16 மே, 2010

கிழக்கில் ஆறு வேலைத் திட்டங்களை மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் மாகாண அமைச்சரவை பேச்சாளர் உதுமா லெப்பை


கிழக்கு மாகாணத்தில் ஆறு வேலைத் திட்டங்களை மேற்கொள்வதற்கு கிழக்கு மாகாண அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக கிழக்கு மாகாண அமைச்சவைப் பேச்சாளரும் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சருமான எம். எஸ். உதுமா லெப்பை தெரிவித்தார்.

மாகாண அமைச்சின் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு கடந்த சனியன்று திருகோணமலையில் அமைந்துள்ள அமைச்சின் அலுவலகத்தில் நடைபெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அமைச்சர் தொடர்ந்து அங்கு கருத்து தெரிவிக்கையில்,

கிழக்கு மாகாணத்தில் அடிப்படை வசதிகற்ற ஆறு கிராமங்களைத் தெரிவு செய்து, அவற்றை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தில் ஹுஸைனிண், சின்னக்குளம், திமிரிகொள்ள ஆகிய மூன்று கிராமங்களும் மட்டக்களப்பு மாவட்டத்தில் வடமுனை, எம்.ஐ.எச். நகர் ஆகிய கிராமங்களும் திருகோணமலை மாவட்டத்தில் கங்குவெளி கிராமமும் இதற்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

கிழக்கு மாகாணத்தில் உள்ள நீர்ப்பாசன திணைக்களத்தின் அம்பாறை, பொத்துவில், குச்சவெளி, மூதூர் ஆகிய நீர்ப்பாசன பொறியிலாளர் காரியாலயங்களுக்கு பதில் பொறியலாளர்களை நியமிப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி போன்றவற்றின் நிதியுதவியோடு வீதிகள் நிர்மாணிக்கப் பட்டுள்ளன. இவ் வீதிகளை எதிர்காலத்தில் பராமரிக்க 2011 ஆம் ஆண்டிலிருந்து கிழக்கு மாகாணத்தில் வாகன அனுமதிப் பத்திரத்துக்காக அறவிடப்படும் நிதியிலிருந்து கணிசமான தொகைப் பணத்தை வீதி அபிவிருத்தி திணைக்களத்துக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் ஆயுர்வேத வைத்தியத்துறையை அபிவிருத்தி செய்யவும் தேவையான மருந்துகளை உற்பத்தி செய்யவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. உல்லாசப் பயணிகளை மையமாக வைத்து பாசிக்குடா, நிலாவெளி, அறுகம்பை போன்ற இடங்களை அண்மித்த பிரதேசங்களில் ஆயுர்வேத பஞ்சகர்ம போன்ற முறைகளைப் பயன்படுத்தி, வைத்திய முறைகளை ஆரம்பிப்பதற்காக ஆயுர்வேத வைத்தியசாலைகள் அமைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

கனகராயன் குளம், நெடுங்கேணி: மீளக்குடியமர்ந்தோருக்கு சொந்தக் காணியில் வீடுகள்

கனகராயன் குளம் உட்பட நெடுங்கேணி பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதிகளில் மீளக்குடியமர்த்தப்பட்ட மக்களுக்கு அவர்களது சொந்த காணிகளில் சுமார் 600 நிரந்தர வீடுகள் கட்டப்படவுள்ளன.

யூ. என். ஹெபிடாட் நிறுவனம் உட்பட அரச சார்பற்ற நிறுவனங்கள் ஒன்றிணைந்து இந்த வீடுகளை கட்டிக்கொடுக்க முன்வந்துள்ளதாக வவுனியா அரச அதிபர் திருமதி பீ.

எம். எஸ். சார்ள்ஸ் தெரிவித்தார். நெடுங்கேணி பிரதேச செயலக பிரிவுகளில் உள்ள அனைத்து கிராம சேவகர் பிரிவுகளிலும் மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கான வாழ்வாதார உதவிகளையும் பெற்றுக் கொடுப்பதுடன் மலசலகூட வசதிகளுடன் கூடிய நிரந்தர வீடுகளும் அமைக்கப்படவுள்ளன.

நெடுங்கேணி பிரதேச செயலகப் பிரிவில் குடிநீர் விநியோகத் திட்டமொன்று 100 மில். ரூபா செலவில் முன்னெடுக்கப்படவுள்ளது. என்ரிப் நிறுவனம் இதனை நடைமுறைப்படுத்தவுள்ளது. 43 மில். ரூபா செலவில் பஸ் நிலையம், பொதுச் சந்தைக் கட்டடம் என்பவற்றுடன் முதல் தர தபாலகமும் கட்டப்படவுள்ளன.

