30 செப்டம்பர், 2010

வன்னியிலிருந்து இடம்; பெயர்ந்தோருக்கு 5 இலட்சம் பெறுமதியான வாழ்வாதார உதவி

வன்னியிலிருந்து இடம் பெயர்ந்து திருக்கோயில் பிரதேச செயலகப்பிரிவில் வினாயகபுரம்,காயத்திரி கிராமம் ஆகிய இடங்களில் மீள்குடியேறியுள்ள மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்ப ஹரிட்டாஸ் எகெட் நிறுவனம் சுமார் 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான வாழ்வாதார உதவிகளை இன்று காலை வழங்கியுள்ளது.

12 குடும்பங்களுக்கு 40 ஆயிரம் ரூபாய் பெறுமதியான நீர் இறைக்கும் இயந்திரங்களையும், 2 குடும்பங்களுக்கு 25 ஆயிரம் பெறுமதியான தையல் இயந்தரங்களையும் வழங்கியுள்ளனர்.

திருக்கோயில் பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்ற வைபவத்தன்போது ஹரிட்டாஸ் எகெட் பணிப்பாளர் அருட்பேராசிரியர் ஸ்ரீதரன் சில்வெஸ்டர் பொருட்களை கையளித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

கணவனால் வெட்டுண்ட மனைவி உயிரிழப்பு: மஸ்கெலியாவில் சம்பவம்

நுவரெலியா மாவட்டம் மஸ்கெலியா சாமிமலை பிரதேசத்திலுள்ள கவிரவில தோட்டத்தில் இன்று இடம் பெற்ற கொலைச் சம்பவம் ஒன்றில் குடும்பப் பெண்ணொருவர் கத்தி வெட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். இவரை வெட்டிய இந்தப் பெண்ணின் கணவர் தானும் கழுத்தில் வெட்டிக் கொண்டதால் ஆபத்தான நிலையில் கண்டி வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இந்தச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது :

கவிரவில தோட்டத்தைச்சேர்ந்த தொழிலாளர் குடும்பம் ஒன்றின் கணவன் - மனைவிக்கு இடையில் தனிப்பட்ட தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் மனைவி இன்று பிற்பகல் 1 மணியளவில் விறகு பொறுக்கிக் கொண்டு வீடு வந்து கொண்டிருந்த போது வழியில் மறைந்திருந்த கணவன் திடிரென பாய்ந்து கத்தியினால் மனைவியின் கழுத்தினை வெட்டியுள்ளார். இதன் போது கழுத்து வெட்டுக்கு இலக்காகிய மனைவி அவ்விடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதன் பின்பு தலைமறைவாகிய கணவன் மதுவருந்தி விட்டு பின்னர் நஞ்சும் அருந்தி கொண்டு தனது கழுத்தையும் வெட்டிக்கொண்டுள்ளார்.

இதன் பின்பு உயிரிழந்த பெண் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளார். தன்னைத்தானே வெட்டிக்கொண்டவர் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு பின்னர் நாவலப்பிட்டிய வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார்

அங்கு அவருக்கு அவசரமான சிகிச்சை அளிக்கப்பட்டதன் பின்பு மேலதிக சிகிச்சைக்காக தற்போது கண்டி வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். இந்தச்சம்பவத்தில் உயிரிழந்தவர் மூன்று பிள்ளைகளுக்குத்தாயான 47 வயதுடைய வள்ளி என்ற பெண்மணினாவார்.

ஆபத்தான நிலையிலுள்ள இந்தப்பெண்ணின் கணவனின் பெயர் ரட்ணராஜா ( வயது 58 ) என்பவராவார். இந்தச்சம்பவம் தொடர்பான விசாரணைகளில் மஸகெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
மேலும் இங்கே தொடர்க...

தண்டனை ஒர் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையாகும்: அனேமா பொன்சேகா

ஜனநாயகத் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சரத் பொன்சேகாவிற்கு இராணுவ நீதிமன்றம் வழங்கியுள்ள தண்டனை ஓர் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையாகும் என அவரது பாரியார் அனேமா பொன்சேகா தெரிவித்துள்ளார்.

ராஜகிரியவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அனோமா, ஜனாதிபதியினால் அங்கீகரிக்கப்பட்ட 30 மாதகாலச் சிறைத்தண்டனையை தமது குடும்பம் ஏற்றுக்கொள்ளாது எனவும், நாட்டின் பொதுமக்களும், இராணுவத்தினரும் இந்தத் தீர்ப்பை நிராகரிக்க வேண்டுமென தாம் கோரிக்கை விடுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ஜனாதிபதியின் தனிப்பட்ட எண்ணத்திற்கு அமைவாக இந்தத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இத் தண்டனை தம்மை பலவீனப்படுத்தாது எனவும், இதன் மூலம் தாம் இன்னமும் வலிமையடைவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனது கணவரை மீட்டெடுப்பதற்காக தைரியததுடன் போராட்டங்களை முன்னெடுக்க உத்தேசித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

ஜனாதிபதியின் செயலானது சர்வாதிகாரத்தை தெளிவு படுத்துகின்றது: ஜே.வி.பி

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு எதிரான இரண்டாவது இராணுவ நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு ஜனாதிபதி அங்கீகாரம் வழங்கியுள்ளார். இச் செயலானது சர்வதிகாரத்தை தெளிவுப் படுத்துகின்றது என ஜே.வி.பி. யின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே டில்வின் சில்வா இவ்வாறு தெரிவித்தார்.

யுத்தத்தை வெற்றி கொண்ட முன்னாள் இராணுவத் தளபதிக்கு சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் நாட்டில் பல குற்றச் செயல்களை புரிந்தவர்கள் சுதந்திரமாக இருக்கின்றனர். நாட்டில் ஜனநாயம் மாறி சர்வதிகாரத்தை ஆட்சி தொடர்கிறது. இதனை ஜே.வி.பி எதிர்த்து போராடவும் தயாராக உள்ளது என மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

இந்திய - இலங்கைக் கடற்படையினர் நடுக்கடலில் பேச்சுவார்த்தை



இந்திய - இலங்கை கடற்படையினர் நடுக்கடலில் பேச்சுவார்த்தை நடத்தினர். தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலைத் தடுப்பது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.

தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்துவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் எனக் கோரிக்கை எழுந்தவண்ணம் உள்ளது.

இதுதொடர்பாகவே இந்திய மற்றும் இலங்கை கடற்படையினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.



பேச்சுவார்த்தையின் போது இனி தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடைபெறாதவாறு நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை கடற்படை அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

கடலோர பாதுகாப்பைப் பலப்படுத்தும் வகையில் இருநாட்டு கடற்படை மற்றும் காவல்படைகள் இணைந்து சுற்றுக்காவல் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் இதன் போது வலியுறுத்தப்பட்டது.
மேலும் இங்கே தொடர்க...

கனடாவில் இதுவரை 85 சதவீதமானோருக்கு அகதி அந்தஸ்து

கனடாவில் 85.2 சதவீதமானோருக்கு 2010 ஆம் ஆண்டு, முதல் காலப்பகுதியில் அகதி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளதாக கனடாவின் குடிவரவு மற்றும் அகதிகள் அதிகாரசபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகவலை கனடா இணையத்தளம் ஒன்று வெளியிட்டுள்ளது.

இதன் பிரகாரம் 345 பேருக்கு அகதிகள் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளதாகவும் 50 பேரின் அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் 705 பேர் அகதிகள் அந்தஸ்து கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகதி அந்தஸ்து கோரிய இலங்கையரில் அநேகர் தமிழர்கள் என கனடாவின் குடிவரவு திணைக்கள சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு அகதி அந்தஸ்து வழங்கப்பட்டவர்கள் 2009 ஆம் ஆண்டு இலங்கையில் நிலவிய இறுதிகட்ட யுத்த சூழலின் போது பாதிக்கப்பட்டவர்கள் என ஹொஸ்கோர்ட் ஹால் லோ ஸ்கூலின் விரிவுரையாளர் சீன் ரேஹாக் தெரிவித்துள்ளார்.

யுத்தம் முடிவடைந்த போதும், தமிழ் மக்களுக்கு எதிரான மனித உரிமை மீறல் நடவடிக்கைகள் இடம்பெறுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சர்வதேச மன்னிப்புச் சபை மற்றும் அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் இதனை உறுதிப்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வருடம் ஆகஸ்ட் மாதம் 425 இலங்கையர்களுடன் கப்பல் ஒன்று வன்கூவர் துறைமுகத்தை வந்தடைந்தது.

இவ்வாறு சட்டவிரோத கப்பல்கள் நாட்டை வந்தடையுமிடத்து, சட்டவிரோத செயல்களில் ஈடுப்பட்டவர்களும் நாட்டை வந்தடையக் கூடும் என அச்சம் தெரிவிக்கப்படுகிறது. சிலர் அதிக பணத்தைக் கொடுத்து இவ்வாறு சட்ட விரோதமாக கனடாவை வந்தடைகின்றனர்.

சிலர் அகதி அந்தஸ்து கோரி சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவதாக கனடாவின் குடிவரவு மற்றும் குடிவரவு அமைச்சர் ஜெசன் கென்னி கருத்து வெளியிட்டுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

முன்னாள் புலிப் போராளிகள் 418 பேர் இன்று விடுதலை

புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப்புலிப் போராளிகள் 418 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

வவுனியா கலாசார மண்டபத்தில், சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வுத்துறை அமைச்சர் டி.ஈ.டபிள்யூ குணசேகர தலைமையில், முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களை விடுதலை செய்யும் நிகழ்வு இடம்பெற்றது.

நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர்,

"இறுதிக் கட்டப் போரின் போது, 11ஆயிரத்து 800 முன்னாள் விடுதலைப்புலிப் போராளிகள் இலங்கைப் பாதுகாப்பு படையினரிடம் சரணடைந்தனர். இவர்கள் பின்னர் வவுனியா நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டனர். 12 நலன்புரி நிலையங்களில் இவர்களுக்கு தொழில் சம்பந்தமான பயிற்சிகள் வழங்கப்பட்டன. இவர்களில் 4,000 பேர் விடுவிக்கப்பட்டனர். மேலும் 2000 பேர் அடுத்த மாதம் விடுவிக்கப்படுவர்" எனத் தெரிவித்தார்.

சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வுத்துறை பிரதி அமைச்சர் விஜிதமுனி சொய்சா, புனர்வாழ்வுத்துறை ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க, மற்றும் சிரேஷ்ட அரச அதிகாரிகள் ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
மேலும் இங்கே தொடர்க...

சரத் பொன்சேகாவுக்கு எதிரான 2 ஆவது தீர்ப்புக்கு ஜனாதிபதி அங்கீகாரம்





ஜனநாயகத் தேசியக் கூட்டணித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகாவுக்கு எதிரான இரண்டாவது நீதிமன்ற தீர்ப்புக்கு ஜனாதிபதி அங்கீகாரம் வழங்கியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவுக்கு இரண்டாவது நீதிமன்றம் 30 மாதகால சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.

அச்சமயம், ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் சபையின் 65 ஆவது அமர்வில் கலந்து கொள்ள சென்றிருந்ததால், அவர் நாடு திரும்பியதும், அவரது தீர்மானத்துகமைவாகவே தீர்ப்பு நடைமுறைப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இலங்கைச் சட்டத்தின் அடிப்படையில் ஆறு மாதத்திற்கு மேல் சிறைத்தண்டனை அனுபவிக்கும் ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்துவிடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்படி, சரத் பொன்சேகா தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்கக் கூடும் எனக் கூறப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...

யுத்தம் ஆரம்பித்து நிறைவடையும் வரையிலும் இந்தியா ஒருபோதும் அழுத்தம் கொடுக்கவில்லை:கோத்தபாய ராஜபக்ஷ

இறுதிக்கட்ட யுத்தம் முன்னெடுக்கப்பட்டுக்கொண்டிருந்த வேளையில் பிரான்ஸ், இங்கிலாந்து வெளிவிவகார அமைச்சர்கள், ஐ.நா. பிரதிநிதிகள், சர்வதேச பிரதிநிதிகள் மற்றும் அமைப்புக்கள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்தி இணக்கப்பாட்டை ஏற்படுத்துமாறு அழுத்தம் கொடுத்தனர். எனினும், யுத்தம் ஆரம்பிக்கப்பட்டு நிறைவடையும் வரையிலும் இந்தியா ஒருபோதும் அழுத்தம்கொடுக்கவில்லை என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்தார்.

பிரதேசங்களை கைப்பற்றினோம். ஆனால் இறுதிமுடிவு எட்டப்படவில்லை. எனினும் ஜனாதிபதியின் தலைமைத்துவம் மற்றும் குழுவாக இணைந்து செயற்படுதல் மூலமாகவே பயங்கரவாதத்தை தோற்கடிக்க முடிந்தது. உலகம் மிகவேகமாக வளர்ந்த அந்த தருணத்தை நாம் தவறவிட்டுவிட்டோம். இச் சந்தர்ப்பத்தை பயன்படுத்திகொள்ளவேண்டும் என்றும் அவர் சொன்னார். வங்கித்தொழில் கற்கை நிலையத்தில் நேற்று நடைபெற்ற வைபவத்தில் பொருளாதார முகாமைத்துவமும் கற்றுக்கொண்ட யுத்தமும் எனும் தலைப்பில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

2005 ஆம் ஆண்டு பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக நான் நியமிக்கப்பட்ட போது பலரும் என்னுடன் கலந்துரையாடினர். யுத்தத்தின் மூலம் புலிகளை தோற் கடி ப் ப த ற்கு அரசாங்கங்கள் பல முயற்சித்தன. அவையாவும் தோல்வியடைந்தன. இந்நிலையில் புலிகளை யுத்தத்தின் மூலமாக புலிகளை தோற்கடிக்கமுடியாது. அவர்கள் கேட்பதை கொடுத்து பேச்சுவார்த்தையின் மூலமாக தீர்வு காணுமாறு அவர்கள் என்னிடம் கோரிநின்றனர்.யுத்தம் மற்றும் பேச்சுவார்த்தை ஆகிய இரண்டு முறைமைகள் ஊடாகவும் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு ஆட்சியிலிருந்து பல அரசாங்கங்கள் முயற்சித்தன. நாமும் முயற்சிகளை மேற்கொண்டோம். தனியாக அல்ல, இந்தியா மற்றும் நோர்வேயூடாக விடயங்களை விளங்கிக்கொண்டோம்.

எமது நிலைப்பாட்டில் நாம் இருந்தோம், யுத்தத்தில் ஏனைய அரசாங்கங்கள் ஏன் தோல்வியடைந்தன. அவற்றை திரும்பி பார்க்கமுடியாது. எனினும் நாம் திரும்பிப்பார்த்தோம், வடமாராட்சி படைநடவடிக்கை தொடர்பில் திரும்பி பார்த்தோம். படையினரின் பலத்திற்கு புலிகளால் ஈடுகொடுக்கமுடியாது, நாம் ஒவ்வொரு தடவையும் வெற்றியீட்டு÷வாம். ஆனால் அதனை நிறைவுக்கு கொண்டுவரவில்லை.

படைநடவடிக்கை, சமூகம், அரசியல், பொருளாதாரம், ராஜதந்திரம் மற்றும் சர்வதேச தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது. வடமராட்சி நடவடிக்கை முடிவுக்கு கொண்டுவரப்பட்ட போதிலும் முடிவுக்கு கொண்டுவரப்படவில்லை, எனக்கு படைநடவடிக்கை தொடர்பில் பொறுப்பு வழங்கப்பட்டது. தலைவர்களுடன் பலமாக கடமையாற்றினோம்.

2005 ஆம் ஆண்டு தலைவரை நாம் இறக்குமதி செய்யவில்லை, எம்மிடத்தில் பலவீனம் இருந்தது. அதனை நாம் கண்டுகொண்டோம். புலிகள், படையினருக்கு கூடுதலான இழப்புகளை ஏற்படுத்தி இடங்களை கைப்பற்றினர். யாழ்ப்பாணத்தை மீட்டோம், பின்னர் நாம் கிழக்கை மீட்டெடுத்தவேளை தந்திரோபாய பின்வாங்கல் என்று பிரபாகரன் தெரிவித்தார். எதிர்க்கட்சியும் கூறியது.

வன்னி வனாந்தரம் பயங்கரவாதம் ஆட்கொண்டிருந்தது. எங்களிடத்தில் போதுமான படையினர் இருக்கவில்லை. படையை ஓர் இடத்திலிருந்து எடுக்கமுடியாத நிலைமை. ஜயசிக்குறு நடவடிக்கையின் போது யாழ்ப்பாணத்தை கைப்பற்றினோம். எனினும் பாதுகாக்கமுடியவில்லை. இவ்வாறான நிலைமைகள் படைப்பலத்தை பாதிக்கும். இதுபெரியதொரு காரணமாகவும் அமையும். படைகளை பலப்படுத்தவேண்டும் என்று கோரினோம். அதற்கான ஒரு பகுதியை நான் ஏற்றுக்கொண்டிருந்தேன்.

சர்வதேசம் அழுத்தம் கொடுத்தது இந்தியாவிற்கும் எமக்கும் இடையில் நல்லதொரு புரிந்துணர்வு இருந்தது. இந்தியாவில் சிறுபான்மை ஆட்சியிருந்தாலும் எங்களிடத்தில் புரிந்துணர்வு இருந்தது. பொருளாதார ரீதியில் நாங்கள் பணத்தை நாம் செலவழித்தோம். உலகளாவிய ரீதியில் பொருளாதார நெருக்கடி நிலைமை ஏற்பட்டவேளையிலும் அதற்கும் நாம் முகம்கொடுத்தோம்.

