1 ஏப்ரல், 2011

கற்றறிந்த பாடங்களும் நல்லிணக்கமும் ஆணைக்குழுவின் செயற்பாடு நீடிப்பு



கற்றறிந்த பாடங்களும் நல்லிணக்கமும் தொடர்பான ஆணைக்குழுவின் செயற்பாட்டுக் காலத்தை மேலும் மூன்று மாதங்களினால் நீடிப்பது தொடர்பில் ஆராயப்பட்டுவருவதாக தகவல்கள் தெரிவித்தன.

எனினும் இது தொடர்பில் நல்லிணக்க ஆணைக்குழுவின் சார்பில் அரசாங்கத்திடம் இதுவரை கோரிக்கை விடுக்கப்பட்டதா? என்ற விடயம் உறுதிபடுத்தப்படாமல் உள்ளதாகவே தெரிவிக்கப்படுகின்றது.

ஏற்கனவே நல்லிணக்க ஆணைக்குழுவின் செயற்பாட்டுக் காலத்தை ஒரு வருடத்தினால் நீடிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்தன. ஆனால் அவ்வாறு நீடிப்புக்கோரிக்கையை ஆணைக்குழுவின் சார்பில் முன்வைக்கவில்லை என ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார்.

எனினும் தற்போது அதன் சேவைக்காலத்தை மேலும் மூன்று மாதங்களினால் நீடிப்பது குறித்து ஆராயப்பட்டுவருவதாக தகவல்கள் தெரிவித்தன.

கற்றறிந்த பாடங்களும் நல்லிணக்கமும் தொடர்பான ஆணைக்குழு எதிர்வரும் மே மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் தனது இறுதி பரிந்துரைகளை சமர்ப்பிக்கும் நோக்கில் செயற்பட்டுவருகின்றது.

நாடளாவிய ரீதியில் பல மாவட்டங்களிலும் கொழும்பிலும் ஆணைக்குழுவின் அமர்வுகள் நடைபெற்றுள்ள நிலையில் இறுதி பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை தயாரிக்கும் நோக்கில் பெறப்பட்ட சாட்சியங்களை ஆய்வு செய்யும் பணிகள் தற்போது இடம்பெற்றுவருகின்றன.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கையர் உட்பட ஆஸி.யில் கடனட்டை மோசடியில் ஈடுபட்ட கும்பல் கைது

இலங்கையர்களும் அங்கம் வகிக்கும் கடனட்டை மோசடிக் கும்பல் ஒன்று அவுஸ்திரேலியாவின் மெல்பேன் நகரில் கைது செய்யப்பட்டது.

சுமார் 56 பேரைக் கொண்ட இந்த மோசடிக் கும்பலில் பிரித்தானியா மற்றும் கனடா போன்ற நாடுகளில் இருந்து சென்றிருப்பவர்களும் உள்ளடங்குவதாக அவுஸ்திரேலியப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவுஸ்திரேலியாவில் எரிபொருள் நிலையங்களில் பணியாற்றுமிலங்கையர்களைப் பணத்தைக் கொடுத்து வளைத்தெடுத்து அவர்கள் மூலம் கடனட்டைத் தகவல்களைத் திருடுவதில் பிரஸ்தாப கும்பல் ஈடுபட்டுள்ளது.

அதன்மூலம் அவுஸ்திரேலியாவில் பரந்த கடனட்டை மோசடி வலையமைப்பொன்றை உருவாக்க அவர்கள் முயன்றுள்ளனர்.அவ்வாறான மோசடிகள் மூலம் அவர்கள் இதுவரை 25.4 மில்லியன் அமெரிக்க டொலர்களை மோசடியாக உழைத்துக் கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அத்துடன் அவர்கள் கைது செய்யப்படும்போது அவர்களிடம் இருந்த அறுபத்து மூவாயிரம் கடனட்டைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும் இங்கே தொடர்க...

யாழ். குடாவில் இரவு 9 மணிக்கு பின்னரும் சோதனை தொடரும்

யாழ். குடாநாட்டில் இராணுவத்தினரின் வீதிச் சோதனை நடவடிக்கைகள் இனிமேல் இரவு 9 மணிக்குப் பின்னரும் நீடிக்கும் என யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த சர்வ மதத் தலைவர்கள்குழுவினருடனான சந்திப்பின் போதே இராணுவத் தளபதி இவ்வாறு தெரிவித்தார்.

