21 பிப்ரவரி, 2011

அவுஸ்திரேலியாவை நோக்கி படகில் சென்ற 17 இலங்கையர்கள் கைதுஅவுஸ்திரேலியாவை நோக்கி சட்டவிரோதமான முறையில் படகொன்றில் சென்ற 17 இலங்கையர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அம்பாந்தோட்டைக்கு தெற்கே 20 கடல் மைல் தொலைவில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார்.

கடுவெல மற்றும் மிரிஸ்ஸ பகுதிகளைச் சேர்ந்த இம்மீனவர்கள் காலிக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர். இவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக கடற்படை பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார். மேற்படி படகிலிருந்து உலர் உணவுப் பொருட்கள், தண்ணீர் போத்தல்கள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும் இங்கே தொடர்க...