24 ஜனவரி, 2011

குச்சவெளியில் 15 இடங்களில் தரையில் விநோத மாற்றங்கள்





திடீர் நீரூற்றுடன் சாம்பல் நிற களி வெளியேற்றம்;

கொழும்பிலிருந்து பூகற்பவியலாளர்கள் விரைவு !






திருகோணமலை, குச்சவெளிப் பிரதேசத்தில் நேற்று முன்தினம் திடீரென நிலத்தைப் பிளந்து கொண்டு சாம்பல் நிற மண்ணுடன் கூடிய நீர்க்கசிவுகள் வெளிப்பட்டதையடுத்து பிரதேசத்தில் அச்சமும், பதற்றமும் ஏற்பட்டுள்ளது.

குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள சலப்பை ஆற்றுக்கு அருகிலுள்ள சதுப்பு நிலப்பகுதியிலேயே இந்த நீர்க் கசிவுகள் உருவாகியுள்ளன. சுமார் 15 இடங்களில் நிலத்தைப் பிளந்து கொண்டு சாம்பல் நிற மண்ணுடன் நீர்க்கசிவுகள் ஏற்பட்டிருக் கின்றன.

இது குறித்து பிரதேச வாசிகள் உடனடியாக பொலிஸாருக்குத் தகவல் கொடுத்தனர். அதனைத் தொடர்ந்து சம்பவ பிரதேசத்திற்கு பொலிஸாரும், இராணுவத்தினரும் விரைந்து பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

அதேநேரம் திடீரென நிலத்தைப் பிளந்து கொண்டு சாம்பல் நிற களி மண்ணுடன் நீர்க்கசிவுகள் ஏற்பட்டிருப்ப தற்கான காரணத்தைக் கண்டறிவதற்கான ஆய்வுகள் விரிவான அடிப்படையில் உடனடியாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

திருமலை மாவட்ட மேலதிக செயலாளர், குச்சவெளி, தம்பலகாமம் பிரதேச செயலாளர்கள், அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் திருமலை மாவட்ட இணைபாளர், கிராம சேவகர்கள் உடனடியாக பிரதேசத்திற்கு சென்று ஆய்வு நடவடிக்கைகளை ஒருங்கி ணைப்பு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இராணுவத்தினரும், பொலிஸாரும் இத்திடீர் கசிவுகளுக்கான காரணங்கள் கண்டறியும் நோக்கிலான அவதானிப் புக்களிலும் ஈடுபட்டுள்ளனர்.

இவை இவ்வாறிருக்க அனர்த்த முகாமைத்துவ நிலையம், தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் புவிச் சரிதவியல் மற்றும் சுரங்க ஆய்வு பணியக பிராந்திய பொறியியலாளர் உள்ளிட்ட குழுவினர் நேற்று ஸ்தலத்திற்கு விரைந்து ஆராய்ச்சிகளை ஆரம்பித்துள்ளனர்.

என்றாலும் புவிச் சரிதவியல் மற்றும் சுரங்க ஆய்வு பணியகப் பிரிவின் பூகற்பவியலாளர் கலாநிதி ஸ்டெரின் பெர்னாண்டோ இன்று (24ம் திகதி) கொழும்பிலிருந்து அவசரமாக குறித்த பிரதேசத்திற்கு ஆய்வுகளை மேற்கொள்ள அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிகழ்வு குறித்து அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் திருமலை மாவட்ட இணைப்பாளர் ஏ.சி.ஏ. வாஹிர் கூறுகையில், குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள சலப்பை ஆற்றுக்கு அருகிலுள்ள சேற்று நிலத்தில் சுமார் 15 இடங்களில் 500 மீட்டர்கள் நீத்தில் திடீரென வெடிப்புகள் ஏற்பட்டு சாம்பல் நிற மண்ணுடன் நீர்க்கசிவுகள் ஏற்பட்டுள்ளன.

இந்த நீர்க்கசிவுகள் ஏற்பட்டிருக்கும் பிரதேசத்திற்கு மேற்காக 150 மீட்டர் தூரத்தில் சலப்பை ஆறு உள்ளது. அதே நேரம் இப்பிரதேசத்திற்கு இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் கடல் காணப்படுகின்றது. அத்தோடு இப்பிரதேசத்திற்கு ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் மேற்காக கருவாட்டு மலையும் இருக்கின்றது.

இத்திடீர் நீர்க்கசிவுகள் உருவானதற்கான காரணத்தைக் கண்டறியும் ஆய்வுகள் விரிவாக இடம்பெறுகின்றன என்றார்.