இதுவரை காலமும் இரவு 6 மணிக்கு ஆரம்பமாகும் இரக்ஷிணுவத்தினரின் வீதிச் சோதனைகள் இரவு 8.30 மணிக்கு நிறைவு பெற்றுவிடும்.அதன் பின்னர் செல்லும் வாகனங்களோ மோட்டார் சைக்கிள்களோ மறிக்கப்பட்டு சோதனையிடப்படுவதில்லை.

குடாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட களவுகளும் கொலைகளும் பெரும்பாலும் பின்னிரவுகளிலேயே மேற்கொள்ளப்பட்டு வந்தன. அதேவேளை நெடுந்தூர வாகனங்களும் இரவு 9 மணிக்குப் பின்னரே யாழ்.குடாநாட்டுக்குள் நுழைகின்றன.

இது தொடர்பாக பல தரப்பட்டவர்களாலும் இராணுவத்தினரிடம் எடுத்துக்கூறப்பட்டபோதும் இராணுவம் மட்டுப்படுத்தப்பட்ட நேரம் மட்டுமே வீதிச் சோதனை மேற்கொண்டு வந்தன. இதனையடுத்தே சோதனை நடவடிக்கைகள் நீடிக்கப்பட்டுள்ளன.
மேலும் இங்கே தொடர்க...

மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்துக்கு அமைவாகவே எந்தப் பேச்சும் அமையவேண்டும்: ஹெல உறுமய

அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் எவ்வகையான பேச்சுக்களை நடத்தினாலும் மக்கள் ஆணை வழங்கியுள்ள மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்துக்கு அமைவாகவே அவை இருக்கவேண்டும். அதனை மீறி எதனையும் செய்ய முடியாது. மக்களின் ஆணையை தமிழ்க் கூட்டமைப்பும் மதிக்கவேண்டும் என்று ஜாதிக ஹெல உறுமயவின் பிரதிநிதியும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட மாகாண சபை முறைமை தோல்வியடைந்துவிட்டது. மக்கள் சபைகளே சிறந்த முறைமையாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அமைச்சர் சம்பிக்க ரணவக்க மேலும் கூறியதாவது,

அரசாங்கம் தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் அபிவிருத்தி மற்றும் ஏனைய விடயங்கள் குறித்து பேச்சுக்களை நடத்திவருகின்றது. ஆனால் அந்த பேச்சுக்கள் மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்துக்கு அமைவாகவே இடம்பெறவேண்டும் .

காரணம் நாட்டின் அதிகளவான மக்கள் ஜனாதிபதியின் மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்துக்கே ஆணை வழங்கியுள்ளனர். அதனை அனைவரும் மதிக்கவேண்டியது அவசியமாகும்.

அரசியல் தீர்வு அல்லது எவ்வக்ஷிறான செயற்பாடாக இருந்தாலும் அது மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தை மீறிச் செல்லக்கூடாது. சகல பிரிவினரினதும் சம்மதத்துடனேயே அனைத்து விடயங்களும் இடம்பெறவேண்டும். மேலும் இந்தியா எம்மீது சுமத்திய மாகாண சபை முறைமையானது தோல்விகண்டுள்ளது என்றே நாங்கள் கூறுகின்றோம். எதிர்பார்த்த விடயம் மாகாண சபை முறைமையில் கிடைக்கவில்லை.

எனவே உள்ளூராட்சிமன்றங்களை அடிப்படையாகக்கொண்டு கிராம சேவை பிரிவுகளை இணைத்து மேற்கொள்ளப்படவுள்ள மக்கள் சபைகள் என்ற வேலைத்திட்டமே சிறந்த தீர்வுத்திட்டமாக எதிர்காலத்தில் அமையும் என்பது எமது நம்பிக்கையாகும்.

எனவே நாங்கள மக்கள் சபைகள் என்ற விடயத்துக்கே செல்லவேண்டும். அந்த வேலைத்திட்டத்தை ஊக்குவித்து விரைவில் நாடளாவிய ரீதியில் மக்கள் சபைகளை அமைத்து கிராம்ஙகளின் அபிவிருத்திக்காக செயற்படவேண்டும்.
மேலும் இங்கே தொடர்க...

