20 ஜனவரி, 2010

20.01.2010 தாயகக்குரல்

நாட்டின் ஆறாவது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் தினமான 26ம் திகதிக்கு இன்னமும் சில தினங்களே உள்ள நிலையில் சகல பிரதேசங்களிலும் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டன. தலைநகரில் தேர்தல் ஆணையாளரின் அறிவிப்பையும் மீறி சுவரொட்டிகள் ஒருபுறம் ஒட்டப்பட இன்னொருபுறம் அவை அகற்றப்படுகின்றன. தேர்தல் திணைக்களத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய பொலிசாரும் சுவரொட்டிகளை அகற்றுகிறார்கள். இன்னொருபுறம் இனம் தெரியாதவர்களால் சுவரொட்டிகள் அகற்றப்படுகின்றன. கடந்த சில தினங்களாக தேர்தல் வன்முறைகளும் அதிகரித்துள்ளன. வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

எதிர்கட்சியினரால், மற்றும் எதிர்கட்சி வேட்பாளரால் அள்ளி வீசப்படுகின்ற உத்தியோகபூர்வமற்ற வாக்குறுதிகள், கருத்துக் கணிப்புகள் என்ற பெயரில் நடுநிலையாளரின் வாக்கை கவரும்; தந்திரோபாய பிரச்சாரங்கள் என தேர்தல் களம் களைகட்டுகிறது.

தான் ஆட்சிக்கு வந்தால் ஊழல் மோசடிகளை முற்றாக ஒழித்து விடுவேன் என தேர்தல் வாக்குறுதி அளித்துள்ள ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்க தேசிய சுதந்திர முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு 300 லட்சம் ரூபா வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்த தேர்தலில் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளது. சில கோரிக்கைளின் அடிப்படையில் சரத் பொன்சேகாவை ஆதரிப்பதாக முன்னர் இரா.சம்பந்தன் அறிவித்திருந்தார். இப்போது எவ்வித நிபந்தனையும் இன்றி சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்குவதாக சம்பந்தன் தெரிவிக்கிறார்.

புலிகளின் குரல்களாக செயல்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடந்த ஜனாதிபதி தேர்தலில் பங்குபற்றவில்லை. தமிழ் மக்கள் ஜனாதிபதி தேர்தலில் பங்குபற்றக்கூடாது என்பதற்கு அவர்கள் கூறிய காரணம், ~~சிங்கள தேசம் தனது அரசுத்தலைவர் யார் என்பதற்காக நடத்தும் தேர்தலில் பங்குபற்றவேண்டிய எவ்வித அவசியமும் தமிழ் மக்களுக்கு இல்லை. ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் மகிந்த பச்சை இனவாதி. அடுத்த வேட்பாளர் ரணில் வடிகட்டின இனவாதி. பச்சை இனவாதியை விட வடிகட்டின இனவாதி ஆபத்தானவர் என்று மகிந்தாவை விட ரணில் ஆபத்தானவர் என புலிகள் விமர்சனம் செய்திருந்தனர். இப்போது புலிகள் இல்லாத நிலையில் நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பால் ஏகமனதான முடிவை எடுக்கமுடியவில்லை.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக தேசியக் கூட்டமைப்புக்குள் மூன்றுவிதமான கருத்துக்கள் இருந்துள்ளது. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் காங்கிரஸ் தேர்தலை பகீஸ்கரிக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டை எடுத்தது. சிவாஜிலிங்கம், ஸ்ரீகாந்தா தரப்பினர் தமிழ் மக்கள் சார்பில் ஒரு வேட்பாளரை நிறுத்துவதன்மூலம் சுதந்திர ஜனநாயக அரசியலில் மீள்பிரவேசத்தை வலியுறுத்துகின்றனர். இரா.சம்பந்தன் தரப்பினர் சரத்பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்குகின்றனர். இப்போது சிவாஜிலிங்கம் தமிழ் ஜனாதிபதி வேட்பாளராக நிற்கிறார். அதன் எதிரொலியாக சிவாஜிலிங்கம், ஸ்ரீகாந்தா ஆகியோர் கூட்டமைப்பில் இருந்து விலக்கப்பட்டுள்ளனர்.

தமிழ் தேசியக்கூட்டமைப்பு சரத் பொன்சேகாவை ஆதரிப்பதாக எடுத்த முடிவு இந்தியாவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது. இதனால்தான் தேசியக் கூட்டமைப்பு தாங்கள் பொன்சேகாவை ஆதரிப்பதற்கான காரணங்களை விளக்கி இந்தியாவை சமாதானப்படுத்தும் நோக்கில் இரா.சம்பந்தன் தலைமையில் மாவை, சுரேஸ், அடைக்கலநாதன் ஆகியோர் புதுடில்லி சென்று அங்கு இந்திய மத்திய அரசு தலைவர்கள் எவரையும் சந்திக் முடியாமல் திரும்பியுள்ளனர். இதிலிருந்து கூட்டமைப்பின் தீர்மானம் இந்தியாவுக்கு அதிருப்தியை கொடுத்திப்பதாகவே தெரிகிறது.

கடந்த 60 வருடங்களாக தமிழரசுக் கட்சி, தமிழ் காங்கிரஸ் ஆகியன தமது வர்க்க நலன்சார்ந்து தீர்மானங்களை எடுத்து வந்தாலேயே இனப்பிரச்சினைக்கு எந்த ஒரு தீர்வையும் இதுவரை அவர்களால் காண முடியவில்லை. அவர்கள் இனப்பிரச்சினை தொடர்பாக ஐக்கிய தேசியக்கட்சி அரசாங்க காலங்களில் அமைதியான போக்கையும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்துடன் முழுமையான தீர்வைத்தான் ஏற்போம் என்ற கடும் கோட்பாட்டையே வெளிப்படுத்தி வந்தனர்.

அவர்கள் வழிவந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்த தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவு பெற்ற சரத்பொன்சேகாவை ஆதரிப்பது என எடுத்த முடிவும் வர்க்க நலன் சார்ந்ததே அல்லாமல் தமிழ் மக்களின் நலன் சார்ந்ததல்ல.

கடந்த காலங்களில் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் எதையும் அது தமிழ் மக்களுக்கு நன்மை தருவதாக இருந்தாலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரித்ததில்லை. அற்கு அவர்கள் கூறிய காரணம் தற்போதைய அரசியலமைப்பின்கீழ் இனப்பிரச்சினைக்கான தீர்வு சாத்தியமில்லை என்பதுதான். ஆனால் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா தற்போதைய அரசியலமைப்பில் மாற்றம் கொண்டுவர முயன்றபோது அதையும் இவர்கள் எதிர்த்துள்ளனர்.

