10 பிப்ரவரி, 2010


பொன்சேகாவின் கைதை அரசியலாக்கி தேர்தலில் பயன்படுத்த எதிர்க்கட்சி முயற்சி

கைது அரசியல், தனிப்பட்ட ரீதியானதொன்றல்ல



சரத் பொன்சேகாவின் கைது அரசியல் மற்றும் தனிப்பட்ட ரீதியானதொன்றல்ல. இராணுவச் சட்டதிட்டங்களை மீறிப் பாரிய குற்றச்சாட்டுகளுக்கு அவர் உட்பட்டமையே கைதுக்கான காரணமாகுமென ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

எனினும் சரத் பொன்சேகாவின் கைதை அரசியலாக்கி, எதிர்வரும் தேர்தலில் அதனைப் பயன்படுத்தும் நோக்கிலேயே எதிர்க்கட்சி பல்வேறு கருத்துக்களை நாடுமுழுவதும் பரப்பி வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

தற்போது நடைபெற்று வரும் விசாரணை அரசாங்கம் சம்பந்தப்பட்டதல்ல. முழுமை யாக இராணுவம் சம்பந்தப்பட்டது. இதில் சிவில் மக்களை சம்பந்த ப்படுத்த வேண்டாமென சகல அரசியல் கட்சிகளையும் கேட்டுக் கொள்வதாகவும் அமைச்சர் தெரிவி த்தார்.

தகவல், ஊடகத்துறை அமைச்சில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு விளக்கமளித்த அமைச்சர் இது தொடர்பில் மேலும் தெரிவித்த தாவது:

இராணுவச் சீருடையிலிருந்து கொண்டே அரசியல் நடவடிக்கை களில் ஈடுபட்டமை, முப்படைகளின் தளபதிக்கு எதிரான சூழ்ச்சிகளில் ஈடுபட்டமை, இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற படையினரை ஆயிர க்கணக்கானோருக்குப் பாதுகாப்பளி த்தமை, இராணுவ ஆயுதக் கொள் வனவுகளில் இடம்பெற்றுள்ள மோசடிகள் என பல்வேறு குற்றச் சாட்டுக்களை அடிப்படையாகக் கொண்டே சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டுள்ளார்.

இதற்கிணங்க முறைப்படி விசார ணைகள் மேற்கொள்ளப்பட்டு வரு கின்றன.

விசாரணைகள் முடிவுறும் வரை இது குறித்து கருத்துக்களை வெளி யிடக்கூடாது. இன்னும், விசார ணைகள் முற்றாக நிறைவடைய வில்லை என்பதைக் கவனத்திற் கொள்ள வேண்டும்.

இராணுவ சட்டதிட்டங்களின்படி ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி யொருவர் இராணுவ சட்டதிட்டங் களை மீறுவாறேயாகில் இராணுவப் பொலிஸாரால் அவர் கைது செய்ய ப்பட்டு சம்பந்தப்பட்ட குற்றச் சாட்டுக்கள் நிமித்தம் இராணுவ நீதிமன்றத்தில் அவர் விசாரணைக்கு உட்படுத்தப்படுவது வழமையான தொரு நடைமுறையாகும்.

இதன்படி சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டதும் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதும் இராணுவ சட்டமுறைமைகளுக்கமைந்த செயற்பாடே. எனினும் சிவில் பிர ஜைகளோ அல்லது வெளியாரோ கருத்துக்களை வெளியிடுவது இவ் விசாரணைகளுக்குப் பங்கமாக அமையலாம். விசாரணை முடிவில் அவரது குற்றங்கள் வெளியிடப்படும்.

சரத் பொன்சேகா பி.பி.சி.க்கு வழ ங்கிய பேட்டியொன்றில் அவர் சர்வ தேசம் சென்று சாட்சி சொல்லவும் தயார் எனக் குறிப் பிட்டிருந்ததுடன் சவால்களையும் விடுத்திருந்தார்.

நாட்டின் இராணுவத் தளபதி யொருவர் இவ்வாறு தெரிவிக்க முடியுமா? அவ்வாறு அவர் செயற் பட்டால் நாட்டுக்கு அபகீர்த்தியும் பாரிய நட்டமுமே ஏற்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.


பொன்சேகா மீது தாக்குதல் நடத்தவோ இடையூறு ஏற்படுத்தவோ இல்லை
இராணுவப் பொலிஸார் முற்றாக மறுப்பு; மனைவியும் சட்டத்தரணியும் நேற்று சந்தித்துப் பேச்சு



சரத் பொன்சேகாவை கைது செய்யச்சென்ற இராணுவப் பொலிஸார் அவரை தாக்கவோ அல்லது அவருக்கு இடையூறு ஏற்படுத்தவோ இல்லையென்று இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.

