5 ஜூன், 2010

இலங்கைத் தமிழர்களை கொன்று தீர்த்த பழியை சுமந்து நிற்கிறார் கருணாநிதி: விஜய.டி. ராஜேந்தர்






ஒரு காலத்தில் தமிழ்மொழியை காத்த தலைவர் என்ற பெயரை சுமந்து நின்ற கருணாநிதி, இன்று இலங்கைத் தமிழர்களை கொன்று தீர்த்த பழியை சுமந்து நிற்கிறார் என்று கூறினார் லட்சிய திராவிட முன்னேற்ற கழகத் தலைவர் விஜய. டி. ராஜேந்தர்.

தமிழினக் கூட்டமைப்பு சார்பில் சென்னையில் நடைபெற உள்ள தமிழர் மீட்சி மாநாடு குறித்த அறிவிப்பு தொடர்பாக வெள்ளிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியது:

நடைபெற உள்ள தமிழ்ச் செம்மொழி மாநாடு, தமிழர் ஆட்சி மாநாடு ஆளும் கட்சியின் மாநாடு. ஆனால் ஜூன் 12-ம் தேதி நடைபெறும் மாநாடோ தமிழர்களுக்காக நடத்தப்படும் தமிழர் மீட்சி மாநாடாகும்.

தெலங்கான பிரச்னை என்றால் தெலங்கான பகுதிகளில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஒன்று சேர்ந்து போராட்டம் நடத்துகின்றன. காவிரி விவகாரம் என்றால் கன்னடர் என்ற உணர்வோடு கர்நாடகத்தில் அனைத்துக் கட்சிகளும் ஒன்றுபடுகின்றன. இது போன்ற அவர்களின் உணர்வுகளை நான் மதிக்கிறேன்.

இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்கள் செத்து மடிந்தபோதுகூட இங்குள்ள அரசியல் கட்சிகள் ஒன்று சேரவில்லை. இலங்கையில் தமிழர்கள் பகுதி சுடுகாடாகிவிட்ட நிலையில் தமிழகத்தில் செம்மொழி மாநாடா? தமிழ்ச் செம்மொழி மாநாட்டை நான் எதிர்க்கவில்லை, ஏனென்றால் அது என் மொழி மாநாடு.

கருணாநிதி 5-வது முறையாக தமிழகத்தை ஆட்சி செய்து வருகிறார். ஆனால் அவரால் தமிழகத்தில் தமிழை பயிற்று மொழியாக அறிவிக்க முடியவில்லை. தற்போது ஆட்சிப் பொறுப்பேற்று 4 ஆண்டுகளாகிவிட்டது. இப்போதும் இதற்காக அவர் எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்றார் ராஜேந்தர்.
மேலும் இங்கே தொடர்க...

தமிழ் மக்களின் நலன் அரசியல் தீர்விலேயே தங்கியுள்ளது


சர்வதேச இந்திய திரைப்பட விருது விழா இன்று டன் முடிவடைகின்றது. தென்னிந்தியத் திரையுல கத்தின் தீவிரமான எதிர்ப்புக்கு மத்தியிலும் இலங் கையில் இவ்விழா நடைபெறுகின்றது.

விழா நடைபெ றாமல் தடுப்பதற்குத் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட முயற்சி பலிக்கவில்லை. பல முன்னணி இந்தி நட்சத் திரங்களின் பங்கு பற்றுதலுடன் இன்று மூன்றாவது நாளாக இவ்விழா சிறப்பாக நடைபெறுகின்றது.

இலங்கையில் ‘அய்ஃபா’ விழாவை நடத்தக் கூடாது என் றும் இங்கு நடைபெற்றால் இந்திய நட்சத்திரங்கள் அதில் பங்குபற்றக் கூடாது என்றும் கோரிக்கை விடுத்த தமி ழ்த் திரையுலக முக்கியஸ்தர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்துவதற்காக வன்முறை சார்ந்த செயற்பாடுகளி லும் ஈடுபட்டார்கள்.

இலங்கைத் தமிழருடனான ஒரு மைப்பாட்டை வெளிப்படுத்தும் செயல் என்று தங்கள் நடவடிக்கைக்கு இவர்கள் அர்த்தம் கற்பிக்கின்ற போதி லும் அது இலங்கைத் தமிழருக்கு எவ்விதத்திலும் நன்மை பயக்காத செயல். உண்மையில் இது இலங் கைத் தமிழருக்குப் பாதகமான செயற்பாடு.