10.07.2001ல் ஜனாதிபதி சந்திரிகா பாராளுமன்றத்தை ஒத்தி வைத்தார். நடைமுறையில் உள்ள அரசியலமைப்பை மாற்றுவதற்கு மக்கள் விரும்புகிறார்களா என்பதை அறிவதற்கு சர்வசன வாக்கெடுப்பு நடத்தப் போவதாக அறிவித்தார். 05.08.2001 தமிழர் விடுதலைக் கூட்டணியின் மத்திய குழு கொழும்பில் கூடி அரசியலமைப்பில் மாற்றம் தேவையில்லை என்று சர்வசன வாக்கெடுப்பில் மக்கள் வாக்களிக்கவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினர். தற்போதைய அரசியலமைப்பின்கீழ் இனப்பிரச்சினைக்கான தீர்வு சாத்தியமில்லை என்று கூறியவர்கள் அந்த அரசியலமைப்பில் மாற்றம் கொண்டு வருவதை ஏன் எதிர்க்கவேண்டும்.

2004ம் ஆண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் மக்கள் விடுதலை முன்னணிக்கும் (ஜே.வி.பி) இடையே கூட்டு; ஏற்பட்டதற்கு எதிராக தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஐ.தே.கட்சியும் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தன. குறிப்பாக இனவாதக் கட்சியான ஜே.வி.பி.யுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கூட்டு வைத்துள்ளதால் சமாதானத்துக்கு ஆபத்து வந்துவிட்டதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு மக்களை பயமுறுத்தியது.

இன்று அதே இனவாதக் கட்சியுடன் கூட்டு சேர்ந்துள்ள சரத் பொன்சேகாவை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரிக்கிறது.

சுமணசிறி லியனகே என்பவர் ஐலன்ட் பத்திரிகையில் எழுதிய கட்டுரையில் தமிழ் மக்களைப் பார்த்து கேட்கிறார், நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசியவாதம் காட்டிய நாசகாரப் பாதையை தமிழ் மக்கள் தெரிவு செய்வார்களா? அல்லது புளொட், ஈ.பி.டி.பி. ரி.எம்.வி.பி. போன்ற ஜனநாயக தமிழ் அமைப்புகள் காட்டிய பாதையை தெரிவு செய்வார்களா? என்று கேட்கிறார்.

இந்த நிலைமைகளை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் மிகத் தீவிரமாக கவனத்தில் கொள்ளவேண்டும்.

மேலும் இங்கே தொடர்க...
மலையகத்தில் வன்முறையைத் தூண்டி
வாக்குகளைச் சூறையாட எதிர்க்கட்சிகள் சதி
- இ.தொ.கா. தலைவர் முத்து சிவலிங்கம் குற்றச்சாட்டு


மலையக மக்களின் வாக்குகளைச் சூறையாடுவதற்காக வன்முறையைத் தூண்டிவிட எதிர்க்கட்சிகள் சதிசெய்து வருவதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பெரும்பாலான மலையக மக்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கே ஆதரவு வழங்க உள்ளதால் அவர்களின் அடையாள அட்டைகளைப் பறிமுதல் செய்யவும் எதிர்க்கட்சிகள் தயாராகுவதாக தகவல் கிடைத்துள்ளதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் பிரதி அமைச்சருமான முத்து சிவலிங்கம் தெரிவித்தார்.

சில பல்கலைக்கழக மாணவர்களைப் பயன்படுத்தி படித்தவர்கள் மத்தியில் பொய்ப் பிரசாரம் செய்யப்பட்டு வருவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவை வெல்லவைக்க வேண்டும் என்பதில் மலையக மக்கள் தெளிவாக உள்ளனர். இதனைத் தடுப்பதற்காக ஜே.வி.பி அடங்கலான எதிர்க்கட்சிகள் பல்வேறு சதித்திட்டங்களைத் தீட்டி வருகின்றன. இவற்றை முறியடிக்க நாம் சகல நடவடிக்கையும் எடுத்து வருகிறோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தேர்தல் நெருங்கியுள்ளதால் கடைசி நேரத்தில் மக்களின் அடையாள அட்டைகளைப் பறிமுதல் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளதாக நம்பகரமான தகவல்கள் கிடைத்துள்ளன. இதுதொடர்பாக விழிப்பாக இருக்குமாறு நாம் மக்களை அறிவுறுத்தி வருகிறோம். மக்களின் அடையாள அட்டைகளைப் பறித்து அவர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாக்களிப்பதைத் தடுக்கும் சதி முறியடிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

“வெளியார் மலையகத்திற்குள் புகுந்து இத்தகைய முறைகேடுகளில் ஈடுபடுவதைத் தடுப்பது குறித்து மக்களை அறிவ+ட்டி வருகிறோம். அத்தகையோரை துரத்தியடிக்குமாறு கோரியுள்ளோம்” என்று கூறிய அவர் “ஒழுங்கான வழியில் மலையக மக்களின் வாக்குகளைப் பெறமுடியாது என்பதை உணர்ந்துள்ளதால் குறுக்குவழியில் அந்த வாக்குகளைக் கொள்ளையிட எதிர்க்கட்சிகள் சதி செய்கின்றனர். இதற்கு இடமளிக்க முடியாது” என்றார்.



வலி-வடக்கு உயர் பாதுகாப்பு வலயங்களில்
மீள்குடியேற பாதுகாப்பு அமைச்சு அனுமதி
-காணி உறுதிகளுடன் பதிவுசெய்து கொள்ளுமாறு அறிவிப்பு

யாழ்;ப்பாணம் அதிஉயர் பாதுகாப்பு வலயங்களை உடனடியாக நீக்கி, அந்தக் காணிகளை உரிய பொதுமக்களுக்கு வழங்க பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.

வலி வடக்கு அதிஉயர் பாதுகாப்பு வலய பிரதேசத்திலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் மீளக் குடியமர்வதற்கு வசதியாகவே பாதுகாப்பு அமைச்சு இந்த அனுமதியை வழங்கியுள்ளது.

