19 பிப்ரவரி, 2010

அதிபர் சகோதரர் பசிலும் இலங்கை தேர்தலில் போட்டிகொழும்பு : இலங்கை அதிபர் ராஜபக்ஷேவின் சகோதரரும், அவரின் நெருங்கிய ஆலோசகருமான, பசில் ராஜபக்ஷே, வரும் ஏப்., 8ம் தேதி நடைபெற உள்ள பார்லிமென்ட் தேர்தலில் போட்டியிட நேற்று மனு தாக்கல் செய்தார். இலங்கையின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள கம்பகா மாவட்டத்தில், நேற்று பசில் ராஜபக்ஷே, தன் மனுவை தாக்கல் செய்தார். இவர், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி சார்பில் போட்டியிடுகிறார்.
இலங்கையில் பொது தேர்தலுக்கான, மனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் வரும் 26ம் தேதி. இந்த பொதுத் தேர்தல் மூலம் 225 உறுப்பினர்கள் பார்லிமென்டிற்கு தேர்ந்தெடுக்கப்படுவர். இவர்களில், 196 பேர் மட்டுமே ஓட்டுப்பதிவு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்; எஞ்சிய 29 பேர், பிரதிநிதிகள் அமைப்பின் கீழ் உள்ள தேசிய பட்டியலில் இருந்து நியமிக்கப்படுவர்.
இலங்கையின் வடபகுதியில் மறுவாழ்வு பணிகளை மேற்கொள்வது குறித்து விவாதிக்க, சென்ற டிசம்பரில் இந்தியா வந்த மூன்று உறுப்பினர்கள் குழுவில், பசில் ராஜபக்ஷே இடம் பெற்றிருந்தார். அதிபரின் செயலர் லலித் வீரதுங்கா மற்றும் பாதுகாப்பு செயலரும், அதிபரின் மற்றொரு சகோதரருமான கோத்தபய ராஜபக்ஷே ஆகியோர் குழுவில் இடம் பெற்றிருந்த மற்ற இருவர். இக்குழு, போரினால் இடம் பெயர்ந்த தமிழர்களை மீண்டும் குடியமர்த்துவதாக, இந்தியாவிடம் உறுதியளித்தது குறிப்பிடத்தக்கது.குழந்தைப் புலிகள் விடுதலை : இலங்கை அரசு அறிவிப்புகொழும்பு : "விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்த, குழந்தை புலிகள் அனைவரும் மே மாதத்திற்குள் விடுவிக்கப்படுவர்' என, இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இலங்கை அரசு வட்டாரங்களை மேற்கோள் காட்டி செய்தி நிறுவனம் ஒன்று கூறியுள்ளதாவது: விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்த 18 வயதிற்கு குறைவான குழந்தைப் புலிகள் 510 பேர், கடந்த ஆண்டு மே மாதம் அரசிடம் சரண் அடைந்தனர். ராணுவத்துடனான சண்டையில் புலிகள் அமைப்பு தோற்கடிக்கப்பட்டதை அடுத்து, சரணடைந்த அவர்களை, கோர்ட் உத்தரவின் பேரில், ஒரு ஆண்டு காலத்திற்கு மறுவாழ்வு முகாமில் வைக்க உத்தரவிடப்பட்டது. மறுவாழ்வு திட்ட பயிற்சிகள் முடிவடைந்ததும் விடுவிக்கும்படி கோர்ட் உத்தரவிட்டது. சமீபத்தில், 150 குழந்தைப் புலிகள் அவர்களின் பெற்றோர் மற்றும் பாதுகாவலரிடம் ஒப்படைக்கப்பட்டனர். மேலும் 273 குழந்தைப் புலிகள், கொழும்பின் புறநகர்ப் பகுதியான ரத்மாலனாவில் உள்ள முகாமில் தங்களின் படிப்பை தொடர்ந்து வருகின்றனர். இவர்கள் உட்பட அனைத்து குழந்தைப் புலிகளும் மே மாதத்திற்குள் விடுவிக்கப்படுவர். சில பெற்றோர்கள், மறுவாழ்வு முகாம்களில் உள்ள தங்களின் குழந்தைகளை ஏற்க மறுக்கின்றனர். அப்படி ஏற்க மறுக்கும் குழந்தைகள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவர். அதன் பின், கோர்ட் உத்தரவுப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.‘ஜே. வி. பி. அலுவலகம் சோதனையிடப்படவில்லை’

பொலிஸ் பேச்சாளர்


ஜே. வி. பி. யின் தலைமை அலுவலகம் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டதாக வெளியான தகவலில் உண்மை கிடையாது எனப் பொலிஸ் ஊடகப் பேச் சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தி யட்சகர் பிரஷாந்த ஜெயகொடி தெரிவித்தார்.

ஜே.வி.பி.யின் தலைமையகம் அமைந்துள்ள பகுதியில் பொலிஸ் சோதனைத் தடையொன்றை ஏற்படுத்துமுகமாக பொலிஸார் அங்கு சென்றிருந்ததாகவும் ஆனால், கட்சி அலுவலகத்தைச் சோதனையிட அவர்கள் செல்ல வில்லையென்றும் பொலிஸ் பேச் சாளர் ‘தினகரனுக்கு’க் கூறினார்.

எனினும், பெலவத்தையில் உள்ள தமது தலைமை அலுவலகம் நேற்றுக் காலை (19) பொலிஸாரினால் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டதாக ஜே. வி. பி. யின் பேச்சாளர் விஜித ஹேரத் கூறியுள்ளார். நீதிமன்றத்தின் அனு மதி பெற்றே கட்சித் தலைமையக த்தைச் சோதனையிடுவதாக பொலிஸார் கூறியதாக விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார். ஆனால், இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பான தகவலென்று பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.
29 சுயேச்சைக் குழுக்கள் நேற்றுவரை கட்டுப்பணம்பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக நேற்று மாலை வரை 29 சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளன.