சரத் பொன்சேகா மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அவர் மோசமாக நடத்தப்பட்டதாகவும் சில ஊடகங்களில் வெளியாகியிருந்த செய்திகளை இராணுவப் பொலிஸ் பிரிவு முற்றாக மறுப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பாக இராணுவப் பொலிஸ் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

சரத் பொன்சேகாவை கைது செய்யச் சென்ற அதிகாரிகள் அது பற்றி அவருக்கு எடுத்துக் கூறினர். ஆனால், அவர் தொடர்ந்து அவர்களுடன் ஒத்துழைக்கப் பிடிவாதமாக மறுத்ததால் அவருடைய மறுப்பையும் ஏனைய கருத்துக்களையும் பொருட்படுத்தாது அவரை அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

இதேவேளை கடற்படைத் தலைமைய கத்தில் சிரேஷ்ட அதிகாரிகளுக்கான வதிவிடம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பொன்சேகாவை நேற்று முன்தினம் அவரது மனைவி அனோமா பொன்சேகாவும், அவரால் பிரேரிக்கப்பட்ட சட்டத்தரணி விஜேதாச ராஜபக்ஷ ஆகியோர் சென்று பார்வையிட்டனர்.

நேற்று முன்தினம் மாலை 6.30 மணியளவில் பார்வையிடச் சென்ற அவர்கள் சுமார் 3 மணித்தியாலங்கள் சந்திப்பு நடத்தினர்.

பொன்சேகா கேட்டுக் கொண்டதற்கமைய மருத்துவ வசதிகள் செய்து கொடுக்கப்ப ட்டுள்ளது. இவ்வாறு தடுத்துவைக்கப்படும் ஒருவருக்கு இராணுவத்தால் வழங்கப்படும் உணவை மாத்திரமே சாப்பிட முடியும் என்று தெரிவித்த இராணுவப் பேச்சாளர், சரத் பொன்சேகாவின் சுகாதார நலன்கள் மற்றும் முன்னாள் உயர் அதிகாரி என்ற விடயங்களை கருத்திற்கொண்டு அவர் விரும்பும் உணவை செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.

தற்போது இராணுவப் பாதுகாப்பிலுள்ள சரத் பொன்சேகாவுக்கு எதிராக இராணுவச் சட்டத்தின் பிரிவு 57 (1) கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மேஜர் ஜெனரல் குறிப்பிட்டார்.






உச்ச நீதிமன்று முன் ஆர்ப்பாட்டம்: குழப்பம் விளைவிக்க ஐ.தே.க., ஜே.வி.பி முயற்சி
கல்வீச்சில் 3 பொலிஸ் உட்பட ஐவர் காயம்; 12 வாகனங்கள் சேதம் கொழும்பு, புதுக்கடை உச்ச நீதிமன்ற வளாகத்திற்குள் பலவந்தமாக பிரவேசிக்க முயன்ற ஐ. தே. க., ஜே. வி. பி. ஆதரவாளர்களை பொலிஸார் தடுத்து நிறுத்த முற்பட்ட போது அவர்கள் கற்களை வீசி பெரும் சேதத்தை ஏற்படுத்தினர். சுலோகங்களை ஏந்தி, கோஷங்களை எழுப்பியவாறு கற்களை எறிந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் நடத்திய தாக்குதல்களில் பொலிஸார் உட்பட பலர் படுகாயமடைந்துள்ளனர். ஆர்ப்பாட்டக்காரர்களின் கல்வீச்சுக்களால் மூன்று பொலிஸாரும், இரண்டு சிவிலியன்களும் படுகாயமடைந்துள்ளதுடன் 12 வாகனங்கள் சேதமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் பிரிஷாந்த ஜயகொடி தெரிவித்தார். பொலிஸாரின் எட்டு வாகனங்களும், பொதுமக்களின் நான்கு வாகனங்களையுமே ஆர்ப்பாட்டக்காரர்கள் சேதப்படு த்தியுள்ளனர் எனத் தெரிவித்த அவர், நிலைமையை கட்டுப்படுத்த கண் ணீர்ப்புகைப் பிரயோகம் செய்யப் பட்டதாகக் கூறினார். இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை ஆறு பேர் வாழைத் தோட்ட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் விசாரணை கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார். இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, இராணுவ சட்ட விதிமுறை களுக்கு அமைய இராணுவப் பொலி ஸாரால் கைது செய்யப்பட்ட சரத் பொன்சேகா வுக்கு ஆதரவு தெரி வித்தே நேற்று எதிர்க்கட்சி ஆதரவா ளர்கள் ஆர்ப்பாட் டத்தை நடத்தினர். நீதிமன்றம் என்பதை மறந்து ஆர்ப் பாட்டக்காரர்கள் அந்த இடத்தில் பெரும் அமளி துமளிகளை ஏற் படுத்தியுள்ளதுடன் கல்வீச்சுக்களை நடத்தியுள்ளனர். ஐ. தே. க. பிரதித் தலைவர் கரு ஜயசூரிய, பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர்களான தயாசிறி ஜயசேகர, டாக்டர் ஜயலத் ஜயவர்தன, அண்மையில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது வேட்பாளராக களமிறங்கிய சிறி துங்க ஜயசூரிய உட்பட ஜே. வி. பி. ஆதரவாளர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்தச் சம்பவத்தை செய்தி சேகரிக்கச் சென்ற பல ஊடகவிய லாளர்கள் கல்வீச்சுக்குள்ளானார்கள். இந்தச் சம்பவத்தையடுத்து நீதிம ன்றத்தின் செயற்பாடுகளில் ஸ்தம் பிதநிலை காணப்பட்டதுடன் பெரும் பரபரப்பு நிலவியது. இந்தச் சம்பவம் தொடர்பான விரிவான விசாரணைகளை மேற்கொண்டு சம்பவத்துடன் தொடர்புடையவர்களை சட்டத்திற்கு முன் நிறுத்தும் நடவடிக்கைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரி வித்தார். எதிர்க்கட்சியின் இந்த செயற் பாட்டால் கொழும்பு புறக்கோட்டை மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்களில் பெரும் வாகன நெரிசல் காணப்பட்டது. கல் வீச்சினால் காயப்பட்ட பொலிஸார் மற்றும் பொதுமக்கள் கொழும்பு தேசிய வைத்தி யசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள னர்.


