4 ஜூன், 2010

எவரெஸ்ட் சிகர உச்சியில் இங்கிலாந்து வீரர் சாவுஎவரெஸ்ட் சிகர னஇங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர் பீட்டர் கின்லோஜ். மலை ஏறும் வீரர். இவர் தனது குழுவினருடன் சீனப் பகுதியில் இருந்து இமய மலையில் உள்ள உலகிலேயே மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் வெற்றிகரமாக ஏறினார்.

கடந்த மாதம் 25-ந் தேதி இவர் சீன பகுதியில் இருந்து 29 ஆயிரத்து 95 அடி உயரத்தில் (8,800 மீட்டர்) உள்ள எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார். உடல் நலக்கோளாறு காரணமாக சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தார்.

ஆனால் அவரது உடலை கீழே எடுத்து வரமுடியாமல் மலை ஏறும் குழுவினர் அவதிப்படுகின்றனர். ஏனெ னில் அங்கு போதுமான ஆக்ஜிஜன் இல்லை. மிக மோசமான தட்ப வெப் பம் நிலவுகிறது என்று சீன மலையேறுவோர் சங்க துணைத் தலைவர் யங்பெங் தெரிவித்தார்.
இந்த ஆண்டில் மட்டும் சீன பகுதியில் இருந்து எவ ரெஸ்ட் சிகரத்தில் ஏறிய 4 பேர் பரிதாபமாக இறந் துள்ளனர். அவர்களில் கின்-லோச் 4-வது நபர் ஆவார்.
மேலும் இங்கே தொடர்க...

ஜனாதிபதி தலைமையிலான குழு தமிழ் கூட்டமைப்புடன் திங்களன்று பேச்சு

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையில் எதிர்வரும் ஏழாம் திகதி திங்கட்கிழமை பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக அரசாங்க வட்டாரங்களிலிருந்து நம்பகமாகத் தெரியவருகிறது.

பேச்சுவார்த்தையில் கலந்துகொள்வதற்கான உத்தியோகபூர்வ அழைப்பு இன்று வெள்ளிக்கிழமை கூட்டமைப்புக்கு அனுப்பப்படும் சாத்தியம் உள்ளதாக அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் குறிப்பிட்டார். இதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுவருதாகவும் அவர் தெரிவித்தார்.

அரசாங்க தரப்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் முக்கிய அமைச்சர்கள் சிலரும் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வார்கள் என்றும் சிரேஷ்ட அமைச்சர் கூறினார். மேலும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சார்பில் அதன் நாடாளுமன்ற குழுத் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையிலான பிரதிநிதிகள் கலந்துகொள்வார்கள் என அறிய முடிகின்றது.

அரசாங்க பிரதிநிதிகளுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையின்போது அரசியல் தீர்வுத்திட்டம் மற்றும் வடக்கு கிழக்கு அபிவிருத்தி வேலைத்திட்டம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசப்படும் என்று தெரியவருகிறது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் எட்டாம் திகதி செவ்வாய்க்கிழமை இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ள நிலையில் ஏழாம் திகதி திங்கட்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளமை விசேட அம்சமாகும் எனக் கருதப்படுகின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு நடத்த எதிர்பார்ப்பதாக அரசாங்கம் கூறிவந்த நிலையில் அரசாங்கத்துடன் பேச்சு நடத்தத் தயார் என்று தமிழ்க்கூட்டமைப்பு அண்மையில் தெரிவித்திருந்தது.

இதனையடுத்து அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்ததாக தெரியவருகின்றது.

அதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவர் இரா. சம்பந்தனுடன் அண்மையில் உத்தியோகப்பற்றற்ற முறையிலான பேச்சுவார்த்தை ஒன்றில் தான் ஈடுபட்டதாகவும் இதன்போது பல்வேறு விடயங்கள் குறித்து ஆராயப்பட்டதாகவும் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் கடந்த செவ்வாய்க்கிழமை தெரிவித்திருந்தார்.

மேலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை விரைவில் சந்தித்துப் பேச்சு நடத்துவார் என்றும் வெளிவிவகார அமைச்சர் கூறியிருந்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பல விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அரசாங்கம் தயாராகவே இருக்கின்றது என்றும் கூட்டமைப்புக்கு இவ்விடயம் தொடர்பில் அரசாங்கம் திறந்த அழைப்பு ஒன்றையே விடுத்துள்ளது எனவும் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

புதிய அரசாங்கம் பதவியேற்ற பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நடைபெறுகின்ற முதலாவது சந்திப்பு இதுவாகும். இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி தலைமையிலான குழுவினர் அங்கு பிரதமர் உட்பட முக்கியஸ்தர்கள் பலருடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளனர். இந்த பேச்சுவார்த்தைகளின்போது இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் விரிவாக ஆராயப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இனப்பிரச்சினைக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்வுத்திட்டம் ஒன்றினை தயாரித்துள்ளதாகத் தெரியவருகின்றது. இந்த தீர்வுத்திட்டம் குறித்து இந்திய மத்திய அரசுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளதாகத் தமிழ்க் கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த நிலையிலேயே புதுடில்லிக்கான ஜனாதிபதியின் விஜயம் அமையவுள்ளது.

