலைரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆர்.சம்பந்தர் ஆகியோர் உரையாற்றினர்.
மேலும் இங்கே தொடர்க...
அடுத்த ஜனாதிபதி யார்? ஒரு கோடியே 40 இலட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி


இலங்கையின் நிறைவேற்று அதிகாரமிக்க ஆறாவது ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் நாளை மறுதினம் 26 ஆம் திகதி நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் வாக்களிப்பதற்காக 14,088,500 பேர் தகுதி பெற்றுள்ளனர். இந்த தேர்தலுக்கான பூர்வாங்க ஏற்பாடுகள் அனைத்தும் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் 10875 நிலையங்களில் வாக்களிக்க வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் வரலாற்றில் அதிகளவில் வேட்பாளர்கள் களமிறங்கியுள்ள தேர்தலாக இது அமைந்துள்ளது. 23 வேட்பாளர்கள் வேட்பு மனுத் தாக்கல் செய்திருந்தனர். இவர்களில் ஒருவரின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதையடுத்து 22 பேர் வேட்பாளர்களாக தேர்தல்கள் ஆணையாளரால் அறிவிக்கப்பட்டனர்.

ஜனாதிபதித் தேர்தல் திகதி உத்தியோகபூர்வமாக தேர்தல்கள் ஆணையாளரால் அறிவிக்கப்பட்டதிலிருந்து நேற்று வரையான காலப் பகுதி வரைக்குள் சுமார் 950 க்கும் மேற்பட்ட தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளன. சுதந்திரமான தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளுக்கும் தேர்தலுக்குப் பொறுப்பான பொலிஸ் பிரிவுக்குமே முறைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இவை தவிர முறையிடப் படாத பல தேர்தல் வன்முறைச் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளமையும் சுதந்திரமான அறிக்கைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த வன்முறைச் சம்பவங்களின்போது பிரதான இரு வேட்பாளர்களதும் ஆதரவாளர்களென நம்பப்படும் ஐவர் கொல்லப்பட்டுள்ளனர். பெரும்பாலான முறைப்பாடுகள் பிரதான வேட்பாளர்களாகப் போட்டியிடும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சரத் பொன்சேகா தரப்பிலிருந்தே செய்யப்பட்டுள்ளன. இவற்றில் ஆளும் தரப்பினருக்கு எதிரான முறைப்பாடுகளே கூடுதலாக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

அதிகரித்துக் காணப்பட்ட இந்த வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள், ஐரோப்பிய யூனியன் மற்றும் சர்வதேச, உள் ளூர் அமைப்புகளும் தமது கவலையை வெளியிட்டிருந்தன.நீதியும் நேர்மையும் மிக்க தேர்தலுக்கு இந்த வன்முறையானது ஒரு சவாலாக அமையலாமெனவும் கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

வாக்களிப்பு தினத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் பொலிஸாருக்கு மேலதிகமாக இராணுவத்தினரையும் ஈடுபடுத்துவதென அரசாங்கம் முடிவு செய்துள்ளது. தேர்தல் பணிகளைக் கணக்காணிக்கவென ஆசிய நாடுகளைச் சேர்ந்த கண்காணிப்பாளர்களும் பொதுநலவாய செயலக உறுப்பினர்களும் ஈடுபடுத்தப்படவுள்ளனர். எதிர்வரும் 28 ஆம் திகதி இவர்கள் தேர்தல் தொடர்பான இறுதியறிக்கையைக் கையளிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

இந்தத் தேர்தலில் நாற்பது வருட அரசியல் அனுபவம் கொண்டவரும் தற்போதைய ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ இரண்டாவது கால ஜனாதிபதி ஆட்சிக்கான மக்கள் ஆணைகோரி மீண்டும் போட்டியிடுகிறார். இவருக்கு பிரதான சிங்களக் கட்சிகள் பலவும் தமிழ் பேசும் சிறுபான்மையினக் கட்சிகள் சிலவும் ஆதரவு வழங்கியுள்ளன. தனது தேர்தல் விஞ்ஞாபனமாக 14 அம்சங்களை வெளியிட்டுள்ளார்.

