23 அக்டோபர், 2010

திருமலையில் தமிழ் இலக்கிய விழா இன்று ஆரம்பம்

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் நடத்தும் தமிழ் இலக்கிய விழா திருகோணமலை வலயக் கல்வி அலுவலகத்தின் முன்றலில் இருந்து பண்பாட்டு பவனியுடன் இன்று சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு ஆரம்பமானது.

தமிழ் இன்னிசை அணியினர் முன்னே செல்ல அறிஞர்கள், பேராளர்கள் தொடர்ந்து வந்தனர். தமிழ் அறிஞர்கள் வேடம் புனைந்த பாடசாலை மாணவர்கள் அணியும் இதில் பங்கேற்றனர்.

பாடசாலை மாணவர்களின் கலாசார பவனியும் இடம்பெற்றது. காவடி, கும்பம், கோலாட்டம், கும்மி, நடனம் என்பனவும் இவ்ஊர்வலத்தில் இணைந்து கொண்டன.

அலங்கரிக்கப்பட்ட தமிழ் அன்னை, வாகனம் ஒன்றில் வர அதற்கு மாணவிகள் வீதிநெடுக மலர் தூவி வரவேற்றவாறு வந்தனர்.

திருஞானசம்பந்தர் வீதி, பிரதான வீதி, விகாரை வீதி, ஊவர்மலை மத்திய வீதி வழியாக பண்பாட்டு ஊர்வலம், விழா நடைபெறும் உவர்மலை விவேகானந்தா கல்லூரியை வந்தடைந்தது.
மேலும் இங்கே தொடர்க...

பௌத்த மதத்தினரின் தொகை வீழ்ச்சியடைகிறது : அமைச்சர் திசாநயக்க

பௌத்த மதத்தைப் பின்பற்றுபவர்களின் தொகை வீழ்ச்சியடைந்து வருவதற்குக் காரணம் அதன் கடினமான போக்காகும். பௌத்தம் உலகில் முதலிடத்திலிருந்து இன்று நான்காம் இடத்திற்குத் தள்ளப்பட்டு விட்டதாகவும் உயர் கல்வி அமைச்சர் எஸ்.பீ திசாநாயக்கா தெரிவித்தார்.

கண்டி பூஜாப்பிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு மேலும் உரையாற்றிய அமைச்சர்,

"தற்போது உலகம் மிக வேகமாக முன்னேறிச் செல்கிறது. இன்னும் 25 வருடங்களில் தீப்பெட்டி போன்ற கருவி ஒன்றின் மூலம் உலகம் முழுவதிலுமுள்ள மக்களுடன் பேச முடியும் என்று ஆதர் சீ க்லாக் 1964ஆம் ஆண்டு கூறியபோது, அவர் பைத்தியக்காரர் என்று அப்போது பாடசாலை மாணவர்களாக இருந்த நாங்கள் கூறினோம்.

ஆனால் இன்று அது உண்மையாகிவிட்டது.

அன்று உலகில் முதலிடத்தில் பௌத்த மதம் இருந்த போதும் தற்போது நான்காவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. அதற்கு காரணம் பௌத்த மதத்தில் காணப்படும் நடைமுறைச் சிரமங்களேயாகும்.

உலகில் ஐந்தாவது மிகப்பெரிய சனத்தொகையுடைய நாடான இந்தோனேசியா ஒரு பௌத்த நாடு. ஆனால் அவர்களுடைய தொழில் மீன்பிடிப்பது. பௌத்த மதத்துக்கும் மீன்பிடித் தொழிலுக்கும் இடையே முரண்பாடுகள் காணப்படுவதனால் இன்று முழு இந்தோனேசியாவும் இஸ்லாம் மதத்தை ஏற்றுக் கொண்ட ஒரு நாடாகி விட்டது.

மாலைதீவும் அப்படியே மதம் மாறிய ஒரு நாடாகும்.

உலகிலுள்ள 190 கோடி மக்கள் கிறிஸ்தவர்களாவர். 120 கோடி பேர் முஸ்லிம்களும் 90 கோடிப் பேர் இந்துக்களுமாவர்.

ஆனாலும் பௌத்த மக்கள் 35 கோடியினரே உளர்" என்றும் அமைச்சர் கூறினார்.

