18 நவம்பர், 2009

ஜனவரிக்கு முதல் மீள்குடியேற்றம் நிறைவுபெறும் - ஹோம்ஸ் நம்பிக்கை



வவுனியா நிவாரண முகாம்களிலுள்ள மக்கள் எதிர்வரும் ஜனவரி மாதத்திற்கு முன்னர் முழுமையாக மீள்குடியேற்றப்படுவர் என்ற நம்பிக்கை தமக்குள்ளதாக ஐக்கியநாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான பிரதிச் செயலாளர் ஜோன் ஹோம்ஸ் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் அழைப்பினை ஏற்று நான்குநாள் விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்த அவர் இன்று வவுனியா நலன்புரி கிராமங்களுக்கு விஜயம் செய்த பின்னர் மேற்படி கருத்தை வெளியிட்டுள்ளார்.

அரசாங்கத்தினால் துரிதகதியில் மேற்கொள்ளப்படும் மீள்குடியேற்றம் மற்றும் முகாம்களிலுள்ள மக்களுக்கு செய்துகொடுக்கப்பட்டுள்ள வசதிகள் தொடர்பில் தாம் திருப்தியடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி சார்ள்ஸ் எமது இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...




லங்கை நிகழ்வுகளைத் தொடர்ந்து துல்லியமாக அளித்து வரும் ஜூ.வி., 'அதிபருக்கும் தளபதிக்குமான வெ(ற்)றிக் கூட்டணியில் விரிசல் விழுகிறது என்பதையும் முதன்முதலில் மிகவிரிவாகச் சொன்னது! கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரி என்ற அலங்காரப் பதவியைக் கொடுத்து தன்னை அவமானப்படுத்தும் ராஜபக்ஷேவுக்கு எதிராக, தன் பதவியைத் துறந்துவிட்டு அரசியலில் சரத் ஃபொன்சேகா குதிக்கப் போகிறார் என்றும் அடித்துச் சொன்னது ஜூ.வி.! அதிபர் மற்றும் தளபதியின் மனைவியர் தங்களுக்குள் இருந்த நட்பைப் பயன்படுத்தி கடைசியாக சில முயற்சிகள் செய்ய... அதுவும் பலிக்காமல் போய், ஃபொன்சேகா தன் பதவியைத் துறந்தேவிட்டார்! அதிரடியாக அதிபருக்கு சவால்களும் விடத் தொடங்கிவிட்டார்!

''அகத்தியரை விழுங்கப் பார்த்த வாதாபி, இல்வலனுக்கு நேர்ந்தது போல... புலிகள் இயக்கத்தைக் கூட்டாகக் கரைத்து விழுங்கப் பார்த்த இந்த இருவருக்குமே இப்போது பேராபத்து!'' என்று வர்ணிக்கிறார் இலங்கைப் பத்திரிகையாளர் ஒருவர்!
அடுத்தடுத்து இலங்கையில் அரங்கேறப் போகும் அதிரடிகள் குறித்து அவரிடமும், இன்னும் சில இலங்கைப் பிரதானிகளிடமும் நாம் விசாரித்தோம்.

புறப்பட்ட ஃபொன்சேகா!

''ஃபொன்சேகாவின் எண்ணத்தில் அரசியல் குறித்த எள்ளளவு ஆசையும் எழாத

நேரத்திலேயே, 'அவர் தேர்தலில் போட்டியிடக் கூடாது!' என தேசியபௌத்த அமைப்புகளின் ஒன்றியத்தை சேர்ந்த மெதகம தம்மானந்த தேரர் மிரட்டினார். உடுவே தம்மாலோக தேரர், அதிபரின் ஆலோசகர் தெடிகமுவ நாயக்க தேரர், சாஸ்திரிபதி மெதகம தம்மானந்த தேரர் உள்ளிட்ட பௌத்த பிக்குகள் மற்றும் சிங்ஹலயே மகா சம்மத பூமி பத்ர கட்சி தலைவர் ஹரிசந்திர விஜேதுங்க, கலாநிதி குணதாச அமரசேகர, ஒல்கட் குணசேகர போன்றோர்கள்தான் இந்த தேசிய பௌத்த அமைப்புகளின் ஒன்றியத்தைத் தொடங்கி ஃபொன்சேகாவுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கினர்.
அதோடு, 10,000 பிக்குகள் கலந்துகொள்ளும் சத்தியாகிரகப் போராட்டத்தை நடத்தப் போவதாகவும் மிரட்டினர். இன்னொரு பக்கம் அனுர பிரியதர்சன யாப்பா, மேர்வின் சில்வா, மஹிந்தானந்த அளுத்கமகே, டக்ளஸ் அழகம்பெரும போன்ற அமைச்சர்களும் ஃபொன்சேகாவுக்கு எதிராகக் குரல் எழுப்பினர். இப்படி அடுத்தடுத்த தாக்குதல்களால் அவரை அடக்கி விடலாம் என்று நினைத்தவர்களின் எண்ணம் எதிர்மறையாகப் போய்விட்டது. தானுண்டு தன் வேலையுண்டு என்றிருந்தவரை அதிபர் தரப்பே வம்பிழுத்ததுதான் முரட்டுத் தேரை இழுத்துத் தெருவில் விட்டுவிட்டது!'' என்கிறார்கள் இலங்கை அரசியல் நோக்கர்கள்.

கோதாவுக்கு காரணம் கோத்தபய!

''இலங்கையில் நடக்கும் அத்தனை பிரச்னைகளுக்கும் மூலகாரணியே கோத்தபயதான்! விடுதலைப் புலிகளுடனான போர் முடிந்ததுமே முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு பகுதிகளில் இருந்து டன் கணக்கில் ஆயுதங்களும், தங்கமும் மீட்கப்பட்டன. இந்த ஆயுதப்புதையல் சத்தமின்றி பாகிஸ்தான் ராணுவத்துக்கு விலை பேசி விற்கப்பட்டதாக ஃபொன்சேகா தரப்பு நினைக்கிறது. இதுபற்றிய முழு விவரங்களும் கோத்தபயவுக்குத் தெரியும் என்றும் நினைக்கிறது. ராணுவ வீரர்கள் கஷ்டப்பட்டு கண்டுபிடித்த ஆயுதக்குவியல் தனிப்பட்ட ஒருவரின் பாக்கெட்டுக்கு போவதை ஃபொன்சேகா விரும்பவில்லை. புலிகளிடமிருந்து கைப்பற்றப் பட்ட தங்கத்தில் கிட்டத்தட்ட 4,000 கிலோ தங்கமும் எந்தக் கணக்கும் இல்லாமல் காணாமல் போனது. இதையெல்லாம் ஃபொன்சேகா தட்டிக் கேட்கப் போய்த்தான் கோத்தபயவுக்கும் அவருக்குமான ஆரம்ப மோதல் வெடித்தது. உடனே பாதுகாப்பு செயலர் பதவியை பயன்படுத்தி கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரியாக ஜெனரலை (ஃபொன்சேகாவை) நியமித்தார் கோத்தபய.
இதற்கிடையில், இலங்கை யின் அரச பத்திரிகையான 'டெய்லி நியூஸ்' பத்திரிகையில் ஹோண்டுராஸ் நாட்டில் நடந்த ராணுவப் புரட்சியைப் பற்றியும், அந்நாட்டு ராணுவத் தளபதியைப் பற்றியும் விரிவான கட்டுரை ஒன்று வெளியாகியிருந்தது. அந்த நாட்டுடன் இலங்கைக்கு எந்த உறவும் இல்லாத நிலையில், ஜெனரலை குறிவைத்து எழுதப்பட்டிருந்த அந்தக் கட்டுரையைப் பார்த்ததும் பத்திரிகைக்குப் பொறுப்பாளரான கோத்தபயவிடம் கோபப்பட்டிருக்கிறார் ஜெனரல். அந்த சமயத்தில் இருவருக்குள்ளும் மிகக் கடுமையான வாக்குவாதங்கள் நிகழ்ந்து போனை துண்டித்திருக்கிறார் ஜெனரல். இதன் பிறகுதான் ராணுவப் பொறுப்பைத் துறக்கிற அளவுக்கு ஜெனரல் ஃபொன்சேகா துணிந்தார்!'' என்கிறார்கள் ராணுவ வட்டாரத்தில்.

