13 ஜூலை, 2010

புளொட்டின் 21வது வீரமக்கள் தினம் இன்று ஆரம்பம்(படங்கள் இணைக்கப்பட்டுள்ளன



தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) ஆண்டுதோறும் அனுஷ்டித்துவரும் வீரமக்கள் தினம் இன்று 13ம்திகதி செவ்வாய்க்கிழமை முதல் எதிர்வரும் 16ம் திகதி வெள்ளிக்கிழமை வரையிலுமான நான்கு நாட்கள் அனுஸ்டிக்கப்படுகின்றது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்கள் கொல்லப்பட்ட தினமான ஜூலை 13ம் திகதிமுதல் புளொட் செயலதிபர் கதிர்காமர் உமாமகேஸ்வரன் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட தினமான ஜூலை 16ம் திகதி வரையிலான காலப்பகுதியை வீரமக்கள் தினமாக புளொட் அமைப்பினர் பிரகடனப்படுத்தி ஆண்டுதோறும் அனுஷ்டித்து வருகின்றனர். இன்றுகாலை 10மணியளவில் வவுனியா கோவில்குளத்தில் அமைந்துள்ள புளொட் செயலதிபர் உமாமகேஸ்வரன் அவர்களின் சமாதியில் மௌன அஞ்சலியும், மலராஞ்சலியும் செலுத்தப்பட்டுள்ளது.

இதில் புளொட்டின் மத்தியகுழு உறுப்பினர்களான வவுனியா நகரசபை எதிர்க்கட்சித் தலைவர் ஜி.ரி.லிங்கநாதன், சிவநேசன் (பவன்), பீற்றர் மற்றும் புளொட் உறுப்பினர்களும், ஆதரவாளர்களும், பொதுமக்களும், வவுனியா நகரசபை உறுப்பினர்களான குமாரசாமி, பார்த்தீபன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர். அத்துடன் வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு ஆகிய மாவட்டங்களிலுள்ள புளொட் அலுவலகங்களிலும் இன்று வீரமக்கள் தின நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளன. இறுதிநாளான 16ம்திகதி செயலதிபர் உமாமகேசுவரன் சமாதி வளாகத்தில் மலராஞ்சலி மற்றும் மௌன அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெறுவதுடன் அஞ்சலிக் கூட்டமொன்றும் இடம்பெறவுள்ளது. அன்றையதினம் வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு ஆகிய மாவட்டங்களிலுள்ள புளொட் அலுவலகங்களிலும் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெறவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
கனடாவில் 21வது வீரமக்கள் தின நிகழ்வுகள்- தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) அனுஷ்டித்துவரும் வீரமக்கள் தினம் வருடாவருடம் ஜூலைமாதம் 13ம் திகதிமுதல் 16ம் திகதிவரையிலுமான நான்கு நாட்கள் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்கள் கொல்லப்பட்ட தினமான ஜூலை 13ம் திகதிமுதல் புளொட் செயலதிபர் கதிர்காமர் உமாமகேஸ்வரன் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட தினமான ஜூலை 16ம்திகதி வரையிலான காலப்பகுதியை வீரமக்கள் தினமாக புளொட் அமைப்பினர் பிரகடனப்படுத்தி ஆண்டுதோறும் அனுஷ்டித்து வருகின்றனர்.

இந்தவகையில் கனடாவில் எதிர்வரும் 17.07.2010 சனிக்கிழமை மாலை 5.00மணியளவில் புளொட்டின் 21வது வீரமக்கள் தின நிகழ்வுகள் ஆரம்பமாகி இடம்பெறவுள்ளன. அன்றையதினம் மௌன அஞ்சலி மற்றும் மலராஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்று, அதனைத் தொடர்ந்து வரவேற்புரை, அஞ்சலிக் கூட்டம் என்பனவும் இடம்பெறவுள்ளன. இந்நிகழ்வுகளில் அனைவரையும் பங்கேற்குமாறு புளொட்டின் கனடா கிளையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
இடம்: 2723, St.Clair Ave East, East York, Canada, M4B 1M8

தொடர்புகட்கு : 001 . 416 . 6132771 .


மேலும் இங்கே தொடர்க...

இலங்கையர் உள்ளிட்ட அகதிகளுக்கு கிழக்கு தீமோரில் மத்திய நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு


அவுஸ்திரேலியாவுக்கு படகுமூலம் செல்லும் இலங்கையர்கள் உள்ளிட்ட சட்டவிரோத குடியேற்றவாசிகளுக்காக கிழக்குத் தீமோரில் மத்திய நிலையமொன்றை ஸ்தாபிக்கும் திட்டத்தை தீமோர் நாடாளுமன்றம் நேற்று நிராகரித்துள்ளது. இவ்வாறான மத்திய நிலையமொன்றினை ஸ்தாபிப்பது தொடர்பான அவுஸ்திரேலியாவின் திட்டத்தை நிராகரிக்கும் வகையில் தமது நாடாளுமன்றத்தில் யோசனையொன்றை நிறைவேற்றிக் கொண்டதாக தீமோர் பிரதமர் ஜனானா கும்பாவோ தெரிவித்துள்ளார்.


