11 ஆகஸ்ட், 2010

மன்னாரில் உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு சடலமாக கிடக்கும் இவர்கள் யார் ?

மன்னாரில் உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு சடலமாக கிடக்கும் இவர் யார் ? தினம் தோறும் இனம் தெரியாத சடலமாக மீட்கப்படும் இவர்கள் யார் ?
மன்னார் ஓலைத்தொடுவாய்க் கடற்கரைப் பகுதியில் மிகவும் உருக்குலைந்த நிலையில் கரை ஒதுங்கிய ஆண் ஒருவரின் சடலத்தை மன்னார் பொலிஸார் மீட்டு இன்று புதன்கிழமை மாலை மன்னார் பொது வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

அப்பகுதியில் தொழிலுக்குச் சென்ற மீனவர்கள் மேற்படி சடலத்தைக் கண்டு கடற்படையினருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து கடற்படையினர் பொலிஸாருக்குத் தகவல் வழங்கினர். 30 வயது மதிக்கத்தக்க இவரது கையில் கடிகாரம் காணப்பட்டது. கறுப்பு நிற நீளக்காற்சட்டையும், வெள்ளை, கறுப்பு நிற சட்டையும் அணிந்துள்ள நிலையில் இவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இங்கே தொடர்க...

தாண்டும் பிரச்சினைகளைச் சமரசமாக தீர்ப்பது ஆகியவை குறித்து இருதரப்பு மீனவர்களும் பேச்சுவார்த்தை நடத்துவர்.

இந்திய - இலங்கை மீனவர்கள் இடையில் சமரச பேச்சுவார்த்தை
தமிழக மீனவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்துவதற்காக இலங்கை அரசு 25 பிரதிநிதிகள் கொண்ட குழு ஒன்றை அமைத்துள்ளதாகவும் இதில் இலங்கை மீனவர் சங்க பிரதிநிதிகள் தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் இடம் பெற்றுள்ளனர் என்றும் இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

அச்செய்தியில் மேலும்,

"இலங்கை மீனவ பிரதிநிதிகள் கொண்ட இந்தக் குழுவினர், எதிர்வரும் 16ஆம் திகதி ராமேஸ்வரம் வந்து தமிழக மீனவர் சங்க பிரதிநிதிகளுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

அதே வேளை, எதிர்வரும் 17, 18ஆம் திகதிகளில் ஜெகதாபட்டினம், நாகப்பட்டினம், கடலூர் மீனவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தப்படவுள்ளது.

பேச்சுவார்த்தையின் போது இந்திய, இலங்கை மீனவர்கள் மோதல் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது, கடலில் எல்லை

19, 20 ஆம் திகதிகளில் இலங்கை மீனவ பிரதிநிதிகள் சென்னையில் மீன் வளத்துறை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவர். இதன் மூலம் தமிழக, இலங்கை மீனவர்களின் நீண்ட கால பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது" எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணை : அமெரிக்கா கோரிக்கை

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றச் செயல்கள் குறித்து சுயாதீனமான முறையில் சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்து, அமெரிக்க ராஜாங்க செயலர் ஹிலாரி கிளிண்டனிடம் அமெ. காங்கிரஸ் சபை உறுப்பினர்கள் கடிதம் ஒன்றை கையளித்துள்ளனர்.

இந்தக் கடிதத்தில் அமெரிக்க காங்கிரஸைச் சேர்ந்த 57 உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளனர்.

இலங்கை அரசாங்கம் நியமிக்கும் ஆணைக்குழுக்கள் மீது நம்பிக்கை கொள்ள முடியாது எனவும் காங்கிரஸ் சபை உறுப்பினர்கள் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

அரசாங்கம் நியமிக்கும் ஆணைக்குழுக்களின் விசாரணை நடவடிக்கைகள் காலதாமதமாக இடம்பெறுகின்றன எனவும், இலங்கை அரசின் சில தலையீடுகள் காரணமாக அதிகாரிகள் சிலர் ஆணைக்குழுவிலிருந்து விலகியுள்ளதாகவும் சர்வதேச மன்னிப்புச் சபையை மேற்கோள்காட்டி அவர்கள் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

நல்லிணக்க ஆணைக்குழுவின் முதலாவது அமர்வு இன்று

இலங்கையில் நடைபெற்ற யுத்தத்தின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஆராய்வதற்கென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ள நல்லிணக்க ஆணைக்குழுவின் முதலாவது அமர்வு இன்று இடம்பெறுகிறது.

