16 ஆகஸ்ட், 2010

கனடாவுக்கு கப்பலில் சென்ற 490 ஈழ தமிழர்களுக்கு அகதி அந்தஸ்து வழங்கக் கூடாது: இலங்கை அரசு எதிர்ப்பு

“சன் சீ” என்ற கப்பலில் நீண்டதூரம் பயணம் செய்து அவர்கள் கனடாவை அடைந்தனர். அதில் 350 ஆண்கள் மற்றும் பெண்கள், குழந்தைகள் இருந்தனர்.

அவர்களை கனடா அரசு அகதிகளாக ஏற்று உரிய உதவிகள் செய்ய ஏற்பாடு செய்து வருகிறது. ஆனால் அவர்களுக்கு அகதி அந்தஸ்து வழங்கக்கூடாது என்று இலங்கை எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.

கனடாவில் உள்ள இலங்கை தூதரக அதிகாரி சித்திராவ்கனி கனடா அரசுக்கு இது சம்பந்த மாக வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

கனடா வந்துள்ள கப்பலில் தலைவராக செயல்பட்ட வினோத் விடுதலைப் புலிகளின்ருச்சி தலைவர் ஆவார். ஆயுதகடத்தலிலும் அவருக்கு தொடர்பு உண்டு. இதில் வந்துள்ளவர்களில் பலர் விடுதலைப்புலிகள்.

எனவே இவர்களுக்கு கனடா அரசு அகதி அந்தஸ்து வழங்கக்கூடாது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஆனால் இதை கனடா அரசு மறுத்துள்ளது. இது குறித்து கனடா எல்லை பாது காப்பு அதிகாரி கூறும்போது, கப்பலில் வந்துள்ளவர்கள் அனைவரும் அப்பாவி களாக தென்படுகிறார்கள். அவர்கள் அகதிகள்தான் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

லியில் கைதான எம்.பிக்கள் இன்று பிணையில் விடுதலை

காலியில் கடந்த 12 ஆம் திகதி கைது செய்யப்பட்ட ஜனநாயக தேசியக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விஜித ஹேரத், அஜித் குமார, மாகாண சபை உறுப்பினர் நளின் ஹேவகே ஆகியோர் இன்று பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஜெனரல் சரத் பொன்சேகாவை விடுவிக்குமாறு கோரி, அன்றைய தினம் காலியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த போது இவர்கள் மூவர் உட்பட 10 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

நீதிமன்றத்தில் இவர்கள் ஆஜர்படுத்தப்பட்ட போது, இவர்களை 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு காலி மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

கனடா சென்றடைந்தோர் நிலை : கனேடியத் தமிழர் பேரவை

கப்பலில் கனடா சென்றடைந்தோரில் குழந்தைகளையும் பெண்களையும் நேரில் சந்திக்கக் கனேடியத் தமிழர் பேரவை விடுத்த வேண்டுகோள் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

தனித்துப் பயணித்த 35 பெண்களைக் கனேடியத் தமிழர் பேரவைச் சந்தித்துப் பேசியது. ஏனைய பெண்கள் தங்கள் குழந்தைகளோடு வேறொரு இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்ச் சமூகத்தைச் சார்ந்தோரைச் சந்தித்த பின்னர், இவர்கள் பயமற்றவராயும் ஓரளவு மன அமைதியுடனும் காணப்பட்டனர் எனப் பேரவைத் தெரிவிக்கின்றது.

கனேடியத் தமிழர் பேரவை,

"அவர்களது உரிமைகள் மற்றும் தொடரவிருக்கும் செயற்பாடுகள் பற்றி விளக்கியதுடன் தொடர்ந்து எவ்வாறு அவர்களது விசாரணைகள் நடைபெறும் என்பன போன்ற தெளிவான விபரங்களடங்கிய, தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட துண்டுப் பிரசுரங்களையும் வழங்கினர்.

இவர்கள் தங்கள் உறவினருக்கோ நண்பருக்கோ உடனடியாகத் தொலைபேசி அழைப்புக்களை ஏற்படுத்த ஏதுவாக ஒவ்வொருவரது கணக்கிலும் (தடுப்பு முகாமில் இவர்களுக்கென அரசு ஏற்படுத்தியிருக்கும் கணக்கு) சிறு தொகைப் பணமும் வைப்பிடப்பட்டது.

