28 ஜூலை, 2010

தமிழ்க் கட்சிகள் கொழும்பில் சந்தித்துப் பேச்சுவார்த்தை



ஸ்லைடு காட்சியில் tf1.jpg -ஐ காண்பிக்கவும்
மக்களுடைய பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் வகையில் தமிழ் கட்சிகள் இன்றுபிற்பகல் கொழும்பில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளன. தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், கிழக்கு மாகாண முதலமைச்சருமான சி.சந்திரகாந்தன், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, ஈழ ஏதிலியர் மறுவாழ்வுக் கழகத்தின் தலைவர் செ.சந்திரகாசன், ஜனநாயக மக்கள் முன்னணியின் செயலரும், மேல் மாகாணசபை உறுப்பினருமான ந.குமரகுருபரன், சிறீ தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் ப.உதயராசா, பத்மநாபா ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் பொதுச்செயலர் தி.சிறீதரன், தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் பொதுச்செயலர் எம்.கே.சிவாஜிலிங்கம், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் த.சித்தார்த்தன் ஆகியோரும், இக்கட்சிகளின் முக்கியஸ்தர்கள் பலரும்; இச்சந்திப்பில் பங்கேற்றிருந்தனர். இதன்போது தமிழ்பேசும் மக்கள் எதிர்நோக்கும் துயரங்களையும், அவலங்களையும் கருத்திற்கொண்டு தமிழ்பேசும் மக்களின் அரசியல் தலைமைகள் இணைந்து செயற்பட வேண்டுமென்ற மக்களின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டியது தமிழ்க் கட்சிகள் அனைத்தினது கடமையென்றும், இந்தவகையில் நீண்டகால பிரச்சினையான இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்கும், உடனடியாக எமது மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளில் ஆக்கபூர்வமாக உதவுவதற்கும் தமிழ்பேசும் அரசியல் சக்திகள் ஒரு கருத்தொருமைப்பாட்டுக்கு வரவேண்டுமென்றும் அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளும்; ஒருமித்த குரலில் தெரிவித்தனர். இது விடயமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடனும் கலந்துரையாடி ஒருமித்த நிலைப்பாட்டை அடைய வேண்டுமென்றும் தெரிவிக்கப்பட்டது. இதன்படி இதுவிடயமான சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் கலந்துகொள்ளச் செய்வதற்காக, கூட்டத்தில் பங்கேற்றிருந்த கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் கையொப்பமிட்ட கடிதமொன்றையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அனுப்பி வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வவுனியா நகரசபையின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பதில்லையென மூன்று கட்சிகள் தீர்மானம்- வவுனியா நகரசபையின் மாதாந்தக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்), பொதுஜன ஐக்கிய முன்னணி ஆகிய மூன்று கட்சிகளைச் சேர்ந்த எட்டு உறுப்பினர்கள் நகரசபையின் நிர்வாக சீர்கேடுகள் தொடர்பாக 29விடயங்களை முன்வைத்து கையெழுத்திட்டு வவுனியா நகரசபை தலைவர், உபதலைவர், செயலாளர் ஆகியோர்க்கு எதிராக அறிக்கையொன்றை சபையில் சமர்ப்பித்தனர். குறித்த விடயங்கள் தொடர்பாக சரியான விளக்கம் தந்தால் கடந்தகாலங்கள்போல் தொடர்ந்தும் ஒத்துழைப்புக்களை வழங்குவோம் என்றும் இல்லையேல் ஒத்துழைப்புக்களை வழங்க மாட்டோமென்றும் தெரிவிக்கப்பட்டது. இறுதியாக எடுத்த முடிவின்படி இனிமேல் நகரசபை செயற்பாடுகளுக்கு ஆதரவு வழங்கப் போவதில்லையென்று தீர்மானிக்கப்பட்டது. இதன்போது நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்), பொதுஜன ஐக்கிய முன்னணி ஆகிய கட்சிகளைச் சேர்ந்த எட்டு உறுப்பினர்கள் மேற்படி தீர்மானத்திற்கு ஆதரவளித்துள்ளனர்.