பொதுத்தேர்தல் அறிவிப்பு வெளியானதும் வேட்பாளர் தெரிவில் கட்சிகள் மும்முரம்

ஆசனங்களை பகிர்வதில் தொடர்ந்தும் மந்திராலோசனை



ஏப்ரல் மாதம் எட்டாந்திகதி நடைபெற வுள்ள புதிய பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தெரிவு செய்வதற்கான இறுதிக்கட்ட பணிகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளன.

பாராளுமன்றம் நேற்று முன்தினம் (09) நள்ளிரவிலிருந்து தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டதும் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும் செயற்பாடுகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தியுள்ளன.

இம்மாதம் 19ம் திகதி முதல் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்ய முடியும் என வர்த்தமானி அறிவித்தலில் பிரகட னப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் அதற்கு முன்னதாக வேட்பாளர் பட்டிய ல்களைப் பூர்த்தி செய்ய அரசியல் கட்சிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளன.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மாகாண மட்டத்தில் வேட்பாளர்களுக்கான நேர்முக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. இன்னும் இரண்டொரு தினங்களில் மாவட்ட மட்டத்தில் வேட்பாளர் பட்டியலை பூர்த்தி செய்யவுள்ளதாக முன்னணியின் பொதுச் செயலாளர் அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த் தெரிவித்தார்.

முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சி களுக்கு மாவட்ட மட்டத்தில் வேட்பாளர் களைப் பகிர்வது குறித்து, கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாகக் கூறிய அமைச்சர் பிரேம் ஜயந்த், எவ்வாறெனினும் எதிர்வரும் 20ம் திகதிக்குள் வேட்பாளர்கள் நியமனப்பத் திரங்களில் கைச்சாத்திடவுள்ளதாகக் குறிப்பிட்டார்.

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையிலான கூட்டணி இன்னும் தீர்க்கமான முடிவு எதனையும் மேற்கொள்ளவில்லையென அக்கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்துக்கு சவால் விடுக்கும் அளவில் இந்தத் தேர்தலில் வேட்பாளர்க ளைக் களமிறக்கத் தீர்மானித்துள்ளதாகவும், இது தொடர்பில் சகல கூட்டணிக் கட்சிகளுடனும் பேசி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடி இவ்வாரம் முடிவொன்று எட்டப்படுமென்றும் திஸ்ஸ அத்தநாயக்க கூறியுள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) சகல மாவட்டங்களிலும் போட்டியிடத் தீர்மானித்துள்ளதாக அதன் பிரசாரச் செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இன்னும் இரண்டொரு தினங்களில் இது தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படுமென அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எவ்வித அறிவிப்பையும் வெளியிடவில்லை. கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிக ளிடையே கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கருத்து முரண்பாடு எழுந்திருந்தது. இந்நிலையில் கூட்டமைப்பால் போட்டியிடுவது பற்றிய தீர்மானம் எதனையும் கூட்டமைப்பு இன்னும் மேற்கொள்ளவில்லை.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆளுந்தரப்புடன் இணைந்து போட்டியிடு வதென ஏற்கனவே தீர்மானித்துவிட்டது. அந்தக் கட்சியின் சார்பில் 9 பேர் தேர் தலில் களமிறங்கவுள்ளதாகத் தெரிவிக்கப்ப ட்டுள்ளது.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகிய கட்சிகள் தனித்துப் போட்டியிடுமெனத் தகவல்கள் வெளியாகியுள்ளபோதிலும், இறுதி முடிவுகள் எதுவும் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

ஆளுந்தரப்பில் உள்ள தமிழ் மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்), பத்மநாபா ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஆகிய கட்சிகளும் இன்னும் ஆலோ சனை நடத்தி வருகின்றன. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தேர்தலில் போட்டியிடுவது பற்றித் தீர்மானிக்க முடியாமல் அதன் உயர்மட்ட கலந்துரையாடலை நிறுத் தியுள்ளது.

ஜனாதிபதியுடன் மீண்டும் சந்தித் துப் பேச்சுவார்த்தை நடத்தியதன் பின்பே இறுதி முடிவெடுக்க ப்படுமெனத் தெரிவிக்கப்பட்டுள் ளது.

பாராளுமன்றம் கலைப்பு

பதின்மூன்றாவது பாராளுமன்ற த்தின் ஆயுட்காலம் எதிர்வரும் ஏப்ரல் 22ம் திகதியுடன் நிறைவ டைவதால், நேற்று முன்தினம் (09) நள்ளிரவிலிருந்து பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அரசியலமைப்பின் 70 (1) சரத்தின் 11 ம் பிரிவின் கீழ் தமக்கு வழங்கப்பட்டுள்ள அதி காரத்தைப் பயன்படுத்தி பாராளு மன்றத்தை கலைத்துள்ளார்.