அரசாங்கம் கூட்டமைப்புடன் தொடர் சந்திப்புக்களை நடத்தவேண்டும்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி மீள்குடியேற்றம் மற்றும் அரசியல் தீர்வு விடயங்கள் தொடர்பில் அரசாங்கம் தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் தொடர் சந்திப்புக்களை நடத்தவேண்டும். வடக்கு கிழக்கு மக்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கே அதிகளவில் கடந்த தேர்தலில் வாக்களித்துள்ளனர் என்று ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் மற்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஆகியவற்றுக்கு இடையிலான சந்திப்புக்கள் தொடர்பில் தகவல் வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் இது தொடர்பில் மேலும் கூறியதாவது,

இம்முறை நடைபெற்ற உள்ளூராட்சிமன்ற தேர்தலில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அதிக வெற்றிகளை ஈட்டிக்கொண்டுள்ளது. அதாவது மக்கள் அந்தக் கட்சிக்கு அதிகளவில் வாக்களித்துள்ளனர்.

எனவே இதனை அரசாங்கம் புரிந்துகொள்ளவேண்டும் என்பதுடன் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி மீள்குடியேற்றம் மற்றும் அரசியல் தீர்வு விடயங்கள் தொடர்பில் தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் தொடர் சந்திப்புக்களை நடத்தவேண்டும். வெறுமனே பேச்சுக்களை நடத்திக்கொண்டிருக்காமல் ஆக்கபூர்வமாகவும் செயற்பாட்டு ரீதியாகவும் செயற்பட்டு தீர்மானங்களை எடுக்கவேண்டியது அவசியமாகும்.

வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு கிடைத்துள்ள மக்கள் ஆணையை அரசாங்கம் மதித்து அவர்களுடன் இணைந்து செயற்பட வேண்டும். ஏற்கனவே சில சுற்றுப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளதாக அறிகின்றோம். பேச்சுக்கள் ஆக்கபூர்வமாக அமையவேண்டும். அரசியல் தீர்வு தொடர்பில் நகர்வுகள் முன்னெடுக்கப்படுவது அவசியமாகும்.
மேலும் இங்கே தொடர்க...

அனைத்து உள்ளூராட்சிமன்ற தேர்தலின் பின்னரே வட மாகாண சபை தேர்தல்

எஞ்சியுள்ள அனைத்து உள்ளூராட்சிமன்றங்களுக்கும் தேர்தல் நடத்தப்பட்டதன் பின்னரே வட மாகாண சபை தேர்தல் குறித்து அரசாங்கம் ஆராயும் என்று நம்பகரமான தகவல்கள் தெரிவித்தன.

கிழக்கு மாகாண சபை உள்ளிட்ட நாட்டின் எட்டு மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ள நிலையில் வடக்கு மாகாண சபைக்கு தேர்தல் இன்னும் நடத்தப்படவேண்டியுள்ளது.

இந்நிலையில் கடந்த 17 ஆம் திகதி 234 உள்ளூராட்சி சபைகளுக்கு உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தல் நடத்தப்பட்டது.

இதில் ஆளும் கட்சி 205 உள்ளூராட்சி மன்றங்களை கைப்பற்றியிருந்தது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பு 12 சபைகளையும் ஐக்கிய தேசிய கட்சி 9 மன்றங்களையும் கைப்பற்றியிருந்தன.

இந்நிலையில் எஞ்சியுள்ள 101 சபைகளுக்கு தேர்தலை நடத்தியதன் பின்னரே வடக்கு மாகாண சபை தேர்தல் குறித்து அரசாங்கம் ஆராயும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் வடக்கு மாகாண சபை தேர்தலானது தற்போது பிரதேசவாரி முறைமையின் அடிப்படையிலேயே நடைபெறும் என்று அமைச்சர் ஒருவர் குறிப்பிட்டார். ஆனால் அதற்கு முன்னர் மீள்குடியேற்றம் நிறைவடையவேண்டும் என்றும் அவர் கூறினார்.

