29 டிசம்பர், 2009



வடக்கில் கைவிடப்பட்ட ஒரு இலட்சத்து 27,875 ஏக்கர்
மேட்டு நிலத்தில் பயிரிட நடவடிக்கை
- பெரும்போகத்தின்போது 10,592 ஏக்கரில் பயிர்ச்செய்கை

வட மாகாணத்தில் மோதல் காரணமாக கைவிடப்பட்ட உள்ள ஒரு இலட்சத்து 27 ஆயிரம் ஏக்கர் மேட்டு நிலத்தில் மீண்டும் பயிரிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்ரசிறி தெரிவித்தார். தற்பொழுது 33,980 ஏக்கரில் பயிரிடப்பட்டு வருவதோடு பெரும்போகத்தின் போது 10,592 ஏக்கரில் பயிர்ச் செய்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் ஆளுநர் தெரிவித்தார்.

மேட்டு நிலங்களில் மீண்டும் பயிhச்செய்கைகளை ஆரம்பிப்பதற்காக இதுவரை 24,500 கிலோ கிராம் விதைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. வீட்டில் மரக்கறி பயிரிடுவதற்காக 4,200 பக்கட் விதைகளும் வழங்கப்பட்டுள்ளது. தற்போது மன்னார் மாவட்டத்தில் 1,639 ஏக்கரிலும் வவுனியா மாவட்டத்தில் 21,382 ஏக்கரிலும் யாழ் மாவட்டத்தில் 10,963 ஏக்கரிலும் பயிரிடப்பட்டு வருவதாகவும் ஆளுநர் தெரிவித்தார்.

பெரும்போகத்தின் போது மன்னார் மாவட்டத்தில் 631 ஏக்கரிலும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 750 ஏக்கரிலும் வவுனியா மாவட்டத்தில் 5,645 ஏக்கரிலும் யாழ்குடாவில் 3,456 ஏக்கரிலும் கிளிநொச்சி மாவட்டத்தில் 110 ஏக்கரிலும் மேட்டு நிலங்களில் பயிற்செய்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.




கிழக்கில் மேலும் மூன்று ரயில் பஸ்
சேவைகளை ஆரம்பிக்க நடவடிக்கை
வாழைச்சேனை உள்ள+ர் ரயில் பஸ் சேவை விரைவில் ஆரம்பிப்பு


கிழக்கு மாகாணத்தில் உள்ள+ர் ரயில் சேவையை மேம்படுத்துவதற்காக மேலும் 03 ரயில் பஸ்களை சேவையில் ஈடுபடுத்த உள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்தது.

ஏற்கனவே மட்டக்களப்பிலும் திருகோணமலையிலும் இரு உள்ள+ர் ரயில் பஸ் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு விரைவில் வாழைச்சேனை உள்ள+ர் ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் பி.பி.விஜேசேகர தெரிவித்தார்.

கிழக்கில் ரயில் சேவையை மேம்படுத்துவதற்காக 05 ரயில் பஸ் சேவைகளை ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் கூறினார். வாழைச்சேனை உள்ள+ர் ரயில் பஸ் சேவையில் ஈடுபடுத்துவதற்காக ரயில் பஸ் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் இரு ரயில் பஸ்கள் கந்தளாய் மற்றும் திருகோணமலை பகுதிகளில் சேவையில் ஈடுபடுத்தப்ட உள்ளன.

போர்நெருக்கடி காரணமாக கிழக்கு பிராந்தியத்தில் போக்குவரத்துச் சேவைகள் பாதிக்கப்பட்டு இருந்ததோடு மக்களின் இயல்பு வாழ்க்கையும் ஸ்தம்பிதமடைந்திருந்தது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தின் கீழ், புலிகளின் பிடியில் இருந்து கிழக்கு மாகாணம் முழுமையாக மீட்கப்பட்டதையடுத்து கிழக்கில் இயல்பு வாழ்க்கை முழுமையாக வழமைக்குத் திரும்பியுள்ளது தெரிந்ததே.




வழக்குகள் தொடரப்படாதுள்ள கைதிகள்
விரைவில் விடுவிக்க விசேட ஏற்பாடுகள்
சட்ட மாஅதிபர் தெரிவிப்பு


வழக்குகள் எதுவுமின்றிச் சிறைகளில் நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ்க் கைதிகள் விரைவில் விடுதலை செய்யப்படவுள்ளதாக சட்ட மாஅதிபர் மொகான் பீரிஸ் தெரிவித்தார்.

இதற்காக விசேட நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் கூறினார். வழக்குத் தொடரவேண்டிய அவசியம் இல்லாதவர்கள் நேரடியாக விடுதலை செய்யப்படுவார்கள் என்று தெரிவித்த சட்ட மாஅதிபர், இது தொடர்பில் பதினொரு சட்டத்தரணிகள் ஆராய்ந்து வருவதாகக் கூறினார்.