இது குறித்து புவிச் சரிதவியல் மற்றும் சுரங்க பணியக பிராந்திய பொறியியலாளர் வசந்தவுடன் தொடர்பு கொண்டு கேட்ட போது, தாம் குறித்த பிரதேசத்திற்கு நேரில் சென்று அவதானிப்புக்களை மேற்கொண்டதாகவும், இது தொடர்பாக பல மட்டங்களில் அவதானத்தை செலுத்தி இருப்பதாகவும் கூறினார்.

இருந்த போதிலும் இது குறித்து உடனடியாக எந்த முடிவுக்கும் வர முடியாதுள்ளது. என்றாலும் இது விடயமாக பூகற்பவியலாளர்கள், தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவன பிரதிநிதிகள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரதிநிதிகளுடன் கலந்துரையாடிய பின்பே உறுதியான முடிவுக்கு வரலாம்.

இருப்பினும் நிலக் கீழ் நீர்மட்டம் உயர்த்தல் மற்றும் சதுப்பு நிலத்தின் கீழ் இயற்கை வாயு உற்பத்தியாகி அழுத்தம் ஏற்படுத்தல் போன்றவற்றாலும் இவ்வாறான வித்தியாசங்கள் ஏற்படலாம் என்றும் அவர் கூறினார்.

அதேவேளை பேராதனை பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் கபில தஹநாயக்கா, குறித்த பிரதேசத்தில் நேரடி ஆய்வுகளை மேற்கொண்ட பின்பே இத்திடீர் கசிவுக்கான காரணத்தை சரியாகக் கண்டறியக் கூடியதாக இருக்கும் என்று குறிப்பிட்டார்.

அந்த நிலையில், மற்றொரு இயற்கை அனர்த்தத்திற்கான முன்னறிகுறியா இது என்ற கேள்வியுடன் பிரதேச மக்கள் மத்தியில் அச்சமும் பதற்றமும் உருவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இங்கே தொடர்க...

திசை மாறி சென்ற மீனவர்களை இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை


அம்பாந்தோட்டை யில் இருந்து ஆழ் கடலுக்கு மீன் பிடிக்க நவம்பர் 12ம் திகதியன்று சென்ற ஐந்து மீனவர்களை இந்தோனேசிய கடற்படையினர் காப்பாற்றியுள்ளனர். அவர்களை இலங்கைக்கு பாதுகாப்பாக அனுப்பிவைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இந்த மீனவர்கள் ஐவரும் நவம்பர் 23 வரை இலங்கையில் உள்ள அவர்களின் முகவர்களுடன் தொடர்புகளை வைத்திருந்தார்கள். அதன் பிறகு அவர்களுடனான தொடர்பு துண்டிக்கப்பட்ட தனால் மீனவர்களின் குடும்பத்தினர் கடற்றொழில் நீர்வளத்துறை அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரட்னவுடனும் அம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுடனும் தொடர்பு கொண்டு அவர்களை கண்டுபிடித்து கொடுக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர்.

இதையடுத்து இவ்விருவரும் இந்தியா, மலேசியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளின் அரசாங்கங்களுடன் தொடர்புகொண்டு இம் மீனவர்களை கண்டு பிடித்து காப்பாற்றுமாறு வேண்டுகோள் விடுத்தனர்.

அதையடுத்து இம் மூன்று நாடுகளின் கடற்படையினரும், விமான படையினரும் இலங்கை மீனவர்களை தேடும் முயற்சிகளை மேற்கொண்டனர்.

இறுதியில் இந்தோனேசிய கடற்படையினர் இம்மீனவர்களை ஆழ்கடலில் கண்டு பாதுகாப்பாக கரைக்கு கொண்டு வந்தனர். தேக ஆரோக்கியமாக இருக்கும் இவ் ஐந்து மீனவர்களும் விரைவில் விமானம் மூலம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட வுள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பொது இணக்கப்பாட்டுடன் போட்டியிட ஐ.ம.சுதந்திர முன்னணி கட்சிகள் முடிவு

உள்ளூராட்சித் தேர்தலில் பொது இணக்கப்பாட்டுடன் போட்டியிடுவதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளும் நேற்று தீர்மானித்ததாக பிரதமர் தி.மு. ஜயரட்ன தெரி வித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் கூட்டம் பிரதமர் தி.மு.க. ஜயரட்னவின் தலைமையில் அலரிமாளிகையில் நேற்று இடம்பெற்றது. தேர்தல் ஆணையாளர் கடந்த 20ம் திகதி முதல் 301 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக் கொள்வதாக கூறினார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இம்முறை இளம் வேட்பாளர்களுக்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்படவுள்ளன. இதனையடுத்து உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து அதிக எண்ணி க்கையானோர் முன் வந்துள்ளனர்.