சர்வதேச தொடர்புகளுக்கான கதிர்காமர் கற்கை நிலைய கட்டிடத்தில் அமர்வு நடைபெறுகிறது.இந்த ஆணைக்குழுவில் பொதுமக்களுக்கான அமர்வுகளும் இடம்பெறவுள்ளன. இன்று முதல் 25ஆந் திகதி வரை இந்த அமர்வுகள் இடம்பெறுகின்றன.

பொதுமக்கள் தமது முறைப்பாடுகளை 0112673408 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு முன்வைக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...

புகலிடக் கோரிக்கையாளர்கள் குறித்து இலங்கை-கனடா பேச்சு

இலங்கையிலிருந்து மேற்கொள்ளப்படும் புகலிடக் கோரிக்கை தொடர்பில் கனேடிய குடிவரவு, அமைச்சர் ஜேசன் கென்னியுடன் கனடாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகர் பேச்சுவார்த்தை நடத்தியதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

கனேடிய வெளிவிவகார அமைச்சு, புலனாய்வுப் பிரிவினர், கனேடிய எல்லைப் பாதுகாப்புப் பிரிவு, குடிவரவு மற்றும் குடியுரிமை பிரிவு உள்ளிட்ட அதிகாரிகளுடனும் இலங்கை உயர்ஸ்தானிகர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் சட்டவிரோத ஆட்கடத்தல் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

பயங்கரவாதம், ஆட்கடத்தல் உட்பட நாடுகடந்த குற்றச்செயல்கள் மூலம் சர்வதேச மற்றும் தேசிய பாதுகாப்புக்கு ஏற்படும் அச்சுறுத்தல்கள் குறித்து உலக நாடுகளுக்கிடையில் பரஸ்பர ஒத்துழைப்பு அவசியம் என கனடாவின் வெளியுறவு அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை இலங்கையர்கள் 231 பேருடன் கனடாவை நோக்கி 'எம்.வி.சன் சீ' எனும் கப்பல் பயணித்துக் கொண்டிருக்கின்றது. இது குறித்துத் கனடா தீவிர அக்கறை கொண்டிருப்பது குறிப்பிடத்தாகும்.
மேலும் இங்கே தொடர்க...

ஜனாதிபதி - எதிர்க்கட்சி தலைவர் நேற்று மீண்டும் சந்திப்பு


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக் கும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்குமிடையிலான சந்திப்பொன்று நேற்றுக்காலை ஜனாதிபதி மாளிகையில் நடை பெற்றது.

உத்தேச அரசியல் யாப்பு திருத்தம் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர் பில் இதன்போது கலந்துரையா டப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செய லக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அரசியலமைப்பு திருத்தம் தொடர் பாக ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்குமிடையி லான கலந்துரையாடல்கள் இடம் பெற்று வருகின்றன. அதன் ஒரு அம்சமாகவே நேற்றைய சந்திப்பு இடம்பெற்றதாக மேற்படி செயல கம் தெரிவித்தது
மேலும் இங்கே தொடர்க...

டெங்கு ஒழிப்பு திட்டம்: அரச ஊழியர்களின் ஒத்துழைப்பு அவசிய


உள்ளூராட்சி மன்ற மட்டத்தில் அரசாங்கம் முன்னெடுக்கின்ற டெங்கு ஒழிப்புத் திட்டங்களில் சகல அரச உத்தியோகத்தர் களும் முழுமையான ஒத்துழைப்பினை வழங்க வேண்டுமென அமைச்சர் ஜோன் செனவிரத்ன கேட்டுக் கொண்டுள்ளார்.

இது தொடர்பான அரசாங்க நிர்வாகச் சுற்றறிக்கையொன்றை அமைச்சின் செயலாளர் டி.திசாநாயக்கவினால் வெளியிடப்பட்டுள்ளதுடன் சகல அமைச்சுக்கள் திணைக்களங்கள் மற்றும் அரச நிறுவனங்களுக்கும் அனுப்பிவைக்கப் பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்தது.
மேலும் இங்கே தொடர்க...

கிளிநொச்சி மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ள நாமல் ராஜபக்ஷ


கிளிநொச்சி மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ள நாமல் ராஜபக்ஷ எம்.பி. கிளிநொச்சி பாரதி மகா வித்தியாலயத்திற்கு விஜயம் செய்து அங்குள்ள மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகளைப் பகிர்ந்தளித்த போது பிடிக்கப்பட்ட படம். இந்நிகழ்வில் உதித லொக்கு பண்டார எம்.பி, வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இளங்கோவன், லேக்ஹவுஸ் நிறுவனத்தின் ஆசிரிய பீடப் பணிப்பாளர் சீலரத்ன செனரத், வித்தியாலய அதிபர் கே. ராஜரட்ணம் ஆகியோர் கலந்து கொண்டிருப்பதையும் படத்தில் காணலாம்
மேலும் இங்கே தொடர்க...

