28 நவம்பர், 2009


ஃபொன்​சேகா அதி​ப​ரா​னால் விக்​ர​ம​சிங்​கே​தான் பிர​த​மர்:​ இலங்கை கூட்​டணி கட்சி அறி​விப்பு



இலங்கை அதி​பர் தேர்த​லில் ராணுவ முன்​னாள் தள​பதி சரத் ஃபொன்​சேகா வெற்றி பெற்​றால்,​ ஐக்​கிய தேசிய கட்​சி​யின் தலை​வ​ரும்,​ முன்​னாள் பிர​த​ம​ரு​மான ரணில் விக்​ர​ம​சிங்கே பிர​த​ம​ராக நிய​மிக்​கப்​ப​டு​வார் என இலங்கை சுதந்​திர மகா​ஜன கட்சி தெரி​வித்​துள்​ளது.​ சரத் ஃபொன்​சேகா அதி​பர் தேர்த​லில் போட்​டி​யி​டு​வ​தற்​கான முழு சம்​ம​தத்தை தமது கட்​சி​யின் உயர் நிலைக் குழு தெரி​வித்​து​விட்​ட​தா​க​வும் அக்​கட்​சி​யின் தலை​வர் மங்​கள சம​ர​வீர கூறி​னார்.​ வதந்​தி​களை கிளப்​பி​வி​டு​கி​றார்:​​ சரத் ஃபொன்​சேகா குறித்து மகிந்த ராஜ​பட்ச தலை​மை​யி​லான அரசு ஏரா​ள​மான வதந்​தி​களை கிளப்​பி​வி​டு​கி​றது. சரத் ஃபொன்​சேகா அதி​ப​ரா​னால் இலங்​கை​யில் ராணுவ ஆட்சி ஏற்​ப​டும் என்​பது அதில் ஒன்று. ​ உண்​மையை சொல்ல வேண்​டு​மா​னால் மகிந்த ராஜ​பட்ச அர​சு​தான் அடிப்​ப​டை​யில் ராணுவ ஆட்சி போன்று உள்​ளது. ராணுவ பணி​யில் இருந்து ஓய்வு பெற்ற 24 உயர் அதி​கா​ரி​களை ராஜ​பட்ச தனது நிர்​வா​கத்​தின் முக்​கிய பத​வி​க​ளில் நிய​மித்​துள்​ளார். இலங்​கை​யின் அதி​ப​ரா​வ​தற்கு சரத் ஃபொன்​சே​கா​விற்கு அனைத்து தகு​தி​க​ளும்,​ திற​மை​யும் உண்டு என்​றார் சம​ர​வீர.​ இலங்​கை​யில் பிர​தான எதிர்க்​கட்​சி​யான ஐக்​கிய தேசிய கட்சி தலை​மை​யில் ஐக்​கிய தேசிய கூட்​டணி என்ற புதிய கூட்​டணி சமீ​பத்​தில் உரு​வாக்​கப்​பட்​டது. இதில் இலங்கை சுதந்​திர மகா​ஜன கட்சி உள்​பட 18 கட்​சி​கள் இடம்​பெற்​றுள்​ளன. இந்​தக் கூட்​ட​ணி​யின் தலை​வ​ராக ரணில் விக்​ர​ம​சிங்கே நிய​மிக்​கப்​பட்​டார்.​ அடுத்த ஆண்டு ஜன​வ​ரி​யில் நடை​பெ​றும் அதி​பர் தேர்த​லில் எதிர்க்​கட்சி சார்​பில் பொது​வான வேட்​பா​ள​ராக நிறுத்​தப்​ப​டும் சரத் ஃபொன்​சே​கா​வுக்கு இந்​தக் கூட்​டணி ஆத​ரவு அளிக்க முடி​வெ​டுத்​துள்​ளது