புத்தளம் மாவட்டத்தில் ஒரு சுயேச்சைக் குழுவும், அம்பாறையில் 4 சுயேச்சைக் குழுக்களும், கொழும்பில் இரண்டு சுயேச்சைக் குழுக்களும் வவுனியாவில் மூன்று சுயேச்சைக் குழுக்களும், குரு ணாகலில் 2 குழுக்களும், யாழ்ப்பாணத்தில் இரண்டு குழுக்களும், கம்பஹாவில் 5 குழுக்களும், கண்டியில், கேகாலையில், மாத்தளையில் தலா ஒரு சுயேச்சைக் குழு வீதமாக கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளன.

மட்டு. மாவட்டத்தில் நூறு முகம்மது ஜமால்தீன் என்பவரின் தலைமையில் ஒரு சுயேச்சைக் குழுவும் தம்பிலெவ்வை ஜெளபர் கான் தலைமையில் மற்றுமொரு சுயேச் சைக் குழுவும் கட்டுப்பணம் செலுத்தியுள் ளன. நேற்று நண்பகல் வரை மட்டக்களப்பு மாவட்டத்தில் 3 சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் தெரிவித்தார். களுத்துறை மாவட்டத்தில் போட்டியிடுவத ற்காக நேற்று வரை 4 சுயேச்சைக் குழு க்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன.இடம்பெயர்ந்த வாக்காளர்கள் உடன் விண்ணப்பிக்க வேண்டுகோள்


வடக்கிலும், கிழக்கிலும் இருந்து இடம்பெயர்ந்து வெளி மாவட்டங்களில் வாழும் வாக்காளர்கள் பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்கு உடனடியாகத் தேர்தல்கள் தலைமையகத்திற்கு விண்ணப்பிக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பங்களை ஏற்பதற்கான இறுதித் தினம் எதிர்வரும் 26 ஆந் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இடம்பெயர் ந்தவர்கள் விண்ணப்பிப்பதற்காக கடந்த 17ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தபோதிலும், மிகக் குறைவான வாக்காளர்களே விண்ணப்பித் துள்ளனர். இதனால், திகதி நீடிப்புச் செய்யப்பட்டதாக யாழ்ப்பாண மாவட்ட தேர்தல்கள் உதவி ஆணையாளர் பீ. குகநாதன் தினகரனுக்குத் தெரிவித்தார்.

தமது அலுவலகத்திற்குக் கிடைத்துள்ள; கிடைக்கும் விண்ணப்பங்களையும் ஆணையாளருக்கே அனுப்பிவைப்பதாகவும் அவர் கூறினார். இடம்பெயர்ந்த வாக்காளர்கள் தமது விண்ணப்பங்களை மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர், உதவித் தேர்தல் ஆணையாளர் அலுவலகம் மற்றும் தேர்தல்கள் தலைமையகம் ஆகிய ஏதாவதொரு அலுவலகத்திற்கு விண்ணப்பங்களை அனுப்பிவைக்க முடியும்.

கம்பஹா மாவட்டத்தில் பசில் தலைமை வேட்பாளர்

21 பேர் கொண்ட குழு வேட்பு மனுவில் கையெழுத்து

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கம்பஹா மாவட்டத்திற்கான வேட்பாளர் நியமனப்பத்திரம் நேற்று (19) கைச்சாத் திடப்பட்டது.

முதன்மை வேட்பாளரான முன்னாள் எம்.பியும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான பசில் ராஜபக்ஷ தலை மையிலான வேட்பாளர் குழு ஜனாதிபதி செயலகத்தில் வைத்து நேற்று சுபவேளையில் நியமனப் பத்திரத்தில் கைச்சாத்திட்டது.

சர்வமதத் தலைவர்களின் ஆசிர்வாதத்துடன் நடந்த இந்த நிகழ்வில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலாளர் கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்தவும் கலந்து கொண்டார்.

கம்பஹா மாவட்டத்தின் வேட்புமனுவின் 21 வேட்பாளர்கள் அடங்குகின்றனர். இதில் இரண்டாவது தலைமை வேட்பாளராக கடற்றொழில் நீரியல்வள அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா போட்டியிடுகிறார். மேலும் ஜாதிக ஹெலஉறுமயவின் அதுரலிய ரத்னதேரர், அமைச்சர்களான பண்டு பண்டாரநாயக்க, லசந்த அழகியவன்ன, சரத் குணரட்ன, கலாநிதி மேர்வின் சில்வா, பியசிறி விஜேநாயக்க ஆகியோரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சரண குணவர்தன, துலிப் விஜேசேகர, அஞ்சான் உம்மா, உபாலி குணரட்ன, நீல் ரூபசிங்க ஆகியோரும் உள்ளடங்கு கின்றனர். தவிரவும் மேல் மாகாண சபை உறுப்பினர்களான கோகிலா ஹர்ஷனி குணவர்தன, சட்டத்தரணி சிசிர ஜயகொடி, சந்தன ஜயகொடி ஆகியோரும் முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளேயின் மனைவி வைத்திய நிபுணர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே, மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் சகோதரர் ருவன் ரணதுங்க மற்றும் வசந்த சேனநாயக்க, காமினி விஜேசிங்க, துஷ்யந்த வி. மஹபதுகே ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.


அரசியல் கட்சியொன்று, இரு சுயேச்சைகள் நேற்று வேட்புமனுத் தாக்கல்பொதுத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்வதற்காக தேர்தல் திணைக் களத்தினால் அறிவிக்கப்பட்ட முதலாவது தினமான நேற்று இரண்டு சுயேச்சைக் குழுக்களும், ஒரு அரசியல் கட்சியும் வேட்பு மனுவை தாக்கல் செய்தன.