இலங்கைத் தமிழரின் நலன் விரும்பிகள் எனத் தங்களை அடையாளப் படுத்திக்கொண்டு ஆர்ப்பாட்டங்களிலும் வன்முறைச் செயற்பாடுகளிலும் ஈடுபடும் தமிழகத் திரையுலகப் பிரமுகர்கள் இலங்கையின் இனப் பிரச்சி னையையும் அதன் இன்றைய நிலையையும் சரியாக விளங்கிக்கொண்டவர்களாகத் தெரியவில்லை.

இலங்கையின் இனப் பிரச்சினைக்கு ஐக்கிய இலங்கைக் குள்ளேயே தீர்வு காணப்பட வேண்டும். தனிநாடு அமைப்பது எவ்விதத்திலும் சாத்தியமாகாது. அரசாங்க த்துடனான பேச்சுவார்த்தைக் கூடாகவே ஐக்கிய இலங் கையில் அரசியல் தீர்வைக் காண முடியும்.

அரசாங் கம் மாத்திரமன்றிச் சிங்கள மக்களும் இத்தீர்வு முயற்சி யில் சம்பந்தப்படுகின்றனர். தீர்வு ஆலோசனைகள் பாரா ளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேறுவதோடு சர்வசன வாக்கெடுப்பில் மக்களின் அங்கீகாரத்தையும் பெறவேண்டும்.

எனவே அரசாங்க த்துடன் எவ்வித தொடர்பும் இல்லை என்ற நிலைப் பாட்டில் நின்றுகொண்டு இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது.

புலிகளின் நிலைப்பாட்டை ஆதரிப்பவர்கள் தான் தமிழ் நாட்டில் பெரிதாகக் குரல் கொடுக்கின்றார்கள். அரசி யல் தீர்வுக்கான போராட்டத்தைப் புலிகள் திசை திருப் பித் தனிநாட்டுப் போராட்டமாக மாற்றியதன் விளை வாகத் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட அழிவுகளும் இழப் புகளும் சொல்லி முடியாதவை.

பல கோடி ரூபா பெறு மதியான சொத்துகள் அழிந்துவிட்டன. பல்லாயிரக்கண க்கானோர் உயிரிழந்துள்ளனர். ஏராளமானோர் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறி அகதிகளாக வாழும் நிலை ஏற்பட்டது. இவைதான் தனிநாட்டுப் போராட்டம் தமிழ் மக்களுக்குக் கொடுத்த பரிசு.

கடந்த காலத் தவறுகளை மறந்து, அரசியல் தீர்வுக்கான முயற்சியில் தமிழ்த் தலைவர்கள் இப்போது ஈடுபட்டி ருக்கின்றனர். இந்த நேரத்தில் தமிழகத்திலிருந்து அம் முயற்சிக்கு ஆதரவுக் கரம் கொடுப்பது தான் இல ங்கை வாழ் தமிழ் மக்களின் நலன் மீதுள்ள அக்கறை யின் வெளிப்பாடாக அமையும்.

தமிழ் மக்களுக்கு இழ ப்புகளையும் அழிவுகளையும் ஏற்படுத்திய தனிநாட்டுக் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவிக்கும் செயற்பாடுகள் வெளிநாடுகளிலுள்ள புலி ஆதரவாளர்களைத் திருப் திப் படுத்தலாமேயொழிய, இலங்கைத் தமிழருக்கு எவ் விதத்திலும் நன்மை பயக்கப்போவதில்லை.

நியாயமான அரசியல் தீர்வை அடைவதற்குச் சாதகமான செய ற்பாடுகளையே தமிழகத்திலிருந்து இலங்கைத் தமிழர் எதிர்பார்க்கின்றனர்.
மேலும் இங்கே தொடர்க...

இந்தியாவிலிருந்து 500 பஸ்களை கொள்வனவு செய்ய தீர்மானம்

இந்தியாவிலிருந்து 500 பஸ்களை இ.போ.ச.வுக்குக் கொள்வனவு செய்யவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தலைவர் எம்.டி. பந்துசேன கூறினார். அடுத்த வருடம் மேலும் 1000 பஸ்கள் கொள்வனவு செய்யப்பட்டு சேவையில் ஈடுபடுத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மக்களுக்கு சிறந்த சேவை வழங்கும் நோக்குடனும் தனியார் துறைக்குப் போட்டியாக இ.போ.சபையை பலப்படுத்துவதற்காகவும் கூடுதலான பஸ்களைத் தருவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த வருடம் தருவிக்கப்படவுள்ள பெரிய ரக ‘அசோக் லேலண்ட்’ பஸ்கள் பிரதான வீதிகளிலும், கிராமப்புற வீதிகளிலும் ஈடு படுத்தப்பட உள்ளதோடு, மீள் குடியேற்றம் நடத்தப்பட்ட பகு திகளிலும் ஈடுபடுத்தப்படும் எனவும் இ.போ.ச. தலைவர் கூறினார்.