எனவே, குடியேற விரும்பும் காணி உரிமையாளர்கள், உறுதிப்படுத்துவதற்கான காணிக்குரிய ஆவணங்களுடன் வலி-வடக்கு, கோப்பாய் பிரதேச செயலகங்களில் பதிவு செய்துகொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

தெல்லிப்பளை பிரதேச செயலகப் பிரிவில் மீளக்குடியேற அனுமதிக்கப்பட்டுள்ள பிரதேசங்கள் வருமாறு:-

ஜே-221 - இளவாலை வடக்கு கிராமசேவைப் பிரிவு முழுமையாக
ஜே-222 - இளவாலை வடமேற்கு கிராமசேவைப் பிரிவின் ஒருபகுதி
ஜே-223 - விதக்புரம் கிராமசேவைப் பிரிவு முழுமையாக
ஜே-224 - பன்னாலை கிராமசேவைப் பிரிவின் முழுமையாக
ஜே-225 - கொல்லங்கலட்டி கிராமசேவைப் பிரிவு ஒரு பகுதி
ஜே-226 - நகுலேஸ்வரம் கிராமசேவைப் பிரிவு ஒரு பகுதி
ஜே-228 - தெல்லிப்பளை கிராமசேவைப் பிரிவு ஒரு பகுதி
ஜே-229 - துர்க்காபுரம் கிராமசேவைப் பிரிவு முழுமையாக
ஜே-230 - தந்தை செல்வாபுரம் கிராமசேவைப் பிரிவின் ஒரு பகுதி
ஜே-231 - மாவிட்டபுரம் கிராமசேவைப் பிரிவின் ஒரு பகுதி
ஜே-232 - மாவிட்டபுரம் தெற்கு கிராமசேவைப் பிரிவின் ஒரு பகுதி
ஜே-236 – பலாலி விடத்சாமம் கிராமசேவைப் பிரிவின் ஒரு பகுதி

கோப்பாய் பிரதேச செயலகப் பிரிவு

ஜே-283 - இடைக்காடு கிராமசேவைப் பிரிவின் ஒருபகுதி
திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம் எதுவும்
கிழக்கில் மேற்கொள்ளப்படவில்லை
- சம்பந்தன் கூற்று உண்மைக்குப் புறம்பானது என்கிறார் கிழக்கு ஆளுநர்

கிழக்கு மாகாணத்தில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் இடம்பெறுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ள குற்றச்சாட்டை கிழக்கு மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் மொஹான் விஜேவிக்கிரம முழுமையாக நிராகரித்தார். அரசியல் லாபம் பெறுவதற்காக இவ்வாறான பொய்யான குற்றச்சாட்டுக்களை எதிர்க்கட்சிகள் பரப்பி வருவதாகவும் தமிழ், முஸ்லிம் மக்களின் காணிகளில் வேறு எவரும் குடியேற்றப்பட மாட்டார்கள் எனவும் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கிழக்கு மாகாணத்தில் முற்றிலும் பெரும்பான்மையினரிடம் பறிபோகும் எனவும் அம்பாறை – அரந்தலாவை முதல் மட்டக்களப்பு வரை திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் நடைபெறுவதாகவும் மட்டக்களப்பில் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். இது அரசியல் லாபம் கருதி மக்களைத் திசை திருப்புவதற்காகத் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டாகும். இதில் எதுவித உண்மையும் கிடையாது.

போர்ச்சூழல் காரணமாக கிழக்கில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் தமது சொந்த இடங்களுக்குத் திரும்பி வருகின்றனர். இவர்கள் அரச அதிபர்கள், பிரதேச செயலாளர்களின் புள்ளி விபரங்கள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்படுகின்றனர். இந்தச் செயற்பாட்டில் எதுவித அரசியல் தலையீடும் கிடையாது.

இதற்கு முன்னரும் சம்பந்தன் எம்.பி. இவ்வாறு சிங்களக் குடியேற்றம் குறித்து குற்றஞ் சுமத்தியிருந்தார். அவரின் தலையீட்டினால் வேறு நபர்களின் இடங்களில் முறைகேடான மீளகுடியேற்றங்கள் இடம்பெற்றுள்ளன.

வேறு பகுதியில் இருந்து சிங்களமக்கள் அழைத்து வரப்பட்டு கிழக்கிலுள்ள தமிழ், முஸ்லிம் மக்களின் காணிகளில் ஒருபோதும் குடியேற்றப்படவில்லை.

20 வருடங்களுக்கு முன்னர் வெளியேறிய மக்களும் இன்று தமது சொந்த இடங்களுக்குத் திரும்பி வருகின்றனர். 1981 இல் திருகோணமலையில் அதிகமான சிங்கள மக்கள் தமிழ், முஸ்லிம் மக்களுடன் இணைந்து ஒற்றுமையாக வாழ்ந்தனர். போர்ச்சூழல் காணமாக இடம்பெயர்ந்து சிங்கள மக்களில் குறிப்பிட்டளவானவர்கள் திரும்பி வந்துள்ளனர்.

சட்டவிரோதமாக மீள்குடியேற்றங்கள் இடம்பெற்றிருந்தால் அதுகுறித்து அந்தப் பிரதேச அரச அதிபரிடமோ பிரதேச செயலாளரிடமோ முறையிடலாம்.

தேர்தல் நெருங்கியுள்ளதால் பொய் வதந்திகளை சில தரப்பினர் மக்கள் மத்தியில் பரப்பி வருகின்றனர்.
மேலும் இங்கே தொடர்க...
துப்பாக்கிப் பிரயோகத்தில் மு.கா. ஆதரவாளர் காயம் :அக்கரைப்பற்றில் சம்பவம்

No Image
அக்கரை ப்பற்று பிரதேசத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 2.45 மணியளவில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இச்சம்பவத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளரான முகம்மது சூர்த்தீன் றிபாஸ் (19 வயது) என்பவரே காயமடைந்து அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் இடது கால் தொடைப் பகுதியிலேயே காயம் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளரது அக்கரைப்பற்று பழைய சினிமா வீதியில் உள்ள அவரது வீட்டில் பாதுகாப்பு கடமையில் இருந்த இளைஞரே வீட்டில் முன் வீதியில் வைத்து துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகியுள்ளார். துப்பாக்கி சூட்டை நடத்தியவர்கள் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்ததுடன் துப்பாக்கிப் பிரயோகத்தினை மேற்கொண்டு விட்டு கைக்குண்டு ஒன்றை வீசிவிட்டு தப்பிச் சென்றதாகவும் பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கைக்குண்டு தாக்குதலில் சேதம் எதுவும் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை அக்கரைப்பற்று பிரதான வீதியில் ஆதம் லெப்பை உபைத் என்ற தேசிய காங்கிரஸ் ஆதரவாளர் பலத்த தாக்குதலுக்கு உள்ளாகி அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் அக்கரைப்பற்று பிரதான வீதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை துண்டுப் பிரசுரங்களை விநியோகித்துக் கொண்டு போகும் போது ஏற்பட்ட வாய்த் தர்க்கத்தின் போதே துண்டுப் பிரசுரம் விநியோகித்தவர்கள் பொல்லால் தலையில் தாக்கி பலத்த காயத்தை ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. இச் சம்பவங்கள் தொடர்பாக அக்கரைப்பற்று பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