எடுபடாத சமாதானம்!

''ராஜபக்ஷேயின் செயலாளரான லலித் வீரதுங்க ஆறு முறை அழைப்பு விடுத்தும் ஃபொன்சேகா சென்று சந்திக்கவில்லை. இதனால் ராஜபக்ஷேவின் மனைவி சிராந்தி, ஃபொன்சேகாவின் மனைவியான அனோமாவை கொழும்பில் உள்ள ஒரு புத்த விகாரையில் சந்தித்துப் பேசியிருக்கிறார். கொஞ்சம் சமாதானமான ஃபொன்சேகா, கடந்த 15-ம் தேதி ராஜபக்ஷேயை சந்தித்திருக்கிறார். 45 நிமிடங்கள் இருவரும் மனம்விட்டுப் பேசினார்கள். கோத்தபயவை மன்னிப்புக் கேட்கச் சொல்வதாகவும் கவலையோடு பேசியிருக்கிறார் ராஜபக்ஷே. பாதுகாப்பு அமைச்சர் அல்லது பிரதமர் பதவி வரை அளிக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் சமாதானம் பேசியிருக்கிறார். ஆனால், ஃபொன்சேகா 'போரின் முழு வெற்றிக்கு தன்னைக் காரணமாக அறிவிக்க வேண்டும், கோத்தபயவின் பாதுகாப்பு செயலர் பதவியை ஒழித்துவிட்டு, அந்த அதிகாரங்களை கூட்டுப்படை தலைமை தளபதிக்கு வழங்க வேண்டும்' என அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார். இதில் கடுப்பாகிப் போன ராஜபக்ஷே, 'நீங்க என்ன முடிவெடுத்தாலும் அதனை எதிர்கொள்ளத் தயாராகி விட்டேன்' எனச் சொல்லி அவரை அனுப்பிவிட்டார்...'' என்கிறார்கள் அதிபர் மாளிகை வட்டாரத்தினர்.

ராஜினாமாவும், 17 காரணங்களும்!

ராஜபக்ஷேயின் கோபம் எத்தகைய கொடூரத்துக்கும் நீளும் என நினைத்த ஃபொன்சேகா, 17 காரணங்களைப் பட்டியலிட்டு தனது ராஜினாமா கடிதத்தை அரசுக்கு அனுப்பிவிட்டார். தனக்குப் பிறகு ராணுவத் தளபதியாக நியமிக்க வேண்டிய மேஜர் ஜெனரல் சந்திரசிறீயை தவிர்த்துவிட்டு, ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்பட்டிருந்த ஜெகத் ஜெயசூர்யாவை நியமித்ததையும் கண்டித்திருக்கிறார். கூடவே, 'புலிகளை ஒழித்துக் கட்டிய ராணுவம் சதி முயற்சிகளில் ஈடுபடுவதாக சந்தேகித்து, கடந்த அக்.15-ம் தேதி இந்திய அரசாங்கத்தை எச்சரிக்கையாக இருக்குமாறும், ராணுவத்தை அனுப்பி உதவுமாறும் அதிபர் கேட்டுக் கொண்டார்' என்றும் ஃபொன்சேகா ஒரு குண்டு போட்டிருக்கிறார். இது, ஃபொன்சேகா நினைத்தபடியே சிங்கள மக்களையும் சிங்கள ராணுவத்தின் விசுவாச ஊழியர்களையும் ராஜபக்ஷேவுக்கு எதிராகக் கொதிக்க வைத்துவிட்டதாம் (இப்படியெல்லாம் இந்திய ராணுவத்திடம் எந்த உதவியும் கேட்கப்படவில்லை என்று மத்திய அமைச்சர் சசி தரூர் உறுதியாக மறுத்திருப்பது தனிக் கதை!).
ஃபொன்சேகா தனது ராஜினாமா கடிதத்தில், 'போராடிப் பெற்ற வெற்றியை சரியான விதத்தில் பயன்படுத்த அதிபர் தவறி விட்டார். தமிழ் மக்களின் மறுவாழ்வுக்கு வழி செய்யாமல், அவர்களை அடைத்து வைத்திருப்பது, பல போராளிகளை உருவாக்கிவிடும் அபாயமிருக்கிறது' என தமிழ் மக்களுக்கும் ஆதரவாக பரிந்து பேசியிருப்பதுகூட, அவருடைய எதிர்கால தேர்தல் திட்டத்தின் ஓர் அங்கம்தான்.
இதுபற்றிப் பேசும் கொழும்பு பத்திரிகையாளர்கள், ''அதிபருக்கு ரகசியமாக அனுப்பிய கடிதத்தை மீடியாக்களுக்கும் பரப்பிவிட்டு, எடுத்த எடுப்பிலேயே கைதேர்ந்த அரசியல்வாதியாக ராஜபக்ஷேவுக்கு செக் வைத்திருக்கிறார் ஃபொன்சேகா. அவருடைய தந்திரம் சிங்கள மக்களை உசுப்பி வசியப்படுத்துமே தவிர, கூர்மையான தமிழ் மக்களிடத்தில் ஒருபோதும் எடுபடாது!'' என்கிறார்கள்.

களனி விகாரையில் களேபரம்!

ராஜினாமா கடிதத்தை அனுப்பிய கையோடு அக்மார்க் அரசியல்வாதியாக பளீர் வெள்ளை உடையில் களனி ரஜமகா விகாரைக்கு வழிபாட்டுக்குச் சென்றார் ஃபொன்சேகா. விகாரைக்குள் சென்று அங்குள்ள தேரரிடம் ஆசி பெற்றவர், தனது அரசியல் நிலைப்பாடு பற்றியும், அடுத்து வரும் தேர்தலில் பொது வேட்பாளராக களமிறங்கத் திட்டமிட்டிருப்பதையும் அவரிடம் விளக்கியிருக்கிறார். நேரத்துக்குத் தகுந்தபடி கொடியசைக்கக்கூடிய அந்த தேரர்களும் அவருக்கு ஆசி வழங்கியதாகக் கூறப்படுகிறது. வழிபாடு முடிந்து ஃபொன்சேகா வெளியில் வந்ததுமே அதிபருக்கு நெருக்கமான எம்.பி-யான மேர்வின் சில்வா தலைமையில் அவரது ஆதரவாளர்கள் அவரை வழிமறித்திருக்கின்றனர். தகாத வார்த்தைகளில் திட்டியதோடு, அவரை அங்கிருந்து நகர முடியாதபடி கெரோ செய்திருக்கிறார்கள். இதெல்லாம், எதிர்கால ரசாபாசத்துக்கான துளியூண்டு தொடக்கம்தான்!
ஃபொன்சேகாவின் ராஜினாமாவைத் தொடர்ந்து, அரசுப் பொறுப்பில் அங்கம் வகித்த அவருடைய உறவினர்களும் அதிரடியாக டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர்.

தேர்தல் ஒன்று... வியூகம் ரெண்டு!

அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு வசதியாக ராணுவப் பதவியை ஃபொன்சேகா ராஜினாமா செய்துள்ள நிலையில், அவரிடம் தேர்தல் தொடர்பாக இரண்டு வியூகங்களை முன் வைத்திருக்கின்றன இலங்கை எதிர்க்கட்சிகள். இலங்கையை ஆளும் எண்ணத்தைவிட ராஜபக்ஷே சகோதரர்களை பழிவாங்கும் எண்ணம்தான் ஃபொன்சேகாவிடம் அதிகமிருக்கிறதாம். அதனால் ஐ.தே. முன்னணியின் சார்பில் ரணில் விக்ரமசிங்கே அதிபர் தேர்தலில் போட்டியிடுவார். அதே நேரத்தில் ராஜபக்ஷே பெரிதாக நம்பியிருக்கும் சிங்கள வாக்குகளை உடைக்கும் எண்ணத்தில் ஜே.வி.பி-யின் வேட்பாளராக ஃபொன்சேகா களமிறக்கப்படுவாராம். இதனால் சிங்கள வாக்குகள் மூன்றாகச் சிதறி உடையும்.
அதோடு, ராஜபக்ஷேவுக்கு கடந்த தேர்தலில் போன வாக்குகளில் பெரும்பகுதியை இம்முறை ஃபொன்சேகாவே பிரித்துவிடுவார். இந்த நிலையில் தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களின் சிறுபான்மை வாக்குகளை வாங்கி ரணில் எளிதில் வென்று விடுவார் என கணக்கு போடுகின்றனவாம் எதிர்க்கட்சிகள். ஒருவேளை பொது வேட்பாளராக ஃபொன்சேகாவே களமிறங்க வேண்டிய நிலை உருவானால், தமிழ் கட்சிகள் எந்தளவுக்கு அவரை ஆதரிக்க இயலும் என்ற சந்தேகமும் எழுந்திருக்கிறது.

இந்தியாவா? அமெரிக்காவா?

இலங்கையைவிட இந்தியாவும், அமெரிக்காவும்தான் சிங்கள அரசாங்க சிக்கலை உற்று கவனித்து வருகின்றன. சீனாவின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த நினைக்கும் அமெரிக்கா ஃபொன்சேகாவை அதிபராக்கி, அதன் மூலம் தெற்காசியாவிலும் தங்களது காலை வலுவாக ஊன்ற நினைக்கிறது. இந்தியாவோ, பாகிஸ்தானுடன் நெருக்கமாயிருக்கும் ஃபொன்சேகாவை அதிபராக்க விடாமல் தடுக்க நினைக்கிறது. அதற்கேற்ப ராஜவியூகங்களை வகுப்பதோடு, முதல்கட்டமாக மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜியையும் இலங்கைக்கு அனுப்பி நிலவரம் பார்த்து வரச் செய்திருக்கிறது! இதற்கும் முன்னதாக, இலங்கையில் இந்த அரசியல் குழப்பங்களுக்கு ஃபொன்சேகா அடிபோட ஆரம்பித்த சமயத்திலேயே கடந்த வாரம் எதிர்க்கட்சித் தலைவர் ரணிலை அவசர அவசரமாக அழைத்தது இந்தியாஅவரிடம், சில அந்தரங்கமான ஆலோசனைகளையும் நடத்தியது.
''இலங்கை சென்ற இந்திய மந்திரி பிரணாப் முகர்ஜி ராஜபக்ஷேயிடம் பேசியதோடு, ஃபொன்சேகாவையும் சந்திக்க முயன்றார். ஆனால், அதனை ஃபொன்சேகா தவிர்த்துவிட்டார்!'' என்று செய்தி சொல்லும் சிலர்... பிரணாப் வந்து போன சூட்டோடு 'இலங்கையில் முன்கூட்டி தேர்தல் நடக்காது' என்று ராஜபக்ஷே சொல்லத் தொடங்கியிருப்பதையும் சுட்டிக் காட்டுகிறார்கள்!
மொத்தத்தில் இலங்கை விவகாரத்தில் வெல்லப்போவது இந்திய ராஜதந்திரமா, அமெரிக்க ராஜதந்திரமா என்பது போகப் போகத்தான் தெரியும்.

உயிருக்கு உத்தரவாதம் இல்லை!

ராணுவப் பதவியை ராஜினாமா செய்யும்போதே, தொடர்ந்து தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக ஃபொன்சேகா சொல்லியிருக்கிறார். அப்படியிருக்க, 800 படையினரும் 50 வாகனங்களுமாக இருந்த அவருடைய பாதுகாப்பு... 35 வீரர்கள், ரெண்டு ஜீப் என சுருக்கப்பட்டுவிட்டது. அதோடு, அமெரிக்காவில் உள்ள ஃபொன்சேகாவின் மகளுக்கு வழங்கப்பட்டுவந்த பாதுகாப்பும் விலக்கப்பட இருக்கிறதாம். இதனால், தேர்தல் தேதி அறிவிக்கப்படும் வரை, அவர் அமெரிக்காவில் தங்கியிருக்க முடிவெடுத்திருக்கிறாராம். ஆனால், அதற்கிடையில், அவர் பணியாற்றிய அலுவலகத்தில் ராணுவ நடவடிக்கைகள் தொடர்பான ஃபைல்கள் காணாமல் போய்விட்டதாகச் சொல்லி, அவரை விசாரணைக்கு அழைக்க எத்தனித்திருக்கிறதாம் சிங்கள அரசு. உண்மையிலேயே சர்வதேச அளவில் கோத்தபயவின் போர்க்குற்றங்களை வெளிப்படுத்துவதற்காக,நிஜமாகவே ஃபொன்சேகா சில ஆவணங்களைக் கைப்பற்றி வைத்திருப் பதாகவும் ஒரு பேச்சு உலவுகிறது இலங்கையில்.

போட்டுத் தாக்கத் தயாராகும் ஃபொன்சேகா

''பிரபாகரனை கொல்லச் சொன்னதே இந்தியாதான்!''

கார்டிஹேவா சரத் சந்திரலால் ஃபொன்சேகா... இதுதான் இலங்கையில் புயலைக் கிளப்பி இருக்கும் ஃபொன்சேகாவின் முழுப்பெயர். அம்பலங்கொடை தர்மாசோக்க கல்லூரியிலும், கொழும்பு ஆனந்தா கல்லூரியிலும் படித்த அவர், விளையாட்டு வீரராகவும் விளங்கியவர். 1970-ம் ஆண்டு இலங்கை ராணுவத்தில் சேர்ந்தவர், 1995-ம் ஆண்டு ஹிட்லரையே மிஞ்சுகிற அளவுக்கு அரக்கத்தனமான கொடூரம் ஒன்றை அரங்கேற்றினார். போரின்போது பிடிபட்ட விடுதலைப் புலிகளையும், காயம்பட்ட மக்களையும் செம்மணி என்கிற இடத்தில் உயிரோடு அள்ளிப்போட்டு புதைத்து, அப்போதே ஆவேசக் குற்றச்சாட்டில் சிக்கினார். பெரிய அளவில் குழி தோண்டி, 600-க்கும் மேற்பட்டோரைஅதற்குள் தள்ளி உயிரோடு புதைத்த கொடூரத்தை ஆதாரத்துடனேயே ஐ.நா உள்ளிட்ட அமைப்புகள் அப்போது கண்டித்தன.

இலங்கை கதைதான் தெரியுமே... இந்த கொடூரத்தைச் செய்ததற்காகவே ராணுவத்தின் 18-வது தளபதியாக உயர்ந்தார்.

ஃபொன்சேகாவின் மனசாட்சியற்ற கொடூரங்களை சகிக்க முடியாத விடுதலைப் புலிகள், 2006-ம் ஆண்டு அவர் மீது மனித வெடிகுண்டு தாக்குதலை நடத்தினார்கள். அதில் எப்படியோ தப்பிவிட்ட ஃபொன்சேகா, ஒருவழியாய் ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றார். ஆனால், விடுதலைப் புலிகளை அடியோடு ஒழிக்க நினைத்த ராஜபக்ஷே அரசு, அவரை வலிய அழைத்து, ராணுவத் தளபதியாக அறிவித்தது.

''ஃபொன்சேகா இப்போது முழுக்க முழுக்க அமெரிக்கா வின் கைப்பாவையாக இருக்கிறார். ராஜபக்ஷே அரசைக் காப்பாற்ற இந்தியா முயற்சித்தால், அமெரிக்கத் துணையோடு அதனை முறியடிக்க ஃபொன்சேகா தயாராகி வருகிறார். கண்ணிவெடிகளை அகற்றுகிறோம் என்கிற பெயரில், 2,000-க்கும் மேற்பட்ட இந்திய ராணுவத்தினர் இப்போது இலங்கையில் தங்கியிருக்கிறார்கள். ஆனால், அவர்கள் இலங்கை ராணுவத்தின் அனுதின நடவடிக்கைகளை ஆராயவும், புலிகள் பதுக்கி வைத்திருக்கும் ஆயுதங்களை அழிப்பதற்காகவும்தான் இருக்கிறார்கள். அமெரிக்காவின் சிக்னலுக்காக காத்திருக்கும் ஃபொன்சேகா, போர்க் காலத்தில் இந்திய அரசு காட்டிய அக்கறையைப் போட்டு உடைக்கவும் தயாராகி வருகிறார்.