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்க புளொட் தீர்மானம்


dsc01767mmnn

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்கத் தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் புளொட் தலைவர் திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில், இரண்டு விடயங்களை அடிப்படையாகக் கொண்டு அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கத் தீர்மானித்திருக்கின்றோம். ஒன்று இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றுதல், அடுத்ததாக தமிழ் மக்களுடைய அடிப்படைப் பிரச்சினைக்கு தீர்வாக அரசியல் அதிகாரப்பகிர்வு என்பனவாகும். கடந்த காலங்களில் நாங்கள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களிடம் இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் சம்பந்தமாகவும் மற்றும் தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் பிரச்சினைகள் தொடர்பாகவும் தொடர்ச்சியாக கதைத்து வந்தபோது அவற்றைச் செய்து முடிப்பேன் என்ற உறுதிமொழியைத் தந்திருந்தார். இந்த வகையில் மீள்குடியேற்றம் தொடர்பிலான உறுதிமொழிகளை இப்போது அவர் நிறைவேற்ற ஆரம்பித்திருக்கின்றார். நாங்கள் அந்த மீள்குடியமர்த்தப்பட்ட பகுதிகளுக்கும் சென்று பார்வையிட்டிருக்கின்றோம். அங்கு மக்களின் வசதிகள் முழுமையாக செய்து கொடுக்கப்படாவிட்டாலும் மக்கள் தங்களுடைய சொந்த நிலத்திற்கு வந்த திருப்தியில் வாழ்வதை காணக்கூடியதாக இருக்கின்றது. அவர்களுடைய வசதிகள் அனைத்தையும் செய்து கொடுப்பதற்கு தொடர்ந்தும் நாங்கள் அழுத்தங்களைக் கொடுத்துக் கொண்டு வருகிறோம். அவற்றைச் செய்வதாக அரசாங்கமும் உறுதியளித்திருக்கின்றது. இப்போது யுத்தம் ஒரு முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள், தன்னுடைய மகிந்த சிந்தனையின் இரண்டாம் தவணையில் ஒரு நியாயமான தீர்வொன்றை நிச்சயமாக வழங்குவேன் என்று எங்களுக்கு உறுதி தந்திருக்கின்றார். இப்படியான நிகழ்ச்சிநிரல் ஒன்று நடந்து கொண்டிருக்கின்றபோது இந்த நிகழ்ச்சி நிரலைக் குழப்பிவிடக் கூடாது. இதனடிப்படையில் எமது கட்சி அவரை ஆதரிப்பதற்கு தீர்மானித்திருக்கின்றது என்று தெரிவித்துள்ளார்.

புத்தள வானூர்தி விபத்து தொடர்பில் ஆராயவென விசேடகுழு நியமனம்-

மொனறாகலை புத்தள துன்கிந்த காட்டுப் பகுதியில் விபத்துக்குள்ளான எம்.ஐ. 24ரக ஹெலிகொப்டர் தொடர்பில் ஆராய்வதற்கு விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு நியமிக்கப்பட்ட விசேட குழுவினர் தமது நடவடிக்கைகளை இன்று ஆரம்பிக்கவுள்ளதாக பொலீஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இந்த விபத்து தொடர்பாக ஆராய்வதற்கு விமானப்படையைச் சேர்ந்த 20பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தலைமையகம் தெரிவித்துள்ளது. புத்தள பகுதியில் நேற்றுபிற்பகல் 1.30அளவில் பயிற்சி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த விமானப்படைக்குச் சொந்தமான எம்.ஐ. 24ரக ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதுடன் அதில் பயணம் செய்த நால்வர் உயிரிழந்திருந்தனர். இந்த விபத்தானது ஹெலிகொப்டரில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே இடம்பெற்றதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. பலியான நால்வரின் சடலங்கள் பரிசோதனைகளுக்காக மடல்கும்புற வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன


மேலும் இங்கே தொடர்க...
இந்த வருடம் அசத்த போவது யார் ? அசத்தியவர்
புலிகளின்
மூத்த தளபதிகளில் ஒருவரான ராம் அவர்களின் மாவீரர் உரை


இங்கே அழுத்தவும்
Raam maverar nall Speech 2009. நன்றி அதிரடி

மேலும் இங்கே தொடர்க...
பொருத்தமான நேரத்தில் எமது முடிவை அறிவிப்போம் : த.தே.கூட்டணி



தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது குறித்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் இறுதி முடிவு பொருத்தமான நேரத்தில் வெளியிடப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா எமது இணையத்தளத்துக்குத் தெரிவித்தார்.