கடற்பயணத்தின் போது ஒருவர் இறந்துள்ளதாகக் கனேடியத் தமிழர் பேரவைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இது பற்றிய மேலதிக விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.

கனடா வந்தடைந்த ஏதிலிகள் மூன்று குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளனர். குழந்தைகளோடு உள்ள பெண்கள், ஆண்கள் மற்றும் பெண்கள் என வெவ்வேறு இடங்களில் இவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். குழந்தைகளும் பெண்களும் கனேடிய சிறாரின் சட்டங்களுக்கமைந்தே இவ்விடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்" என்று தெரிவித்திருக்கின்றது
மேலும் இங்கே தொடர்க...

இலங்கைக்கு ஆதரவு அளிக்குமாறு சர்வதேச சமூகத்திடம் சீனா கோரிக்கை

பயங்கரவாதத்øதை ஒழித்த பின்னர் துரித பொருளாதார அபிவிருத்தியில் ஈடுபட்டுள்ள இலங்கைக்கு சர்வதேச சமூகத்தின் ஆதரவு தேவை என்று சீனா தெரிவித்துள்ளது.

சீனா அதன் பங்களிப்பாக, சமாதானமும் ஸ்திரதன்மையும் மலர்ந்துவரும் இலங்கையில் மக்களது வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு இயற்கை சத்தியை பயன்படுத்தி பெரும் பிரயத்தனம் மேற்கொள்ளப்படும் இவ்வேளையில் அதற்கு தேவையான அனைத்தையும் வழங்க சீனா தன்னாலியன்ற முயற்சியை மேற்கொள்ளும் என்று அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் யாங் ஜெய்ச்சி, தற்பொழுது பெய்ஜிங்கிற்கு விஜயம் செய்திருந்த அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸிடம் உறுதியளித்துள்ளார்.

நாடுகள் சிறியதோ பெரியதோ அவை அவைக்கான பிரச்சினைகள் உண்டு.

சம்பந்தப்பட்ட நாட்டின் அபிலாஷைகளை கருத்தில் கொண்டு அந்தந்த சந்தர்ப்பத்திற்கு அமைய வெளியார் தலையீடும் அழுத்தமும் இன்றி அவை அவைக்கா

ன தீர்வு காணப்பட வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்று சீன அமைச்சர் சுட்டிக் காட்டியதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

கற்றுக் கொண்ட பாடங்கள், நல்லிணக்கம் ஆகியன தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நியமித்த ஆணைக்குழு அதன் விசாரணைகளை ஆரம்பித்து விட்டது என்று அமைச்சர் பீரிஸ் சீன அமைச்சரிடம் தெரிவித்தார்.

ஆணைக்குழ அதன் பணிகளை தொடர்வதற்கு சர்வதேச சமூகத்தின் பூரண அதரவையும் ஒத்துழைப்பையும் பெறுவது மிக முக்கியமாகும் என்றும் அமைச்சர் பீரிஸ் தெரிவித்தார்.

இதேவேளை, சீன சர்வதேச ஆய்வு நிலையத்தில் ராஜதந்திர சமூகத்தின் முன்னணி உறுப்பினர்களும் உள்ளுர் மற்றும் சர்வதேச ஊடகங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்ட நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அமைச்சர் பீரிஸ், பயங்கரவாதத்தை தோற்கடித்து நாட்டை துரித பொருளாதார அபிவிருத்தி மற்றும் நல்லிணக்க பாதையில் வழிநடத்திச் செல்லும் இலங்கையின் அனுபவத்தை எடுத்து விளக்கினார்.
மேலும் இங்கே தொடர்க...

‘2 கோடி டொலருக்கு மேல் கொடுத்து சன் k கப்பலில் கனடா வந்துள்ளனர்’
சன் k கப்பலில் கனடாவை சென்றடைந் துள்ள இலங்கைத் தமிழர்கள் சுமார் இரண்டு கோடிக்கு மேற்பட்ட அமெரிக்க டொலர் களை கடத்தல்காரர்களுக்கு கொடுத்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

தலா 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் அமெரிக்க டொலர்களை இவர்கள் செலுத்தியதன் பின்னரே தமது 3மாத கடற்பிரயாணத்தை தாய்லாந்திலிருந்து தொடங்கியிருக்கலாம் என கனேடிய பொது பாதுகாப்பு அமைச்சர் விக் டோஸ் கூறியுள்ளார்.