கடல் மார்க்கமாக அவுஸ்திரேலியாவுக்கு வரும் சட்டவிரோத குடியேறிகளை கிழக்குத் தீமோரில் ஸ்தாபிக்கப்பட்டுவரும் மத்திய நிலையங்களில் தங்கவைத்து அடையாள பத்திரங்களை பரிசோதிப்பதே அவுஸ்திரேலியாவின் திட்டமாகும். தற்போது அவர்கள் அவுஸ்திரேலியாவுக்கு சொந்தமான கிறிஸ்துமஸ் தீவில் வைத்தே பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். அதேவேளை அவுஸ்திரேலியாவிற்கு அப்பால் சட்டவிரோத குடியேறிகளை பரிசோதனைக்கு உட்படுத்தும் மத்திய நிலையமொன்றை ஸ்தாபிக்கும் யோசனையை பிரதமர் யூலியா கிலாட் முன்வைத்துள்ளார். முன்னாள் பிரதமர் கெவின் ரூட் பதவி விலகுவதற்கும் சட்டவிரோத குடியேறிகளின் பிரச்சினையே காரணமாக இருந்தது.

இந்நிலையில் அவுஸ்திரேலிய குடியேறிகளுக்கான மத்திய நிலையமொன்றினை ஸ்தாபிக்கும் யோசனை கிழக்கு தீமோரினால் நிராகரிக்கப்பட்டதானது அவுஸ்திரேலியாவின் புதிய பிரதமருக்கும் தீர்வுகளை முன்வைப்பதில் பெரும் நெருக்கடி நிலையை தோற்றுவித்துள்ளதாக கூறப்படுகின்றது.
மேலும் இங்கே தொடர்க...

ஐ.நா நிபுணர் குழுவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஜெனீவாவில் ஆர்ப்பாட்டம்-



ஐ.நா பொதுச்செயலர் பான்கீ மூன் இலங்கை தொடர்பில் ஆலோசனை பெறுவதற்காக நியமிக்கப்பட்ட குழுவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகளின் தலைமையகத்திற்கு முன்பாக இன்று ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்படவுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஐரோப்பிலுள்ள இலங்கையர்களும், பல்வேறு அமைப்புகளும் கலந்து கொள்ளவிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. அதேவேளை ஜெனீவாவில் இன்று இடம்பெறுகின்ற எதிர்ப்பு நடவடிக்கைகளில் பங்கேற்கவென ஐக்கிய இராஜ்ஜியம், பிரான்ஸ், ஜெர்மன், இத்தாலி, நோர்வே உட்பட ஐரோப்பிய நாடுகளில் வாழ்கின்ற இலங்கையர்கள் சுவிஸ்லாந்துக்கு செல்லவிருப்பதாக கூறப்படுகின்றது. இலங்கையின் இறைமையைப் பாதுகாப்பதற்கான அமைப்பினாலேயே இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
மேலும் இங்கே தொடர்க...

தமிழுக்கு பெருமை சேர்க்கும் முத்து வைர முத்துவே தங்களிற்கு புதியபாதையின் பிறந்த நாள் வாழ்த்துகள்

கவிஞர் வைரமுத்து பிறந்த நாள்: தமிழ் அறிஞர்கள் வாழ்த்து
கவிஞர்கவிஞர் வைரமுத்து    பிறந்த நாள்:     தமிழ் அறிஞர்கள் வாழ்த்து வைரமுத்துவின் 57-வது பிறந்த நாள் விழா கவிஞர்கள் திருநாளாக இன்று கொண்டாடப்பட்டது. பிறந்த நாளையொட்டி வைரமுத்து முதல்-அமைச்சர் கருணாநிதி இல்லத்துக்கு சென்று அவரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

பின்னர் டிரஸ்ட்புரத்தில் உள்ள பொன்மணி மாளிகையில் பிறந்தநாள் விழா நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவுக்கு சென்னை பல்கலைக்கழக துணை வேந்தர் க.திருவாசகம் தலைமை தாங்கினார். நடிகர்கள் ராஜேஷ்இ விவேக்இ இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன்இ ம.முத்தையா உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.

கவிஞர் பூவை செங்குட்டுவனுக்கு கவிஞர்கள் திருநாள் விருது வழங்கப்பட்டது. இறுதியில் வைரமுத்து சிறப்புரை நிகழ்த்தினார். வெற்றி தமிழர் பேரவை காதர்மைதீன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
மேலும் இங்கே தொடர்க...

