31 அக்டோபர், 2009

புகலிடம் கோருவோரை அழைத்துச் செல்ல அவுஸ்திரேலியாவுக்கு ஒருவார காலக்கெடு- இந்தோனேசியா அறிவிப்பு

இந்தோனேசிய கடற்பரப்பிலுள்ள 78 இலங்கை அகதிகளை அங்கிருந்து அழைத்துச் செல்ல இந்தோனேசியா, அவுஸ்திரேலியாவுக்கு ஒருவாரகால அவகாசம் வழங்கியுள்ளது என்று இந்தோனேசிய வெளிவிவகார அமைச்சு பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இரண்டு வாரங்களுக்கு முன்னர் அவுஸ்திரேலிய சுங்கக் கப்பல் ஒன்றினால் காப்பாற்றப்பட்ட மேற்படி அகதிகளின் விவகாரத்தினால்,ஆட்சிக்கு வந்து ஒரு வருடமே பூர்த்தி அடைந்த அவுஸ்திரேலிய பிரதமர் கெவின் மீது அரசியல் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் அகதிகளை அவுஸ்திரேலியாவுக்கு அழைத்துச் செல்ல முடியாதென அவுஸ்திரேலியா கடந்த புதன்கிழமை வலியுறுத்திக் கூறியது. விசாரணைக்காக அகதிகள் இந்தோனேசியாவுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்றும் அது தொடர்பில் இந்தோனேசியாவுடன் உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்டுள்ளதாகவும் அந்நாடு தெரிவித்துள்ளது.

இது இவ்வாறிருக்க, இந்தோனேசியாவின் றியாவ் தீவிற்கு அருகில் அகதிகளுடன் சென்றுள்ள அவுஸ்திரேலிய ஓசானிக் வைக்கிங் கப்பல் நவம்பர் மாதம் 6ஆம் திகதி மட்டுமே அங்கு தரித்து நிற்க அனுமதிக்கப்படும் என்று இந்தோனேசிய வெளிநாட்டமைச்சு பேச்சாளர் ரேகு பெஸாஸயா நேற்று தெரிவித்துள்ளார். இந்த காலக்கெடுவுக்குள் அவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும் அல்லது இந்தோனேசிய கடற்பரப்பிலிருந்து வெளியேறிவிட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தோனேசிய வெளிநாட்டமைச்சர் மார்டி நதலேகாவா வியாழக்கிழமை ராய்ட்டர் செய்தி சேவைக்கு அளித்த பேட்டி ஒன்றில், இலங்கைத் தமிழ் அகதிகளை என்ன செய்வது என்பதை தீர்மானிப்பது அவுஸ்திரேலியாவை பொறுத்தவிடயம் என சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது
மேலும் இங்கே தொடர்க...
ஐ.நா.வின் சான்றிதழை அடுத்தே முகாம்களிலுள்ள அனைத்து தமிழ் மக்களும் மீள்குடியமர்த்தப்படுவர்- அமைச்சர் ஆறுமுகன் தெரிவிப்பு;

- கண்ணிவெடிகளை அகற்றுவது, மனிதநேய அடிப்படையிலான உதவிகளைச் செய்வது குறித்து ஐ.நா. அமைப்பு சான்றிதழ் அளித்த பின்னரே இலங்கை முகாம்களில் உள்ள ஒருலட்சத்து 86ஆயிரம் தமிழர்கள் மீள்குடியமர்த்தப்படுவார்கள் என்று அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார். அதேசமயம், கண்ணிவெடிகளை அகற்றுவதுதான் அங்கேயுள்ள பிரச்சினை எனவும் அவர் கூறியுள்ளார். இடம்பெயர்ந்தோரை மீள் குடியேற்றும் பணிகள் குறித்து அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், முதலமைச்சர் கருணாநிதியை அவரது கோபாலபுரத்திலுள்ள இல்லத்தில் நேற்று முன்தினம் சந்தித்துப் பேசினார். அரை மணி நேரத்துக்கும் மேலாக இந்தச் சந்திப்பு நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து ஊடகவியலாளர்கள் மத்தியில் பேசுகையில், இலங்கை முகாம்களில் 3 இலட்சம் தமிழர்கள் இருப்பதாகக் கூறுகிறார்கள். ஆனால், 1.86 இலட்சம் தமிழர்களே உள்ளனர். தமிழகத்தில் இருந்து எம்.பி.க்கள் குழு வருவதற்கு முன்பே, 24 ஆயிரம் இலங்கைத் தமிழர்கள் அவர்களது இருப்பிடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

தமிழக எம்.பி.க்கள் குழு வந்து சென்ற பின்னர், இதுவரை 57 ஆயிரம் தமிழர்கள் அவர்களின் வாழ்விடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். எம்.பி.க்கள் குழுவின் வருகைக்குப் பின்னர் இலங்கைத் தமிழர்களை வாழ்விடங்களுக்கு அனுப்பும் பணி இரு மடங்காக அதிகரித்துள்ளது.