ஆட்சிபீடம் ஏறியவேளையில் பலமாக அரசாங்கம் இருக்கவில்லை, படைநடவடிக்கையை தொடர்வதற்கு அரசியல் மிக முக்கியமானது. 2005 ஆம் ஆண்டு சிறுபான்மை அரசாங்கமே இருந்தது. பாராளுமன்றத்திலும் பலமிழந்து இருந்தது. மக்களின் ஆதரவு அத்தியாவசியமானது ஆதரவு கிடைக்காவிடின் தொடரமுடியாது.

பல அரசாங்கங்கள் படையணிகளை பலப்படுத்த விரும்பவில்லை. படைகளை பலப்படுத்துவதை மிக முக்கியமான விடயமாக கருத்தில் கொண்டோம். முப்படைகளையும் பொலிஸ் மற்றும் சிவில் படைகளை பலப்படுத்தினோம். ஜனாதிபதியினால் மட்டுமே படைகளை பலப்படுத்த முடியும். அதற்கான அதிகாரமும் அவரிடத்திலேயே இருக்கின்றது. கிழக்கில் முப்படைகளை பலப்படுத்தினோம். வன்னியில் அவ்வாறானதொரு நிலைமை ஏற்படவில்லை.

தெளிவான தூரநோக்கு , குறிக்கோள் இவை முக்கியமான விடயமானதாகும். அதற்கு தலைமைத்துவமும் முக்கியமானதாகும். புரிந்துணர்வு காலத்தில் படைகளின் முக்கியஸ்தர்களும் புலிகளின் முக்கியத்தலைவர்களும் கலந்துரையாடினர். பேச்சுவார்த்தைகளை அரச தலைவர்கள் முன்னெடுக்கவேண்டும். படையினர் பயிற்சியில் ஈடுபடவேண்டும் என ஜனாதிபதி கூறினார். படையினரின் ஹெலிகொப்டர்களை புலிகள் கோரியிருந்த வேளையில் அவற்றை நாம் கொடுக்கவில்லை.

கெப்பத்திகொல்லாவையில் கிளேமோர் தாக்குதல் சம்பவம் இடம்பெற்ற வேளையில் அங்கு செல்லவேண்டாம் என பாதுகாப்பு அதிகாரிகள் ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்கினர். ஜனாதிபதி சென்றார். மக்களுடன் கலந்துரையாடினார். அதுதான் தலைமைத்துவம். படையினருடன் பயணித்தார், விஜயம் செய்தார். வவுனியாவிற்கு போகுமாறு நான் கோரியபோது கிளிநொச்சிக்குதான் செல்வேன் என்று ஜனாதிபதி சென்றிருந்தார்.

பாதுகாப்பு சபைக்கூட்டம் ஒவ்வொரு புதன்கிழமையும் நடைபெறும் எந்த நேரத்தில் நடைபெற்றாலும் அதில் ஜனாதிபதி கட்டாயமாக பங்கேற்பார். ஒரு கூட்டத்தையேனும் தவறவிடவில்லை. அது தலைமைத்துவதற்கு முக்கியமானது. படைநடவடிக்கைகளை மெதுவான முன்னெடுக்கவேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். முகமாலையில் ஒரே நாளில் 125 க்கு மேற்பட்ட படையினரையும் ஆறு படையணிகளையும் இழந்தோம். அனுராதபுரத்தில் விமானங்களை இழந்தோம். இப்போது சரிதானே என பலரும் வினவினர் ஆனால் தலைமைத்துவம் புதிய விடயங்களை தேடிக்கொண்டிருந்தது. அவர் அஞ்சவில்லை .

புலிகளின் விமானங்கள் எமது படைப்பலத்திற்கு போதுமானதாக இருக்கவில்லை என்றாலும் அவை உளவியல் ரீதியில் தாக்கத்தை கொடுத்தன. 2005 ஆம் ஆண்டு வான் பாதுகாப்பு முறைமை எங்களிடத்தில் இருக்கவில்லை. எனினும் புலனாய்வு தகவல்களின் பிரகாரம் 1998 ஆம் ஆண்டிலிருந்தே புலிகள் விமானங்களை வைத்திருந்தனர் . புலிகளின் விமான தாக்குதல் எமக்கு முதல் அனுபவமாக இருந்தது. அதற்காக கவலையடையவில்லை.

பலநாடுகளில் ஆலோசனை பெற்றோம் மிகவேகமான விமானங்களையும் புதிய ஹெலிகளையும் அறிமுகம்செய்தோம். பயிற்சியில் ஈடுபட்டோம். கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயிற்சியில் ஈடுபட்டவேளையில் விமானங்கள் சுட்டு கீழே வீழ்த்தப்படுவதை ஜனாதிபதி பார்த்தார். தலைமைத்துவம் பலமிழந்திருந்தால் கட்டளை அதிகாரிகளும் படையினரும் பலமிழந்திருப்பர். தலைமைத்துவத்தின் பங்களிப்பு முக்கியமானது. அதுவே எங்களை ஊக்குவிக்கசெய்யும். ஊக்குவிப்புகளை விமர்சம் செய்தனர். அவற்றை தவிர்ப்பதற்கு படையினருக்கு அவர்களின் குடும்பங்களுக்கும் நலன்புரி விடங்களை மேற்கொண்டோம்.படையினருக்கு ஆயுதங்கள் சீருடைகளை மட்டுமே வழங்கவில்லை. அவர்கள் முகம்கொடுக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டோம். குழுவாக வேலைச்செய்தோம். பாதுகாப்பு முன்களத்தில் இருப்பவர்களுக்கு உதவினோம்.

நான்காவது ஈழபோர் வடக்கு கிழக்கில் மட்டுமல்ல நாடுமுழுவதும் வியாபிக்கப்படும் என்று பிரபாகரன் தெரிவித்திருந்தார். மக்களும் தலைவர்களும் எங்களுக்கு ஒத்துழைப்பு நல்கினர். தலைமைத்துவதற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் புலிகள் மேல்மாகாணத்தில் தாக்குல் நடத்தினர். வடக்கு கிழக்கில் படைநடவடிக்கைளை மேற்கொண்ட ஏககாலத்தில் பொருளாதார நிலையங்களையும் பாதுகாத்தோம்.

கட்டுநாயக்க விமான நிலையம்,துறைமுகங்கள் மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஆகியவற்றின் மீது தாக்குதல் நடத்தவேண்டும் என்ற புலிகளின் முயற்சி தோல்வியிலேயே முடிந்தது. மேல்மாகாணத்தில் புலிகளின் வலைப்பின்னலை பொலிஸாரே இல்லாதொழித்தனர். 3000 படையினருடன் பயணித்த ஜெட்லைனர் ஆட்காவி கப்பலுக்கு பல கப்பல்கள் பாதுகாப்புக்கு சென்றது. கடற்படைத்தளபதி கண்விழித்து கப்பல் பயணத்தை கண்காணித்து கொண்டிருந்தார். இலங்கைக்குள் ஆயுதங்கள் வருவதை தடுத்தனர்.

பல்வேறுபட்ட புலனாய்வு பிரிவுகள் மற்றும் முகவர் நிலையங்களிலிருந்து பெற்றுக்கொண்ட தகவல்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டது. குழுவாக கடமையாற்றினோம். படையினரின் நன்னடத்தையில் கவனம் செலுத்தப்பட்டது படைநடவடிக்கை இடம்பெற்றகாலத்தில் மதுஅருந்துவதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது. பல சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு கடுமையாக சோதனை உட்படுத்தப்பட்டனர்.

எதனை முன்னெடுத்தாலும் அதனை தொடர்ந்தோம். அதனூடாகவே இறுதிபெறுபேற்றை கண்டோம். இறுதிக்காலக்கட்டத்தில் பிரான்ஸ், இங்கிலாந்து வெளிவிகார அமைச்சர்கள் ஐக்கிய நாடுகளின் பிரதிநிதிகள் இன்னும் பல சர்வதேச பிரதிநிதிகள் மற்றும் அமைப்புகள் அழுத்தம் கொடுத்தனர். புரிந்துணர்வு உட்படிக்கைக்கு சென்று இணக்கப்பாட்டை எட்டுமாறு வலியுறுத்தினர். எனினும் தன்னால் நிறுத்தமுடியாது என திட்டவட்டமாக கூறிய ஜனாதிபதி படையினர் பலமடைந்து மீள்குழுவாக செயற்படுவர் என்றும் தெளிவுப்படுத்தினார்.

யுத்தத்தை தடுத்து நிறுத்துவதற்கு எந்த நாட்டிற்கு தடுக்க இயலாது. இந்தியாவிற்கு தடுக்கும் சக்தி இருந்தது. தமிழ்நாட்டின் அழுத்தம் இருந்தது. இந்தியாவை எம்முடனே வைத்துக்கொண்டோம். இருநாடுகளுக்கும் இடையில் பொறிமுறை இருந்தது. இந்தியாவிடம் உரையாடினோம். மூவரை நியமித்தோம், இந்தியாவும் மூவரை நியமித்தது. தினந்தோறும் உரையாடினோம். குறிப்பாக தமிழ்நாட்டில் அழுத்தம் தொடர்பில் கலந்துரையாடி அவற்றிற்கு தீர்வு கண்டோம். தமிழக முதலமைச்சர் கருணாநிதி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு மத்திய அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்தார். அன்று 5.30 மணிக்கு சிவ்சங்கர் மேனனுடன் தொடர்பு கொண்டு உரையாடினேன்.

உணர்வு பூர்வமான விடயம் ஜனாதிபதியுடன் பேசவேண்டும் என்றார். சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொடுத்தோம். ஐந்து நிமிட உரையாடலின் பின்னர் மறுநாள் காலை சிவ்சங்கர் மேனன் கொழும்பிற்கு வருகைதந்தார். கலந்துரையாடலுக்கு பின்னர் அறிக்கையை வெளியிட்டார். கருணாநிதி உண்ணாவிரதத்தை கைவிட்டார். பிரச்சினைக்கு இணங்காணுவதற்கான பொறிமுறை முக்கியமானது இந்தியா ஒருபோது அழுத்தம் கொடுக்கவில்லை. புரிந்துணர்வு, வழிமுறைகள், பகுப்பாய்வு,தெளிவான இலக்கு, திட்டம், உண்மையான தலைமைத்துவம், பலமான வேலை, தொடர்தல், ஊக்கம், பங்களிப்பு முக்கியமானது.ஒருபோதும் காத்திருக்கவில்லை. ஒவ்வொரு விடயங்களும் விரிவாக ஆராயப்பட்டன. சகல தமிழர்களும் பயங்கரவாதிகள் இல்லை, ஆனால் 99 வீதமான பயங்கரவாதிகள் தமிழர்கள். அதிஷ்டவசமாக சில விடயங்களை செய்வேண்டியநிலைமை ஏற்பட்டது. அவற்றை மீளவும் திரும்பிப்பார்த்தோம்.

வேறு தேவைகளுக்காக வருகின்ற தமிழர்களுடன் புலிகள் பயணித்தனர்,பாதுகாப்பான இடங்களில் ஒதுங்கிகொண்டனர். அவற்றை தடுத்தபதற்கு நடவடிக்கை எடுத்தோம். தமிழர்களை வடக்கு கிழக்கிற்கு திருப்பி அனுப்பினோம். அதனால் பல்வேறு அழுத்தங்களுக்கு முகம்கொடுத்தோம். அந்த நடவடிக்கையை நிறுத்திகொண்டு தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டோம்.

பிரச்சினைக்கு முகம்கொடுத்து பார்க்கவேண்டும். அதேபோல அபிவிருத்தியை பிரயோகிக்கவேண்டும். கடந்த 30 வருடங்களில் உயிர்கள், உடமைகள் மட்டுமன்றி பொருளாதாரம் பாதிப்படைந்துள்ளது. நகர அபிவிருத்தி அதிகார சபை எனக்கு கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது அதில் பற்றுதியுடன் செயற்படவேண்டும் முதலீடுகளை அதிகரிக்கவேண்டும் .இது நல்ல சந்தர்ப்பம்,நேரம் ஐக்கியப்பட்டு செயற்படவேண்டும். உலகம் மிகவேகமான வளர்ந்த அந்த தருணத்தை நாம் தவறவிட்டுவிட்டோம். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திகொள்ளவேண்டும் என்று
மேலும் இங்கே தொடர்க...

தமிழ் கட்சிகளின் அரங்கம் எதிர்வரும் ஒக்டோபர் 2 ஆம் திகதி நடைபெறும்: சிவாஜிலிங்கம்

தமிழ் கட்சிகளின் அரங்கம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 2 ஆம் திகதி கிளிநொச்சியில் நடைபெறும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

'அனைத்து தமிழ் கட்சிகள் ஒருங்கினைந்து இருக்கும் தமிழ் கட்சிகளின் அரங்கத்தோடு இணைந்து கொள்ளுமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு உத்தியோக பூர்வமாக அழைப்பு விடுத்திருந்தோம் இதனை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோர் ஏற்று கொண்டு இருந்தனர். எனினும் இதுதொடர்பாக இந்த நிமிடம் வரை உத்தியோக பூர்வமான பதில் எமக்கு கிடைக்கவில்லை.

எனினும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் நாடு திரும்பியதும் பதில் கிடைக்குமென எதிர்பார்க்கின்றோம்". என தெரிவித்தார்.

இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவை தொடர்பு கொண்டு கேட்டபோது 'தமிழ் கட்சிகள் அரங்கத்தில் பங்கேற்பது தொடர்பாக இதுவரை தீர்மானிக்க வில்லை. எனினும் இது தொடர்பாக கட்சி குழுக் கூட்டத்திலேயே தீர்மானிக்கப்படும்" என தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

புலிகளுக்கு வழங்கப்பட்டு வரும் ஆதரவினை கனேடிய அரசாங்கம் நிறுத்திக் கொள்ள வேண்டும் : ஜீ.எல்.பீரிஸ்

புலிகளுக்கு வழங்கப்பட்டு வரும் ஆதரவினை கனேடிய அரசாங்கம் நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும், இதனால் இலங்கையின் தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் எனவும் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் கனடாவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிச் சக்திகள் தற்போது கனடாவை மையமாகக் கொண்டு இயங்கி வருவதாகவும், இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டுள்ள நிலையில், சில புலி ஆதரவாளர்கள் வெளிநாடுகளில் தமது செயற்பாடுகளை மேற்கொள்வதில் முனைப்பு காட்டப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கனடா உள்ளிட்ட நாடுகளில் தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்கள் செயற்பட்டு வருவதாக கனேடிய வெளிவிவகார அமைச்சர் லோரன்ஸ் கனோனிடம், இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் வலியுறுத்தியுள்ளார்.

ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொண்ட போது இருநாட்டு வெளிவிவகார அமைச்சர்களும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

கனடாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் ஓர் தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த விடயங்கள் குறித்து ஆராய்வதற்காக கனேடிய உயர் அதிகாரியொருவர் விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்வார் என கனேடிய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கனடாவில் இயங்கி வரும் தமிழீழ விடுதலைப் புலிச் சக்திகளை இல்லாதொழிப்பதற்கு அந்நாட்டு அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென இலங்கை வெளிவிவகார அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.

சன் சீ மற்றும் ஓசியான் லேடி புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பிலும் இரு நாட்டு அமைச்சர்களும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

இலங்கையில் சமாதானம் நிலைநாட்டப்பட்டுள்ளதாகவும், எந்த காரணத்திற்காகவும் நாட்டை விட்டு தப்பிச் சென்று புகலிடம் கோர வேண்டிய அவசியம் கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இடம்பெயர் மக்கள் மீள் குடியேற்றம் உள்ளிட்ட யுத்தத்தின் பின்னரான மறுவாழ்வு நடவடிக்கைகள் தொடர்பில் கனடா திருப்தி வெளியிட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

19,20,21 ஆம் திருத்தச் சட்டங்களில் அரசாங்கம் தன்னை மாற்றிக் கொள்ளும்: சிவாஜிலிங்கம்

18 ஆம் அரசியல் அமைப்பு சீர்திருத்திற்கு பின்னர் 19,20, 21 ஆம் திருத்தச் சட்டங்களில் அரசாங்கம் தன்னை மாற்றிக் கொள்ளும் என அரச வட்டாரங்களில் இருந்து தெரியவருவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

18 ஆவது அரசியல் சீர்திருத்திற்கு பின்னர் 19,20,21 அரசியல் சீர்திருத்தங்களை இனைவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இதனை அரச தரப்பில் இருந்து எம்மால் அறிந்து கொள்ள முடிகிறது. ஒரு சாக்லட் பெட்டியில் இரண்டு சாக்லட்டுகளை வைத்து சிறுவர்களை ஏமாற்றுவது போல் தமிழர்களை இந்த அரசாங்கம் ஏமாற்றப் பார்க்கின்றது.

வட, கிழக்கை இனைத்து தமிழ் மக்களை சந்தோசப் படுத்துவதாகவும் மறுபுறம் காணி,பொலிஸ், அதிகாரங்களை நீக்குவதாகவும் திட்டமிட்டுள்ளது. என தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாக பெருந்தொகை பணம் வசூலிக்கும் கும்பல் கிழக்கில் விழிப்புடன் இருக்க வேண்டும்






கிழக்கில் வேலை வாய்ப்புகளை பெற்றுத் தருவதாகக் கூறி பெருந்தொகையான பணத்தை வசூலிக்கும் கும்பல் தொடர்பாக மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் வேலை வாய்ப்பு களுக்கான நேர்முகப் பரீட்சைகள் ஆங்காங்கே நடைபெற்று வரும் இச் சந்தர்ப்பத்தில் சிலர் குறிப்பிட்ட வேலை வாய்ப்பை பெற்றுத் தருவதாக கூறி லட்சக்கணக்கான பணத்தை வசூலித்து வருகின்றனர்.