இதன்படி மட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேச்சைக் குழுவொன்று நேற்றுக் காலை வேட்புமனுவை தாக்கல் செய்தது. கச்சி மொஹமது மொஹமது ஜுனைதீன் தலைமையிலான குழுவினர் வேட்புமனுவை தாக்கல் செய்தனர். நுவரெலியா மாவட்ட த்தில் மற்றுமொரு சுயேச்சைக் குழு வேட்புமனுவை தாக்கல் செய்தது என்றும் தேர்தல் திணைக்களம் தெரிவித்தது.

இதேவேளை பத்தரமுல்ல சீலரத்ன தேரர் தலைமையிலான ‘ஜனசெத பெரமுன’ கட்சி நேற்றுக்காலை நான்கு மாவட்டங்களில் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தது.

புத்தளம், கம்பஹா, குருணாகல், கொழும்பு மாவட்டங்களில் நேற்றுக் காலை சுபவேளை 9.30 மணியளவில் வேட்பு மனுவை ‘ஜனசெத பெரமுன’ (நிஹய்ஹ ஷிலீற்ட்ஹ ஜிலீழ்ஹசீன்ய்ஹ) தாக்கல் செய்தது.

வேட்புமனு தாக்கல் நேற்று 19ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நேற்றுக்காலை 9 மணிமுதல் 4 மணிவரை வேட்புமனுக்களை ஏற்கக் கச்சேரிகள் தயார் நிலையில் இருந்தன. ஆயினும் நேற்று வேட்புமனுக் களை தாக்கல் செய்வதில் கட்சிகள் ஆர்வம் காட்டவில்லை.

பொலன்னறுவை, திருகோணமலை, மொனராகலை, அம்பாந்தோட்டை, காலி மாவட்டங்களில் வேட்புமனு ஏற்பதற்காக தெரிவத்தாட்சி அலுவலர்கள் ஆயத்தமாக இருந்தபோதும் எவரும் கட்டுப்பணம் செலுத்தவோ, வேட்புமனு தாக்கல் செய்யவோ வரவில்லை. இறுதி நேரத்திலேயே பெரும்பாலான அரசியல் கட்சிகள் வேட்புமனுவை தாக்கல் செய்வதில் ஆர்வம் காட்டும் என்றும் தெரிவத்தாட்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.

பெரும்பாலும் 25ம், 26ம் திகதிகளில் முக்கிய கட்சிகள் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யுமென எதிர்பார்க்கப்படுகிறது.

ஐ. ம. சு. மு. 25ம், 26ம் திகதிகளில் வேட்புமனுத் தாக்கல் செய்யவுள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி (ரீ. எம். வி. பி), மலையக மக்கள் முன்னணி, ஐ. தே. கட்சி உட்பட முக்கிய கட்சிகள் 24, 25, 26ம் திகதிகளில் வேட்பு மனுக்க ளைத் தாக்கல் செய்யுமென கட்சி வட் டாரங்கள் கூறின.

ஆயினும், கட்சிகள் இன்னும் பேரம் பேசும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

தனித்துப் போட்டியிடுவதா அல்லது கூட்டாகப் போட்டியிடுவதா என்பதில் முடி வெடுக்க முடியாத நிலையில் இருக்கின்றன.

அதாஉல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் நேற்றும் ஐ. ம. சு. மு.வுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆயினும் இறுதி முடிவுகள் எட்டப்படவில்லை. ஈ. பி. டி. பியும் அரசாங்கத்தோடு பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தெரிகிறது. ஆனால் முடி வுகள் எதுவும் தெரியவில்லை.

இன்னும், சில கட்சிகள் எந்தச் சின்னத்தில் போட்டியிடுவதென தெரியாத நிலையில் திண்டாடுகின்றன. இந்த நிலையில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமைக்கு பின்னரே வேட்பு மனுத் தாக்கல் சூடு பிடிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. பாராளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேச்சைக் குழுவின் தலைவர் கச்சி முகம்மது முகம்மது ஜுனைதீன் என்பவரின் தலைமையில் இச் சுயேச்சைக் குழு வேட்பு மனுப் பத்திரத்தை தாக்கல் செய்தது.

இச் சுயேச்சைக் குழுவில் கச்சி முகம்மது முகம்மது ஜுனைதீன், அபூபக்கர் அமீர் ஹம்சா ஜெளபர்கான் சமீன், மீராசாகிபு இஸ்ஸதீன், முஹமத் செய்யத் அலவி சபீர் யூசுப் லெவ்வை பள்ளித்தம்பி, முகம்மட் இப்றாகீம் முகம்மட் இர்பான் முகைதீன் பாவா முபாறக் ஆகிய வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.


நெடுந்தீவு - குறிகட்டுவான்
குமுதினியில் பயணம் செய்ய 120 பேருக்கு மட்டுமே அனுமதி


நெடுந்தீவு, குறிகட்டுவான் பயணிகள் படகு குமுதினியில் ஒரு தடவை பயணி க்கும் பயணிகளின் தொகை 120 ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் வியாபாரிகளோ பயணிகளோ தம்முடன் பெரிய அளவில் பொருள்களடங் கிய பொதிகளை படகில் ஏற்றிச்செல்ல முடியாது எனவும் இந்த நடைமுறைகள் நேற்று வெள்ளிக்கிழமை முதல் அமுலுக்கு வந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இங்கே தொடர்க...
ஒரே நேரத்தில் 6 பெண்களை மணந்தவருக்கு 120 கசையடி
சவுதிஅரேபியாவில் அல் மசார்கா என்ற கிராமத்தை சேர்ந்த ஒருவர் அரசாங்கத்தில் அதிகாரியாக இருக்கிறார். அவர் ஒரே நேரத்தில் 6 பெண்களை திருமணம் செய்து கொண்டார். இது அந்த நாட்டு சட்டப்படி குற்றம் ஆகும். இதனால் அவர் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. ஒரே நேரத்தில் 4-க்கும் மேற்பட்ட பெண்களை திருமணம் செய்து கொள்வது இஸ்லாமிய சட்டப்படி குற்றம் என்பது எனக்கு தெரியாது என்று அவர் கோர்ட்டில் கூறினார்.

