18 ஜூன், 2011

வவுனியாவில் நலன்புரி, அகதி முகாம்களை மூட நடவடிக்கை

வவுனியாவிலுள்ள அகதிமுகாம்கள், நலன்புரி நிலையங்கள் அனைத்தும் விரைவில் மூடப்படவுள்ளதால் இந்த முகாம்களில் வசித்து வரும் குடும்பங்கள் அவர்களுடைய சொந்த விடயங்களில்லாத வேறு இடங்களில் மீள்குடியமர்த்தப்படவுள்ளனர்.

இதற்கான சகல ஒழுங்குகளையும் துரிதமாக மேற்கொண்டுவரும் அரசாங்கம் முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்புப் பிரதேசத்திலுள்ள கோப்பாவில் என்னும் இடத்தைத் தெரிவு செய்து 600 ஏக்கர் காணியை ஒதுக்கியுள்ளது.

நாட்டில் இடம்பெற்ற இறுதி யுத்தம் காரணமாக சொந்த வாழ்விடங்களை விட்டு இடம்பெயர்ந்து அடிப்படை வசதியின்றி முகாம்களில் வாழ்ந்து வரும் குடும்பங்களை மீள்குடியமர்த்துமாறு அழுத்தங்களையும் கொடுத்து வருகின்றது. இரு வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து முகாம்களில் மக்களை வைத்திருப்பது சர்வதேச மட்டத்தில் அரசாங்கத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தி வருகின்றது.

வன்னிப் பிரதேசத்தில் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகள் முழுமையாக அகற்றப்படாததினால் இடம்பெயர்ந்த மக்களை சொந்த இடங்களில் குடியமர்த்த முடியாத நிலை அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது. இதனால் முகாம்களில் எஞ்சியுள்ள மக்களை வேறு ஓர் இடத்தைத் தெரிவு செய்து அவர்களை அங்கு மீள்குடியமர்த்த அரசாங்கம் முன்வந்துள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்புப் பிரதேசத்திலுள்ள கோப்பாவில் என்னும் காட்டுப்பகுதியைத் தெரிவு செய்த அரசாங்கம் 600 ஏக்கரை இதற்கென ஒதுக்கியுள்ளது. தற்பொழுது இப்பிரதேசம் வேகமாக துப்புரவு செய்யப்பட்டு வருகின்றது.
மேலும் இங்கே தொடர்க...

கொலைக்களம்" ஆவணப்படம் உண்மையற்றது: ஜாலிய

இலங்கையின் கொலைக்களம் என்னும் ஆவணப்படம் உண்மைக்குப் புறம்பானது என அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் ஜாலிய விக்கிரமசூரிய தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சியில் கடந்த 14ஆம் திகதி இரவு ஒளி பரப்பப்பட்ட இந்த ஆவணப்படம் குறித்து சர்வதேச ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவித்துள்ள அவர்,

'இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான பரப்புரைகளை மேற்கொள்வதற்காக இந்த ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கத்தால் போர் அற்ற வலயமாக பிரகடனப்படுத்தப்பட்ட பிரதேசத்தில் அமைந்திருந்த வைத்தியசாலைகள் மற்றும் இடம்பெயர்ந்தோர் முகாம்களை இலக்குவைத்து படைத்தரப்பினரால் எறிகணைத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுவது எல்லாம் வெறும் பரப்புரைகள்.

எத்தகைய ஆதாரங்களும் இன்றி இத்தகைய குற்றச்சாட்டுக்கள் அரசாங்கத்தின் மீது சுமத்தப்படுகின்றன. இக்குற்றச்சாட்டுக்களை முன்வைப்பவர்கள் ஆதாரங்களுடன் முன்வைக்கவேண்டும். பயங்கரவாத இயக்கமான விடுதலைப் புலிகளால் மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தப்பட்ட மூன்று இலட்சம் மக்களை நாம் மனிதாபிமான அடிப்படையில் மீட்டுள்ளோம் என்பதே உண்மையாகும்.

