15 டிசம்பர், 2009
ஜனாதிபதியின் சிறந்த தலைமைத்துவமே பயங்கரவாதத்தை வெற்றிகொள்ள காரணம்படைவீரர்கள் மீதான குற்றச்சாட்டுகளை மறுக்கிறார் இராணுவத் தளபதி
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ ஆகியோரின் சரியான தலைமைத்துவமும், வழிகாட்டலுமே இந்த நாட்டில் நிலவிய 30 வருடகால பயங்கரவாதத்தை குறுகிய காலத்திற்குள் வெற்றிகொள்ள காரணம் என்று இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்தார். சரியான அரசியல் தலைமைத்துவம் உரிய நேரத்தில் வழங்கப்படாவிடின் இந்த யுத்தத்தில் வெற்றிக்கொண்டிருக்க முடியாது என்றும் அவர் மேலும் தெரிவி த்தார். பாரிய வெற்றியை பெற்றுக்கொடுத்த படை வீரர்கள் மீது முன்வைக்கப்பட்டுள்ள பொய்க் குற்றச்சாட்டுகளை வன்மையாக மறுப்பதாக தெரிவித்த இராணுவத் தளபதி இராணுவத்தை காட்டிக் கொடுத்துள்ளதை வன்மையாகக் கண்டிப்பதாகவும் குறிப்பிட்டார். இது போன்ற குற்றச்சாட்டுகளினால் படைவீரர்கள் தைரியத்தை இழக்க வேண்டாம் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார். வன்னி மனிதாபிமான நடவடிக்கையின் போது களமுனையில் சேவையாற்றிய சகல பிரிவுகளையும் சேர்ந்த இராணுவ அதிகாரிகளினதும், படை வீரர்களினதும் சேவைகளைப் பாராட்டி நற்சான்றிதழ் வழங்கும் வைபவம் கொழும்பிலுள்ள இராணுவத் தலைமையகத்தில் நேற்றுக்காலை நடைபெற்றது. அந்நிகழ்வில் மேலும் உரையாற்றுகையில், ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ, விஜய விமலரத்ன போன்ற அதிகாரிகள் வடமராட்சி நடவடிக்கையின்போது அன்று புலிகளை இதேபோன்று பலவீனமடைய செய்திருந்தனர். ஆனால் அன்றிருந்த பலவீனமான அரசியல் தலைமைத்துவத்தினால் பெற்ற வெற்றிகள் யாவும் தலைகீழாக மாறியது. அதேபோன்று வெளிநாட்டு தூதுவர் களின் அழுத்தங்கள் காரணமாக பல திறமையு ள்ள இராணுவ உயர் அதிகாரிகள் பலர் இட மாற்றம செய்யப்பட்டனர். அதேபோன்று அன்று செய்துகொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் காரணமாக இராணுவ அதிகாரிகள் மற்றும் படை வீரர்கள் கொல்லப்பட்டதுடன், அவதிப்பட்டனர். மனிதாபிமான நடவடிக்கை முடுக்கிவிடப் பட்ட காலப்பகுதியில் இந்த வெற்றிகரமான நடவடிக் கைகளைத் தடுப்பதற்கு வெளிநாட்டு சக்திகளும், நாசகார சக்திகளும் முயற்சிகளை மேற்கொண்டன. ஆனால் சரியான அரசியல் தலைமைத்துவம் மூலமாக முழு நாட்டையும் ஒரே கொடியின் கீழ் கொண்டுவர முடிந்தது. அரசியல் தலைமைத்துவம், மக்கள் சக்தி, இராணுவ பலம் ஆகியவற்றின் மூலமே எதுவித அழுத்தங்களுக்கும் தலைசாய்க்காது மனிதாபிமான நடவடி க்கை வெற்றிகொள்ளப்பட்டது. அரசியல் யாப்பு பிரகாரம் யுத்தத்தையோ அல்லது சமாதானத்தையோ பிரகடனப்படுத்தும் அதிகாரம் முப்படைகளின் தளபதியான ஜனாதிபதிக்கே உள்ளது. சரியான அரசியல் தலைமைத்துவம் இல்லாமல் பயங்கரவாதத்தை ஒழித்திருக்க முடியாது என்பதை நாங்கள் அனைவரும் அறிவோம். எனவே தான் இராணுவத்தின் 60 வது ஆண்டு நிறைவு விழாவின்போது நான் கூறியிருந்தேன், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பெயர் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டும் என்று கூறினார். உலகிலேயே மிக மோசமான பயங்கரவாதத்தை முழுமையாக அழித்த வீரமிக்க படைவீரர்களுக்கு கட்டளைத் தளபதியாக பணிபுரிய கிடைத்தது குறித்து நான் பெருமையடைகிறேன். இலங்கை இராணுவத்தை உலகிலேயே முதல் தர இராணுவமாக உருவாக்குவதே எனது ஒரே நோக்கமாகும். இதற்குத் தேவையான பயிற்சி, மன உறுதி மேம்படுத்தல் மற்றும் நலன்புரி வழங்கப்படும். யுத்தம் தற்பொழுது முடிவுற்றுள்ளது. தாய் நாட்டிற்காக நாங்கள் பெற்ற வெற்றியின் பொறுப்பு இன்னும் முடியவில்லை. மனிதாபிமான நடவடிக்கையின் மூலம் மீட்டெடுக்கப்பட்ட மக்களை மீளக்குடியமர்த்துவதற்காக அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பது எமது பொறுப்பாகும். இந்த வெற்றிக்காக எமக்கு பூரண ஒத்துழைப்புக்களை வழங்கிய கடற்படை, விமானப்படை, பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு படையினரின் ஒத்துழைப்புகளுக்கும் நான் நன்றி தெரிவித்துக்கொள்கின்றேன். இந்த நிகழ்வில் இராணுவத்தின் பிரதம அதிகாரி மேஜர் ஜெனரல் மெந்தக சமரசிங்க, மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, மேஜர் ஜெனரல் தயா ரத்னாயக்க உட்பட உயர் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
| ||||||
| ||||||