11 செப்டம்பர், 2009

தடுத்து வைத்துள்ள பணியாளர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் : ஐ.நா. கோரிக்கை

கைது செய்யப்பட்டுள்ள தமது நிறுவன பணியாளர்கள் விடுதலை செய்யப்படவேண்டும் அல்லது அவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படவேண்டுமென ஐக்கிய நாடுகள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
ஐக்கிய நாடுகள் அமைப்பைச் சேர்ந்த இரண்டு உள்நாட்டு பணியாளர்களைப்பாதுகாப்புப் படையினர் கைது செய்து, தடுத்து வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. தமது நிறுவனத்திற்கு அறிவிக்காமலேயே குறித்த பணியாளர்கள் கைதுசெய்யப்பட்டதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.சார்ள்ஸ்ரவீந்திரன் நவரட்ணம் (45), கந்தசாமி சுந்தரராஜன் (35) ஆகிய ஐக்கிய நாடுகள்அமைப்பு பணியாளர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்டவிரோதமான முறையில் குறித்த இருவரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகஐக்கிய நாடுகளின் பேச்சாளர் மரி ஒகபே தெரிவித்துள்ளார்.கைது செய்யப்பட்டுத்தடுத்து வைக்கப்பட்டுள்ள பணியாளர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல்செய்யப்பட வேண்டும், அல்லது அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கைஎடுக்கப்பட வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.குற்றச்சாட்டுக்கள்எதுவும் முன்வைக்காது தடுத்து வைத்திருக்கும் நடவடிக்கையானது சர்வதேசசட்டங்களுக்குப் புறம்பானதெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...
மட்டக்களப்பின் மேற்கு எல்லையில் சட்டவிரோத குடியேற்றங்கள் இடம்பெறுவதாக மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெத்தினம் குற்றச்சாட்டு

மட்டக்களப்பு மாவட்ட மேற்குப்புற எல்லையில் வெளி மாவட்டத்தவர்களின்சட்டவிரோத குடியேற்றங்கள் இடம்பெறுவதாக கிழக்கு மாகாணசபைஉறுப்பினர் இரா.துரைரத்தினம் குற்றம் சுமத்தியுள்ளார். மட்டக்களப்பு - அம்பாறைமாவட்ட எல்லையிலுள்ள கெவிலியாமடு கிராமத்திலேயே இக்குடியேற்றம்இடம்பெறுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொக்கட்டிச்சோலை பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட இக்கிராமத்தில்ஏற்கனவே வசித்து வந்த குடியிருப்பாளர்களும் விவசாயிகளும் 1990ம் ஆண்டுதமது பாதுகாப்பின் நிமித்தம் வெளியேறியிருந்தனர்.
இவ்வாறு வெளியேறியவர்கள் மீள்குடியேற்றத்திற்கும், மீண்டும் விவசாயச்செய்கையில் ஈடுபடுவதற்கும் தயாராகி வரும்நிலையில் இந்த சட்டவிரோதக்குடியேற்றம் இடம்பெறுகின்றது. மட்டக்களப்பு மாவட்ட எல்லைக்குட்பட்டகாணியில் சுமார் 40 கொட்டில்கள் சட்டவிரோதமான முறையில் அத்துமீறிஅமைக்கப்பட்டுள்ளதை என்னால் அவதானிக்க முடிந்தது எனவும்இரா.துரைரெத்தினம் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...