செறிவூட்டப்பட்ட 20 கிலோ யுரேனியம் தயார் ஈரான் அறிவிப்பு

ஈரான் நாடு உலக நாடுகளின் மிரட்டலை மீறி, 20 கிலோ செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை தயாரித்து உள்ளது. இதை ஈரானின் அணுசக்தி தலைவர் அலி அக்பர் சலேகி தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது:-

யுரேனியத்தை செறிவூட்டுவதை ஈரான் கைவிடவேண்டும் என்று உலக நாடுகள் அமெரிக்காவின் தலைமையில் வலியுறுத்தின. மின்சாரத்துக்காக என்ற பெயரில் நாங்கள் அணுகுண்டு தயாரிக்க இருக்கிறோம் என்று தான் அந்த நாடுகள் எங்களை எதிர்த்தன. நாங்கள் அமைதி நோக்கத்துக்காக தான் அதை செறிவூட்டி இருக்கிறோம். அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் அணுஉலைக்கூடத்துக்கான எரிபொருளை நாங்களே தயாரிப்போம். இதற்கான தொழில்நுட்பத்தை நாங்கள் ஏற்கனவே பெற்று விட்டோம்.

இவ்வாறு சலேகி கூறினார்
மேலும் இங்கே தொடர்க...

2 கொலை வழக்குகளில் 4 இந்தியர்களுக்கு தூக்கு தண்டனை துபாய் கோர்ட்டு தீர்ப்பு



துபாய் நாட்டில் 2 தனித்தனி கொலை வழக்குகளில் 4 இந்தியர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. குமார் என்ற தொழில் அதிபர் தன்னிடம் வேலை பார்த்து, பின்னர் தொழில் அதிபராக மாறிய குமில் என்பவரை கூலிப்படையை ஏவி கொலை செய்தார். இந்த வழக்கில் கூலிப்படையினர் ஜகாரியா, பஷீர், அன்வர் ஆகியோருக்கு ஷார்ஜா கோர்ட்டு தூக்கு தண்டனை விதித்தது. இந்த சம்பவத்தில் குஜாந்தில் என்பவரையும் அவர்கள் கொலை செய்ய முயன்றனர். ஆனால், அவர் படுகாயங்களுடன் உயிர் பிழைத்துக் கொண்டார். இந்த வழக்கில் 3 பேருக்கும் தனியாக தலா 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. தொழில் அதிபர் குமாருக்கு 15 ஆண்டு ஜெயில் தண்டனையும், கொலையாளிகளுக்கு உடந்தையாக இருந்த பக்கீர் அல் தீன் மற்றும் அப்துல் மஜீத் ஆகியோருக்கு தலா 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும் விதிக்கப்பட்டது.

இன்னொரு வழக்கில் இந்தியாவைச் சேர்ந்த எஸ்.எஸ். என்பவருக்கு ஷார்ஜா ஷரியா கோர்ட்டு தூக்கு தண்டனை விதித்தது. கூலித் தொழிலாளியான இவர் தன்னுடன் தங்கி இருந்த இன்னொரு தொழிலாளியை, வாய்த் தகராறில் ஆத்திரமடைந்து அடித்து கொலை செய்ததாக போலீசார் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
மேலும் இங்கே தொடர்க...

யாழ் அரச அதிபராக இமெல்டா இன்று பதவியேற்பு

யாழ்ப்பாண அரசாங்க அதிபராக இமெல்டா சுகுமார் இன்று பிற்பகல் பதவியேற்றுள்ளார்.

இவரது பதவி ஏற்பு வைபவம் கடந்த முதலாம் திகதி நடைபெறவிருந்த போதும், சில முரண்பாடுகளால் அது ஒத்தி வைக்கப்பட்டது.

அதேவேளை, தற்போதைய யாழ்ப்பாண அரசாங்க அதிபர் கே. கணேஸ் ஓய்வுபெற்றுச் செல்கிறாரா? அல்லது பதவி உயர்வு பெற்று செல்கிறாரா என்பது பற்றிய தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
மேலும் இங்கே தொடர்க...

தனுனவின் தாயாரை நீதிமன்றில் ஆஜராகும்படி உத்தரவு

தனுன திலகரட்னவின் தாயாரை அடுத்த மாதம் 5 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இவர்மீது சட்டமா அதிபர் மீண்டும் குற்றச்சாட்டுக்களை இன்று சுமத்தியுள்ளார்.

இதனையடுத்து குறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தனுனவின் தாயாரை எதிர்வரும் ஆகஸ்ட் 5 ஆம் திகதியன்று மன்றில் ஆஜராகுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் மருமகனான தனுன திலகரட்ன ஹை கோப் ஆயுத ஊழல் குற்றச்சாட்டின் பேரில் தேடப்படும் நபராக நீதிமன்றத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தனுனவின் தாயார் அசோகா திலகரட்ன, இலங்கையின் நிதி சட்டங்களுக்கு புறம்பாக, 52 ஆயிரத்து 700 அமெரிக்க டொலர்கள், 20 ஆயிரம் ஸ்டேலிங் பவுண் மற்றும் 15 லட்சம் ரொக்கப்பணம் ஆகியவற்றை வங்கி வைப்பகத்தில் வைத்திருந்தமை தொடர்பில் இக்குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
மேலும் இங்கே தொடர்க...