இவருக்குப் போட்டியாக களமிறங்கியுள்ள ஜெனரல் சரத் பொன்சேகா இராணுவத்தில் நாற்பது வருடகால சேவை புரிந்தவர். இவருக்கும் சிங்களக் கட்சிகள் பலவும் சிறுபான்மையினக் கட்சிகள் சிலவும் ஆதரவு தெரிவித்துள்ளன. இவரும் பத்து அம்சங்கள் கொண்ட தனது திட்டத்தை மக்கள் முன்வைத்துள்ளார். இந்த இரு பிரதான வேட்பாளர்கள் தவிர்ந்த ஏனைய 20 பேரில் ஒரு தமிழரும் இரு முஸ்லிம்களும் அடங்குவர்.

வாக்களிப்பு மற்றும் தேர்தல் முடிவுகள் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க, மோசடிகள் இடம்பெற்றதாக உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில் மறு வாக்களிப்புக்கு உத்தரவிடப்படுவதுடன் முடிவு அறிவிப்பதிலும் தாமதம் ஏற்படலாமெனக் கூறியுள்ளார். தேர்தல் முடிவுகள் 27 ஆம் திகதி காலையே வெளியிடப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

வடக்கு கிழக்கில் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்தோரில் 45ஆயிரத்து 732 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாக தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது. யாழ் மாவட்டத்தில் 15ஆயிரத்து 602 பேரும் வன்னி மாவட்டத்தில் 29ஆயிரத்து 990 பேரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 69 பேரும் திகாமடுல்ல மாவட்டத்தில் 3 பேரும் திரு கோணமலை மாவட்டத்தில் 118 பேரும் வாக்களிப்பதற்காகத் தம்மைப் பதிவு செய்துள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...
யாழ்.,கிளிநொச்சி மாவட்டங்களில் 2 இலட்சத்து 50 ஆயிரம் பேருக்கு இதுவரையில் வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்படவில்லை



News Photo

யாழ்., கிளிநொச்சி மாவட்டங்களில் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றோரில் இதுவரையும் வாக்காளர் அட்டைகளைப் பெற்றுக் கொள்ளாத வாக்காளர்கள் எதிர்வரும் 26 ஆம் திகதி மாலை நான்கு மணி வரை தத்தமது தபால் நிலையங்களுக்குச் சென்று தமது ஆளடையாளத்தை நிரூபித்து வாக்காளர் அட்டைகளைப் பெற்றுக் கொள்ள முடியுமென யாழ். மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் கணேஷ் தெரிவித்துள்ளார்.

இந்த இரு மாவட்டங்களையும் சேர்ந்த 2,49,924 பேருக்கான வாக்காளர் அட்டைகள் இதுவரை விநியோகிக்கப்படாதுள்ளதாகவும் அவர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள் ளார். அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தபால் மூலம் வாக்களிக்கத் தகுதி பெற்றவர்களும் இடம்பெயர்ந்தவர்களும் உள்ளடங்கலாக இந்த இரு மாவட்டங்களிலும் 7, 21, 359 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இவர்களில் யாழ். மாவட்டத்தில் 6, 30, 548 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 90, 811 பேரும் தகுதி பெற்றுள்ளனர். இவர்களில் தபால் மூலம் வாக்களித்தோர் , விண்ணப்பித்திருந்தோர் தவிர்ந்த மீதியான 7, 10, 435 பேரில் 2, 49, 924 பேருக்கான வாக்காளர் அட்டைகள் இதுவரை விநியோகிக்கப்படவில்லையென்ற தகவலே இந்த அறிக்கையில் தெரியவந்துள்ளது.

யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த மொத்த வாக்காளர்களான 6, 25, 986 பேரில் 4, 50, 685 பேருக்கான வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. 1, 75, 301 பேருக்கான வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்படவில்லை.

இதுபோன்று கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த தகுதி பெற்ற 84, 449 வாக்காளர்களில் 9, 826 பேருக்கே வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. 74, 623 பேருக்கு இதுவரை விநியோகிக்கப்படவில்லை.

இற்றைவரை வாக்காளர் அட்டையைப் பெற்றுக் கொள்ளாதவர்கள் தத்தமது தபால் நிலையங்களுக்குச் சென்று 2010. 01. 26 ஆம் திகதி பிற்பகல் 4. 00 மணி வரை தமது ஆள் அடையாளத்தைக் காண்பித்து வாக்காளர் அட்டைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.