இவ்வாறு பணத்தை கொடுத்து ஏமாந்த சிலர் பிரதி அமைச்சரிடம் முறையிட்டும் உள்ளனர். அண்மையில் நடைபெற்ற நேர்முகப் பரீட்சையின் போதும்

இவ்வாறானவர்கள் சிலர் இவரை அனுகி பணம் வசூலிக்கவும் முயற்சி செய்துள்ளனர்.

கிழக்கு மாகாணத்தில் ஏற்படுத்தப் படும் சகல வெற்றிடங்களுக்கும் தகைமை அடிப்படையில் சகலரு க்கும் வேலை வாய்ப்புகள் வழங்கப் படும். எவரிடமும் பணத்தை கொடு த்து ஏமாந்துவிட வேண்டாம் என் றும் பிரதி அமைச்சர் முரளிதரன் கிழ க்கு மாகாண இளைஞர் யுவதி களிடம் வேண்டுகோள் விடுத்துள் ளார்.

வேலைவாய்ப்பை பெற்றுத் தருவ தாக எவரேனும் பணம் கேட் பார்களாயின் உடனடியாக தன்னு டன் தொடர்புகொள்ளுமாறும் பிரதி அமைச்சர் கருணா அம்மான் அறிவி த்தல் விடுத்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

14 வயதில் தாயானமை குறித்து விசாரணை: சிறுவர் அதிகார சபையின் பாதுகாப்பில் தாயும் குழந்தையும்

கொழும்பு காசல் வைத்தியசாலையில் 14 வயது சிறுமி ஒருவர் குழந்தை பெற்றுள்ளார். குறித்த சிறுமியும் அவரது குழந்தையும் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக அந்த சபையின் தலைவர் அனோமா திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

குழந்தைபெறும் வைத்தியசாலையில் இருந்து கிடைத்த தகவலொன்றினை அடுத்து சிறுவர் பாதுகாப்பு சபையின் பொலிஸ் அதிகாரிகள் சிலர் சென்று சிறுமி தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சத்திர சிகிச்சை மூலம் குழந்தை பெறப்பட்டதாகவும், சிறு வயதில் குழந்தை கிடைத்ததனால் குழந்தை, வைத்தியசாலையின் குழந்தைப் பாதுகாப்பு பிரிவில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

குழந்தை பெற்றெடுத்த 14 வயதுடைய சிறுமிக்கு தந்தை இல்லையெனவும், அவருடைய தாய் மனநோயாளி எனவும், சிறுமிக்கு உறவினர்கள் எவரும் இல்லை எனவும் தெரிய வந்துள்ளது. சிறுமியைப் பார்வையிட 28 வயதுடைய இளைஞர் வைத்தியசாலைக்கு வந்து போவதாகவும், சிறுமிக்கு 18 வயதானவுடன் அவரை திருமணம் செய்துகொள்வதாக குறித்த இளைஞன் அறிவித்துள்ளதாகவும் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

எனினும், 14 வயது சிறுமி குழந்தைப் பெற்றுள்ளதனால் அவரை பாதுகாக்க வேண்டிய கடமை தங்களுக்கு இருப்பதாக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் அனோமா திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

கடற்கொள்ளையரின் தாக்குதலில் பலியான கப்டனின் சடலத்தை கொண்டுவர ஏற்பாடு


ஈரானில் கடற்கொள்ளையர்களின் துப்பாக்கிச் சூட்டில் பலியான இலங்கையரின் பூதவுடலை விரைவாக இலங்கைக்குக் கொண்டுவர வெளி விவகார அமைச்சு துரித நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

சார்ஜாவிலுள்ள தூதரக அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு இதற்கான நடவடிக்கைகளைத் துரிதமாக மேற்கொள்ளுமாறு வெளிவிவகார அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளதுடன் அதற்கான வழிகாட்டல்களையும் வழங்கியுள்ளதாக அமைச்சு தெரிவித்தது.
மேலும் இங்கே தொடர்க...

ஹிங்குரக்கொட மகரகமயில் ஆயுதங்கள் மீட்பு



ஹிங்குரக்கொட மற்றும் மகரகம பகுதிகளில் இருந்து பல ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

ஹிங்குரக்கொட மாரசிங்கவத்தை பகுதியில் வைத்து பொலிஸார் லொறியொன்றை சோதனையிட்டுள்ளனர். அதிலிருந்து ரி-56 ரக துப்பாக்கியொன்றும் 30 ரவைகளும் மீட்கப்பட்டன. லொறியில் இருந்த நபர்களிடமிருந்து இரு கைக்குண்டுகளும் மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர். இந்த சம்பவம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

மகரகம பராக்கிரம வீதியில் உள்ள வீடொன்றில் இருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டொன்று மீட்கப்பட்டது. சந்தேக நபரொருவரிடமிருந்து கிடைத்த தகவலின்படியே இந்தக் குண்டு பிடிபட்டதாக பொலிஸார் கூறினர்.
மேலும் இங்கே தொடர்க...

நுவரெலிய - வெலிமட வீதியில் பயணம் செய்வோருக்கு எச்சரிக்கை



தற்போது மழை காலநிலை ஆரம்பமாகியுள்ளதால் நுவரெலியா - வெலிமடை வீதியை மிகுந்த முன்னெச்சரிக்கையோடு வாகனப் போக்குவரத்துக்காகப் பயன் படுத்துமாறு அனர்த்த முகாமைத் துவ நிலையத்தின் நுவரெலியா மாவட்ட இணைப்பாளர் கிரந்த ஹேமவர்தன வேண்டு கோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், நுவரெலியா - வெலிமடை நெடுஞ்சாலை தற்போது புனரமைக்கப்படு கின்றது. இதே நேரம் மழைக் கால நிலையும் ஆரம்பமாகி யுள்ளது. இதன் விளைவாக இப்பாதையின் பல இடங்க ளில் சேறு ஏற்பட்டிருக்கின்றது.

இதன் காரணத்தினால் இப் பாதையில் முன்னெச்சரிக்கை யோடு வாகனங்களைச் செலுத்துவது மிகவும் அவசியம். இல்லா விட்டால் வாகனங்கள் பாதையை விட்டு சறுக்கி, குடைசாய்ந்து விபத்துக்கள் ஏற்படக் கூடிய அபாயம் நிலவுகின்றன. அண்மையில் பஸ் வண்டியொன்று குடைசாய்ந் ததில் 23 பேர் காயமடைந்தனர்.
மேலும் இங்கே தொடர்க...

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட முல்லை. வவுனியா மாவட்டத்தில் ரூ. 249 இலட்சம் நஷ்டஈடு






யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மற்றும் உயிரிழந்த முல்லைத்தீவு, வவுனியா மாவட்ட மக்களுக்கு நஷ்ட ஈடாக நேற்று 249 இலட்ச ரூபாவை வழங்கியதாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலை அபிவிருத்தி பிரதியமைச்சர் விஜித விஜய முனிசொய்சா தெரிவித்தார்.

வவுனியா, முல்லைத்தீவு மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு வழங்கும் நிகழ்வுகள் நேற்றுக்காலை வவுனியாவிலும் பிற்பகல் முல்லைத்தீவிலும் நடைபெற்றன. மேற்படி நிகழ்வுகளில் நேரடியாகக் கலந்து கொண்ட அமைச்சர் டியூ குணசேகர, பிரதியமைச்சர் விஜித விஜயமுனிசொய்சா ஆகியோர் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நேற்று நஷ்ட ஈட்டுக்கான காசோலைகளை கையளித்துள்ளனர்.

பிரதியமைச்சர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு மக்கள் கடந்த முப்பது வருட கால யுத்தம் காரணமாக பல்வேறு வழிகளில் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை அவர்களது சொந்த இடங்களில் குடியேற்றுவது மட்டுமன்றி அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
மேலும் இங்கே தொடர்க...

புதிய கடவுச்சீட்டை பெற புதிய விண்ணப்பங்கள் அறிமுகம் ‘m, n’ தொடரிலக்கம்






‘m, மற்றும் ‘n’ என்ற தொடரிலக்கங்கள் கொண்ட கடவுச் சீட்டுக்களைப் பயன் படுத்துபவர்கள் மீண்டும் புதிய கடவுச் சீட்டை பெற விண்ணப் பிக்கும் வகையில் புதிய நடை முறையொன்று அறிமுகப்படுத்தப் படுகிறது.

இதற்கென குடிவரவு, குடியகல்வு திணைக்களம் புதிய விண்ணப்பப் படிவமொன்றை அறிமுகம் செய்கிறது.

அக்டோபர் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் புதிய விண்ணப்பப் படிவம் நடை முறைக்கு வருகிறது என குடிவரவு குடியகல்வு பிரதான கட்டுப்பாட்டாளர் டபிள்யூ. ஏ. சூலானந்த பெரேரா தெரிவித்தார்.

ணி மற்றும் னி தொடரிலக்கம் கொண்ட கடவுச் சீட்டை உடையவர்கள் இரண்டு புகைப்படங்கள், கடவுச் சீட்டின் பிரதி என்பவற்றுடன் ஒரு பக்கத்தை யுடைய விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து கையளித்தால் மட்டும் போதுமானது.

சமாதான நீதவானின் சான்று படுத்தவோ, அடையாள அட்டை, பிறப்பு அத்தாட்சி பத்திரமோ இணைத்தல் அவசியமில்லை.

முதற் தடவையாக கடவுச் சீட்டொன்றை பெறவிரும்பும் ஒருவர் முன்பு போன்று கடவுச் சீட்டுக்கான முன்னைய விண்ணப்பப் படிவத்தை பூர்த்திசெய்வதுடன் அதற்குரிய சகல ஆவணங்களையும் இணைக்க வேண்டும். அத்துடன் சமாதான நீதவானின் சான்றுபடுத்தலும் அவசியமானது.

ணி மற்றும் னி தொடரிலக்கம் கொண்ட கடவுச் சீட்டுகளை பெற்றவர்களின் தரவுகள் ஏற்கனவே திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதால் மீண்டும் மீண்டும் அதே ஆவணங்களை கேட்பதும் தரவுகளை மீண்டும் மீண்டும் பதிவதும் நேரத்தையும் காலத்தையும் வீணாக்கும் வேலை என்பதாலேயே இந்த புதிய நடைமுறை நாளை முதல் அமுலுக்கு கொண்டு வரப்படுவதாக பிரதான கட்டுப்பாட்டாளர் டபிள்யூ. ஏ. சூலானந்த பெரேரா தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

29 செப்டம்பர், 2010

அமெரிக்காவில் மத்திய மந்திரி பிரபுல்படேல் விமான நிலையத்தில் தவிப்பு; சந்தேகத்தில் 2 மணி நேரம் தடுத்து நிறுத்தப்பட்டார்






மத்திய விமான போக்கு வரத்துதுறை மந்திரி பிரபுல் படேல் கனடா சென்றுள்ளார். வழியில் அவர் அமெரிக்காவில் உள்ள சிகாகோ விமான நிலையம் சென்றார். அங்கு சந்தேகத்தின் பேரில் அவர் 2 மணி நேரம் தடுத்து நிறுத்தப்பட்டார். மேலும் அவரிடம் விசாரணையும் நடத்தப்பட்டது. இச்சம்பவம் கடந்த திங்கட்கிழமை இரவு நடந்தது.

இதனால் அவர் தவித்தார் இது பற்றிய தகவல் அமெரிக்காவில் உள்ள இந்திய தூதருக்கு தெரிய வந்தது. உடனே அவர் விமான நிலைய அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு பேசினார்.

அதன் பின்னர் அவர் விமானத்தில் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டார். பொதுவாக மத்திய மந்திரி பிரபுல்படேல் சோதனை எதுவுமின்றி பயணம் செய்ய அமெரிக்க விமான நிலையங்களில் அனுமதி உள்ளது.

ஆனால் அவர் தடுத்து நிறுத்தப்பட்டு அவமதிக்கப்பட்டுள்ளார். இதற்கு பயணிகள் பட்டியலில் அவரது பெயர் மற்றும் பிறந்த தேதியில் மற்றொரு நபர் இருந்ததால் குழப்பம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்துக்கு அமெரிக்க உள் பாதுகாப்பு அதிகாரி, மத்திய மந்திரி பிரபுல் படேலிடம் மன்னிப்பு கேட்டு இருக்கிறார். ஆனால் இதை மத்திய மந்திரி பிரபுல்படேல் பெரிய விஷயமாக எடுத்து கொள்ளவில்லை. பெயர் மற்றும் பிறந்த தேதி குழப்பத்தால் இது போன்று ஏற்பட்டது என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

மணிக்கு 416.6 கி.மீ. வேகத்தில் மின்னலாக பறந்த சீன ரெயில்; புதிய உலக சாதனை படைத்தது







சீனாவில் அதிவேக ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த 2008-ம் ஆண்டு ஜூன் 24-ந்தேதி பெய்ஜிங்- தியான்ஷின் நகரங்களுக்கு இடையே மணிக்கு 394.3 கி.மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டது. இதன் மூலம் உலகிலேயே அதிவேக ரெயில் என்ற சாதனையை படைத்தது. தற்போது, அதை விட அதிக வேகமாக இயங்க கூடிய ரெயிலை சீனா உருவாக்கியுள்ளது.

இந்த ரெயில் ஷாங்காய்- ஹாங்ஹீ நகரங்களுக்கு இடையே பரிசோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. அப்போது மணிக்கு 416.6 கி.மீட்டர் மின்னல் வேகத்தில் பறந்து சாதனை படைத்தது.

இந்த ரெயில் மணிக்கு 350 கி.மீட்டர் வேகத்தில் செல்லும் அளவு வடிவமைக்கப்பட்டிருந்தது. ஆனால் இது ஷாங்காய்- ஹாங்ஹீ நகரங்களுக்கு இடையே 202 கி.மீட்டர் தூரத்தை 40 நிமிடங்களில் கடந்து சாதனை படைத்துள்ளது.

இதற்கு முன்பு இந்த தூரத்தை ரெயில்கள் 2 மணி நேரத்தில் கடந்து சென்றன. தற்போது மிக குறைந்த நேரத்தில் சென்றதன் மூலம் உலகிலேயே மிக நீளமான அதிவேக விரைவு ரெயில் என்ற பெருமையை இது பெற்றுள்ளது.

இதன்மூலம் நவீன ரெயில்வே தொழில் நுட்பத்தை சீனா பெற்றுள்ளது என்று சீன ரெயில்வே அமைச்சகத்தின் தலைமை என்ஜினீயர் கிகுவாவூ தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணியில் பேராதனை பல்கலை மாணவர்கள்

பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் இன்று மாபெரும் ஆர்ப்பட்ட பேரணி ஒன்றில் ஈடுபட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

பேராதனையில் புறப்பட்ட பேரணி தற்பொழுது கண்டி நகரை வந்தடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட நான்கு மாணவத் தலைவர்களையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரியே இந்த ஆர்ப்பாட்டப் பேரணி நடத்தப்படுகிறது.

கடந்த ஜூலை மாதம் உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க பேராதனை பல்கலைகழகத்திற்கு விஜயம் செய்த போது, அவரை தடுத்து வைத்ததாகக் கூறி மேற்படி மாணவர்களை பேராதனை பொலிஸார் கைது செய்து விளக்கமறியலில் வைத்துள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

அயோத்தி தீர்ப்பு : சென்னையில் பலத்த பாதுகாப்பு

அயோத்தி வழக்கு தீர்ப்பையொட்டி சென்னை நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இரு தரப்பினரையும் அழைத்துப் பேசி உள்ளோம். முழு ஒத்துழைப்பு அளிப்பதாக அவர்கள் கூறி இருக்கிறார்கள். நகரில் 10 ஆயிரம் பொலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்."

சென்னை பொலிஸ் கமிஷனர் ராஜேந்திரன் இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

"அயோத்தி வழக்கு தீர்ப்பையொட்டி சென்னை நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இரு தரப்பினரையும் அழைத்து பேசி உள்ளோம். முழு ஒத்துழைப்பு அளிப்பதாக அவர்கள் கூறி இருக்கிறார்கள். சென்னை நகரில் 10 ஆயிரம் பொலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். பொலிஸ் ரோந்தும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

கோவில்கள், மசூதிகள், பொதுமக்கள் கூடும் வணிக வளாகங்கள், பஸ், ரயில் நிலையங்கள் ஆகியவற்றில் ஏராளமான பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர். சமூக விரோதிகள் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறார்கள்.

தீர்ப்பு தொடர்பாகக் கண்டன சுரொட்டிகள் அச்சடிக்கவும், ஒட்டவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அச்சக உரிமை யாளர்களை அழைத்து இது தொடர்பான சுவரொட்டிகள் அச்சடிக்கக் கூடாது என்று அறிவுறுத்தியுள்ளோம். இதை கண் காணித்தும் வருகிறோம்.

சோதனை சாவடிகளிலும் மற்றும் வழக்கமான இடங்களிலும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்படும்" என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

உடல்நிலை மோசம் : பௌத்த தேரர் அம்பாறைக்கு மாற்றம்



மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பௌத்த தேரர் உடல் நிலை மோசமடைந்த நிலையில், மேலதிக சிகிச்சைக்காக இன்று மதியம் 1.30 மணியளவில் அம்பாறை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் எம்.முருகானந்தம் தெரிவித்தார்.

பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் தேரர் அம்பாறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஞாயிறன்று மட்டக்களப்பில் வைத்துத் தன்னை அவமானப்படுத்தியதைக் கண்டித்தே தான் சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருப்பதாக அவர் தெரிவித்திருந்தார்.