இதேவேளை உள்ளூராட்சி மன்ற திருத்தச் சட்டமூலம் விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்படவுள்ள நிலையில் அடுத்த உள்ளூராட்சிமன்ற தேர்தலானது தொகுதி மற்றும் பிரதேசவாரி ஆகிய இரண்டு முறைமைகளும் கலந்த வகையில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கில் முழுமையாக நிலக்கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு அங்கு இடம்பெயர்ந்த மக்கள் அனைவரும் மீள்குடியேற்றப்பட்ட பின்னரே வடக்கு மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளும்.

அதற்கு இன்னும் சில மாதங்கள் எடுக்கலாம் என்று அண்மையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

முரளிக்காக இப்போட்டியில் வெற்றியடைவோம் - ஜனாதிபதி





முத்தையா முரளிதரனை கெளரவிக்கும் முகமாக உலகக் கிண்ணத்தை வென்றெடுக்க களமிறங்கியுள்ள இலங்கை கிரிக்கெட் அணியின் பின்னால் அனைத்து இலங்கையர்களும் அணிதிரளும்படி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கேட்டுள் ளார்.

முரளி ஊக்கம் மிக்க ஓர் உண்மையான இலங்கை மகன் என்று ஜனாதிபதி வர்ணித்துள்ளார்.

இலங்கைக்கும் நியூசிலாந் துக்கும் இடையில் நடைபெற்ற அரை இறுதிப் போட்டியில் கடைசியாக தோன்றிய முரளிதரனுக்கு போட்டி முடிந்தவுடன் ஜனாதிபதி ராஜபக்ஷ அவர்கள் தனது நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்.
மேலும் இங்கே தொடர்க...

விமான நிலையத்தில் காணாமல் போன ரூ. 6 கோடி பெறுமதியான தங்க பிஸ்கட்டுகள் மீட்பு; 7 பேர் கைது




கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் களஞ்சியசாலையில் வைத்து காணாமல் போன சுமார் 6 கோடி ரூபா பெறுமதியான தங்க பிஸ்கட்டுகள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

இத்தங்கம் காணாமல் போனமை தொடர்பாக உள்ளூர் விமான சேவை நிறுவனமொன்றின் ஊழியர்கள் 7 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளது டன் 22 இலட்சம் ரூபா பணத்தையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

தங்க பிஸ்கட்டுகள் சிலவற்றை சந்தேக நபர்கள் விற்பனை செய்து பெற்ற பணம் இதுவென பொலிஸ் பேச்சாளர் பிரஷாந்த ஜயக்கொடி தெரிவித்தார். செட்டியார் தெருவிலுள்ள நகையகமொன்றின் உரிமையாளர் இறக்குமதி செய்த 5 கோடி பெறுமதியான தங்கம் உட்பட 6 கோடி பெறுமதியான தங்கம் மார்ச் 21 ஆம் திகதி பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விமான சரக்குப் பிரிவு களஞ்சியசாலையில் வைத்து காணாமல் போனமை குறிப்பிடத்தக்கது.

சுமார் 15 கிலோ எடையுடைய 126 தங்க பிஸ்கட்டுகளும் நகைகளும் காணாமல் போயிருந்தன.

குற்றப் புலனாய்வுப் பொலிஸார் இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டனர்.

இது தொடர்பான விசாரணைகளுக்காக சிரேஷ்ட சுங்க அதிகாரிகள் இருவரை சுங்கப் பணிப்பாளர் நாயகம் சுதர்ம கருணாரட்ன நியமித்திருந்தார்.
மேலும் இங்கே தொடர்க...

வவுனியா ரயில் பஸ்ஸஞுடன் மோதி கோர விபத்து






மாத்தறையிலிருந்து வவுனியா நோக்கிச் சென்ற ரஜரட்ட ரெஜின கடுகதி ரயிலுடன் பஸ்ஸொன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

நேற்று பகல் 1.55 க்கு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட ‘ரஜரட்ட ரெஜின’ கடுகதி ரயில் ராகம ரயில் நிலைத்திலிருந்து மூன்றாவது ரயில் நிலையமான பட்டுவத்த ரயில் நிலையத்தை அண்மித்த போது தனியார் பஸ் வண்டியொன்று இடதுபக்கமாக வந்து ரயில் பாதை மத்தியில் நின்றுள்ளது.

ரயில் நிலையத்தின் பயணிகள் நடை மேடையை அண்டியதாக அமைந்திருந்த வீதியூடாகவே இந்த பஸ் வண்டி வந்துள்ளது.