காங்கிரஸின் வெற்றிக்கு இலங்கை தெரிவித்த காரணம் நிராகரிப்பு


No Image

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது கனரக ஆயுதங்கள் பிரயோகிப்பதை நிறுத்துவதென இலங்கை அரசாங்கம் எடுத்த தீர்மானம்இ இந்திய அரசாங்கம் கடந்த வருட தேர்தலின் போது தமிழ்நாட்டில் வெற்றிபெற உதவியது என்று உயர் மட்ட இலங்கை அதிகாரி ஒருவர் அண்மையில் தெரிவித்த கருத்தை ஆளும் காங்கிரஸ் கட்சி நிராகரித்துள்ளது .

இந்திய தேர்தல் முடிவுகளில் இலங்கை விவகாரத்திலும் பார்க்க உள்ளுர் அரசியல்இ பொருளாதார காரணிகளே ஆதிக்கம் செலுத்தின என்று காங்கிரஸ் பேச்சாளர் ஸ்ரீ சத்யவ்றாத் சதுர்தேவி தெரிவித்துள்ளார். தேர்தலின் போது கருணாநிதியின் திராவிட முன்னேற்ற கழகம்இ செல்வி ஜெயலலிதாவின் அகில இந்திய அண்ணா திராவிட முன்னெற்ற கழகம் ஆகிய இரண்டுமே இலங்கைத் தமிழர்களுக்கு அனுதாபம் தெரிவித்தன. ஆனால் இந்த விவகாரம் இரண்டு கட்சிகளினாலும் பயன்படுத்தப்பட்ட ஒரு பொது காரணியாகும். தேர்தலில் இது எந்தவொரு கட்சிக்கும் அனுகூலத்தை இது ஏற்படுத்தவில்லை என்று சதுர்தேவி தெரிவித்தார்.

விடுதலைப்புலிகளுடனான யுத்திதின் இறுதிக்கட்டத்தில் கனரக ஆயுத பாவனையை நிறுத்தவதென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்திய அரசாங்கத்தடன் உடன்படிக்கை ஒன்றை செய்து கொண்டதன் மூலம் இந்தியாவின் காங்கிரஸ் கட்சி கடந்த வருட தேர்தலில் தமிழ்நாட்டில் வெற்றிபெற உதவினார் என்று ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அடையாள அட்டைகளை அபகரிப்பதற்கு முயற்சி : அமைச்சர் சுசில் பிரேமஜயந்த குற்றச்சாட்டு


No Image


எதிர்வரும் 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் வாக்காளர்களின் தேசிய அடையாள அட்டைகளை அபகரிப்பதற்கு அல்லது விலைக்கு வாங்குவதற்கு முயற்சி ஒன்று மேற்கொள்ளப்படுகின்றது. இது தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளருக்கும்இ பொலிஸ்மா அதிபருக்கும் அறிவித்துள்ளோம் என்று ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் செயலாளரும் கல்வி அமைச்சருமான சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்தார்.

தேசிய பிரச்சினை தீர்வுக்கான வெளிமாதிரித் திட்டத்தை மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் ஊடாக முன்வைத்துள்ளோம். எனினும் 13 ஆவது திருத்தச்சட்டத்துக்கு அப்பால் செல்வதா? இல்லையா? என்பதனை அரசியலமைப்பு மாற்றத்துடன் ஏற்படுத்தப்படுகின்ற தேசிய இணக்கப்பாட்டின் அடிப்படையிலேயே தீர்மானிக்க முடியும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் இந்த விடயங்களை குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் கூறியதாவது: இதுவரை எமது இரண்டு ஆதரவாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில் தேர்தல் ஆணையாளர் மற்றும் பொலிஸ்மா அதிபருக்கு அறிவித்துள்ளோம். அமைதியான தேர்தலை ஒன்றை நடத்துவதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றோம்.

மேலும் எதிர்வரும் 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் வாக்காளர்களின் தேசிய அடையாள அட்டைகளை அபகரிப்பதற்கு அல்லது விலைக்கு வாங்குவதற்கு முயற்சி ஒன்று மேற்கொள்ளப்படுகின்றது. இது தொடர்பில் உரிய தரப்புக்கு அறிவித்துள்ளோம். அடையாள அட்டை இன்றி வாக்களிக்க முடியாது என்பது உங்களுக்கு தெரியும். ஒருகாலத்தில் வன்முறையில் ஈடுபட்ட மற்றும் அடையாள அட்டைகளை பறித்த கட்சி இன்று எதிரணியில் இருக்கின்றமையும் குறிப்பிடவேண்டும்.

வறியவர்களுக்காக குரல் கொடுப்பதாக கூறிக்கொண்டிருப்பவர்கள் இன்று டை கோர்ட் உடைக்கு மாறியுள்ளனர். இதேவேளை நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்கவேண்டும் என்பதே மக்கள் விடுதலை முன்னணி ஆரம்பத்தில் முன்வைத்த தர்க்கமாகும். ஆனால் எதிரணி வேட்பாளர் வெற்றிபெற்றால் ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்படுமே தவிர முழுமையாக நீக்கப்படமாட்டாது என்று எதிரணியில் அங்கம் வகிக்கும் முன்னாள் பிரதம நீதியரசர் குறிப்பிட்டுள்ளார்.

அப்படியானால் தற்போது மக்கள் விடுதலை முன்னணி என்ன கூறவிரும்புகின்றது? கட்சியின் நிலைப்பாடு என்ன? ஜனாதிபதியினால் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்க முடியாது என்று ஆரம்பத்திலிருந்து நாங்கள் கூறிவந்தோம். இதுவே யதார்த்தம். எனவே மக்களை ஏமாற்ற வேண்டாம் என்று எதிரணியிடம் கோரிக்கை விடுக்கின்றோம்.