அமைச்சர் பசில் ராஜபக்ஷ நேரடியாக வந்து தன்னிடம் மன்னிப்புக் கோரும் வரை சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டம் தொடருமெனவும் அவர் தெரிவித்திருந்தார்.
மேலும் இங்கே தொடர்க...

ஐக்கியத் தேசியக் கட்சி இருமுகம் காட்டுகிறது : அரியநேத்திரன்

"தமிழ்ப் பேசும் மக்களின் பிரச்சினைகளைக் கையாளும்போது ஐக்கியத் தேசியக் கட்சி இருமுகம் காட்டுகிறது. தமிழரைத் திருப்திப்படுத்த தமிழர்களுக்கு சார்பாகவும் சிங்களவரைத் திருப்திப்படுத்த சிங்களவர்களுக்கு சார்பாகவும் பேசி, அரசியல் நடத்துகிறது."

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

நேற்று ஐக்கியத் தேசியக் கட்சிப் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, தமிழ் மக்கள் தொடர்பாக வெளியிட்டுள்ள ஊடக கருத்துக்களுக்குப் பதிலளித்து இன்று வெளியிட்டுள்ள தனது அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

"தமிழீழ விடுதலைப் புலிகளின் அழிவுடன் தமிழ் மக்களின் பிரச்சினைகள் முடிந்து விட்டதாக திஸ்ஸ அத்தநாயக்க எவ்வாறு கூறமுடியும்? புலிகளின் ஆயுதப் போராட்டம் தோல்வியில் முடிந்ததை நாங்கள் அங்கீகரிக்கின்றோம்.

ஆனால் தமிழ்ப் பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வுப் போராட்டம் இன்னமும் முடிவடையவில்லை. இந்த ஜனநாயகப் போராட்டத்தின் வெற்றியில்தான் தமிழ்ப்பேசும் மக்களின் எதிர்காலம் தங்கியுள்ளது.

இந்தச் சூழ்நிலையில், போராட்டத்தின் முடிவுடன் எல்லாம் முடிந்து விட்டதாக அத்தநாயக்க கூறுவது எந்த வகையில் நியாயம்?

தமிழ் மக்களை நேசிப்பதாகக் காட்டிக் கொள்ளும் ஐக்கியத் தேசியக் கட்சி இவ்வாறு கூறுவதன்மூலம் அதன் இரட்டை முகத்தை வெளிப்படுத்துகிறது" என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

அரியாலையில் நடந்த ஏர்பூட்டு விழா உழவர்களின் ஏர்பூட்டு விழா நேற்று யாழ்ப்பாணம் அரியாலையில் நடைபெற்றது.


இந் நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வட மாகாண ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறி உட்பட பல அதிகாரிகள் பங்குபற்றினர். அப்பிரதேசத்தை சேர்ந்த சுமார் 2000 விவசாயிகளும் இதில் கலந்துகொண்டனர்.

மேற்படி நிகழ்வுக்கென கமநல சேவைகள் திணைக்களத்தினால் சுமார் 17 டிரக்டர்களும் பிராந்திய விவசாய அமைச்சினால் 13 டிரக்டர்களும் வழங்கப்பட்டிருந்தன.

பெரும் போகத்திற்கென விவசாயிகளுக்கு நெல்விதைகளும் வழங்கப்பட்டன.

இம்முறை சுமார் 102,000 ஏக்கர் நிலத்தில் பெரும்போகச் செய்கை மேற்கொள்ளப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும் இங்கே தொடர்க...

மன்னார் தனியார் பஸ் நடத்துனர்கள் குறித்து முறைப்பாடு

மன்னாரில் இருந்து தூர இடங்களுக்கு சேவையில் ஈடுபடும் தனியார் பஸ்கள் சிலவற்றில் நடத்துனர்கள் தம்முடன் தகாத முறையில் நடந்து கொள்வதாக பயணிகள் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக மன்னாரில் இருந்து வவுனியா செல்லும் தனியார் பஸ்கள் சிலவற்றின் நடத்துனர்கள் இவ்வாறு தகாத முறையில் நடந்து கொள்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

நடத்துனர் இளம் பெண்களிடம் பயணக் கட்டணத்தைப் பெற்றுவிட்டு பயணச்சீட்டு வழங்குகையில், அதன் பின்புறத்தில் காதல் வார்த்தைகள் எழுதிக் கொடுப்பதாகவும் அவரின் தொலைபேசி இலக்கங்களை எழுதிக் கொடுத்து போன் எடுக்குமாறு கூறுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறான சம்பவங்களால் இளம்பெண்கள் தனியாக பஸ்ஸில் பயணிக்க அச்சம் தெரிவிக்கின்றனர். அதேவேளை, இத்தகைய சம்பவங்களை நிவர்த்திக்க நடவடிக்கை எடுக்குமாறும் சம்பந்தப்பட்டோரிடம் பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
மேலும் இங்கே தொடர்க...

40 தினங்களில் 9 மோட்டார் சைக்கிள்கள் திருட்டு : சந்தேகத்தில் இருவர் கைது



கல்பிட்டி, முந்தல் மற்றும் புத்தளம் பொலிஸ் பிரிவுகளில் மோட்டார் சைக்கிள்களைத் திருடி விற்பனை செய்து வந்ததாகச் சொல்லப்படும் இருவர் சந்தேகத்தின் பேரில் கல்பிட்டி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 40 தினங்களுக்குள் ஒன்பது மோட்டார் சைக்கிள்கள் இவர்களால் திருடப்பட்டுள்ளன. அந்த ஒன்பது மோட்டார் சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கல்பிட்டி பொலிசார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டுள்ள நுரைச்சோலை பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேக நபர்களில் ஒருவர் தனியார் பஸ் ஒன்றின் நடத்துனர் எனவும், மற்றவர் அவருக்கு உதவியவர் எனவ்ய்ன் பொலிசார் தெரிவித்தனர்.

இந்த மோட்டார் சைக்கிள்கள் புத்தளம், மதுரங்குளி, முந்தல், புளிச்சாக்குளம் போன்ற பிரதேசங்களில் திருடப்பட்டு அவை நுரைச்சோலை, பாலக்குடா, பாலாவி போன்ற பிரதேசங்களில் விற்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

ஒரு லட்சம் ரூபா பெறுமதியான மோட்டார் சைக்கிள்கள் முப்பதாயிரம், நாற்பதாயிரம் என்று குறைந்த விலைக்கே, சந்தேக நபர்கள் விற்று வந்துள்ளனர்.

பல்வேறு இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் மோட்டார் சைக்கிள்களைத் திருடும் இவர்கள் அவற்றின் இலக்கத் தகட்டினை மாற்றிவிட்டே விற்பனை செய்துள்ளனர் என மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளிலிருந்து அறிய முடிந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.

பிரதேச சிவில் பாதுகாப்புக் குழுவைச் சேர்ந்த ஒருவர் வழங்கிய தகவலையடுத்து முதலாவது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர்கள் புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். கல்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் லக்ஷ்மன் ரண்வலஆராச்சி தலைமையிலான குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மோட்டார் சைக்கிள்களின் உரிமையாளர்கள் உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்து மோட்டார் சைக்கிள்களைப் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் இங்கே தொடர்க...

சரத் பொன்சேகா உறுப்புரிமை ரத்து : மனுவை ஏற்க மறுப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவின் உறுப்புரிமையை ரத்து செய்யக் கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹப்புத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த ஆனந்த் மோகன்தாஸ் என்பவர் மேன்முறையீட்டு நீதிமன்றில் இது தொடர்பாகத் தாக்கல் செய்த மனு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

எனினும் மனுவில் காணப்பட்ட குறைபாடுகள் காரணமாக அதனை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முடியாது எனத் தேர்தல்கள் ஆணையாளர் சார்பாக முன்னிலையான அரச சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

அதன்பின்னர், மனுதாரரின் சட்டத்தரணி, குறித்த மனுவை மீளப்பெறுவதற்காக மேன்முறையீட்டு நீதிமன்றத்திடம் அனுமதி கோரியிருந்தார்.

அதற்கு அனுமதி வழங்கிய நீதிமன்றம், சரத் பொன்சேகாவின் நாடாளுமன்ற உறுப்புரிமையை ரத்து செய்வது தொடர்பாக எதிர்காலத்தில் மனு தாக்கல் செய்வதற்கு தடையேதும் கிடையாது என அறிவித்துள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

தொடர் மழை : மலையகத்தில் மண் சரிவு அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்துவரும் அடைமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர் மழையினால் மலையகப் பகுதிகளில் மண்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கண்டி - நுவரெலியா வீதியில் ரம்பொட நீர்வீழ்ச்சிக்கு அருகில் இரண்டு இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் டி.பி.ஜி.குமாரசிறி தெரிவித்துள்ளார்.

நீர்வீழ்ச்சிப் பகுதிகளினூடாக வாகனத்தில் செல்வோர் அவதானமாக இருக்கும்படியும், மலைப்பகுதிகளில் வாகனங்களைத் தரித்து வைக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்படுகின்றனர்.

அதேவேளை, கலாவேவ ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால், புத்தளம்-மன்னார் வீதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

காலியில் வெள்ளத்தில் அடிபட்டுசென்ற ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், எனினும் இதுவரை அவரைக் காணவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பெப்ரவரி மாதத்தில் நடைபெறும் சாத்தியம்

அடுத்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2011 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நடைபெறும் சாத்தியம் அதிகமாகவே உள்ளது. அதற்கிடையில் உள்ளூராட்சிமன்ற திருத்தச் சட்டமூலத்துக்கு மாகாண சபைகளின் அனுமதியை பெறுவதும் மற்றும் பாராளுமன்றத்தின் அங்கீகாரத்தை பெறும் நடவடிக்கையும் ஒக்டோபர் மாதத்துக்குள் முடிவடைந்துவிடும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளரும் அமைச்சருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

எதிர்வரும் உள்ளூராட்சிமன்ற தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பில் விபரிக்கையிலேயே அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

அவர் இது தொடர்பில் மேலும் கூறுகையில்

உள்ளூராட்சிமன்ற தேர்தல் பெரும்பாலும் அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் நடைபெறுவது உறுதியாகும். அதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுவருகின்றன. அதாவது உள்ளூராட்சிமன்ற சட்டமூலத்தில் திருத்தங்களை மேற்கொண்டு புதிய தேர்தல் முறைமைக்கு அமையவே உள்ளூராட்சிசபை தேர்தலை நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

முதற்கட்டமாக திருத்த யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. அடுத்ததாக மாகாண சபைகளின் அங்கீகாரத்தை பெறும் நோக்கில் செயற்பாடுகள் இடம்பெறும். அதனையடுத்து திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்படும் என்றார்.

இதேவேளை உள்ளூராட்சிசபை தேர்தலில் ஒரு கோடியே 43 இலட்சத்து 15 ஆயிரத்து 417 பேர் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளதாக தேர்தல் திணைக்கள தகவல்ககள் தெரிவித்துள்ளன. கடந்த பாராளுமன்ற தேர்தலைவிட எதிர்வரும் உள்ளூராட்சிமன்ற தேர்தலில் இரண்டு இலட்சத்து 26 ஆயிரத்து 917 பேர் அதிகமாக வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது இதேவ÷ளை உள்ளூராட்சிமன்ற சட்டமூலத்தில் கொண்டுவரப்படவுள்ள புதிய திருத்தங்களின் பிரகாரம் மாநகரசபை நகரசபை அல்லது பிரதேச சபை ஒன்றின் வரவு செலவுத்திட்டம் தோல்வியடையும் பட்சத்தில் குறித்த சபையின் தலைவர் அல்லது மேயர் பதவி விலகவேண்டும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் புதிய திருத்தங்களின் பிரகாரம் உள்ளூராட்சிசபை ஒன்றின் உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 50 வீதத்தை ஒரு கட்சி பெறுமாயின் உள்ளூராட்சிமன்றத்துக்குரிய தலைவர் அல்லது மேயரை தெரிவு செய்யும் உரிமை அந்தக் கட்சிக்கு கிடைக்கும். ஆனால் உள்ளூராட்சிசபை ஒன்றின் உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 50 வீதத்தை எந்தக் கட்சியும் பெறாவிடின் சபைக்கான தலைவர் அல்லது மேயரை நியமிக்கும் பொறுப்பு குறித்த சபைக்கே கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இங்கே தொடர்க...

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு வழங்கும் நிகழ்வுகள் இன்று வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களில் நடைபெறுகின்றன.



புனர்வாழ்வு, சிறைச்சாலைகள் அபிவிருத்தி அமைச்சர் டியூ குணசேகர இந் நிகழ்வுகளில் கலந்து கொண்டு நஷ்டஈடுகளை வழங்கவுள்ளார்.

இதற்கிணங்க முல்லைத்தீவில் 150 குடும்பங்களுக்கும், வவுனியாவில் 30 குடும்பங்களுக்கும் இன்று நஷ்ட ஈடுகள் வழங்கப்படுகின்றன. இன்று காலை வவுனியாவிலும், பிற்பகல் முல்லைத்தீவிலும் நஷ்டஈடு வழங்கும் நிகழ்வுகள் நடைபெறுகின்றன.

யுத்தத்தினால் உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் மற்றும் சொத்துக்களை இழந்தவர்களுக்கு நஷ்ட ஈட்டுக் காசோலைகள் அமைச்சரினால் இந் நிகழ்வுகளின் போது வழங்கப்படுகின்றன.

இதேவேளை, புனர்வாழ்வளிக்கப்பட்ட 402 புலி உறுப்பினர்கள் இன்று விடுதலை செய்யப்படுகின்றனர். வவுனியாவில் இந் நிகழ்வு இடம் பெறுவதுடன் அமைச்சர் டியூ குணசேகர இந் நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளார்.

அத்துடன் புனர்வாழ்வளிக்கப்பட்டு தொழிற் பயிற்சிகள் வழங்கப்பட்ட 7000 இற்கும் மேற்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்களுக்குத் தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக்கொடுக்கும் வேலை வாய்ப்புச் சந்தையொன்றும் இன்று வவுனியாவில் நடைபெறவுள் ளது.

புனர்வாழ்வு சிறைச்சாலைகள் அபிவிருத்தி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இவ் வேலை வாய்ப்புச் சந்தையில் தெற்கிலிருந்து பல்வேறு துறை சார்ந்த நிறுவனங்கள் பங்கேற்கின்றன.

புனர்வாழ்வு பெற்ற முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு அவர்கள் பெற்றுக் கொண்டுள்ள பயிற்சிகளை அடிப்படையாகக் கொண்டு ஆடைக் கைத்தொழில், இலத்திரனியல் தொழில் நுட்பம் போன்ற துறைகளில் தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாளை இந் நிகழ்வில் கலந்து கொள்ளும் வர்த்தக நிறுவனங்களைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்டு பயிற்சி பெற்றுக் கொண்டுள்ளவர்களை திறமை அடிப்படையில் தேர்ந்தெடுப்பரென அமைச்சின் உயரதிகாரியொருவர் தெரிவித்தார்
மேலும் இங்கே தொடர்க...

அணுசக்தி ஊடாக மின்சாரம்; இலங்கையில் அணு உலை அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் பற்றி ஆராய விஞ்ஞானிகள் குழு



2020ல் இலங்கையின் அணுசக்தி ஊடாக மின்சாரம் உற்பத்தி செய்வதற்காக அணு உலையொன்றை அமைப்பதற்கான சாத்தியக் கூற்றை ஆராய்வதற்காக ஐந்து விஞ்ஞானிகளை உள்ளடக்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டு ள்ளது.

இந்தக் குழு ஆறு மாதங்களுக்குள் தனது அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளதோடு அதன் பிரகாரம் அடுத்த கட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் மின்சக்தி எரிசக்தி அமைச்சர் பாடலி சம்பிக ரணவக்க கூறினார்.

அண்மையில் வியன்னாவில் நடைபெற்ற உலக அணுசக்தி அதிகார சபையின் வருடாந்த அமர்வு தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்றது. இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது,

1950களிலே அணு சக்தியூடாக மின்சாரம் உற்பத்தி செய்வது குறித்து இந்தியா கவனம் செலுத்தியது. பல நாடுகள் அணுசக்தி மூலமே கூடுதலாக மின்சாரம் உற்பத்தியில் செய்கின்றன. இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் மொத்த மின் உற்பத்தி இரண்டு வீதத்தை அணுசக்தி மூலமே மேற்கொள்கின்றன.

அணுசக்தியினூடாக மின் உற்பத்தி செய்வது மிகவும் பெரிய சவாலாகும். அதற்கு முகம் கொடுத்து வெற்றிகொள்ள நாம் தயாராக உள்ளோம். இதற்கு வெளிநாடுகளின் உதவி தேவைப்படும்.

அணுஉலையை எங்கு அமைப்பது? எந்த நாட்டின் உதவியைப் பெறுவது, முதலீட்டார்களின் உதவி போன்ற விடயங்கள் குறித்து இது வரை தீர்மானிக்கப்படவில்லை.

இலங்கையின் பொருளாதாரம் 8.5 வீதத்தை எட்டியுள்ள நிலையில் எமது மின்சக்தி பாவனை கடந்த 8 மாதத்தில் 8 வீதத்தினால் அதிகரித்துள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் 2018 ஆகும் போது எமது மின்சக்தி தேவை இரண்டு மடங்கால் அதிகரிக்கும்.