ஜனாதிபதி ராஜபக்ஷ கொடுத்த வாழ்த்துச் செய்தியையும், அங்கு நடைபெற்று வரும் புனரமைப்புப் பணிகள் குறித்தும் முதல்வர் கருணாநிதியிடம் விளக்கினேன்.

இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் புதைத்து வைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் இந்தியக் குழு ஈடுபட்டு வருகிறது. மேலும் ஒரு குழுவை அனுப்புவதாக இந்திய அரசு கூறியுள்ளது.

இலங்கைத் தமிழர்களை அவர்களின் வாழ்விடங்களுக்கு அனுப்ப, ஐ.நா.விடம் இருந்து சான்றிதழ் பெறுவது அவசியம். "தமிழர்களின் வாழ்விடங்களில் கண்ணிவெடிகள் ஏதுமில்லை என்றும், அவர்களுக்கு அடிப்படை வசதிகள், வருமானத்துக்கான வழி போன்றவை ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளன" எனவும் அகதிகள் நல்வாழ்வுக்கான ஐ.நா. அமைப்பின் அதிகாரியிடம் இருந்து சான்றிதழ் பெற வேண்டும்.

இப்போது, 1.86 இலட்சம் தமிழர்களின் வாழ்விடங்களில் கண்ணிவெடிகளை அகற்றுவதுதான் பிரச்சினையாக உள்ளது. குடியமர்த்தப்பட்ட பிறகு, அவர்கள் தொழில் செய்யவோ, விவசாயம் செய்யவோ உதவி செய்கிறோம்.

இலங்கையில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள மேலும் ரூ.500 கோடி தருவதாக இந்திய அரசு கூறியுள்ளது. இதற்கான திட்டத்தை இலங்கை அரசின் சார்பில் கொடுக்க இருக்கிறோம். எந்தெந்த திட்டங்களுக்கு இந்தப் பணத்தை செலவிடுவது என்பது குறித்து விவாதிக்க இலங்கை அதிகாரிகள் குழு இந்தியா வர உள்ளது என்று ஆறுமுகன் தொண்டமான் கூறினார்

அதேவேளை ஊடகவியலாளர் ஒருவர் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானிடம் அகதிகளான மக்கள் ஒரு முகாமில் இருந்து மற்றொரு முகாமுக்கு மாற்றப்படுகின்றனரே தவிர அவர்களது சொந்த இடங்களிற்கு அனுப்பி வைக்கப்படுவதில்லை என்று கூறப்படுகின்றதே எனக் கேட்டபோது அமைச்சர் பதிலளிக்கையில், நானும் ஒரு தமிழன் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த இடங்களை பார்வையிட்டேன். நீங்கள் அங்கு சென்று பார்க்காமல் எம் மீது குற்றம் சாட்டுகின்றீர்கள் என்று பதிலளித்தார்.

இதேவேளை உங்கள் அரசு அங்கு வெளிநாட்டு ஊடகவியலாளர்களை அனுமதிக்கவில்லையே என மற்றொரு ஊடகவியலாளர் கேள்வி எழுப்பியபோது, ஏன் இல்லை கலைஞர் தொலைக்காட்சி குழுவினர் இலங்கைக்கு விஜயம் செய்தார்களே, அவர்கள் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் இல்லையா? என்றும் பதிலுக்கு கேள்வி எழுப்பினார்.

மேலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முதலமைச்சர் கருணாநிதிக்கு ஏதேனும் விசேட செய்திகளை அனுப்பி வைத்தாரா எனக் கேட்டபோது மீள்குடியேற்றம் தொடர்பில் முதலமைச்சருக்கு எடுத்து விளக்குமாறு கூறினார் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

பாகிஸ்தானுக்கு ரூ. 11 ஆயிரத்து 500 கோடியை நிதி உதவியாக வழங்க அமெரிக்கா இணக்கம்

பாகிஸ்தானுக்கு 2010 ஆம் ஆண்டு க்கான இராணுவ நிதி உதவியாக ரூ. 11 ஆயிரத்து 500 கோடியை அமெ ரிக்கா வழங்க இருக்கிறது. இதற் கான அனுமதியை அமெரிக்க ஜனா திபதி ஒபாமா வழங்கி இருக்கிறார்.