இப்பகுதியில் அரச ஊழியர்களுக்கென பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு 30 மில்லியன் ரூபா செலவில் கூட்டு விடுதிகளை கட்டுவதற்கும் ஏற்பாடு செய்துள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

எவரையும் இழிவுபடுத்தும் உரிமை ஊடகவியலாளருக்கு இல்லை ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல






எவரையும் இழிவுபடுத்தவோ அல்லது மற்றையோர் மனங்களைப் புண்படுத்தவோ ஊடகத்துறையினருக்கு எந்த வகையிலும் உரிமையில்லை என்று தகவல், ஊடகத்துறை அமைச்சரும், அமைச்சரவை பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல்ல நேற்றுத் தெரிவித்தார்.

நாட்டின் நடப்பு கள நிலவரங்களை எழுதும் அதேவேளை அரசாங்கம் எதை செய்தாலும் அதற்கு விரோதமாக எழுதும் போக்கையும் சிலர் கொண்டுள்ளனர். எனினும் நான் அனைத்து ஊடகவியலாள ருடனும் சுமுகமாக செயலாற்றுவேன் எனவும் அமைச்சர் கூறினார்.

அமைச்சர் கெஹெலிய நேற்று (16) கண்டியில் உள்ள மல்வத்த மகாநாயக்க தேரர் திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கள தேரரினது ஆசிபெற்றபோது அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கண்டி பிரதேசத்தில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்கான நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகின்றேன். கண்டி நகரான மரபுரிமை நகரை பாதுகாப்பது எமது அனைவருடைய கடமைப்பாடாகும்.

இந்த வகையில் கண்டி நகரில் உள்ள நிருவாக கட்டமைப்புகள் அனைத்தும் வேறிடத்திற்கு கொண்டு செல்லப்படும். இதன் அடிப்படையில் தான் கண்டி போகம் பறையில் அமைந்துள்ள சிறைச்சாலையை பள்ளேகலப் பிரதேசத்திற்கு கொண்டு செல்லப்படும் எனவும் அமைச்சர் கூறினார்.

மேலும் நேற்று அமைச்சர் பெளத்த, இந்து, இஸ்லாமிய கிரிஸ்தவ மத வழிபாட்டு நிலையங்களுக்கு சென்று அங்குள்ள மத குருக்களிடமும் ஆசி பெற்றார்.
மேலும் இங்கே தொடர்க...

95 வகை மருந்துகள் ஒரு வாரத்திற்குள் இறக்குமதி; இலங்கை அதிகாரிகள் இன்று இந்தியாவுக்கு அவசர பயணம்






அரசாங்க ஆஸ்பத்திரிகளில் தற்போது தட்டுப்பாடு நிலவும் 95 வகையான அத்தியாவசிய மருந்துப் பொருட்களை உடனடியாகக் கொள்வனவு செய்யவென அரசாங்கம் விசேட குழுவொன்றை இன்று (17 ம் திகதி) இந்தியாவுக்கு அனுப்பி வைக்கின்றது.

சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவின் ஏற்பாட்டில் இன்று இந்தியாவுக்கு பயணமாகும் இக் குழுவில் மருந்துப் பொருள் விநியோகப் பிரிவு பணிப்பாளர், அரசாங்க மருந்துப் பொருள் கூட்டுத்தாபன பிரதி முகாமையாளர், தேசிய மருந்துப் பொருள் அதிகார சபையின் மருந்தாளர், சுகாதார அமைச்சின் பிரதம மருந்தாளர், நிதியமைச்சு பிரதிநிதி ஆகியோர் அடங்கியுள்ளனர்.

இன்று இந்தியாவுக்கு பயணமாகும் இக் குழுவினர் இலங்கைக்கு மருந்துப் பொருட்களை விநியோகிக்கும் இந்திய நிறுவனங்களின் பிரதிநிதிகளை மும்பாய் நகரில் சந்திக்கவுள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை சுகாதார அமைச்சு மேற்கொண்டுள்ளது.

மேற்படி 95 அத்தியாவசிய மருந்துப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கான கேள்விப் பத்திரங்களை இக் குழுவினர் இந்திய நிறுவனங்களிடமிருந்து இன்று பெற்றுக் கொள்ளவிருக்கின்றனர்.

இந் நிறுவனங்கள் தங்களிடமுள்ள மருந்துப் பொருட்களின் அளவு, அவற்றின் விலை, இலங்கை தேசிய மருந்துப் பொருள் அதிகார சபையில் மருந்து பொருளை விநியோகிப்பதற்குப் பதிவு செய்துள்ள விபரம் என்பவற்றை இக் குழுவினருக்கு சமர்ப்பிக்குமாறும் கேட்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கேள்விபத்திரங்களைப் பெற்றுக் கொண்டதும் அவற்றை பரிசீலனைக்கு உட்படுத்தி மருந்துப் பொருள் விநியோகிக்கவென தகுதியான நிறுவனம் தெரிவு செய்யப்படும்.