தற்போது கணிசமானளவு இடம்பெயர்ந்த வாக்காளர் வதிகின்ற வலிகாமம் பிரதேசத்திற்கான வாக்காளர் அட்டைகள் மருதனார் மடத்தில் இயங்கும் தெல்லிப்பளை தபால் நிலையத்திலும், வடமராட்சி கிழக்கு பிரதேசத்தைச் சேர்ந்த இடம்பெயர்ந்த வாக்காளர்களுக்கான வாக்காளர் அட்டைகள் குடத்தனை உப தபால் நிலையத்திலும் வைக்கப்பட்டுள்ளன. இடம்பெயர்ந்த வாக்காளர்கள் தமது வாக்காளர் அட்டைகளை மேற்குறிப்பிட்ட இரண்டு தபால் நிலையத்திலும் ஆள் அடையாள அட்டையைக் காண்பித்து நேரடியாகப் பெற்றுக் கொள்ளலாம்.

வாக்களிப்பதற்கான விசேட அடையாள அட்டை தேர்தல் திணைக்களத்தினால் வாக்களிப்பதற்காக ஏற்றுக் கொள்ளப்படும் அடையாள ஆவணங்கள் வருமாறு:

1. தேசிய அடையாள அட்டை

2. செல்லுபடியான கால எல்லையைக் கொண்ட கடவுச் சீட்டு

3. செல்லுபடியான கால எல்லையைக் கொண்ட சாரதி அனுமதிப் பத்திரம்

4. ஓய்வூதிய அடையாள அட்டை

5. முதியோர் அடையாள அட்டை

6. ஆட்பதிவுத் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட வணக்கத்திற்குரிய குருமாருக்கான அடையாள அட்டை.

7. ஆட்பதிவுத் திணைக்களத்தினால் வழங்கப்பட்டுள்ள தற்காலிக அடையாள அட்டை

8. தேர்தல் திணைக்களத்தினால் வழங்கப்பட்டுள்ள தற்காலிக அடையாள அட்டை

இந்த 8 ஆவணங்களையும் வைத்திராத வாக்காளர்களுக்காக யாழ். மாவட்டத்தில் விசேட அடையாள அட்டைகள் வழங்குவதற்குரிய ஏற்பாடுகள் பிரதேச செயலக, உதவி அரசாங்க அதிபர் பணிமனைகள் ஊடாகச் செய்யப்பட்டு இற்றை வரை 12, 969 அடையாள அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

வாக்களிப்பதற்கான போக்குவரத்து ஏற்பாடு

யாழ். மாவட்டத்தினுள் வழமையாகப் பொதுப் போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இடம்பெயர்ந்திருக்கும் வாக்காளர்களுக்காக தேர்தல் திணைக்களத்தினால் விசேட போக்குவரத்து வசதிகள் இலவசமாகச் செய்து கொடுக்கப்படும். கிளிநொச்சி மாவட்டத்திற்குச் செல்லவிருக்கின்ற வாக்காளர்களுக்கும் வன்னி தேர்தல் தொகுதிக்குச் செல்லவிருக்கின்ற வாக்காளர்களுக்கும் ஏ 9 வீதியூடாக இலவச போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்படும்.

இதற்குரிய விபரமான அறிவித்தல் இன்றைய யாழ். மாவட்ட பத்திரிகைகளில் பிரசுரமாகும். அதேபோன்று வவுனியாவிலிருந்தும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி பிரதேசங்களுக்கும் வாக்காளர்களுக்கு மாத்திரம் இலவச போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்படும்.

வாக்களிக்கும் நேரம்

வாக்களிப்பு காலை 7. 00 மணி தொடக்கம் பிற்பகல் 4. 00 மணி வரை நடைபெறும்.

வாக்குகளை அடையாளமிடும் ஒழுங்கு முறை

ஜனாதிபதித் தேர்தலில் மூன்று வேட்பாளர்களுக்கு மேற்பட்டவர்கள் போட்டியிடுகின்ற காரணத்தினால் வேட்பாளர் ஒருவருக்கு வாக்கொன்றையும் இரண்டு வேறு வேட்பாளர்களுக்கு இரண்டாம் விருப்பையும் மூன்றாம் விருப்பையும் அடையாளமிட முடியும்.