அமெரிக்க இராணுவத்துக்கு 2010 ஆம் ஆண்டுக்கான 34 லட்சம் கோடி ரூபாய்க்கு பட்ஜெட் போடப்பட்டு உள்ளது. இந்த பட்ஜெட் மசோதா வில் ஒபாமா நேற்று முன்தினம் கையெழுத்திட்டார். இந்த பட்ஜெட் டில் பாகிஸ்தானுக்கு இராணுவ உதவி வழங்குவதற்காகவும் நிதி ஒது க்கீடு செய்யப்பட்டுள்ளது.

பாகிஸ்தானுக்கு இராணுவ உதவி யாக 11,500 கோடி ரூபாய் வழங்கு வதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட் டுள்ளது. இதற்கும் சேர்த்துத்தான் அவர் அனுமதி கொடுத்து இருக் கிறார்.

இந்த உதவியில் 2 அம்சங்கள் உள் ளன. ஒன்று, கூட்டணி ஆதரவு நிதி, 2 வது தீவிரவாத தடுப்பு நிதி. கூட் டணி ஆதரவு நிதி என்பது கடந்த காலத்தில் தீவிரவாதத்தை ஒடுக்குவ தற்காக பாகிஸ்தான் செலவழித்த தொகையை ஈடுகட்டும் வகையில் வழங்கப்படுவது. இதற்காக 8 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.

அடுத்தது தீவிரவாதத்தை ஒடுக் குவதற்காக அமெரிக்கா அளிக்கும் நிதி ஆகும். இதற்காக 3 ஆயிரத்து 500 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது.

இந்த நிதியை வழங்குவதோடு அதைப் பெறுவதற்கு ஒரு நிபந்தனையையும் அமெரிக்கா விதித்துள்ளது. இந்த நிதியை வேறு பயன்பாட்டுக்காக (இந்தியா வுக்கு எதிரான இராணுவ நடவடிக் கைக்காக ஆயுதங்களை குவிப்பதற் காக) திசை திருப்பக்கூ¡டது. அதன் மூலம் இராணுவ சமன்நிலை பிறழ வகை செய்யக்கூடாது என்பது அதன் நிபந்தனை ஆகும்.

பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் நிதி உதவியை அந்த நாடு, இந்தியா வுக்கு எதிரான போருக்காக மரபு ரீதியான ஆயுதங்களை வாங்கி குவி ப்பதற்காக பாகிஸ்தான் பயன்படுத் துவதாக இந்தியா கருதுகிறது. இந் தியாவின் இந்த அச்சத்தை கருத்தில் கொண்டு தான் இந்த நிபந்த னையை அமெரிக்கா சேர்த்துள்ளது.

இந்தியாவின் அச்சம் நியாயமானது தான் என்பதை பாகிஸ்தானின் முன் னாள் ஜனாதிபதி முஷர்ரப்பின் சமீ பத்திய பேட்டி உறுதிப்படுத்தி உள் ளது. தன் பதவிக்காலத்தில் அமெரி க்கா கொடுத்த நிதி உதவியைக் கொண்டு இந்தியாவுக்கு எதிராக இராணுவ பலத்தை பெருக்கிக் கொண்டதாக அவர் தெரிவித்தார்.

இந்த நிபந்தனையை பாகிஸ்தான் கடைப்பிடிப்பதோடு மட்டும் அல் லாமல், நிதி திசை திருப்பப்படவி ல்லை என்று ஜனாதிபதி ஒபாமா நட்சாட்சி பத்திரம் கொடுத்தால் தான் பாகிஸ்தானுக்கு பணம் கிடைக்கும்.

180 நாட்களுக்கு ஒருமுறை இந்த பணம் பாகிஸ்தானுக்கு கிடைப்ப தற்கு முன்பாக இராணுவ மந்திரி பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்னி லையில் தீவிரவாதிகளை ஒழிக்க பாகிஸ்தான் பாடுபட்டு வருகிறது என்றும் சான்றிதழ் வழங்க வேண்டும். அதோடு ஜனாதிபதி ஒபாமாவும் 180 நாட்களுக்கு ஒரு முறை பணம் சரியாகத்தான் செலவழிக்கப்படுகிறது என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

மேலும் இங்கே தொடர்க...