அதனைத் தொடர்ந்து விமானம் மூலமோ, கப்பல் மூலமோ குறித்த மருந்துப் பொருட்களை ஒரு வார காலத்திற்குள் இலங்கைக்கு அனுப்பி வைக்குமாறு அந்தவிநியோக நிறுவனம் கேட்டுக் கொள்ளப்படும் என்று அமைச்சு அதிகாரியொருவர் கூறினார். தரமான மருந்துப் பொருட்களைக் குறைந்த விலையில் கொள்வனவு செய்வதில் அதிக கவனம் செலுத்துமாறு அமைச்சர் சிறிசேன அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் வன்னி விஜயம்



தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் வன்னியில் உள்ள முகாம்களுக்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ள உள்ளனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவினரே வன்னிக்கு விஜயம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இம்மாதம் 21ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை இக் குழுவினர் வன்னியில் தங்கியிருப்பர் எனவும் மக்கள் மீள்குடியேற்றப்பட உள்ள பிரதேசங்களை சென்று பார்வையிட உள்ளதாகவும் கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இங்கே தொடர்க...

கடந்த 2001ம் ஆண்டு முதல் ஜெயா டிவியில் ஜாக்பாக்ட் நிகழ்ச்சி வெற்றிகரமாக


ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது. இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் நடிகை குஷ்பு.இவர் நேற்று முன் தினம் முதல்வர் கருணாநிதி முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இதையடுத்து அவர் ஜாக்பாக்ட் நிகழ்ச்சியில் இருந்து அதிரடியாய் நீக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து ஜாக்பாக்ட் நிகழ்ச்சியினர், ‘’தொழில் வேறு, அரசியல் வேறு என்ற கண்ணோட்டத்தில் குஷ்பு திமுகவில் இணைந்த போது தெரிவித்துள்ளார். ஆனால் நாங்கள் அப்படி பார்க்க முடியாது. ஜெயா டிவியும் அப்படி பார்க்காது.

திமுகவில் சேருவதற்கு சில நாட்களுக்கு முன்பு கூட ஜாக்பாக்ட் நிகழ்ச்சி சம்பந்தமாக மீட்டிங் நடந்தது. அப்போது கூட அவர் அரசியல் ஆசை பற்றி தெரிவிக்கவில்லை.

கட்சியில் சேரும் போது தெரிவிக்கவில்லை. தொழில் வேறு அரசியல் வேறு என்று நினைப்பதால் அப்படி செய்திருக்கலாம்.ஆனால் நாங்கள், இனி ஜாக்பாக்ட் நிகழ்ச்சியில் குஷ்பு பங்கேற்கக்கூடாது என்பதில் தெளிவான முடிவு எடுத்துள்ளோம். அவரை இந்நிகழ்ச்சியில் இருந்து அதிரடியாய் நீக்கியுள்ளோம்.
அவர் பங்கேற்ற 15 எபிசோடு ஒளிபரப்பாகும் நிலையில் தயாராக இருக்கிறது
மேலும் இங்கே தொடர்க...

இலங்கை போரில் 2.6 லட்சம் வீடுகள் சேதம்

:

இலங்கையில் ராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்த இறுதிக் கட்டப் போரின் போது ஈழத்தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்குப் பகுதியில் 2 லட்சத்து 60 ஆயிரம் வீடுகள் சேதம் அடைந்ததாக செஞ்சிலுவைச் சங்கம் கூறியுள்ளது.

இந்த வீடுகள் அனைத்துமே மனிதர்கள் வசிக்க முடியாத அளவுக்கு உருக்குலைந்துவிட்டன. சில வீடுகள் மேற்கூரை மட்டும் இடிந்துள்ளன. சில வீடுகள் மேற்கூரையும், சுவர்களும் இடிந்து கிடக்கின்றன. இவற்றை சீரமைத்தால்தான் குடியிருக்க இயலும் என்றும் செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.

வடக்குப் பகுதியில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்ட பகுதியில் மட்டுமே இதுவரை தமிழர்கள் மறுகுடியமர்த்தப்பட்டுள்ளனர். வடக்குப் பகுதியில் பெரும்பகுதியில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுவிட்டன. இந்த பகுதிகள் மக்கள் வசிப்பதற்கு பாதுகாப்பானதாக மாற்றப்பட்டுள்ளன. மற்ற பகுதிகளிலும் கண்ணிவெடிகளை அகற்றும் பணி துரிதமாக நடந்து வருகின்றது.

வடக்கு மாகாணத்தின் கிழக்கு கடலோரப் பகுதியில் புதைத்து வைக்கப்பட்ட கண்ணிவெடிகளை அகற்றி அப்பகுதியை பாதுகாப்பானதாக மாற்றவும் இலங்கை அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

: இலங்கை அதிபர் ராஜபக்ஷே ஜூன் 8-ம் தேதி இந்தியா வருவார் என அறிவிக்கப்பட்டுள்ளது





இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவும், இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எல்.பெரிஸும் தெஹ்ரானில் இன்று சந்தித்துப் பேசினர்.

ஜி 15 மாநாட்டுக்காக இருவரும் தெஹ்ரானுக்கு வந்துள்ளனர். இருவரும் சுமார் 30 நிமிடங்கள் சந்தித்துப் பேசியதாகவும், இச்சந்திப்பின்போது இலங்கையில் நடைபெற்றுவரும் மறுசீரமைப்புப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவித்தன.

