8 பிப்ரவரி, 2011

கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவர்களுக்கு விமானப்படை தொண்டர் பயிற்சி




கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவர்கள் இரண்டு வார காலத்திற்கான விமானப்படை தொண்டர் பயிற்சியைப் பெறுவதற்காக தியத்தலாவை விமானப்படை முகாமிற்குச் சென்றுள்ளனர்.

முதல் முறையாக நாடளாவிய ரீதியில் விமானப்படையணி பாடசாலை மாணவாகளுக்கான விமானப் பயிற்சிகளை வழங்கவுள்ளது. இதில் வட மாகாணத்தில் இருந்து கொக்குவில் இந்துக் கல்லூரி விமானப்படை தொண்டர் பயிற்சியைப் பெறுவதற்கு தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

கொழும்பில் மீண்டும் பொலிஸ் பதிவு


கொழும்பு கிரான்ட்பாஸ் பகுதியில் மீண்டும் பொலிஸ் பதிவுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மாளிகாவத்தை, கெத்தாராம பகுதிகளுக்கு நேற்றும் இன்றும் வருகை தந்த இராணுவத்தினர் பதிவு விண்ணப்பங்களைக் கொடுத்து குடும்ப விபரங்களை பொலிஸ் நிலையத்தில் சமர்ப்பிக்குமாறு பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

இலங்கையில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளுக்கான பாதுகாப்பின் நிமித்தமே இவ்வாறு பதிவுகள் மேற்கொள்ளப்படுவதாக இராணுவத்தினர் எமது செய்திப் பிரிவிடம் தெரிவித்தனர்.
மேலும் இங்கே தொடர்க...

வெள்ளத்தால் மன்னாரில் 4ஆயிரத்து 427 பேர் இடப்பெயர்வு

தொடரும் மழையால் மன்னார் மாவட்டத்தில் 1ஆயிரத்து 376 குடும்பங்கள் இடம் பெயர்ந்துள்ளதாக மன்னார் பிரதேச செயலாளர் திருமதி ஸ்ரான்லி டிமேல் தெரிவித்தார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் பாடசாலைகளிலும், ஆலையங்களிலும் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மன்னார் உயிலங் குளம் பாடசாலையில் 148 குடும்பங்களைச் சேர்ந்த 480 பேரும் ,மன்.புனித சவேரியார் பெண்கள் தேசிய பாடசாலையில் 58 குடும்பங்களைச் சேர்ந்த 165 பேரும், மன்.சித்திவிநாயகர் இந்துக்கல்லுரியில் 84 குடும்பங்களைச் சேர்ந்த 233 பேரும், மன். அல் அஸ்கர் ம.வி பாடசாலையில் 172 குடும்பங்களைச் சேர்ந்த 532 பேரும், மன்.தாராபுரம் ம.வி பாமசாலையில் 117 குடும்பங்களைச்சேர்ந்த 384 பேரும், மன்.புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் 277 குடும்பங்களைச் சேர்ந்த 933 பேரும், மன்னார் திருக்கேதிஸ்வர ஆலையத்தில் 520 குடும்பங்களைச் சேர்ந்த 1ஆயிரத்து 700 தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

மழை காரணமாக மன்னார் மதவாச்சி பிரதான வீதி நீரில் மூழ்கியுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

மீண்டும் அடைமழை: இருள் சூழ்ந்த வானம் பேரனர்த்தம் ஏற்படுத்துமென மக்கள் பீதி





கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களில் தொடர்ச்சியாகப் பெய்துவந்த கனத்த மழை நேற்று முன்தினம் முதல் ஓய்ந்திருந்த போதிலும் நேற்று பகல் முழுவதும் வானம் இருண்டுபோய் எங்கும் இருள்மயமாகக் காணப்பட்டதால் மக்கள் மத்தியில் பெரும் பீதி நிலை ஏற்பட்டிருந்தது.