இடம்பெயர்ந்த மக்களுக்கான வாக்கெடுப்பு நிலையம் யாழ். மத்திய கல்லூரியிலும் தெல்லிப்பளை புனர்வாழ்வு நிலையத்தில் உள்ளவர்களுக்கான வாக்கெடுப்பு நிலையம் புனர்வாழ்வு நிலையத்திலும் பனை ஆராய்ச்சி நிலையத்தில் உள்ளவர்களுக்கான வாக்கெடுப்பு நிலையம் அதே இடத்திலும் அமைக்கப்பட்டுள்ளன.

வாக்கு எண்ணும் நிலையங்கள்

யாழ். மாவட்டத்திலுள்ள 11 தேர்தல் தொகுதிகளுக்கான 22 வாக்கெண்ணும் நிலையங்கள் அஞ்சல் வாக்குகளை எண்ணும் நிலையம், இடம்பெயர்ந்த வாக்காளர்களின் வாக்குகளை எண்ணும் நிலையம் என மொத்தம் 24 வாக்கெண்ணும் நிலையங்கள் மாவட்டச் செயலகத்தில் அமைக்கப்பட்டுள்ளன.

தபால் மூல வாக்களிப்பிற்கான வாக்குகள் எண்ணும் பணி மாலை 4.00 மணிக்கு ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும். சகல தேர்தல் கடமைகளுக்குமான பாதுகாப்பு ஏற்பாடுகள் பொலிஸாரினால் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் இங்கே தொடர்க...
மஹிந்த ராஜபக்சா 56 இவீத வாக்குகள் பெற்று மீண்டும் ஜனாதிபதி ஆசனத்தில்அமர்வார்
இது உறுதி

No Image




மஹிந்த ராஜபக்சா 56 இவீத வாக்குகள் பெற்று மீண்டும் ஜனாதிபதி ஆசனத்தில் அமர்வார்இது உறுதி என்று எமது கணிப்பீட்டில் காணப்படுகிறது வடக்கு மாகாண மக்கள் ஆதரவு கிழக்கு மாகாண மக்கள் ஆதரவு முழுமையாக மஹிந்தா அரசையே
விரும்புகிறது இப்பொழுது தமிழ் சிங்கள மக்கள் நின்மதியை தேடி அலைகின்றார்கள் அது மஹிந்தா அரசால் தான் தரமுடியும் என்று எண்ணுகிறார்கள் யுத்தத்திற்கு பின் 6.மாத காலத்தி நாடு எத்தனையோ மாற்றங்களை எட்டியுள்ளது தமிழ் சிங்கள இனம் என்ற பேதமின்றி இலங்கையின் முழு பகுதிகளுக்கும் தமிழ் சிங்களமக்கள் சென்றுவரக்கூடிய சூழல் உள்ளது தபோது இலங்கை ஐரோப்பாக்கு நிகராக வளர்ந்து வருவதை
காண முடிகிறது .

மற்றும் தமிழ் மக்கள் பிரச்சை அறிந்தவர் மஹிந்த அவருடன்
பேசி ஒரு அரசியல் தீர்வை காணலாம் புதிதாக ஒருவர் வந்தால் அவருக்கு இலங்கையின் சாசனத்தை தெரிந்து மற்றும் அரசியல் கட்சிகளுடன் ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்தி ஒரு முடிவிற்கு வர ..3 .4 .ஆண்டுகள் தேவைஅதற்குள் அடுத்த ஜனாதி பதி தேர்தல் வந்துவிடும் இப்படி போனால் எமதுஇலங்கை பிரச்சனை . 60 .ஆண்டுகளாக இழுபட்டது போல் இனிமேலும்இழுபடவண்ணம் ஒரு அரசியல் தீர்வை எட்டுவதற்கு ஜனாதிபதி மஹிந்தராஜபஹ்சா அவர்களுக்கு இலங்கை மக்கள் வாக்களிப்பார்கள் என எமதுகணிப்பிட்டில் காணப்படுகிறது
இதுவே எமது நிலைபாடும் கூட மஹிந்த ராஜபக்சா வெறி நிச்சையம்
மேலும் இங்கே தொடர்க...
அரசியல் தீர்வுக்கான கொள்கை கூட்டமைப்பிடம் இல்லை