தேசிய பிரச்சினை தீர்வுக்கான வெளிமாதிரித் திட்டத்தை மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் ஊடாக முன்வைத்துள்ளோம். அதனை மட்டுமே ஜனாதிபதி தேர்தலில் செய்ய முடியும். ஏனைய விடயங்களை பாராளுமன்றத்திலேயே செய்ய முடியும். கடந்த 2005 ஆம் ஆண்டு தேர்தலின்போது முன்வைக்கப்பட்ட மஹிந்த சிந்தனையிலும் இந்த விடயத்தை தெளிவாக குறிப்பிட்டிருந்தோம். சமாதான பேச்சுக்களிலும் ஈடுபட்டோம். ஆனால் அவை தோல்வியடைந்தன. மேலும் சர்வகட்சி பிரதிநிதிகள் குழு தனது பணியில் ஈடுபட்டுவருகின்றது. அதற்கிடையில் தற்போது தேர்தல் வந்துள்ளது.

நாங்கள் இம்முறை மஹிந்த சிந்தனை எதிர்கால நோக்கு வேலைத்திட்டத்திலும் சில யோசனைகளை முன்வைத்துள்ளோம். அதாவது செனட் சபை மக்கள் சபைகள் உள்ளிட்ட பல விடயங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. எனினும் 13 ஆவது திருத்தச்சட்டத்துக்கு அப்பால் செல்வதா? இல்லையா? என்பதனை அரசியலமைப்பு மாற்றத்துடன் ஏற்படுத்தப்படுகின்ற தேசிய இணக்கப்பாட்டின் அடிப்படையிலேயே தீர்மானிக்க முடியும். அது தொடர்பில் தற்போது கூற முடியாது.

அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படவுள்ளமை போன்று தனியார் ஊழியர்களுக்கும் சம்பள உயர்வு வழங்குவதற்கான அடித்தளத்தை இட்டுள்ளோம். கடந்த காலங்களில் தொழில் அமைச்சு தலையிட்டு இவ்வாறு சம்பள உயர்வை வழங்க நடவடிக்கை எடுத்தது. நிதி ஊழல் மற்றும் ஏனைய மோசடிகள் குறித்து பேசப்படுகின்றது. ஆனால் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவைவிட இலஞ் ஊழல் தடுப்பு திணைக்களம் சிறந்தது என்பதே எனது தனிப்பட்ட கருத்தாகும். காரணம் முன்னர் அதில் வேலைத்திட்டங்களை நாங்கள் மேற்கொண்டோம்


தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை பேணுவதன் மூலம் எதிர்வரும் தேர்தல்களிலும்
நாம் சாதிக்கலாம் :சம்பந்தன்
No Image

தமிழ் முஸ்லிம் மக்கள் ஒன்றிணையக் கூடியததொரு தருணத்தை ஜனாதிபதித் தேர்தல் எமக்குத் தந்திருக்கின்றது. எதிர் காலங்களிலும் இந்த இணைப்பினைப் பேணுவதன் மூலம் எதிர்வரும் தேர்தல்களிலும் நாம் சாதிக்கலாம். பெருந்தன்மையுடன் முஸ்லிம்கள் விடயத்தில் விட்டுக் கொடுப்புக்களோடு நடந்துகொள்ள நாம் தயார் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவரும்இ இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் முஸ்லிம் காங்கிரஸும் இணைந்து எதிரணியின் பொது வேட்பாளர் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு தெரிவித்து கல்முனை சந்தாங்கேணி மைதானத்தில் நேற்று முன்தினம் நடத்திய கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம்இ எம்.பி.க்களான மாவை சேனாதிராஜாஇ செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்ட இரு கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள்இ மாகாண சபைஇ மாநகர சபை உறுப்பினர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றினர். கல்முனை மாநகர சபையின் 2010ஆம் ஆண்டுக்கான உயர் விருதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கு தமிழ் பேசும் மக்களின் தலைமகன் விருது கல்முனை மாநகர மேயர் எச்.எம்.எம். ஹரீஸால் வழங்கி வைக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் தொடர்ந்து உரையாற்றிய சம்பந்தன் எம்.பி. கூறியதாவது: கல்முனை மண்ணில் இன்று எனக்கு அளிக்கப்பட்டுள்ள கௌரவம் எனக்குரியதல்ல. தமிழ் முஸ்லிம் உறவை எதிர்பார்த்து நிற்கும் அனைவருக்கும் உரியதாகும். அரசியலில் நேர்மை. உண்மை என்பவற்றைக் கொண்ட பாரம்பரியத்துடன் நான் கடந்து வந்த பாதைக்குக் கிடைத்த கௌரவம் என்றே இதனைக் கருதுகின்றேன். எங்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள இவ் ஒன்றிணைவின் மூலம் தமிழ் முஸ்லிம் உறவைக் கட்டிக் காத்துஇ நாமே நம்மை ஆள வேண்டிய நிலையினை உருவாக்க வேண்டும். மஹிந்த ராஜபக்ஷவோ ஏனைய ராஜபக்ஷக்களோ எம்மை ஆள நாம் இடமளிக்க கூடாது. பஞ்சாப்இ ஆந்திராஇ தமிழ்நாடு எனத் தனித்தனியான மாநில ஆட்சிகள் நடைபெற்றாலும் இந்தியாவின் முழு ஆட்சியினையும் அது பாதிக்கவில்லை. அது சிதறவும் இல்லை. மாறாக முன்னேற்றமே அடையும். இவ்வாறானதொரு ஆளுமையினையே இங்கு நாம் எதிர்பார்க்கின்றோம்.

தமிழ் முஸ்லிம் மக்கள் உண்மைக்கு உண்மையாக நேசிக்க வேண்டும். இதன் மூலமே நிரந்தர உறவினைப் பேண முடியும். சிங்கள மக்களை நாம் மதிக்கின்றோம். ஆனால்இ அவர்களுக்கொரு மண்இ பண்பாடுஇ மொழி இருப்பது போல் தமிழ் பேசும் மக்களுக்கும் இருக்கின்றது என்பதை அவர்கள் உணர வேண்டும். ஜனாதிபதி மஹிந்தவைப் பொறுத்தவரை அவருக்கு அடிபணியக் கூடியஇ அவர் சொல்வதற்கு ஆமாம் போடுகினற தலைவர்களையே அவருக்குப் பிடிக்கும். இதற்கு மாற்றமான தலைவர்களை ஜனாதிபதி ஏற்றுக்கொள்வதில்லை.