இது தொடர்பான விசேட வர்த்த மானி அறிவித்தல் வெளியிடப்ப ட்டுள்ளது.

இதற்கமைவாக எதிர்வரும் ஏப்ரல் எட்டாந்திகதி தேர்தல் நடைபெறு மென தேர்தல்கள் மேலதிக ஆணை யாளர் டபிள்யூ. பீ. சுமணசிறி பிதினகரனுக்பீகுத் தெரிவித்தார். வர்த்தமானி அறிவித்தலில் பிரகட னப்படுத்தப்பட்டுள்ளவாறு வேட் பாளர் நியமனப் பத்திரங்கள் எதிர்வரும் 19ம் திகதி முதல் 26ம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படும்.

கடந்த 2004ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 105 ஆசனங் களைப் பெற்று வெற்றியீட்டியது. ஐக்கிய தேசியக் கட்சி 82 ஆசனங் களையும், தமிழ்த் தேசியயகூட்ட மைப்பு 22 ஆசனங்களையும் பெற்றி ருந்தன. ஜாதிக ஹெல உறுமய 9 ஆசனங்களைப் பெற்ற அந்தத் தேர்தலில் 75% மக்கள் வாக்களித் திருந்தனர்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஜே.வி.பியுடன் இணைந்து 42 இலட்சத்து 23 ஆயிரத்து 970 வாக்கு களைப் பெற்று (45.60 சதவீத வாக் குகள்), ஐக்கிய தேசிய கட்சி 35 இலட்சத்து 04 ஆயிரத்து 200 வாக்குகளையும் (37.83% சதவீதம்) தமிழ்த் தேசிய கூட்டமைப்பு 6,33,654 வாக்குகளையும், ஜாதிக ஹெல உறுமய 5,54,076 வாக்குக ளையும் பெற்றிருந்தன.

புதிய பாராளுமன்றம்

அடுத்த பாராளுமன்றத்துக்கான தேர்தல் ஏப்ரல் எட்டாந்திகதி நடை பெறுவதுடன் ஏப்ரல் 22ம் திகதி முதலாவது அமர்வு நடைபெறும்.

புதிதாக அமையவிருப்பது 14 வது பாராளுமன்றம். என்றாலும் 1978ம் ஆண்டின் அரசியலமைப்பின்படி ஏழாவது பாராளுமன்றம் என்பது குறிப்பிடத்தக்கது.

பாராளுமன்றத்திற்குத் தேர்தல் வாக்கெடுப்பின் மூலம் 196 உறுப்பினர்களும் போனஸ் மூலம் 29 உறுப்பினர்களும் தெரிவுசெய்யப் படவுள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...


என் கணவரின் உயிருக்கு ஆபத்து: பொன்சேகா மனைவி கண்ணீர்




கொழும்பு,பிப்.9: ​ இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்பட்ட என்னுடைய கணவர் சரத் பொன்சேகா இப்போது எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை;​ அவருடைய உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று அஞ்சுகிறேன் என்று அவருடைய மனைவி அனோமா கண்ணீருடன் பேட்டி அளித்தார்.

​ ​ தலைநகர் கொழும்பில் சில எதிர்க்கட்சித் தலைவர்களுடன் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்து செவ்வாய்க்கிழமை இரவு விவாதித்துக் கொண்டிருந்தபோதே அவரை ராணுவ அதிகாரிகள் சிலர் சிறிய படையுடன் வந்து கைது செய்தனர்.​ அவர்கள் அந்த அறைக்குள் வரும்போதே கதவை உடைத்துக் கொண்டுதான் வந்திருக்கிறார்கள்.

​ என்னை ஏன் கைது செய்கிறீர்கள்,​​ என்னைக் கைது செய்ய வாரண்ட் இருக்கிறதா,​​ ராணுவத்திலிருந்து விலகி சாதாரண சிவிலியனாகிவிட்ட என்னைக் கைது செய்வதாக இருந்தால் போலீஸ் அதிகாரிதான் வரவேண்டும் என்றெல்லாம் மறுத்த பொன்சேகாவை அந்த அதிகாரிகள் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை.​ ​

​ எங்கள் சொல்லுக்குக் கட்டுப்பட்டு கைதாக உடன்பட்டால் அதிக சேதம் இல்லாமல் உங்களை கூட்டிச் செல்வோம்,​​ இல்லாவிட்டால் பலத்தைக் காட்ட வேண்டியிருக்கும் என்று ஒரு அதிகாரி குரலை உயர்த்தி எச்சரித்ததோடு அவரது கையில் விலங்கை மாட்டி தரதரவென்று இழுத்துச் சென்றார்.​ அப்போது உடன் இருந்த பிற அரசியல் தலைவர்களும் தலையிட்டு அதைத் தடுக்க முயன்றனர்.​ ஆனால் ராணுவ அதிகாரிகளோ தடுத்தால் கடும் விளைவுகள் ஏற்படும் என்று அவர்களைத் தங்களுடைய பார்வையாலேயே எச்சரித்துவிட்டு பொன்சேகாவையும் அவரது பத்திரிகைச் செயலரையும் கைது செய்து இழுத்துச் சென்றனர்.​ ​

​ ​ அப்போது ஒரு ராணுவ அதிகாரி சரத் பொன்சேகாவின் பிடறியில் அடித்துக் கொண்டே சென்றதாக பெயர் தெரிவிக்க விரும்பாத ஒருவர் பின்னர் நிருபர்களுக்குத் தொலைபேசியில் தகவல் கொடுத்தார்.