தாய்நாட்டைக் கட்டியெழுப்ப சகல இலங்கையரும் நாடுதிரும்ப வேண்டும்

நேபாளத்தில் ஜனாதிபதி அழைப்பு

சுதந்திரமடைந்துள்ள தாய்நாடு உங்களை வரவேற்கத் தயாராகவுள்ளது. தாய்நாட்டைக் கட்டியெழுப்ப வெளிநாடுகளிலுள்ள சகல இலங்கையர்களும் நாட்டுக்குத் திரும்ப வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேபாளத்திலிருந்து பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார்.

நேபாளத்திற்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அந் நாட்டில் வாழும் இலங்கையர்களைச் சந்தித்தபோதே இத்தகைய அழைப்பை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்துள்ள ஜனாதிபதி:-

தாய் நாடு தற்போது முழுமையாக மீட்கப்பட்டு சகல இன, மத மக்களும் தமது நடவடிக்கைகளை மேற்கொள்ள வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் மீள நாடு திரும்பி தாய்நாட்டைக் கட்டியெழுப்ப உரிய பங்களிப்பினை வழங்க வேண்டுமென ஜனாதிபதி கேட்டுக்கொண்டுள்ளார்.

மேற்படி சந்திப்பு நேபாளம் காத்மண்டு நகரில் இடம்பெற்றுள்ளதுடன் இலங்கை யைச் சேர்ந்த வர்த்தகர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பல்வேறு தொழில்துறைகளில் ஈடுபட்டுள்ளவர்களும் இதில் கலந்து கொண்டுள்ளனர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இங்கு மேலும் தெரிவிக்கையில்:

நான் கடந்த முறை நேபாளத்திற்கு வரும்போது இலங்கையில் தாய்நாட்டை மீட்கும் யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. எனினும் பயங்கரவாதிகளிடமிருந்து மீட்டெடுக்கப்பட்ட நாட்டின் தலைவராக நான் இம்முறை நேபாளம் வந்துள்ளேன். தாய்நாட்டை பாரிய அபிவிருத்தியில் கட்டியெழுப்புவதே எனது அடுத்தகட்டச் செயற்பாடு. அந்த நோக்கத்தை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு வெளிநாடுகளில் வாழும் சகல இலங்கையர்களினதும் ஒத்துழைப்பை எதிர்பார்க்கின்றேன்.

தமது அறிவு, திறமை, உழைப்பு ஆகியவற்றை தாய்நாட்டின் எதிர்கால நலனுக்காக உபயோகப்படுத்த சகல இலங்கையர்களும் அணிதிரள வேண்டும்.

பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தத்தில் எமது பெருமளவிலான படை வீரர்கள் பலியாகியுள்ளதுடன் பெருமளவிலானோர் அங்கவீனமாகியுமுள்ளனர். இத்தகைய தியாகங்களுக்கு நன்றிக்கடன் செலுத்தும் வகையில் நாடு முழுமையான அபிவிருத்திக்குள்ளாக்கப்பட வேண்டும்.

“கிழக்கின் உதயம்” கருத்திட்டத் தின் மூலம் கிழக்கிலும் “வடக்கின் வசந்தம்” கருத்திட்டத்தின் கீழ் வடக் கிலும் தற்போது பாரிய அபிவிருத்தி கள் இடம்பெறுகின்றன. யுத்தத்தி னால் இடம் பெயர்ந்துள்ளவர்களை மீளக்குடியமர்த்தும் பணிகளும் துரித ப்படுத்தப்பட்டுள்ளன. துப்பாக்கி களை ஏந்திய வடக்கு சிறுவர்கள் தற் போது புத்தகங்களை ஏந்தி பாட சாலை செல்லும் நிலை உருவாக்கப் பட்டுள்ளது. பயங்கரவாதத்தினால் உருக்குலைக்கப்பட்ட அவர்களது எதிர்பார்ப்புக்கள் இன்று நிறைவேறி வருகின்றன.

நாடு பிளவுபட்டிருந்தால் அங்கு ஒருபோதும் தேசிய ஒற்றுமை நிலவ முடியாது. இன்று ஐக்கிய இலங்கையில் சகல இனமும் ஒற்றுமையாக வாழக்கூடிய சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. உலகில் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் இலங்கையர் கெளரவமான இனமாக மதிக்கப்படும் நிலை தற்போது உருவாகியுள்ளது எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் அமைச்சர்களான ரோஹித போகொல்லாகம, நிமல் சிறிபால டி சில்வா, திஸ்ஸகரலிய த்த ஜனாதிபதியின் மேலதிக செய லாளர் காமினி செனரத் ஆகியோ ரும் கலந்து கொண்டுள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...