இலங்கை அதிபர் ராஜபக்ஷே ஜூன் 8-ம் தேதி இந்தியா வரத் திட்டமிட்டுள்ளதாக பெரிஸுடனான சந்திப்புக்குப் பின் எஸ் எம்.கிருஷ்ணா தெரிவித்தார். ராஜபக்ஷே, பிரதமர் மன்மோகன் சிங்கை திம்ப்புவில் நடைபெற்ற சார்க் உச்சிமாநாட்டின்போது கடைசியாக சந்தித்திருந்தார். இந்த ஆண்டு ஜனவரியில் அதிபராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் ராஜபக்ஷே இந்தியா வருவது இதுவே முதல் முறையாகும்.
மேலும் இங்கே தொடர்க...

ஈழத்தில் கொல்லப்பட்ட தமிழர்களுக்காக 17, 18-ந்தேதிகளில் கருப்பு சின்னம் அணிவோம்: டைரக்டர்கள், கவிஞர்கள் கோரிக்கை








ஈழத்தில் கொல்லப்பட்ட தமிழர்களுக்காக 17, 18-ந்தேதிகளில் கருப்பு சின்னம் அணிவோம்: டைரக்டர்கள், கவிஞர்கள் கோரிக்கை
திரைப்படம் திரைப்படம்
சென்னை, மே. 15-

இலங்கையில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரை 5 மாதங்கள் மிகப் பயங்கரமான இறுதி கட்டப்போர் நடந்தது. விடுதலைப்புலிகளை அழிப்பதாக கூறி சிங்கள ராணுவம் திட்டமிட்டு தமிழ் இனத்தையே அழிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டது. அப்பாவி ஈழத்தமிழர்கள் குறிவைத்து கொல்லப்பட்டனர்.

முல்லைத்தீவு மாவட்டமே சூறையாடப்பட்டது. சுமார் ஒரு லட்சம் ஈழத்தமிழர்கள் ஈவு இரக்கமின்றி கொல்லப்பட்டனர். போரின் உச்சக்கட்ட தாக்குதல் மே 17, 18-ந்தேதிகளில் முள்ளி வாய்க்கால் பகுதியில் நடந்தது.

அந்த 2 நாட்களில் மட்டும் சுமார் 40 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டனர். இந்தியா உள்பட எந்த நாடும் ஈழத் தமிழர்களை காப்பாற்ற முன்வரவில்லை. சுமார் 3 லட்சம் தமிழர்கள் வீடுகளை இழந்து சொந்த மண்ணிலேயே அகதிகளாக்கப்பட்ட கொடூரம் நடந்தது.

முள்ளி வாய்க்கால் சம்பவத்தை உலகம் முழுக்க வாழும் ஈழத்தமிழர்கள் நெஞ்சில் சோகத்தை சுமந்து கண்ணீர் மல்க நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். சிங்கள ராணுவ அரக்கர்களால் கொல்லப்பட்ட தமிழர்களுக்கு, அவர்கள் தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

கனடா, ஜெர்மனி, டென்மார்க், நார்வே, பிரான்சு, ஆஸ்திரேலியா, ஆலந்து உள்பட ஈழத்தமிழர்கள் உள்ள நாடுகளில் எல்லாம் மே 18-ந்தேதியை போர் குற்றவியல் நாள் ஆக அறிவிக்கக்கோரி கூட்டங்கள் நடந்து வருகிறது. வரும் 18-ந்தேதி இலங்கை தூதரகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தவும் ஈழத்தமிழர்கள் தயாராகி வருகிறார்கள்.

ஈழத் தமிழர்களின் படுகொலைக்கு தமிழ்நாட்டிலும் அஞ்சலி செலுத்த பல்வேறு அமைப்புகள் ஏற்பாடு செய்து வருகின்றன. அஞ்சலி பொதுக்கூட்டம், தீபம் ஏந்தி ஊர்வலம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன. நாம் தமிழர் இயக்கத்தலைவர் சீமான் மதுரையில் 18-ந்தேதி அஞ்சலி கூட்டம் நடத்துகிறார்.

இந்த நிலையில் தமிழ்நாட்டின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 100 பேர் கூட்டறிக்கை ஒன்றை இன்று வெளியிட்டனர். அதில் அவர்கள், ஈழத்தில் நடந்த இனப்படுகொலையை வேதனையோடு நினைவுப்படுத்தும் விதத்தில் வரும் 17, 18-ந்தேதிகளில் தமிழராய் பிறந்த ஒவ்வொரு வரும் கருப்பு சின்னம் அணிய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த கூட்டறிக்கையில் டைரக்டர்கள் மகேந்திரன், பாலுமகேந்திரா, ஆர்.சி. சக்தி, மணிவண்ணன், காந்திய சிந்தனையாளர் தமிழருவி மணியன், கவிஞர்கள் புலமைப்பித்தன், காசி ஆனந்தன், தாமரை, எழுத்தாளர்கள் பிரபஞ்சன், பா. செய் பிரகாசம், மூத்த மருத்துவர் செ.நெ. தெய்வநாயகம், ஓவியர்கள் மணியம் செல்வன், மாருதி, அரஸ், நடிகர்கள் நாசர், சத்யராஜ், வக்கீல் பால் ஜனகராஜ் உள்பட 100 பேர் கையெழுத்திட்டனர்.