இதுதவிர யாழ்ப்பாணத்தில் சேவையில் ஈடுபடுத்துவதற்காக சொகுசு பஸ்களை தருவிக்கவும் இ.போ.ச. திட்டமிட்டுள்ளது. வடக்கில் மீள்குடி யேற்றப்பட்ட பகுதிகளில் 300க்கும் அதிகமான பஸ்கள் ஏற்கெனவே சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
மேலும் இங்கே தொடர்க...

முல்லைத்தீவில் 170 குடும்பங்களை சேர்ந்த 529 பேர் 4 பி.செ. பிரிவுகளில் மீள்குடியேற்றம்


முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து இடம்பெயர்ந்த 170 குடும்பங்களைச் சேர்ந்த 529 பேர் நேற்று (4) கரைந்துறைப்பற்று பிரதேச செயலக பிரிவிலுள்ள 4 கிராம சேவகர் பிரிவுகளில் மீள்குடியேற்றப்பட்டனர். இவர்கள் வவுனியா மெனிக்பாம் நலன்புரி முகாமில் இருந்து விசேட பஸ்கள் மூலம் அழைத்துவரப்பட்டதாக முல்லைத்தீவு மாவட்ட செயலக மேலதிக திட்டப்பணிப்பாளர் எஸ். ஸ்ரீரங்கன் கூறினார்.

இவர்கள் முள்ளியவளை வடக்கு, தண்ணீர்ஊற்று மேற்கு, செல்வபுரம், மற்றும் புடரிகுடா ஆகிய பகுதிகளில் நேற்று மீள்குடியேற்றப்பட்டனர். இவர்களுக்கு தேவையான உலர் உணவுப் பொருட்கள் மற்றும் நிவாரணப் பொருட்கள் என்பன வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித் தார்.

இதேவேளை, முள்ளிய வளைவடக்கு மற்றும் ஒட்டுச்சுட்டான் பகுதிகளில் அடுத்த வாரம் ஆயிரம் பேர் மீள்குடியேற்றப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இவர்கள் வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் பகுதிகளில் உள்ள தமது உறவினர் வீடுகளில் தங்கியுள்ளனர்.

இதேவேளை, கடந்த இரண்டாம் திகதி 1218 பேர் 17 கிராம சேவகர் பிரிவில் மீள்குடியேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

மலையகப் பகுதி எல்லை மீள்நிர்ணயம்; திருத்தங்களுடன் மற்றொரு அறிக்கை சமர்ப்பிக்க இ. தொ. கா. தீர்மானம்

மலையகப் பகுதிகளில் பொது நிர்வாகக் கட்டமைப்பின் எல்லை மீள் நிர்ணயம் தொடர்பில் மக்களுடன் ஆராய்ந்து முழுமையான திருத்தங்களுடன் மற்றுமொரு அறிக்கையைச் சமர்ப்பிக்க இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.

எல்லை மீள் நிர்ணயம் தொடர்பாக ஆராய்வதற்கென நியமிக்கப்பட்டுள்ள குழு மக்களின் கருத்துக்களையும் புத்தி ஜீவிகளின் யோசனைகளையும் பெற்று வருகின்றது. அந்தப் பணிகள் நிறைவ டைந்ததும் முழுமையான அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்படுமென காங்கிரஸின் தலைவர் பிரதியமைச்சர் முத்து சிவலிங்கம் “தினகரனு”க்குத் தெரிவித்தார்.

முதற்கட்டமாக நுவரெலியா மாவட்டத்திற்கான யோசனை வரைவு எல்லை மீள்நிர்ணய ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி, கண்டி, மாத்தளை, பதுளை மாவட்டங்கள் தொடர்பான முழுமையான யோசனைகள் விரைவில் வழங்கப்படவுள்ளன. இதற்கான கால அவகாசத்தை ஆணைக்குழு வழங்கியுள்ளது.