அந்த நிலையில் 2020ன் பின் நாடு இருட்டில் புதையும் நிலையே ஏற்படும். அதனால் அணுமின் உற்பத்தி போன்ற மின் உற்பத்திகள் குறித்து இப்பொழுது கவனம் செலுத்த வேண்டும். ஏனென்றால் அணு உலையொன்றை அமைக்க 15 வருடங்கள் பிடிக்கும் 2020-25ற் இலங்கையில் அணு உலையொன்றை அமைக்க இப்பொழுது பூர்வாக பணிகளை முன்னெடுக்க வேண்டும். இதற்கு உதவி வழங்க சர்வதேச அணுசக்தி அதிகார சபை இணக்கம் தெரிவித்துள்ளதோடு வழிகாட்டல்களையும் வழங்கியுள்ளது. அந்த வழிகாட்டல்களை பின்பற்றி நாம் அணு உலை அமைப்பதற்கான பணிகளை முன்னெடுக்க உள்ளோம்.

வியன்னா மாநாட்டின் போது இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா, பிரான்ஸ் நாட்டு பிரதிநிதிகளுடனும் பேசினோம்.

அணு உலைக்குத் தேவையான எரிபொருளை ரஷ்யா வழங்குவதோடு அணு உலையில் இருந்து வெளியாகும் கழிவுகளை அந்த நாடு பொறுப்பேற்கும். இது தொடர்பில் ரஷ்யாவுடன் பேச உள்ளோம்.

அணு உலைகளில் யுரேனியத்திற்குப் பதிலாக தோரியத்தை பயன்படுத்தும் புதிய முறையொன்றை இந்தியா கண்டுபிடித்துள்ளது. 30 வீதமான தோரியம் இலங்கை கடற்பரப்பில் காணப்படுகிறது. அது குறித்து நாம் கவனம் செலுத் தியுள்ளோம் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

சட்டவிரோத ஆட்கடத்தலைத் தடுக்கும் இலங்கையின் நடவடிக்கைக்கு கனடா ஆதரவு


விசேட பிரதிநிதி விரைவில் கொழும்பு வருகை

‘ஓஸன் லேடி’, ‘சன் சீ’ ஆகிய கப்பல்கள் மூலம் சட்ட விரோதமாக கனடாவுக்கு கொண்டு செல்லப்பட்ட இலங்கையர் தொடர்பாக இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதற்கு உதவும் நோக்கில் கனேடிய அரசு நியமித்துள்ள விசேட பிரதிநிதி விரைவில் கொழும்புக்கு வரவுள்ளார்.

சட்ட விரோத ஆட்கடத்தலை தடுப்பதற்கு இலங்கையும், கனடாவும் இணைந்து செயற்படுவதென இரு நாடுகளினதும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர்களும் இணக்கம் கண்டுள்ளனர்.

கடந்த சனிக்கிழமை (25) நியூயோர்க்கில் சந்தித்து பேசியபோதே இவர்கள் இணக்கம் கண்டிருக்கின்றனர்.

ஐக்கிய நாடுகள் அமைப்பின் 65 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்குபற்றுவதற்காக நியூயோர்க் சென்ற வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் அங்கு கனடா, ஸ்பெயின் மற்றும் கொரிய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

கனேடிய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் லோரன்ஸ் கனோன், ஸ்பானிய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் மிகெல் ஏஞ்சல் மொராட்டினஸ் கியூயோடே மற்றும் கொரிய குடியரசின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் சின் கன் யூ ஆகியோரை கடந்த சனிக்கிழமை (25) நியூயோர்க்கில் வைத்து அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் சந்தித்துப் பேசியுள்ளார்.

கனேடிய வெளிநாட்டலுவல்கள் அமைச்சருடன் நடத்திய பேச்சுவார்த்தையின் போது பயங்கரவாதத்தை தோற்கடித்த பின்னர் மீந்துள்ள விடுதலை புலிகளின் செயற்பாடுகள் கனடா உள்ளிட்ட வேறு நாடுகளில் இடம் பெறுவதாக அமைச்சர் பீரிஸ் கனேடிய வெளிநாட்டலுவல்கள் அமைச்சரிடம் விபரித்தார்.

அதேவேளை கனடாவில் விடுதலைப் புலிகள் மற்றும் முன்னணி அமைப்புகளின் நிதி சேகரிப்பு நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவது தொடர்பாக கனடா எடுத்து வரும் நடவடிக்கைகள் பற்றி கனேடிய அமைச்சர் இலங்கை அமைச்சர் பீரிஸிடம் விளக்கினார். விடுதலைப் புலிகள் இயக்கம் கனடாவில் ஒரு தடை செய்யப்பட்ட இயக்கம் என்பதையும் கனேடிய அமைச்சர் இங்கு வலியுறுத்தினார்.

ஸ்பானிய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் மிகேன் ஏஞ்சல் மெரராடி கியூயோடேயுடனான பேச்சுவார்த்தையின் போது பயங்கரவாதத்தை வெற்றிகரமாக முறியடிப்பதற்கு இலங்கை மேற்கொண்ட நடவடிக்கைகளை ஸ்பானிய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பாராட்டினார். உலகளாவிய ரீதியில் மேற்கொள்ளப்படும் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு இலங்கையும் ஸ்பெயினும் பங்களிப்பு வழங்குவது பற்றியும் அங்கு கலந்துரையாடப்பட்டது.

கொரிய வெளிநாட்டலுவல்கள் அமைச்சருடனான சந்திப்பின் போது கொரிய குடியரசு பல்வேறு துறைகளில் இலங்கைக்கு வழங்கும் ஆதரவு தொடர்பாக அமைச்சர் பீரிஸ் கொரிய அமைச்சருக்கு நன்றி தெரிவித்தார். இலங்கையின் மனித வளத்தை கொரியாவுக்கு பெற்றுக் கொள்வதை எதிர்காலத்தில் அதிகரித்துக் கொள்ள தீர்மானித்துள்ளதையிட்டும் அமைச்சர் பீரிஸ் பராட்டினார்.

405 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான 20 வேலைத் திட்டங்களை கொரிய அரசாங்கம் தற்போது இலங்கையில் செயற்படுத்தி வருகிறது. அத்துடன் கொரிய வேலை வாய்ப்புகளில் இலங்கைக்காக வழங்கப்பட்ட ஒதுக்கீட்டில் 44 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் இங்கே தொடர்க...

குடாநாட்டிலுள்ள வைத்தியசாலைகளின் குறைபாடுகளை நிவர்த்திக்க நடவடிக்கை


யாழ். போதனா வைத்தியசாலை உட்பட குடாநாட்டிலுள்ள அனைத்து வைத்தியசாலைகளினதும் குறைபாடுகளை நிவர்த்திப்பதுடன் தாதியர் பற்றாக்குறை மற்றும் சிற்றூழியர் பற்றாக்குறையை உடனடியாக நிவர்த்திக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் கொழும்பில் நடைபெற்ற உயர் மட்ட கலந்துரையாடல் ஒன்றிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஏற்பாட்டில் சுகாதார அமைச்சில் இச்சந்திப்பு இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலின் போது யாழ். போதனா வைத்தியசாலைக்கென சிற்றூழியர்களை நியமித்தல், சுத்திகரிப்புச் சேவையின் குறைபாடுகள், சமையலறைக்குத் தேவையான உபகரணங்கள் மற்றும் பாத்திரங்களைப் பெற்றுக் கொள்ளல், சமையலறையில் விறகு உபயோகத்தைத் தவிர்த்து எரிவாயு பயன்படுத்துதல், பராமரிப்புப் பகுதி ஒன்றை ஏற்படுத்துதல், விடுதி எழுதுநர்களுக்கான நிரந்தர நியமனங்களைப் பெற்றுக் கொள்ளல் வைத்தியசாலையின் பழைய பொருட்களை அகற்றுதல், தாதிய உத்தியோகத்தர்களுக்கான பற்றாக்குறை, வெளிநோயாளர் பகுதியை நோயாளர்களது வசதி கருதி விரிவாக்குதல், விடுதி வசதி, வைத்தியசாலையின் மேலதிகத் தேவைகளுக்காக காணி வசதியைப் பெற்றுக் கொள்ளல், அதிகாரிகளுக்கான வாகன வசதிகள், தாதியர் பயிற்சிக் கல்லூரியின் தேவைகள் போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டதுடன் ஏனைய வைத்தியசாலைகளில் நிலவும் தேவைகள் மற்றும் குறைபாடுகள் தொடர்பிலும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

போதனா வைத்தியசாலையின் பராமரிப்புச் செலவுக்கென 01 மில்லியன் ரூபாவை ஒதுக்குவது என்றும் தீர்மானிக்கப்பட்டதுடன் விடுதி எழுதுநர்களுக்கு நிரந்தர நியமனங்களை வழங்க நடவடிக்கை எடுப்பதற்கும் இணக்கம் காணப்பட்டது.

கொழும்பிலிருந்து விசேட குழுவொன்றை அனுப்பி வைத்தியசாலைகளிலுள்ள பழைய பொருட்களை அகற்ற நடவடிக்கை எடுப்பதென்றும் தாதியர் பற்றாக்குறை மற்றும் தாதியர்களுக்கான விடுதி அமைப்பது குறித்து ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கவும் தீர்மானிக்கப்பட்டது.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடந்த ஒரு வார காலமாக தொடர்ந்து யாழ். போதனா வைத்தியசாலைக்கும் ஏனைய வைத்தியசாலைகளுக்கும் சென்று நிலைமைகளை நேரில் கண்டறிந்து கொண்டதன் பயனாகவும் அங்குள்ள பல்வேறு தரப்பினருடன் நடத்திய கலந்துரையாடல்களின் மூலமும் மேற்படி தேவைகள் மற்றும் குறைபாடுகள் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவிடம் முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இக்கலந்துரையாடலில் அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, மைத்திரிபால சிறிசேன வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரிசிறி, சுகாதார அமைச்சின் உயரதிகாரிகள், யாழ். வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி பவானி வைத்திய கலாநிதி ரவிராஜ், தாதியர் சங்கப் பிரதிநிதிகள், தாதியர் பயிற்சிக் கல்லூரி அதிபர் மாகாண சுகாதாரப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி கேதீஸ்வரன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மேலும் இங்கே தொடர்க...

மட்டு. நகரில் இந்திய உதவியுடன் ரூ. 10 ஆயிரம் மில். செலவில் நவீன வசதிகள் கொண்ட வைத்தியசாலை



மட்டக்களப்பில் இந்திய நிதியுதவியுடன் 10,000 மில்லியன் ரூபா செலவில் சகல வசதிகளையும் கொண்ட புதிய வைத்திய சாலையொன்று நிர்மாணிக்கப்படவுள்ளது.

இதற்கான ஆரம்ப கட்டப் பேச்சுவார்த்தை சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் சுகாதார அமைச்சில் நடைபெற்றது. இப்பேச்சுவார்த்தையில் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், சுகாதார அமைச்சின் செயலாளர் ரவிரு பேரூ, இந்திய நிறுவனத்தின் தலை வர் சுனில் அகர்வால் மற்றும் இந்திய அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர். பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் சுகாதார, அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவிடம் விடுத்த வேண்டுகோளுக்கி ணங்கவே மேற்படி வைத்தியசாலை மட்டக்களப்பில் நிர்மாணிக்கப்படவுள்ளது.

தற்போது மட்டக்களப்பில் இயங்கும் போதனா வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகளைக் கருத்திற்கொண்டு அதற்குப் பதிலாக இப்புதிய வைத்தியசாலை நிறுவப்படவுள்ளது.

அத்துடன் இதுவரை காலமும் பெரும் குறைபாடாக விருந்த புற்றுநோய்ச் சிகிச்சை பிரிவொன்றும் இதனுடன் இணைந்ததாக நிர்மாணிக்கப்ப டவுள்ளது. இந்தியாவின் என். ஐ. பீ. எச். ஐ. அபிவிருத்தி திட்ட நிறுவனமும் இந்திய வங்கியொன்றும் இணைந்தே மேற்படி நிதியுதவியை வழங்கவுள்ளன. சிறு கடன் திட்ட அடிப்படையில் இதற்கான நிதி வழங்கப்படவுள்ளது.

இதனையடுத்து சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் தலைமையிலான உயர் மட்டக் குழுவொன்று இரண்டொரு தினங்களில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு நேரில் விஜயம் செய்ய வுள்ளது. இக்குழு அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவுக்கு அறிக்கையை கைய ளிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

காலி, களுத்துறை மாவட்ட தாழ்நில பிரதேசங்கள் நீரில் மூழ்கும் அபாயம்


பரவலாகப் பெய்துவரும் அடைமழை காரணமாக காலி, களுத்துறை மாவட்டங்களின் சில தாழ்நிலப் பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளதுடன் மழை மேலும் தொடருமாயின் ஏனைய பிரதேசங்களின் பல இடங்களும் நீரில் மூழ்கக் கூடிய வெள்ள அபாய நிலை ஏற்பட்டுள்ளது.

நாடெங்கிலும் பரவலாக மழை பெய்து வருகின்றது. நேற்றுக் காலை 8.30 மணியுடன் முடிவுற்ற 24 மணி நேரமழை வீழ்ச்சி பதிவில் ஆகக்கூடிய மழைவீழ்ச்சி மன்னாரில் 70.5 மி.மீட்டர்களாகப் பதிவாகியுள்ளது என்று வானிலை அவதான நிலையத்தின் வானிலைப் பொறுப்பாளர் ஜயசிங்க ஆராய்ச்சி நேற்றுத் தெரிவித்தார்.

இதேவேளை நேற்றுக் காலை 8.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரையுமான காலப்பகுதியில் காலி மாவட்டத்திலேயே அதிக மழை வீழ்ச்சியாக 50.7 மி.மீ. மழை பெய்துள்ளது எனவும் அவர் கூறினார்.

அடை மழை காரணமாக காலி மாவட்டத்தின் பலப்பிட்டி, எல்பிட்டி, கரந்தெனியா போன்ற பிரதேசங்களின் தாழ் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளதுடன் உள்வீதிகளின் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் காலி மாவட்ட இணைப்பாளர் லெப்டினன்ட் கேர்ணல் அசித ரணசிங்க கூறினார்.

எல்பிட்டி பிரதேச செயலகப் பிரிவில் திடீர் மண்சரிவு காரணமாக இரு வீடுகள் சேதமடைந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, வானிலை அவதான நிலையத்தின் வானிலைப் பொறுப்பாளரான ஜயசிங்க ஆராய்ச்சி மேலும் கூறுகையில், தற்போதைய மழைக் காலநிலை அடுத்துவரும் இரண்டொரு தினங்களுக்கு நீடிக்க முடியும்.

இன்று பிற்பகல் அல்லது மாலை வேளையில் இடி, மின்னலுடன் நாட்டின் பல பிரதேசங்களில் மழை பெய்ய முடியும். இச்சமயம் கடும் காற்றும் வீசலாம். அதனால் இடி, மின்னல் பாதிப்பிலிருந்து தவிர்ந்து கொள்வதில் ஒவ்வொருவரும் கூடிய கவனம் செலுத்த வேண்டும்.

இதேவேளை இடைப்பருவ பெயர்ச்சி மழை வீழ்ச்சி அடுத்த வாரத்திற்குள் ஆரம்பமாகலாமென எதிர்பார்க்கின்றோம் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

ஆஸி. இந்தியருக்கு ஆயுள் தண்டனை

வியன்னா் ஆஸ்திரியாவில் சீக்கிய மத குருவை கொலை செய்த இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. ஆஸ்திரியாவில் தேரா சச் காண்ட்டில் சீக்கிய கோயில் ஒன்று உள்ளது. இங்கு குருவாக இருந்தவரை கடந்த 2009ம் ஆண்டு இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் கொலை செய்தார். வியன்னா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இதுதொடர்பான வழக்கில் நேற்று தீர்ப்பு வெளியானது. அதில் சீக்கிய குருவை கொலை செய்த இந்தியருக்கு ஆயுள் தண்டனையும்இ இதில் தொடர்புடைய மேலும் 4 பேருக்கு தண்டனை வழங்கப்பட்டது.



மேலும் இங்கே தொடர்க...

28 செப்டம்பர், 2010

சந்திரனை ஆராய சீனாவின் புது திட்டம்


சந்திரனை ஆராயும் இரண்டாவது செயற்கைகோளை சீனா, வரும் 1ம் தேதி விண்ணில் செலுத்துகிறது. விண்வெளி ஆராய்ச்சியில் அமெரிக்கா, ரஷ்யாவுக்கு அடுத்தபடியாக சீனா வேகமாக வளர்ந்து வருகிறது. கடந்த 2007ல் அக்டோபர் மாதம் சந்திரனை ஆராயும் சாங்க் இ-1 என்ற செயற்கை கோளை செலுத்தியது. இந்நிலையில் வரும் 1ம்தேதி சாங்க் இ-2 என்ற செயற்கை கோளை விண்ணில் செலுத்துகிறது. ஐந்து நாள் பயணத்துக்கு பிறகு இந்த செயற்கைகோள் சந்திரனுக்கு அருகே 100 கி.மீ., தொலைவை சென்றடையும். இதற்கு அடுத்தபடியாக வரும் 2013ல் சாங்க் இ-3 செயற்கைகோள் சந்திரனுக்கு செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மூன்று செயற்கைகோள்கள் அளிக்கும் தகவல்களின் அடிப்படையில் 2025ல் சந்திரனுக்கு விண்வெளி வீரர்களை அனுப்ப சீன விண்வெளி ஆராய்ச்சி மையம் முடிவு செய்துள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

மங்கள சமரவீர மீது குற்றப் புலனாய்வுத்துறையினர் விசாரணை

ஐக்கியத் தேசியக் கட்சி உறுப்பினர் மங்கள சமரவீர குற்றப் புலனாய்வுத் துறையினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என சற்று முன்னர் கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவதூறான சுவரொட்டிகளை அச்சடித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரசாந்த் ஜெயகொடி தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

யுத்தத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டோருக்கு நஷ்ட ஈடு

யுத்தத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டு தமது சொத்துக்களை இழந்து இடம்பெயர்ந்த 250 பேருக்கு நஷ்ட ஈடாக 25 மில்லியன் ரூபா வழங்கப்படவுள்ளதாக மீள்குடியேற்றம், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த நஷ்ட ஈட்டை பெற்றுக்கொள்வதாயின் விண்ணப்பதாரி யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இடத்தில் வசித்திருக்க வேண்டும். கிராம சேவையாளரிடம் தம்மை பதிவு செய்திருக்க வேண்டும். இவரது விண்ணப்பத்தை மாவட்ட செயலகம் அங்கீகரிக்கப்பட வேண்டும்.