உலகில் புலிகளின் எண்ணிக்கை 3200 ஆக குறைந்தது





இயற்கை பேரழிவுகள் மற்றும் சட்ட விரோதமாக வேட்டையாடுதல் போன்ற காரணங்களால் தற்போது புலிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது உலகில் 3200 புலிகள் மட்டுமே உயிர் வாழ்வது தெரிய வந்துள்ளது.


எனவே புலிகள் இனத்தை பெருக்குவது குறித்து இந்தியா, சீனா, இந்தோனேசியா, மலேசியா, வங்காள தேசம் உள்ளிட்ட 13 நாடுகளின் பிரதிநிதிகள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இந்தியா வில் மட்டும் தற்போது 1411 புலிகள் உள்ளன.
மேலும் இங்கே தொடர்க...

சர்வதேச குற்றவியல் கோர்ட்டில் சூடான் அதிபர் மீது இனப்படுகொலை குற்றச்சாட்டு பதிவு







ஆப்பிரிக்க நாடான சூடானில் ஒமர் அல்-பஷீர் அதிபராக இருக்கிறார். அங்குள்ள தார்பர் பகுதியில் உள்ள பழங்குடியின மலைவாழ் மக்கள் தங்கள் உரிமைகளுக்காக போராடி வரு கின்றனர்.

அவர்களின் போராட்டத்தை சூடான் அரசு ராணுவம் மூலம் அடக்கி வருகிறது. இந்த நிலையில் கடந்த 2003-ம் ஆண்டு ஏப்ரலில் நடந்த தாக்குதலின்போது போராட்டத்தில் ஈடுபட்ட பர், மசாலித், ஷகாவா ஆகிய இன மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர்.

இதை தொடர்ந்து அந்நாட்டு அதிபர் ஒமர் அல்- பஷீர் மீது நெதர்லாந்தில் உள்ள சர்வதேச குற்றவியல் கோர்ட்டில் போர்குற்ற வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அதிபர் ஒமர் அல்- பஷீருக்கு கடந்த ஆண்டு கைது வாரண்ட் உத்தரவு பிறப்பித்தார்.

மனிதாபிமானத்துக்கு எதிராக இனப்படுகொலை செய்ததாக குற்றம் சாட்டி இது வழங்கப்பட்டது. இதை எதிர்த்து ஒமர் அல்-பஷீரின் சார்பில் அவரது வக்கீல் லூயிஸ் மொரேனோ நகாம்போ கடந்த 4 மாதத் துக்கு முன்பு அப்பீல் செய்தார்.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இதை விசாரித்த நீதிபதிகள் அதிபர் ஒமர் அல்-பஷீர் மீது இனப்படுகொலை தொடர்பாக 3 குற்றச்சாட்டுகள் பதிவு செய்து கீழ் கோர்ட்டு அறிவிப்பை உறுதி செய்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கொன்று குவித்தது, அதன் மூலம் அப்பகுதி மக்களுக்கு மனரீதியாக வருத்தத்தை ஏற்படுத்தியது, மற்றும் அடக்குமுறையை பயன்படுத்தியது என்ற 3 குற்றச்சாட்டுகளை பதிவு செய்தனர்.

போர்குற்ற வழக்கு தொடர்பாக சர்வதேச கோர்ட்டில் இனப்படுகொலை குற்றச்சாட்டு பதிவு செய்யப் பட்ட முதல் அதிபர் இவர தான் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதமர் முறைமை தொடர்பில் விரிவாக ஆராய்வு-ரணில் தெரிவிப்பு



மக்களுக்குப் பொருத்தமான அரசியல மைப்பொன்றை ஏற்படுத்துவது தொடர்பில் விரிவான பேச்சுவார்த்தை நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமைக்குப் பதிலாக, பாராளுமன்றத்துக்குப் பொறுப்பு கூறும் வகையிலான நிறைவேற்று அதிகாரத்தைக் கொண்ட பிரதமர் முறைமையை அறிமுகப்படுத்துவது குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், எதிர்க்கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

ஜனாதிபதி தலைமையிலான குழுவினருடன் அடுத்த வாரத்தில் நடைபெறவிருக்கின்ற இந்தப் பேச்சுக்களின் போது, ஏனைய எதிர்க்கட்சிகளையும் இணைத்துக்கொள்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ஊளதாகவும் அவர் சொன்னார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழுவினருக்கும், எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினருக்கும் இடையில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற சந்திப்பு தொடர்பில் தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று மாலை கொழும்பு கேம்பிரிட்ஜ் டெரசில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது.

அதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு அவர் மேலும் கூறுகையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழுவினருடனான சந்திப்பில் அரசியலமைப்பு திருத்தம், 17 ஆவது திருத்தச் சட்டம் மற்றும் தேர்தல் முறைமையில் மாற்றம் உள்ளிட்ட விடயங்கள் குறித்து ஆராயப்பட்டன.