இதேவேளை, அரசியலமைப்பு திருத்தத்தினூடாகத் தேர்தல் முறையில் மாற்றங்களைச் செய்வதற்கான ஏற்பாடுகள்

முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், மலையகத்தில் வாக் காளர் இடாப்புகளைத் திருத்தும் விடயத்தில் இ. தொ. கா. கூடுதல் கவனம் செலுத்தியுள்ளது. மக்களிடம் இது தொடர்பில் தெளிவை ஏற்படுத்தவும், வாக்காளர் இடாப்பில் ஒவ்வொரு மாவட் டத்திலும், பெயர்களை பதிய வேண்டும் என்பதிலும் தீவிர கவனத்தைச் செலுத்தி பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மாவட்ட ரீதியாகக் கூட்டங்களும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.

இதற்கமைய, இ. தொ. கா. வளர்ச்சியில் பங்காற்றும் மாநில மாவட்ட பிரதிநிதிகள், மகளிர் இணைப்பதிகாரிகள், அரசியல் அமைப்பாளர்கள், மாவட்டத் தலைவர்கள் ஆகியோருக்கு இக் கூட்டத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இன்று ஐந்தாம் திகதி கொட் டகலை காங்கிரஸ் தொழில்நுட்ப கேட்போர் கூடத்திலும் நாளை ஆறாந் திகதி பதுளை கலாசார மண்டபத்திலும், 8 ஆம் திகதி கொழும்பு செளமிய பவனிலும் கூட்டங்கள் நடைபெறுகின்றன.

இக் கூட்டங்களில் இ. தொ. கா. தலைவரும், பிரதி அமைச்சருமான முத்து சிவலிங்கம், நிர்வாக உப தலைவரும், சட்டத்தரணியுமான கா. மாரிமுத்து, நிர்வாக செயலாளர் எம். சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொள்வர்.
மேலும் இங்கே தொடர்க...

உலக சுற்றாடல் தினம் கூறும் 'அனைத்து உயிர்களினதும் எதிர்காலம்'

ஐக்கிய நாடுகள் சபையால் 1972 ஆம் ஆண்டு 'உலக சுற்றுச்சூழல் தினம்' அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆண்டுதோறும் ஜூன் 5ஆம் திகதியன்று உலக நாடுகளால் இந்தத் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

2010 ஆம் வருடம் இவ் ஆண்டுக்கான உலக சுற்றாடல் தினத்தின் தொனிப்பொருள் உலகில் பல உயிரினங்கள் , ஓர் உலகம் ஓர் எதிர்காலம் , என்பதாகும். அதாவது உலகில் உள்ள உயிரினங்கள் அனைத்திற்கும் ஒரு எதிர்காலம் என்பதாகும்.

நீர், காற்று ஆகியவற்றில் பரவும் மாசு, அழிந்து வரும் இயற்கை வளங்கள் போன்றவற்றின் காரணமாக, பூமியில் சுற்றுச்சூழல் எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பது சுட்டிக்காட்டப் படுகிறன்றமையே இதன் தார்மீக குறிக்கோளாகும்.

குறிப்பாக, இயற்கை வளங்களைப் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை உலக மக்களிடையே ஏற்படுத்தும் நோக்கில், உலக சுற்றுச்சூழல் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.

உலகில் சுற்றுச்சூழல் மாசுபாட்டால் சீதோஷ்ண நிலையில் மாற்றங்கள் ஏற்பட்டு, பூமியில் வெப்பம் அதிகரித்து வருவதால் பேரபாயம் நேரிடும் வாய்ப்பு உள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுக்கும் இந்தத் தருணத்தில், இயற்கையைப் பாதுகாப்பதற்கான கடப்பாடு அனைவர் மத்தியிலும் திணிக்கபட்டுள்ளது என்றே கூற வேண்டும்.

ஒரு மனிதன் தான் சிறப்பாக வாழ வேண்டுமாயின் முதலில் அவனைச் சுற்றியுள்ள சூழல் சிறப்பாக . இருக்க வேண்டும் இதற்காகவே சிந்தனையின் பிறப்பிடத்திலேயே மனிதனிடம் சுழல் பற்றிய நல்லெண்ணங்கள் வார்க்கப்படுகின்றன.