பெரும்பாலும் அடுத்தமாத முற்பகுதியில் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள் என்று சட்ட மாஅதிபர் நம்பிக்கை தெரிவித்தார்.

அவசரகாலச் சட்டம், பயங்கரவாதத் தடைச்சட்டம் என்பவற்றின் கீழ் கைதுசெய்யப்பட்ட வடக்கு, கிழக்கு, மலையகம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த சுமார் 600 தமிழ்க் கைதிகள் வருடக்கணக்காக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை விடுதலை செய்வது தொடர்பாக, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்புரைகளுக்கமைய விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்தக் கைதிகளின் விடுதலை தொடர்பாக முக்கிய அறிவிப்பு இந்த வாரம் வெளியாகுமெனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கமைய இவர்களை விடுதலை செய்ய துரித நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக சட்ட மாஅதிபர் கூறினார்.

இது தொடர்பில் கடந்த வாரம் நீதித்துறை அதிகாரிகள் மட்டத்தில் ஆராயப்பட்டதுடன், விடுதலை செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டதாக நீதி, சட்ட மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் சுகத கம்லத் தெரிவித்தார்.

வழக்குகள் தொடரப்படாத நிலையில் களுத்துறை, மகசின், வெலிக்கடை, ப+ஸா உள்ளிட்ட சிறைகளில் தமிழ்க் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தம்மை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டங்களை நடத்தியிருந்தனர். அதேநேரம், ஜனாதிபதியிடமும் வேண்டுகோள் விடுத்திருந்தனர். ஜனாதிபதியின் பணிப்பின்பேரிலேயே தமிழ்க் கைதிகளை விடுதலை செய்வதற்குத் தற்போது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதேவேளை, இறுதி யுத்தத்தின்போது சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 738 பேரை இவ்வாரம் விடுவிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இடம்பெயர்ந்தவர்கள் தங்கியிருந்த முகாம்களில் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டவர்களுள் 700 பேரும், குற்றப்புலனாய்வுப் பிரிவினால் விசாரணை செய்யப்படுபவர்களுள் 38 பேரும் இவ்வாரம் விடுதலையாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...



முதல் முயற்சி தோற்று விட்டது: அமெரிக்க விமானங்களை தகர்க்க மீண்டும் முயற்சிப்போம்;









நைஜீரிய நாட்டைச் சேர்ந்த இளைஞர் உமர் பாரூக் அப்துல் முதலாப் (வயது23). இவன் லண்டனில் உள்ள ஒரு கல்லூரியில் என்ஜினீயரிங் படித்து வந்தான்.

இவன் கடந்த வெள்ளிக்கிழமை கிறிஸ்துமஸ் தினத்தன்று ஆலந்து நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கு நார்த்வெஸ்ட் ஏர்லைன்ஸ் விமானத்தில் சென்றான். அந்த விமானம் டெட்ராய்ட் விமான நிலையத்தை நெருங்கிக் கொண்டிருந்தபோது உமர்பாரூக் அப்துல் தான் மறைத்து எடுத்து வந்திருந்த ரகசிய திரவப் பொருட்கள் மற்றும் பவுடரை கலந்து வெடி மருந்தாக்கிஇ அந்த விமானத்தை தகர்க்க சதி செய்தான்.

அவன் வெடிமருந்து கலவையை உருவாக்கிக் கொண்டிருந்தபோதுஇ விபரீதத்தை அறிந்த சக பயணிகள் அவரை மடக்கிப் பிடித்தனர். இதனால் அவனது பயங்கர சதி திட்டம் முறியடிக்கப்பட்டது. 300 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.

டெட்ராய்ட் விமான நிலையத்தில் அந்த விமானம் தரை இறங்கியதும்இ உமர் பாரூக் அப்துல் கைது செய்யப்பட்டான். வெடிமருந்து கலவை தயாரித்த போதுஇ அது வெடித்ததால் உமர்பாரூக் அப்துல் காயம் அடைந்திருந்தான். மிக்சிகன் மருத்துவமனையில் அவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

பிறகு உமர் பாரூக் அப்துல் சிறையில் அடைக்கப்பட்டான். அமெரிக்காவில் எந்த நகரில் அவன் சிறை வைக்கப்பட்டுள்ளான் என்ற தகவல் வெளியிடப்படவில்லை. இதற்கிடையே உமர் பாரூக்அப்துலின் குடும்பம் மற்றும் பின்னணி குறித்த எல்லா தகவல்களையும் அமெரிக்க போலீசார் திரட்டி வருகிறார்கள்.

முதல்கட்ட விசாரணையில் உமர்பாரூக் அப்துல் அல்- கொய்தா இயக்கத்துடன் தொர்புடையவன் என்று தெரிய வந்துள்ளது. ஏமன் நாட்டில் உள்ள அல்கொய்தாவின் கிளை ஒன்று உமர்பாரூக்குக்கு நவீன பயிற்சிகளை கொடுத்துள்ளது. பிறகு வெடிமருந்து பவுடரை கொடுத்து அவனை விமானத்தில் தீவிரவாதிகள் அனுப்பி உள்ளனர்.