ஸ்லைடு காட்சியில் tf1.jpg -ஐ காண்பிக்கவும்

ஸ்லைடு காட்சியில் tf2.jpg -ஐ காண்பிக்கவும்
ஸ்லைடு காட்சியில் tf3.jpg -ஐ காண்பிக்கவும்

ஸ்லைடு காட்சியில் tf4.jpg -ஐ காண்பிக்கவும்








மேலும் இங்கே தொடர்க...

அமெரிக்காவில் சுறா தாக்கியவருக்கு 300 தையல்







அமெரிக்காவின் வடக்கு புளோரிடாவை சேர்ந்தவர் கிளேடன் ஸ்கல்ட்ஷ். இவர் ஜேக்சன்வில்லா கடலில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது அவரை சுறாமீன் தாக்கியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார்.

சுறா கடித்ததால் தாடை மற்றும் கால் பகுதியில் படுகாயம் ஏற்பட்டது.

உயிர் பிழைத்த அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரது ஒரு கால் அகற்றப்பட்டது. அவை தவிர அவரது உடலில் ஏற்பட்ட காயங்களுக்கு 300 தையல்கள் போடப்பட்டன.

மிகப்பெரிய ஆபத்தில் இருந்து நான் பிழைத்தது கடவுள் புண்ணியம் என்று கிளேடன் தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

ஏ-9 வீதியில்இரு மருங்கிலும் பனைமரத்து விதை நடுவதற்குத் திட்டம்





முகமாலை முதல் வவுனியா வரையுள்ள ஏ – 9 வீதியின் இரு மருங்கிலும் பனம் விதை நடப்படவுள்ளதாக பனை அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.

ஐந்து லட்சம் பனைவிதை நடுகைத் திட்டத்தின் ஒரு கட்டமாகவே ஏ – 9 பாதையின் இரு மருங்கிலும் பனை விதைகள் நடப்படவுள்ளதுடன் வீதிகளின் இரு மருங்கில் உள்ள வெறும் காணிகள் மற்றும் பாடசாலைகளின் மைதானங்களைச் சுற்றியும் விதைக்கப்படவுள்ளன. யுத்த காலங்களில் பெருமளவான பனை மரங்கள் அழிக்கப்பட்டமையும், அத்துடன் முன்னர் திட்டமிடாத முறையில் பனம் விதைகள் விதைக்கப்பட்டமையினால் அம்மரங்கள் அழிக்கப்பட்டமைக்காகவும் இவ் விதைகள் விதைக்கப்படுவதாக சபை தெரிவித்துள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

நித்யானந்தா ஆண்மையற்றவர் எனக் கூறவில்லை?

பொலிஸ் விசாரணைகளில் நித்யானந்தா ஆண்மையற்றவர் எனக் கூறவில்லை. யாரோ தவறாக இப்படிச் சொல்லியிருக்கிறார்கள் என செக்ஸ் சர்ச்சைக்கு உள்ளான நித்யானந்தாவின் சீடர் நித்யஞானானந்தா தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு நித்யானந்த தியான பீடத்தின் சார்பில் சென்னையில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்குப் பதிலளித்தபோது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நித்யானந்தா குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது, “ரஞ்சிதா ஆசிரமத்திற்கு வந்தால், நான் வாயில் காவலனாக இருந்தால் உள்ளே அனுமதிப்பேன். ரஞ்சிதாவை நித்யானந்தா அனுமதிப்பாரா என்பதை அவரிடம் தான் கேட்க வேண்டும். நித்யானந்தா பிரச்னைக்கு காரணமானவர்கள் யார் என்றும், யார், யார் மீது வழக்கு தொடரப் போகிறோம் என்றும் விரைவில் தெரிவிப்போம்.

நேற்று தனியார் "டிவி'யில் பக்தர்கள் புண்படும் படியாக எங்கள் குருநாதரை போலிச் சாமியார் என்று வர்ணித்து செய்தி வெளியிடப்பட்டது. இது எங்களது ஆன்மிக உணர்வை நேரடியாக புண்படுத்தியது” எனத் தெரிவித்துள்ளார்.

தான் ஆண்மையற்றவர் என்றும் அதனால் செக்ஸில் ஈடுபடுவதற்கான சாத்தியங்கள் இல்லை என்றும் நித்யானந்தா கூறியதாக ஏற்கனவே வெளியான செய்திகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் நித்யானந்தாவின் சீடர் இப்படியொரு கருத்தை தெரிவித்திருக்கிறார்.
மேலும் இங்கே தொடர்க...