எதிர்வரும் 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுமென தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது. இத்தேர்தல் தொடர்பாகவும் தேர்தலில் தமிழ் வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது குறித்த தகவல்கள் வெளியாவது தொடர்பிலும் கருத்து கேட்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மேலும் கூறுகையில்,

"ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் நாம் ஆலோசனை நடத்தி வருகின்றோம். எனினும் இதுவரை முடிவுகள் எதையும் அறிவிக்கவில்லை. பொருத்தமான நேரத்தில் எமது முடிவினை நாம் வெளியிடுவோம்" என்றார்.
மேலும் இங்கே தொடர்க...
இடம்பெயர் மக்கள் குறித்து இலங்கைக்கு அழுத்தம் : சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை

இடம்பெயர்ந்தவர்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு உரிய அழுத்தங்களைக் கொடுக்கவேண்டும் என சர்வதேச மன்னிப்பு சபை, பொதுநலவாய நாடுகளின் தலைவர்களிடம் கோரியுள்ளது.

மேற்கிந்திய தீவுகளின் ரினிடாட் என்ட் டபேக்கோவில் கூடியுள்ள நாடுகளின் தலைவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மக்களை தடுத்து வைத்துள்ள கொள்கையை இலங்கை கைவிடவேண்டும் என்ற கோரிக்கையை நாடுகளின் தலைவர்கள் முன்வைக்க வேண்டும் என சர்வதேச மன்னிப்பு சபை கேட்டுள்ளது.

அத்துடன், இலங்கை மக்கள் மனிதாபிமானத்துடன் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு நாடுகள் ஆதரவு வழங்கவேண்டும் என்றும் சர்வதேச மன்னிப்பு சபை கோரியுள்ளது
மேலும் இங்கே தொடர்க...
இலங்கையில் பொதுநலவாய மாநாட்டை நடத்த 45 நாடுகள் ஆதரவு



ஆண்டில், பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை, இலங்கையில் நடத்துவதற்கு 51 நாடுகளில் 45 நாடுகள் ஆதரவை வெளியிட்டுள்ளன.

இந்த ஆதரவு கடந்த புதன்கிழமை ரினிடாட் அன்ட் டபேக்கோவில் நடைபெற்ற பொதுநலவாய அமைச்சர்களின் மாநாட்டில் கிடைக்கப் பெற்றுள்ளது.

பிரித்தானியா, நியூஸிலாந்து மற்றும், கனடா ஆகிய நாடுகள் இலங்கையில் பொதுநலவாய நாடுகளின் கூட்டம் என்ற யோசனைக்கு தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.

2007 ஆம் ஆண்டு கம்பாலாவில் நடைபெற்ற பொதுநலவாய மாநாட்டின் போது 2011 ஆம் ஆண்டின் மாநாட்டை இலங்கையில் நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டது.

அதேவேளை, இலங்கையில் மாநாட்டை நடத்துவதற்கு கனடா, பிரித்தானியா மற்றும் நியூஸிலாந்து ஆகிய நாடுகள் எதிர்ப்பு வெளியிட்டமையை அடுத்து இந்த விடயத்தைப் பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் முன்கொண்டு வர தீர்மானிக்கப்பட்டுள்ளது
மேலும் இங்கே தொடர்க...
தேர்தல் கண்காணிப்புப் பணியில் சர்வதேச தரப்பினர் : ஆணையாளர் உறுதி என கரு தகவல்

ஜனாதிபதித் தேர்தல் கண்காணிப்புப் பணியில் ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க உறுதியளித்துள்ளார் என கரு ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலை நீதி நியாயமாக நடத்துவதற்கு சர்வதேச கண்காணிப்பாளர்களை பணியில் ஈடுபடுத்த வேண்டியது அவசியம் குறித்து தேர்தல் ஆணையாளர் தயானந்த திசாநாயக்கவை ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்கள் நேற்று சந்தித்து வலியுறுத்தினர். இதன்போதே இதற்கான இணக்கத்தினை தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