வேகமாக வந்த ரயில் பஸ்ஸை மோதி தள்ளியதுடன் பயணிகள் மேடையூடாக இழுத்துச்சென்றுள்ளது. ரயில் நிலையத்தை தாண்டி வெகு தூரம் பஸ் இழுத்துச் செல்லப்பட்ட போது சிதைந்த பஸ் வண்டி ரயிலின் வலப்பக்கமாக திரும்பியதால் தண்டவாளத்தில் இறுகி நின்றுள்ளதாக சம்பவத்தை நேரில் கண்ட எமது வவுனியா செய்தியாளர் பந்துல செனவிரட்ண தெரிவித்தார்.

அலுவலக கடமை நிமித்தம் கொழும்புக்கு வந்து வவுனியா செல்வதற்காக எமது செய்தியாளர் அதே ரயிலில் பயணித்துள்ளார். விபத்து நடைபெற்றபோது பஸ் வண்டியினுள் பயணிகள் மூவர் மட்டுமே இருந்துள்ளனர்.

விபத்து காரணமாக பயணிகள் மூவரும் சாரதியும் காயத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்தவர்கள் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். விபத்துக்குள்ளான தனியார் பஸ் மீண்டும் பாவனைக்கு எடுக்க முடியாதவாறு சேதமடைந்துள்ளதையும் ரயிலையும் படத்தில் காண்க.
மேலும் இங்கே தொடர்க...

பிரித்தானிய தமிழருக்கு இன்டர்போல் பிடியாணை


பிரித்தானியாவில் வசிக்கும் தமிழர் ஒருவருக்கு எதிராக இன்டர்போல் பிடியாணையை பிறப்பித்துள்ளது.

2009 ஆம் ஆண்டு கப்பலின் மூலம் கனடாவுக்கு 76 இலங்கையர்களை அனுப்பிய குற்றச்சாட்டின் பேரிலேயே இந்த பிரித்தானியர் மீது பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இவர் ஆட்கடத்தல் வலையமைப்புடன் தொடர்புடையவர் என்று இன்டர்போல் குறிப்பிட்டுள்ளது. 40 வயதான சண்முகசுந்தரம் காந்தஸ்கரன் என்ற இவருக்கு எதிராக ஆட்கடத்தல், சட்டவிரோத குடியேற்றத்துக்காக ஆட்களை அனுப்பியமை, மற்றும் பயங்கரவாதம் என்ற அடிப்படையிலேயே இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

ரங்கா எம்.பியின் மெய்க்காவலர் விபத்தில் உயிரிழப்பு

பிரஜைகள் முன்னணி கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஸ்ரீரங்கா பயணம் செய்த வான் செட்டிகுளம் அஞ்சல் அலுவலகத்திற்கு முன்னால் புதன் மாலை 5 மணியளவில் விபத்தில் சிக்கியுள்ளது. இந்த விபத்தில் அவரது மெய்ப்பாதுகாவலராகிய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் படுகாயமடைந்து அநுராதபுரம் வைத்தியசாலையில் அனு மதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

ஸ்ரீரங்ண்கவும் அவரது சாரதியும் சிறு காயங்களுடன் தப்பியுள்ளனர்.

கொழும்பில் இருந்து மன்னார் நோக்கி அதிவேகத்தில் வந்த வான் கட்டுப்பாட்டை இழந்து அஞ்சல் அலுவலக மதில் பகுதியையும் அருகில் இருந்த மதகு ஒன்றையும் உடைத்து கொண்டு போய் வீதியருகில் பாலை மரம் ஒன்றில் மோதி திரும்பி நிற்பதாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் வான் பலத்த சேதத்திற்குள்ளாகியது.
மேலும் இங்கே தொடர்க...

முல்லைத்தீவுக் கடலில் 4 கடற்படை வீரர்கள் படகுடன் மாயம்





சுண்டிக்குளத்திலிருந்து சாலைக்கு டிங்கி படகொன்றில் சென்ற நான்கு கடற்படை வீரர்கள் முல்லைத்தீவுக்கு வடக்காக படகுடன் காணாமல் போயுள்ளார்கள் என்று கடற்படை பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய நேற்று தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், சிறிய ரக டிங்கி படகொன்றில் நான்கு கடற்படை வீரர்கள் சுண்டிக் குளத்திலிருந்து சாலைக்கு கடந்த 29 ஆம் திகதி மாலையில் சென்றுள்ளார்கள். இருப்பினும் இவர்கள் நேற்று பிற்பகல் வரையும் சாலையை சென்றடையவில்லை. சுண்டிக்குளத்திலிருந்து சாலைக்கு இரு மணி நேரத்தில் செல்லலாம்.