நுகர்வோர் அதிகார சபைக்கு இம்மாத வருமானம் 26,85,500 ரூபா

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தை மீறிய குற்றச் சாட்டுக்காக இம்மாதம் 1ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 26 லட்சத்து 85ஆயிரத்து 500 ரூபா தண்டப்பணமாக அறவிடப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.

காலாவதியான பொருட்களை விற்பனை செய்தமை, விலைப்பட்டியல்களை காட்சிப்படுத்தாமை, சட்டத்துக்கு முரணான வகையில் பொருட்களை விற்பனை செய்தமை, தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்தமை உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களுக்காக இந்த அபராதப் பணம் அறவிடப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியிலுள்ள வர்த்தக நிலையங்களில் நுகர்வோர் அதிகார சபை சோதனைகளை நடத்தியுள்ளது. அத்துடன் ஜுலை மாதத்தில் ஆயிரம் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அச்சபை சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

வெள்ளைக் கொடி விவகார விசாரணை: நாளை ஜெனரலுக்கு அழைப்பு


ஜெனரல் சரத் பொன்சேகா, சண்டே லீடர் ஊடகவியலாளரான பெட்ரிகா ஜேன்சிடம் தெரிவித்த விடயம் தொடர்பாக ஆராய்வதற்கான விசாரணை நாளை நடைபெறவுள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபாய ராஜபக்ஷ இறுதிக் கட்ட யுத்தத்தின் போது சரணடைந்த புலி உறுப்பினர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் சுட்டுக் கொள்ளுமாறு பிரிகேடியர் சவேந்திர சில்வாவிற்கு உத்தரவிட்டதாக ஜெனரல் சரத் பொன்சேகா சண்டே லீடருக்கு தெரிவித்தமை தொடர்பாக ஆராய்வதற்கு மூவர் அடங்கிய விசாரணைக்குழு நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

சரக்கு விமானம் தீப்பிடித்தது






ஜெர்மனியைச் சேர்ந்த லுப்தான்சா விமான நிறுவனத்தின் சரக்கு விமானம் ஒன்று, ரியாத் விமான நிலையத்தில் நேற்று இறங்கும் போது, தீப்பிடித்து விபத்துக்குள்ளானது. இதில், விமானம் முழுவதும் நாசமடைந்தது. விமானிகள் இரண்டு பேரும் தப்பித்து விட்டனர். ஜெர்மனியைச் சேர்ந்தது லுப்தான்சா விமான நிறுவனம். இந்நிறுவனத்தின் சரக்கு விமானம் ஒன்று, ரியாத் விமான நிலையத்தில் நேற்று தரையிறங்கியது. தரையிறங்கும் போதே அதில் திடீரென தீப்பிடித்தது. தரையிறங்கிய பின்னர் தீ மளமளவென்று பரவி, விமானம் இரண்டாக உடைந்தது. இச்சம்பவத்தில் விமானியும் துணை விமானியும் காயங்களுடன் தப்பித்தனர். அவர்கள் இருவரும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விமான நிலையப் பணியாளர்கள் அவசரமாகத் திரண்டு விமானத் தீயை அணைத்தனர். எனினும் விமானம் முற்றிலும் நாசமானது.
மேலும் இங்கே தொடர்க...

பாகிஸ்தானில் விமான விபத்து : 152 பேர் பலி ?






இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் 152 பேருடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளானது. விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. துருக்கி நாட்டில் இருந்து 152 பயணிகளுடன் புறப்பட்ட ஏர் ப்ளூ விமானம் இஸ்லாமாபாத் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. . மர்கலா மலைப் பகுதியில் விமான வந்த போது விபத்து நடந்துள்ளது. மழை மற்றும் கடும் மேகமூட்டம் காரணமாக விபத்து நடந்துள்ளதாக தெரிகிறது. மீட்புக்குழு சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளது. சிறப்பு ஹெலிகாப்டர்கள் சம்பவ பகுதிக்கு விரைந்துள்ளன. தொடர்ந்து அப்பகுதியில் கனமழை பெய்து வருவதால் மீட்பு பணிகள் சற்று சுணக்கத்துடன் காணப்படுகிறது. விபத்து நடப்பதற்கு ஒரு சில நிமிடங்களுக்கு முன்னர் விமானத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக கராச்சி விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்த வேண்டும்: பாகிஸ்தானிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