இன்று உலகாளாவிய ரீதியில் ஏற்படுத்தப்பட்டு வரும் இயற்கை அனர்த்தங்கள் ஒவ்வொன்றும் உலகில் ஏற்படும் சூழலியல் மாற்றங்களை எமக்கு தெளிவு படுத்துவதாக அமையும் என்பதில் ஐயமில்லை.

இதையொட்டி, பல்வேறு விழிப்பு உணர்வு முகாம்கள், பேரணிகள், மாணவர்களுக்கு கலைப் போட்டிகள், மரம் நடும் விழாக்கள் போன்ற பல்வேறு வகையான நிகழ்ச்சிகளை அனைத்து நாடுகளும் நடத்தி வருகின்றன. குறிப்பாக, இந்த விழிப்பு உணர்வு பணியில் கல்வி நிறுவனங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் ஈடுபட்டு வருகின்றன.

இவ்வருடம் மிகப்பெரும் சர்ச்சைகளில் மாசுபடும் சுற்றாடல் மெக்ஸிக்கோ கடல்பரப்பில் ஏற்பட்ட குழாய் உடைப்பினால் ஏற்பட்டு வரும் எண்ணெய்க் கசிவாகும்.

தவிர இவ்வருடம் ஆரம்பம் முதலே பல சுற்றாடல் சார் அழிவுகள் முதலில் இந்தோனேசியாவின் ஹெய்ட்டி நகரில் ஏற்பட்ட பாரிய பூமியதிர்வு , அமெரிக்காவில் உள்ளிட்ட பல உலக நாடுகளில் இடம்பெற்று வரும் தொடர்ச்சியான மழைவீழ்ச்சி , என்பனவே இம்முறை சுற்றாடல் தினத்தின் பிரதான பங்காளிகள் எனலாம்.

காலம் காலமாக இடம்பெற்று வரும் சுற்றாடல் தினத்தின் தொனிப்பொருளை அனுஷ்டிப்பதற்கு பிரதான பங்காளியாக தொலைக்காட்சி, வானொலி, பத்திரிகை, இணையத்தளம் போன்ற ஊடகங்களும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றமை காலம் உணர்த்தும் உண்மை எனலாம்.
மேலும் இங்கே தொடர்க...

அவுஸ்திரேலிய கடற்பரப்பில் இலங்கை அகதிகள் என சந்தேகிக்கும் இரு படகுகள் முற்றுகை

அவுஸ்திரேலிய கடற்பரப்பில் வைத்து மேலும் இரு அகதிகள் படகுகள் முற்றுகையிடப்பட்டுள்ளளதாக அவுதிஸ்திரேலிய உள்விவகார அமைச்சு செய்தி வெளியிட்டுள்ளது.

முற்றுகையிடப்பட்ட முதலாவது படகில் 54 அகதிகளும், இரண்டாவதாக முற்றுகையிடப்பட்ட படகில் 28 அகதிகளும் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்விரு படகுகளிலும் இலங்கை அல்லது ஆப்கானிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த அகதிகளே பயணித்திருக்கலாமென அவுஸ்திரேலியா அரசு சந்தேகம் வெளியிட்டுள்ளது.

முற்றுகையிடப்பட்டுள்ள இரு படகுகளிலும் பயணித்த அகதிகள் கிறிஸ்மஸ் தீவிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய உள்விவகார அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் முதல் இதுவரையிலான காலப்பகுதியில் சுமார் 750 அகதிகள் படகுகள் மூலம் அவுஸ்திரேலியாவிற்குள் ஊடுருவ முயற்சித்து கைது செய்யப்பட்டு, கிறிஸ்மஸ் தீவுகளிலுள்ள முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தஞ்சம் கோரும் அகதிகளின் விண்ணப்பங்களை ஏற்பதை கடந்த ஏப்ரல் மாதம் தொடக்கம் அவுஸ்திரேலியா தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

முகேஷ் அம்பானி இலங்கை வருகை

உலகில் உள்ள பணக்காரர்கள் பட்டியலில் 5ஆவது இடத்தில் தடம் பதித்திருக்கும் முக்கேஷ் அம்பானி இன்றைய தினம் இலங்கைக்கு வரவுள்ளதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு வருகைத் தரும் முக்கேஷ் அம்பானி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை இவரது இலங்கை விஜயமானது நாட்டின் பொருளாதாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது
மேலும் இங்கே தொடர்க...