கிழக்கு மாகாணத்திலுள்ள பெரும் பாலான வீதிகளில் பயணித்த வாக னங்கள் யாவும் மின் விளக்குகளை இயக்கியபடியே பயணித்ததாக தெரி விக்கப்படுகின்றது.

மீண்டுமொரு தடவை கடும் வெள்ள அனர்த்தம் ஏற்படுவதற்கான அடை மழை பெய்வதற்குரிய காரிரு ளாகவே மக்கள் நேற்றைய வானி லையைப் பார்த்தனர். அடை மழை யும், வெள்ளமும் இவ்வாறு தொடரு மானால் உயிராபத்து ஏற்படுவது ஒருபுறம் இருக்க அன்றாட ஜீவ னோபாயமும் கேள்விக்குள்ளாகக் கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது.

நேற்றும் நாடெங்கிலும் பரவ லாக மழை பெய்தது குறிப்பிடத்தக் கது. ‘லானினாநிலமை காரண மாகவே அதிகரித்த முகில் கூட்டங் கள் உருவாவதும், கனத்த மழை பெய்வதும் இடம்பெறுவதாக வானிலை அவதான நிலையத்தின் வானிலையாளர் தமயந்தி இந்தி ஹெட்டி ஹேவகே தெரிவித்தார்.

இலங்கைக்கு அருகில் தென்கிழக்கு கடல் பகுதியில் மீண்டும் தாழமுக்கம் ஏற்பட்டிருப்பதும் தற்போதைய மப்பும், மந்தாரத்துடன் கூடிய கால நிலைக்குக் காரணமாகி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தற்போதைய மப்பும் மந்தாரத்துடன் கூடிய மழைக் காலநிலை அடுத்து வரும் இரண்டொரு தினங்களுக்கு நீடிக்கும் என்று கூறிய அவர் கிழக்கு, மத்தி, ஊவா, வட மத்திய, வடக்கு மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இடையிடையே கனத்த மழை பெய்யும் என்றார்.

கிழக்கு, தெற்கு, மன்னார் குடா கடற் பரப்புக்கள் கொந்தளிப்பாக காணப்படு வதால் மீனவர்கள் கடற்றொழிலில் விழிப்புடன் ஈடுபடுவது அவசியம் என்றும் அவர் கூறினார்.

குளங்கள் வழிகின்றன

இதே நேரம் நாட்டிலுள்ள 59 பிரதான குளங்களில் 39 குளங்கள் நிரம்பி வழி வதாகவும், 20 குளங்களின் வான் கதவுகள் தொடர்ந்தும் திறந்து வைக்கப்பட்டி ருப்பதாகவும் நீர்ப்பாசனத திணைக்களத்தின் நீர் வள முகாமைத்துவப் பிரதிப் பணிப் பாளர் ஜனாகி மீகஸ்தென்ன கூறினார்.

பொலன்னறுவை மாவட்டத்தில் நேற்று அதிகாலை முதல் மீண்டும் கனத்த மழை பொழியத் தொடங்கியுள்ள தால் கெளடுல்ல நீர்த்தேக்கத்தின் 11 வான் கதவுகள் நான்கு அடிகள் உயரப் படியும், மின்னேரியா குளத்தின் 8 வான் கதவுகள் ஐந்து அடிகள் உயரப்படியும் திறந்துவிடப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

அனுராதபுரம், பொலன்னறுவை, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோண மலை, பதுளை, ஹம்பாந்தோட்டை, மொனராகலை, புத்தளம், குருநாகல், வவுனியா, மன்னார், கண்டி, மாத்தளை ஆகிய மாவட்டங்களிலுள்ள சகல குளங்களும் நிரம்பி வழிவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பாதிப்புக்கள்

கடந்த சில தினங்களாகப் பெய்து வந்த கனத்த மழை காரணமாக நெற் செய்கை, மரக்கறி மற்றும் பழச் செய்கை, கால்நடைகள் உட்பட வீதிகள் அடங்கலான உட்கட்டமைப்பு வசதிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

அதேநேரம் இவ்வெள்ளம், மண்சரிவு காரணமாக முழுமையாக அழிவுற்றுள்ள வீடுகளின் எண்ணிக்கை 2273 வரை உயர்ந்திருப்பதாகவும் 13 ஆயிரத்து 148 வரையான வீடுகள் பகுதியளவில் சேதமடைந்திருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பேச்சாளர் பிரதீப் கொடுப்பிலி கூறினார்.