வாஷிங்டன், ஜூலை 27: மும்பை தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்த வேண்டும் என்று பாகிஸ்தானிடம் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

மும்பை தாக்குதல் வழக்கில் உறுதியான நடவடிக்கை எடுத்து இந்தியாவுக்கு நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும் என்று பாகிஸ்தானிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இதை பாகிஸ்தான் உடனடியாகச் செய்ய வேண்டும் என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

வெள்ளை மாளிகை தரப்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில் பாகிஸ்தானுக்கு இவ்விதம் நெருக்குதல் அளிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் அடைக்கலமாகியுள்ள பயங்கரவாதிகளால் மனித சமுதாயத்துக்கே அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதனால் பயங்கரவாதிகளை ஒழித்துக்கட்ட இன்னும் ஏராளமான நடவடிக்கையை பாகிஸ்தான் எடுப்பது அவசியம் என்றும் அமெரிக்கா கூறியுள்ளது.

அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் பி.ஜே.குரோவ்லே திங்கள்கிழமை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போதும், மும்பை தாக்குதல் குற்றவாளிகளை நீதிக்கு முன் நிறுத்த பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மும்பை தாக்குதல் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா தொடர்ந்து நெருக்குதல் அளித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஹிலாரியும் நெருக்குதல்... சமீபத்தில் பாகிஸ்தான் வருகை தந்த அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டனும், மும்பை தாக்குதல் விவகாரத்தை பாகிஸ்தான் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அந்நாட்டு தலைவர்களிடம் கேட்டுக்கொண்டார்.

ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான்களுக்கு பாகிஸ்தான் உளவு அமைப்பு பக்கபலமாக உள்ளது விக்கிலீக்ஸ் இணையதளம் மூலம் அம்பலமாகியுள்ளது.

இதனால் பாகிஸ்தான் மீது அமெரிக்கா அதிருப்தி அடைந்துள்ளது.

அல்-காய்தா, லஷ்கர்-இ-தொய்பா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கும் ஐஎஸ்ஐ-க்கும் தொடர்பிருப்பதாக இந்தியா பல தடவை குற்றம்சுமத்தியதை அமெரிக்கா முழுமையாக நம்பியிருக்க வாய்ப்பில்லை.

ஆனால் ஐஎஸ்ஐ-யின் செயல்பாடு குறித்து விக்கிலீக்ஸ் ஆதாரத்துடன் வெளியிட்ட தகவலால் இந்தியாவின் குற்றச்சாட்டு மீது அமெரிக்காவுக்கு முழுமையான நம்பிக்கை ஏற்பட்டிருக்கும். இதனால் பயங்கரவாதத்துக்கு எதிரான விஷயத்தில் பாகிஸ்தான் உண்மையாக நடந்து கொள்ள வேண்டும்.

சொல்வது ஒன்றும், செய்வது ஒன்றுமாக இருக்கக்கூடாது என்ற ரீதியிலேயே அமெரிக்காவின் செயல்பாடு இனிமேல் அமையும்.

மும்பை தாக்குதல் விஷயத்தையும் அமெரிக்கா இனிமேல் முன்பைப் போல் அணுகாது. பாகிஸ்தானுக்கு கடும் நெருக்கடியை அளிக்கும் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் இங்கே தொடர்க...

தலிபானுடனான ஐஎஸ்ஐ தொடர்பு இருப்பதை அமெரிக்கா ஏற்காது: அமெரிக்க தலைமை ராணுவ தளபதி மைக் முல்லன்

டையே தொடர்பு இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அமெரிக்க தலைமை ராணுவ தளபதி மைக் முல்லன் கூறினார்.

தலிபான் அமைப்புடனும், அல் காய்தா அமைப்புடனும் ஐஎஸ்ஐக்கு உள்ள தொடர்பு நீடிப்பதாக வெளியாக உள்ள செய்தி கவலையடையச் செய்துள்ளது என்றார் அவர்.