இந்த குற்றத்துக்கு இஸ்லாமிய சட்டப்படி கல் எறிந்து கொல்லலாம். ஆனால் நீதிபதி அதிகபட்ச தண்டனை கொடுக்காமல் அவருக்கு ஒரு மனைவிக்கு 20 கசையடிகள் என்று 6 மனைவிகளுக்கும் 120 கசையடி கொடுக்கும்படி தீர்ப்பு கூறினார். அதோடு அவர் திருக்குரான் புத்தகத்தில் இருந்து 2 அத்தியாயங்களை மனனம் செய்யவேண்டும் என்றும் கோர்ட்டு உத்தரவிட்டது.

மேலும் 5 ஆண்டுகளுக்கு வெளிநாடுகளுக்கு செல்லக்கூடாது என்றும் தடை விதித்தது.அமெரிக்காவில் ஒபாமாவின் செல்வாக்கு சரிந்தது
மீண்டும் அதிபராக ஆதரவு இல்லை
அமெரிக்காவின் ஜனாதிபதியாக தேர்ந்து எடுக்கப்பட்டபோது ஒபாமாவின் செல்வாக்கு உச்சத்தில் இருந்தது. இப்போது அது சரிந்து விட்டது. 2012-ம் ஆண்டு நடக்கும் ஜனாதிபதி தேர்தலில் அவர் வெற்றி பெறவும் அவருக்கு மக்களிடம் ஆதரவு இல்லை.

சரித்திர சாதனை

அமெரிக்க சரித்திரத்தில் முதல் முறையாக ஒரு கறுப்பர் ஜனாதிபதியாக முடிந்தது இப்போது தான். இந்த சாதனையை ஒபாமா சாதித்தார். மெஜாரிட்டியான வெள்ளையர்கள் இருக்கும் நாட்டில் ஒரு கறுப்பர், அதுவும் ஆப்பிரிக்க தந்தைக்கு பிறந்த ஒரு கறுப்பர் வெற்றி பெற முடிந்தது என்றால், அதற்கு மக்கள் மத்தியில் அவருக்கு இருந்த செல்வாக்கு தான்.

சுட்டுக்கொல்லப்பட்ட ஜனாதிபதி கென்னடியுடன் அவரை ஒப்பிட்டு பேசினார்கள். ஆனால் அவருடைய செயல்பாடுகள் நடவடிக்கைகள் எதுவும் மக்கள் நம்பிக்கைக்கு ஏற்ப இருக்கவில்லை. இதனால் அவருடைய செல்வாக்கு கொஞ்சம் கொஞ்சமாக சரிந்து வருகிறது.

அதிருப்தி

அவர் வெற்றி பெற்ற நேரத்தில் அமெரிக்க பொருளாதாரம் சரிந்து கிடந்தது. இளைஞர்களுக்கு வேலைகள் கிடைக்கவில்லை. ஒபாமா இவற்றை எல்லாம் சரிசெய்து விடுவார் என்று மக்கள் எதிர்பார்த்தனர். பொருளாதாரம் மீட்சி அடைந்தாலும் அதன் பலன்கள் எதிர்பார்த்தபடி இல்லை. அமெரிக்க இளைஞர்கள் இன்னும் வேலை இல்லாமல் திண்டாடுகிறார்கள். ஒபாமா ஜனாதிபதியாகி ஒரு ஆண்டு கடந்து விட்ட நிலையிலும் போதிய முன்னேற்றம் இல்லாததால், மக்கள் அதிருப்தி அடைந்து உள்ளனர்.

இது தொடர்பாக ஒரு டி.வி.சேனல் கருத்துக்கணிப்பு நடத்தியது. 1,023 பேரிடம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.

ஆதரவு இல்லை

2012-ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் ஒபாமாவை ஆதரிப்பீர்களா என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்தவர்கள் 52 சதவீதம் பேர் ஒபாமா ஜனாதிபதியாக ஆதரவு கொடுக்க மாட்டோம் என்று தெரிவித்தனர். 44 சதவீதம் பேர் மட்டுமே அவருக்கு ஆதரவு அளிப்போம் என்று தெரிவித்தனர்.

ஒபாமாவின் ஒட்டுமொத்தப்பணிகள் நன்றாக இருப்பதாக 47.8 சதவீதத்தினரும், சரி இல்லை என்று 45.9 சதவீதத்தினரும் தெரிவித்தனர்.


அமெரிக்காவில்
7 மாடி கட்டிடம் மீது விமானம் மோதியது
தீவிரவாதிகள் தாக்குதலா?
அமெரிக்காவில் 7 மாடி கட்டிடம் மீது நேற்று திடீர் என்று சிறிய விமானம் மோதியது. இந்த செயல் தற்கொலை படை தீவிரவாதிகளின் தாக்குதலாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

7 மாடி கட்டிடம் மீது மோதியது

அமெரிக்காவில் டெக்சாஸ் மாநிலத்தின் தலைநகரான ஆஸ்டின் நகரில் உள்நாட்டு பாதுகாப்பை கவனிக்கும் போலீஸ் அலுவலக வளாகத்தை (எப்.பி.ஐ) அடுத்து 7 மாடி கட்டிடத்தில் வரி வசூல் அலுவலகம் உள்ளது. இந்திய நேரப்படி நேற்று இரவு 10 மணியளவில் (அமெரிக்க நேரம் காலை 9.40) அந்த கட்டிடத்தின் மீது `ஒரு என்ஜின்' கொண்ட சிறிய விமானம் திடீர் என்று பறந்து வந்து மோதியது. அப்போது அந்த விமானம் வெடித்து சிதறியது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

விமானம் வந்து மோதியதால், அந்த கட்டிடம் தீப்பிடித்து எரிந்தது. உடனடியாக தீ அணைக்கும் படையினரும், பாதுகாப்பு படையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அந்த கட்டிடத்தில் இருந்த 199 பேர்களை, பாதுகாப்பு படையினர் வெளியேற்றினார்கள். தீ அணைக்கும் படையினர், தீயை அணைத்தனர்.