இதேவேளை வெள்ளம், மண்சரிவு காரணமாக 85 ஆயிரத்து 387 குடும்பங் களைச் சேர்ந்த 3 இலட்சத்து 11 ஆயிரத்து 287 பேர் 744 முகாம்களில் நேற்றும் தங்கி இருந்ததாகவும் அவர் குறிப் பிட்டார்.

இவ்வெள்ளம், மண்சரிவு காரண மாக 3 இலட்சத்து 26 ஆயிரத்து 230 குடும்பத்தைச் சேர்ந்த 12 லட்சத்து 23 ஆயிரத்து 52 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளம் காரணமாக அம்பாறை, மாவட்டத்தில் இருப்பிடங்களை விட்டு வெளியேறி முகாம்களில் தங்கியிருந்த ஆயிரத்திற்கும் மேற் பட்ட குடும்பங்கள் நேற்று முன்தினம் வீடுகளுக்குத் திரும்பியுள்ளன என்றும் அவர் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

பாதிக்கப்பட்ட 10,000 வீடுகளை மீளமைத்து கொடுக்க அரசு தீர்மானம்


வெள்ளத்தினாலும், மண்சரிவுகளினாலும் பாதிக்கப்பட்ட 10 மாவட்டங்களிலுல் முற்றாக 1161 வீடுகளும் அரைவாசியாக 8012 வீடுகளும் சேதமடைந்துள்ளன. இவ் வீடுகளை மீள நிர்மாணித்துக் கொடுப்பதற்கு வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளதென அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

மேற்கண்டவாறு வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சில் நேற்று (7) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அமைச்சர் விமல்வீரவன்ச இதனைத் தெரிவித்தார்.

மேற்படி விடயமாக அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, வவுனியா, அநுராதபுரம், பொலநறுவை, நுவரெலியா, மாத்தளை, மன்னார் ஆகிய மாவட்டங்களில் உள்ள சகல வீடமைப்பு மாவட்ட முகாமையாளர்களும் இப்பகுதிகளிலும் சேவையாற்றும் 120 வீடமைப்பு அலுவலர்களும் உடனடியாகக் கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

இன்று (08 திகதி) பி.ப. 02.00 மணிக்கு அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் விமல் வீரவன்ச தலைமையில் கொழும்பு சவ்சிரிபாயவில் நடைபெறும் மாநாட்டில் இவர்கள் பங்குபற்றுவார்கள்.

இக்கூட்டத்தில் சேதமடைந்த வீடுகளை உடன் மீள் நிர்மாணிப்பதற்காக உடனடி தீர்மானங்களை எடுத்து அவை நடைமுறைப்படுத்தப்படுமென அமைச்சர் கூறினார்.

இக்கூட்டத்தில் மேற்படி மாவட்டங்களில் வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் கணக்கெடுக்கப்பட்ட சேதமடைந்த வீடுகள் பற்றி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு ஜனாதிபதியின் ஆலோசனையின் பேரில் உரிய நிதி ஒதுக்கீடு செய்து கொடுக்கப்படும். தற்பொழுது வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் நிதியிலிருந்து 50 ஆயிரம் ரூபா பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு ஒதுக்கப்படுகின்றது. மேலதிக நிதியை திறைசேரி மூலம் பெற்று பாதிக்கப்பட்ட வீடுகளை உடனடியாக நிர்மாணிக்க வீடமைப்பு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்படும்.