இந்த விஷயத்தில் பாகிஸ்தான் இன்னும் அதிகம் செய்ய வேண்டி உள்ளது. பாகிஸ்தானின் இப்போதைய நிலையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று வெள்ளை மாளிகை பத்திரிகை தொடர்பு செயலர் ராபர்ட் கிப்ஸ் கூறினார்.

தலிபான் அமைப்புக்கு பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ உதவுவதாக போலந்து ரகசிய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது. 92 ஆயிரம் பக்கங்கள் கொண்ட புலனாய்வு அமைப்பின் ரகசிய ஆவணம் சமீபத்தில் வெளியாகியுள்ளது.

போலந்தின் ரகசிய ஆவணம், 2004-ம் ஆண்டு முதல் பாகிஸ்தான் ஐஎஸ்ஐ செயல்பாடு குறித்து விரிவாக விளக்கியுள்ளது. இந்த கால கட்டத்தில் இப்போது பாகிஸ்தானின் ராணுவ தலைவராக உள்ள அஷ்பக் பர்வேஸ் கியானிதான் ஐஎஸ்ஐ அமைப்பின் தலைவராக இருந்தார்.
மேலும் இங்கே தொடர்க...

35,333 பேர் மாத்திரமே மீள்குடியேற எஞ்சியுள்ளனர் அமைச்சர் கெஹலிய

வடக்கில் இடம்பெயர்ந்த மக்களில் இன்னமும் 35,333 பேர் மாத்திரமே மீளக்குடியமர்த்தப்பட வேண்டியுள்ளதாக பாதுகாப்பு விவகாரங்களுக்கும் அமைச்சரவைக்குமான பேச்சாளர்- தகவல், ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

நாளாந்தம் சுமார் 700 பேர் சொந்த வாழ்விடங்களில் மீள்குடியமர்த்தப்பட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இடம்பெயர்ந்த மக்களின் பதிவு செய்யப்பட்ட தொகை 267,393 எனக் குறிப்பிட்ட அமைச்சர், இவர்களுள் முழுமையாக 2,30,000 பேர் ஒரு வருடகாலத்தினுள் மீள்குடியமர்த்தப்பட்டு ள்ளதாக குறிப்பிட்டார்.

தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நேற்று (27) முற்பகல் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் தகவல் வழங்கிய அமைச்சர் ரம்புக்வெல்ல, “15 இலட்சத்திற்கும் அதிக மான கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டுள்ள இடத்தில் மக்களை மீள்குடியமர்த்துவதில் சட்டச் சிக்கல் உள்ளது. மக்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் உள்ளதாக ஐ.நா. சான்றுபடுத்தாமல் குடியமர்த்த முடியாது.

இந்த நிலையில் இந்தியா உள்ளிட்ட நாடுகள் எமக்கு உதவி வழங்க முன்வந்தன. என்றாலும் அது தாமதம் ஏற்பட்டதால், அரசாங்கமே 860 மில்லியன் ரூபாவை செலவு செய்து கண்ணி வெடிகளை அகற்றியது. இலங்கை இராணுவம் 275,000 கண்ணிகளை அகற்றியுள்ளது. இராணுவத்தின் துரித நடவடிக்கையால் இது சாத்தியமாகியுள்ளது” என்றும் கூறினார்
மேலும் இங்கே தொடர்க...

வடக்கு மீள் குடியேற்ற நிலவரங்களை கண்டறிதல்: இந்திய பிரதிநிதிகளின் வருகைக்கு இலங்கை அரசாங்கம் வரவேற்பு



வடக்கில் மக்களின் மீள் குடியேற்ற நிலவரங்களைக் கண்டறிந்துகொள்வதற்காக இந்தியப் பிரதிநிதிகள் இலங்கை வருவதை அரசாங்கம் வரவேற்றுள்ளது.