​ என் கணவரை ராஜபட்ச கைது செய்வார் என்று எதிர்பார்த்தேன்,​​ ஆனால் இப்படி நாயை இழுத்துச் செல்வதைப் போல இழுத்துச் செல்வார்கள் என்று கனவில்கூட நினைக்கவில்லை என்று கூறி விம்மி அழுதார் அனோமா.

​ ​ என் கணவரை அவர்கள் கைது செய்யவில்லை,​​ துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றனர் என்பதே உண்மை என்றும் அவர் கண்ணீருடன் தெரிவித்தார்.

​ பொன்சேகா இப்போது ரகசிய இடத்தில் சிறை வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்படுகிறார் என்று கூறப்படுகிறது.​ இனி அவருடைய ஆதரவாளர்களும் தேச பாதுகாப்புச் சட்டப்படி கைது செய்யப்படுவார்கள் என்றும்,​​ பொன்சேகாவைப் பற்றி புதிய குற்றச்சாட்டுகளைக் கூறினால் உங்களை விட்டுவிடுகிறோம் என்று ஆசை காட்டி அவருடைய ஆதரவாளர்களில் சிலரை அவருக்கு எதிராகத் திருப்ப முயற்சி செய்வார்கள் என்றும் அரசியல் வட்டாரங்கள் அஞ்சுகின்றன.​ ​

​ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு எதிரான போரில் கிடைத்த வெற்றிக்கு பொன்சேகாவும் பொறுப்பு என்று ஊடகங்களும் எதிர்க் கட்சிகளும் கூறியதால்,​​ தனக்குப் போட்டியாக பொன்சேகா வந்துவிடக்கூடாது என்பதில் ராஜபட்ச குறியாக இருந்தார் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

​ ​ ராஜபட்சவும் அவருடைய தம்பிமார்களும் இலங்கைப் போரைப் பயன்படுத்தி அடித்த கொள்ளையையும் ஊழலையும் பற்றிப் பிரசாரத்தில் பேசினார் என்பதற்காக அவர் மீது கடும் கோபம் கொண்டார் ராஜபட்ச.

​ அத்துடன் ராஜபட்ச அரசின் ஊதாரித்தன நிர்வாகத்தால் விலைவாசி உயர்ந்து மக்களின் வாழ்க்கைத் தரம் தாழ்ந்துவிட்டதையும் ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் சுமார் 90% பேர் அமைச்சர்களாக இருந்து சுகபோக வாழ்க்கை வாழ்வதையும் அவர் ஒப்பிட்டுப் பேசினார்.

​ எல்லாவற்றுக்கும் மேலாக,​​ ராணுவத்திடம் சரண் அடைந்த விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர்கள் குறித்து தனக்குத் தகவல் தெரிவிக்காமல்,​​ சர்வதேச உடன்பாடான ஜெனீவா கோட்பாட்டுக்கு முரணாக சுட்டுக் கொன்றுவிட்டார்கள் என்று அவர் கூறிய கடுமையான குற்றச்சாட்டு மனித உரிமைகள் அமைப்புகளால் பேசப்பட்டு இலங்கை அரசுக்குப் பெருத்த தருமசங்கடத்தை ஏற்படுத்தியது.​ அதிபரையும் அவருடைய தம்பியையும் போர்க்குற்றவாளியாகக் கருதி கைது செய்து விசாரிக்க வேண்டும் என்று கூட கோரிக்கைகள் எழுந்தன.​ ​

​ எனவே சரத் பொன்சேகாவை இனியும் விட்டுவைத்தால் நமக்கு ஆபத்து என்று கருதியே அவர் மீது தேசத்துரோக குற்றச்சாட்டு,​​ ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி,​​ ராணுவத்திலிருந்து ஓடியவர்களுக்கு சட்டவிரோதமாகப் புகலிடம் தந்தது ஆகிய குற்றச்சாட்டுகளைச் சுமத்தி இனி வெளியுலகையே பார்க்க முடியாதபடிக்கு தண்டித்துவிட இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

​ ​ பொன்சேகா மீதான வழக்கை சாதாரண நீதிமன்றங்களில் நடத்தினால் அவருக்கு மக்களிடையே ஆதரவு பெருகிவிடும் என்றும் தங்களுக்கு சங்கடம் தரும் பல உண்மைகள் வெளியாகிவிடும் என்றும் அஞ்சியே ராணுவ நீதிமன்றத்தில் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது என்று எதிர்க்கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.

​ ​ மனித உரிமைகளைக் காலில் போட்டு மிதிப்பதையே வழக்கமாகக் கொண்டுள்ள இலங்கை அரசின் கோர முகம் மீண்டும் வெளிப்பட்டிருக்கிறது என்று லண்டனைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் என்ற மனித உரிமைகள் அமைப்பு கண்டித்திருக்கிறது.
மேலும் இங்கே தொடர்க...







எது
நடந்ததோ அது நன்றாகவே நடந்தது








எது
நடக்கின்றதோ அதுவும் நன்றாகவே நடக்கின்றது







உலக
நீதி மன்றம்


7ஆண்டுக்குபின்

எது
நடக்க இருக்கின்றதோ அதுவும் நன்றாகவே நடக்கும்
மேலும் இங்கே தொடர்க...
பாராளுமன்றம் கலைக்கப்பட்டது



பாராளுமன்றம் நேற்று நள்ளிரவு முதல் கலைக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தை கலைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியிடப்பட்டது.