இவ்வாறு தேர்தலில் போட்டி யிடும் விருப்பத்துடன் பத்தாயிரத்துக்கு மேற்பட்டோர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்துக்கு விண்ணப்பித்திருந்தனர். எனினும் சமூகத்தினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட புத்திக்கூர்மையுள்ள, ஒழுக்க விழுமியங்கள் தொடர்பான எந்தவொரு குற்றச்சாட்டும் இல்லாத தகுதிகளை உடையவர்களுக்கு மட்டுமே வேட்பாளர்களாக தெரிவு செய்யுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளார்.

தற்போது பாராளுமன்றத்தில் அல்லது உள்ளூராட்சி சபைகளில் பிரதிநிதித்துவம் செய்பவர்களின் நெருங்கிய உறவினர்களுக்கு உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிட அனு மதி வழங்குவதில்லை என்று வேட்பு மனு தொடர்பான தேசிய கமிட்டி தீர்மானித்துள்ளது. உள்ளூராட்சி தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தேசிய கமிட்டியொன்றை நியமித்துள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

இந்திய மீனவர் மீதான தாக்குதல் குற்றச்சாட்டுக்கு மறுப்பு இலங்கை கடற்படை பேச்சாளர் அத்துல செனரத்


இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படுவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை இலங்கைக் கடற்படைப் பேச்சாளர் கெப்டன் அத்துல செனரத் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

இலங்கை- இந்திய கடல் எல்லையில் மீன்பிடிக்கும் மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுவதாக தெரிவிக்கப்படுவதற்கு பதிலளிக்கும் வகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

“அவ்வாறான சம்பவங்கள் எவற்றுடனும் கடற்படையினர் தொடர்புபடவில்லையெனத் தினகரனுக்குத் தெரிவித்த கெப்டன் செனரத், இக்குற்றச்சாட்டுக்கள் ஆதார மற்றவை என்றும் கூறினார். பிரச்சினைகள் உருவாக்கப்பட வேண்டும் என்பதற்காக சில தீய சக்திகளால் காலத்துக்குக் காலம் இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுவதாகவும், இலங்கைக் கடற்படைக்கும் இந்தியக் கடற்படைக்கும் இடையில் பிரச்சினையைத் தோற்றுவி ப்பதற்கே இவ்வாறான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். இலங்கைக் கடற்படையினர் மீது கடந்த காலங்களில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணைகள் மேற்கொண்டிருந்த போதும் அவற்றில் எந்தவிதமான உண்மைகளும் இல்லையெ ன்றும் கடற்படைப் பேச்சாளர் கப்டன் அதுல செனரத் மேலும் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

தேர்தல் கூட்டணி தொடர்பில் விரைவில் தீர்மானம் மகேஸ்வரன் பிரசாத்

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் எந்தெந்தப் பகுதிகளில் அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிடுவது என்பது தொடர்பில் அடுத்துவரும் ஓரிரு தினங்களில் தீர்மானம் எடுக்கப்படவிருப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தவிசாளாரும். வர்த்தக மற்றும் கூட்டுறவுத்துறை பிரதி அமைச்ச ருமான படுர் சேகுதாவூத் தெரிவித்தார்.

இது தொடர்பாக அரசாங்கத் தரப்புடன் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், சில இடங்களில் தனித்தும், சில இடங்களில் அரசாங்கத்துடன் இணைந்தும் போட்டியிடுவதற்குக் கட்சி ஏற்கனவே தீர்மானித்திருப்ப தாகவும் கூறினார்.

அரசாங்கத்துடன் நடைபெறும் பேச்சுவார்த்தைகளின் பின்னர் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும். வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கான காலம் நெருங்கிவரும் நிலையில் தனித்துப் போட்டியிடவேண்டுமென்ற கோரிக்கைகள் கீழ்மட்டத்தில் விடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் போட்டியிடவிருக்கும் வேட்பாளர்களுக்கான பட்டியல்கள் அனைத்தும் தயாரிக்கப்பட்டிருப்பதாக எதிர்க்கட்சிகளான ஐக்கிய தேசியக்கட்சியும், ஜே. வி. பி.யும் தெரிவித்துள்ளன.
மேலும் இங்கே தொடர்க...




மட்டக்களப்பு மாவட்டம், வாகரையிலுள்ள மாங்கேணி கடற் கரையில் 14 அடி நீளமும் 3 அடி அகலமும் கொண்ட டொல்பின் ஒன்று கரையொதுங்கியுள்ளது. கடற்கரையை அண்மித்த பகுதியில் மிதந்த டொல்பின், மீனவர்களால் நேற்று முன்தினம் கரைக்கு உயிருடன் இழுத்து வரப்பட்டது. இந்த டொல்பின் 1400 கிலோ கிராம் எடை கொண்டது என மட்டக்களப்பு மீன்பிடித் திணைக்கள அதிகாரி எஸ். ரி. ஜோர்ஜ் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...