தற்கொலை படை தாக்குதல்?

இந்த சம்பவத்தில் அந்த கட்டிடத்தில் இருந்த சிலர் காயம் அடைந்தனர். அவர்களை போலீசார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது, தீவிரவாதிகளின் தற்கொலை படையினரின் தாக்குதலாக இருக்குமா? என்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்த சம்பவத்தை நேரில் பார்த்த ஜோன்ஸ் என்ற பெண்,`` விமானத்தை ஓட்டி வந்தவர் மிக தெளிவாக காணப்பட்டார். விமானமும் சீரான வேகத்தில் வந்து மோதியது. நான் காரில் வந்த போது இந்த காட்சியை நேரில் பார்த்தேன்`` என்று கூறினார்.

ஏற்கனவே

அந்த சிறிய விமானம் திருடப்பட்ட ஒன்று என்பது விசாரணையில் வெளிப்பட்டு இருக்கிறது. விமானத்தில் இருந்தவர்கள் எத்தனை பேர்? அவர்கள் கதி என்ன? என்பது அறிவிக்கப்பட வில்லை. இதில் எந்த வித தீவிரவாத தொடர்பும் இருக்க வாய்ப்பு இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் 1-ந்தேதி அல்கொய்தா தீவிரவாதிகள் நிïயார்க் நகரில் இருந்த மிகப்பெரிய வணிக வளாக 110 மாடி இரட்டை கோபுர கட்டிடத்தின் மீது விமானத்தில் வந்து மோதியதும், இதனால் கட்டிடம் முழுமையாக இடிந்து விழுந்து 3 ஆயிரம் பேர் வரை இறந்ததும் குறிப்பிடத்தக்கது. அதே நாளில் வாஷிங்டனில் அமெரிக்க ராணுவ தலைமையக கட்டிடத்தின் மீதும் தீவிரவாதிகள் விமானத்தை மோதி பலத்த உயிர் சேதத்தை ஏற்படுத்தினார்கள்.சீனாவின் எச்சரிக்கையையும் மீறி
தலாய் லாமாவை ஒபாமா சந்தித்தார்திபெத்திய ஆன்மிக தலைவரான தலாய் லாமா(வயது 74) அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். அவர், நேற்று வெள்ளை மாளிகைக்குச் சென்று அமெரிக்க அதிபர் ஒபாமாவை திட்டமிட்டபடி சந்தித்து பேசினார். அப்போது, திபெத்திய பிரச்சினைக்கு தீர்வு காண உதவும்படி ஒபாமாவை அவர் கேட்டுக் கொண்டார்.

வழக்கமாக ஒபாமா உலக தலைவர்களை தனது ஓவல் அலுவலகத்தில்தான் சந்திப்பார். ஆனால், தலாய் லாமாவை நேற்று அவர் தனது திட்டமிடல் அறையில் சந்தித்து பேசினார். தலைவர்கள் இருவரது சந்திப்பும் தனிப்பட்ட முறையிலானது என்று வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்தனர்.

சீனாவின் கடும் எச்சரிக்கையையும் மீறி அதிபர் ஒபாமா, வெள்ளை மாளிகைக்கு தலாய் லாமாவை வரவழைத்து பேச்சு வார்த்தை நடத்தியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...
பாகிஸ்தானில் பனிச்சரிவு : ஒரு கிராமமே புதைந்து இதுவரை 60 பேர் பலி!


குண்டுகள் தான் தினம் வெடித்து மக்களை கொன்று குவித்து வருகின்றதென்றால், இப்போது பனிச்சரிவும் அவர்களை விட்டு வைக்கவில்லை போலும்.

பாகிஸ்தானின் கோஹிஸ்தான் மாவட்டத்தில் உள்ள காண்டியா பள்ளத்தாக்கு பனி பிரதேசம் நிறைந்த பகுதி. அங்கு பனி மலைகளுக்கு இடையே அமைந்துள்ளது பஹாரோ கிராமம்.

அங்கு நேற்று திடீரென பனிப்பாறைகளில் சரிவு ஏற்பட்டது. இதனால் அந்தக் கிராமமே பூமிக்குள் புதைந்தது. அங்கிருந்த கட்டிடங்கள் மற்றும் வீடுகள் மண்ணுக்குள் புதைந்து போயின.

சாலைகளும் சேதம் அடைந்தன. தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இச்சம்பவத்தில் 60 பேர் வரை உயிரிழந்துள்ளனர். இறப்பு எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.

பனிப்பாறை மற்றும் மண் சரிவுக்குள் பலர் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடக்கிறது. அங்கு கடுமையான பனிப்பொழிவு நிலவுவதால் மீட்புப் பணிகள் தாமதமாகவே நடக்கின்றன.