இந்த மனிதாபிமான நடவடிக்கையின் போது நாம் ஆறாயிரம் படையினரை இழந்துள்ளோம். இலங்கையில் இத்தகைய போர் மீண்டும் ஏற்படக்கூடாது என்பதற்காக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உண்மைகளைக் கண்டறிவதற்கான நல்லிணக்க ஆணைக்குழுவை நியமித்துள்ளார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

வஞ்சனை எண்ணம் கொண்ட வஞ்சப்புலிகளின் அரக்கத்தனமாக சகோதரபடுகொலை




நடைபெற்ற காலம் நாம் அறிவோம் மதம் இனவேறுபாடு இன்றி அப்பாவி பொது மக்கள் புத்திமான்கள் அறிவுயீவிகள் இலங்கை இந்திய அரசியல் தலைவர்கள் சகோதர அமைப்புக்களின் தலைவர்கள் சிறீசபாரத்தினம் தோழர் பத்மநாபா தோழர் றொபேட் புலிகள் புரிந்த படுகொலைகளை எத்தனை எத்தனை எண்ணிக்கொண்டே போகலாம் பாசிசத்தில் தலைகளிலே அன்று ஆணவம் குடிகொண்டது அதனால் என்னவோ இந்த கொடுமையான கொலைகள் நமது மண்ணிலே இடம்பெற்றது புலிகளின் இந்த காட்டுமிராண்டி தனமான செயலுக்கு வெளிநாட்டு புலம்பெயர் வாழ் தமிழர்களும் கண்திறந்து ஆதரவு வழங்கினர் காரணம் தங்களின் வெளிநாட்டு சுகபோக வாழ்வு பறிபோய்விடுமென்று புலிகளை ஏவிவிட்டு கொலைகளை நாடாத்தி அதில் குளிர்காய்ந்து ரசித்து மகிழ்ந்தனர் ஈழத்தில் வாழும் மக்கள் மனங்களை நாங்கள் அறிவோம் புலிகள் அழிந்த நிலமையிலும் ஈழத்தில் இன்னல் பட்டு இடர்களை அனுபவித்து வாழும் அப்பாவி மக்களை அடகு வைத்து வாழும் புலம்பெயர் புலிப்பினாமிகள் தங்கள் எண்ணங்களை மாற்றிகொள்ளவேண்டுமென்பதே எங்களது ஆவல்
பழிவாங்கும் எண்ணம் நமக்கு இல்லை
பண்பான எண்ணமே நமக்கு உண்டு....
புலிகளின் பாசிச எண்ணத்திற்கு பலியான பொது மக்கள் சகதோழர்கள் போராளிகள் அனைவருக்கும் எங்களது இதய அஞ்சலிகளுடன் இக்கவிதை தனை அவர்களின் ஆத்மா சாந்தியடைய சமர்ப்பிக்கின்றோம்



நாபா எனும் மனிதநேயம் என்றென்றும் நம்முடனே!!!!!!!


நட்பு சக்திக்கு வலுசேர்த்த
நடுநிலை நாயகன்--எங்கள் தோழன் நாபா
நறுமணம் கொண்ட அரசியல் தந்து எங்களை
நடமாட வைத்தவர் எங்கள் தோழன் நாபா

நாணயமற்ற மனிதரையும் அணைத்து அவர்
நாணம் அடையசெய்தவர்--எங்கள் தோழன் நாபா
நப்பாசைகளை சுமந்த நெஞ்சங்களையும்
நல் நெஞ்சம் கொண்டு முத்தமிட்டவர் தோழன் நாபா

நல்லெண்ணம் தனை சுமந்து நமக்கு
நல் திசைகாட்டி கல்லாக--எங்கள் தோழன் நாபா
நலிவடைந்த நம் மக்களுக்காக அன்று
நச்சுப்பாம்புடனும் கைகோர்த்தவர் தோழன் நாபா

அதிகாரமின்றி நம்மிடையே அன்னியனிடம்
அகராதியொன்றை அகலமுனைந்தவர்--எங்கள் தோழன் நாபா
அகன்ற நல்மனதால் தோழையுடன் நம்மவரை
அகந்தையின்றி ஆழநினைத்தவர் தோழன் நாபா

அகமும் புறமும் அன்றும் என்றும்
அகிம்சைதனைபோதித்தவர் எங்கள் தோழன் நாபா
அக்கறை கொண்டு அப்பாவி மக்களை
அக்கரை சேர்க்க புறப்பட்டவர்தோழன் நாபா

அன்புக்கு அதிபதியாக என்றென்றும்
அகிலம் போற்ற வாழ்ந்து காட்டியவர் எங்கள் தோழன் நாபா
அங்கீகாரம் தனை வேண்டி மக்களுக்காக
அச்சமின்றி களம் புகுந்தவர்தோழர் நாபா