இத்திட்டத்திற்காக இந்த நாட்டில் நிர்மாணப்பணிகளில் உள்ள கம்பனிகள் மற்றும் நன்நோக்கு நிறுவனங்கள் உரிய கட்டடப் பொருட்களையோ நிதி உதவிகளையோ அன்பளிப்பாக வழங்க முடியும் எனவும் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

ஜனாதிபதியின் பணிப்பில் ரூ.50கோடி அவசர ஒதுக்கீடு

வெள்ளம், மண்சரிவு காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனடி நிவாரண நடவடிக்கைகளை மேற் கொள்ளவென நேற்று ஐநூறு (500) மில்லியன் ரூபா (50 கோடி ரூபா) ஒதுக்கீடு செய்யப்பட்டது.

கடந்த வாரம் பெய்த கடும் மழையினால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக அம்பாறை மாவட்டத்திலுள்ள மருதமுனை மேட்டுவட்டையில் நிர்மாணிக்கப் பட்டுள்ள 179 வீடுகளைக் கொண்ட வீட்டுத் திட்டம் வெள்ளத்தில் மூழ்கிக் காணப்படுகிறது. படம்: பி.எம். எம். ஏ. காதர் மருதமுனை தினகரன் நிருபர்

அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீரவின் வேண்டுகோளுக்கு இணங்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நிதியமைச்சர் என்றவகையில் இந்நிதியொதுக்கீட்டை மேற்கொண்டுள்ளார்.

இதேவேளை வெள்ளம், மண்சரிவு காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள மக்களு க்கு உடனடி நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளவென நேற்று காலையில் மாத்திரம் முப்பது மில்லியன் ரூபா பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களின் மாவட்டச் செயலாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அமைச்சர் அமரவீர குறிப்பிட்டார்.

வெள்ளம், மண்சரிவு காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு சமைத்த உணவு மற்றும் உலர் உணவு நிவாரணம் வழங்குவதற்காகவே இந்நிதியொதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

கடந்த வியாழன் முதல் ஏற்பட்ட வெள்ளம், மண்சரிவு காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு சமைத்த உணவு மற்றும் உலர் உணவு நிவாரணம் வழங்கவென 125.5 மில்லியன் ரூபா ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டிருப் பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அமைச்சர் அமரவீர மேலும் கூறுகையில், வெள்ளம், மண்சரிவு காரணமாக நாட்டில் 18 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டு ள்ளன.

இவற்றில் கிழக்கு, வடமத்திய மாகாணங்கள் மிக மோசமாகப் பாதிப்படைந்துள்ளன. வெள்ளம், மண்சரிவினால் சுமார் 13 இலட்சம் மக்கள் நாட்டில் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இருப் பிடங்களை விட்டு வெளியேறி முகாம்களில் தங்கியுள்ள னர்.

வெள்ளம், மண்சரிவு காரணமாகப் பாதிக்கப்ப ட்டுள்ள எவரையும் ஒரு வேளையேனும் உணவின்றி வாட இடமளிக்கக் கூடாது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

அதற்கேற்ப நிவாரண நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டிருக்கின்றன.

திருமலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற உயர் மட்டக் கூட்டத்தில், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட போதிலும், முகாம்களுக்குச் சென்று தங்காதிருப்பவர் களுக்கும் சமைத்த உணவு மற்றும் உலர் உணவு நிவாரணம் வழங்குவதற்குத் தேவையான ஆலோசனைகள் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டிருக்கின்றன.

இது தொடர்பான சுற்றறிக்கையில் நெகிண்வுத் தன்மையைக் கடை பிடிக்குமாறும் அவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ள தாக அமைச்சர் கூறினார்.

இதேவேளை பாதிக்கப்பட்ட பிரதேசங்களைத் துரிதமாக கட்டியெழுப்ப வென ஜனாதிபதி செயலணி அமைக்கப் படவுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீல. சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம் நேற்று அலரி மாளிகையில் இடம்பெற்றது.