இந்தியப் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங் பிரதிநிதியொருவரை அனுப்பி வைத்தால், அது நல்லதொரு விடயமாகுமென்று பாதுகாப்பு விவகாரங்கள் மற்றும் அமைச்சரவை பேச்சாளரான தகவல், ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

‘‘இலங்கை விடயத்தில் இந்தியா நிதானமாகவே செயற்படும். பருப்பை போடுவதைப்போல் பலவந்தமாக செயற்படாது. இரு நாடுகளுக்குமான உறவு அந்தளவுக்குச் சிறப்பாக உள்ளது” என்றும் தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நேற்று (27) காலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் கூறினார்.

இந்திய மத்திய அமைச்சின் அதிகாரி யொருவரை இலங்கைக்கு அனுப்பி வைப்பதாகத் தமிழக முதல்வருக்குப் பிரதமர் மன்மோகன் அறிவித்திருக் கிறாரென்றும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் முதல்வர் கலைஞர் மு. கருணாநிதியைச் சந்தித்துள்ளமை பற்றியும் அரசின் கருத்து யாதென செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதில் அளித்த அமைச்சர் ரம்புக்வெல்ல, “ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அண்மையில் இந்தியா சென்றிருந்தபோது அந்தக் குழுவில் நானும் இடம்பெற்றிருந்தேன். ஆளுங்கட்சி, எதிர்க் கட்சி உறுப்பினர்களையும் சந்தித்தோம். அப்போது தமிழ் நாட்டைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் 21 பேரையும் சந்தித்தோம். அவர்களை, இலங்கைக்கு வந்து நிலைமைகளை நேரில் கண்டறியுமாறு ஜனாதிபதி பகிரங்க அழைப்பு விடுத்தார். அதில் அரசியல் நோக்கம் கிடையாது. ஆனால், தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் விடுத்த அழைப்பு அரசியல் நோக்கம் கொண்டது” என்றார்
மேலும் இங்கே தொடர்க...

இ. போ. ச. வின் நாளாந்த வருமானம் ரூ. 4 கோடிக்கு அதிகம்



மே மாதம் முதல் இலங்கை போக்குவரத்து சபை ஈட்டுவரும் நாளாந்த வருமானம் அதிகரித்து வருவதாக பிரதி போக்குவரத்து அமைச்சர் ரோஹன திசாநாயக்க தெரிவித்தார்.

இ. போ. ச. வை முன்னேற்ற எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளும் பயணிகளுக்குத் தேவையான வசதிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதையடுத்தே இ. போ. ச. கூடுதல் வருமானம் ஈட்டி வருவதாக அவர் தெரிவித்தார்.

மே மாதம் இ. போ. ச. வின் ஒருநாள் வருமானம் 3 கோடி 87 இலட்சத்து 81 ஆயிரத்து 102 ரூபா. ஜுன் மாதமாகும் போது அந்தத் தொகை 4 கோடி 9 இலட்சத்து 68 ஆயிரத்து 896 ரூபாவாக அதிகரித்தது.

தற்பொழுது 4 கோடி 17 இலட்சத்து 69 ஆயிரத்து 131 ரூபா வருமானம் ஈட்டப்படுவதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

வடக்கு, கிழக்கு புத்திஜீவிகளும் ஆய்வுகளில் ஈடுபடும் சூழல் பயங்கரவாத ஒழிப்பே காரணம் - ஜனாதிபதி


பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டிருப்பதன் பயனாக வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் வாழும் புத்திஜீவிகளும் சுதந்திரமாக ஆய்வு நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடிய சூழல் ஏற்படுத்தப்பட்டிருப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்றுத் தெரிவித்தார்.

விஞ்ஞான ஆராய்ச்சிக்கான ஜனாதிபதி விருது வழங்கும் வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொழில் நுட்பவியல் ஆராய்ச்சி அமைச்சின் கீழுள்ள தேசிய ஆராய்ச்சி சபை அலரி மாளிகையில் ஒழுங்கு செய்திருந்த இந்நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் உரையாற்றுகையில், விஞ்ஞான ஆராய்ச்சிக்கான ஜனாதிபதி விருது வழங்கும் நிகழ்வுக்கு இந்நாட்டில் உயர்ந்த மதிப்புள்ளது. இதனை யாவரும் அறிவர்.