மத விவகார பிரதி அமைச்சர் எம்.கே.டீ.எஸ். குணவர்தன உட்பட பலரும் இவ்வைபவத்தில் கலந்து கொண்டனர்.
மேலும் இங்கே தொடர்க...

ஆலய உற்சவத்தில் போதைப்பொருள் விற்பனை : இருவருக்கு சிறைத் தண்டனை

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவில் உள்ள ஆலய உற்சவம் ஒன்றின் போது தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்த இருவருக்கு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி இராமக்கமலன் சிறைத் தண்டனை விதித்துள்ளார்.

கடந்த 19 ஆம் திகதி கோயில்போரதீவு பிரதேசத்தில் உள்ள பத்திரகாளியம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தின் போதே போதைப் பொருட்களை விற்பனைசெய்த இருவரைக் கைதுசெய்துள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பி.ஆர்.மானவடு தெரிவித்தார்.

கல்முனை தரவைக்கோவில் வீதியை சேர்ந்த முகம்மது சலாகுதீன் முகம்மது இர்ஸாத், நாகவில்லு, பலாரிய, புத்தளம் பகுதியைச் சேர்ந்த முகம்மது முசார் முகம்மது முபாரீஸ் ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இவர்களிடம் இருந்து பாபுல் பக்கட்டுகள் உட்பட பல போதைப் பொருட்கள் மீட்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

பணிகளுக்கு தடையாக உள்ள சில நடைமுறைகள் மாற்றப்பட வேண்டும்: மிருக வைத்தியர் சங்கம்

ஒரு நாள் பணி பகிஷ் கரிப்புப் போராட்டத்தை அடுத்து தமது நாளாந்தப் பணிகளுக்கு தடையாக உள்ள சில நடைமுறைகள் மாற்றப் பட வேண்டுமென மத்திய மாகாண மிருக வைத்தியர் சங்கம் தெரிவிக்கின்றது.

இலங்கையின் தேசிய உற்பத்தியில் விவசாயம் முக்கியமான ஒன்று. விவசாயத்துறையில் விலங்கு உற்பத்தி மிக முக்கியத்துவம் பெறுகின்றது. விலங்கு உற்பத்தித் துறையில் தகைமையாளர்களான மிருக வைத்தியர்கள் உள்ளனர். இவர்களது நாளாந்தப் பணிகளுக்கு தடையாக உள்ள சில நடைமுறைகள் மாற்றப் பட வேண்டுமென மத்திய மாகாண மிருக வைத்தியர் சங்கம் மேலும் தெரிவித்தது.

பேராதனையில் இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர்கள் இதனைத் தெரிவிவித்தனர். அவர்கள் மேலும் தெரிவித்தாவது-

மத்திய மாகாண மிருக வைத்தியர் சங்கத் தலைவர் டாக்டர்.எஸ்.ஏ.சீலனாத்த, செயலாளர் டாக்கடர். பி.ஜி. விக்ரமசூரிய உற்பட சங்கத்தின் அங்கத்தவர்கள் பலர் இதில் கலந்து கொண்டனர். அதில் அவர்கள்; மேலும் கூறியதாவது-

இலங்கையில் மிருக உற்பத்திகளாக பால். இறைச்சி, முட்டை, போன்றவற்றைக் குறிப்பிட முடியும். இதில் இன்று பாலில் தன்னிறைவு காண நாடு முயற்சிக்கிறது. ஆனால் மிருக வைத்தியர்களே இந்த விலங்கு வேலாண்மை அல்லது விலங்கு உற்பத்தித் துறையில் தகைமை பெற்றவர்களாகும். எனவே விலங்கு உற்பத்தில் எத்தகைய நுணுக்கங்களைக் கையாள வேண்டும் என்பதை மிருக வைத்தியர்கள் நன்கு அறிவர்.

விலங்கு களுக்கு வைத்தியம் செய்வது மட்டும் தான் எமது கடமை என நினைத்தால் அது தவறானதாகும். எமது கடமைகளுள் கிராம மக்களிடம் சென்று அவர்களது உற்பத்திகளை அதிகரிப்பதற்கான வழிவகைகளையும் வழிகாட்டல் களையும், ஆலோசனைகளையும் எடுத்துக் கூறுவதும் ஒன்றாகும். இது எமது வழமையான பணியாகும். அந்த வகையில் நாம் நாட்டின் தேசிய உற்பத்திக்கு அடிமட்டத்தில் மிகப் பயனுள்ள பணிகணைச் செய்த போதும் எமது பணிகளை மதிக்காமலும் அதன் பெறுமதியை உணராமலும் இருப்பவர்கள் மிக அதிகமாகும்.