வெள்ளம், மண்சரிவினால் பாதிக்கப்பட்ட பகுதிகளைத் துரிதமாக கட்டியெழுப்பும் வகையில் மேற்படி செயலணி அமைக்கப்படவுள்ளதாக சு. க. கட்சியின் செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

நுவரெலியா மாவட்டம்: 24 மணி நேரத்தினுள் மண்சரிவு ஏற்படும் அபாயம்


நுவரெலியா மாவட்டத்தில் நான்கு முக்கிய பிரதான வீதிகளில் எந்நேரமும் மண்சரிவு ஏற்படலாமென நேற்றுப் பகல் (07) அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

நேற்றுப் பகல் பொழுதிலிருந்து 24 மணித்தியாலத்திற்குள் மண் சரிவு ஏற்படுமென தேசிய கட்டட ஆராய்ச்சி அமைப்பு எச்சரிக்கை விடுத்ததாக நுவரெலியா மாவட்டத்தின் இடர் முகாமைத்துவ பணிப்பாளர் எரந்த ஹேமவர்தன தெரிவித்தார். நுவரெலியா மாவட்டத்தின் ஐந்து பிரதேச செயலாளர் பிரிவுகளில் மண்சரிவு ஏற்படுமென்றும் விசேடமாக நுவரெலியா - பதுளை வீதி, கம்பளை - நுவரெலியா வீதி, நுவரெலியா - ஹட்டன் வீதி, நுவரெலியா - உடபுசல்லாவ வீதிகளில் மண்சரிவு ஏற்படுமென ஹேமவர்தன தெரிவித்தார்.

இது தொடர்பில் எந்நேரமும் விழிப்புடன் இருக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டு வருவதாக அவர் கூறினார். மண் சரிவின் போது அனர்த்தங்களைத் தவிர்த்துக்கொள்வதற்காக பொதுமக்கள் மிக அவதானமாக இருக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தில் நேற்றைய தினமும் தொடர்ச்சியாகக் கடும் மழை பெய்தது. அதிகமான குளிரும் நிலகிறது. இதனால், வர்த்தக நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

முக்கிய நகரங்கள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன. விவசாய நடவடிக்கை கள் முற்றாகக் கைவிடப்பட்டுள்ளன.

இது இவ்விதமிருக்க, பதுளை, கண்டி, மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் மண் சரிவு அபாயம் உள்ளதாக எச்சரிக் கப்பட்டுள்ளது. மாத்தளையில் சுமார் 25 ஏக்கர் நிலப் பரப்பு தாழ்ந்து புதையுண்டு வருவதால் அந்தப் பகுதியில் வாழும் மக்கள் மத்தியில் பரபரப்பான சூழல் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

வேலைக்காரியாக பணிபுரிந்த பெண் துணிகரத் திருட்டு ரூ. 37 இலட்சம்





வீடுகளில் வேலைக் காரியாக பணிபுரிந்து வந்த பெண்ணொருவர் அந்த வீடுகளில் இருந்து 37 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகளை திருடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பாக மேற்கொண்ட தேடுதலையடுத்து சந்தேகநபர் மகரகம பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் கூறியது.

கொஹுவல பகுதி வீடொன்றில் பணிபுரிந்த வீட்டு வேலைக்காரி வீட்டில் இருந்த 30 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகளை திருடிக்கொண்டு தலைமறை வாகியுள்ளார்.

இந்தச் சம்பவம் கடந்த வாரம் நடை பெற்றது. இது குறித்து கொஹுவல பொலிஸார் விசாரணைகளை முன்னெ டுத்தனர். மகரகம பகுதி வீடொன்றில் மறைந்திருந்த நிலையில் சந்தேக நபர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். இவரிடமிருந்து கிடைத்த தகவலின்படி, அடகு வைக்கப்பட்டிருந்த நகைகள் மீட்கப்பட்டதாக பொலிஸார் கூறினர்.