இந்திய தலைவர்களுடனான பேச்சுக்களுக்கு முன்னோடியாகவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமிழ்க் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்த தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இங்கே தொடர்க...

பாலியல் குற்றம்புரிந்த ஆசிரியர் தலவாக்கலையில் கைது

தலவாக்கலையில் உள்ள தமிழ்ப் பாடசாலை ஒன்றில் சுமார் 12 மாணவிகளிடம் பாலியல் குற்றம் புரிந்ததாகக் கூறப்படும், 50 வயதான ஆசிரியர் ஒருவரை இன்று காலை பொலிஸார் கைது செய்தனர்.

பல நாட்களாகத் தலைமறைவாகி இருந்த இவரைப் பொலிஸார் தேடிவந்தமை குறிப்பிடத்தக்கது.

இவர் சட்டதரணி ரேணுகா ஹேரத்திடம் தனக்கு முன்பிணை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்
மேலும் இங்கே தொடர்க...

"தென்னிந்திய திரைப்படங்களை தடை செய்ய வேண்டியதில்லை'

இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (ஐஃபா) அமிதாப்பச்சன் உட்பட முக்கிய நடிகர்கள் கலந்து கொள்ளாததன் காரணமாக தென்னிந்தியத் திரைப்படங்களை இலங்கையில் திரையிடுவதை தடை செய்ய வேண்டிய அவசியமில்லையெனத் தெரிவிக்கும் அரசாங்கம், சர்வதேச ரீதியில் புலம்பெயர் புலி ஆதரவாளர்களின் தூண்டுதலின் பேரிலேயே தென்னிந்தியாவில் எதிர்ப்பு ஏற்பட்டது. இதனை பெரிதுபடுத்த வேண்டிய அவசியமில்லையென்றும் அறிவித்துள்ளது. கொழும்பில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும்போதே தகவல் மற்றும் ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல்ல இதனைத் தெரிவித்தார்.

அமைச்சர் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

தென்னிந்தியாவில் எமக்கு எதிராக எவ்வாறான எதிர்ப்புகள் எழுந்தாலும் இந்திய மத்திய அரசாங்கம் எமது நாட்டுக்கு சாதாகமான ரீதியிலேயே தீர்மானங்களை மேற்கொள்கின்றது.

அண்மையில் மேலும் இரண்டு வருடங்களுக்கு விடுதலைப் புலிகள் அமைப்பை தடை செய்யப்பட்ட அமைப்பாக பிரகடனப்படுத்தியமை இதற்கு சிறந்த உதாரணமாகும். எனவே எந்த ரீதியில் அழுத்தங்கள் வந்த போதிலும் ஐஃபா நிகழ்ச்சி வெற்றிகரமாக நடைபெறுகிறது. இதன் மூலம் புலம்பெயர்ந்தவர்களின் முயற்சி தோல்வி கண்டுள்ளது
மேலும் இங்கே தொடர்க...

சர்வதேச நாணய நிதியத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக அரசின் செயற்பாடு-ஐ.தே.க

வாழ்க்கைச் செலவு சுமைக்கு வழி தேடாது வாகனங்களுக்கான வரிகளை குறைப்பதாக கூறுகின்ற அரசாங்கம், சர்வதேச நாணய நிதியத்திடம் சரணடைந்துள்ளதுடன் அதன் நிகழ்ச்சி நிரல்களுக்கு அமைவாகவே செயற்பட்டு வருகின்றது என்று பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய தேசிய முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது.

சொகுசுப் பொருட்களுக்கான வரிகளைக் குறைத்து அத்தியாவசியப் பொருட்களுக்கான விலைகளை அதிகரிப்பதன் ஊடாக அரசாங்கம் வரிகளின் சமநிலையைப் பேணும் நோக்கில் வஞ்சகமான பொருளாதாரக் கொள்கையை முன்னெடுத்து வருகின்றது. சாதாரண மக்களுக்கு துரோகமிழைக்கின்ற எந்த இலக்கை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கின்றது என்றும் முன்னணி கேள்வியெழுப்பியுள்ளது.

எதிர்க் கட்சி அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு பேசுகையிலேயே ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் கூறுகையில்,

யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் சகலருக்கும் நிவாரணம் வழங்கப்படும் என அரசாங்கம் உறுதியளித்தது. சம்பள அதிகரிப்பு மற்றும் விலைவாசி குறைப்பு போன்றவற்றை மேற்கொள்வதாகவும் தொடர்ந்தும் கூறி வந்தது.