தேர்தல்களைப் பொறுத்தவரையில் பிரதேச சபை, நகரசபை மற்றும் பொதுத் தேர்தல் ஆகியவற்றில் புதிய மாற்றங்களைக் கொண்டுவருவதும், விருப்புவாக்கு முறைமையை மாற்றியமைப்பதும் அரசாங்கத்தின் நோக்கமாகத் தெளிவுறுத்தப்பட்டது. அதிலும், நகர சபை மற்றும் பிரதேச சபைத் தேர்தல்களின் போது, இந்த மாற்றங்களை உடனடியாக அமுல்படுத்துவது அரசாங்கத்தின் நோக்கமாக இருக்கின்றது. இது தொடர்பில் எமது தரப்பு நிலைப்பாடுகளை அரசாங்கத்திற்கு தெளிவுபடுத்தினோம்.

அரசாங்கம் மேற்கொள்ளவிருக்கின்ற அரசியலமைப்பு மாற்றம் தொடர்பிலான பேச்சுக்களின் போது, அரசியலமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்துவதானால் அது மக்கள் மயமான அரசியல் அமைப்பாக அமையவேண்டும் என்பதையும், அது மக்களின் நலனில் எந்தவிதமான பாதிப்புகளையும் ஏற்படுத்தாத வகையிலும் அமையவேண்டும் என்பதையும் நாம் எடுத்துக் கூறினோம்.

17 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவது, அதனூடாக சுயாதீன ஆணைக்குழுக்களை அமைப்பது தொடர்பிலும் வலியுறுத்தினோம். இந்த விடயங்கள் சம்பந்தமாக இரு தரப்பினரும் கலந்துரையாடி, இது தொடர்பில் மீண்டும் பேச்சுக்களை நடத்தி தீர்மானங்களை மேற்கொள்வதென இணக்கம் காணப்பட்டுள்ளது.

அடுத்த வாரத்தில் நாம் ஜனாதிபதியை சந்தித்து பேச்சு நடத்துவோம். இதன்போது, ஜனநாயக தேசியக் கூட்டணியையும் இணைத்துக்கொள்வது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அத்துடன், தமிழ்த் தேசிக் கூட்டமைப்பு ஏற்கனவே அரசாங்கத்துடன் பேச்சு நடத்திவருகின்றது. எனவே, அது குறித்து இங்கு கூறுவதற்கில்லை. ஜனாதிபதியுடனான இந்த சந்திப்பு மக்களின் நலன் கருதியதாகும். எனினும், அரசாங்கத்தின் மக்கள் விரோத செயற்பாட்டுகளுக்கு நாம் தொடர்ந்தும் எதிர்ப்புக்களைத் தெரிவித்துக் கொண்டேயிருக்கிறோம். மக்கள் மீதான விலைவாசிச் சுமை, வரிச் சுமை உள்ளிட்ட ஏனைய பிரச்சினைகள் தொடர்பிலும் எமது போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அரசியலமைப்பு திருத்தம், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமைக்குப் பதிலாக, பாராளுமன்றத்துக்குப் பொறுப்புக் கூறுகின்ற நிறைவேற்று அதிகார முறைமையினை அறிமுகப்படுத்துவது தொடர்பிலான இந்தப் பேச்சுவார்த்தைகள் சம்பந்தமாக முன்னேற்றகரமான கருத்துக்களை பொது மக்களிடமிருந்து எதிர்பார்க்கின்றோம். ஐக்கிய தேசியக் கட்சியை பொறுத்தவரையில் எந்த சந்தர்ப்பத்திலும் அது மக்களுக்காகவே குரல்கொடுக்கின்ற கட்சியாகும். ஜனநாயகத்தையும், சுதந்திரத்தையும் அதேநேரம் நல்லாட்சியையும் மக்களுக்கான நிவாரணங்களையும் பெற்றுக்கொடுப்பதற்கான நோக்கத்திலேயே அது செயற்பட்டு வருகின்றது. இந்நிலையில், அரசியலமைப்புத் திருத்தங்கள் தொடர்பில் அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகளும் நாட்டினதும், மக்களினதும் எதிர்காலம் கருதியதாகவே அமைகின்றது என்றார்
மேலும் இங்கே தொடர்க...

ஜி.எஸ்.பி. பிளஸ் நீடிப்பு பற்றிய பேச்சுக்களில் முன்னேற்றமில்லை

இலங்கைக்கு அடுத்த மாதத்துடன் முடிவடைய இருக்கும் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை தொடர்ந்து வழங்குவது குறித்து இலங்கை அரசாங்கத்திற்கும் ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவுக்கும் இடையே வெள்ளிக்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் எதுவித முன்னனேற்றமும் ஏற்படவில்லை.