போர் ஓய்ந்து ஓராண்டு ஆன பிறகும் இன அழிப்பு வேலையை சிங்கள ராணுவம் இன்னமும் கைவிடவில்லை. தமிழர்களின் அடையாள சின்னங்களை எல்லாம் அழித்துவிட்டு, அந்த இடங்களில் புத்தர் சிலைகளை நிறுவி வருகிறார்கள்.

தமிழர்களின் மறுவாழ்வுக்கு உரிய உதவிகள் செய்யப்படவில்லை. போர் முடிந்த பிறகு தமிழர்களுக்கு எல்லா உரிமைகளும் பெற்றுக் கொடுக்கப்படும் என்று வாய் கிழிய பேசிய இந்திய அரசு உள்பட பல்வேறு நாட்டரசுகள் தொடர்ந்து ஊமையாகவே உள்ளன.

மேலும் இங்கே தொடர்க...

மே 17 துக்க தினத்தை அமைதியாக அனுஷ்டியுங்கள்- கூட்டமைப்பு தமிழ் மக்களிடம் வேண்டுகோள்

உச்சக் கட்டப் போரின்போது பல்லாயிரக் கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டமை, பல இலட்சக்கணக்கானோர் பல்வேறு பாரிய பாதிப்புகளுடன் இருப்பிடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டமைக்கு துக்கம் தெரிவித்து நாளை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள துக்க தினத்தைத் தமிழ் மக்கள் அமைதியான முறை யில் அனுஷ்டிக்க வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

வருடாந்தம் மே மாதத்தில் வரும் 17 ஆம் திகதியை துக்க தினமாக அனுஷ்டிக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்திருந்தது. இதன்படி முதலாவது துக்க தினத்தை நாளை திங்கட்கிழமை அனுஷ்டிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், "வடக்கு, கிழக்கிலுள்ள கோயில்கள், தேவா லயங்களில் நாளை விசேட மதவழிபாட்டு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தமிழ் மக்கள் இந்த வழிபாடுகளில் கலந்து கொண்டு, கொடூர யுத்தத்தில் பலிக்கடாக் களாக்கப்பட்ட தமது உடன் பிறப்புகளின் ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்தனை புரியுமாறு வேண்டுகோள் விடுக்கிறேன்' என்றார்.

அதேவேளை, நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை மன்னார், வவுனியா உட்பட முக்கிய இடங்களில் பொதுக் கூட்டங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார் தமிழீழ விடுதலைப் புலிகளைத் தோற்கடித்து ஓராண்டு நிறைவையொட்டி நாடெங்கும் அரசினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வெற்றிக் கொண்டாட்டங்கள் தொடர்பில் கருத்துத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான மாவை சேனாதிராஜா, "நாங்கள் அழுது கண்ணீர் விட்டுக் கொண்டிருக்க தென்னிலங்கையில் அரசாங்கம் வெற்றிக் கொண்டாட்டங்களை நடத்துவதா, என்று கேள்வி எழுப்பியுள்ளார். "இதனை எங்களால் ஜீரணிக்க முடியாதுள்ளது. ஏற்றுக் கொள்ளவும் மாட்டோம். எங்களது மக்கள் கண்ணீர் வடித்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் அரசாங்கமோ இராணுவ ரீதியான கொண்டாட்டங்களை நடத்துவதனை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது' என அவர் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

காணி அபகரிப்பு குறித்து எனக்கு எதுவும் தெரியாது - என்கிறார் கிழக்கு மாகாண முதலமைச்சர் சந்திரகாந்தன்



கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ்பேசும் மக்களுக்குச் சொந்தமான காணிகளுக்கு பெரும்பான்மை இனமக்கள் உரிமை கோரும் விடயம் தொடர்பிலோ அல்லது அவற்றினை அபகரித்து கொள்வதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றமை குறித்தோ தனக்கு எதுவும் தெரியாதெனக் கூறும் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திர காந்தன், இந்த விவகாரம் தொடர்பில் தனக்கு தனிப்பட்டமுறையில் கூட முறைப்பாடுகள் செய்யப்படவில்லையென்றும் தெரிவிக்கிறார்.