பெஷாவரில் இருந்து உணவு பொருட்களுடன் சென்ற ஹெலிகொப்டரால் அங்கு தரை இறங்க முடியவில்லை. எனவே நிவாரணப் பணிகளும் மந்த கதியிலேயே நடந்து வருகின்றன
மேலும் இங்கே தொடர்க...
தேர்தல் களத்தில் முத்தையா முரளிதரன்...?இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழல்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் கண்டி மாவட்டத்தில் போட்டியிடவுள்ளதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆளும் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் உத்தியோகபூர்வமற்ற முறையில் வீரகேசரி இணையத்தளத்துக்கு இத்தகவலை வழங்கினார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் சனத் ஜயசூரிய மாத்தறை மாவட்டத்திலும் நட்சத்திர ஓட்ட வீராங்கணை சுசந்திகா ஜயசிங்க கேகாலை மாவட்டத்திலும் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...
இன்றுமுதல் ஏப்ரல் 15 வரை அரசியல் பேரணிகள் நடத்தத் தடை :பொலிஸார்
பொதுத்தோ்தலுக்கான வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யும் இன்றைய தினம் முதல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 15ஆம் திகதி வரையில் அரசியல் ரீதியான ஆர்ப்பாட்டங்களோ அல்லது பேரணிகளையோ நடத்தக் கூடாது எனப் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்வது தொடர்பிலும் சில விதிமுறைகளை வேட்பாளர்கள் பின்பற்ற வேண்டுமென பிரதிக் பொலிஸ் மா அதிபர் காமினி நவரட்ன தெரிவித்துள்ளார்.

வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யும் போது குறித்த வேட்பாளரும், அவரது உதவியாளரும் மட்டுமே பிரசன்னமாக முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேவையற்ற முரண்பாடுகள் மற்றும் மோதல்களைத் தவிர்க்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலைப் போன்றே நாடாளுமன்றத் தேர்தலையும் அமைதியான முறையில் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

அமைதிக்குப் பங்கம் ஏற்படுத்தும் நபர்கள் குறித்து புலனாய்வுப் பிரிவினரும் தகவல்களைத் திரட்ட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது
மேலும் இங்கே தொடர்க...
ஜே.வி.பி காரியாலயம் பொலிஸாரால் சுற்றிவளைப்பு?

அமைந்துள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தலைமைக் காரியாலயம் சோதனைக்குட்படுத்தப்பட்டது. இன்று முற்பகல் பொலிஸார் காரியாலயத்தைச் சுற்றி வளைத்தனர்.

எனினும் நீதிமன்ற அனுமதியின்றி சோதனை செய்ய அனுமதிக்க முடியாது என மக்கள் விடுதலை முன்னணியினர் தெரிவித்துள்ளனர். அதன் பின்னர் நீதிமன்ற அனுமதியைப் பெற பொலிஸார் திரும்பிச் சென்றுள்ளனர்.

எனினும் அங்கு பெருந்தொகையான பொலிஸார் இருப்பதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன


புத்தளத்தில் இரு சுயேட்சைக் கட்சிகள் இன்று வேட்பு மனுத் தாக்கல்எதிர்வரும் ஏப்ரல் மாதம் மாதம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்காக புத்தளம் மாவட்டத்தில் இரண்டு சுயேட்சைக் கட்சிகள் இன்று கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.

ஏழாவது நாடாளுமன்றப் பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று வெள்ளிக்கிழமை முதல் எதிர்வரும் 22 ஆம் திகதிவரை நடைபெறும் என தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் இன்று காலை சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன. புத்தளம் மாவட்டத்தில் 4 லட்சத்து 95ஆயிரத்து 575 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதுஆசிரியர் பயிற்சித்திட்டம் நாடளாவிய ரீதியில் நாளை ஆரம்பம்இலங்கை அரச பாடசாலைகளில் கற்பிக்கும் பயிற்றப்படாத, பட்டதாரியல்லாத சகல ஆசிரியர்களையும் பயிற்றுவிக்கும் திட்டம் நாளை 20ஆம் திகதி நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

கல்வி அமைச்சின் ஆசிரியர் கல்விப் பிரிவும் தேசிய கல்வி நிறுவகத்தின் நிறுவன அபிவிருத்திப் பிரிவும் இணைந்து இத்திட்டத்தை முன்னெடுத்துள்ளன.

நாடளாவிய ரீதியில் 42 மத்திய நிலையங்களில், வார இறுதி நாட்களில் இப்பயிற்சியை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ் மொழி மூலம் 18 மத்திய நிலையங்களும் சிங்கள மொழி மூலம் 17 மத்திய நிலையங்களும் ஆங்கில மொழி மூலம் 7 மத்திய நிலையங்களும் நிறுவப்பட்டுள்ளன.

இவற்றில் கடமைபுரிய பகுதி நேர அடிப்படையில் வருகை தரும் விரவுரையாளர்களாக சுமார் 200 பேர் வரை ஒப்பந்த அடிப்படையில் பணிக்கமர்த்தப் படவுள்ளனர்.

இப்பாடநெறி இரு வருடங்களைக் கொண்டது. முதலாம் வருடம் அளவீடும் மதிப்பீடும், கல்வி உளவியல், வகுப்பறை முகாமைத்துவம் முதலான பாடப் பரப்புகளைக் கொண்டிருக்கும்.

கடந்த வருடம் அரச பாடசாலைகளுக்குச் சேர்த்துக் கொள்ளப்பட்ட சர்ச்சைக்குரிய பெருந்தோட்டப் பகுதி பாடசாலை ஆசிரியர்கள் இப்பயிற்சி மூலம் நன்மையடையவுள்ளனர். அத்தோடு, அண்மையில் நியமனம் பெற்ற ஆசிரிய உதவியாளர்களும் இதன் மூலம் நன்மையடையவுள்ளனர்
செய்துள்ள பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ


தொடர்பான கண்காட்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தற்போது இந்திய அதிகாரிகள் பலரைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் என்று புதுடில்லியிலுள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா மற்றும் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஆகியோரை கோத்தபாய நேற்று சந்திக்க இருந்ததாக இவ்வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்தியா நடத்தும், ஆசியாவிலேயே மிகப்பெரியது என்று கூறப்படும் பாதுபாப்பு ஆயுத கண்காட்சியான 'டி/பெக்ஸ்போ இந்தியா 2010' கண்காட்சியில் கலந்து கொள்ளும் கோத்தபாய, இந்திய அதிகாரிகளையும் அமைச்சர்களையும் சந்தித்த பின்னர் இன்று நாடு திரும்புகிறார்.