பிரதேச செயலாளர் மூலம் எமது பணிகள் கட்டுப் படுது;தப் படுகின்றன. இன்று வறுமை ஒழிப்புப் போராட்டத்தில் சமுர்தி முக்கிய மான ஒன்றாகும். இருப்பினும் சமுர்தித் திட்த்தின் மூலம் விலங்கு உற்பத்திக்கு முக்கியத்துவம் வழங்கப் படுகிறது. இதன்போது விலங்கு உற்பத்தித் துறை சாராத உயர் அதிகாரிகள் எமக்கு மேலாதிக்கம் செய்யமுற்படுவதனால் அமது பணியை சரிவர நிறைவேற்ற முடியாதுள்ளது. இதற்கு மாற்றீடாக மிருக வைத்தியம் தொடர்பாக சிறப்புத் தேர்ச்சி கொண்ட மிருக வைத்தியாகள் மூலம் அத்துறை நெறிப்படுத்தப் படுமாயின் பெறு பேறுகள் இன்னும் அதிகரிக்கும் என்றார்.

மத்திய மாகாணத்திலுள்ள அனைத்து மிருக வைத்தியர்களும் (21)நேற்று சுகயீன போராட்டம் ஒன்றில் ஈடுபட்டு பணிப் பகிஸ்கரிப்புச் செய்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

கையடக்கத் தொலைபேசி கொள்ளையில் ஈடுபட்டு வந்தவர் பொலிஸாரால் கைதுநீண்ட நாட்களாக கையடக்கத் தொலை பேசிகளையும், அதன் பெற்றரிகளையும் கொள்ளையிட்டு வந்த ஒருவரை களுவாஞ்சிக்குடி பொலிஸார் இன்று கைது செய்துள்ளதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பீ.ஆர். மானவடு தெரிவித்தார்.

களுவாஞ்சிக்குடியையும் அதனைச் சூழவுள்ள பகுதிகளிலுமுள்ள வர்த்தக நிலையங்கள் வீடுகளில் இவற்றை குறித்த சந்தேக நபர் கொள்ளையிட்டுள்ளதாக பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.

சந்தேக நபரை இன்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்யவுள்ளதாகவும் அவர் கூறினார். களுவாஞ்சிக்குடி பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த நபரிடமிருந்து 39 பெற்றரிகளையும், ஒரு கையடக்கத் தொலைபேசியையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

கல்கிசைப் பகுதியில் விசேட தேடுதல்: 16 பேர் கைது

கல்கிசைப் பகுதியில் பொலிஸார் இன்று மேற்கொண்ட விசேட தேடுதலின் போது போதைப் பொருளுடன் தொடர்புடைய 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த தேடுதல் நடவடிக்கை இன்று காலை எட்டு மணியளவில் இடம்பெற்றதாகவும் இதற்காக 1300 பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

யாழ்ப்பாணத்தில் பாதிக்கப்பட்டோருக்கு நேற்று நஷ்டஈடு வழங்கும் நிகழ்வு அமைச்சர் டியு அதிதி


மக்களால் மக்களுக்கு ஏற்படுத்தப்பட்ட அழிவுகளுக்கு இன்று நிவாரணம் வழங்கப்படுகின்றது. இந் நிவாரணம், யுத்தத்தால் மரணமடைந்த ஒரு பிரிவினருக்கும், காயமடைந்து அங்க குறைபாடுடையவர்களுக்கு ஒரு பிரிவாகவும், யுத்தத்தால் சொத்திழப்படைந்தவர்களுக்கு இன்னொரு பிரிவினருக்காகவும் 100 பேருக்கு நஷ்ட ஈட்டுத் தொகையாக இருபத்தைந்து மில்லியன் ரூபா வழங்கப்படுவதாக அமைச்சர் டியு குணசேகர தெரிவித்தார்.