போர் நடந்த நேரத்தில், தமிழர்களைக் காக்கும் கோரிக்கையோடு இலங்கை அதிபரை சந்தித்த சில இந்தியப் பிரதிநிதிகள், 'பிரபாகரன் கொல்லப்பட வேண்டும்' என்பதை அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தியதாக, சில ஆதாரங்களை முன்வைத்துச் சொல்ல ஃபொன்சேகா தயாராகிவிட்டார்...'' என்கிறார்கள் அவருக்கு ஆதரவாகச் செயல்படும் எதிர்க்கட்சித் தரப்பினர்.

- இரா.சரவணன்


ராணுவப் புரட்சி... சில சாம்பிள்கள்!

ராணுவத் தளபதிகள் புரட்சி நடத்தி நாட்டின் தலையெழுத்தை மாற்றிய கதைகள் நிறைய! அப்படி ராணுவத்தில் இருந்து வந்துதான் சர்வாதிகாரிகளாக மாறினானர்கள் ஹிட்லரும் முசோலினியும். இன்னும் சில சாம்பிள்கள் கீழே...

பாகிஸ்தான்: பாகிஸ்தானில் தளபதி முகமது அயூப்கான் என்பவரே முதன் முதலில் ராணுவ ஆட்சிக்கு விதை போட்டவர். 1969--ல் ராணுவத் தளபதி யாகியாகானிடம் ஆட்சியை ஒப்படைத்தார். யாகியாகானின் கொடூரமான அடக்குமுறை காரணமாக இந்தியா தலையிட... வங்கதேசம் என்னும் தனிநாடு உருவெடுத்தது. அதன் பின் பாகிஸ்தானின் ஆட்சி அதிகாரம் புட்டோவிடம் ஒப்படைக்கப்பட்டது.அது வெகுகாலம் நீடிக்கவில்லை. தளபதி ஜியா உல் ஹக் தலைமையிலான ராணுவப் புரட்சி புட்டோவின் பதவியைப் பறித்தது. அவரும் 1988-ம் ஆண்டு விமான விபத்தில் இறந்தார். பிறகு நவாஸ் ஷெரீபை ராணுவம் 1999 அக்டோபரில் கவிழ்த்தது. ராணுவத் தளபதியாக இருந்த முஷ்ரப் அதிரடிப் புரட்சியை நடத்தி ஆட்சியைக்கைப்பற்றினார்

உகாண்டா: உலகின் அதிபயங்கரக் கொடுங்கோலர்களில் ஒருவர் இடி அமீன். 1971 முதல் 1979 வரை உகாண்டாவை ஆட்சி செய்தார். இவர் ராணுவப் புரட்சி நடத்தி உகாண்டாவை கைப்பற்றியபோது ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்களைக் கொன்று குவித்தார். 1978-ல் தான்சானியா மீது படையெடுத்தார். இதற்கு பதிலடி கொடுத்தது தான்சானியா. அப்போது இடி அமீனுக்கு எதிரானவர்கள் எல்லோரும் ஒரு பக்கமாக கை கோத்துக்கொண்டனர். உயிர் பிழைக்க இடிஅமீன் நாட்டை விட்டு லிபியாவுக்கு ஓடினார். பிறகு சவூதி அரேபியாவில் தஞ்சம் புகுந்து 2003-ல் இறந்து போனார்.

இந்தோனேசியா: முதலாவது ஜனாதிபதி சுகர்ணோவிடமிருந்து ராணுவத் உதவியுடன் உள்நாட்டுக் குழப்பங்களுக்கு இடையே மூலமாகவும் ராணுவத் தலைவர் சுகார்த்தோ ஆட்சியைக் கைப்பற்றினார். 30 ஆண்டு கால சுகார்த்தோ ஆட்சியில் இந்தோனேசியாவின் வளங்களும் சொத்துகளும் சூறையாடப் பட்டன. உள்நாட்டில் ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட... உள்நாட்டுக் குழப்பங்கள் உச்சகட்டத்தைத் தொட்ட 1998-ம் ஆண்டு அதிபர் பதவியில் இருந்து இறங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்.

மியான்மர்: ஆசியாவின் தென்கிழக்கு பகுதியில் அமைந்த நாடு மியான்மர். முன்பு பர்மா. அங்கு நடப்பதும் ராணுவ ஆட்சி. மூத்த தளபதி தான்சுவே இங்கு அதிபர். 1962-ல் நெவின் ராணுவப் புரட்சி செய்து ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தார். நெவினுக்கு நெருக்கடிகள் முற்ற... அவரிடமிருந்து தான்சுவே 1992-ல் அதிகாரத்தைப் பறித்து தலைவர் பதவியில் ஏறினார். மியான்மரில் ஜனநாயக உரிமைகளுக்காகப் போராடி கடந்த 14 ஆண்டுகளாக சிறையிலும் வீட்டுச்சிறையிலும் நோபல் பரிசு பெற்ற ஆங் சான் சு கீ கழித்து வருகிறார்.

சிலி: தென் அமெரிக்காவின் அர்ஜென்டினாவுக்கு மேற்கில் உள்ள நாடு சிலி. அங்கே 1973-ல் சதிப் புரட்சி மூலம் நாட்டைக் கைப்பற்றிய ராணுவ சர்வாதிகாரி ஒகஸ்ரோ பினோசே தன்னைத் தானே சிலிக் குடியரசின் ஜனாதிபதி என்று அறிவித்தார். சிலியில் இவர் ஆட்சி புரிந்த 17 ஆண்டு காலத்தில் மனித உரிமை மீறல்கள் அரங்கேற்றப்பட்டன. பினோசே ஆட்சிக் காலத்தில் 3,197 பேர் கொல்லப்பட்டனர். 1,102 பேர் காணாமல் போனார்கள் என்பது அதிகாரபூர்வ ரெக்கார்டு. ஆனால், உண்மையான எண்ணிக்கை இதைவிட அதிகம். இருப்பினும் அதற்கான தண்டனையை இவர் அனுபவிக்கவில்லை. அதற்கு முன்பே கடந்த 2006-ல் தனது 91-வது வயதில் மாரடைப்பால் காலமானார்.

மேலும் இங்கே தொடர்க...
விடுதலைப்புலிகளின் அவசர முடிவு: கருணாநிதி வேதனை



சென்னை, நவ.18-2009: "விடுதலைப்புலிகள் அவசரப்பட்டு எடுத்த முடிவின் விளைவுகளை எண்ணிப்பார்த்து நாம் மவுனமாக அழுவது யார் காதிலே விழப்போகிறது?'' என்று முதல்-அமைச்சர் கருணாநிதி வேதனையுடன் கூறியுள்ளார்.