எவ்வாறாயினும் இவர் இந்திய அமைச்சர்களுடனும் அதிகாரிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான காரணம் எதுவும் வெளியிடப்படவில்லை. மேற்படி பேச்சுவார்த்தைகளின் போது அங்குள்ள இலங்கைத் தூதுவர் பிரசாத் காரியவசமும் சமுகமளிக்கிறார்.

கோத்தபாயவை மேற்கோள்காட்டி இந்திய ஊடகங்கள் ஏற்கனவே வெளியிட்ட செய்திகளில், 5 நாள் விஜயத்தை மேற்கொண்டுள்ள கோத்தபாய போதி காயாவுக்கும் செல்வார் என்று தெரிவிக்கப்பட்டது.


ஏழாவது நாடாளுமன்றத் தேர்தல் : வேட்பு மனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

நாடாளுமன்றப் பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் 22 மாவட்டங்களிலுமுள்ள மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகங்களில் இன்று 19 ஆம் திகதி வெள்ளிக்கிழமை தொடக்கம் ஆரம்பமாகின்றது. இது எதிர்வரும் 26 ஆம் திகதி நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடையும் என தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.

நடைபெறவிருக்கும் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் நாடு பூராவும் மாவட்ட ரீதியாக 196 உறுப்பினர்களும் தேசியப் பட்டியல் ரீதியாக 29 உறுப்பினர்களும் என மொத்தமாக 225 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவிருக்கின்றனர்.

இவர்களைத் தெரிவு செய்வதற்கு 22 மாவட்டங்களிலுமுள்ள 160 தேர்தல் தொகுதிகளைச் சேர்ந்த 14, 099, 500 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

கொழும்பு மாவட்டத்தில் 1, 521, 854 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 1, 474,464 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 813, 233 பேரும், கண்டி மாவட்டத்தில் 970, 456 பேரும், மாத்தளை மாவட்டத்தில் 342, 684 பேரும், நுவரெலியா மாவட்டத்தில் 457, 137 ÷பரும், காலி மாவட்டத்தில் 761, 815 பேரும், மாத்தறை மாவட்டத்தில் 578, 858 பேரும், அம்பாந்தோட்டை மாவட்டத்தில் 421, 186 பேரும்,-

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 721, 359 பேரும், வன்னி மாவட்டத்தில் 266, 975 பேரும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 333, 664 பேரும், திகாமடுல்ல மாவட்டத்தில் 420, 835 பேரும், திருகோணமலை மாவட்டத்தில் 241, 133 பேரும், குருணாகல் மாவட்டத்தில் 1, 183, 649 பேரும், புத்தளம் மாவட்டத்தில் 495, 575 பேரும், அநுராதபுரம் மாவட்டத்தில் 579, 261 பேரும், பொலனறுவை மாவட்டத்தில் 280, 337 பேரும்,-

பதுளை மாவட்டத்தில் 574, 814 பேரும், மொனராகலை மாவட்டத்தில் 300, 642 பேரும், இரத்தினபுரி மாவட்டத்தில் 734, 651 பேரும், கேகாலை மாவட்டத்தில் 613, 938 பேரும் இவ்வாறு வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர்.

அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தரவின்பேரில் ஆறாவது நாடாளுமன்றம் கடந்த 9 ஆம் திகதி செவ்வாய்க் கிழமை நள்ளிரவுடன் கலைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

புதிய நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டத் தொடர் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இராணுவ நீதிமன்றில் அநீதி இழைக்கப்படின் சரத் மேன்முறையீடு செய்யலாம் : அரசாங்கம்
அமுல்படுத்தவிடாமல் நாடொன்று தடுக்குமாயின் அந்த நாட்டில் சட்டமிருக்காது. இது சட்டத்திற்கும் சுயாதிபத்தியத்திற்கும் முரணானதாகும். ஜெனரல் சரத் பொன்சேகா மீதான விசாரணை அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் சட்டத்திற்கு அமைவாகவே மேற்கொள்ளப்பட்டுள்ளது. இராணுவ நீதிமன்றத்தில் தனக்கு அநீதி இழைக்கப்படுமாயின் அவர் மேன்முறையீடு செய்யலாம் என்று அமைச்சரவை பேச்சாளர்களில் ஒருவரும் ஏற்றுமதி அபிவிருத்தி மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.

வங்கி பெட்டகங்களிலிருந்து மீட்கப்பட்ட பணம் தொடர்பில் விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. கள்ளப் பணத்தை நாட்டின் பொருளாதரத்திற்குள் இணைப்பது சட்டத்தின் பிரகாரம் அவதூறுக்குரிய தவறாகும். அதேபோன்று, இலங்கையில் ஒருவர் 2000 டொலர்களை மட்டுமே தம்வசம் வைத்திருக்கமுடியும் என்றும் அவர் சொன்னார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் மேலும் கூறியதாவது,

"முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா மீதான வழங்கு தொடர்பில் மக்கள் தெளிவாக தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டியது அவசியமானதாகும். பொன்சேகாவின் மருமகனின் தயாரின் வங்கி பெட்டகங்கள் நான்கிலிருந்து 750 லட்சம் ரூபா மீட்கப்பட்டுள்ளது. பொறுப்புள்ள அரசாங்கத்தினால் இது தொடர்பில் நடவடிக்கைகளை எடுக்காமல் இருக்க முடியாது. சட்டத்தை நடைமுறைப்படுத்தாமலும் இருக்கமுடியாது.