இந்தச் சந்திப்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் புதிய சிஹல உறுமயவின் தலைவர் சரத் மனமேந்திர உள்ளிட்ட முன்னணியில் அங்கம் வகிக்கின்ற கட்சிகளின் முக்கிய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

சந்திப்பு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட கரு ஜயசூரிய எம்.பி. கூறியதாவது :

"தேர்தல்கள் ஆணையாளருடனான எமது இன்றைய சந்திப்பானது நடைபெறவிருக்கின்ற ஜனாதிபதித் தேர்தல் நீதியானதும் சுதந்திரமானதுமாக அமைய வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காகவே நடைபெற்றது.

நடைபெறவிருக்கும் தேர்தலில் நாட்டு மக்கள் சுதந்திரமாக செயல்படுவதற்கும் தமக்கு விருப்பமான வரும் நாட்டுக்குத் தலைமைத்துவத்தை நேர்மையாகப் பெற்றுக் கொடுக்கின்றவருமான தலைவர் ஒருவரை தெரிவு செய்து கொள்வதற்கான சூழல் உருவாக்கப்பட வேண்டும்.

இதனை மையமாகக் கொண்டு வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதன் பின்னர் தேர்தல் சட்டவிதிகள் முறையாக கடைப்பிடிக்கப்பட வேண்டும். ஏனெனில் கடந்த சகல தேர்தல்களின்போது தேர்தல் விதிகள் மீறப்பட்டிருந்ததையும் அதனால் ஏற்பட்ட விளைவுகளையும் நாம் கண்டிருந்தோம். எனவே இந்த நிலைமை ஜனாதிபதித் தேர்தலிலும் சரி, பொதுத் தேர்தலிலும் சரி மாற்றியமைக்கப்பட வேண்டியது அத்தியாவசியமானது.

அரச சொத்துக்கள், அரச ஊடகங்கள் முழுமையாக அரச தப்பினரால் உபயோகிக்கப்பட்டமை மற்றும் பிரசார நடவடிக்கைகளுக்காக அநாவசியமாக ஹெலிகொப்டர்கள் கூட பயன்படுத்தப்பட்டிருந்தன. இது மேலும் தொடர முடியாது.

அரசுடைமைகள் தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்த வேண்டுமானால் அதற்கான செலவுகளையும் பொறுப்பெடுத்துக் கொள்வது சிறந்ததாகும்.

தேர்தல் பணிகள் ஆரம்பித்துவிட்ட இக்காலப் பகுதிகளில் அநாவசிய இடமாற்றங்களுக்கு இடமளிக்கக்கூடாது. அத்துடன் புதிதாக நியமனம் வேலைத் திட்டங்களை முன்னெடுத்தல் போன்ற விடயங்களுக்கு முற்றாக தடை ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதுடன் காணி உறுதிப் பத்திரங்கள் வழங்குதல், வங்கிக் கடன் வசதிகளை செய்து கொடுத்தல் ஆகியவையும் நிறுத்தப்பட வேண்டும்.

இவையனைத்தும் கடந்த காலங்களில் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக மேற்கொள்ளப்பட்ட ஏமாற்று நடவடிக்கைகள் என்பதில் சந்தேகம் இல்லை.

அரச ஊடகம்

அரச ஊடகம் என்பது இந்நாட்டு மக்களுக்கு சொந்தமானது. எனவே அரச ஊடகம் மத்தியஸ்தம் வகிக்க வேண்டிய பொறுப்பு உள்ளது. இதனூடாக ஒரு தரப்புக்கு மாத்திரமே இடமளிக்காது எதிர்த் தரப்பினருக்கும் இதில் வாய்ப்பளித்து அதற்கான நேர காலத்தை ஒதுக்கித் தர வேண்டும்.