இலங்கை மக்களுக்கு வரிச்சலுகையின் அனுகூலங்களை கிடைக்கச் செய்யும் நோக்கத்துடன் அரசாங்கம் ஒரு வழியை தேடுகின்ற அதேவேளை ஒன்றியம் கடந்த மாதம் அரசாங்கத்திற்கு அனுப்பிவைத்த ஏற்றுக் கொள்ளப்பட முடியாத நிபந்தனைகள், காலக்கெடு ஆகியவற்றை அடிப்படையாக வைத்து எதையும் செய்யும் நிலையில் அரசாங்கம் இல்லை என்று மேற்படி பேச்சவார்த்தைகளில் அமைச்சர் பீரிஸ், தெளிவாகத் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள ஆங்கில இணயத்தளம் ஒன்று இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவின் தலைவர் பேர்னாட் செவேஜிடம் இதபற்றி கேட்டபோது, கடந்த வாரம் இலங்கை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸுடன் பேசிய பின்னர் இதுவரை இந்த விவகாரத்தில் எதுவித முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று கூறியுள்ளார்.

வரிச்சலுகையை நீடிப்பதற்கு ஒன்றியம் விதித்த நிபந்தனைகள் இலங்கையின் இறைமையை மீறுவாக அமைந்துள்ளன என்று தெரிவித்த இலங்கை அத்தகைய நிபந்தனைகளை ஏற்றக் கொள்ள முடியாது என்று தெரிவித்ததை அடுத்து, அடுத்த மாதம் நடுப்பகுதியிலிருந்து இலங்கை ஜிஎஸ்பி வரிச்சலுகையை இழக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

எனினும், ஒன்றியத்தின் நிபந்தனைகள் தொடர்பான இலங்கையின் நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்திக் கூறுவதற்காக அமைச்சர் பீரிஸ் கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பில் ஐரோப்பிய ஒன்றிய தூதுவர்களை சந்தித்து வரிச்சலுகையை பெற்றுக் கொள்வதற்காக அரசாங்கம் ஆக்கபூர்வமான யோசனைகளை பரிசீலனை செய்ய தயாராக இருக்கிறது என்று தெரிவித்தார்.

இலங்கை ஜிஎஸ்பி வரிச்சலுகையை தக்கவைத்து கொள்வதற்கான கால அவகாசம் அடுத்த மாதம் 15ஆம் திகதியுடன் முடிவடைய இருக்கும் நிலையில, புதிய யோசனைகள் எதையாவது ஒன்றியம் பரிசீலனை செய்கிறதா என்று செவேஜிடம் கேட்டபோது அதுபற்றி தாம் எதுவுத் கேள்விப்படவில்லை என்று அவர் கூறியுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

ஆஸி. செனட் சபைத் தேர்தலில் யாழ். பெண் போட்டி

அவுஸ்திரேலிய செனட் சபைத் தேர்தலில் இலங்கைப் பெண் ஒருவர் போட்டியிடுகின்றார்.

கிறீன் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிடும் இவர் புலம்பெயர்ந்து வாழும் யாழ்ப்பாணத் தமிழ் பெண்மணியாவார்.

பிராமி ஜெகன் (வயது 30) என்பவரே இவ்வாறு போட்டியிடுகின்றார். இவர் முன்னர் ஊடகவியலாளராகப் பணியாற்றியவர்.

இவர் சிறுமியாக இருக்கும் போதே இலங்கையில் ஏற்பட்டிருந்த கலவரங்களையடுத்து குடும்பத்தினருடன் நாட்டை விட்டு வெளியேறிவர். சோமாலியா, தன்சானியா, மலேசியா போன்ற நாடுகளில் தங்கியிருந்த இவர் இறுதியில் அவுஸ்திரேலியாவைச் சென்றடைந்தார்.

கிறீன் கட்சியின் செனட் சபை வேட்பாளராக நியமிக்கப்பட்டது குறித்து அவரிடம் கேட்கப்பட்ட போது,

"தமிழ்ச் சமூகத்துக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டுமென்ற நோக்கத்திலேயே இத்தேர்தலில் போட்டியிடுகின்றேன்.

குறிப்பாக அவுஸ்திரேலியாவில் ஈழத் தமிழ் அகதிகளுக்குப் புகலிடம் பெற்றுக்கொடுப்பதே எனது அரசியல்நோக்கம்" என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

தெ.கொரிய யுத்த கப்பல் மூழ்கடிப்பு : பேச்சு வார்த்தை ஒத்தி வைப்பு

தென் கொரிய யுத்த கப்பல் மூழ்கடிக்கப்பட்டமை குறித்த ஐ.நா சபையுடனான பேச்சுவார்த்தையை வட கொரியா ஒத்தி வைத்துள்ளது.

தென்கொரியாவுக்குச் சொந்தமான போர்க்கப்பல் கடந்த மார்ச் மாதம் வடகொரியாவால் மூழ்கடிக்கப்பட்டதாகப் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதில் 46 பேர் வரை கொல்லப்பட்டனர்.

இது தொடர்பான் பேச்சுவார்த்தை வடகொரிய தலைநகர் பியொன்ஜியங்கில் இடம்பெற இருந்தது. சில நிர்வாக காரணங்கள் காரணமாக இப்பேச்சுவார்த்தை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஐ.நா அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும் இங்கே தொடர்க...