முதல்-அமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஈழத் தந்தை செல்வாவின் குரலோடு இணைந்து 1956 முதல்; தி.மு.க. தென்னிந்தியாவில் இலங்கை பிரச்சினைக்காக எழுப்பிய குரலும் - இலங்கையில் ஜனநாயகம் மலர வேண்டும் என்பதற்காக எடுத்து வைத்த வாதங்களும் - நடத்திய அறப்போராட்டங்களும் - சிறைகளை நிரப்பிய தியாகச் செயல்களும் - சட்டமன்ற உறுப்பினர் பதவிகளைத் தூக்கி எறிந்த நிலைகளும் - ஏன்; இருமுறை ஆட்சியையே இழந்த சரித்திரச் சம்பவங்களும் -
தி.மு.கழகத்தின் சார்பில் நிதியாக தமிழர்களிடமிருந்து சேர்த்துக் கொடுத்த மாசறு காசுகள்; செல்லாக் காசுகளாக மாறிய நிகழ்ச்சியும் -

"டெசோ'' இயக்கத்தின் சார்பில் - நானும், தமிழர் தலைவர் வீரமணியும், பழ.நெடுமாறன், அய்யணன் அம்பலம் ஆகியோரும் முன்னின்று மாவட்டந்தோறும் நடத்திய பேரணிகளைத் தொடர்ந்து; 4-5-1986 அன்று மதுரையில் ஈழத் தமிழர் ஆதரவு மாநாட்டுக்கு டி.யு.எல்.எப். சார்பாக அமிர்தலிங்கம், புரோடெக் சார்பாக சந்திரகாசன், ஈராஸ் சார்பாக ரத்தினசபாபதி, டி.இ.எல்.எப். சார்பாக ஈழவேந்தன், ஈ.பி.ஆர்.எல்.எப். சார்பாக வரதராஜப்பெருமாள், பிளாட் சார்பாக வாசுதேவன் ஆகியோர் கலந்து கொண்டனர் என்பதும்,

அந்த மாநாட்டில் அகில இந்திய ரீதியில் என்.டி.ராமராவ், வாஜ்பாய், பகுகுணா, ராம்வாலியா, உபேந்திரா, உன்னிகிருஷ்ணன், சுப்பிரமணிய சாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர் என்பதும்,
அந்த மாநாட்டிற்கு பல்வேறு போராளிக் குழுக்களின் தலைவர்கள் எல்லாம் வந்து கலந்து கொண்டு போராளிகளிடையே அடிக்கடி எழும் புயல் குறித்து விவாதித்து; அதனை நிறுத்த சகோதர ஒற்றுமை வேண்டுமென்று வலியுறுத்தினார்கள் என்பதும்,
ஆனால் அந்த மாநாட்டிற்கு எல்.டி.டி.ஈ. சார்பாக திலகர் என்பவர் தான் வந்திருந்தாரே தவிர, பிரபாகரன் வரவில்லை என்பதும்;

அரசு பொறுப்பில் முதல்-அமைச்சராக இருந்து கொண்டே, அமைதிப்படை இந்தியாவிற்கு திரும்பி வந்ததை வரவேற்க செல்லாமல் புறக்கணித்து, தமிழ்நாட்டின் உணர்வை நான் வெளிப்படுத்திய நிகழ்வும் - இலங்கையில் நடந்த விடுதலை போராட்டத்திற்கு நமது தாய் மண்ணிலிருந்து நீட்டப்பட்ட ஆதரவுக் கரம் என்பதை நடுநிலையாளர்கள் யாரும் மறந்துவிட முடியாது.
ஆனால் விடுதலைப் படைமுகத்திலே நின்ற ஒருசில தளகர்த்தர்களுக்கு - தளபதிகளுக்கு - தலைவர்களுக்கு நாமே வலுவில் சென்று வழங்கிய ஆதரவு; மிக லேசாகவே தெரிந்தது. நாம் எடுத்து வைத்த கருத்துகள் அலட்சியப்படுத்தக் கூடியவைகளாக ஆகிவிட்டன. வீரத்தைப் பயன் படுத்திய அளவுக்கு; இதுபோன்ற போர்முனைகளில் விவேகத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று நாம் தொடர்ந்து வலியுறுத்தியதை என்ன காரணத்தாலோ அலட்சியப்படுத்திவிட்டார்கள்.

எல்லாம் முடிந்து மேலும் முடிவுறுமோ; என்ற துயர நேரத்திலே ஜனநாயக ரீதியாகக் கடைப்பிடிக்க வேண்டிய ஒரு வாய்ப்பு வாசற்படி வரையிலே வந்தபோது கூட, அதை எட்டி உதைத்து விட்ட தவறான காரியம் நடைபெற்றதையும் - நடைபெற்றதற்கான காரணத்தையும் - நான் அல்ல; என்னைப் போன்றவர்கள் அல்ல; இதோ மவுன வலி உணர்ந்து, அதனை நமக்கு உரைக்கும் அருமை நண்பர்களாம், தமிழ் எழுத்தாளர்களில் தலைநிமிர்ந்து நிற்கும் தன்மானத் தோழர், கோபாலுக்கு; அண்மையில் சென்னைக்கு வந்த இலங்கை ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும், இன்றைய இலங்கை எதிர்க்கட்சி தலைவரும், இலங்கையின் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்கே 18-11-2009 தேதியிட்ட நக்கீரன் வார இதழுக்காக அளித்த பேட்டியில்,

"இந்தப் போரின் விளைவுகளுக்கு ஒரு வகையில் பிரபாகரனும் காரணம். தமிழர்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வுகாண வேண்டி முயற்சி நடந்தபோதெல்லாம் அதனை தவிர்த்தார் பிரபாகரன். 2003-ல் நடந்த அமைதி பேச்சுவார்த்தையிலிருந்து தானாகவே வெளியேறினார். 2005-ல் டோ க்கியோவில் நடந்த பேச்சுவார்த்தையிலும் தமிழர்களின் கோரிக்கைகள் என்னவென்பதை தெரிவிக்காமலே இழுத்தடித்தார். இறுதியில் அதில் கலந்து கொள்வதை தவிர்த்தார். மேலும் 2005-ல் நடந்த அதிபர் தேர்தலில் தமிழர்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல்; பிரபாகரன் தமிழ் மக்கள் தேர்தலைப் புறக்கணிக்கச் செய்தார். அதே நேரம் அவர்கள் தேர்தலில் தங்கள் பங்களிப்பை செய்திருந்தால் தமிழர்களின் மனநிலை என்னவென்பதை அறிந்து கொள்ள முடிந்திருக்கும். அந்த ஜனநாயக வாய்ப்பை தமிழ் மக்களுக்குத் தர பிரபாகரன் தவறி விட்டார்.''

என்று ரணில் கூறியிருப்பதைக் கூர்ந்து கவனித்தால் விடுதலைப்புலிகள் போர்த் தந்திரத்தை எதிர்காலக் கணிப்போடு கடைப்பிடிக்காதது தான் காரணம் என்பதை புரிந்து கொள்ள முடியும்.
விளைந்த நிலைமையை எண்ணிப்பார்ப்பதற்கு இந்த விடுதலைப் போரின் பின் விளைவுகளுக்கு; சகோதர யுத்தத்தின் காரணமாக; மாவீரன் மாத்தையாவிற்கு விடுதலைப்புலிகள் இயக்கமே மரண தண்டனை விதித்து அதை நிறைவேற்றியும்;
டெலோ சிறீ சபாரத்தினத்தை சவமாக ஆக்கியும்;
பத்மநாபாவையும், அவரோடு இணைந்து பத்து போராளிகளையும் கொன்று குவித்தும்;
தொடக்க காலத்திலிருந்து போராளிகளின் துணைவராக விளங்கிய அமிர்தலிங்கத்தையும், யோகேஸ்வரனையும் இந்த நிகழ்ச்சிகளில் உச்சகட்டமாக பலியாக்கியும்;
ரெலோ இயக்கத்தைச் சேர்ந்த மனோமாஸ்டர் என்ற பஞ்சலிங்கத்தையும், அந்த இயக்கத்தின் தலைவர் குலசேகரம் தேவசேகரத்தையும், தலைசிறந்த அரசியல் அறிஞர் நீலன் திருச்செல்வத்தையும், சுந்தரம் எனப்பட்ட சிவசண்முகமூர்த்தியையும், ஜார்ஜ், சபாலிங்கம், சாம்தம்பிமுத்து, கலாதம்பிமுத்து மற்றும் பிளாட் இயக்கத்தைச் சேர்ந்த யோதீஸ்வரனையும், வாசுதேவாவையும், மரணக் குழியிலே தள்ளியும்;
தங்கள் துணைகளை தாங்களே திட்டமிட்டு, தொலைத்து விட்ட காரியங்களாக அமைந்தன என்பதை இந்தப் போர்முனை சரித்திரம் இன்னமும் சொல்லிப் புலம்பிக் கொண்டு தானிருக்கிறது.