அவர் நேற்றுக்காலை யாழ்ப்பாண செயலகத்தில் இடம்பெற்ற பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்டஈடு வழங்கும் நிகழ்வில் உரையாற்றுகையில் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

தடுப்பு முகாம்களில் உள்ளவர்களை விடுவித்து வருகின்றோம். இது வரை 4860பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். எதிர்வரும் திங்கட்கிழமை வவுனியா பூந்தோட்ட முகாமில் 300 பேர்கள் பெற்றோரிடம் ஒப்படைக்கப்படுவர்.

இவர்களுடன் தடுப்பு முகாமில் இருந்த பெண்கள் வயோதிபர்கள், சிறுவர்கள் அங்கவீனமானவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். எஞ்சியிருப்பவர்களில் 1000 பேர் வரை சட்ட நியதிக்கமைய விசாரணைக்குட்படுத்தப்படுவர் அவர்களின் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றங்களில் நிரபராதியாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கினால் அவர்களும் விடுக்கப்படுவர்.

தடுப்பு முகாமில் இருப்பவர்களில் 10 சதவீதத்தினர் பாடசாலை செல்லாதவர்கள், எழுபது சத விகிதத்தினர் 3, 5, 8 ம் ஆண்டு வரை கற்றவர்கள். இவர்கள் விரும்பும் தொழில் பயிற்சியையும் கல்வியையும் வழங்க வேண்டிய பொறுப்பு எமக்குண்டு. வட பகுதி மக்கள் தான் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட அநேகமானவராவர். 80 சத வீதமான மக்களின் வாழ்வாதாரங்களுக்கு அமைச்சு உதவிகளை வழங்க வேண்டியுள்ளது என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

வங்காள விரிகுடா, பிலிப்பைன்ஸ் கடற்பரப்பில் ‘கிரி’, ‘மெகி’ தாழமுக்கங்கள் இலங்கையின் காலநிலையில் மாற்றம்; பருவப்பெயர்ச்சி மழை தாமதம்

வங்காள விரிகுடாவிலும், பிலிப்பைன்ஸ் கடலிலும் உருவாகியுள்ள தாழமுக்கங்கள் இலங்கையின் இடைப்பருவபெயர்ச்சி மழை வீழ்ச்சியைத் தாமதப்படுத்தியுள்ளதாக வானிலை அவதான நிலையத்தின் வானிலையாளர் தமயந்தி இந்திஹெட்டி ஹேவகே நேற்றுத் தெரிவித்தார.

இலங்கையில் வருடா வருடம் மார்ச், ஏப்ரல், ஒக்டோபர், நவம்பர் மாதங்களில் இடைப்பருவப்பெயர்ச்சி மழை பெய்வது வழமையாகும். இருப்பினும் இம்முறை ஒக்டோபர் மாதத்தின் பிற்பகுதியாகியும் கூட இடைப் பருவ பெயர்ச்சி மழை வீழ்ச்சி காலநிலை இற்றைவரை ஆர ம்பமாகவில்லை எனவும் அவர் குறிப் பிட்டார். தற்போது வங்காள விரிகுடாவில் ‘கிரி’ என்ற சூறாவளியும், பிலிப்பைன்ஸ் கடலில் ‘மெகி’ என்ற சூறாவளியும் உருவாகியுள்ளது. இதன் விளைவாக இலங்கை ஊடாக வீசும் காற்று வேகமடைந்துள்ளது. இது இடைப்பருவ பெயர்ச்சி மழை வீழ்ச்சியைத் தாமதமடையச் செய்திருப்பதாகவும் அவர் கூறினார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

இலங்கையின் வட பகுதியிலிருந்து 800 கிலோ மீற்றர்களுக்கு அப்பால் உருவாகியுள்ள ‘கிரி’ சூறாவளி பங்களாதேசம் மற்றும் மியன்மார் நாடுகளை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது. இது இன்று அல்லது நாளை நிலப்பகுதியை அடைய முடியும். இச் சூறாவளி காரணமாக இலங்கைக்குப் பாதிப்பு ஏற்படாது.