தமிழ் மக்கள் தங்கள் எதிர்காலம் தொடர்பாகத் தீர்க்கமான ஒரு முடிவுக்கு வரவேண்டிய கட்டம் இப்போது ஏற்பட்டிருக்கின்றது. காலங்கலமாகத் தலைமை வகித்தவர்களின் தவறான செயற்பாடுகள் காரணமாகத் தமிழ் மக்கள் தொடர்ச்சியாகப் பல இன்னல்களை அனுபவித்து வந்தார்கள். புலிகளுக்கு எதிரான இறுதி யுத்தத்தின் போது ஏற்பட்ட இழப்புகளும் அதற்குப் பிந்திய அகதி வாழ்க்கையும் தமிழ் மக்கள் அனுபவித்த இன்னல்களின் உச்ச கட்டம் எனலாம்.

இந்த உச்சகட்டப் பாதிப்புக்கு உள்ளான மக்கள் இப்போது இயல்பு வாழ்க்கைக்கு மாறிக்கொண்டிருக்கின்றார்கள். அரசாங்கம் அளித்துவரும் பல்வேறு உதவிகளால் பழைய வாழ்க்கைக்கு அவர்கள் திரும்புகின்றார்கள். மக்கள் உச்ச கட்ட இன்னல்களை அனுபவித்த காலத்தில் இந்தியாவிலும் வேறு நாடுகளிலும் தங்கியிருந்து பிவாய்ப்பேச்சுப் போராட்டம்பீ நடத்தியவர்கள் இப்போது இலங்கை திரும்பி வந்து தாங்களே தமிழ் மக்களின் தலைவர்கள் என்று மீண்டும் உரிமை கோருகின்றார்கள்.

தமிழ்த் தேசியக் கட்டமைப்பு 2001 பொதுத் தேர்தலுக்காக உருவாக்கம் பெற்றதெனினும் அதைப் புதிய அரசியல் கட்சியாகக் கருத முடியாது. இது புதிய பானையில் பழையபானம். தமிழ்க் காங்கிரஸ் கட்சி, தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி என்பனவற்றின் தொடர்ச்சியே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்கள் தமிழரசுக் கட்சியின் சின்னத்திலேயே தேர்தல்களில் போட்டியிட்டதை இங்கு குறிப்பாகக் கூறலாம். எனவே கூட்டமைப்புத் தலைவர்களுக்கு அறுபது வருட அரசியல் பாரம்பரியம் உண்டு. இந்தத் தலைமையே அறுபது வருட காலமாகத் தமிழ் மக்கள் சார்பில் இனப் பிரச்சினையைக் கையாண்டிருக்கின்றது.

அறுபது வருட காலமாக இவர்கள் நடத்திய பிபோராட்டங்கள்பீ இனப் பிரச்சினையை நாளுக்கு நாள் வளர்த்திருக்கின்றனவேயொழியத் தீர்க்கவில்லை. தீர்வை விடுவோம். பிரச்சினையின் பரிமாணத்தையாவது குறைக்க முடியவில்லை. இத்தனைக்கும் இக்காலப் பகுதியில் இராணி அப்புக்காத்துகளும் மெத்தப் படித்தவர்களுமே தமிழ் மக்களுக்குத் தலைமை தாங்கினார்கள். எனவே பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாமைக்கு இவர்களின் வல்லமைக் குறைவு காரணம் எனக் கூற முடியாது. எத்தனையோ சிக்கலான வழக்குகளில் இத் தலைவர்கள் தங்கள் திறமையைக் காட்டியிருக்கின்றார்கள். இவர்கள் சரியான கொள்கையைக் கொண்டிராததும் பிழையான அணுகுமுறையைப் பின்பற்றியதுமே பிரச்சினையைத் தீர்க்க முடியாததற்கான காரணம்.

தமிழ்த் தலைவர்கள் நிலையான ஒரு கொள்கையைப் பின்பற்றவில்லை. காலத்துக்குக் காலம் கொள்கையை மாற்றினார்கள். இப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்தக்கொள்கையும் இல்லாமல் வந்து நிற்கின்றது. தமிழ் மக்களுக்குத் தலைமை வகிப்பதாக உரிமை கோரும் கட்சியிடம் இனப் பிரச்சினையின் தீர்வுக்கு எந்தக் கொள்கையும் இல்லாதிருப்பதை என்னவென்று சொல்வது?