அப்துல் வைத்திருந்த வெடி மருந்து பவுடரை அரேபிய பகுதி அல்கொய்தா தீவிரவாதிகள் தயாரித்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இந்த சதி திட்டத்தின் பின்னணியில் உள்ள அனைவரையும் பிடிக்க ஒபாமா உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில் கிறிஸ்துமஸ் அன்று விமானத்தை தகர்க்க முயற்சி செய்தது நாங்கள்தான் என்று அல்கொய்தாவின் அரேபியன் பிரிவு பொறுப்பு ஏற்றுள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பு இஸ்லாமிய இணையத்தளம் ஒன்றில் தகவல் வெளியிட்டுள்ளது.

அதில் கூறப்பட்டி ருப்பதாவது:-

அமெரிக்க விமானத்தை நூதன முறையில் தகர்க்க முயற்சி செய்தது நாங்கள்தான். ஏமன் நாட்டில் எங்கள் குழுக்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத் தியது. அதற்கு பழிக்கு பழி வாங்கவே நாங்கள் இந்த தாக்குதல் முயற்சியில் ஈடுபட்டோம்.

எங்களது முயற்சி எதிர்பாராதவிதமாக தோல்வி அடைந்துவிட்டது. தாக்குதல் தியாக செயலுக்காக நைஜீரியா வாலிபரிடம் அதிநவீன தொழில்நுட்ப கருவியை கொடுத்து அனுப்பி இருந்தோம்.

உயர் தொழில்நுட்பத்தில் தயாரான அந்த கருவி சேர்க்கையில் கடைசி நிமிடத்தில் கோளாறு ஏற்பட்டு விட்டது. இதனால்தான் அது வெடிக்காமல் போய் விட்டது.

அமெரிக்கா நடத்திய குண்டு வீச்சில் எங்கள் அப்பாவி மக்கள் பலர் உயிரிழந்து விட்டனர். அமெரிக்கர்களே உங்களுக்கு ஒன்றை சொல்லிக் கொள்கிறோம். எங்கள் பெண்களையும் குழந்தைகளையும் கொன்று குவித்தவர்களுக்குத்தான் நீங்கள் ஆதரவு கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள்.

உங்கள் மீது நாங்கள் எந்த முன் எச்சரிக்கையும் கொடுக்காமல் தாக்குதல் நடத்துவோம். பழிக்கு பழி வாங்குவது நெருங்கி விட்டது. எனவே அமெரிக்கர்களே இனி இது போன்ற தாக்குதல்களை நீங்கள் நிறைய எதிர்பார்க்கலாம்.

உலகில் உள்ள எல்லா முஸ்லிம்களையும் நாங்கள் அழைக்கிறோம். எதிரிகளை கொல்லுங்கள். அரேபியா பகுதிகளை அமெரிக்க படைகள் அதர்மமாக ஆக்கிரமித்து இருப்பதை கண்டித்து நைஜீரியா வாலிபர் தியாகம் செய்துள்ளார்.

அமெரிக்க உளவுத் துறையின் திறமையையும் பலத்த பாதுகாப்பையும் மீறி அவர் வெடி பொருட்களுடன் ஊடுருவி சாதனை படைத்துள்ளார்.

இவ்வாறு அந்த இணையத்தள தகவலில் கூறப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...
காணாமற் போனோரை கொண்டுவந்து விடுவதாகக் கூறி பலலட்சம் ரூபாய் மோசடி-
யாழ்ப்பாணக் குடாநாட்டிலிருந்து காணாமற்போனவர்களது உறவினர்களிடமிருந்து 8லட்சம் ரூபாவுக்கும் மேற்பட்ட பண மோசடியொன்று இன்றுகாலை இடம்பெற்றுள்ளது. காணாமற் போனவர்களின் வீடுகளுக்கு தொலைபேசியில் தொடர்புகொண்ட ஒருவர் காணாமற்போனோரை விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்து, குறித்த தொகைப் பணத்துடன் யாழ். சிறைச்சாலைக்கு முன்பாக வருமாறும், அவ்விடத்தில் வைத்து காணாமற் போனவர்கள் விடுவிக்கப்படுவர் என்றும் தெரிவித்துள்ளார். இதுபோன்ற தொலைபேசி அழைப்புகள் ஐந்திற்கும் மேற்பட்ட காணாமற் போனவர்களின் உறவினர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தொலைபேசியின் பணிப்புரைக்கமைய குறித்த இடத்திற்கு சென்றபோது அவர்களிடமிருந்து பணத்தைச் சேகரித்த ஒருவர் விரைவில் காணாமற்போனவர்களை அவ்விடத்திற்கு கொண்டுவருவதாக தெரிவித்து மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளார். குறித்தநபர் சுமார் 8லட்சத்து 75ஆயிரம் ரூபாய் பணத்தை அபகரித்துச் சென்றுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...