நான் யார் மீதும் குற்றம், குறை சொல்வதற்காக இதையெல்லாம் எழுதவில்லை. இலங்கையில் 2004-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் முடிந்து புதிய அரசு அமைந்த ஒரு சில நாட்களுக்குள் - 9-4-2004 அன்று கிழக்கு இலங்கையிலே சகோதர யுத்தம் - பிரபாகரன், கருணா படைகளிடையே ஏற்பட்டு அதிலே 20 போராளிகளும், 2 சிவிலியன்களும் கொல்லப்பட்டார்கள்.
இப்படி சகோதர யுத்தம் காரணமாக - நம்மை நாமே கொன்று குவித்துக்கொண்டது மாத்திரமல்ல - முறையாக திட்டமிட்டு நடவடிக்கை மேற்கொள்ளத் தவறிய காரணத்தால் - நம்முடைய பலத்தையும், மாற்றார் பலத்தையும் துல்லியமாக கணிக்காத காரணத்தால் - நம்முடைய தமிழ் மக்கள் எத்தனை பேர் மாற்றாரின் தாக்குதலுக்கு உள்ளாகி தங்கள் உயிரை இழக்க நேரிட்டது. இளம் சிறார்கள் எத்தனை பேர் தங்கள் பிஞ்சு வயதிலேயே வெந்து மாண்டனர்? அவர்களை இழந்த அவர்களுடைய பெற்றோர் எத்தனை வேதனைப்பட்டிருப்பார்கள்? எத்தனை பேர் தங்கள் சொத்து சுகங்களை இழந்து நாடு விட்டு நாட்டிற்கு பஞ்சைகளாக, பராரிகளாகச் செல்ல நேரிட்டது? தங்கள் வாழ்க்கையைத் தொடர அவர்கள் எங்கெங்கு அலைந்து திரிய வேண்டியதாயிற்று? எத்தனை பேர் அகதிகள் முகாம்களில் ஆண்டுக்கணக்கில் வாட நேர்ந்தது? இதற்கெல்லாம் காரணம் என்ன? ஏன் பிரபாகரனின் மனைவி, மக்கள் குடும்பத்தாரின் கதி தான் என்ன? இப்படி எத்தனை குடும்பங்கள்? இன்னும் பல ஆண்டுகள் அனைவரும் அமைதியோடு வாழ்ந்து - தமிழர்களின் உயர்வுக்காகப் பாடுபட வேண்டியவர்கள் - தங்கள் உயிரை அற்ப ஆயுளில் முடித்துக் கொண்டு போய் விட்டார்களே என்ற ஆதங்கத்தில் தான் இதனை நான் எழுத நேரிட்டது. வாழ வேண்டிய ஆயிரக்கணக்கான இளந்தளிர்கள் வாடி வதங்கி விட்டார்களே என்ற வேதனையில் இதனை எழுதுகின்றேன்.

என்னையும், மாறனையும் 15-3-1989 அன்று; அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி டெல்லிக்கு அழைத்து - விடுதலைப்புலிகள் இயக்கத்தைப் பற்றியும், ஈழப் பிரச்சினை குறித்தும் இரண்டு நாள் உரையாடி - அதுபற்றிய விவரங்களை சுமார் இரண்டு அல்லது மூன்று மணி நேரம் தமிழ்நாடு மாளிகையில் வெளியுறவுத்துறை இணை மந்திரி நட்வர்சிங் மூலமாக எங்களுக்கு தெரிவித்து - நீங்களும், மாறனும், வைகோவும் தேவைப்பட்டால் இலங்கை சென்று கொழும்பிலோ அல்லது உங்களுக்கு விருப்பமான இடத்திலோ முகாமிட்டு - பிரபாகரனுடன் இந்த பிரச்சினை குறித்து விரிவாகப் பேசுங்கள், எத்தனை நாள் வேண்டுமானாலும் அதற்காக நேரம் ஒதுக்கிக் கொள்ளுங்கள், இலங்கையில் நீங்கள் அவர்களைச் சந்திக்கவோ அல்லது அவர்கள் நீங்கள் தங்கியிருக்கும் இடத்திற்கு வந்து சந்திக்கவோ தேவையான ஏற்பாடுகளை நான் இங்கிருந்து செய்து தருகிறேன், அதிகபட்சம் அவர்களது கோரிக்கை என்ன என்பதை விவரமாகத் தெரிந்து கொள்ளுங்கள், இலங்கையில் தமிழ் மக்களின் உரிமைகளை நிறைவேற்ற நான் தயாராக இருக்கிறேன் - என்றெல்லாம் எங்களுக்கு சொல்லி உறுதியளித்த அந்த இளந்தலைவர் ராஜீவ் காந்தி இந்திய மண்ணில் அதுவும் தமிழ் மண்ணிலேயே கொலையுண்டார் என்பது ஒரு மாபெரும் சோகச் சம்பவம். அந்த சம்பவமும் ஈழ விடுதலைப் போராட்டத் தீயில் தண்ணீர் விட்டு அணைத்தது போல் ஆயிற்று என்பதை உலகம் மறந்து விடவில்லை.

இதோ ஒரு நிகழ்ச்சி. 17-11-2005 அன்று இலங்கை அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றது. 13 பேர் போட்டியிட்டனர். அந்த தேர்தலில் அப்போது பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சேவும், அவரை எதிர்த்து முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவும் முக்கியமாக போட்டியிட்டார்கள். அந்த தேர்தலை சிறுபான்மையினரான தமிழர்கள் புறக்கணிக்க வேண்டுமென்று விடுதலைப்புலிகள் அறிவுறுத்தினர். அந்த தேர்தலின்போது, தான் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால், விடுதலைப்புலிகளுடன் அமைதிப் பேச்சைத் தொடருவதற்கு முன்னுரிமை அளிப்பேன் என்றார் ரணில். அப்போது ரணில் சொன்னதைத் தான் இப்போதும் நக்கீரன் இதழுக்கு அளித்த பேட்டியிலும், "2005-ல் நடந்த அதிபர் தேர்தலில் தமிழர்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் பிரபாகரன் தமிழ் மக்கள் தேர்தலைப் புறக்கணிக்கச் செய்தார். அதே நேரம் அவர்கள் தேர்தலில் தங்கள் பங்களிப்பை செய்திருந்தால் தமிழர்களின் மனநிலை என்னவென்பதை அறிந்து கொள்ள முடிந்திருக்கும். அந்த ஜனநாயக வாய்ப்பை தமிழ் மக்களுக்குத் தர பிரபாகரன் தவறி விட்டார்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

2005-ம் ஆண்டு நடைபெற்ற அந்த தேர்தலில், இலங்கையின் ஐந்தாவது அதிபராக, பிரதமராக இருந்த ராஜபக்சே வெற்றி பெற்றார். ராஜபக்சேவுக்கு 48,87,152 (50.29 சதவிகிதம்) வாக்குகளும், ரணிலுக்கு 47,06,366 (48.43 சதவிகிதம்) வாக்குகளும் கிடைத்தன. சுமார் 1 லட்சத்து 81 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ரணில் தோல்வி அடைந்தார். ஏறத்தாழ ஏழு லட்சம் தமிழ் வாக்காளர்கள் தேர்தலைப் புறக்கணித்த காரணத்தால், அவர்கள் வாக்களிக்கவே இல்லை என்பதை எண்ணிப் பார்க்கும்போது - விடுதலைப்புலிகள் சார்பாக அவசரப்பட்டு அன்று எடுக்கப்பட்ட அரசியல் முடிவின் விளைவுகள் எப்படி ஆயின; எங்கே போய் முடிந்தன; என்பதை எண்ணிப் பார்த்து நாம் மவுனமாக அழுவது யார் காதிலே விழப் போகிறது? நம்முடைய மவுன வலி தான் யாருக்குத் தெரியப் போகிறது?
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...
வன்னி சென்று திரும்பிய த.தே.கூ.உறுப்பினர்கள் பசில் ராஜபக்ஷவுடன் சந்திப்பு




வன்னிப் பிரதேசத்திலுள்ள இடைத்தங்கல் முகாம்களுக்கும், இடம்பெயர் மக்கள் மீள் குடியேற்றப்பட்டுள்ள பிரதேசங்களுக்கும் திங்கட்கிழமை விஜயம் செய்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவுக்கும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷவுக்குமிடையில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் வன்னி விஜயம் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் கூடி ஆராய்ந்தனர்.