"கிழக்கு மாகாணத்தில் தமிழ்பேசும் மக்களுக்குச் சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் பெரும்பான்மை இன மக்களால் அபகரிக்கப்படும் முயற்சி தொடர்பில் முதலமைச்சர் என்ற வகையில் தாங்கள் ஏதும் நடவடிக்கைகளை மேற்கொண்டீர்களா' என்று வீரகேசரி வாரவெளியீடு எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

"தமது காணிகள் அபகரிக்கப்பட்டமை தொட ர்பில் ஆதாரங்களுடன் அவர்கள் தெரிவித்தால் அது குறித்து ஆராய முடியும். ஆனால், எந்த முறைப்பாடும் கிடைக்காத நிலையில் தன்னால் ஒன்றும் செய்ய முடியாதெனவும் அவர் மேலும் கூறினார். இதேவேளை, இந்த விவகாரம் குறித்து கருத்துத் தெரிவித்த குச்சவெளி பிரதேச செயலாளர் உமா மகேஸ்வரன், "தனது பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட பகுதிகளிலுள்ள காணிகள் தொடர்பில் பல பிரச்சினைகள் எழுந்துள்ளதாக எனக்கு அறியக்கிடைத்துள்ளது. சிலர் என்னிடம் முறையிட்டுள்ளனர். சம்பந்தப்பட்ட இருதரப்பினரும் குறிப்பிட்ட காணிகள் தமக்குரியதெனக் கூறி ஆதாரங்களைச் சமர்ப்பிக்கின்றனர். ஆனால், அந்த ஆதாரங்களின் உண்மைத்தன்மையை ஆராய்ந்த பின்னரே தீர்மானத்தை எடுக்கமுடியும்' எனக் கூறினார்.

இதேவேளை, திருகோணமலை மாவட்டத்தின் மொரவௌ பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசத்திலுள்ள பன்குளம் பகுதியில் தமிழர்களுக்குச் சொந்தமான நூற்றுக் கணக்கான ஏக்கர் வயல் நிலங்கள் பெரும்பான்மை இனத்தவர்களக்ஷில் பலாத்காரமாகச் சுவீகரிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குறிப்பிட்ட காணிகளின் சொந்தக்காரர்கள் இருக்கும்போதே இவை பலாத்காரமாக கைப்பற்றப்படுவதாக இந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த பல அமைப்புகள் ஜனாதிபதிக்கும் உரிய அதிகாரிகளுக்கும் அறிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

பெரும்பான்மை இனத்தவர்களால் இவ்வாறு பலாத்காரமாகக் காணிகளைக் கைப்பற்ற மேற்கொள்ளப்படும் முயற்சிகள் குறித்து காணிகளுக்கான உறுதிப்பத்திரங்கள் உட்பட ஆதாரங்கள் இருந்தும் கூட இவ்வாறு நடப்பது தொடர்பில் உள்ளூர் மட்ட அதிகாரிகளிடம் முறைப்பாடுகள் செய்தும் இது தொடர்பில் பராமுகமாகவே அவர்கள் செயற்படுவதாக அந்தச் சங்கங்கள் குற்றம்சாட்டியுள்ளன. இதேவேளை, திருமலை மாவட்டத்திலுள்ள ஒட்டுபடுகொடு என்ற தமிழ்ப் பிரதேசத்திலுள்ள தமிழர்களுக்குச் சொந்தமான 800 ஏக்கர் வயற் காணிகளில் இதுவரை 200 ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகள் பெரும்பான்மை இனத்தவர்களால் பலாத்காரமாக அபகரிக்கப்பட்டுள்ளதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தரொருவர் வீரகேசரி வாரவெளியீட்டுக்குத் தெரிவித்தார்.

"தமிழர்களுக்குச் சொந்தமான காணிகள் என்பதற்கான ஆதாரங்கள் உள்ள நிலையிலும் இவ்வாறு நடப்பதனை தமிழ் மக்களின் தாயகப் பிரதேசங்களைத் திட்டமிட்டு கபளீகரம் செய்யும் ஒரு முன்னோடி நடவடிக்கையாகவே பார்க்க வேண்டியுள்ளது' எனவும் அவர் தெரி வித்தார். குறித்த காணிகள் தொடர்பில் எங்கும் எவரிடமும் முறைப்பாடு செய்யக் கூடாதெனவும் பாதிக்கப்பட்டவர்கள் அதிகாரிகளாலும் படைதரப்பினராலும் அச்சுறுத்தப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளை, திருமலை, இக்பால் நகரிலுள்ள முஸ்லிம்களுக்குச் சொந்தமான மீன்வாடிகள் அமைந்துள்ள காணிகளையும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த சிலர் தங்களுக்குச் சொந்தமெனக் கூறிக்கொண்டு அவற்றினைத் தம்வசப்படுத்தும் முயற்சிகளும் கடந்த வாரத்தில் இடம்பெற்றுள்ளன. இந்த விடயம் குறித்து குச்சவெளி பிரதேச செயலாளர் மகேஸ்வரனின் கவனத்துக்கும் கொண்டுவரப்பட்டுள்ளது.