குறிப்பாக வெளிநாடுகளில் இருந்த இலங்கை ஆராய்ச்சியாளர்களும் இவ்வைபவத்தின் நிமித்தம் இங்கு வருகை தந்திருப்பதாக அறிகிறேன். இது இவ்வைபவத்தின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகின்றது. தாயகத்தின் மீது இவ்வாறு பற்றுக் கொண்டிருப்பவர்களை நாம் பாராட்டியாக வேண்டும். அதேநேரம் ஆய்வுகளை மேற்கொண்டு இன்று கெளரவம் பெறும் சகலருக்கும் எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நாம் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான பாரிய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோம். இது அரசியல், பொருளாதாரம், சமூகம் ஆகிய துறைகளில் பாரிய பரிசோதனை என்றால் மிகையாகாது. முதலாவது பரிசோதனையில் நாம் வெற்றி பெற்றுள்ளோம்.

கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் வெளிநாட்டிலிருந்து இங்கு வருகை தந்த கல்வியியலாளர் ஒருவர், இப்போது நாட்டின் உண்மையான சுதந்திரம் ஏற்பட்டிருப்பதாகக் கூறினார். இது எமக்கு ஒரு வகையில் பெருமையாகும்.

அறிவை தடைசெய்யவோ, மூழ்கடிக்கவோ முடியாது. இதனை நாமறிவோம். சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை சிறந்த முறையில் உணர்ந்தவர்கள் ஆராய்ச்சியாளர்கள் தான் என நான் நம்புகிறேன். அறிவுத்துறையின் மேம்பாட்டுக்காக ஆய்வுகளை மேற்கொள்வதற்கும் அவற்றை சுதந்திரமாக வெளியிடுவதற்கும் உரிமை இருப்பது அவசியம் எனக் கருதுகின்றேன். இதற்கு இப்போது எமக்கு சுதந்திர சூழல் கிடைக்கப் பெற்றிருக்கின்றது.

சுதந்திர இலங்கை மீது நாம் பாரிய எதிர்பார்ப்பை வைத்திருக்கின்றோம். அதனை நிறைவேற்ற வேண்டியது பெரும் பொறுப்பாகும். சுதந்திர இலங்கையைக் கட்டியெழுப்பிய பின்னர் இந்நாட்டில் பிறக்கும் விஞ்ஞானிகளுக்கு பாரிய பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருக்கின்றது.

சில ஆராய்ச்சிகளை நடத்துவதற்காக இருந்த நிறுவனங்கள் இப்போது ஆஸ்பத்திரிகளுக்கு அறிக்கைகள் வழங்கும் நிறுவனங்களாக மாறியுள்ளன. இருப்பினும் அந்நிறுவனங்கள் பாரிய எதிர்பார்ப்புக்களுடனேயே ஆரம்பிக்கப்பட்டன. இந்நிலைமை குறித்து நாம் மீள் பரிசீலனை செய்ய வேண்டியவர்களாக உள்ளோம் என்றார்.

இந்நிகழ்வில் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், பிரதியமைச்சர் லலித் திஸாநாயக்க, தேசிய ஆராய்ச்சி சபைத் தலைவர் பேராசிரியர் எரிக்கருநாயக்கா உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.
மேலும் இங்கே தொடர்க...

இடம்பெயர்ந்தோரை சந்திப்பதில் எம்.பிக்களுக்கு தடை இல்லை அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு கட்டுப்பாடு


இடம்பெயர்ந்த மக்கள் தங்கியு ள்ள முகாம்களுக்கும் மீளக்குடிய மர்ந்துள்ள பிரதேசங்களுக்கும் மக் கள் பிரதிநிதிகள் செல்வதற்கு விதிக் கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் அனை த்தும் முற்றாக நீக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

மக்கள் பிரதிநிதிகள் தற்போது எந்தத் தடையும் இன்றி சுதந்திரமாக சென்று வர முடியுமென்று பாது காப்பு விவகாரங்கள் மற்றும் அமை ச்சரவை பேச்சாளரான தகவல், ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நேற்று (27! நடைபெற்ற செய்தியாளர் மாநாட் டில் அமைச்சர் தகவல் தருகையில், நலன்புரி முகாம்களுக்குச் சென்ற மக்கள் பிரதிநிதிகள் மக்களின் மனங் களைக் குழப்பி திசை திருப்பும் முயற்சியில் ஈடுபட்டார்கள். அத னால், கட்டுப்பாடு விதிக்க வேண் டிய நிலை ஏற்பட்டது.