மேலும் இவ்விரு சூறாவளிகள் காரணமாகவும் இலங்கையின் தெற்கு, தென் மேற்கு, வட கிழக்கு கடற்பரப்புக்கள் அடிக்கடி கொந்தளிப்பு அடைய முடியும். இச்சமயம் மணித்தியாலயத்திற்கு 50 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசும் இந்நிலைமையும் இரண்டொரு தினங்களுக்கு நீடிக்கும் என்றும் அவர் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

வட பகுதிக்கு விரைவில் இரணைமடு நீர்; வாழ்வாதார பிரச்சினைகளுக்கு உடன் தீர்வு

வட பகுதி மக்கள் இரணைமடு நீரை விரைவில் பயன்படுத்த முடியுமென நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

குடிநீர் விநியோகத் திட்டத்தை விரைந்து செயற்படுத்தி மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினையைத் தீர்க்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வழங்கியிருக்கும் பணிப்புரைக்கமைய விரைந்து நடவடிக்கை எடுக்கப்படுமென அமைச்சர் குறிப்பிட்டார்.

கிளிநொச்சி – யாழ். குடிநீர் விநியோகத்திற்கான ஆரம்ப கட்ட வேலைகள் பூர்த்தியாகிய நிலையில் யாழ். நகரில் நேற்று கிளிநொச்சி – யாழ். திட்டப் பணிப்பாளர் அலுவலகத்தை அமைச்சர் தினேஷ் குணவர்தனவும் பாரிய சிறு கைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் இணைந்து திறந்து வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்ற இரணைமடு குள நீரை யாழ். நகருக்கு கொண்டு வருவதற்கான அபிவிருத்தி கூட்டம் நடைபெற்றது.

இதில் உரையாற்றிய தேசிய நீர்வழங்கல் வடிகால் அமைப்பு அமைச்சர் தினேஷ் குணவர்தன,

வடபகுதி மக்களின் வாழ்வாதார பிரச்சினைகள் உடனுக்குடன் தீர்க்கப்பட

வேண்டும் என்பதில் ஜனாதிபதி உறுதியாக உள்ளார். இதன் அடிப்படையில் குடிதண்ணீர் மற்றும் அத்துடன் இணைந்த சுகாதார திட்டத்திற்கு முன்னுரிமை கொடுத்து இத்திட்டம் நகர்த்தப்படுகின்றது.

வட மாகாண நீர்வழங்கல் சபையின் திட்டப் பணிப்பாளர் தி. பாரதிதாசன் இதற்காக முன்வைத்த பாரிய முன்மொழிவினை உலக வங்கியும் அரசும் பூரணமாக ஏற்றுள்ளன.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இரணைமடு குளத்து நீரை வட பகுதிக்கு கொண்டு சென்று குடிநீர்ப் பிரச்சினையை தீர்ப்பதற்கும் அதற்கான முன்னோடி அபிவிருத்திக்குமாக பல தடவைகள் என்னுடன் தொடர்பு கொண்டுள்ளார்.

அத்துடன் ஜனாதிபதியின் கவனத்திற்கும் கொண்டு வந்துள்ளார் என்றார்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பேசுகையில்,

கடந்த ஐந்து ஆண்டு காலமாக நாம் எடுத்த முயற்சிக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. விரைவில் அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் உதவியுடன் இன்னும் இரண்டு ஆண்டுகளில் குடிதண்ணீர் பிரச்சினை தீர்ந்துவிடும் என்றார்.

இந்தக் கூட்டத்தில் வடக்கு மாகாண தேசிய நீர் வழங்கல் சபையின் திட்டப் பணிப்பாளர் எந்திரி, தி. பாரதிதாசன், யாழ். கிளிநொச்சி குடிநீர் விநியோக திட்டம் தொடர்பான விரிவான முன்மொழிவினை மக்கள் முன் எடுத்துரைத்தார்.
மேலும் இங்கே தொடர்க...

சட்டவிரோதமாக ஆட்களை கொண்டு வருவோருக்கு 10 வருட சிறை குடிவரவுச் சட்டத்தை இறுக்கியது கனடா


கனடாவுக்குள் நுழையும் சட்ட விரோதக் குடியேற்றவாசிகள் மற்றும் ஆட்கடத்தல் களைத் தடுக்கும் நோக்கில் கனேடிய அரசாங்கம், குடிவரவுச் சட்டத்தை மாற்றியமைத்துள்ளது.

சட்ட விரோதமாக கனடாவுக்குள் நுழைபவர்கள் மற்றும் ஆட்கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில் இந்தச் சட்ட மூலம் மாற்றப்பட்டிருப்பதாகக் கனேடிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் விக்டோவ்ஸ் தெரிவித்தார். இந்த புதிய சட்டத்துக்கமைய சட்ட விரோதமாகக் கனடாவுக்குள் நுழைபவர்கள் குறைந்தது ஒரு வருடத்திற்காவது சிறையில் அடைக்கப்படுவதுடன், அவர்களுக்கான மருத்துவ உதவிகள் உட்பட அடிப்படை வசதிகள் குறைக்கப்படும்.