குறிப்பாக மக்கள் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதியின் ஆலோசகர் பசில் ராஜபக்ஷவைச் சந்தித்து அவரது கவனத்திற்கு கொண்டு வருவது என எடுத்த தீர்மானத்தின் பேரில் நேற்று மாலை நாடாளுமன்ற கட்டிடத்தொகுதியில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

நாடாளுமன்ற உறுப்பினர்களான என்.ஸ்ரீகாந்தா, செல்வம் அடைக்கலநாதன், வினோ நோகதாரலிங்கம், டாக்டர் தோமஸ் வில்லியம் தங்கத்துரை, பா.அரியநேத்திரன் ஆகியோர் இச்சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் கலந்து கொண்டனர்.

குறிப்பாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களைப் பொறுத்த வரை விரைவான மீள் குடியேற்றத்தை வலியுறுத்துவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் எடுத்துக் கூறினர்.

இடைத்தங்கல் முகாம்களில் தொடர்ந்தும் பாதுகாப்பு தரப்பினரால் விசாரணைக்கு என ஆட்கள் அழைத்துச் செல்லப்படுவதாகவும் அவர்களில் பலரைப் பற்றிய தகவல்களை அறிய முடியாமல் உறவினர்கள் தவிப்பது குறித்தும் விளக்கினர்.

ஏற்கனவே இடம்பெயர்வின் போது, விடுதலைப் புலி உறுப்பினர்கள் என சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு புனர்வாழ்வு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள உறவினர்கள் 4,5 மாதங்கள் கடந்து விட்ட நிலையிலும் இதுவரை பர்வையிட அனுமதி மறுப்பு குறித்தும் இச்சந்திப்பின் போது ஜனாதிபதி ஆலோசகரின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

இந்த விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்ட போது நீதி, சட்ட மறுசீரமைப்பு அமைச்சர் மிலிந்த மொரகொடவும் அங்கு சமூகமளித்திருந்தார் எனவும் அவர் குறிப்பிட்டார்.

முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களைப் பார்வையிட இடைத் தங்கல் முகாம்களில் தங்கியுள்ள உறவினர்களுக்கு ஏற்பாடு செய்து கொடுக்கப்படும் என அமைச்சர் மிலிந்த மொரகொட உத்தரவாதம் தந்ததாகவும் பா.அரியநேத்திரன் மேலும் தெரிவித்தார்
மேலும் இங்கே தொடர்க...
மற்றுமொரு அகதிகள் படகு ஆஸி. படையினரால் மீட்பு


41 அகதிகளுடன் வந்த படகு ஒன்றை ஆஸ்திரேலியக் கடற்படையினர் வடக்கு ஆஸி. அருகே அஷ்மோர் தீவு அருகே மடக்கித் தடுத்து நிறுத்தியுள்ளனர். அனேகமாக இவர்களும் இலங்கையைச் சேர்ந்தவர்களாகவே இருக்கக் கூடும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவை நோக்கி வந்துள்ள 43ஆவது அகதிகள் படகு இது என்பது குறிப்பிடத்தக்கது.

கண்காணிப்பு விமானம் மூலம் இந்த படகு வருவது தெரிய வந்தது. இதையடுத்து கடற்படையினர் விரைந்து சென்று தடுத்து நிறுத்தினர்.

அஷ்மோர் தீவுகளிலிருந்து 90 கடல் மைல் தொலைவில் இந்தப் படகு தடுத்து நிறுத்தப்பட்டது.

படகில் 41 பயணிகளும், 2 ஊழியர்களும் இருப்பதாக ஆஸ்திரேலியா உள்துறை அமைச்சர் பிரன்டன் ஓ கானர் தெரிவித்துள்ளார்.

இவர்களைக் கிறிஸ்துமஸ் தீவுக்கு அழைத்துச் சென்று அங்கு உடல் நலப் பரிசோதனை, பாதுகாப்பு சோதனை, அடையாளச் சோதனை என்பன மேற்கொள்ளப்படவுள்ளன.

இவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவில்லை என்றும் அனேகமாக இவர்களும் இலங்கையைச் சேர்ந்தவர்களாகத்தான் இருக்கக் கூடும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...
தமிழ்க் கைதிகள் தாக்கப்பட்டமை குறித்த அறிக்கை இன்று சமர்ப்பிப்பு : புத்திர சிகாமணி


"தமிழ்க் கைதிகள் தாக்கப்பட்டமை குறித்த அறிக்கைகள் இன்று கிடைக்கப்பெறும். இதற்கென புதிதாக பத்து சிரேஷ்ட அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அறிக்கைகள் கிடைக்கப்பெற்றதும், பாதிக்கப்பட்ட தமிழ்க் கைதிகள் தொடர்பில் காத்திரமான நடவடிக்கை எடுக்கப்படும்" என நீதி,சட்ட மறுசீரமைப்பு அமைச்சர் புத்திர சிகாமணி தெரிவித்தார்.

கொழும்பு மகசின் சிறைச்சாலை தமிழ் கைதிகள் தாக்கப்பட்டமை, அநுராதபுரம் சிறைச்சாலை தமிழ் கைதிகள் தாக்கப்பட்டமை, இது தொடர்பில் நேற்று மனோ கணேசன் தலைமையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் என்பன குறித்து நீதி, மறுசீரமைப்பு அமைச்சர் புத்திர சிகாமணி மேற்படி எமது இணையத்தளத்திற்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு கூறினார்.

அதேவேளை, இவ்வாறான சம்பவங்கள் காரணமாக இதுவரை, நாடளாவிய ரீதியில் 631 தமிழ்க் கைதிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர்கள் அனைவருக்கும் அதிவிரைவில் தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும் என்றும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

எனினும் தாக்கப்பட்டவர் சார்பிலோ அல்லது பாதிக்கப்பட்டவர் சார்பிலோ இதுவரை எழுத்து வடிவில் வாக்குமூலங்கள் எதுவும் பெறப்படவில்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்
மேலும் இங்கே தொடர்க...
யாழிலிருந்து கொழும்பு செல்ல பாதுகாப்புப் பயண அனுமதி தேவையில்லை:யாழ்.அரச அதிபர்


யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு செல்வதற்கான பாதுகாப்புப் பயண அனுமதி (கிளியரன்ஸ்) இன்று முதல் தேவையில்லையென யாழ்.அரச அதிபர் கே.கணேஷ் அறிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு செல்வதற்காக இதுவரை காலமும் நடைமுறையிலிருந்த பாதுகாப்புப்பயண அனுமதி (கிளியரன்ஸ்) இன்று புதன்கிழமை முதல் நீக்கப்பட்டுள்ளதென, வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி தெரிவித்ததாக யாழ்.அரச அதிபர் கே.கணேஷ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து யாழ்.அரச அதிபர் அனுப்பிய செய்திக் குறிப்பில்,

"இதுவரை காலமும் நடைமுறையிலிருந்த 'கிளியரன்ஸ்' நடைமுறை இன்று புதன்கிழமை முதல் நீக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு செல்வோர் தமது அடையாள அட்டையின் மூன்று போட்டோப் பிரதியினை காண்பித்துக் கொழும்பு செல்ல முடியும்.

மேலும் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு செல்லும் பாரவூர்திகள் நாவற்குழி அரச களஞ்சிய சாலையில் அனுமதியினைப் பெற்று வாகனத் தொடர் அணியுடன் கொழும்பு செல்ல முடியும்" என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
மேலும் இங்கே தொடர்க...
2005 தேர்தல் பகிஷ்கரிப்பு விடுதலைப்புலிகளின் அவசர முடிவு-தமிழக முதல்வர் கருணாநிதி

இலங்கையில் 2005ஆம் ஆண்டில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலை பகிஷ்கரிக்குமாறு தமிழீழ விடுதலைப்புலிகள் தமிழ் மக்களை கேட்டுக் கொண்டமை ஒரு அவசர முடிவாகும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இதன் விளைவு, விடுதலைப் புலிகளுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்துவதாக உறுதியளித்திருந்த ரணில் விக்கிரமசிங்கவை மஹிந்த ராஜபக்ஷ தோற்கடிக்க உதவியது என்று தெரிவித்த கருணாநிதி, அதிலிருந்து பேச்சுவார்த்தை முடக்கப்பட்டு விட்டது என்றும் கூறியுள்ளார்.