இதுதவிர வெலிக்கடை பகுதி வீடொ ன்றில் 6 1/2 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகள் திருடப்பட்டுள்ளதாகவும் பொலி ஸார் கூறினர். இவ்வாறு திருடப்பட்ட நகைகளும் மீட்கப்பட்டுள்ளன.

வீடுகளில் வேலைக்காரியாக பணிபுரிந்து வந்துள்ள சந்தேக நபர் யாருமில்லாத போது அங்குள்ள நகைகளை திருடிக் கொண்டு தலைமறைவாகி வந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. சந்தேக நபர் நேற்று நுகேகொட நீதிமன்றத்தில் ஆஜர் செய் யப்பட்ட பின் விளக்கமறியலில் வைக்கப் பட்டார்.
மேலும் இங்கே தொடர்க...

உள்ளூராட்சி தேர்தல்; வேட்பாளர் விருப்பு இலக்க சுவரொட்டிகளை அகற்ற உத்தரவு


உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் அபேட்சகர்களின் விருப்பு இலக்க சுவரொட்டிகளை அகற்றுமாறு தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

தேர்தலில் போட்டியிடுவோர் தமது வீடுகளிலும் மற்றும் தமது கட்சியின் அல்லது சுயேட்சைக் குழுவின் தலைமை அலுவலகத்திலும் தவிர்ந்த வேறு எந்த இடத்திலும் சுவரொட்டிகள், கட்டவுட் அல்லது விருப்பு வாக்கு இலக்கத்தை காட்சிப்படுத்தல் தடை செய்யப்பட்டுள்ள மையால் இவ்வாறு தேர்தல்கள் ஆணையாளர் பொலிஸாருக்கு நேற்று (07) உத்தரவிட்டு ள்ளார்.

அபேட்சகர்கள் தமது வீட்டில் மாத்திரம் தமது விருப்பு வாக்கு இலக்கம் அடங்கிய சுவரொட்டிகள் கட்டவுட், பெனர், என்பவற்றினை காட்சிப்படுத்த முடியுமெனவும், அதற்கு வெளியே எந்த இடத்திலும் அவ்வாறு விருப்பு வாக்கு இலக்கங்களை காட்சிப்படுத்த முடியாதெனவும் உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான தேர்தல் கட்டளைச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள் ளதாகவும், தேர்தல்கள் செயலகம் குறிப்பிடுகின்றது.

ஒரு கட்சிக்கு அல்லது சுயாதீன குழுவுக்கு ஒரு உள்ளூராட்சி நிறுவனத்திற்காக தேர்தல் அலுவலகம் ஒன்றினை மாத்திரம் வைத்திருக்க முடியுமெனவும் தேர்தல்கள் செயலகம் மேலும் குறிப்பிடுகின்றது.
மேலும் இங்கே தொடர்க...

தபால் சேவைகள் பாதிப்பு: தேங்கிய நிலையில் பொதிகள்






நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தம் காரணமாக தபால் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. பிரதான தபால் நிலையங்களில் பெருமளவு கடிதங்கள் விநியோகிக்கப்படாமல் குவிந்து கிடப்பதாக தபால் திணைக்களம் கூறியது.

தபால் நிலையங்கள் மட்டுமன்றி வீதிகள் வீடுகள் என்பனவும் நீரில் மூழ்கியுள்ளதால் கடிதங்களை விநியோகிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் கூறியது.

வெள்ளம் வடிவதோடு அவற்றை துரிதமாக விநியோகிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.

அடை மழை காரண மாக வடக்கு, கிழக்கு வடமத்திய மாகாணங்கள் கூடுதலாக பாதிக்கப் பட்டுள்ளன. இப்பகுதிகளில் விநியோகம் கூடுதலாக பாதிக்கப்பட்டுள்ளதோடு ஏனைய பிரதேசங்களிலும் தபால் விநியோகிப்பதில் ஓரளவு தடங்கல் ஏற்பட்டுள்ளதாக தபால் திணைக்கள உயரதிகாரி ஒருவர் கூறினார்
மேலும் இங்கே தொடர்க...