ஹம்பாந்தோட்டை துறைமுக நிர்மாணப் பணி

ஹம்பாந்தோட்டை துறைமுக நிர்மாணப் பணி
ஜனாதிபதி கலந்து கொள்ளும் நீர் நிரப்பு நிகழ்வில் பங்குபற்ற மக்களுக்கு வாய்ப்பு
ஹம்பாந்தோட்டை துறைமுக நிர் மாணப் பணிகளை பார்வையிட வருவதற்காக பொதுமக்களுக்கு வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்ததாக துறை முக அதிகார சபை கூறியது.

துறைமுக நிர்மாண பணிகளைப் பொதுமக்கள் பார்வையிட இன்று (11ம் திகதி) வரை அனுமதிப் பதென ஏற்கனவே தீர்மானிக்கப் பட்டிருந்தது.

இருப்பினும் மக்கள் வருகை யைக் கட்டுப்படுத்த முடியாதிருப் பதாலும், ஜனாதிபதி தலைமையில் எதிர்வரும் 15ஆம் திகதி பிரதான வைபவம் நடத்துவதற்கான ஏற்பாடு களை மேற்கொள்வதற்காகவும் பார்வை யிடுவதற்கான கால எல்லை நேற்று டன் முடிவு செய்யப்பட்டதாகவும் அதிகார சபை கூறியது.

துறைமுகத்திற்கு நீர் நிரப்பும் வைபவம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் முன்னிலையில் எதிர்வரும் 15ஆம் திகதி நடைபெற உள்ளது.

அன்றைய தினம் மக்களுக்கு நீர் நிரப்பும் வரலாற்று முக்கியமான நிகழ்வை பார்வையிட முழு அனு மதி அளிக்கப்பட உள்ளது. மக்க ளுக்கு நீரில் இறங்கி குதூகலிக்கவும் அவகாசம் வழங்க உள்ளதாக அதி கார சபை கூறியது.

சுமார் இரண்டு இலட்சம் மக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படு கிறது. அன்றைய தினம் காலை 4 மணி முதல் துறைமுகத்திற்கு வர மக்களுக்கு அனுமதி வழங்கப்படும்.

துறைமுகம் அமைப்பதற்காக 17 மீற்றர் ஆழத்திற்கு தோண்டப் பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

மேர்வின் சில்வா பதவி நீக்கம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்தும் இடைநிறுத்தம்


கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி மேர்வின் சில்வா பிரதி அமைச்சுப் பதவியிலி ருந்து நேற்று நீக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாக ஜனாதிபதியின் ஊடக இணைப்புச் செயலர் விஜயானந்த ஹேரத் நேற் றுத் தெரிவித்தார்.

அத்துடன் மேர்வின் சில்வா எம். பியை ஸ்ரீல. சு. கட்சியிலிருந்தும் இடை நிறுத்துவதற்கு கட்சி நேற்று தீர்மானித்துள்ளது.

ஸ்ரீல. சு. கட்சி அதிகாரிகள் குழு வினர் நேற்று இந் தத் தீர்மானத்தை எடுத்துள்ளனர்.

களனிப் பகுதி யில் சமுர்த்தி உத்தி யோகத்தர் ஒருவ ருடன் நடைபெற்ற சம்பவம் தொடர் பாக கட்சி அதிகா ரிகள் குழு நேற்று கூடி ஆராய்ந்தது. இக்கூட்டத்தின் முடிவிலேயே மேர்வின் சில்வா எம்.பி யை கட்சி யிலிருந்து இடைநிறுத்துவதாக தீர்மானி க்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேர் வின் சில்வாவை பிரதி அமைச்சுப் பதவியிலிருந்தும் நீக்குவதற்கு முடிவு செய்ததாக ஜனாதிபதியின் ஊடக இணைப்புச் செயலாளர் விஜயானந்த ஹேரத் தெரிவித்தார்.

களனி சமுர்த்தி உத்தியோத்தருடன் தொடர்புடைய சம்பவம் தொடர் பாக மேர்வின் சில்வா எம். பிக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணைக ளும் ஆரம்பமாகவுள்ளன.

பெருந்தெருக்கள் பிரதி அமை ச்சராக பதவி வகித்து வந்த மேர் வின் சில்வா எம். பி களனியில் சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவரை மரத்தில் கட்டிப்போட்ட சம்பவ மொன்று கடந்த வாரம் நடைபெற் றது.

இதனடிப்படையிலேயே இவர் நேற்று பதவி நீக்கம் செய்யப்பட் டதுடன் கட்சியிலிருந்தும் இடை நிறுத்தம் செய்யப்பட்டார்.
மேலும் இங்கே தொடர்க...