பகிஷ்கரிப்பு கோரிக்கையை அடுத்து 7 லட்சம் தமிழர்கள் முற்றாக வாக்களிக்காத நிலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ரணில், விக்கிரமசிங்கவை 1 லட்சத்து 81 ஆயிரம் வாக்குளால் வெற்றி பெற்றார். அன்றைய அவசர முடிவின் இன்றைய விளைவு என்ன? இன்று இலங்கை இராணுவத்தினால் விடுதலைப்புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்டு இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதையும் சுட்டிக்காட்டுவது போல் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்துடன், தந்தை செல்வாவின் குரலோடு இணைந்து இலங்கை பிரச்சினைக்காக தி.மு.க. நடத்திய அறப்போராட்டங்களும், எடுத்த வாதப்போராட்டங்களும், சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை தூக்கி எறிந்த நிலைகளையும், இருமுறை ஆட்சியை இழந்த சரித்திர சம்பவங்களையும் தனது அறிக்கையில் நினைவூட்டியுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...
தலைவர் சித்தார்த்தன் சுவிற்சர்லாந்து விஜயம்!




http://www.montagelanka.com/wp-content/uploads/2009/03/montage-march-final-2009-22.jpg


தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் தலைவர் தர்மலிங்கம்
சித்தார்த்தன் ஜரோப்பியநாடொன்றில் இடம்பெறும் கருத்தரங்கில்
கலந்து
கொள்வதற்காக பயணமாகியுள்ளார்.பிரித்தானிய தமிழ்
தகவல்
மைய்யத்தின் ஏற்பாட்டில் சுவிற்சர்லாந்தில் நடைபெறும்கருத்தரங்கில்
கலந்து கொள்வதற்காக தலைவர் சித்தார்த்தன் ஜரோப்பா
பயணமாகியுள்ளார்.இலங்
கையின் எதிர்கால நலன்களில் எவ்வாறு தமிழ்கட்சிகள் இணைந்து
செயலாற்ற முடியும்என்பதுதொடர்பாக இடம்பெறவள்ள கருத்தரங்கில்
கலந்துகொள்வதற்காக சுவிற்சர்லாந்து
சென்றுள்ள தலைவர், கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்களையும்
சந்தித்து கட்சியின்எதிர்காலவேலைத்திட்டங்கள் குறித்தும்
முன்னெடுக்கப்படவேண்டிய புனர்வாழ்வு திட்டங்கள்
குறித்தும் பேச்சு நடாத்துவார் என்றும் தெரியவருகின்றது.
மேலும் இங்கே தொடர்க...
வெற்றிக்கு அரசியல் தலைமை காரணம்: இலங்கை ஜெகத் ஜெயசூர்யா கருத்து

Top global news update


கொழும்பு:"அரசியல் தலைமையின் சிறப்பான வழிகாட்டுதலால் தான், விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் வெற்றி கிடைத்தது'என, இலங்கை ராணுவ தளபதி ஜெகத்ஜெயசூர்யா கூறியுள்ளார்.இலங்கை ராணுவ தளபதி ஜெகத் ஜெயசூர்யா கூறியதாவது: விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில், ராணுவத்துக்கு கிடைத்த வெற்றிக்கு யார்காரணம் என்பது குறித்து பரபரப்பாக பேசப்படுகிறது. என்னைப் பொறுத்தவரை, அரசியல்தலைமையின் சிறப்பான வழிகாட்டுதலால் தான், ராணுவத்துக்கு இந்த மிகப் பெரியவெற்றி கிடைத்தது என, கூறுவேன்.


ராணுவத்தில் இருந்து கொண்டே, அரசியலில் ஈடுபடுவதற்கு ஒருபோதும் அனுமதிக்க முடியாது. ராணுவத்தினர், தற்போதுள்ள நிர்வாகத்துக்கு விசுவாசமாக செயல்பட வேண்டும். ராணுவ வீரர்களின் சம்பள உயர்வு குறித்து அரசுபரிசீலித்து வருகிறது. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும்.இவ்வாறு ஜெகத் ஜெயசூர்யாகூறினார்.புலிகளுக்கு எதிரான போரில் கிடைத்த வெற்றிக்கு சொந்தம் கொண்டாடுவதில், அதிபர் ராஜபக்ஷேவுக்கும், முன்னாள் ராணுவத் தளதிபதி சரத் பொன்சேகாவுக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாட்டை தான், மறைமுகமாக தனது பேச்சில் ஜெயசூர்யா குறிப்பிட்டுள்ளதாக, இலங்கை அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும் இங்கே தொடர்க...

யங்கரவாத தடுப்பு, அவசரகால சட்டம்: 630 கைதிகளில் 46 பேர் விடுதலை

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் மற்றும் அவசரகால சட்டம் என்ப வற்றின் கீழ் கைதான 630 கைதிகள் பல்வேறு சிறைகளிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சட்ட மா அதிபரின் ஆலோசனைப் படி 46 கைதிகள் விடுதலை செய்யப் பட்டுள்ளனர்.

ஏனைய கைதிகள் தொடர்பில் நீதி மறுசீரமைப்பு அமை ச்சரினூடாக சட்ட மா அதிபரின் ஆலோசனையை கோரியுள்ளோம் என சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் வீ. ஆர். த சில்வா தெரிவித்தார்.

தகவல் ஊடகத்துறை அமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடகவியலா ளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

கடந்த சனிக்கிழமை மெகசின் சிறையிலுள்ள கைதிகள் சிலர் உண் ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட் டனர். அவர்களை சந்தித்து அவர்க ளது பிரச்சினைகள் குறித்து பேச்சு நடத்தினர்.

தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குமாறும் விடுதலை செய்யுமா றும் கோரினர். ஆனால் நீதிமன்றம் செய்யக்கூடிய விடயங்களை செய்ய என க்கு அதிகாரம் கிடையாது என்றார்.


மேலும் இங்கே தொடர்க...

சு.க. மாநாட்டில் மக்களின் வேண்டுகோள்:

மக்கள் பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்தியே ஜனாதிபதி இறுதி முடிவு

ஜனாதிபதித் தேர்தலையே முதலில் நடத்த வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வருடாந்த மாநாட்டில் மக்கள் ஏகமனதாக கோரிக்கை விடுத்தனர்.

அவர்களின் வேண்டுகோள் குறித்து மக்கள் பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்தி ஜனாதிபதி இறுதி முடிவை எடுப்பார் என ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா தெரிவித்தார்.

தகவல் ஊடகத்துறை அமைச்சில் நேற்று (17) நடைபெற்ற ஊடகவி யலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது:-

மக்களுக்கு உரிய கெளரவத்தை வழங்கும் வகையிலேயே அடுத்தது எந்தத் தேர்தலை நடத்த வேண்டும் என பொதுமக்களிடம் ஜனாதிபதி கேள்வி எழுப்பினார்.

இதனூடாக புதிய ஜனநாயக வழிமுறை ஒன்றை ஜனாதிபதி நாட்டுக்கு அறிமுகப் படுத்தியுள்ளார். பாராளுமன்றத் தேர்தல் அடுத்த வருட முதற்பகுதியில் நடத்தப்பட உள்ளது.

ஜனாதிபதி விரும்பினால் ஜனாதிபதித் தேர்தலை 2 வருடங்களுக்கு முன் நடத்த முடியும். நவம்பர் 19 ஆம் திகதியின் பின் எந்த நிமிடத்திலும் ஜனாதிபதித் தேர்தலை நடத்தலாம். இந்த மாநாட்டில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்டனர்.


மேலும் இங்கே தொடர்க...