இந்த வர்த்தமானி அறிவித்தலின்படி எதிர்வரும் ஏப்ரல் 8ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறும். வேட்புமனு தாக்கல் இம்மாதம் 19ம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை இடம்பெறும்.

அடுத்த பாராளுமன்றம் எதிர்வரும் ஏப்ரல் 22ம் திகதி கூடுகிறது.

96 தமிழ் கைதிகள் விடுதலை

புலிகள் இயக்கத்துடன் தொடர்பு வைத்திருந்ததாக சந்தேகத்தின் பேரில் நீண்டகாலம் தடுத்து வைக்கப்பட்டிருந்த மேலும் 96 தமிழ் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதோடு 115 பேர் புனர்வாழ்வு அளிப்பதற்காக அனுப்பப்பட்டுள்ளதாக பிரதி நீதி அமைச்சர் வீ. புத்திரசிகாமணி தெரிவித்தார். அவசரகாலச் சட்டத்தின் கீழ் கைதாகி தடுத்து வைக்கப்பட்டிருந்த பல தமிழ் கைதிகள் சட்டமா அதிபரின் ஆலோசனையின் பிரகாரம் விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர். இதுவரை 431 தமிழ் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த பிரதி அமைச்சர் சுமார் 200 கைதிகளே எஞ்சியிருப்பதாகத் தெரிவித்தார்.



மனைவியும் சட்டத்தரணியும் சிரமமின்றி பார்வையிடலாம்
இராணுவ பேச்சாளர்



சரத் பொன்சேகாவை அவரது மனைவியும், சட்டத்தரணியும் எந்தவித சிரமமும் இன்றி பார்வையிடலாம். இதற்கான அனுமதியை பாதுகாப்பு அமைச்சு நேற்று வழங்கியுள்ளது என்று இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.

சரத் பொன்சேகா பாதுகாப்பாக இருப்பதாகவும் அவருக்கு தேவைப்படும் மருத்துவ உதவிகள் முழுமையாக வழங்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். சரத் பொன்சேகாவின் கைது மற்றும் எதிர்காலத்தில் முன்னெ டுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் விசேட செய்தியாளர் மாநாடு தேசிய பாதுகாப்புக் கான ஊடக மத்திய நிலையத்தில் நேற்றுப் பிற்பகல் நடைபெற்றது.

தேசிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளர், அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் இராணுவப் பேச்சாளர் மேலும் குறிப்பிடுகையில் :- பாதுகாப்பு படைகளின் முன்னாள் பிரதம அதிகாரி, முன்னாள் இராணுவத் தளபதி என்ற அடிப்படையில் சரத் பொன்சேகாவுக்கு கொடுக்கப்பட வேண்டிய சகல வசதிகளும், கெளரவமும் வழங்கப்பட்டுள்ளன. அவர் விரும்பிய ஒருவரை அவர் தனது சட்டத்தரணியாக தெரிவு செய்யவும் முடியும் என்றும் தெரிவித்தார்.



சரத் பொன்சேகா கைது விவகாரம்; சர்வதேச நாடுகள் தலையிட முடியாது



சரத் போன்சேகாவின் கைது விவகாரம் தொடர்பாக சர்வ தேச நாடுகள் தலையிட முடி யாதென வெளிவிவகார அமை ச்சர் ரோஹித்த போகொல் லாகம தெரிவித்தார். உள்நாட்டு சட்ட விதிமுறைகளுக்கு அமை யவே இக்கைது இடம்பெற்றி ருப்பதனால் சர்வதேச சக்திகள் இது குறித்து அழுத்தம் கொடு க்க முடியாதெனவும் அமை ச்சர் போகொல்லாகம சுட்டிக் காட்டினார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் ரஷ்யாவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக் கொண்டு நாடு திரு ம்பியுள்ள அமைச்சர் அமைச் சில் நடத்திய செய்தியாளர் மாநாட்டிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். எமது நாட்டைப் பொறுத்தவரை அனைவரும் சமமானவர்கள்.

ஒருவர் பிழை செய்தால் நாட்டின் சட்ட விதிமுறைகளுக்கமைய அவரை விசாரிப்பதற்கு முறையுண்டு. அந்தவகையில் சரத் பொன்சேகாவை கைது செய்திருப்ப தற்கான காரணத்தை இராணுவத்தினர் தெளிவாக கூறியுள்ளனர்.

தான் கைது செய்யப்பட்டிருப்பதற்கான காரணத்தை சரத் பொன்சேகாவே நன்கு புரிந்து வைத்துள்ளார். இதுவரை எந்தவொரு நாட்டிடமிருந்தும் பொன்சேகாவின் கைது குறித்து ஒரு தொலைபேசி அழைப்பு கூட வரவில்லை.

சரத் பொன்சேகா என்பதற்காக இல்லை; நாட்டில் எவரும் சட்ட விதி முறைகளை மீறி நடந்தாலும் அவருக்கெதி ராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவது வழமையானதாகும். அதன்படியே, இக்கைது இடம்பெற்றிருப்பதாக அமைச்சர் போகொல்லாகம சுட்டிக்காட்டினார்.