“நீயும் என் மருமகளைப் போலத்தான்..” ஐஸ்வர்யாராய்க்கு ரஜினி ஆசி..!




படத்தின் நாயகியான ஐஸ்வர்யா ராய், ரஜினியின் காலில் விழுந்து ஆசி பெற்று மும்பை திரும்பினார்.

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இரண்டு ஆண்டுகளாக நடந்த எந்திரன் படப்பிடிப்பு முடிந்துள்ளது. மூன்று தினங்களுக்கு முன் இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பெருங்குடியில் நடந்தது. ரஜினி, ஐஸ்வர்யாராய் சம்பந்தப்பட்ட பாடல் காட்சி அங்கு படமானது.

படப்பிடிப்பு முடிந்ததும் எல்லோரது முகத்திலும் பிரிந்து செல்லும் வாட்டம் தெரிந்தது. படக் குழுவினர், ஒருவருக்கொருவர் கட்டிப் பிடித்தும், கை குலுக்கியும் பிரியா விடை பெற்றனர்.

அப்போது ஐஸ்வர்யாராய் யாரும் எதிர்பாராத வகையில் ரஜினி காலில் விழுந்து வணங்கினார். தன்னை வாழ்த்தி ஆசி வழங்குமாறு கேட்டுக் கொண்டார்.

ஐஸ்வர்யாராய் செயல் ரஜினிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. `இதெல்லாம் எதுக்கும்மா?` என்றவர், பின்னர் சுதாரித்துக் கொண்டு ஐஸ்வர்யா ராயை ஆசீர்வதித்தார். `நீயும் எனக்கு மருமகள் போலத்தான்` என்று சொல்லி வாழ்த்தினார்.

ஐஸ்வர்யாராய் பணிவைப் பார்த்து படப்பிடிப்பு குழுவினர் வியந்தனர். படக் குழுவினர் பலரும் ரஜினியின் காலில் விழுந்து ஆசி பெற ஆரம்பிக்க, அவர்களைத் தடுத்த ரஜினி, "யாரும் யார் காலிலும் விழுவது தேவையில்லாதது. என் ஆசீர்வாதம் அனைவருக்கும் உண்டு" என்றார்.

எந்திரன் அடுத்த மாதம்(ஆகஸ்டு) இறுதியில் ரிலீசாகும் என்று நிருபர்களிடம் ரஜினி நேற்று தெரிவித்தது நினைவிருக்கலாம்.
மேலும் இங்கே தொடர்க...

தனிப்பட்ட தேவைகளுக்காக அன்றி நாட்டை பற்றி நன்கு சிந்தித்தே அரசியலமைப்புத் திருத்தம் செய்ய வேண்டும்




ஐக்கிய தேசியக் கட்சியுடனான பேச்சுவார்த்தையில் ஜனாதிபதி சுட்டிக்காட்டு

தனிப்பட்ட தேவைகளுக்காக அரசியல மைப்புத் திருத்தங்களை மேற்கொள்ளக் கூடாது. நாட்டைப் பற்றி நன்றாக சிந்தித்துத் தெளிவான நோக்கத்தின் பேரிலேயே அதனை ஏற்படுத்துவதே அவசியமானது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.

பொதுஜன ஐக்கிய முன்னணியின் பிரதிநிதிகள் மற்றும் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி பிரநிதிகளுக்கும் இடையே நேற்று (12) மாலை அலரி மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.

ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கூறியவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அச் சந்திப்பில் மேலும் கூறியதாவது:- தற்போது உள்ள நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை விட நாட்டுத் தலைவர் பதவி பாராளுமன்றத்துக்கு பொறுப்புக் கூறும், பாராளுமன்றத்துடன் ஒத்துழைப்புடன் செயற்படும், பாராளுமன்றத்துடன் சேர்ந்து இயங்கக் கூடிய பதவியாக மாற்றப்பட வேண்டும் என்பதே 40 வருடங்காலம் பாராளுமன்ற உறுப்பினராக இருந்து பெற்ற அனுபவத்தின் மூலம் தனது நம்பிக்கையாக உள்ளது என்று ஜனாதிபதி இங்கு மேலும் கூறினார்.

சர்வகட்சிக் குழுவுக்கு ஸ்ரீலங்கா சுதந் திரக் கட்சி முன்வைத்த ஆலோசனையான பாராளுமன்றத்துக்கு பொறுப்புக் கூறும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதமர் பதவியை ஏற்படுத்துவது தொடர்பாக இங்கு விரிவாக ஆராயப்பட்டது.

அத்துடன் எதிர்காலத்தில் ஏற்படுத்தப்படும் அரசிலமைப்பு திருத்தங்கள் மூலம் பாராளுமன்றத்துக்குப் பொறுப்புக் கூறும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதமர் பதவியை ஏற்படுத்துவதற்கு பொதுஜன ஐக்கிய முன்னணி மற்றும் ஐக்கிய தேசிய கட்சியினர் இங்கு இணக்கம் தெரிவித்தனர்.