நடவடிக்கைகளை எடுக்கவேண்டாம், சட்டரீதியில் செயற்படவேண்டாம் என யாராவது யோசனைகளை முன்வைக்க முடியுமா? ஜனவரி 26 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற்ற இரண்டு நாட்களுக்கு பின்னரே அந்த பணம் வங்கி பெட்டகங்களில் வைக்கப்பட்டுள்ளது.

நான்கு பெட்டகங்களில் பணம்

இந்தப் பணம் தன்னுடையதல்ல என்றும் ஜெனரல் சரத் பொன்சேகாவின் காரியாலயத்திலிருந்தே கொண்டுவரப்பட்டதாகவும் ஜெனரலின் மகளே இந்தப் பணத்தைப் பெட்டகங்களில் வைக்குமாறு கோரியாதாக தனுனவின் தயார் தெரிவித்துள்ளார். பணத்தை வைப்பதற்கு பெரிய பெட்டகம் இன்மையினால் நான்கு பெட்டகங்களில் பணம் வைக்கப்பட்டுள்ளது.

இரண்டு பெட்டகங்கள் தனுனவின் தாயாரது பெயரிலும் ஏனைய இரண்டு பெட்டகங்கள் அவருக்கு நெருங்கிய மிகவும் நம்பிக்கையான நண்பர்களின் பெயர்களிலும் இருந்தன. அந்த நான்கு பெட்டகங்களின் திறப்புகளும் தனுனவின் தாயாரான அசோகா திலகரத்னவிடமே இருந்தன.

குற்றப்புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்தின் அனுமதியுடன் அவரது வங்கி பெட்டகங்களைக் கடந்த 15 ஆம் திகதி திறந்த போது, அங்கு வங்கி அதிகாரிகள், தனுனவின் தாயாரான அசோகா திலகரத்ன, அவரின் சட்டத்தரணிகள் இருந்தனர். நான்கு பெட்டகங்களிலும் மூன்று நாடுகளின் நாணயங்கள் இருந்தன.

நான்கு பெட்டகளிலிருந்தும் 750 லட்சம் ரூபா மீட்கப்பட்டன. அதில் 5லட்சத்து 27 ஆயிரம் அமெரிக்க டொலர்களும், 150 லட்சம் பவுன்களும் இலங்கை ரூபாக்களும் அடங்குகின்றன. இந்தச் செயற்பாடு, வெளிநாட்டு நாணயங்களை நிர்வகிக்கும் சட்டமூலத்தை முழுமையாக மீறுகின்ற செயற்பாடாகும்.

நகைகள், தங்கம் மற்றும் கோவைகளை வைத்திருக்க வேண்டிய வங்கிப் பெட்டங்களில் பணத்தை வைத்திருந்தமை ஏன்? அந்தப் பணத்தை நடைமுறை கணக்கிலோ அல்லது நிலையான கணக்கிலோ வைப்பிலிடாததேன்?

ஒருவர் 2000 டொலர் மட்டுமே....

சட்டத்தின் பிரகாரம் இலங்கையில் ஒருவர் 2000 டொலர்களை மட்டுமே வைத்திருக்கமுடியும். வெளிநாட்டில் தொழில் புரியும் ஒருவர் 15 ஆயிரம் டொலர்களுக்கு மேல் நாட்டுக்குள் கொண்டு வருவராயின் அவர் சுங்கத் திணைக்கள அதிகாரிகளிடம் அறிவிக்கவேண்டும். அதுவும் அந்தப் பணத்தை 90 நாட்களுக்கு மட்டுமே வைத்திருக்க முடியும் அதற்குப் பின்னர் இலங்கை பண பெறுமதிக்கு மாற்றிக் கொள்ள வேண்டும்.

கைப்பற்றப்பட்ட டொலர்களில் இலக்கங்கள் ஒழுங்கு முறையில் இருக்கின்றன. அந்த பணம் எங்கிருந்து, எந்த நிதியத்திலிருந்து வந்தது என்ற கேள்விகள் எழுகின்றன. கள்ள நோட்டாயின் அதனை நாட்டில் பொருளாதார சக்கரத்திற்குள் இணைக்க முயற்சிப்பது அவதூறு தவறாகும்.

இவைத்தொடர்பில் நீதிமன்றம் செல்லமுடியாது; விவாதிக்க முடியாது என்று யாராலும் கூறமுடியாது. 'ஐகோப்' பிரச்சினை மிகவும் அபாயகரமானவை. குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட பணம் தொடர்பில் நீதவான் நீதிமன்றத்தில் அறிக்கையைச் சமர்ப்பித்து நீதிமன்றத்திற்கு தெளிவுப்படுத்தியுள்ளோம். சட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளோம். அதனைத் தவறென்று யாருமே கூறமுடியாது.

ஜெனரல் பொன்சேகாவுக்கு எதிராக இராணுவச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. ஆரம்பக்கட்ட விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதற்குப் பின்னரே விசாரணையை இராணுவ நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்ல முடியும்.

இது சட்டத்திற்கு முரணானதல்ல, அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் சட்டத்திற்கு அமைவாகவே விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இராணுவ நீதிமன்றத்தில் தனக்கு அநீதி இழைக்கப்படுமாயின் அவர் மேன்முறையீடு செய்யலாம். இராணுவ நீதிமன்றம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் கண்காணிக்கப்படுகின்றது. மேன் முறையீட்டு நீதிமன்றத்திற்குப் பின்னர் உயர்நீதிமன்றத்தை நாடலாம். சட்டத்தை அமுல்படுத்தவிடாமல் நாடொன்று தடுக்குமாயின், அந்த நாட்டில் சட்டமிருக்காது. இவை யாவும் சட்டத்திற்கும் சுயாதிபத்தியத்திற்கும் முரணானதாகும்." இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...