அரசியல் தீர்வை அடைவதற்குத் தென்னிலங்கை மக்களின் ஆதரவைப் பெறும் விதத்திலும் இத் தலைவர்கள் நடந்துகொள்ளவில்லை. தமிழ் மக்களின் நலன்களுக்கு விரோதமாகச் செயற்படுகின்ற ஐக்கிய தேசியக் கட்சியுடன் சமரசம் செய்த காலங்களைத் தவிர மற்றைய காலங்களில் சிங்கள மக்களுக்கு எதிரான உணர்வலையைத் தமிழ் மக்களிடம் வளர்ப்பதிலேயே இவர்கள் கவனம் செலுத்தினார்கள். இனப் பிரச்சினையின் தீர்வு சிக்கலாகியதற்கு இதுவும் ஒரு காரணம். இவர்களின் இப்போதைய நிலைப்பாடும் ஐக்கிய தேசியக் கட்சியுடனான வர்க்க சமரசமேயொழிய, தமிழ் மக்களின் நலன் சார்ந்ததல்ல.
மேலும் இங்கே தொடர்க...
நம்பகமான வேட்பாளருக்கு மக்களின் ஆதரவு

நிறைவேற்று ஜனாதிபதி முறையை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை மறுதலித்துக் கடந்த காலங்களில் பல கட் டுரைகள் பிதினகரனில்பீ வெளியாகின. நிறைவேற்று ஜனா திபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தலில் முழு நாடும் ஒரு தேர்தல் தொகுதியாகக் கருதப்படுவதால் சிறுபான்மை யினரின் வாக்குகள் தீர்மான சக்தியாக அமைகின்றன என் றும் அது சிறுபான்மையினர் தங்கள் உரிமைகளை வென்றெ டுப்பதற்கு வாய்ப்பானதாக இருக்கும் என்றும் அக்கட்டுரை களில் சுட்டிக்காட்டப்பட்டது. இது முற்றிலும் சரியான கரு த்து.

நாளை மறுதினம் ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் வாக்களிக்க வுள்ளனர். சிறுபான்மையினங்களைச் சேர்ந்தவர்களும் தங் கள் வாக்குகளை அளிப்பார்கள். மேலே குறிப்பிட்ட கட்டு ரைகளில் கூறியது போல, சிறுபான்மையினர் ஜனாதிபதித் தேர்தலைத் தாங்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான சந்தர்ப்பமாகப் பயன்படுத்த வேண் டும்.

சிறுபான்மையினர் முகங்கொடுக்கும் உடனடிப் பிரச்சினைகளு க்கான தீர்வைத் தள்ளிப்போட முடியாது. அவை தாமத மின்றித் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள். பாரம்பரிய வாழ்புலத்திலிருந்து வடமாகாண முஸ்லிம்கள் புலிகளால் வெளியேற்றப்பட்டுப் பல வருடங்களாகிவிட்டன. இவர்கள் இன்னும் அகதிகளாக முகாம்களில் வாழ்கின்றார்கள்.

புலிகளுக்கு எதிராக அரசாங்கம் மேற்கொண்ட இராணுவ நட வடிக்கையின் விளைவாக இடம்பெயர்ந்தவர்களின் மீள்குடி யேற்றம் இன்னும் முழுமை பெறவில்லை. அதேபோல வட க்கில் அதிஉயர் பாதுகாப்பு வலயங்களிலிருந்து வெளியேறி யவர்களின் மீள்குடியேற்றமும் இன்னும் முழுமை பெறவி ல்லை.

இவைபோன்ற உடனடிப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதாக எல்லா வேட்பாளர்களும் வாக்குறுதி அளிக்கலாம். வாக்குறு திகளை அப்படியே நம்புவதில் அர்த்தமில்லை. கடந்த கால ங்களில் எத்தனையோ பேர் எத்தனையோ வாக்குறுதிகளை அளித்தார்கள். மக்களும் நம்பினார்கள். ஆனால் பெரும்பா லானோர் தாங்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவி ல்லை. எனவே வாக்குறுதி அளிக்கின்றார் என்பதற்காக ஒரு வர் மீது நம்பிக்கை வைப்பதிலும் பார்க்க அளிக்கும் வாக்கு றுதியை நிறைவேற்றக் கூடியவர் யார் என்பதை ஆராய்ந்து நம்பிக்கை வைப்பதே சரியானது. ஒவ்வொருவரினதும் கட ந்த கால செயற்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு இந்த முடிவுக்கு வரலாம்.

புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கை முடிவுற்றதைத் தொடர்ந்து சிறுபான்மையினருக்கு நன்மை பயக்கும் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வன்னியில் இட ம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் நடைபெறுகின்றது. வடக்கில் அதி உயர் பாதுகாப்பு வலயத்திலும் மீள்குடியேற் றம் ஆரம்பமாகிவிட்டது. கொழும்புக்கும் வடக்குக்கும் இடை யிலான ஏ 9 பாதை பொதுமக்களின் போக்குவரத்துக்காகத் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து வடக்கில் சமூக, பொருளாதார புத்தெழுச்சியொன்றை அவதானிக்க முடிகின்றது. தடுப்புக் காவ லிலிருந்த தமிழ் இளைஞர்கள் கட்டங்கட்டமாக விடுவிக்கப் படுகின்றனர்.

இவற்றையெல்லாம் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அர சாங்கமே செய்ததென்பதால் இந்த அரசாங்கத்தின் வேட்பா ளர் அளிக்கும் வாக்குறுதிகளில் சிறுபான்மையின மக்கள் தாராளமாக நம்பிக்கை வைக்கலாம்.
மேலும் இங்கே தொடர்க...
பிரசாரம் நேற்று நள்ளிரவுடன் முடிவு
நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு
69,000 பொலிஸார், முப்படைகள் கடமையில்


ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் நேற்று நள்ளிரவுடன் முடிவுற்ற நிலையில் நாடுமுழுவதிலும் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய தெரிவித்தார்.

இதற்கமைய இம்முறை தேர்தல் பாதுகாப்பு கடமையில் 68,800 பொலிஸாரும், பொலிஸாருக்கு உதவியாக முப்படையின ரும் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் பொலிஸாரின் நடவடிக்கைகள் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் விசேட செய்தியாளர் மாநாடு நேற்று மாலை பொலிஸ் தலை மையகத்தில் நடைபெற்றது.

தேர்தல் நடவடிக்கைகளுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி நவரட்ன, குற்றப் புலனாய்வு பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் சிசிர மென்டிஸ், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஐ.எம். கருணாரட்ன கலந்து கொண்ட இந்த செய்தியாளர் மாநாட்டில் பொலிஸ் மா அதிபர் மேலும் குறிப்பிடுகை யில்:-

அமைதியானதும் சுதந்திரமானதுமான தேர்தல் ஒன்றை நடத்துவதற்குத் தேவையான சகல பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பொலிஸ் திணைக்களம் திட்டமிட்ட அடிப்படையில் முன்னெடுத்துள்ளது.

27 வருடங்களுக்கு பின்னர் நாடு முழு வதிலும் ஒரே நாளில் தேர்தல் இடம்பெறு வது இதுவே முதற்தடவையாகும். இம்முறை நாடு முழுவதிலும் 11 ஆயிரத்து 155 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் பாதுகாப்பு கடமையில் 68,800 பொலிஸாரும், முப்படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் 413 பொலிஸ் நிலையங்களும், 40 பொலிஸ் பிரிவுகளும் தயார் நிலையில் வைக்கப்ப ட்டுள்ளன.

வடக்கு, கிழக்கு உட்பட நாடுமுழு வதிலும் 2,523 நடமாடும் பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்த ஒவ்வொரு பொலிஸ் குழுவிலும் பொலிஸ் அதிகாரி ஒருவர், இரண்டு பொலிஸார், முப்படை வீரர்கள் இருவர் என்ற அடிப்படையில் ஐவர் இருப்பர்.

ஒவ்வொரு வாக்களிப்பு நிலையத்திற்கும் இரண்டு அல்லது மூன்று பொலிஸார் ஆயுதங்களுடன் கடமையில் ஈடுபடுவார்கள்.

வடக்கு, கிழக்கு பிரதேசங்களிலும் தெற்கின் சில பிரதேசங்களிலும் தேவைப் படும் சில வாக்களிப்பு நிலையங்களிலும் பொலிஸாருடன், முப்படையினருடனான பாதுகாப்பு அதிகரிக்கப்படும்.