முன்னர் எந்த நட்ட ஈட்டையும் பெறாதவராக இருக்க வேண்டும் என புனர்வாழ்வு அதிகாரசபையின் தலைவர் ஈ.ஏ எதிரிசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும் யுத்தத்தால் சொத்துக்களை இழந்த நிலையில் யுத்தத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டோருக்கு பத்து இலட்சம் ரூபாவும் சொத்துக்களை இழந்தவர்களுக்கு 2.5 மில்லியன் ரூபாவும் வழங்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

வாக்காளர் இடாப்பில் புனர்வாழ்வு பெற்றோர் இணைவு : உதவி தேர்தல் ஆணையாளர்

புனர்வாழ்வு மையங்களிலிருந்து சொந்தக் கிராமங்களுக்குத் திரும்பியோரின் பெயர்கள் வாக்காளர் இடாப்புக்களில் இணைத்துக் கொள்ளப்படும் என துணைத் தேர்தல் ஆணையாளர் நிசாந்த திரிப்பிரிய ஹேரத் நேற்றுத் தெரிவித்துள்ளார்.

அவர் குறித்து மேலும் தெரிவிக்கையில்,

"வாக்காளர் இடாப்பில் இவர்களின் பெயர் பதிவது தொடர்பாக கிராம சேவகர்களின் ஊடாக தகவல்கள் திரட்டப்படவுள்ளன.

வாக்காளர் இடாப்பில் பெயர் பதியப்பட்டவர்களின் விபரங்கள் மூன்று மாதங்களுக்குள் காட்சிப்படுத்தப்படும்.

2009ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பில் இவர்களின் பெயர்கள் பதிவு செய்யப்படும்" என்றார்.

வெளிநாடு சென்றுள்ள தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க இந்த வார இறுதியில் நாடு திரும்ப உள்ளதாகக் கூறப்படுகிறது.

அதேவேளை, எதிர்வரும் ஜனவரி மாதமளவில் புதிய தேர்தல் ஆணையாளர் ஒருவரை நியமிப்பதற்கு ஜனாதிபதி உத்தேசித்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது
மேலும் இங்கே தொடர்க...


குக்குலுகலை தோட்ட மக்கள் முழுமையாக இன்னமும் வீடு திரும்பவில்லை
இரத்தினபுரி மாவட்டம் நிவித்திகலை, குக்குலுகலை தோட்டப் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்தவர்களில் சிலர் வீடு திரும்பியுள்ளனர். எனினும் சம்பவம் நடந்து இரு வர்ரங்களாகிவிட்ட நிலையில் இடம்பெயர்ந்த தமிழர்கள் இன்னமும் முழுமையாக வீடுதிரும்பவில்லை என அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.

பாடசாலை மாணவர்கள் தனியாகச் செல்ல அச்சம் தெரிவிப்பதால், பெற்றோர் அவர்களை வேறுவேறு பாடசாலைகளில் சேர்த்துள்ளதாகவும் , தமது குடியிருப்புகளுக்கு திரும்பியுள்ளவர்கள் இரவுவேளைகளில் அச்சத்துடன் இருப்பதாவும் அவர் மேலும் தெரிவித்தார்.

பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கடந்த 11ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்டார். இதற்கு தமிழர்களே காரணம் எனக்கூறியே இப்பகுதியில் வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டது.

இதன் காரணமாக 75 குடும்பங்களைச் சேர்ந்த 300இற்கும் அதிகமானோர் காடுகளில் தஞ்சமடைந்தனர். அவ்வேளை, அவர்களின் வீடுகள் சூறையாடப்பட்டு கால்நடைகள் பல கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

ஆட்சியை கைப்பற்ற முயலும் ரணில் முதலில் கட்சியைக் காப்பாற்ற வேண்டும்:கெஹெலிய

அரசாங்கத்தின் பதவிக்காலம் முடிவடைவதற்குள் பாராளுமன்றத்தை கலைத்து ஐக்கிய தேசியக் கட்சியை ஆட்சிப்பீடம் ஏற்றுவதற்கு முன்னர் தமது சொந்தக் கட்சியை ஒருங்கிணைத்து உறுப்பினர்களை தம்முடன் வைத்துக்கொள்ள எதிர்க்கட்சி தலைவர் முயற்சிக்கவேண்டும் என்று தகவல் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

நாடு ஒன்றின் எதிர்க்கட்சி தலைவர் ஆட்சியை கைப்பற்றவேண்டும் என்று எண்ணுவதும் முயற்சிப்பதும் இயல்பான விடயமாகும். ஆனால் அதற்கு முன்னர் தனது கட்சியை கட்டிக்காக்க வேண்டியது எதிர்க்கட்சி தலைவரின் தலையாய கடமையாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கூடிய விரைவில் பாராளுமன்றத்தை கலைத்து ஐக்கிய தேசிய கட்சியை ஆட்சிப்பீடமேற்றுவதுடன் சிறைப்படுத்தப்பட்டுள்ள முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவை விடுதலை செய்வோம் என்று ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான ரணில் விக்ரமசிங்க நேற்று முன்நாள் களனியில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் தெரிவித்துள்ளமை குறித்து கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் ரம்புக்வெல மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அமைச்சர் மேலும் கூறியதாவது:

பாராளுமன்றத்தின் பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னர் அதனை கலைத்து ஐக்கிய தேசிய கட்சியை ஆட்சிப்பீடமேற்றப்போவதாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் இவ்வாறு கூறுவதற்கு முன்னர் ஒரு விடயத்தை புரிந்துகொள்ளவேண்டும். அதாவது பாராளுமன்றத்தின் பதவிக் காலம் முடிவடைவதற்குள் அதனை கலைக்க முயற்சிப்பதற்கு முன்னர் தனது கட்சியை சீர்ப்படுத்த அவர் முயற்சிக்கவேண்டும். ஐக்கிய தேசிய கட்சியை மறுசீரமைத்து ஆதரவாளர்களை ஒருங்கிணைத்து கட்சியின் உறுப்பினர்களை தன்னுடன் வைத்துக் கொள்ள எதிர்க்கட்சி தலைவர் முதலில் முயற்சிக்கவேண்டும்.

அதனைவிடுத்து விரைவில் ஐக்கிய தேசிய கட்சியை ஆட்சி பீடத்தில் ஏற்றுவேன் என்று கூறினால் எப்படி? முதலில் தமது பக்கம் உள்ள விடயங்களை சரிசெய்துகொள்ள வேண்டும் என்பதுடன் சீர்ப்படுத்தவேண்டும்.

மேலும் பாரிய பலமான நிலையில் இருக்கின்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தை கலைத்து ஐக்கிய தேசிய கட்சியை ஆட்சிக்கு கொண்டுவரப் போவதாக எதிர்க்கட்சி தலைவர் கூறியிருப்பது அவரின் மற்றுமொரு நகைச்சுவை என்றே கூற வேண்டும். மக்களுக்கு அதனை பற்றி நன்றாகவே தெயும்.

மற்றுமொரு விடயமாக சரத் பொன்சேகாவை விடுவிக்கப் போவதாகவும் எதிர்க்கட்சி தலைவர் குறிப்பிட்டுள்ளார். பொன்சேகா விடயத்தில் ஐக்கிய தேசிய கட்சி சிறப்பாக செயற்படுவதில்லை என்று மக்கள் விடுதலை முன்னணி அடிக்கடி குற்றம் சுமத்தி வந்தது. அதனை சமாளிக்கும் வகையிலேயே தற்போது பொன்சேகா குறித்து எதிர்க்கட்சி தலைவர் இவ்வாறு கூறியுள்ளார் என்று கருதுகின்றோம்.
மேலும் இங்கே தொடர்க...

27 செப்டம்பர், 2010

காலங்கடந்து அரசுடன் இணைந்ததால் பியசேனவுக்கு முழுப் பலன் கிட்டவில்லை : முரளிதரன்

பியசேன காலங் கடந்து அரசாங்கத்துடன் இணைந்தமையால் முழுமையான பலன்களை அவரால் அனுபவிக்க முடியவில்லை. ஆளும் கட்சியில் ஒரு பிரதிநிதியை நீங்கள் கடந்த தேர்தலில் தெரிவு செய்திருந்தால் பல அபிவிருத்திகளை விரைவாகச் செய்யக் கூடியதாக இருந்திருக்கும்.

அவருக்கு எந்த அமைச்சுப் பதவியும் இல்லை. ஆரம்பத்திலேயே அரசாங்கத்தில் அவர் சேர்ந்திருந்தால் நிலைமை வேறு விதமாக இருந்திருக்கும்" என மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்தில் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்தவர்களை மீளக் குடியமர்த்துவது தொடர்பாக நேற்று மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் விஜயம் ஒன்றினை மேற்கொண்டார்.

இதன்போது திருக்கோவில் விநாயகபுரத்தில் அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் அவருக்குப் பாரிய வரவேற்பளித்தனர். விநாயகபுரம் சித்தி விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற ஆலய வழிபாடுகளை அடுத்து ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் கிளைக் காரியாலயத்தை அவர் திறந்து வைத்தார்.

அங்கு நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய அவர்,

"உங்கள் வாக்குபலத்தை வீணடிக்கும் செயலை கடந்த தேர்தலில் நீங்கள் செய்திருந்தீர்கள். உங்களுக்கான தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு உங்களுடன் இருப்பவர்களுக்கும் சேவை செய்யக் கூடியவர்களுக்கும் வாக்களியுங்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ஒருவரை அனுப்புவதால் எந்தப் பயனும் கிடைக்கப்போவதில்லை.

மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கான வேலைகள் மட்டக்களப்பு, திருமலை, வன்னி மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அம்பாறை மாவட்டத்திலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அனைத்து வசதிகளையும் விரைவில் மேற்கொள்வுள்ளேன்.

எதிர்வரும் நவம்பருக்குப் பின்னரே வீடுகள் அமைப்பது போன்ற அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்ள முடியும். அதற்கு முன்னதாக உங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும். தொழில்வாய்ப்புகள், கல்வி நடவடிக்கைகளும் மேம்படுத்தப்படவுள்ளன.

யுத்தத்தால் கடந்த 30 வருடங்களாக நாம் பட்ட இன்னல்கள் கொஞ்சங்கொஞ்சமாக களையப்பட்டு வருகின்றன. இப்போது நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகள் நிறைவடையும் போது, அதன் பலன்கள் உங்களுக்குக் கிடைக்கும்.

வீதி அபிவிருத்தி மற்றும் அடிப்படைக் கட்டுமான வேலைகள் நடைபெற்று வருகின்றன. அடுத்துத் தனிப்பட்ட ஒவ்வொருவரையும், மேம்படுத்தும் வேலைகளில் ஈடுபடவுள்ளோம்.

அம்பாறை மாவட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு அமைச்சிடம் இருக்கிறது. அதற்கான திட்டங்களை செயற்படுத்துவதற்கான ஆரம்பமாகவே உங்களை இன்று சந்திக்கிறோம். நீங்கள் மிகவும் தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும்.

கடந்த காலத்தில் விட்ட தவறுகளை எதிர்காலத்தில் விட்டுவிடாது நமக்காக உழைப்பவர்களை அரசியலுக்குக் கொண்டுவாருங்கள். அதன் மூலம் தான் எமது பிரதேசத்தைப் பொருளாதார முக்கியத்துவம் மிக்கதாக மாற்றியமைக்க முடியும்" என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

18ஆவது அரசியலமைப்பு:பிரதிநிதிகளை அறிவிக்க மேலும் ஒரு வாரம் அவகாசம்

18 ஆவது அரசியலமைப்பின் நாடாளுமன்ற சபைக்கு எதிக்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தமது பிரதிநிதிகளை அறிவிப்பதற்கு மேலும் ஒரு வாரம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இரு தலைவர்களும் இன்னும் ஒரு வாரத்தில் தமது பிரதிநிதிகளை அறிவிப்பர் என நாடாளுமன்றச் செயலாளர்நாயகம் தம்மிக்க கித்துல்கொட இன்று தெரிவித்தார்.

ஏற்கனவே தெரிவான பிரதிநிதியின் பெயர் நிராகரிக்கப்பட்ட நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம் மற்றுமொருவரை அறிவிக்கும்படி தாம் எழுத்துமூலம் கேட்டிருந்ததாக சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

புதியவரை எதிர்க்கட்சித் தலைவர் தெரிவு செய்ததும், பிரதிநிதிகள் பட்டியலை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கவுள்ளதாக சமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனை பரிந்துரை செய்திருந்த போதிலும், அது நிராகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சபாநாயகர், பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் அக்கிய மூவரும் ஐவரை மேற்படி புதிய அரசியலமைப்புச் சபைக்கு பிரதிநிதிகளாகத் தெரிவு செய்யும்படி கேட்கப்பட்டிருந்தனர்.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கையில் மேலும் 25 ஆபாச இணையத்தளங்களுக்குத் தடை

இலங்கையில் ஆபாச இணையத்தளங்களைத் தடை செய்யும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவித்துள்ள பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவு, அவ்வாறு இயங்கும் 25 இணையத்தளங்களைத் தடை செய்வது தொடர்பாக ஆராய்ந்து வருகிறது.

ஆபாச தகவல்கள், காட்சிகளை வெளியிட்ட 186 இணையத்தளங்கள் நீதிமன்ற அனுமதியுடன் தடை செய்யயப்பட்டுள்ளன. இவற்றில் இலங்கையைச் சேர்ந்த இளைஞர் யுவதிகளின் ஆபாச புகைப்படங்கள், காணொளிகள் காணப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
மேலும் இங்கே தொடர்க...

வர்த்தக நகரமாக கரடியனாறு : கிருஷ்ணானந்தராஜா கோரிக்கை

கரடியனாறை மாதிரி விவசாய விளைபொருள் வர்த்தக நகரமாக மாற்றுமாறும், வெடிப்புச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட கரடியனாறு பொலிஸ் நிலையத்தை நவீன முறையில் அமைக்குமாறும் வேண்டுகோள் விடுத்து கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எட்வின் கிருஷ்ணானந்தராஜா ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

அவரது கடிதத்தில் மேலும்,

"கரடியனாறில் அண்மையில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பொலிஸ் நிலையக் கட்டடம் கமநலசேவை வளாகத்தில் அமைந்திருந்துள்ளது.

அந்த வளாகத்தில் நெல் சுத்திகரிப்பு நிலையம், நெல் களஞ்சியசாலை, கமநல சேவை நிலையம், என்பன அமைந்திருந்தன. இவை அனைத்தும் சேதமாக்கப்பட்டு விட்டன.

இங்கிருந்த பொலிஸ் நிலையம் தற்காலிகக் கொட்டகையில் இயங்கி வருகிறது. அத்துடன் கால்நடை வைத்திய காரியாலயம், அருகிலிருந்த ஆலயம், தபாலகம் மற்றும் வர்த்தகக் கட்டடங்கள் என்பனவும் சேதமடைந்துள்ளன.

இவ்வாறு முழு அளவிலும் பகுதியளவிலும் அரச, தனியார் கட்டடங்கள் கரடியனாறில் சேதமடைந்துள்ளன.

எனவே விசேட புனர்வாழ்வுத் திட்டத்தின் கீழ் அபிவிருத்தி வேலைத் திட்டம் ஒன்றை கரடியனாறில் ஆரம்பித்து மாதிரி விவசாய விளைபொருள் வர்த்தக நகரமாக அதனை மாற்றுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

அத்துடன் இந்த இடத்திலுள்ள விசேட அதிரடிப்படை முகாமை வேறிடத்துக்கு மாற்றி, கரடியனாறு பொலிஸ் நிலையத்தைப் புதிய முறையில் அமைக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறோம்.

பதுளை வீதியில் கரடியனாறு நகரம் என்பது, ஏ 5 வீதியின் மையப் பகுதியிலும், ஆயித்தியமலை உன்னிச்சை வீதி சந்திக்குமிடமாகவும், வேப்பவெட்டுவான் மாவடியோடை பகுதியை இணைக்கும் இடமாகவும் அமைந்துள்ளது.

இப்பகுதியிலுள்ள 90 வீதத்திற்கும் மேற்பட்ட மக்கள் விவசாயம், மரக்கறிச் செய்கையில் ஈடுபட்டு வருபவர்களாவர்.

இலங்கையின் முக்கியமான மரக்கறி மாதிரிப் பண்ணைகளில் ஒன்றான கரடியனாறு இங்கு அமைந்துள்ளதால் இச்செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இங்கு விவசாய விளைபொருள் வர்த்தக நிலையம் ஒன்றை அமைப்பதன் மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தின் பொதுமக்கள் பாரிய நன்மையடைவார்கள். இதன்மூலம் இப்பிரதேசத்தின் அபிவிருத்திக்கும் மேம்பாட்டுக்கும் ஆவன செய்வீர்கள் என நம்புகிறோம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

ஐதேக சிரேஷ்ட உறுப்பினர் ஜோன் அமரதுங்க அரசுடன் இணைவார்?

நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சிப் பிரதம கொரடாவான ஜோன் அமரதுங்க அரசுடன் இணைந்து கொள்வார் என அரச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் ஐதேக மற்றுமொரு சிரேஷ்ட உறுப்பினரை இழக்கப் போவதாகவும் கூறப்படுகிறது.

நியூயோர்க் சென்றிருக்கும் ஜோன் அமரதுங்க நாடு திரும்பியதும் அரசுடன் இணைந்து கொள்வார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

ஜோன் அமரதுங்க. இலங்கை வெளி விவகார அமைச்சின் விசேட அழைப்பின் பேரில் தாம் நியூயோர்க் செல்ல இருப்பதாக முன்னர் தெரிவித்தார். இதற்கு ஐ.தே.கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.

அதன் பின்னர், தாம் தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டு நியூயோர்க் செல்வதாக அவர் தெரிவித்தார்.

அவர் இன்று 27ஆம் திகதி நாடு திரும்பியதும் அரசுடன் இணைந்துகொள்வார் எனவும், அமைச்சரவை மறுசீரமைப்பில் விமானப் போக்குவரத்து அமைச்சராக நியமிக்கப்படுவார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜோன் அமரதுங்கவின் வீட்டுக்குத் தற்போது விசேட அதிரடிப்படை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

பதவிக்காலம் முடிவதற்குள் பாராளுமன்றத்தை கலைத்து ஐ.தே.க ஆட்சியை கைபற்றும்: ரணில்

இன்றைய அரசாங்கத்தின் பதவிக் காலம் ஆறு வருடங்கள் நீடிப்பதற்கு அனுமதிக்க மாட்டோம். கூடிய விரைவில் பாராளுமன்றத்தைக் கலைத்து ஐக்கிய தேசியக் கட்சியை ஆட்சிப் பீடமேற்றுவதுடன் சிறைப்படுத்தப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை விடுதலை செய்வோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். சமாதான ஒப்பந்தம் மேற்கொண்ட என்னை தேசத்துரோகியாக வர்ணித்தவர்கள் இன்று பயங்கரவாதத்தை இல்லாதொழித்து நாட்டை மீட்ட சரத் பொன்சேகாவை சிறையில் அடைத்திருப்பது தான் தேசப்பற்றா? என்று கேட்க விரும்புகிறேன். என்னைத் தூற்றிய எந்தவொரு சிங்கள அமைப்பாவது பொன்சேகாவுக்கு இழைக்கப்பட்ட அநீதியை கண்டித்துள்ளதா? அல்லது சிங்கள ஊடகங்கள் தான் விமர்சித்துள்ளனவா? என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் களனி பிரதேச அமைப்பாளர் பெவன் பெரேரா ஏற்பாடு செய்திருந்த இளைஞர் அணிக் கூட்டம் அவரது இல்லத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது ரவி கருணாநாயக்க, ருவான் விஜேவர்த்தன ஆகிய எம்.பி. க்களும் மாகாண சபை மற்றும் மாநகர சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

இந்நாட்டுக்கு சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுத்தவரும் பயங்கரவாதத்தை அழித்தொழித்தவருமான சரத் பொன்சேகா எம்.பி. யை இன்றைய அரசாங்கம் மிக மோசமான முறையில் பழிவாங்க அவரை சிறையில் தள்ளியிருக்கின்றது.

அவருக்கு எதிரான முதலாவது இராணுவ நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பின் பிரகாரம் அவரது பதவிகள், பதக்கங்கள் பறிக்கப்பட்டு ஓய்வூதியமும் இரத்துச் செய்யப்பட்டு இறுதியில் அவர் இராணுவ சேவையில் பதவி வகிக்காதவர் என்றும் அறிவிக்கப்பட்டது.

அப்படியானால் இராணுவ சேவையில் இல்லாத சிவிலியன்களில் ஒருவரான சரத் பொன்சேகாவுக்கு எதிராக எவ்வாறு இரண்டாவது இராணுவ நீதிமன்றம் அமைக்க முடியும்? சிவிலியன் ஒருவரை எவ்வாறு இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்த முடியும் என்று கேட்க விரும்புகிறேன். அவருக்கு வழங்கப்பட்டுள்ள 3 வருட சிறைத் தண்டனையானது இராணுவ ஒழுக்கத்தைப் பாதுகாப்பதற்கான நீதிமன்றத்திலேயே வழங்கப்பட்டுள்ளது. மாறாக அந்தத் தீர்ப்பு அரசியலமைப்பின் கீழ் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள சட்ட ரீதியான நீதிமன்றத்திலிருந்து வழங்கப்படவில்லை என்பதையும் இங்கு கூறி வைக்க விரும்புகிறேன். இரண்டாவது இராணுவ நீதிமன்றத்தினூடாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா எம்.பி. யை அரசாங்கம் இழிவுபடுத்தியுள்ளது மட்டுமல்லாது அவருக்கு பாரிய துரோகமிழைத்துள்ளது.

சமாதான உடன்படிக்கை மேற்கொண்ட என்னை தேசத்துரோகி என்று இந்த நாடே கூறித் தூற்றியது. பல சிங்கள அமைப்புக்கள் எனக்கெதிராக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் போர்க்கொடி தூக்கின. அவமதிப்பான சொற்பிரயோகங்களை வெளிப்படுத்தின. ஆனால் இன்று சரத் பொன்சேகாவின் நிலை என்ன என்பதை அந்த அமைப்புக்கள் அறிந்துள்ளனவா?தேசப்பற்று குறித்து பேசிய ஜாதிக ஹெல உறுமய எங்கே இருக்கின்றது. ஊடகங்கள் வாய் திறந்துள்ளனவா? சரத் பொன்சேகா தொடர்பிலான விடயங்களை தமிழ் மொழியிலான இணையத்தளங்கள் செய்தி வெளியிடும் அளவுக்கு கூட சிங்கள ஊடகங்கள் அக்கறைகாட்டவில்லை. ஆனாலும் நாள்தோறும் எனக்கு சேறு பூசும் விடயங்களை மாத்திரம் சரியாக செய்து வருகின்றன.

சரத் பொன்சேகா மக்களின் ஆதரவுடன் பாராளுமன்றத்துக்கு தெரிவானவராவார். அவருக்கு அளிக்கப்பட்டுள்ள தீர்ப்பினையடுத்து அவரது அனைத்து சிறப்புரிமைகளும் பறிக்கப்பட்டுள்ளன. இதற்கு உடந்தையான இரண்டாவது இராணுவ நீதிமன்றத்தின் நீதிபதிகளை பாராளுமன்ற சிறப்புரிமைக் குழுவின் முன்னிலையில் ஆஜர்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

அரசாங்கத்தின் இன்றைய சர்வாதிகாரப் போக்கினை உடன் தடுத்து நிறுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளது. இதனை மேலும் அனுமதிக்க முடியாது. தங்க மகன் என்றும் பயங்கரவாதத்தை வென்ற யுத்த வெற்றியாளன் என்றெல்லாம் கூறிய அரசாங்கம் தான் இன்று அவரை சிறைக்குள் தள்ளியுள்ளது. எதிர்க்கட்சி என்ற வகையில் எமக்கென்று பொறுப்புக்கள் இருக்கின்றன. ஜனநாயகத்துக்கு விரோதமான பயணத்தை நிறுத்தியாக வேண்டும்.

எனவே முதலில் நாம் கட்சிக்குள் ஐக்கியத்தை ஏற்படுத்துவோம். அடுத்ததாக இன்றைய அரசாங்கத்தின் ஆறு வருட பதவிக் காலத்தை இடையிலேயே முறியடித்து வெகு விரைவில் பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கு நடவடிக்கை எடுப்போம். அது மட்டுமல்லாது மக்களின் பேரபிமானத்துடன் ஆட்சியை அமைத்து சரத் பொன்சேகாவை சிறையிலிருந்து விடுவிப்போம்.அரசாங்கத்தின் சர்வாதிகாரத்துக்கு எதிராகவும் அதேநேரம் சரத் பொன்சேகா எம்.பி. யை விடுதலை செய்து கொள்வதற்குமான போராட்டம் அக்டோபர் மாதம் மூன்றாம் திகதி ஆரம்பமாகின்றது. அன்றயை தினம் பூகொடை பௌத்த மத்தியஸ்தான விஹாரையில் பிரித் நிகழ்வுடன் ஆரம்பமாகும் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கையில் தமிழ் மக்கள் மாத்திரமல்ல சிங்களவர்களும் நிம்மதியாக வாழ முடியாத சூழல்

இலங்கையில் சிறுபான்மை இன மக்களுக்கு சுதந்திரமாக அச்சமின்றி வாழ முடியும் என்றால் அவர்கள் ஏன் இன்றும் நாட்டை விட்டு ஓட வேண்டும். தமிழ் மக்களுக்கு மாத்திரமல்ல சிங்கள மக்களுக்கு கூட நிம்மதியாக வாழ முடியாத ஒரு அச்சுறுத்தலான சூழலே இன்று இலங்கையில் காணப்படுகின்றது என்று ஜே. வி. பி. யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்தார். உள்நாட்டில் இல்லாதவற்றை ஐக்கிய நாடுகள் சபையில் உண்டு என அரசாங்கம் வழமைபோன்று கூறியுள்ளது. இதனை நம்புவதற்கு ஐ.நா.வோ ஏனைய சர்வதேச நாடுகளோ முட்டாள்கள் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக தெளிவுபடுத்திய சோமவன்ச அமரசிங்க கூறுகையில்,

உள்நாட்டில் ஜனநாயக சூழலுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளமை உலகம் அறிந்த உண்மையாகும். அதேபோன்று பொருளாதார அபிவிருத்தி என்ற பெயரில் பாரிய மோசடிகளே இடம்பெறுகின்றது. பொதுமக்கள் சுதந்திரமாக செயற்பட முடியாத அளவிற்கு அரசாங்கத்தின் அடக்கு முறைகள் காணப்படுகின்றது. மனித உரிமைகளுக்கோ மனிதாபிமானத்திற்கோ இலங்கையில் மதிப்பில்லை.

அரசியல் பழிவாங்கல்களும் சர்வாதிகார ஆட்சியுமே இலங்கையில் மேலோங்கியுள்ளது. இது உலக நாடுகள் அறிந்த உண்மை. இதனை இல்லை என அரசாங்கம் ஐ.நாவில் கூறியமை சர்வதேச மட்டத்திலான வேடிக்கையாகவே உள்ளது. சிறுபான்மை இன மக்கள் மாத்திரமல்ல எந்தவொரு இனத்திற்கும் இலங்கையில் அச்சமின்றி வாழ முடியாது.

காலாகாலமாக இலங்கைக்கு வழங்கப்பட்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜீ. எஸ். பி. சலுகை இல்லாமல் போனதற்கு உள்நாட்டில் மனித உரிமைகளும் நல்லாட்சியும் இல்லாமையே காரணமாகும். அத்தோடு யுத்தம் முடிந்துள்ள போதிலும் வடக்கு கிழக்கில் பாதுகாப்பு வலயங்கள் காணப்படுகின்றன. கம்பி வேலிகளுக்குள் தமிழ் மக்கள் சிறைப்படுகின்றனர். இன்னும் ஆள்கடத்தல்கள் கூட முடிவிற்கு வரவில்லை. இவ்வாறானதொரு சூழ்நிலையில் தமிழ் மக்களுக்கு இலங்கையே சுதந்திரமான நாடு என்பதில் எவ்விதமான உண்மையும் இல்லை எனக் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

வடமாகாணத்தில் 120 பாடசாலைகள் தரமுயர்வு கல்வித்துறை மேம்பாட்டுக்கென நான்காண்டு திட்டம் ஜனவரியில்






வடக்கிலுள்ள 120 பாடசாலைகளை மத்திய கல்லூரி தரத்திற்கு மேம்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

வட மாகாணத்திலுள்ள ஐந்து மாவட்ட ங்களைச் சேர்ந்த 120 பின்தங்கிய பாடசா லைகளே இவ்வாறு தரம் உயர்த்தப்பட வுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார். நாடு முழுவதிலும் உள்ள ஆயிரம் பின்தங்கிய பாடசாலைகளை மத்திய கல்லூரி தரத்திற்கு மேம்படுத்துவது தொடர்பாக கல்வி அமைச்சருக் கும், மாகாண ஆளுநர்களுக்கும் இடையிலான சந்திப்பின் போது தீர்மானிக்கப் பட்டதாகத் தெரி வித்த அவர், இவற்றில் வடக்கிலுள்ள 120 பாடசாலைகளை மேம்படுத்த இணக்கம் காணப்பட்டதாகவும் குறிப்பி ட்டார்.

வட மாகாணத்தின் கல்வித்துறையை மேம்படுத்தத் தேவையான சகல நடவடிக்கைகளையும், அரசாங்கமும், மாகாண அமைச்சும் மேற்கொண்டுள் ளதாக ஆளுநர் தெரிவித்தார்.

அடுத்த ஆண்டு ஜனவரி தொடக்கம் நடைமுறையில் வரவுள்ள இத்திட் டம் நான்கு ஆண்டு காலத்திற்குள் நிறைவடை யவுள் ளது என்றார். வட மாகாணத்தில் மத்திய அரசின் கீழ் இயங்கும் ஐந்து பாட சாலைகளும், மாகாண அமைச்சின் கீழ் இயங்கும் 1006 பாடசாலைகளும் உள்ளதாக தெரிவித்த அவர், இவற்றில் 82 பாடசாலைகள் இன்னும் மீள திறக்கப் படாமல் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டி னார். ஐந்து கிராமங்களிலிருந்து ஒரு பாடசாலை என்ற அடிப்படையில் மாவட்டமொன்றி லிருந்து 20 தொடக்கம் 30 பாடசாலைகள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளது.

பின்தங்கிய 20 பாடசாலைகளையும் சம்பந்தப்பட்டவர்களின் உதவியுடன் தானே தேர்ந்தெடுத்து அதற்கான சிபாரிசு களை கல்வி அமைச்சுக்கு அனுப்பவுள் ளதாகவும் ஆளுநர் குறிப்பிட்டார். இத்திட்டத்தின் மூலம் வடமாகாணத்திலு ள்ள பாடசாலைகள் மேம்படுத்தப்பட வுள்ளதுடன் ஐந்து மாவட்டங்களையும் சேர்ந்த மாணவ, மாணவிகள் நன்மையடைய வுள்ளனர்.

இதேவேளை, பின்தங்கிய பிரதேசங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் சிறந்த பாடசாலைகளைத் தேடி அலையும் சிரமத்திலிருந்து தவிர்ந்து கொள்ள முடியும் என்று ஆளுநர் சுட்டிக்காட்டினார்.

இத்திட்டத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப் படும் பாடசாலைக்குத் தேவை விளையாட்டு மைதானம், ஆய்வுக் கூடங்கள், நூலகம், கணனி அறைகள், பெளதீக வளங்கள், ஆசிரியர்கள் பெற்றுக் கொடுக்கப்படும். அத்துடன் மேற்படி பாடசாலைகளின் மாணவர்களின் எண்ணிக்கையும் 1500 ஆக அதிகரிக்கப்படும் என்றும் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

இதேவேளை, வடக்கில் மூடப்பட்டுள்ள சுமார் 82 பாடசாலைகள் கண்ணிவெடிகள் அகற்றப்பட்ட பின்னர் விரைவில் மீண்டும் திறக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...

ரயிலுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து; மூவர் பலி கட்டுநாயக்க ரயில் கடவையில் கோரம்


கட்டுநாயக்கா ரயில்வே கடமையில் நேற்று இடம்பெற்ற ரயில் விபத்தொன்றி மூவர் பலியாகியதுடன் மற்றுமொருவர் படுகாயங்களுடன் கொழும்பு பெரியாஸ் பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளார்.

இச்சம்பவம் நேற்றிரவு 6.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த நால்வரே இவ்விபத்துக்கு இலக்காகியுள்ளனர். இவர்களில் இருவர் பெண்களாவர்.

விபத்தில் பலியான மூவரது சடலங்களும் நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன. காயமடைந்தவர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டு பின்னர் அங்கிருந்து கொழும்பி பெரியாஸ்பத்திரிக்கு அனுப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக ரயில்வே துறை உயரதிகாரியான விஜயசமரசிங்க தகவல் தருகையில், நேற்றைய தினம் 6.14 மணியளவில் கொழும்பு கோட்டையிலிருந்து ரயில் எஞ்சினொன்று சிலாபத்தை நோக்கி சென்றது.

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயப் பிரதேசத்தில் நான்கு பேர் பயணித்த மோட்டார் சைக்கிளானது ரயில் கட வையை ஊடறுத்துச் செல்ல முனைகையிலேயே மேற்படி விபத்து இடம்பெற்றுள்ளது. ரயில் என்ஜின் மோட்டார் சைக்கிளில் மோதியதில் ஸ்தலத்திலேயே மூவர் பலியாகியதுடன் ஒருவர் படுகாயங்களுடன் வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். மேற்படி விபத்தில் சம்பந்தப் பட்ட நால்வரும் கட்டுநாயக்க பிரதேச வாசிகளல்ல எனவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார். விசாரணைகள் தொடர்கின்றன.
மேலும் இங்கே தொடர்க...

ரூ.12 இலட்சம் பெறுமதியான கருத்தடை மாத்திரைகளுடன் ஒருவர் கைது

இந்தியாவிலிருந்து திருட்டுத்த னமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட 12 இலட்சம் ரூபா பெறுமதியான கருத்தடை மாத்திரை களை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகள் கைப்பற்றியு ள்ளனர்.