பாலஸ்தீனத்திற்கு நிவாரணப் பொருட்களை ஏற்றி சென்ற துருக்கி கப்பல் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலை கண்டித்து கொழும்பில் ஆர்ப்பாட்டம்

பாலஸ்தீனத்திற்கு நிவாரணப் பொருட்களை ஏற்றி சென்ற துருக்கி கப்பல் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு லிப்படன் சுற்றுவட்டம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொழும்பு லிப்டன் சுற்றுவட்ட தெவட்ட கஹ பள்ளிவாசலில் ஜூம்மா தொழுகையின் பின்னர் ஒன்றினைந்த முஸ்லிம்கள் பாலஸ்தீனத்திற்கு நிவாரணப் பொருட்களை ஏற்றி சென்ற துருக்கி கப்பல் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலை கண்டித்து பல பதாதைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் மாகாணசபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மன் உட்பட பல முன்னாள் அரசியல் தலைவர்களும் மாகாணசபை உறுப்பினர்களும் பல அரசியல் கட்சிகளசை; சேர்ந்த அங்கத்தவர்களும் ஆதரவாளர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

இஸ்ரேல் மனித உரிமை மீறல் குறித்த ஐ.நா. விசாரணைக் குழுவின் தலைவராக பாலித கொஹன

பலஸ்தீன மக்களுக்கு எதிராக இஸ்ரேல் உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் விசாரணை ஆணைக்குழுவின் தலைமைப் பொறுப்பிற்கு பாலித கொஹன தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இஸ்ரேலின் நடவடிக்கைகளினால் பலஸ்தீன மக்கள் மற்றும் ஏனைய அரேபியர்களுக்கு எதிர்நோக்கி வரும் உரிமை மீறல்கள் தொடர்பில் பாலித கொஹணே தலைமையிலான ஆணைக்குழு விசாரணைகளை நடத்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

விசாரணைகளை மேற்கொள்ளும் நோக்கில் எகிப்து, சிரியா மற்றும் ஜோர்தான் ஆகிய நாடுகளுக்கு இந்தக் குழு விஜயங்களை மேற்கொள்ள உள்ளது.

மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஆராயும் விசாரணைக் குழு 1968ம் ஆண்டு முதல் பணிகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேற்குக் கரை, காஸா பள்ளத்தக்கு, கிழக்கு ஜெருசேலம் மற்றும் சிரிய மலைப்பிரதேசம் ஆகியவற்றில் இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்கள் குறித்து குழுவினர் விசாரணை நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.

இலங்கை, மலேசியா மற்றும் செனகல் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இந்த விசாரணை ஆணைக்குழுவில் அங்கம் விகிக்கின்றனர்
மேலும் இங்கே தொடர்க...

நல்லிணக்க ஆணைக்குழு போதுமானதல்ல! சர்வதேச விசாரணை தேவை!!

இலங்கையில் கடந்த வருடம் இடம்பெற்ற போரின் போது மேற்கொள்ளப்பட்ட போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து சுயாதீனமான சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என பிலிப் அல்ஸ்ரன் வலியுறுத்தியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் அவர் கையளித்துள்ள வருடாந்த அறிக்கையிலேயே இது குறித்து சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கையில் கடந்த வருடம் இடம்பெற்ற போரின் இறுதிக் காலப்பகுதியில் 30,000 பொதுமக்கள் கொல்லப்பட்டிருந்ததுடன், இப் போரின் போது மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பாரிய வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றிருப்பதாகவும் அவர் இவ்வறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந் நிலையில், இச் சம்பவங்கள் குறித்த விசாரணைகளை மேற்கொள்வதற்கு ஜனாதிபதி மகிந்தவினால் நியமிக்கப்பட்ட உண்மைகளைக் கண்டறிவதற்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் போதுமானதல்ல என அவர் தெரிவித்துள்ளார். இவ்வறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந் நிலையில், இலங்கையில் கடந்த வருடம் இடம்பெற்ற போரின் போது சர்வதேச நியமங்களுக்கு எதிரான வகையில் மேற்கொள்ளப்பட்ட போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமைகள் மீறல் தொடர்பில் பாரபட்சமற்ற முறையில் நீதியான சர்வதேச விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, உண்மைகள் கண்டறிப்பட வேண்டியதும், உரிய பரிந்துரைகளை முன்வைக்க வேண்டியதும் மிக அவசியமானதாகும்.

இத்தகைய சூழ்நிலைகளில் இலங்கை போன்ற நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சுயாதீனமான சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என பிலிப் அல்ஸ்ரன் தனது வருடாந்த அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...