இவர்கள் முல்லை வடக்கு கடற் பரப்பில் காணாமல் போயுள்ளனர். கடற்படையினர் இவர்களை தேடும் பணியில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேவேளை இவர்கள் காணாமல் போயுள்ளமை தொடர்பாக இந்திய கடற்படையினருக்கும் கரையோர காவல் படையினருக்கும் உயர் ஸ்தானிகராலயத்தின் ஊடாக அறிவித்து அவர்களின் ஊடாகவும் தேடுதல் இடம்பெறுகின்றது என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

புனர்வாழ்வு பெற்ற 206 பேர் இன்று பெற்றோரிடம் ஒப்படைப்பு





வவுனியாவில் உள்ள புனர்வாழ்வு நிலையங்களில் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் 206 பேர் இன்று (ஏப்ரல் முதலாம் திகதி) வவுனியா நகர மண்டபத்தில் நடைபெறும் வைபவத்தில் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர். புனர்வாழ்வு அமைச்சர் சந்திரசிறி கஜதீர உள்ளிட்ட பலர் இந்த வைபவத்தில் கலந்து கொள்வார்கள்.

சரண் அடைந்த போராளிகளுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்டு மீண்டும் சமூகத்துடன் இணைக்கும் அரசாங்கத்தின் செயல்திட்டத்தின் அடிப்படையில் இந்த நிகழ்ச்சி திட்டம் இடம்பெறுகின்றதென அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் இங்கே தொடர்க...

வடபகுதி முழுவதற்கும் மின்சாரம்: 1891 மில்லியன் ரூபா செலவில் கிளிநொச்சியில் உப மின் நிலையம்






வடபகுதி முழுவதற்கும் மின்சார வசதி அளிக்கும் வகையில் கிளிநொச்சியில் புதிதாக மின் உப நிலையமொன்றை அமைக்கவும் வவுனியாவில் இருந்து கிளிநொச்சி வரை மின் இணைப்புத் தொகுதியொன்றை நிர்மா ணிக்கவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதற்காக 1891 மில்லியன் ரூபா செலவிடப்படும்.

வவுனியாவில் இருந்து கிளிநொச்சி வரையான 132 கிலோ வோர்ட் மின் இணைப்புத் தொகுதி யுத்தம் காரணமாக சேதமடை ந்தது. இதனை மீள அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தத்திட்டங்களின் முடிவில் வடபகுதிக்கு முழுமையாக மின்சார வசதி அளிக்கப்படும்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இது தொடர்பான யோசனையை சமர்ப்பித்தார். இந்தத் திட்டத்திற்கு ஜப்பான் ஜைக்கா நிறுவனம் கடனுதவி வழங்க முன்வந்துள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

ஜனாதிபதி இந்தியா பயணம்




ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று (31) இந்தியா பயணமானதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல கூறினார்.

இந்தியாவில் நடைபெறும் இலங்கை-இந்திய அணிகளுக்கிடையிலான உலகக் கிண்ண இறுதிப் போட்டியை நேரில் கண்டுகளிப்பதற்காக செல்லும் ஜனாதிபதி புத்தகயா மற்றும் திருப்பதி ஆகிய புனித ஸ்தலங்களுக்கும் சென்று வழிபட உள்ளதாக அமைச்சர் கூறினார்.

இலங்கை அணி வெற்றியீட்டும் என உறுதியாக நம்புவதாகக் கூறிய அமைச்சர் இலங்கையர் அனைவரும் இலங்கை அணியின் வெற்றிக்கு வாழ்த்த வேண்டும் என்றும் தெரிவித்தார். இலங்கை அணி முன்னணியில் இருப்பதாக தெரிவித்த அவர் 1996ல் வென்றது போல இம்முறையும் வெற்றிபெறும் என்று நம்புவதாகவும் அவர் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...