இன்று அவசரக் கூட்டம்

திருகோணமலையிலுள்ள முஸ்லிம்களின் காணிகள் தொடர்பில் அவர்கள் தற்போது எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் மற்றும் திருமலை மாவட்ட எல்லை நிர்ணம் தொடர்பில் ஆராயும் வகையில் திருமலை மாவட்ட முஸ்லிம் சமாதான செயலகம், அரச சார்பற்ற நிறுவனங்கள் திருமலை மாவட்ட முஸ்லிம் பிரதேசங்களைச் சேர்ந்த புத்திஜீவிகள் இணைந்து இன்று கலந்துரையாடலொன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளதாக குச்சவெளி பிரதேச சபைத் தலைவர் ஆதம்பாவா தௌபீக் தெரிவித்தார். கிண்ணியா நூலக கேட்போர் கூடத்தில் இந்தக் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

புலிகளின் ஆதரவாளர்களுக்கு உதவ வேண்டாம்'

விடுதலைப் புலிகளின் இயக்கம் மீண்டும் வலுப்பெற எந்த வகையிலும் உதவ வேண்டாம் என்று ஐரோப்பிய நாடுகளுக்கு இலங்கை வேண்டுகோள் விடுத்திருக்கிறது.

பெல்ஜியம், லக்சம்பர்க், ஐரோப்பிய யூனியனுக்கு இலங்கையின் தூதராகச் செயல்படும் ரவிநாத ஆரியசின்ஹ இந்த வேண்டுகோளை இலங்கை அரசின் சார்பில் விடுத்திருக்கிறார்.

பயங்கரவாதச் சூழல், ஐரோப்பிய யூனியனில்அதிகரித்துவரும் பயங்கரவாதப் போக்கு என்ற பொருளில் நடைபெற்ற கருத்தரங்கில் தூதர்களாகப் பதவி வகிப்போர் பங்கேற்றனர். பிரùஸல்ஸ் நகரில் இந்தக் கருத்தரங்கு நடைபெற்றது. அதில் பேசுகையில் ஆரியசின்ஹ இந்த வேண்டுகோளை விடுத்தார்.

"தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை கடந்த ஆண்டு மே மாதம் இலங்கை ராணுவம் சுட்டுக் கொன்ற பிறகு ஒரு துப்பாக்கி குண்டு கூட இலங்கையில் சுடப்படவில்லை. ஏதோ ஒரு அனுதாபத்தில் நீங்கள் செய்யும் உதவிகளால் அந்த அமைதி மீண்டும் குலைவதற்கு நீங்கள் காரணமாக இருக்காதீர்கள்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தை ""நாடு கடந்த அரசாக'' நிர்வகிக்க அந்த இயக்கத்தின் ஆதரவாளர்கள் முயல்கின்றனர். அவர்களுக்கு எந்த விதத்திலும் யாரும் உதவிகளைச் செய்யக்கூடாது.

சர்வதேசச் சட்டங்களை மீறியதற்காகவும் பயங்கரவாத அமைப்புக்கு ஆயுதம் வழங்கியதற்காகவும் நிதி திரட்டியதற்காகவும் உங்கள் நாடுகளில் பல விடுதலைப் புலிகள் ஆதரவாளர்கள் கைது செய்யப்படுவதாகவும் நீதிமன்ற விசாரணைக்குப் பிறகு சிறையில் அடைக்கப்படுவதாகவும் செய்திகளைப் படிக்கிறேன்.

இப்படி ஆங்காங்கே எஞ்சியிருக்கிற விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களும் மற்றவர்களும் போலியாக அமைப்புகளை ஏற்படுத்தி, தேர்தலை நடத்தி நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கின்றனர். விடுதலைப் புலிகள் இயக்கம் வெறும் தீவிரவாத இயக்கம் மட்டும் அல்ல. உலகம் முழுவதும் நல்ல வலைப்பின்னல் தொடர்புகளை வைத்துக்கொண்டிருக்கும் இயக்கமாகும்.

அந்த அமைப்புக்குள்ள சொத்துகள் உலகின் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு வடிவங்களில் வெவ்வேறு நபர்களிடம் பிரிந்துள்ளன. விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் நேரடியாகத் தங்கள் அமைப்பின் பெயரைப் பயன்படுத்தாமல் வெவ்வேறு பெயர்களில் பல இயக்கங்களைத் தோற்றுவித்து அவற்றின் மூலமாகச் செயல்பட்டு வருகின்றனர். அனுதாபப்பட்டு அவர்களுக்கு இடம் கொடுத்தால் மீண்டும் பயங்கரவாதம்தான் தலைதூக்கும்' என்று அவர் எச்சரித்தார்.

ஜி-15க்கும் ராஜபட்ச தலைவர்: இந்தியா உள்ளிட்ட 15 நாடுகளின் குழுமத்துக்கு புதிய தலைவராக இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்ச வரும் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொள்கிறார். வரும் 2 ஆண்டுகளுக்கு அவர்தான் தலைவர்.

அடுத்த ஜி-15 உச்சி மாநாடு ஈரான் தலைநகர் தெஹ்ரானில் வரும் திங்கள்கிழமை தொடங்குகிறது.