எமது மக்களின் பிரச்சினை எதுவென்பதை அறிந்து அதனை பேசித் தீர்க்கக் கூடியவர்களே அரசியலில் இறக்க வேண்டும். இது பற்றித் தெரியாதவர்கள் இதில் ஈடுபடாமல் ஒதுங்கி இருப்பது நல்லது. மனிதாபிமானமில்லாத தலைவராகவே ஜனாதிபதியை நாம் காண்கின்றோம். பாராளுமன்றத்தில் வாக்களிக்க முடியாமல் இரண்டு மூன்று தடவைக்கு மேல் பாராளுமன்ற உறுப்பினர்களைக் கடத்தி அவர்களின் குடும்பங்களைப் பயமுறுத்தும் காரியத்தை இவ் அரசு செய்தது. இதுவெல்லாம் ஜனநாயகமா? என நாம் கேட்கின்றோம்.

எடுத்த எடுப்பில் சரத் பொன்சேகாவை ஆதரிக்கும் முடிவை நாம் எடுக்கவில்லை. அலசிஇ பேசி ஆராய்ந்தே இந்த முடிவை எடுத்தோம். வட மாகாண முஸ்லிம்கள் மீண்டும் குடியமர்த்தப்பட வேண்டும். தங்களது பிரச்சினைகளை நாங்களே தீர்மானிக்க வேண்டும். காணிஇ கல்விஇ தொழில் இவைகளைப் பற்றியெல்லாம் ஜனாதிபதியிடம் பேசினோம். ஆனால் அவர் இவைகளையெல்லாம் இழுத்தடிப்புச் செய்தார். பொன்சேகாவுடன் பேசியபோது சாதகமான சமிக்கை கிடைத்தது. அதன் பின்னரே எமது முடிவை அறிவித்தோம்.

நான் தான் யுத்தத்தை வென்றவன் என மார்பு தட்டிக்கொண்டு இருந்த ஜனாதிபதிக்கு அவருக்குள்ளிருந்தே பொது வேட்பாளரை எதிரணியினர் தேர்வு செய்துள்ளனர். இதனால் மிகவும் சாதாரணமாக நினைத்த ஜனாதிபதித் தேர்தல் இன்று ஜனாதிபதிக்குப் பெரும் தலையிடியாக மாறியுள்ளது. சரத் பொன்சேகாவை ஜனாதிபதியாகத் தெரிவு செய்த பின்னும் எமது உரிமைகள் வெல்லப்படவில்லையாயின் 2010ஆம் ஆண்டு தமிழ் முஸ்லிம்கள் இணைந்து அதனைப் பெற முயற்சிக்க வேண்டும். இவைகளினூடாகவே தமிழ் முஸ்லிம் சமூகம் தலைநிமிர்ந்து வாழ முடியும் என்றார்



சரத் பொன்சேகாவின் வெற்றி பிரிவினைக்கான அங்கீகாரம் :எஸ்.பி திஸாநாயக்க



No Image

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் யுத்தத்தை வெற்றி கொண்டதால் தலைக்குனிவை சந்தித்துள்ள சர்வதேச நாடுகள்இ சரத் பொன்சேகாவைப் பயன்படுத்தி மீண்டும் நாட்டுக்குள் பிரிவினை வாதத்திற்கு வித்திடுகின்றன என்று முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் மீண்டும் இணைந்துகொண்டவருமான எஸ்.பி. திஸாநாயக்க குற்றம் சாட்டினார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிளவுகளால் தமிழ் மக்களின் ஒட்டுமொத்த வாக்குகளும் பொன்சேகாவுக்கு கிடைக்கப் போவதில்லையென்றும் அவர் கூறினார். கொழும்பு ஜானகி ஹோட்டலில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த போதே எஸ்.பி. திஸாநாயக்க இவ்வாறு தெரிவித்தார். இங்கு இவர் மேலும் கூறியதாவதுஇ

தமிழ் தேசியக் கூட்டமைப்பு மூன்றாகப் பிரிந்துள்ளது. 4 பேர் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்குகின்றனர். 4 பேர் பகிஷ்கரிக்க வேண்டுமென்கின்றனர். ஒருவர் தேர்தலில் தனித்து போட்டியிடுகின்றார். 7 பேர் பொன்சேகாவை ஆதரிக்கின்னர். எனவே தமிழ் மக்களின் ஒட்டுமொத்த வாக்குகளும் பொன்சேகாவுக்கு கிடைக்காது. பொன்சேகாவின் வெற்றியென்பது விடுதலைப் புலிகளுக்கும் கூட்டமைப்பின் இரகசிய ஒப்பந்தத்திற்கும் பிரிவினை வாதத்திற்கும் கிடைக்கும் அங்கீகாரமாகும்.

சர்வதேச ரீதியில் இயங்கும் புலி உறுப்பினர்களினதும் யுத்தத்தை வெற்றி கொண்டதால் தலைகுனிவை எதிர்நோக்கிய சர்வதேச நாடுகளினதும் ஒத்துழைப்புடனேயே இந்த நாட்டின் ஜனாதிபதியை வெளியேற்ற சதித் திட்டங்கள் தீட்டப்பட்டு வருகின்றன. இராணுவத்தினர் சிறு பிழையைச் செய்தாலும் கடுமையான தண்டனை வழங்கும் மனப்போக்குடையவர். இவ்வாறான நபரொருவர் நாட்டின் ஜனாதிபதியானால் என்ன நடக்கும் என்பதை சிந்தித்துப் பாருங்கள். 27ஆம் திகதி பதவியேற்றால் படை உயர் அதிகாரிகளின் சீருடைகளை கழற்றுவேன் என்கிறார். இப்போதே பழி தீர்க்கும் தனது குணாம்சத்தை வெளிக்காட்டுகிறார்.