அவலம் நிறைந்த வாழ்வை அனுபவித்த நமக்காக
அகம்தனில் உதித்த ஆசைதனை துறந்தவர் எங்கள் தோழன் நாபா
அச்சங்கள் மீது பக்தி கொண்டவர் அல்ல--தோழன் நாபா
அகிம்சை மீது மோகம் கொண்டவர் தோழர் நாபா
அரக்கனையும் அன்பாய் அரணைக்கும்
அதிவாய்ந்த சக்தி தாங்கியவர் எங்கள் தோழர் நாபா

உண்மைகளை மறைத்து ஊமையாக
உலகவலம் வந்தவர் அல்ல எங்கள் தோழர் நாபா
உண்மைகளை உண்மையென்று
உலகிற்கு பறைசற்றியவர் தோழர் நாபா

உதிரக்கரத்தினால் உரிமைகளை வென்றெடுக்கமுடியாது
உடனிருந்தோர்க்கு உரிமையுடன் கூறியவர் எங்கள் தோழர் நாபா
உயிரோட்டமாக எங்கள் மனங்களில் என்றென்றும்
உவகையுடன் வாழ்பவர் ஒருவர் தோழர் நாபா

உத்தமனாக உண்மையாளனாக மக்கள் மனதில்
உலாவரும் தியாகசுடர் எங்கள் தோழர் நாபா
உச்சம் தலையில் முத்தமிட்டு எங்களை
உயிர்மெய் எழுத்தை உடனழிருந்து காட்டியவர் தோழர் நாபா

கடமை தனில் கண்ணியவாளன் தோழன் பத்மநாபா
கர்வமில் கனிமொழி தந்தவர் தோழன் பத்மநாபா
கர்மம் தனை கண்களில் சுமந்தவர் தோழன் பத்மநாபா
கர்ணன் போல் கொடை வள்ளல் தோழன் பத்மநாபா
கயவனையும் மன்னிக்கும் மனம் படைத்தவர் தோழன் பத்மநாபா
கசப்பு தன்மையில்லாத சகிப்பு தன்மை தந்தவர் தோழன் பத்மநாபா

அனைத்து தியாகிகளுக்கும் பொது மக்களுக்கும் எமது இதய அஞ்சலிகள்
நன்றியுடன் தோழமையுடன் தோழர்கள்......சுவிஸ்
மேலும் இங்கே தொடர்க...

600 முன்னாள் புலி உறுப்பினர்கள்.30 .06 .2011இல் சமூகத்தில் இணைப்பு







புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் 600 பேர் இம்மாதம் 30ம் திகதி சமூகமயப்படுத்தப்பட உள்ளதாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் ஏ. திசாநாயக்க தெரிவித்தார்.

இது வரையில் புனர்வாழ்வளிக்கப்பட்ட புலி உறுப்பினர்களை சமூகமயப்படுத்தும் போது அரசாங்கம் பிள்ளைகளுள்ள உறுப் பினர்களுக்கு முன்னுரிமை அளித்ததாகவும், இம்முறை விவாகமான உறுப் பினர்களுக்கு விசேட கவனம் செலுத்த உள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

30ம் திகதி விடுவிக்கப்பட உள்ளவர்களை தேர்ந்தெடுக்கும் பணி தற்போது பூர்த்தியடைந்துள்ளதாகவும், புனர்வாழ்வளிக்கப்படும் சகல புலி உறுப்பினர்களும் இவ்வாண்டின் இறுதிக்குள் சமூகமயப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் திசாநாயக்க மேலும் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

புலம்பெயர் புலிகளுக்கு உதவுபவர்களுக்கு எதிராக அணி திரளுங்கள் பாதுகாப்பு செயலாளர் மக்களிடம் வேண்டுகோள்




புலம்பெயர்ந்த புலிகளுக்கு உதவுபவர்களுக்கு எதிராக அணிதிரளுமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ சகல தேசப்பற்றுள்ள மக்களையும் கேட்டுக்கொண்டுள்ளார்.