மேலும் அவர்களது நிரந்தர வதிவுரிமைக் கோரிக்கை நிராகரிக்கப்படலாமென்றும், அதுமட்டுமின்றி அவர்களின் புகலிடக் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் அவர்கள் 5 வருடங்களுக்கு நிரந்தர வதிவிடவுரிமைக்கு விண்ணப்பிக்க முடியாதென்றும் புதிய சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் 50க்கும் மேற்பட்ட சட்டவிரோதமாக குடியேற்ற வாசிகளை கனடாவுக்குள் அழைத்துச் செல்பவர்களுக்கும் குறைந்தபட்சம் 10 வருட காலச் சிறைத்தண்டனையும் வழங்கப்படவுள்ளது.

இது தொடர்பாக மேலும் கருத்துத் தெரிவித்த கனேடிய அமைச்சர் விக்டோல்ஸ்; கடந்த வருடங்களில் சட்டவிரோதக் குடியேற்றவாசிகளின் கனடா வருகை அதிகரித்துள்ளது.

புகலிடக் கோரிக்கையாளர்கள், மற்றும் அகதிகளுக்கு கனடா வழங்கிவரும் சலுகையைத் தமக்கு சாதகமாகப் பயன்படுத்தி ஆட்கடத்தல் காரர்களின் செயற்பாடுகள்அதிகரித்துள்ளன.

இதனை நாம் ஏற்றுக்கொள்ளமாட்டோம் ஆட்கடத்தல் காரர்களுக்கும், சட்ட விரோதக் குடியேற்றவாசிகளுக்கும் எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

கடந்த ஓகஸ்ட் மாதம் 492 இலங்கையர்கள் எம். வி. சன். கூ. கப்பல் மூலம் சட்ட விரோதமாகக் கனடாவுக்குள் நுழைந்து, தமக்குப் புகலிடம் வழங்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

இதனைத் தொடர்ந்தே, கனடா சட்ட விரோதக் குடியேற்ற வாசிகளைத் தடுப்பதற்கான நடவடிக்கையைத் தீவிரப்படுத்தியது.

இதன் ஒரு அங்கமாக ஆட்கடத்தல்காரர் களுக்கும் சட்ட விரோதக் குடியேற்றவாசி களுக்கும் சிறைத்தண்டனை வழங்கும் வகையில் குடிவரவுச் சட்டம் நேற்று முன்தினம் திருத்தியமைக்கப்பட்டுள்ளது.

குடியேற்றவாசிகள், புகலிடக் கோரிக்கையாளர்கள் மற்றும் அகதிகளுக்கும் பாரியளவில் ஆதரவளிக்கும் நாடாகக் கனடா உள்ளது. ஆனால் இந்தச் சலுகையை யாரும் துஷ்பிரயோகம் செய்வதற்கு அனுமதிக்கப்படாது எனக் கனேடியக் குடிவரவு அமைச்சர் ஜேசன் கென்னி தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

நிவாரண கிராமங்களின் சிறந்த பராமரிப்பு துரித மீள் குடியேற்றப் பணிகள்

அரசின் செயற்பாடுகளுக்கு பொதுநலவாய பிரதிநிதிகள் பாராட்டு

மோதல்கள் காரணமாக லட்சக் கணக்காக இடம்பெயர்ந்த மக்களை ஒரே மாவட்டத்தில் முகாம்களில் சகல வசதிகளுடனும் தங்க வைத்ததுடன் மட்டுமல்லாமல் படிப்படியாக அவர்களை மீளக் குடியமர்த்துவதற்கும் இலங்கை அரசு மேற்கொண்ட பணியை பொது நலவாய பிரதிநிதிகள் பாராட்டியுள்ளனர்.

உலக நாடுகளில் எங்கும் இல்லாதவாறு மூன்றாம் உலக நாடான இலங்கை ஒரு சிரமமான பணியை மிகச் சிறப்பாக செய்து முடித்துக் கொண்டிருக்கிறது என பொதுநலவாய பிரதிநிதிகள் இலங்கை அரசாங்கத்துக்கு பாராட்டுக்களை தெரிவித்ததாக வவுனியா அரச அதிபர் திருமதி பீ. எம். எஸ். சார்ள்ஸ் தெரிவித்தார்.