ஆனாலும் அரசாங்கம் வழங்கிய உறுதிமொழிகள் இதுவரையில் நிறைவேற்றப்படவில்லை. மறுபுறத்தில் மக்கள் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். கடந்த வாரத்தில் கோதுமை மாவின் விலையை அதிகரித்ததன் மூலம் ஏனைய மா உணவுப் பொருட்களின் விலைகளும் அதிகரித்தன. அது மட்டுமல்லாமல் சமையல் எரிவாயுவின் விலையை அதிகரித்து மக்களின் தலையில் பாரிய சுமையொன்று தூக்கி வைக்கப்பட்டுள்ளது. இது இவ்வாறிருக்க அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்றன.

இந்த சந்தர்ப்பத்தில் தான் வாகனங்களுக்கான வரிகளைக் குறைத்திருப்பதாக கூறுகின்றது. அதி சொகுசு வாகனங்களின் வரிகளைக் குறைத்து அதிகமான வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு ஊக்குவிக்கின்ற அரசாங்கம்ல சாதாரண மக்களின் வாழ்க்கை நிலையை ஏன் சிந்தித்துப் பார்க்கத் தவறியது என்று கேட்க விரும்புகிறோம். இந் நிலையில் அடுத்த வாரமளவில் பால்மாவின் விலைகளும் அதிகரிக்கக் கூடிய சாத்தியக்கூறுகள் தென்படுகின்றன. எரிபொருள் விலை குறைப்பு விடயத்தில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பையே உதறித் தள்ளிவிட்டு அதற்காக பலவித காரணங்களைக் கூறிய அரசாங்கம், தற்போது வாகன வரிகளை குறைத்திருப்பதாகக் கூறி அதற்கு பல காரணங்களைக் கூறுகின்றது.

இன்றைய ஆட்சியாளர்களின் தில்லுமுல்லுகளை மக்கள் நன்றாகப் புரிந்து வைத்துள்ளனர் என்பதை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும். சர்வதேச நாணய நிதியத்தின் உறவுகளை வளர்த்துக் கொள்ளும்பட்சத்தில் அதனிடம் அரசாங்கம் சரணடைந்திருக்கின்றது என்றே கூற வேண்டும். அந்த நிதியம் இலங்கைக்கு கடன் கொடுக்க வேண்டுமெனில் அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரித்துக் காட்ட வேண்டியது சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனையாகும். அந்த நிபந்தனையின் பிரகாரமே அரசாங்கத்தின் பொருளாதாரக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டு வருகின்றது.பணம் படைத்தவர்களுக்கு நிவாரணம் வழங்குகின்ற அதேவேளை அரசின் வருமானமும் அதிகரிக்கின்றது. வாகன வரிகளைக் குறைத்து அதனை ஈடு செய்வதற்காக அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை அரசாங்கம் அதிகரித்து மக்களின் வயிற்றில் அடிக்கின்றது. பசி, பட்டினிக்கான நிவாரணம் முற்றாக தடுக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்திடம் சிறந்த நிர்வாகம் இல்லாததால் அதன் பொருளாதாரக் கொள்கையும் ஸ்திரத் தன்மையை இழந்து வருகின்றது என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

வன்னி முகாம்களில் மக்கள் திண்டாடும் போது கொழும்பில் கொண்டாட்டம்? ஜனநாயக தேசிய முன்னணி கேள்விவன்னி முகாம்களில் மக்கள் திண்டாடும் போது கொழும்பில் கொண்டாட்டம் தேவையா என ஜனநாயக தேசிய முன்னணி கேள்வி எழுப்பியுள்ளது.

சர்வதேச இந்திய திரைப்பட விருது வழங்கும் விழா கொழும்பில் இன்று ஆரம்பமானதை தொடர்ந்து கொழும்பில் பல இடங்களிலும் கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகள் நடைப்பெற்று வருகின்றன. இதே வேளை இவ் விழாவில் கலந்து கொள்ள பல தென்னிந்திய திரைப்பட நட்சத்திரங்கள் இலங்கைக்கு வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த கால யுத்தத்தின் போது பாதிக்கப்பட்ட மக்கள் இன்னமும் முகாம்களில் இருப்பதோடு பல பிரச்சினைகளை எதிர் நோக்குகின்றனர். ஆனால் கொழும்பில் சர்வதேச இந்திய திரைப்பட விருது வழங்கும் விழா கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றது. வடக்கில் மக்கள் திண்டாடும் போது பொழும்பில் கொண்டாட்டம் தேவையா என ஜனநாயக தேசிய முன்னணி கேள்வி எழுப்பியுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...