நாடு பெற்றுக்கொண்டுள்ள வெற்றியைக் காட்டிக்கொடுத்து பயங்கரவாதம் தலைதூக்குவதற்கு உறுதுணை புரிவோருக்கு எதிராகவும், நாட்டை பாதுகாப்பதற்கும் மக்கள் மீண்டும் அணிதிரளவேண்டுமெனவும் அவர் நாட்டு மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

நாட்டின் இறைமையையும் மக்களையும் பாதுகாப்பதற்காக 30 வருட காலங்களுக்கு மேல் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட படையினரை மறந்து செயற்பட்டால் மீட்கப்பட்ட நாடு எம்மிடமிருந்து கைநழுவிப் போய்விடும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பயங்கரவாதிகள் எமது நாட்டைப் பிளவுபடுத்தி அதனை துண்டாட முயற் சிசெய்தனர். தற்போது சர்வதேசத்துக்கூடாக அதனை நிறைவேற்றிக்கொள்ள முயற்சி களை மேற்கொண்டுள்ளனர். பிரபாகரனுக்கு எதிராகப் போராடிய படையினருக்கு எதிரான வீடியோ கசட்டுக்களைத் தயாரித்து சர்வதேசத்திடம் முன்வைத்துள் ளனர். படையினரின் வெற்றி இதன்மூலம் மலினப்படுத்தப்பட்டுள்ளது எனவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற சிறுசம்பவமொன்று பொலிஸாருக்கு அறிவிக்கப்படாமல் நேரடியாக அமெரிக்கத் தூதரகத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் முதலாவதாக அமெரிக்கத் தூதரகத்திலேயே விசாரிக்கப்பட்டும் உள்ளது என்றும் தெரிவித்தார். கட்டுநாயக்காவில் இடம் பெற்ற சம்பவங்கள் நேரடியாக ஜேர்மன் தூதரகத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேசமெங்கும் எமதுநாடு அபகீர்த்திக்கு உள்ளாகும் வகையில் ஒரு தரப்பினர் செயற்படுகின்றனர் என்பது இதன்மூலம் தெளிவாகிறது எனவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

கைதுசெய்யப்பட்டுள்ள பயங்கரவாதிகள் பின்னர் கொல்லப்பட்டுள்ளதாக சனல்-4 வீடியோ காட்சிமூலம் கூறப்படுகிறது. எனினும், கிழக்கில் பெளத்த மத தேரர்கள் கொல்லப்பட்டதையோ, நிராயுதபாணியான 600 பொலி ஸாரைக் கொலை செய்ததையோ சாதாரண அப்பாவிப் பொதுமக்கள், குழந்தைகளைக் கொலை செய்ததையோ சனல்-4 காண்பிக்கவில்லை.

இராணுவத்தளபதி அண்மையில் நடத்திய மாநாட்டுக்கு அழைப்பு விடுக் கப்பட்டிருந்தும் மேற்குலக நாடுகள் அதனை நிராகரித்துவிட்டன.

அங்கு பயங்கரவாதத்தை ஒழித்த முறை மற்றும் சிக்கல்களுக்கு பதிலளிக்கவும் நாம் தயாராகவிருந்தோம். எனினும், எம்மை குற்றஞ்சாட்டுபவர்கள் அம்மாநாட்டுக்கு சமுகமகளிக்கவில்லை. அவர்கள் புலம்பெயர் எல்.ரீ.ரீ.ஈ.யினருக்கு உதவிசெய்பவர்கள்.

இவற்றுக்கு எதிராக மீண்டும் நாம் போராடவேண்டியுள்ளது எனவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.

நுகேகொட ஆனந்த சமரகோன் ஞாபகார்த்த மண்டபத்தில் நேற்று நடைபெற்ற படைவீரர்களின் நிகழ்வொன்றில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

தேர்தல் வன்முறையை காட்டிலும் தமிழ் மக்கள் மீதான இராணுவ அடக்குமுறையே அரங்கேறியது: மாவை

தேர்தல் வன்முறையைக் காட்டிலும் தமிழ் மக்கள் மீதான இராணுவ அடக்குமுறையே அளவெட்டியில் நடந்த சம்பவமாகும்.

இதற்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளதுடன் ஜனாதிபதி, தேர்தல் ஆணையாளர் ஆகியோருக்கு மகஜர் அனுப்பி வைத்துள்ளதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். யாழ்ப்பாணம் மாட்டின் வீதியில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்த மாநாட்டில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம். சுமத்திரன், சுரேஷ் பிரேமச்சந்திரன், எஸ். சிறிதரன், ஈ. சரவணபவன் ஆகியோர் கலந்துகொண்டு கருத்துக்கள் தெரிவித்தனர்.

அங்கு மாவை சேனாதிராஜா எம்.பி. மேலும் தெரிவிக்கையில் உள்ளூராட்சி தேர்தலின் முதலாவது பிரச்சாரக் கூட்டத்தை இராணுவத்தினர் குழப்புவதற்கு திட்டமிட்ட முறையில் செயற்பட்டு இந்த அடாவடியைச் செய்துள்ளனர். இந்தச் செயலை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

இதனை சர்வதேசத்திற்குத் தெரியப்படுத்துவோம். ஜனாதிபதி மற்றும் தேர்தல் ஆணையாளருக்கும் அறிக்கைகள் சமர்ப்பித்துள்ளோம்.