தற்போது அரச ஊடகங்களில் எதிர்க் கட்சிகளை இழிவுபடுத்தும் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. இது நிறுத்தப்பட வேண்டும்.

கண்காணிப்பாளர்கள்

தேர்தல் பணிகளை கண்காணிப்பதற்கென சர்வதேச கண்காணிப்பாளர்கள் ஈடுபடுத்தப்பட வேண்டும் என்பதையும் நாம் தேர்தல்கள் ஆணையாளருக்கு வலியுறுத்தியுள்ளோம். அந்த வகையில் பொதுநலவாய நாடுகள், ஐக்கிய நாடுகள், ஐரோப்பிய நாடுகள், ஆசிய நாடுகளின் தேர்தல் கண்காணிப்புக் குழு ஆகிய தரப்புக்களில் இருந்து கண்காணிப்பாளர்களை இங்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க எமக்கு உறுதியளித்துள்ளார்.

இடம்பெயர்ந்தோர்

இடம்பெயர்ந்த வன்னி மக்கள் தொடர்பிலும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. லட்சக்கணக்கான மக்கள் தமது சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்படாது துன்பப்படுகின்றனர். ஆனால் இவர்களை சென்று பார்ப்பதற்குக்கூட எதிர்த் தரப்பினருக்கு அனுமதி வழங்கப்படவில்லை. எனவே இப்பகுதிகளுக்குச் சென்று பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான நிலையை உருவாக்கித் தருமாறு நாம் கோரிக்கை விடுத்துள்ளோம்.

பொலிஸ் துறை பொலிஸ் துறையில் நேர்மையான அதிகாரிகள் இருக்கின்றனர். அதேபோல் அரசாங்கத்திற்குச் சார்பாக செயற்படுகின்ற அதிகாரிகளும் இருக்கின்றனர். எனினும் நாம் பொலிஸார் குறித்து விமர்சிக்கவில்லை.

கடந்த காலத் தேர்தல்களின்போதும் தற்போதும் பொலிஸார் பல்வேறு அழுத்தங்களின் நிமித்தமாகவே இவ்வாறு நடந்து கொள்வதற்கான நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதை எம்மால் உணர முடிகின்றது. இவ்விடயத்தில் முழுமையான கவனம் செலுத்தப்பட வேண்டும் என்பதுடன் பொலிஸ் மா அதிபர் கூடுதல் அக்கறை செலுத்துமாறும் நாம் கேட்டுக் கொள்கிறோம்.

வாக்குரிமை

இறுதியாக வாக்களிப்பது என்பது ஜனநாயக உரிமையாகும். நடைபெற்று முடிந்த தேர்தல்களில் மக்கள் தமது வாக்குகளை சுதந்திரமாக பாவிப்பதற்கான சூழல் உருவாக்கப்பட்டிருக்கவில்லை. இதனால் மோசடிகள் இடம்பெற்றன. இது தவிர்க்கப்பட வேண்டுமானால் நாடாளுமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ள வாக்காளர் சட்டமூலம் உடனடியாக அமுல்படுத்தப்பட வேண்டும்.

இதற்கு எதிர்த் தரப்பினாகிய நாமும் முழு ஆதரவு தரக் காத்திருக்கிறோம். இதன் மூலமே இந்நாட்டில் நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தல்கள் நடைபெறுவதற்கான சாத்தியங்கள் ஏற்படும் என்பதையும் ஆணையாளரின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளோம்."

இவ்வாறு கரு ஜெயசூரிய தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...
வெற்றி வாய்ப்பில் நான்கு வீதம் முன்னணியிலுள்ள பொன்சேகா-மங்கள சமரவீர எம்.பி. தகவல்

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் பிரசார வடிவமைப்பாளர்களை இலங்கைக்கு கொண்டு வந்து பிரசார நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய அரசாங்கத்தினால் வெற்றியடை முடியாது. அரசாங்கம் தனது தோல்வியை தற்போதே ஏற்றுக் கொண்டுள்ளது என்று ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவின் தலைவர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை விட ஜெனரல் சரத் பொன்சேகா வெற்றி வாய்ப்பில் 4 வீதம் முன்னணியில் உள்ளார்..