சரத் பொன்சேகா மீதான விசாரணைக்கு சட்டமா அதிபரின் ஆலோசனை பெறப்படும்



இராணுவ அதிகாரியொருவர் ஓய்வுபெற்ற ஆறு மாத காலத்துக்குள் நடவடிக்கை எடுக்க இராணுவ சட்டத்தில் இடம்
சரத் பொன்சேகாவை இராணுவ நீதிமன்றத்தில் விசாரிப்பதா அல்லது சாதாரண நீதிமன்றத்தில் விசாரிப்பதா என்பது குறித்து இராணுவ சட்டப் பிரிவு சட்ட மா அதிபரின் ஆலோசனையை பெற்ற பின்னரே தீர்மானம் எடுக்கும் என்று இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.

பொன்சேகாவிடமிருந்து பெறப்படும் வாக்குமூலத்தை இராணுவ சட்டப் பிரிவினர் பரிசீலித்து அதனை சட்ட மா அதிபரின் ஆலோசனைக்கு அனுப்பி அது பெறப்பட்ட பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இராணுவத்தின் சட்ட விதிமுறைகளுக்கு அமையவே சரத் பொன்சேகா இராணுவப் பொலிஸாரால் நேற்று முன்தினம் இரவு 9.30 மணியளவில் கைது செய்யப்பட்டார் என்று தேசிய பாதுகாப்பு விவகாரங்களு க்கான பேச்சாளர், அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

எந்த ஒரு இராணுவ அதிகாரியோ அல்லது வீரரோ சேவையின் போது இராணுவ சட்டங்களை மீறினால் அவர் ஓய்வு பெற்று ஆறு மாத காலத்திற்குள் அவர் மீது இராணுவம் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.

இராணுவ சட்டத்தின் 57 பிரிவு தெளிவாக கூறுவதாக தெரிவித்த அமைச்சர், அந்த சட்டவிதி விதிமுறைகளுக்கு அமைவாகவே பொன்சேகா இராணுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக சுட்டிக்காட்டினார்.

சரத் பொன்சேகா கைது செய்யப் பட்டமை மற்றும் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கை கள் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் விசேட செய்தியா ளர் மாநாடு நேற்று பிற்பகல் நடை பெற்றது.

கொழும்பிலுள்ள தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் தேசிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளர், அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் தலைமையில் நடைபெற்ற இந்த செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில் :-

பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியாக இருந்தபோது இராணுவ விதிகளை மீறிய குற்றச்சாட்டின் பேரிலேயே பொன்சேகா கைதுசெய்யப்பட்டார்.

பாதுகாப்பு சபையானது ஒரு நாட்டின் பாதுகாப்பு தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்வதில் உச்சமட்ட சபையாகும். முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி தலைமை வகிக்கும் இந்த பாதுகாப்பு சபையில் இராணுவ தளபதியாக இருந்தபோது பொன்சேகா பாதுகாப்பு சபையின் முன்னணி அங்கத்தவராக இருந்தவர். பாதுகாப்பு சபையின் உறுப்பினராக இருந்தபோது அரசுக்கு எதிரான அரசியல் கட்சிகளுடனும் அவர் தொடர்பு வைத்ததுடன் முக்கிய இரகசிய விடயங்களை பரிமாறிக்கொண்டிருந்திருக்கலாம்.

பாதுகாப்பு சபை உறுப்பினர் என்ற ரீதியில் இது அவர் செய்யக் கூடாத ஒன்றாகும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட் டினார். சரத் பொன்சேகாவுக்கு வெளிநாட்டு சக்திகளுடன் தொடர்புகள் உள்ளனவா என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள் விக்கு அமைச்சர் பதிலளிக்கையில் :-சரத் பொன்சேகா சேவையில் இருந்தபோது அரசியல் கட்சிகளுடன் தொடர்பு வைத்துள்ளமை தொடர்பில் முழுமையான விசாரணைகள் மேற்கொள் ளப்பட்டு வருகின்றது. இதுதவிர மேலும் பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்ப ட்டுள்ளன. அவை தொடர்பிலும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றது.

அந்த விசாரணைகள் முடிவுற்ற பின்னர் அது தொடர்பிலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

வெளிநாடுகளுடனான தொடர்புகள் தொடர்பில் விசாரணைகளுக்குப் பின்னரே எதுவும் கூறமுடியும் என்றும் குறிப்பிட்டார்.

சரத் பொன்சேகாவுடன் மேலும் பல இராணுவ மற்றும் சிவிலியன்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்னும் சிலர் கைது செய்யப்படவுள்ளனர். இரகசிய பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.


இலங்கையின் எதிர்கால நடவடிக்கைக்கு பூரண ஒத்துழைப்பினை வழங்குவோம்




ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் ரஷ்ய ஜனாதிபதி உறுதி

* ஜனாதிபதி நேற்று நாடு திரும்பினார்

* எண்ணெய் எரிவாயு அகழ்வுக்கு ரஷ்யா ஒத்துழைப்பு


இலங்கையின் எதிர்கால நடவடிக்கைகளு க்கு பூரண ஒத்துழைப்பினை வழங்குவதாக ரஷ்ய ஜனாதிபதி திமித்ரி மெத்வதேவ் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் உறுதியளித்துள்ளார்.