இந்தக் கப்பலில் பயணித்த பெண்கள் மற்றும் சிறார்களுக்கு கட்டண சலுகை ஏதாவது கடத்தல்காரர்களால் வழங்கப்பட்டதா என்பது குறித்து தமக்கு தெரியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

இப்படியான ஆட்கடத்தல்கள் மூலம் கடத்தல்காரர்கள் பெருந்தொகையான பணத்தை இலகுவாகப் பெறுவதற்கு சன் k. கப்பல் ஒரு நல்ல உதாரணம் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் கடந்த 3 மாதங்கள் கடினமான கடற்பயணத்தை மேற்கொண்ட பிரிட்டிஷ் கொலம்பியா கடற்பிராந்தியத்திற்கு சென்ற இந்தக் கப்பலை கனேடிய அதிகாரிகள் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். ஆரம்ப விசாரணைகளை மேற்கொண்ட குடிவரவு அதிகாரிகள் தற்போது 490 அகதிகளில் பலரை தடுப்பு முகாம்களுக்கு அனுப்பியுள்ளதாக ஊடகத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை கப்பலில் பயணித்த இலங்கையர்களின் பெயர் விபரங்கள் எதுவும் கனேடிய அரசாங்கத்தினால் வெளியிடப்படவில்லை. பிலிப்பைன்ஸணுக்கும் ஜப்பானுக்கும் இடையிலான தாய்லாந்து வளைகுடாவில் இருந்து இந்தக் கப்பல் பயணத்தை ஆரம்பித்துள்ளது. 10 மாதங்களுக்கு முன்னர் கனடாவை வந்தடைந்த ஓசியன் லேடி கப்பல் பயணித்த வழியாக ஆனால் சிறிது மாறுபட்ட பாதையில் சன் k கப்பல் பயணித்துள்ளதாக கனேடிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பிட்ட கப்பல் தாய்லாந்தில் இருந்தே பயணத்தை ஆரம்பித்தது என்ற விடயம் கப்பல் பயணிகளின் அகதி அந்தஸ்து பரிசீலனையின் போது கவனத்திற் கொள்ளப்படும் என்றும் அதிகாரிகள் மேலும் கூறினர்
மேலும் இங்கே தொடர்க...

சீனாவிலிருந்து கொண்டுவரப்பட்ட ரூ. 50 மில். பெறுமதியான சட்டவிரோத சிகரட்டுகள் மீட்பு

சீனாவிலிருந்து சட்டவிரோதமாகக் கொண்டு வரப்பட்ட 50 மில்லியன் ரூபா பெறுமதியான சிகரட்டுகள் கைப் பற்றப்பட்டுள்ளதுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கலால் திணைக் களத்தின் பேச்சாளர் எஸ். டி. பிரபாத் ஜயவிக்கிரம தெரிவித்தார்.

மினுவாங்கொடை பகுதியிலுள்ள பிர பல வர்த்தகரொருவரின் வீட்டுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த சட்ட விரோத சிகரட்டுகள் மீட்கப் பட்டுள்ளன.

கலால் திணைக்களத்துக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலொன்றின் அடிப்படையில் திணைக்களத்தின் அதிகாரிகளும் பொலிஸ் போதைவஸ்து குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளும் இணைந்து நீண்டகாலமாக நடத்தி வந்த தேடுதலின் விளைவாகவே நேற்று குறித்த வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சிகரெட்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாகவும் திணக்களத்தின் பேச்சாளர் கூறினார். இதன்போது 22 இலட்சத்து 50 ஆயிரம் சிகரெட்டுகள் மீட்கப்பட்டுள்ளன. முற்றுகையின் போது குறித்த வீட்டிலிருந்த உரிமையாளர் மற்றும் அவரது உதவியாளர் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.

சீனாவிலிருந்தே மேற்படி சிகரட்டுகள் சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. கைது செய்யப் பட்ட இருவரும் கலால் திணைக் களத்தின் ஆணையாளர் நாயகம் வசந்த அப்புஹாரச்சி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதும் அவர்களுக்கு டொபெக்கோ சட்டமூலத்தின் கீழ் இதற்கான தண்டனை பெற்றுக் கொடுக்கப்படுமெனவும் அவர் கூறினார்.