கிளிநொச்சி, முல்லைத்தீவு, பூநகரி ஆகிய பிரதேசங்களிலேயே இம்முறை முதற் தடவையாக தேர்தல் நடத்தப்படுகின்றது. வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ள வீதிகளின் வீதிச் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது என்றார்.

இதேவேளை இம்முறை தேர்தல் முடிவுற்ற பிறகும் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதா கவும் பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்தார்.

ஏதாவது வன்முறைச் சம்பவங்கள் ஒரு பிரதேசத்தில் இடம்பெறும் பட்சத்தில் 119 என்ற அவசர இலக்கத்திற்கு பொது மக்கள் உடனடியாகத் தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொண்ட பொலிஸ் மா அதிபர், அவ்வாறு அறிவிக்கும் பட்சத்தில் அந்தப் பிராந்தியத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபரினதும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரினதும் வழிகாட்டலில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

இதேவேளை சில பிரதேசங்களில் அடையாள அட்டைகள் பலாத்காரமாக கொள்ளையடிக்கப்பட்டுள்ளது என்று உறுதியான தகவல் கிடைத்துள்ளதாக தெரிவித்த பொலிஸ் மா அதிபர், இந்தக் காலகட்டத்தில் பொது மக்கள் எக்காரணத் தைக் கொண்டும் அடையாள அட்டைகளை எவருக்கும் கொடுக்க வேண்டாம் என்றும் தங்களது அடையாள அட்டைகளை தாங்கள் பாதுகாத்து தங்களது வாக்குரி மைகளை பாதுகாத்துக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்வதாகவும் தெரிவித்தார்.

மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் எவர் செயற்பட்டாலும் கட்சி பேதமின்றி உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

தேர்தல் கடமைகளில் ஈடுவோர்க்காக விசேட ரயில் சேவைகளை நடத்த ஏற்பாடு-




தேர்தல் கடமைகளில் ஈடுபடவுள்ள அதிகாரிகளின் வசதிகருதி விசேட ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. தேர்தல் கடமைகளில் ஈடுபடவுள்ள பொலீஸ் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட ஏனைய உத்தியோகத்தர்களின் போக்குவரத்துக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதாக ரயில்வே வணிக அத்தியட்சகர் விஜே சமரசிங்க தெரிவித்துள்ளார். அந்தந்த நிறுவனங்களின் வேண்டுகோளுக்கமைய விசேட ரயில் சேவைகளை நடைமுறைப்படுத்த எண்ணியுள்ளதாக ரயில்வே வணிக அத்தியட்சகர் மேலும் தெரிவித்துள்ளார். இதேவேளை தேர்தலில் வாக்களிப்பதற்காக தத்தமது வீடுகளுக்கு திரும்புவோரின் வசதிகருதி இந்த விசேட ரயில் சேவைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய நாளைதினத்தை விடுமுறையாகக் கருதாது வார நாட்களுக்கான ரயில்சேவைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

தமிழ்மொழியை அமுலாக்க பல்வேறு நடவடிக்கை-

சகல அரசாங்க நிறுவனங்களும் தமிழ்மொழியை அமுலாக்குவதற்கு சாத்தியமான பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதோடு அரச கருமமொழிகளைச் செயற்படுத்துவதற்குள்ள குறைபாடுகளை அடையாளம் கண்டு அவற்றை நிவர்த்திக்கவும் ஆவன செய்யப்படவுள்ளதாக அரசியல் விவகார தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் செயலாளர் திருமதி எம்.எஸ்.விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். சகல அரச நிறுவனங்களிலும் அரச கருமமொழிக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் அலுவலர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கான பொறுப்புகளும் அறிவிக்கப்பட்டுள்ளதாக செயலாளர் குறிப்பிட்டுள்ளார். அரசகரும மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்காக பொறுப்புக்களைக் கையளிப்பது தொடர்பாக சகல அமைச்சுக்களினதும் செயலாளர்களுக்கும் மாகாணசபைகளின் தலைமைச் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், உள்ளுராட்சி நிறுவனத் தலைவர்கள், மாகாண அரசாங்க சேவை ஆணைக்குழுச் செயலாளர்களுக்கு சுற்றுநிருபம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது
மேலும் இங்கே தொடர்க...