அல்ஜீரியா, அர்ஜென்டீனா, பிரேசில், சிலி, எகிப்து, இந்தியா, இந்தோனேசியா, ஈரானின் இஸ்லாமியக் குடியரசு, ஜமைக்கா, கென்யா, மலேசியா, மெக்சிகோ, நைஜீரியா, செனகல், இலங்கை, வெனிசுலா, ஜிம்பாப்வே ஆகியவை ஜி-15 அமைப்பில் இடம் பெற்றுள்ளன.
மேலும் இங்கே தொடர்க...

பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஒன்று சேரும் பயங்கரவாதிகள்


இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாதிகள் ஒருங்கிணைந்து வருகின்றனர். கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டை தாண்டி இந்திய பகுதிக்குள் ஊடுருவவும் முற்பட்டுள்ளனர். இது தொடர்பாக, கட்டுப்பாட்டு எல்லைக்கோட்டை ஒட்டிய பாகிஸ்தான் பகுதியைச் சேர்ந்த உள்ளூர்வாசிகளும், அரசியல் தலைவர்களும் கூறியதாவது: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியிலுள்ள நீலம் பள்ளத்தாக்கில், புதிய மனிதர்கள் பலர் தென்படுகின்றனர். இவர்கள் எல்லாம் இந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் அல்ல. அவர்களின் தோற்றமும், அவர்கள் பேசும் மொழியும், அவர்கள் உள்ளூர்வாசிகள் இல்லை என்பதைக் காட்டுகின்றன.

கடந்த சில வாரங்களாக, பயங்கரவாதிகளின் ஜிகாதி நடவடிக்கைகள் துவங்கிவிட்டன. இவர்கள் எல்லை வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவி, காஷ்மீருக்குள் செல்ல முற்பட்டுள்ளனர். இந்தியா - பாகிஸ்தான் இடையேயான இருதரப்பு அமைதி பேச்சு வார்த்தைகளையும் சீர்குலைக்க அவர்கள் முற்பட்டுள்ளனர். பயங்கரவாதிகளின் ஊடுருவலால், நீலம் பள்ளத்தாக்கு பகுதி மக்கள் பீதியில் இருக்கின்றனர். பயங்கரவாதிகள் இந்திய பகுதிக்குள் ஊடுருவ முற்பட்டால், இரு நாட்டு ராணுவத்துக்கும் இடையில் துப்பாக்கிச் சண்டையும் ஆரம்பித்து விடும். இவ்வாறு உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

வேற்றுக்கிரகவாசிகள் இருப்பது உறுதி: விஞ்ஞானி தகவல்



லண்டன் ஏலியன்ஸ்' என்றழைக்கப்படும் வேற்றுக்கிரகவாசிகள் இருப்பது உறுதி; ஆனால் அவர் களை, மனிதர்கள் தொடர்பு கொள்ள முயற்சிக்கக் கூடாது' என, பிரபல விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் கூறியுள்ளார். ஸ்டீபன் ஹாக்கிங் கூறியதாவது: பிரபஞ்சத்தில், 10 ஆயிரம் கோடி நட்சத்திர மண்டலங்கள் உள்ளன. ஒவ்வொரு நட்சத்திர மண்டலத்திலும் லட்சக்கணக்கான நட்சத்திரங்கள் உள்ளன. இவற்றில், பூமியில் மட்டுமே உயிரினங்கள் வாழ்கின்றன என்று கூறுவது தவறு.

என்னுடைய கணித அறிவின்படி, வேற்று கிரகவாசிகள் உள்ளனர் என்பது தெரிகிறது. அவர்கள் எந்த உருவத்தில் உள்ளனர் என்பதைக் கண்டறிவது தான் சவாலான விஷயம். அவர்கள் நுண்ணுயிரிகளாகவும் இருக்கலாம். புழுவாகவும் இருக்கலாம். அவற்றிலிருந்து பரிணாம வளர்ச்சி அடைந்த உருவங்களாகவும் இருக்கலாம். அவர்களுடைய வளர்ச்சி எப்படி இருக்கும் என்பதற்கு, நம் உயிரினத்தின் வளர்ச்சியை உதாரணமாகக் கொள்ளலாம்.

தங்கள் கிரகத்திலுள்ள அனைத்து வளங்களையும் பயன்படுத்தி விட்டு, தற்போது வேறு இடத் தில் வசிப்பதாக நான் கருதுகிறேன். அது போன்ற வேற்று கிரகவாசிகள், மற்ற கிரகங்களுக்கு நாடோடிகள் போல நுழைந்து, அவ்வுலகத்தைக் கைப்பற்றவும் தயாராக இருக்கலாம். ஆனால், அவர்கள் இவ்வுலகில் நுழைந்தால், அவர்களுக்கு அது வெற்றியாக அமைய வாய்ப் பில்லை. இவ்வாறு ஸ்டீபன் ஹாக்கிங் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...