ஜனநாயக ரீதியாக பொது மக்களின் வாக்குகளினால் தெரிவுச் செய்யப்படுபவர் இராணுவ அதிகாரியாக இருந்தாலும் அவரை இராணுவ ஆட்சியாளராக கருத முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.ஐக்கிய தேசிய முன்னணியின் விஷேட செய்தியாளர் மாநாடு நேற்று வெள்ளிக்கிழமை எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றப் போதே மங்கள சமரவீர எம்.பி. மேற்கண்டவாறு கூறினார்..

இவர் இங்கு தொடர்ந்தும் கூறியதாவது:.

உத்தியோகபூர்வமான அறிவிப்பை மிக விரைவில் ஜெனரல் சரத் பொன்சேகா அறிவித்ததும் ஐக்கிய தேசிய முன்னணி எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகளை ஆரம்பிக்கும். ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு சிறுபான்மையினத்தவர்களின் ஆதரவு கிடைக்காது னெ அரசாங்கம் கூறி வந்தது. ஆனால், தற்போது அந்நிலை மாற்றமடைந்துள்ளது..

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரிக்க முஸ்லிம் காங்கிரஸ் , ஜனநாயக மக்கள் முன்னணி உட்பட பல தமிழ் அரசியல் கட்சிகள் முன்வந்துள்ளன. நாட்டை பயங்கரவாதத்தில் இருந்து மீட்டெடுத்த முன்னாள் இராணுவ தளபதியான ஜெனரல் சரத் பொன்சேகாவை இன்று இந்த அரசாங்கம் மனசாட்சி இல்லாமல் தேசத்துரோகி என வர்ணித்து வருகின்றது. ஆனால், தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை விட ஜெனரல் சரத் பொன்சேகா வெற்றி வாய்ப்பில் 4 வீதம் முன்னிலையிலேயே உள்ளார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தனது வெற்றியை உறுதி செய்ய தற்போதைய அரசாங்கம் தனது முழு ஆளுமையையும் பயன்படுத்தும். அந்த சவால்களுக்கு முகம் கொடுத்து போராட எதிர்க்கட்சிகளின் கூட்டணி தயாராகவே உள்ளது
மேலும் இங்கே தொடர்க...

ஜனவரி 31க்குள் மீள்குடியேற்றத்தை பூர்த்தி செய்யும் செயற்திட்டம் தயார்

யாழ்ப்பாணத்தில் மீள்குடியேற்றம் நிறைவு - அமைச்சர் ரிசார்ட்

வவுனியா நிவாரண கிராமங்களிலும், ஏனைய இடங்களிலும் தங்கியுள்ள மக்கள் அனைவரையும் எதிர்வரும் ஜனவரி மாதம் 31ம் திகதிக்கு முன்னதாக அவர்களின் சொந்தக் கிராமங்களில் மீளக்குடியமர்த்த அரசாங்கம் திட்டங்களை வகுத்து செயற்படுவதாக மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் தெரிவித்தார்.

கிழக்கிலும், யாழ்ப்பாணத்திலும் மீள்குடியேற்றம் முற்றாக நிறைவடைந்துள்ள தாகக் கூறிய அமைச்சர் பதியுதீன், எதிர்வரும் டிசம்பர் 5ம் திகதிக்கு முன்னர் 3600 பேரை மீளக்குடியமர்த்த நடவடிக்கை எடுத்துள்ளதாகக் கூறினார். மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சில் நேற்று (27) பிற்பகல் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இன்று (27) (நேற்று) மாந்தை கிழக்குப் பகுதியில் 800 பேர் மீளக்குடியமர் த்தப்பட்டுள்ளனர். எதிர்வரும் 30ம் திகதி பூநகரியில் 1000 பேர் குடியமர்த்தப்படுவர். கிளிநொச்சி கரைச்சியில் டிசம்பர் இரண்டாந் திகதி ஆயிரம் பேரும், ஐந்தாம் திகதி வவுனியா கிழக்கில் 800 பேரும் மீளக்குடியம ர்த்தப்படுவார்களெனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

மேலும் இங்கே தொடர்க...