இதேவேளை இதுபோன்ற தகவல்களை கலால் திணைக்களத்திற்கு பெற்றுக் கொடுப்போருக்கு பெறுமதி மிக்க பரிசில் களை வழங்க திணைக்களம் தீர்மானித் திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...

யாழ். குடா கைத்தொழில் பேட்டை; அலரிமாளிகையில் 2ம் கட்ட பேச்சு


யாழ்ப்பாணத்தில் கைத்தொழில் பேட்டையினை நிறுவுவது தொடர்பான இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை நாளை செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அலரிமாளிகையில் நடைபெறவுள்ளது.

இதன்போது, கைத்தொழில் பேட்டையில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கையினை அதிகரிப்பது தொடர்பாக ஆராயப்படுமென வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

யாழ்ப்பாண அரச அதிபர் அலுவலகத்தில் சில வாரங்களுக்கு முன்னர் கைத்தொழில் பேட்டையினை நிறுவுவது தொடர்பான முதலாவது கூட்டம் ஆளுநர் தலைமையில் நடைபெற்றது. இதில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உட்பட நாட்டின் பல பாகங்களிலிருந்தும் முதலீட்டாளர்கள் கலந்து கொண்டனர்.

வளங்களைப் பயன்படுத்தி சிறந்த தரம்மிக்க பொருட்களை யாழ்ப்பாணத்தில் உற்பத்தி செய்வதே இக்கைத்தொழில் பேட்டையை நிறுவுவதன் பிரதான நோக்கமெனவும் ஆளுநர் கூறினார்.

இதேவேளை, யாழ்ப்பாணத்திலுள்ள தீவுப் பகுதிகளில் ஹோட்டல்களை அமைப்பதில் முதலீட்டாளர்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருவதனால், சுற்றுலாத்துறையைச் சேர்ந்தோருக்கு நிலங்களை பகிர்ந்தளிப்பது குறித்தும் ஆராய்ந்து வருவதாக ஆளுநர் தெரிவித்தார்.

அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டிய அவர் மிக விரைவில் தீவுப் பகுதிகள் சுற்றுலா மையங்களாக மாற்றியமைக்கப்படுமெனவும் குறிப்பிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...

உலகம் வியக்கும் உற்பத்தி மையமாக இலங்கை திகழும்


‘உலக நாடுகளின் குப்பைகளை கொட்டும்
இடமாக எமது நாட்டை வைத்திருக்க முடியாது’

ஜனாதிபதிமேட் இன் ஸ்ரீலங்கா எனும் மகுடத்தின் கீழ் உலகம் வியக்கும் உற்பத்தி கேந்திர மையமாக இலங்கை கட்டியெழுப்பப் படுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

சர்வதேச நாடுகளின் கழிவுகளை குவிக்கும் நாடகவன்றி இனி இலங்கையை உலக முன்னிலையில் மாபெரும் உற்பத்தி நாடாகத் திகழ வைப்பதற்கான திட்டங்களை நடைமுறைப்படுத்த ஆரம்பித்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

உலகிலேயே கடலல்லாத பிரதேசத்தில் நிர்மாணிக்கப்படும் முதல் துறைமுகமென வர்ணிக்கப்படும் அம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்திற்கு கடல் நீர் நிரப்பும் நிகழ்வை உத்தியோகபூர்வமாக நேற்று ஆரம்பித்து வைத்து உரை யாற்றியபோதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

பிரதமர் டி. எம். ஜயரட்ன, சபாநாயகர் சமல் ராஜபக்ஷ உட்பட சிரேஷ்ட அமைச்சர்கள், ராஜதந்திரிகள், மதத் தலைவர்கள் மற்றும் முக்கியஸ்தர்களுடன் நாடளாவிய ரீதியிலிருந்து பெருமளவு மக்கள் பங்கேற்ற இந்நிகழ்வில் மேலும் உரை நிகழ்த்திய ஜனாதிபதி :

இற்றைக்கு 50 ஆண்டுகளுக்கு முன்னர் எம்மைவிட மிக மிக பின்னடைவாகவிருந்த நாடுகள் இன்று பெரும் முன்னேற்ற மடைந்துள்ளன. அதனைப் பார்த்து ஆதங்கப்படுவதற்கான நேரம் இதுவல்ல.