அத்துடன் மீளக்குடியமரும் மக்களுக்கு பொதுநலவாய நாடுகளின் உதவி அவசியம் என்பது பற்றியும் அரச அதிபர்

திருமதி சார்ள்ஸ் கேட்டுக் கொண்டுள்ளார். இதற்கு சாதகமான பதிலை தமது அரசுகளுடன் கலந்து பேசிய பின்னர் அறிவிப்பதாகவும் பொதுநலவாய பிரதிநிதிகள் தெரிவித்ததாகவும் அரச அதிபர் தெரிவித்தார்.

இலங்கை வந்துள்ள பொதுநலவாய பிரதிநிதிகள் குழுவினர் செட்டிக்குளம் பகுதிக்கு விஜயம் செய்த போதே இலங்கை அரசின் பணி தொடர்பாக தங்களது பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.

செட்டிக்குளம், மனிக்பாம் முகாம்களுக்கு விஜயம் செய்த பொதுநலவாய பிரதிநிதிகளுக்கு அரச அதிகாரிகள் படைத்தரப்பினர் மக்களுக்கு வழங்கப்பட்ட வசதிகள், நிவாரணங்கள் குறித்தும் விளக்கமளித்தனர்.
மேலும் இங்கே தொடர்க...

ஜனாதிபதியின் 2வது பதவிக் காலம் 11 நிமிடங்களில் 11 இலட்சம் மரக் கன்றுகள் நடும் திட்டம்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது பதவிக் காலத்துக்கான பதவியேற்பு மற்றும் பிறந்த நாளை முன்னிட்டு ஒரே நேரத்தில் 11 நிமிடங்களில் 11 இலட்சம் மரக் கன்றுகளை நடும் திட்டமொன்று நவம்பர் 15ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்தத் திட்டத்துக்கான ஏற்பாடுகளை சுற்றாடல் வளத்துறை அமைச்சு மேற்கொண்டுள்ளது.

நாட்டின் அனைத்துப் பாகங்களிலுமுள்ள அரச நிறுவனங்கள், மாகாண சபைகள், மற்றும் பாடசாலைகளில் இத்திட்டம் முன்னெடுக்கப்படும் என சுற்றாடல் வளத்துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா, ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் யாப்பா, 30 ஆண்டு காலமாக இடம்பெற்று வந்த பயங்கரவாத செயற்பாடுகள் காரணமாக சூழல் உட்பட மரம். செடிகள் என்பவற்றிற்கு பாரிய இழப்புக்கள் ஏற்பட்டது.

பசுமையான சூழலொன்றினை உருவாக்க வேண்டியதன் முக்கியத்துவம் பற்றி மக்களுக்கு விழிப்பூட்டுவதற்காகவே நாடளாவிய மர நடுகை வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டார்.

மேலும் நாட்டில் உருவாகியுள்ள அமைதியான சூழ்நிலை காரணமாக நாடளாவிய ரீதியில் இந்த வேலைத் திட்டத்தை வெற்றிகரமாக செயற்படுத்த முடியுமென்று கூறிய அமைச்சர், இன்று உலகிலே சூழலை பாதுகாத்துவரும் நாடுகளில் இலங்கை முன்னிலை வகிப்பதாகவும் குறிப்பிட்டார்.

ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், இவ்வாறு ஒரே தடவையில் அதிகளவு கன்றுகளை நட்டிய நாடு பற்றிய தகவல்கள் ஏதும் இதுவரையில் இல்லை என்பதால் சிலவேளை இதுவொரு கின்னஸ் சாதனையாகக் கூட இருக்கலாம் என்றும் தெரிவித்தார்.

இந்த மாநாட்டில் கருத்துத் தெரிவித்த மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, இந்தத் திட்டத்திற்கு மத்திய மாகாணத்தைச் சேர்ந்த சகல அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் மற்றும் பாடசாலைகள் ஆதரவு வழங்கும் என்றும் கூறினார். மரங்களை இயன்றளவு நட்டி, மஹிந்த சிந்தனையில் குறிப்பிடப்பட்டுள்ள ‘பசுமையான நாடு’ என்ற குறிக்கோளை அடைவதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டுமென்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் வடமத்திய மாகாண முதலமைச்சர் பேர்ட்டி பிரேமலால் திஸாநாயக்க, சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹீபால ஹேரத் மற்றும் அமைச்சின் செயலாளர் எஸ். சமரதுங்க ஆகியோரும் கலந்துகொண்டனர்.
மேலும் இங்கே தொடர்க...