சர்வதேச அழுத்தங்களுக்கு மத்தியிலும் தாய்நாட்டின் கௌரவம் பேணுவோம்

சர்வதேச விமான நிலையத்திற்கான நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைத்த

எத்தகைய தேசிய, சர்வதேச அழுத்தங்கள் வந்தாலும் தாய்நாடு தொடர்பில் மேற்கொள்ளும் தீர்மானங்களை மாற்றத் தயாரில்லையென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

அதேபோன்று நாட்டு மக்களுக்காகவும் நாட்டின் எதிர்கால நலனுக்காகவும் எத்தகைய தீர்மானங்களையும் மாற்றவும் தயாராகவுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

தெற்கில் வீரவிலவில் சர்வதேச விமான நிலையத்தை அமைப்பதென ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டாலும் அதனால் பாதிக்கப்படும் மக்களின் நலன் கருதி அத்தீர்மானத்தை மாற்ற நேர்ந்ததாகவும் அதற்குப் பதிலாக லுணுகம்வெஹெர மத்தல பிரதேசத்தில் அதற்கான நிர்மாணப் பணிகளை இன்று ஆரம்பிக்க முடிந்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

தெற்கில் மத்தல பிரதேசத்தில் புதிய சர்வதேச விமான நிலையத்திற்கான நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய ஜனாதிபதி, இதற்கு முன்னர் நாம் இப்பகுதிக்கு வந்தபோது இங்கு டயர் யுகமே இருந்ததாகவும் அன்று டயர் எரித்தவர்களும் டயரில் போடப்பட்டவர்களும் இன்று ஒன்றிணைந்துள்ள யுகம் உருவாகியுள்ளதாக வும் அவர் தெரிவித்தார்.

சீன அரசாங்கத்தின் நிதியுதவியுடன் 210 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் அம்பாந்தோட்டை மாவட்ட மத்தலவில் நிர்மாணிக்கப்படவுள்ள இலங்கையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையத்திற்கான நிர்மாணப் பணிகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர்கள், உள்நாட்டு வெளிநாட்டு ராஜதந்திரிகள் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்ட இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது; கடந்த காலங்களில் இந்த நாட்டை ஆட்சி செய்தவர்கள் விட்ட தவறுக்கான பலனையே நாம் இன்று சுமக்க வேண்டியுள்ளது. தெற்கில் விமான நிலையம், துறைமுகம் போன்றவை எப்போதோ அமைக்கப்பட்டிருக்க வேண்டியவை. அன்றைய தலைவர்கள் அதுபற்றி சிந்திக்காமையும் அவர்கள் விட்ட மாபெரும் தவறு. இதன் மூலம் நாட்டுக்கான பெரும் வருமானமும் இழக்கப்பட்டுள்ளது.



மேலும் இங்கே தொடர்க...

மிழீ க்ள் விடுலைக் ம்


:
******************************************
புலிப்பாசிசம்

anicandil2.gifhttp://www.geo-reisecommunity.de/bild/regular/141766/Tiger.jpg

புலிப்பாசிசம் காவுகொண்ட விடுதலைப் போராளிகள்
அரசியல் அல்லது போராட்ட அமைப்பு : தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்
தொழில் அல்லது அந்தஸ்து பதவி : முழுநேர விடுதலைப் போராளிகள்
புலிகளால்
சுட்டுக்கொலை
************74.gif*******74.gif74.gif74.gif***********************
தோழர் சுந்தரம்
தோழர் மென்டிஸ்
தோழர் காத்தன்


தோழர் சங்கிலி, கந்தர்
தோழர் சுபாஸ்
தோழர் வாசு


தோழர் வோல்ற்றர்
தோழர் கண்ணன்
தோழர் மாமா




தோழர் பார்த்தன் தோழர் வசந்தி தோழர் நடேசன்


தோழர் வசந்தன் தோழர் மாணிக்கதாசன்
மேலும் இங்கே தொடர்க...