ஜனாதிபதியின் ரஷ்ய விஜயம் இலங்கை க்கு பல சாதகமான பிரதிபலன் களைப் பெற்றுத் தந்துள்ளதுடன் இரு நாடுகளுக்கி டையிலான நல்லுறவையும் பலப்படுத்தியுள் ளது. ரஷ்ய ஜனாதிபதி திமித்ரி மெத்வதேவின் விசேட அழைப்பினை ஏற்று மூன்றுநாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு ரஷ்யா சென்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று நாடு திரும்பினார்.

ஜனாதிபதித் தேர்தல் வெற்றியின் பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கொண்ட முதலாவது உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயம் இதுவாகும். பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டதை யடுத்து வேகமாக கட்டியெழுப்பப்பட்டு வரும் இலங்கையின் எதிர்கால அபிவிருத்திக்கு 300 மில்லியன் டொலர் நிதியை இவ்விஜயத்தின் போது ரஷ்யா கடனுதவியாக வழங்க இணங்கியுள்ளது.

அத்துடன் இலங்கையில் எண்ணெய் மற்றும் எரிவாயு அகழ்வாராய்ச்சிக்கு ரஷ்யா ஒத்துழைப்பு வழங்க முன்வந்துள்ள மையும் இவ்விஜயத்தின் பாரிய வெற்றியாகும். இவ்வகழ்வாராய்ச்சி நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கு வதற்கு உலகின் பிரசித்திபெற்ற ரஷ்ய எரிவாயு நிறுவனமான ரஷ்ய கேஸ் ப்ரோம் நிறுவனம் முன்வந்துள்ளது.

இரண்டு நாடுகளுக்குமிடையில் ஊடகத்துறை சார் நவீன தொழில்நுட்பங்க ளைப் பரிமாறிக்கொள்வது தொடர்பில் விசேட ஒப்பந்தமொன்றை மேற்கொள்ள முடிந்துள்ளமையும் ஜனாதிபதியின் இவ் விஜயத்தின் போது பெற்றுக்கொள்ளப்பட்ட பிரதிபலனாகும்.

இலங்கையின் நற்பெயரை சர்வதேச மெங்கும் தெரிவிக்கும் மற்றுமொரு நிகழ்வும் இவ்விஜயத்தின்போது இடம்பெற்றுள்ளது. ரஷ்ய நட்புறவுப் பல்கலைக்கழகம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கலாநிதிப் பட்டம் வழங்கி கெளரவித்தமையே அந்நிகழ்வாகும்.

உலக சமாதானத்திற்காக மேற்கொண்ட சேவைகள், பயங்கரவாதத்தை ஒழித்து கல்வி, கலாசாரம் உட்பட பல்வேறு துறைகளின் மேம்பாட்டிற்காக முன்னெடுத்த பாரிய சேவைகளுக்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ரஷ்ய பல்கலைக்கழகம் மேற்படி கெளரவ பட்டத்தை வழங்கியுள்ளது. இப்பட்டத்தைச் சுவீகரித்துக்கொண்ட உலகின் ஆறாவது அரச தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ என்பது குறிப்பிடத்தக்கது. இது இலங்கை வாழ் மக்கள் அனைவருக்கும் கிடைத்த கெளரவமாகும்.

அதேவேளை, உலகிற்கு சமாதானத்தைப் பெற்றுக்கொடுத்த ரஷ்ய அரச பரம்பரையை நினைவுகூரும் வகையில் அதன் ஞாபகார்த்தமாக தங்கத்தினாலான மாணிக்கக் கற்கள் பதிக்கப்பட்ட கிரீடமொன்றை ரஷ்ய நட்புறவுப் பல்கலைக்கழகம் வழங்கியமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

ரஷ்ய - இலங்கை நாடுகளுக்கிடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்தும் நிகழ்வாக இருநாட்டுத் தலைவர்களினதும் சந்திப்பைக் குறிப்பிட முடியும். இச்சந்திப்பின் போது இலங்கை ஜனாதிபதிக்குத் தம் மனப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்த ரஷ்ய ஜனாதிபதி; இலங்கையின் எதிர்கால நடவடிக்கைகளுக்குப் பூரண ஒத்துழைப்பினை வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ரஷ்யாவுடனான நல்லுறவை மேலும் பலப்படுத்துவதே தமது எதிர்பார்ப்பாகுமெனவும் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விஜயத்தின் போது ரஷ்யாவின் வரலாற்று முக்கியத்துவமிக்க பல இடங்களை ஜனாதிபதி தலைமையிலான தூதுக் குழுவினர் பார்வையிட்டதுடன் ரஷ்யாவின் தேசபிதா லெனினின் சமாதிக்குச் சென்று அஞ்சலி செலுத்திய மையும் குறிப்பிடத்தக்கதாகும்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையிலான இத் தூதுக்குழுவில் ஜனாதிபதியின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ, அமைச்சர்கள் ரோஹீத போகொல்லாகம, அநுர பிரியதர்ஷன யாப்பா, சுசில் பிரேம ஜயந்த, ஜீ. எல். பீரிஸ், மஹிந்தானந்த அளுத்கமகே, விமல் வீரவன்ச எம்.பி. ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க உட்பட முக்கியஸ்தர்கள் சிலரும் இடம்பெற் றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...