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முறை தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சி பிரதிநிதிகள் இங்கு கேட்டுக்கொண்ட நிலையில் அவர்களுக்கு அமைச்சர்களான தினேஷ் குணவர்தன, பசில் ராஜபக்ஷ அகியோர் விளக்கமளித்தனர்.

அத்துடன் 17ஆவது திருத்த சட்டத்தின் கீழ் ஏற்படுத்தப்படும் நிறுவனங்களை வலுப்படுத்துவது தொடர்பாக இரு தரப்பினரினதும் அவதானம் செலுத்தப் பட்டது.

அவ்வாறு வலுப்படுத்தவும் அந்த நிறுவனங்களுக்கு நியமிக்கப்படும் அதிகாரிகள் அமைச்சரவைக்கு பொறுப்புக் கூற வேண்டுமென்றும் இங்கு இணங்கப்பட்டது.

அத்துடன் எந்த அரசாங்கத்தின் கீழும் நிலையான ஆட்சி இடம்பெற வேண்டும் என இரு தரப்பினரும் இங்கு கொள்கை யளவில் இணக்கப்பாட்டுக்கு வந்ததுடன் எதிர்காலத்தில் இடம்பெறும் அரசியல மைப்பு திருத்தத்தின் மூலம் அதனை உறுதிப்படுத்த வேண்டுமென்றும் இரு தரப்பினரும் இணக்கம் தெரிவித்தனர். இரண்டு தரப்பினரின் பிரதிநிதிகளால் உருவாக்கப்படும் குழுவின் மூலம் இணங் கப்பட்ட மேற்படி விடயங்களை செயற்ப டுத்துவதென்றும் முடிவு செய்யப்பட்டது.

ஐக்கிய தேசியக் கட்சி அதன் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் கரு ஜயசூரிய, காமினி ஜயவிக்கிரம பெரேரா, திஸ்ஸ அத்தநாயக்க, ஜோஸப் மைக்கல் பெரேரா ஆகியோரும் பொதுஜன ஐக் கிய முன்னணி அமைச்சர்கள் மைத்திரிபால சிறிசேன, நிமல் சிறிபால டி சில்வா, சுசில் பிரேமஜயந்த், ஜீ. எல். பீரிஸ், தினேஷ் குணவர்த்தன, பசில் ராஜபக்ஷ, டலஸ் அலகப்பெரும ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.
மேலும் இங்கே தொடர்க...

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி திட்டங்கள்.13 .07.2010 . இன்று ஆரம்பம்


அமைச்சரவைக் கூட்டம் மற்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விஜயம் என்பவற்றையொட்டி கிளிநொச்சியில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் இன்றும் நாளையும் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படவுள்ளன.

இந்த வகையில் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றத்தின் புனரமைப்பு நடவடிக்கைகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதுடன் கிளிநொச்சி மாவட்டச் செயலக மைதானத்தில் மாபெரும் பொதுக் கூட்டமொன்றும் ஜனாதிபதி தலைமையில் நடைபெறவுள்ளது.

அமைச்சரவைக் கூட்டம் மற்றும் முக்கிய நிகழ்வுகள் பல கிளிநொச்சியில் நடைபெறுவதையிட்டு கிளிநொச்சி நகரம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் உட்பட அரச உயர் அதிகாரிகள் கலந்துகொள்ளும் பல்வேறு நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இதன்படி இன்று காலை கிளிநொச்சி கரச்சி பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்துடன் இணைந்ததான எரிபொருள் நிரப்பும் நிலையத்தினை பெற்றோலிய வளத்துறை அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

நாளைய தினம் 14ம் திகதி கால்நடை மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சின் தேசிய கால்நடை அபிவிருத்தி சபையும் மில்கோ நிறுவனமும் இணைந்து கிளிநொச்சியில் பால் பொதிசெய்யும் தொழிற்சாலையொன்றை அமைக்கவுள்ளதுடன் இத்தொழிற்சாலையை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைப்பார்.

அத்துடன் கலாசார அமைச்சு ஏற்பாடு செய்துள்ள மாவட்டக் கலாசார பயிற்சிப் பட்டறை நிகழ்வொன்று மாவட்டச் செயலகத்தில் நடைபெறவுள்ளதுடன் இந்நிகழ்வில் அமைச்சர் திருமதி பவித்ரா வன்னியாரச்சி கலந்துகொள்ளவுள்ளார்.

சமூக சேவைகள் அமைச்சின் ஏற்பாட்டில் நடமாடும் மக்கள் சேவை நிகழ்வொன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதுடன் அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா இந்நிகழ்வில் கலந்துகொள்வார். குறிப்பாக வட மாகாணத்திலுள்ள முதியோர் பயன்பெறும் வகையில் இந்த நடமாடும் சேவை நடத்தப்படவுள்ளது.

அதேவேளை; நேற்று முன்தினம் அமைச்சர் டியூ குணசேகரவின் தலைமையில் விசேட நடமாடும் சேவை கிளிநொச்சியில் நடத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...