இவர் எவ்வாறு சுயாதீன ஆணைக்குழுக்களை அமைக்கப் போகிறார்? 17 ஆவது திருத்தத்தை எவ்வாறு நடைமுறைப்படுத்துவார். காபந்து அரசாங்கத்தில் பிரதமர் சரத் என் சில்வா என ஜே. வி. பி. தெரிவிக்கின்றது. ரணில் விக்கிரமசிங்க தானே பிரதமர் என்கிறார். இவ்வாறு இப்போதே குழப்பங்கள்இ முரண்பாடுகள் தோன்றியிருக்கின்றன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ யுத்தத்தையும் செய்து கொண்டு மறுபுறம் பாரிய அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்தார். வேலையற்ற பிரச்சினைக்கு தீர்வு கண்டார். அதிவேகப் பாதைகள்இ மேம்பாலங்கள் என அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட்டன.

இன்று யுத்தம் முடிந்து விட்டது. இவ்வாறானதொரு நிலைமையில் மேற்கண்ட அபிவிருத்திகளை மேலும் துரிதகதியில் முன்னெடுக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை வெற்றிபெறச் செய்ய வேண்டும். ஊழல்இ மோசடிகளற்ற நல்லாட்சியை உருவாக்க பொன்சேகாவை வெற்றி பெறச் செய்ய வேண்டுமென வக்காளத்து வாங்குவோர் இன்று என்ன செய்கின்றனர்? 300 இலட்சம் கொடுத்து முஸ்ஸம்மில் எம்.பி.யை வாங்க முயற்சித்துள்ளனர்.

இவ்வளவு தொகை பணம் எங்கிருந்து கிடைத்தது? அது சர்வதேச ரீதியில் உள்ள புலிகளிடமிருந்து கிடைத்தது. ""அரச ஆட்சிக்கு முற்றுப்புள்ளி" என்கிறார்கள். ஜனாதிபதி எளிமையான மக்களோடு மக்களாக வாழ்பவர். அவரது புதல்வர்கள் வெளிநாடு சென்றாலும் படையினர் பாதுகாப்பு வழங்குவதில்லை. ஆனால் பொன்சேகாவின் மகள் திருமணம் செய்து அமெரிக்கா சென்றார். அதன் போது படையினர் பாதுகாப்பிற்குச் சென்றனர்.

பொன்சேகா தளபதியாகவிருந்த போது 16 பெண் அதிகாரிகள் இருந்தனர். இவ்வளவு தொகை ஏன் என்பது எனக்குத் தெரியாது. தனியார் தொலைக்காட்சி நிறுவனமொன்று எனது பழைய உரையொன்றை பயன்படுத்தி பொன்சேகாவுக்கு ஆதரவாக விளம்பரமொன்றை ஒளிபரப்புகின்றது. இதனை நிறுத்த வேண்டுமென எனது சட்டத்தரணியூடாக அறிவுறுத்தல் கடிதத்தை அனுப்பி வைத்துள்ளேன்
மேலும் இங்கே தொடர்க...

12 இலட்சம் வாக்குகளால் ஜனாதிபதி முன்னணியில்
உள்நாட்டுஇ வெளிநாட்டு கருத்து கணிப்பில் தகவல்



உள்நாட்டுஇ வெளிநாட்டு சில அமைப்புக்கள் நடத்திய கருத்துக் கணிப்பின் படி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 12 இலட்சம் வாக்குகளால் முன்னணியில் இருப்பதாக பொறியியல் சேவைகள் அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

ஜனாதிபதி 27 ஆம் திகதி 15 சதவீத மேலதிக வாக்குகளால் வெற்றி பெறு வது உறுதி என்று அவர் மேலும் தெரிவித்தார். மகாவலி கேந்திர நிலையத்தில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் மேலும் உரையாற்றுகையில்: தேசிய பிரச்சினைக்கும்இ பொருளா தாரத்திற்கும் உரிய தீர்வு முன்வைக்க முடியாத சரத் பொன்சேகாவினால் எதனையும் செய்ய முடியாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

நகர்ப்புறங்களையும்இ கிராமப் புறங்களையும் சேர்ந்த பெருந்தொகையானோர் ஜனாதிபதிக்கு வாக்களிக்க தயாராக உள்ளனர். சரத் பொன்சேகாவும்இ அவரை ஆதரிக்கும் ஐக்கிய தேசியக் கட்சிஇ மக்கள் விடுதலை முன்னணி ஆகிய கட்சிகள் எந்தவொரு குறிக்கோளும் இல்லாமல் நாளுக்கு நாள் குழப்பத்தில் மூழ்கியுள்ளன.

நாட்டின் பொருளாதார நிலைமை குறித்து முற்றிலும் அறியாமை முறைமையே சரத் பொன்சேகாவிடம் காண முடிகின்றது.

1977ல் எட்டு இறாத்தல் தானியம் தருவதாக ஜே. ஆர். அன்று மக்களை ஏமாற்றினார். இன்றைய மக்கள் 21 ஆம் நூற்றாண்டில் வாழ்பவர்கள். எனவே அவ்வாறு இலகுவாக ஏமாற்ற முடியாது.

ஐ.தே.க.இ ஜே.வி.பியை நம்ப முடியாத நிலையிலுள்ள சரத் பொன்சேகா இராணுவத்தைச் சேர்ந்த தனது நண்பர்களை தேர்தல் தொகுதி இணைப்பாளர்களாக நியமித்துள்ளார். இது பொன்சோகாவுக்கும் ஜே.வி.பி.இ ஐ.தே.க. உறவுகளுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் நிலை காணப்படுகின்றது.

இதனால் அந்த பிரதேச அமைப்பாள ர்களும் ஆதரவாளர்களும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம் எதுவும் கிழக்கில் மேற்கொள்ளப்படவில்லை
சம்பந்தன் கூற்று உண்மைக்குப் புறம்பானது என்கிறார் கிழக்கு ஆளுநர்



கிழக்கு மாகாணத்தில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் இடம்பெறுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.

சம்பந்தன் தெரிவித்துள்ள குற்றச்சாட்டை கிழக்கு மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் மொஹான் விஜேவிக்கிரம முழுமையாக நிராகரித்தார். அரசியல் லாபம் பெறுவதற்காக இவ்வாறான பொய்யான குற்றச்சாட்டுக்களை எதிர்க்கட்சிகள் பரப்பி வருவதாகவும் தமிழ்இ முஸ்லிம் மக்களின் காணிகளில் வேறு எவரும் குடியேற்றப்படமாட்டார்கள் எனவும் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கிழக்கு மாகாணத்தில் முற்றிலும் பெரும்பான்மையினரிடம் பறிபோகும் எனவும் அம்பாறை - அரந்தலாவை முதல் மட்டக்களப்பு வரை திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் நடைபெறுவதாகவும் மட்டக்களப்பில் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். இது அரசியல் லாபம் கருதி மக்களைத் திசை திருப்புவதற்காகத் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டாகும். இதில் எதுவித உண்மையும் கிடையாது.