இலங்கையர் ஒருவரே இந்தியாவின் சென்னையிலிருந்து இம்மாத்திரைகளைக் கடத்தி வந்துள்ளதுடன் குழந்தைகளுக்கான உணவு சவர்க்காரம் மற்றும் சொக்கலேட்டுக்களுக்குள் மறைத்து வைத்தே இதனை கொண்டு வந்துள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர். இச்சம்பவம் நேற்று முன்தினம் இடம் பெற்றுள்ளது.

அன்றைய தினம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடை ந்த யி. வி. 573 விமானத்தில் பயணித்துள்ள அவர் சுங்க அதிகாரிகளுக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு இதனை வெளியே கொண்டு வருவதற் காக பெரும் பிரயத்தனம் மேற்கொண்ட போதும் அது பலிக்க வில்லை. சுங்க அதிகாரிகளான லால் சில்வா, நந்தன ஜயதிலக ஆகியோர் லாவகமாக குறிப்பிட்ட கருத்தடை மாத்திரைகளைக் கைப்பற்றியுள்ளனர். இலங்கையில் பதிவு செய்யப்படாத 3860 மாத்திரைகள் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன.

சுங்கப் பணிப்பாளர் பராக்கிரம பஸ்நாயக்கவின் வழிகாட்டலில் பிரதிச் சுங்கப் பணிப்பாளர் ஹேமால் கஸ்தூரி ஆராய்ச்சி மேற்படி விசாரணைகளை மேற்கொண்டதுடன் சந்தேக நபருக்கு 50,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

மீள் குடியேற்றப்பட்டோருக்கு விசேட ஏற்பாடு: மழைக்கு ஈடுகொடுக்கும் வகையில் கூடாரத்துணிகள், கூரைத்தகடுகள்

வடக்கில் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளோ ர்க்கு எதிர்வரும் மழைக் காலத்திற்கு முன்னதாக பாதுகாப்பான கூடாரங்களை அமைத்துக் கொடுப்பதற்கென வட மாகாண சபை 5 மில்லியன் ரூபாவினை ஒதுக்கியுள்ளதென மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிரி தெரிவித்தார்.

இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் வடக்கில் மீள்குடியேறியுள்ளோருக்கென 51 ஆயிரம் வீடுகள் அமைக்கும் பணிகள் ஒக்டோபர் நடுப்பகுதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.

மழைக் காலத்திற்கு ஈடுகொடுக்கக் கூடிய வகையில் தற்காலிகமாக இந்தக் கூடாரங்கள் அமைத்துக் கொடுக்கப்படவிரு ப்பதாகவும் ஆளுநர் கூறினார்.

மோதல்களின் போது இடம்பெயர்ந்து வவுனியா நிவாரணக் கிராமங்கள் மற்றும் ஏனைய வெளி மாவட்டங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளோர் அரசாங்கத்தின் மீள்குடியேற்றத் திட்டத்தின் கீழ் தமது சொந்த இடங்களில் குடியமர்த்தப்பட்டு வருகின்றனர். துரிதகதியில் மீள் குடியேற்றம் இடம்பெற்றுவரும் நிலையில், எதிர்வரும் மழைக்காலத்திற்கு முன்னதாக அம்மக்களுக்கு பாதுகாப்பான கூடாரங்கள் பெற்றுக் கொடுப்பது தொடர்பாக வடமாகாண ஆளுநர் தலைமையில் அண்மையில் கொழும்பில் கூடி ஆராயப்பட்டது.

இந்திய அரசாங்கம் பெற்றுத் தருவதாக இணக்கம் தெரிவித்திருக்கும் கூரைத் தகரங்களுக்கும் மேலதிகமாகவே வடமாகாண சபை இதற்கென 05 மில்லியன் ரூபாவினை ஒதுக்கீடு செய்துள்ளது. இதேவேளை, ஆளுநரின் வேண்டுகோளுக்கமைய போதி யளவு கூரைத்தகரங்கள் மற்றும் அதற்குப் பயன்படுத்தப்படும் சீட்டுக்களைப் பெற் றுக்கொடுப்பதற்கான ஏற்பாடுகளை மீள்குடி யேற்ற அமைச்சு முன்னெடுத்து வருவதாக வும் அதன் செயலாளர் எஸ். திஸாநாயக்க கூறினார். இதற்குரிய நிதி கூடிய விரை வில் அமைச்சினூடாக பெற்றுக் கொடுக்கப் படுமெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பல தன்னார்வ தொண்டு நிறுவனங் களும் மழைக் காலத்திற்கு முன்னதாக கூடா ரங்களைப் பெற்றுக் கொடுக்க இணக்கம் தெரிவித்துள்ளன.

இதன்படி குடும்ப மொன்றுக்கு 12 கூரைத் தகடுகள் வீதம் வழங்கப்பட தீர்மானிக்கப்பட் டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

அமெரிக்க வர்த்தகர்களுடன் ஜனாதிபதி சந்தித்து பேச்சு


நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அமெரிக்காவிலுள்ள முக்கிய வர்த்தகர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்த சந்திப்பின் போது இலங்கையில் வெளிநாட்டு முதலீடுகள் குறித்து கலந்துரையாட ப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது

அமெரிக்காவின் பிரபல வர்த்தகர்கள் பங்குபற்றிய கூட்டமொன்று நியூயோர்க்கில் இடம்பெற்றது. இதில் பிரபல வர்த்தகர்கள் 100க்கும் அதிகமானோர் கலந்து கொண்டுள்ளனர்.

இதன்போது அமெரிக்க பிரபல வர்த்தகர்களை சந்தித்த ஜனாதிபதி இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வது குறித்து ஒவ்வொருவரின் கவனத்திற்கும் கொண்டு வந்துள்ளார்.

இதற்கு அமெரிக்க வர்த்தகர்களும் தமது இணக்கத்தை வெளியிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் ஜீ. எல். பீரிஸ், வர்த்தகர்கள் முதலீடுகளை மேற்கொள்ள இலங்கை தற்போது சிறந்த தகுதியுடைய நாடு என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

மலேசிய பிரதமருடன் ஜனாதிபதி சந்தித்துப் பேச்சு முதலீட்டு ஊக்குவிப்பு தொடர்பாக ஆராய்வு

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மலேசிய பிரதமர் அப்துல் ரஸாக்கை நியூயோர்க்கில் சந்தித்து பேசினார். மூன்று தசாப்த காலம் இடம்பெற்ற பயங்கரவாதத்தை முறியடிக்க படையினருக் கான யுத்தப் பயிற்சி மற்றும் புலனாய்வுத் துறையில் மலேசியா இலங்கைக்கு வழங்கிய உதவிகளுக்கு ஜனாதிபதி அச்சமயம் மலேசிய பிரதமருக்கு நன்றி தெரிவித்தார்.

இலங்கையின் பாதுகாப்பு படையினரை மேலும் பலப்படுத்தும் நோக்கில் பிராந்தியத்தில் உயர்மட்ட படையினர் பயிற்சி பாடசாலையான ஸ்கயிட் படை யினர் பயிற்சி பாடசாலையில் பயிற்சியளிக்க தொடர்ந்து வாய்ப்பளிப்பதற்கு மலேசிய அரசாங்கம் இணங்குவதாக இந்த சந்திப்பின் போது மலேசிய பிரதமர் குறிப்பிட்டார்.

தற்போது இலங்கையில் முதலீடு செய்துள்ள மலேசியர்கள் பெரும்பாலும் தொலைத் தொடர்புத் துறையிலேயே முதலீடு செய்துள்ளனர். இதனை மலேசிய பிரதமரின் அவதானத்துக்கு உட்படுத்திய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏனைய துறைகளிலும் மலேசிய வர்த்தகர்களை முதலீடு செய்ய ஊக்குவிக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி மலேசிய பிரதமரைக் கேட்டுக் கொண்டார்.
மேலும் இங்கே தொடர்க...

26 செப்டம்பர், 2010

விடுதலை புலிகளின் சர்வதேச வலையமைப்பு தலைவர்களை ஒப்படைக்குமாறு நோர்வேயிடம் கோரிக்கை


விடுதலை புலிகளின் சர்வதேச வலையமைப்பு தலைவர்களை ஒப்படைக்குமாறு நோர்வேயிடம் கோரிக்கை விடுத்துள்ளார் இலங்கை ஜனாதிபதி! இது தொடர்பில் சிங்கள செய்தி தாள் ஒன்று விடுத்துள்ள செய்தியில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

வி.புலிகளின் சர்வதேச வலையமைப்பை இல்லாதொழிப்பதற்கு நோர்வே அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கும் என ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டுள்ளார். ஐ.நாவின் 65 வது மாநாட்டில் கலந்து கொண்ட போது நோர்வே பிரதமரை சந்தித்து இது தொடர்பான கோரிக்கையை விடுத்தார்.

அதற்கு பதில் அளித்த நோர்வே அதிபர் ஜேன்ஸ் டொலன் பெர்க் நோர்வேயில் இயங்கி வரும் வி.புலிகள் உறுப்பினர்கள் தொடர்பான தகவல்களை தமக்கு வழங்குமாறு மஹிந்தவிடம் கோரியுள்ளார்.

இது போன்று சர்வதேச பயங்கரவாத்தை இல்லாதொழிப்பதற்கு உலக தலைவர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார் என அச்செய்தி தெரிவிக்கின்றது.
மேலும் இங்கே தொடர்க...

இரட்டைகோபுர தாக்குதலுக்கு அமெரிக்கா தான் காரணம்: ஈரான் அதிபர்

நியூயார்க் இரட்டைக் கோபுரங்கள் மீது நடத்தப்பட்ட விமானத் தாக்குதலுக்கு அமெரிக்க அரசு தான் காரணம் என்று கூறி ஐக்கிய நாடுகள் சபையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் ஈரான் அதிபர் அகமதிநிஜாத். அவரது பேச்சைக் கண்டித்து அமெரிக்க குழுவினர் ஐ.நா.விலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

ஐ.நா. பொது சபை கூட்டத்தில் ஈரன் அதிபர் அகமதிநிஜாத் பேசியதாவது:-

2001ஆம் ஆண்டு அமெரிக்காவின் மாபெரும் உளவுப் பிரிவையும், பாதுகாப்பு வளையத்தை எல்லாம் மீறி நியூயார்க்கில் செப்டம்பர் 11 இரட்டைக் கோபுர தாக்குதலை அல்-கொய்தா தீவிரவாதிகள் நடத்தியதாகக் கூறுகின்றனர். ஆனால், அந்தத் தாக்குதலை நடத்தியதே அமெரிக்கா தான் என்று தான் உலகின் பெரும்பாலான மக்கள் நினைக்கின்றனர். உலகளவில் சரிந்து வரும் தனது செல்வாக்கை நிலை நிறுத்தவும், சரிந்து விட்ட தனது பொருளாதாரத்தை சரி செய்யவும், வளைகுடாவில் தனது ஆதிக்கத்தை மீண்டும் நிலைநாட்டி, இஸ்ரேலுக்கும் யூத சக்திகளுக்கும் உதவவும் அந்தத் தாக்குதலை திட்டமிட்டு அமெரிக்கா தான் நடத்தியது.

அமெரிக்க அரசில் உள்ள ஒரு சக்தி வாய்ந்த பிரிவினர் தான் இந்தத் தாக்குதலை நடத்தினர் என்று தான் பெரும்பாலான அமெரிக்க மக்களும், உலகின் பெரும்பாலான மக்களும், உலக அரசியல் தலைவர்களும் நினைக்கின்றனர் என்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறேன். அல்லது அந்தத் தாக்குதலை உண்மையிலேயே தீவிரவாதிகள் தான் நடத்தினர். ஆனால், அந்தத் தாக்குதலை தனது சுய லாபத்துக்காக பயன்படுத்திக் கொண்டது அமெரிக்கா என்றும் சொல்லலாம். இந்த நியூயார்க் தாக்குதலை முன் வைத்துத் தான், தீவிரவாதத்தை ஒழிக்கிறோம் என்று சொல்லிக் கொண்டு ஆப்கானிஸ்தான் மீதும் ஈராக் மீதும் அமெரிக்கா போர் தொடுத்தது. இதனால் நியூயார்க் தாக்குதல் குறித்து ஐ.நா. முழுமையான விசாரணை நடத்தி உண்மையில் என்ன நடந்தது என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.

தான் மட்டும் அணு ஆயுதங்களை குவித்து வைத்துக் கொண்டு, நாங்கள் (ஈரான்) அணு ஆயுதம் தயாரிக்கிறோம் என்று சொல்லிக் கொண்டு எங்களையும் அமெரிக்கா வம்புக்கு இழுத்து வருகிறது. அணு ஆராய்ச்சி விசயத்தில் நாங்கள் பேச்சுவார்த்தைக்குத் தயார். ஆனால், அது நேர்மையாகவும் மரியாதையுடனும் நடக்க வேண்டும். அடுத்த நாட்டுக்கு மரியாதை தராமல் செயல்பட்டால் பதிலுக்கு மரியாதை கிடைக்காது என்பதை அனைவரும் உணர வேண்டும். அதே போல ஈரான் மீது தொடர்ந்து பொருளாதாரத் தடைகளை விதித்து நமது வழிக்குக் கொண்டு வந்துவிடலாம் என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நினைத்தால் அதன் மீது கொஞ்ச நஞ்சம் உள்ள நம்பிக்கையும் போய்விடும். சர்வதேச அணு ஆராய்ச்சி மையத்தின் சட்டதிட்டத்துக்கு உட்பட்டே ஈரானிய ஆராய்ச்சிகள் நடக்கின்றன. மற்றபடி யாருடைய நெருக்குதலுக்கும் ஈரான் பணிந்ததில்லை, இனியும் பணியாது. இவ்வாறு அவர் பேசினார்.

அகமதிநிஜாத் இவ்வாறு பேசிக் கொண்டிருக்கும்போதே அமெரிக்க ஐ.நா. குழுவினர் வெளிநடப்பு செய்தனர். அவர்களைத் தொடர்ந்து பல ஐரோப்பிய நாடுகளின் தூதர்களும் குழுவினரும் வெளிநடப்பு செய்தனர்.
மேலும் இங்கே தொடர்க...

பெண் மீது பாலியல் பலாத்காரம் புரிய முயன்ற கான்ஸ்டபில் கைது

கண்டி மாவடத்;திலுள்ள தவுலகலை பொலிஸ் நிலைய கான்ஸ்டபில் ஒருவர் இன்று காலை தனிமையில் வீட்டிலிருந்த பெண் ஒருவர் மீது பாலியல் பலாத்காரம் புரிய முட்பட்டார் என்ற குற்றச் சாட்டில் கைது செய்யப் பட்டுள்ளார்.

விசாரணை ஒன்றிற்காக வீடொன்றிற்குச் சென்ற சமயம் தனிமையில் இருந்த அப் பெண்மீது மேற்படி கான்ஸ்டபில் தவறாக நடக்க முற்பட்டதாக அப் பெண் செய்த முறைப்பாட்டை அடுத்தே பொலிஸ் குறித்த கான்ஸ்டபிளை கைது செய்துள்ளதோடு மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
மேலும் இங்கே தொடர்க...

இந்திய இலங்கை கடற்படைகளின் அதிகாரிகள் 29 ஆம் திகதி சந்திப்பு

இந்தியக் கடற்படை மற்றும் கடலோரக் காவல்படையுடனான சந்திப்பு எதிர்வரும் 29ஆம் திகதி நடைபெறும் என்று இலங்கைக் கடற்படைப் பேச்சாளர் கப்டன் அதுல சேனரத் தெரிவித்துள்ளார்.

இந்தச் சந்திப்பு, இந்திய இலங்கைக் கடல் எல்லையில் இந்தியக் கடற்படைக் கப்பல் ஒன்றில் இடம்பெறவுள்ளது. இலங்கைக் கடற்படையின் உயர்மட்டத் தளபதிகள் பலர் இந்திய கடற்படைத் தளபதிகளுடன் இதன்போது பேச்சு நடத்தவுள்ளனர்.

தமிழ்நாடு மீனவர்கள் தாக்கப்பட்டது தொடர்பான விடயங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்தும் இந்தச் சந்திப்பில் கலந்துரையாடப்படவுள்ளது. இது வருடத்தில் இரண்டு முறை நடைபெறுகின்ற வழக்கமானதொரு சந்திப்புத்தான் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

அதுவேளை முன்னதாக இலங்கைக் கடற்படையை அவசர சந்திப்புக்கு அழைத்திருப்பதாகவும், இதன்போது தமிழ்நாடு மீனவர்கள் தாக்கப்படுவது தொடர்பாக பேசப்படவுள்ளதாகவும் மண்டபத்திலுள்ள இந்தியக் கடலோரக் காவல்படை கட்டளை அதிகாரி சைனி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

அமைச்சர் பசில் இன்று மட்டு. விஜயம்


உலக சுற்றுலா தினத்தையொட்டி பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இன்று மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்கிறார். இவர் சுமார் 10 கோடி ரூபாய் செலவிலான அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்து வைப்பார்.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் ‘நெக்டெப்’ திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீட்டிலிருந்து இவ் அபிவிருத்திப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு நகரில் சுமார் 3 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட வாவியோர சுவர், கல்லடி கடற்கரையில் 3 கோடி ரூபாய் செலவில் நிர்மாணிக்கப் பட்டுள்ள நடைபாதைக் கூடாரம் மற்றும் சிறுவர் விருந்தகம் உட்பட பல உல்லாசப் பயணிகளைக் கவரும் இடங்களை அவர் திறந்து வைப்பாரென மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது.
மேலும் இங்கே தொடர்க...