தாய்நாட்டை பொருளாதாரத்திலும் அபிவிருத்தியிலும் கட்டியெழுப்பி உற்பத்தியின் கேந்திர நிலையமாக மாற்றும் எமது இலக் கினை வெற்றி கொள்ள சகலரும் அர்ப் பணிப்புடன் செயலாற்ற வேண்டியது அவசியம்.

பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர் இத்தகைய அபிவிருத்தித் திட்டங்கள் நாட்டில் நடைபெறுகின்றன. அம்பாந் தோட்டைத் துறைமுகத்தைப் பொறுத்தவரை பல தடைகள் சவால்கள் விமர்சனங்களுக்குப் பின்னர் வெற்றிகரமாக தற்போது நடைமுறைப் படுத்தப்படுகிது.

எமது நாட்டின் வரலாற்றில் பல துறைமுகங்கள் இருந்துள்ளன. எனினும் இந்த துறைமுகமானது உலக வரைபடத்தில் இலங்கையைக் குறித்துக் காட்டும் ஒன்றாகத் திகழ்கிறது. சர்வதேசத்துக்கும் இலங்கைக்குமான தொடர்பை மேலும் வலுப்படுத்துவதாகவும் இது அமைகிறது.

நாட்டுக்கான சுதந்திரத்தினைப் பெற்றுக் கொடுத்துள்ள எமக்கு அபிவிருத்தி மற்றும் பொருளாதார ரீதியில் நாட்டைக் கட்டியெழுப்பும் பாரிய பொறுப்பும் உள்ளது. கடந்த வருடம் மே மாதம் நம் நாட்டை சுதந்திரமாக்கினோம். நாம் இன்று அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிரப்பும் கடல் நீர் சகல பலவீன சிந்தனைகளையும் கழுவிவிடும் என்பது உறுதி.

தொடர்ந்தும் சர்வதேசத்தின் வர்த்தக கேந்திர நிலையமாகவே இலங்கை இருந்து வந்துள்ளது. எனினும் இந்த துறைமுகம் நிர்மாணிக்கப்பட்டதனால் எமது தாய்நாடு உலகளாவிய ரீதியில் பிரசித்தமடைகிறது.

எமது நாட்டில் சுதந்திர பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப வேண்டும் என்ற நோக்கிலேயே மஹிந்த சிந்தனை திட்டத்தின் கீழ் பஞ்சமகா திட்டங்களை வகுத்துச் செயற்படுத்தி வருகிறோம். இதன் மூலம் ஐந்து முக்கிய துறைமுகங்களையும் நிர்மாணித்து வருகிறோம்.

உலக நாடுகளின் குப்பைகளைக் கொட்டுகின்ற இடமாக எமது நாட்டை வைத்திருக்க முடியாது. ‘மேட் இன் ஸ்ரீலங்கா’ என்ற பெயருடன் சர்வதேசமெங்கும் புகழ்பெறும் உற்பத்திப் பொருட்களைத் தயாரிக்கின்ற பொருளாதார மையமாக இந்நாடு இனி திகழ வேண்டும்.

வரட்சியான மாவட்டமாக வர்ணிக்கப்பட்ட அம்பாந்தோட்டையில் தற்போது சர்வதேச துறைமுகம், விமான நிலையம், சர்வதேச விளையாட்டரங்கு, அதிவேக பாதைகள் புதிய ரயில் பாதைகள் என பாரிய அபிவிருத்திகள் இடம்பெறுகின்றன. இந்த துறைமுகம் மூலம் முழு நாட்டினதும் பொருளாதார மையமாக இது திகழும்.

எமது கண்ணுக்குப் புலப்படும் வகையில் நாளாந்தம் நூற்றுக்கணக்கான கப்பல்கள் எமது பிரதேசத்தை ஊடறுத்துச் செல்கின்றன. மத்திய கிழக்கு ஆபிரிக்க வலயங்களைப் போன்று ஆசிய நாடுகளைச் சேர்ந்த கப்பல்களும் இதிலடங்குகின்றன. இவற்றுக்கான எரிபொருள் சேவைகளை வழங்குவதுடன் பெரும் தொழில் வாய்ப்புக்களை உருவாக்கும் மையமாகவும் இத்துறைமுகம் விளங்குகிறது எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்
மேலும் இங்கே தொடர்க...