இந்த செயலுக்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு தேர்தலுக்கான பாதுகாப்பை வழங்குவதுடன் தமிழ் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டும்.

இந்த சம்பவத்தின் மூலம் வடக்கு கிழக்கில் தமிழ் மக்களை அடக்கியாள்வதற்கு இராணுவம் முயல்வது தெளிவாகியுள்ளது. இதனை கண்டு நாம் அஞ்சப் போவதில்லை. சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.

இதற்கான சரியான பதிலை அரசாங்கம் தெரிவிக்க வேண்டும். இல்லாவிடின் கூட்டமைப்பின் அனைத்து உறுப்பினர்கள் சேர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக கலந்தாலோசனை நடத்தி நடவடிக்கை மேற்கொள்வோம்.

அன்றைய கூட்டத்தின் போது மேடையில் வந்து தர்க்கித்த மற்றும் பொல்லுகள் இரும்பு கம்பிகள் மூலம் தாக்குதல் நடத்துவதற்கு தலைமை தாங்கிய இராணுவத்தினரை நாம் அடையாளம் காட்டுவோம்.

இராணுவக் கட்டளைத் தளபதியுடன் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்திலிருந்து தொலைபேசியில் கதைத்தபோது அவருக்கு அடுத்த நிலையிலுள்ள மேஜர் பல்கம பொலிஸ் நிலையத்திற்கு வந்து பல முறை மன்னிப்புக் கேட்டதுடன் முறைப்பாடு செய்யவேண்டாம் என பல முறை கேட்ட வண்ணம் இருந்தார். இதன் மூலம் இராணுவம் செய்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

5 பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்த இக்கூட்டத்தில் இராணுவத்தினர் அடாவடித்தனமாக மக்களையும் அடித்துக் காயப்படுத்தி துன்புறுத்தி பாராளுமன்ற உறுப்பினர்களை கைகாட்டி அச்சுறுத்தியதை மறைக்கமுடியாது. இது இராணுவ அடக்குமுறையின் அதி உச்சக் கட்டமாகும்.

மிலேச்சத்தனமான தாக்குதலால் நாம் ஓய்ந்துவிடப் போவதில்லை. கூட்டம் கூட்டினால் தடுக்கிறார்கள். ஆனால் நாம் மக்களின் வீட்டுக்கு வீடு கிராமத்திற்குக் கிராமம் சென்று எமது நிலைமைகள் பிரச்சாரத்தை மேற்கொள்வோம். நடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் எமக்குக் கிடைத்த ஆதரவை அரசாங்கம் அறிந்ததனால் நடக்கவுள்ள தேர்தலில் அவ்வாறு கிடைத்துவிடும் என்பதற்காக இந்த அராஜகத்தை கட்டவிழ்த்துவிட்டுள்ளது என்றார்.

வடக்கு கிழக்கில் தேவைக்கு அதிகமாக உள்ள இராணுவத்தை அகற்ற வேண்டும். சட்ட ஒழுங்கை நிலைநாட்ட பொலிஸார் நடவடிக்கை எடுக்கவேண்டும். சுதந்திரமான தேர்தல் நடத்துவதற்கு ஏற்ற சூழல் மற்றும் தமிழ் மக்கள் மீதான பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டும் ஏனைய எம். பி. க்களும் கருத்து தெரிவித்தனர்
மேலும் இங்கே தொடர்க...

புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட தமிழர்களின் நாடு கடத்தலுக்கு பிரித்தானிய எம்.பி. க்கள் எதிர்ப்பு

இலங்கையில் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டு உயிர் பிழைக்க வந்தவர்களை பிரிட்டன் வெளியேற்ற துடிக்கிறது. இந்த வெளியேற்ற நடவடிக்கை மூலம் சித்திரவதை நடவடிக்கையில் பிரிட்டனும் தன்னை இணைத்துக் கொள்கிறது என அந்நாட்டின் தொழிற்கட்சி எம்.பி. சியோபயன் குற்றம் சாட்டினார்.

பிரிட்டனுக்கு அடைக்கலம் தேடி வந்த இலங்கை தமிழர்களை திருப்பி அனுப்புவதில் அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது என அவர் விமர்சித்தார்.