போர்ச் சூழல் காரணமாக கிழக்கில் இருந்து இடம் பெயர்ந்த மக்கள் தமது சொந்த இடங்களுக்குத் திரும்பி வருகின்றனர். இவர்கள் அரச அதிபர்கள்இ பிரதேச செயலாளர்களின் புள்ளி விபரங்கள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்படு கின்றனர். இந்தச் செயற்பாட்டில் எதுவித அரசியல் தலையீடும் கிடையாது.

இதற்கு முன்னரும் சம்பந்தன் எம். பி. இவ்வாறு சிங்களக் குடியேற்றம் குறித்து குற்றஞ் சுமத்தியிருந்தார். அவரின் தலையீட்டினால் வேறு நபர்களின் இடங்களில் முறைகேடான மீள்குடியேற்றங் கள் இடம்பெற்றுள்ளன.

வேறு பகுதிகளில் இருந்து சிங்கள மக்கள் அழைத்து வரப் பட்டு கிழக்கிலுள்ள தமிழ்இ முஸ்லிம் மக்களின் காணிகளில் ஒருபோதும் குடியேற்றப்படவில்லை. 20 வருடங்களுக்கு முன்னர் வெளியேறிய மக்களும் இன்று தமது சொந்த இடங்களுக்குத் திரும்பி வருகின்றனர்.

1981 இல் திருகோணமலையில் அதிகமான சிங்கள மக்கள் தமிழ்இ முஸ்லிம் மக்களுடன் இணைந்து ஒற்றுமையாக வாழ்ந்தனர். போர்ச் சூழல் காரணமாக இடம் பெயர்ந்து சிங்கள மக்களில் குறிப்பிட்டளவானவர்கள் திரும்பி வந்துள்ளனர்.

சட்ட விரோதமான மீள்குடியேற்றங்கள் இடம் பெற்றிருந்தால் அது குறித்து அந்தப் பிரதேச அரச அதிபரிடமோ பிரதேச செயலாளரிடமோ முறையிடலாம்.

தேர்தல் நெருங்கியுள்ளதால் பொய் வதந்திகளை சில தரப்பினர் மக்கள் மத்தியில் பரப்பி வருகின்றனர்


தமிழ் மக்களின் நலன் மறந்து டொலர்களின் பின்னால் சம்பந்தன்

ஐ.ம.சு.மு செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் ராஜித தெரிவிப்பு


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் ஆர். சம்பந்தன் தமிழ் மக்களின் நலன்களுக்காக செயற்படாமல் வெளிநாட்டு டொலர்களின் பின்னணியில் செயற்படுவதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

கஷ்டப்பட்ட தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்காத சம்பந்தன் பிரிவினர் புலிகளின் இறப்பர் முத்திரையாகவே செயற்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செய்தியாளர் மாநாடு கொழும்பிலுள்ள மகாவலி கேந்திர நிலையத்தில் இடம்பெற்றது.

கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் கலந்து கொண்ட இந்த செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் ராஜித மேலும் உரையாற்றுகையில்:-

புலிகளின் பிடியில் அப்பாவித் தமிழ் மக்கள் சிக்கித் தவித்த போதும், அவர்களை அரசாங்கம் பாதுகாப்பாக மீட்டெடுத்த போதும் சம்பந்தன் அந்த மக்களது சுக, துக்கங்களைக் கேட்டறிந்து அவர்களுக்குத் தேவையான எதனையும் செய்து கொடுக்கவில்லை.

கஷ்டப்பட்ட தமிழ் மக்களுக்குத் தேவையான சகலவற்றையும் அரசாங்கமே செய்து கொடுத்தது. அந்தக் காலகட்டத்தில் அந்த மக்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதியின் ஆலோசகர் பஸில் ராஜபக்ஷ, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் போன்றவர்களை தவிர வேறு எவரையும் தெரியாது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

எனவே தமிழ் மக்கள் அதிகூடிய வாக்குகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்குவது உறுதி என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

சம்பந்தனும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் இந்தியாவின் பின்னணியில் செயல்படவில்லை. மாறாக வெளிநாடுகளின் டொலர்களின் பின்னணியில் செயற்படுகி ன்றனர்.

இந்தியாவுக்கு சென்று வரும் சம்பந்தன் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு அறிவித்தல்களை விடுத்து இந்தியா தமது பின்னணியில் இருப்பது போன்று காண்பிக்க முயல்கின்றார். அதில் எந்தவித உண்மையுமில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

30 வருடங்களுக்கு பின்னர் நாட்டில் பாரிய மாற்றங்களை குறுகிய காலத்தில் ஏற்படுத்தியவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே. இன்று மாபெ ரும் மாற்றத்தை ஏற்படுத்தி மக்கள் சமாதான மாக வாழும் சூழல் காணப் படுகின்றது.

இந்த நாட்டிற்குத் தேவையான சகல மாற்றங்களையும் ஜனாதிபதி ஏற்கனவே ஏற்படுத்தியுள்ளார். இந்நிலையில் மக்கள் மீண்டும் ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கவில்லை என்றும் தெரிவித்தார்.

அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த

வடக்கு, கிழக்கு என்று பிரிக்காமல் முழு நாட்டுக்கும் தேவையான சகல விடயங்களையும் ஜனாதிபதி தனது மஹிந்த சிந்தனையிலும், அதன் தொலை நோக்கத்திலும் தெளிவாக கூறியுள்ளார்.

சகல தரப்பினரின் இணக்கப்பாட்டுடன் நிச்சயமாக உரிய தீர்வு தமிழ்மக்களுக்குப் பெற்றுக்கொடுக்கப்படும். இதற்குத் தேவையான திட்டத்தை ஜனாதிபதி வகுத்துள்ளார். அடுத்த பாராளுமன்ற தேர்தலுக்குப் பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். யுத்தத்தை வெற்றிகொள்ள முடியாது என்றனர். நாங்கள் அதனை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளோம்.

சம்பந்தன் தனக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக மேடைகளில் கூற தயாராக இருப்பதாக தங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது என்று தெரிவித்த அமைச்சர் சுசில் மீண்டும் ஒரு பதற்றத்தை ஏற்படுத்த முற்படுவதாகவும் குறிப்பிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...