இது தொடர்பில் பாராளுமன்ற த்திலும் பிரஸ்தாபிக்கப்பட்டது. தற் போது அந்தக் கட்டுப்பாடு முற் றாகத் தளர்த்தப்பட்டுள்ளது. எவரும் சென்று வரலாம்’, என்று அறிவித் தார்.

ஆனால், அரச சார்பற்ற நிறுவனங் கள் அங்கு செல்வது மட்டுப்படுத்தப் பட்டிருப்பதாக அமைச்சர் குறிப்பிட் டார். முன்பு அந்தப் பகுதிகளுக்குச் சொன்றவர்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பதிலாக மேலும் சிக்கலை உருவாக்கினார்கள்.

அதனால், சில வரையறைகளைக் கடைப்பிடிக்க வேண்டியுள்ளதாக கூறிய அவர், தற்போது அவர்கள் வெறும் அவதானிப்பாளர்களாகச் சென்று வந்து அறிக்கைகளை வெளி யிட மாத்திரம் முடியாது. மீள் குடியேற்றத்திற்கான திட்டங்களுக் குப் பங்களிப்புச் செய்ய வேண்டும். மீள் குடியேற்ற அமைச்சில் இதற் கென பல்வேறு திட்டங்களும், பிரேர ணைகளும் உண்டு.

எனவே அங்கு சென்று விரும்பியவாறு உதவியைப் பெற்றுக் கொடுக்க முடியும்.

அதன டிப்படையிலேயே அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான அனுமதி வழங்கப்படும் “அவர்களின் கோணத்தில் அறிக்கை வெளியிட முடியாது” என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

வரி ஏய்ப்பு செய்ய ரூ.1 கோடியை கல்லறையில் மறைத்து வைத்த வியாபாரி

அரசாங்கத்தை வரி ஏய்ப்பு செய்ய    ரூ.1 கோடியை கல்லறையில்    மறைத்து வைத்த வியாபாரிஏமாற்றி வரி ஏய்ப்பு செய்வதற்காக தாங்கள் சம்பாதித்த பணத்தை பல வழிகளில் மறைத்து வருவதை கேள்விப் பட்டிருக்கிறோம். ஆனால் இங்கிலாந்தை சேர்ந்த வியாபாரி ஒருவர் வரிஏய்ப்பு செய்த பணத்தை தனது அத்தையின் கல்லறையில் மறைத்து இருந்த தகவல் வெளியாகியுள்ளது.

இங்கிலாந்தில் லண்டனை சேர்ந்த வியாபாரி ஒருவர் வரிஏய்ப்பு செய்தது வருமானவரி துறையினருக்கு தெரிய வந்தது. எனவே அந்த நபரிடம் அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தினார்கள்.

அப்போது, அவர் தான் வரி ஏய்ப்பு மோசடி செய்த 1 கோடி ரூபாயை தனது அத்தையின் கல்லறையில் புதைத்து வைத்திருப்பதாக தெரிவித்தார். அந்த கல்லறை அங்குள்ள ஒரு கிறிஸ்தவ தேவாலயத்தில் உள்ளது.

எனவே தேவாலயத்தின் பாதிரியாரின் அனுமதி பெற்று அந்த கல்லறையை வருமானவரித்துறை இன்ஸ் பெக்டர்கள் தோண்டினர். அங்கு அவர் வரி ஏய்ப்பு செய்த பணம் இருந்தது. அத்துடன் அவர் மறைத்து வைத்திருந்த ரூ.35 லட்சம் மதிப்பு பங்கு சந்தை ஆவணங்களும் சிக்கியது.

விசாரணை நடத்தியதில் 20 ஆண்டுகளாக வரி ஏய்ப்பு செய்த பணத்தை அவர் கல்லறையில் புதைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. இங்கிலாந்தில் வரி ஏய்ப்பு செய்வது பெரிய குற்றம். இது கண்டுபிடிக்கப்பட்டதால் கூடுதலாக அபராத பணம் செலுத்த வேண்டியது இருக்கும் என வருமான வரித்துறை அதிகாரி டாவ்ஹார்னெட் தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...