சனல் 4 நிகழ்ச்சியில் இலங்கையின் படுகொலை களங்கள் என்ற ஆவணப்படம் ஒளிபரப்பானது. இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பான பின்னர் எம்.பி சியொ பய்ன் இவ்வாறு பொதுச் சபையில் பிரிட்டன் அரச நிர்வாகத்தை கடுøமயாக விமர்சித்தார்.

தொழிலாளர் கட்சி எம்.பி. யான அவர் பொதுச் சபையில் உரையாற்றுகையில்: தமிழர்களை வெளியேற்றும் நடவடிக்கை குறித்து பிரிட்டன் முகவராண்மை நிறுவனம் தனது ஆவணங்களை இலங்கை அரசுடன் பகிர்ந்து கொண்டுள்ளது. இந்த நடவடிக்கையின் மூலம் நாட்டில் இருந்து வெளியேற்றப்படுபவர்கள் இலக்கு வர்ண பூச்சுடன் பிரிட்டன் அனுப்புகிறது என்றார்.

பிரிட்டனில் தங்க அனுமதி மறுக்கப்பட்டு புகலிடம் தேடி வந்த 40 பேர் இலங்கைக்கு வியக்ஷிழக்கிழமை மாலை அனுப்பப்படுகின்றனர். அவர்கள் இலங்கையில் கைது செய்யப்படும் அச்சுறுத்தல் மட்டுமல்ல, அங்கு அவர்கள் நாடு திரும்பியதும் சித்திரவதையும் செய்யப்படுவார்கள் என பொதுச் சபையில் தெரிவிக்கப்பட்டது.

பிரிட்டனில் இருந்து வெளியேற வேண்டிய தமிழர்களில் ஒருவர் ஜெனா கோபிநாத் முன்னாள் தமிழ் அரசியல் தலைவர். இவர் ஏற்கனவே இலங்கை அரச நிர்வாகத்தால் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் மிட்சம் அண்ட் மாடரன் எம்.பி. கூறினார்.

பிரிட்டனுக்கு புகலிடம் தேடி வந்த மற்றொரு நபர் நாட்டை விட்டு வெளியேற்றப்படும் அபாயத்தில் வியாழக்கிழமை தூக்கு போட்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார். புதன்கிழமை இரவு அவர் விமான நிலைய காவலில் வைக்கப்பட்டபோது அவர் இந்த துயர முடிவை மேற்கொள்ள முயற்சித்துள்ளார்.

பிரிட்டனில் இருந்து தமிழர்களை இலங்கைக்கு வெளியேற்றும் நடவடிக்கையை சர்வதேச பொது மன்னிப்பு அமைப்பு எச்சரித்துள்ளது. இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படும் தமிழர்கள் சித்திரவதை செய்யப்படுவதையும் அந்த அமைப்பு அவதானித்துள்ளது. இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக தொடர்ந்து வன்முறைகள் நடந்து கொண்டு இருக்கின்றன. அவர்கள் சித்திரவதை செய்யப்படுவதுடன் நீதிக்கு அப்பாற்பட்ட கொலைகளும் நடக்கின்றன என்று எம்.பி. க்களிடம் மெக்டோனாக் தெரிவித்தார்.

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ போர் குற்ற நடவடிக்கையில் ஈடுபடுபவர் என்ற நிலை உள்ளது. அவர் வானளாவிய நீதி அதிகாரத்தையும் கொள்கை அதிகாரத்தையும் வைத்துக் கொண்டு தனது செயல்களை மேற்கொண்டு வருகிறார் என்றும் அந்த எம்.பி. தெரிவித்தார்.

கொமன்வெல்த் சபையில் முன்னோடியாக பிரிட்டிஷ் அரசு உள்ளது. அந்த அரசு கண்களை மூடிக் கொள்வதுடன் தமிழர்களை விமானத்தில் தொடர்ந்து ஏற்றி இலங்கைக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டு இருக்கிறது என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.

கோபிநாத் போன்றவர்கள் இலங்கை அரசுக்கு எதிராக செயல்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்தகைய நபர்கள் இலங்கை திரும்பும்போது அவர்களுடைய உயிருக்கு உத்தரவாதம் இல்லை.

இலங்கை அரசு பழிவாங்க விமானத்தில் ஏற்றி அனுப்பப்படும் தமிழர்கள் வர்ண பூச்சு இலக்குடன் அனுப்பும் நடவடிக்கையை பிரிட்டன் மேற்கொண்டு உள்ளது என்றும் மெக்டோனாக் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...