உடன் உணவு, பானங்கள் பாடசாலைகளில் தடை

அரசாங்க மற்றும் தனியார் பாடசாலைகள், பிரத்தியேக வகுப்புக்களை நடாத்தும் நிறுவனங்கள் என்பவற்றில் இருக்கும் சிற்றுண்டிச் சாலைகளில் உடன் உணவு இனிப்பு பானங்கள் ஆகியவற்றின் விற்பனை உடனடியாக அமுலுக்குவரும் வகையில் தடைசெய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசேட சுற்று நிரூபம் உடனடியாக சகல பாடசாலைகளுக்கும் அனுப்பி வைக்கப்படும் என்று கல்வி அமைச்சின் செயலாளர் சுனில் எஸ். சிறிசேன நேற்று தெரிவித்தார்.

பாடசாலை சிற்றுண்டிச்சாலைகள் சட்டத்தின் கீழ் ஏற்கனவே வெளி யிடப்பட்டுள்ள சுற்றறிக்கையை முழு மையாக நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கல்வி அமைச்சர் பந்துல குண வர்தனவுக்கும், பதில் சுகாதார அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்குமிடையில் இடம்பெற்ற சந்திப்பின் போது ஏற்பட்டுள்ள இணக்கப்பாட்டுக்கு ஏற்ப பாடசாலை சிற்றுண்டிச்சாலைகளில் உடன் உணவு (ஊஹஙூசி ஊச்ச்க்ஷ) இனிப்பு பானங்கள் என்பவற்றின் விற்பனை உடனடியாகத் தடை செய்யப்படவிருக்கின்றது.

ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் உணவுப் பொருட்களும், பானங்களும் மாத்திரமே பாடசாலைச் சிற்றுண் டிச்சாலையில் விற்பனை செய்வதற்கும் அனுமதியளிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இத்திட்டத்தின் கீழ் பாடசாலைச் சிற்றுண்டிச்சாலைகளில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்கள், பானங்கள் தொடர்பாகவும், அவற்றின் தரம் குறித்தும் சுகாதார அமைச்சின் பொது சுகாதார அதிகாரிகள் சோதனைகளை அவ்வப்போது மேற்கொள்ள உள்ளனர்.

பாடசாலை மாணவர்கள் மத்தியில் எலும்பு பலவீனம், நீரிழிவு, கண் நோய்கள், உடல் பருமன் உட்பட பல தொற்றா நோய்கள் பெரிதும் அதி கரித்துள்ளன. இது சுகாதாரத் துறையின ரின் ஆய்வுகள் மூலம் உறுதிப்படுத்தப் பட்டுள்ளது.

இந்நாட்டின் எதிர்காலச் சந்ததியினரின் ஆரோக்கியத்தைப் பேணிப் பாதுகாக்கும் நோக்கிலேயே சுகாதார அமைச்சு இந்த நடவடிக்கைக்குப் பங்களிப்பு செய் யவிருப்பதாக அமைச்சின் அதிகாரியொ ருவர் கூறினார்.

வேளா வேளைக்கு காலை உணவை உட்கொள்ளாமல் உடன் உணவு (ஊஹஙூசி ஊச்ச்க்ஷ) வகைகளையும், இனிப்பு பானங்களையும் உட்கொள்வதற்கு பெரும்பாலான மாணவர்கள் பழக் கப்பட்டுள்ளார்கள்.

இவர்கள் மத்தியில் போஷாக்கின்மையும், நீரிழிவும், உடல் பருமனும் பெரிதும் அவதானிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

போஷாக்கு மிக்க உள்ளூர் உண வுப் பொருட்களை உண்பதற்கு எமது மாணவ சமூகத்தைப் பழக்கிக்கொள் ளும் போது தொற்றா நோய்கள் பல வற்றிலிருந்து அவர்களைப் பாதுகாத் துக்கொள்ள முடியுமென பதில் சுகா தார அமைச்சர் மஹிந்த அமரவீர சுட் டிக்காட்டியுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...