17 மே, 2010

இழப்புக்கான பதிவுத் திகதி கால எல்லை மேலும் நீடிப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் நிகழ்ந்த இடப்பெயர்வுகளில் பாதிப்புக்குள்ளான வணிக, கைத்தொழிலில் ஈடுபட்டிருந்தோர், தமது இழப்புக்களுக்கான பதிவினைத் தற்போது மேற்கொண்டு வருகின்றனர்.

முல்லைத்தீவு மாவட்ட வணிக-கைத்தொழில் வேளாலர் ஒன்றியத்தில் இந்தப் பதிவு மேற்கொள்ளப்படுகிறது. இதற்கான கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாக மேற்படி ஒன்றிய செயலாளர் வே. பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 25 ஆம் திகதி வரை தங்களது பதிவினை மேற்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் நிலையத்தில் தமது இழப்புக்களைப் பதிவு செய்து பிரதியினை பெற்றுக் கொள்வது தொடர்பாகவும் பிரயாணத்தில் ஏற்பட்டுள்ள சிரமம் மற்றும் முழுமை பெறாத மீள்குடியேற்றம் போன்ற காரணங்களையடுத்தே பதிவுக்கான கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது.

இது குறித்துப் பாதிக்கப்பட்டோர் கோரிக்கை விடுத்திருந்தனர். இதனைத் தொடர்ந்து, இலங்கை வணிக கைத்தொழில் வேளாண்மை சம்மேளனத்தின் வடக்கு கிழக்குக்கான ஆலோசகர் டபிள்யூ. ஜே, சூசைரெட்னம் விடுத்த பணிப்புரைக்கமைய இக்கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...

இறந்தோரின் நினவுதினத்தைச் சீர்குலைக்கும் துண்டுப் பிரசுரம் : வவுனியாவில் வெளியீடு

வன்னியில் இடம்பெற்ற மோதல்களைத் தொடர்ந்து உயிரிழந்த மக்களை நினைவுகூரும் நிகழ்வை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வவுனியாவில் ஏற்பாடு செய்துள்ளது. இந்த நினைவு தின நிகழ்வைச் சீர்குலைக்கும் வகையில் 'மக்கள் பாதுகாப்பு இயக்கம்' என்ற பெயரில் துண்டுப் பிரசுரம் ஒன்றுவெளியிடப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்..

அந்தக் துண்டுப் பிரசுரத்தில், .

"எதிர்வரும் 17 ஆம் திகதி புலிகள் இயக்க உறுப்பினர்கள் கொல்லப்பட்டுத் தமிழ் மக்கள் விடுதலை பெற்ற நாள். எனவே இந்தத் தினத்தை, தமிழ் மக்கள் இறந்த தினமாகக் கூறி ஒரு சில தீயசக்திகள் துக்கம் அனுஷ்டிப்பு வாரம் எனப் பிரகடனப்படுத்தி, வியாபார நிலையங்களை மூடி ஹர்த்தால்களையும் ஊர்வலங்களையும் அஞ்சலிக் கூட்டங்களையும் நடத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது. .

தமிழ் மக்கள் மரணித்ததை நினைவுகூருவதென்றால் வேறு தினத்தில் அதனை அனுஷ்டிக்க முடியும். ஆனால் தமிழ் மக்களை பல வருடங்களாகத் துன்புறுத்திய புலிகள் கொல்லப்பட்ட தினத்தை அனுஷ்டிக்கும் நோக்கத்துடனேயே அவர்கள் செயல்படுகிறார்கள். இவ்விடுதலையின் பின், எமது மக்கள் தற்போது மீள் குடியமர்த்தப்பட்டு வருவதோடு அமைதியாகவும் நிம்மதியாகவும் சுதந்திரமாகவும் புது வாழ்க்கையை ஆரம்பிக்கத் தொடங்கியுள்ளனர்..

எனவே, இந்தச் சதி திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கி எமது தமிழ் மக்களை மேலும் கஷ்டப்படுத்த முயற்சித்தால் நீங்கள் அடையாளம் காணப்பட்டு தண்டிக்கப்படுவீர்கள் எனக் கவலையுடன் அறியத் தருகின்றோம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

நல்லிணக்கக் குழுவில் எண்மருக்கு நியமனம்



யுத்த சூழலின் போது, நேரடியாக அல்லது மறைமுகமாக, மனித உரிமை மீறலில் ஈடுபட்டோர் தொடர்பாக ஆராய்வதற்கென 08 பேர் கொண்ட நல்லிணக்க ஆணைக்குழுவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நியமித்துள்ளார்.

2002ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் 2009ஆம் ஆண்டு மே மாதம் வரை இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்த சூழலின்போது, மனித உரிமை மீறல் சம்பவங்களில் நேரடியாக அல்லது மறைமுகமாக ஈடுபட்ட நபர்கள், குழுவினர் மற்றும் அமைப்புக்கள் தொடர்பில் ஆராய்ந்து நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை சமர்ப்பிக்கும் என ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட எவரும் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யலாம் எனவும் ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீத்தா ரஞ்சன் டி சில்வா, டாக்டர் அம்ரித் ரொகான் பெரேரா, பேராசிரியர் மொகமட் தாஹிர் மொகமட் ஜிப்ரி, பேராசிரியர் கருணாரட்ன ஹங்வத்த, சந்திரபால் சண்முகம், ஹேவா மாத்தர கமகே சிறிபால பளிஹக்கார, (திருமதி) மனோகரி ராமநாதன், மெக்ஸ்வெல் பராக்கிரம பரணகம ஆகியோரே மேற்படிக் குழுவில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அமைச்சரவையின் அங்கீகாரத்தையடுத்து இவர்களுக்கான நியமனம் ஜனாதிபதியூடாக வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...

கண்ணீர் அஞ்சலி

இது வரை எமது தாய் மண்ணில் உயிர் நீத்த அனைத்து போராளிகளுக்கும் பொதுமக்களிற்கும் புதி பாதையின் கண்ணீர் அஞ்சலி




மேலும் இங்கே தொடர்க...

திருமலை தாழமுக்கமே தொடர் மழைக்கு இதுவே காரணம் :வளிமண்டல திணைக்களம்



தென் மேல் பருவப் பெயர்ச்சி, இலங்கையின் திருகோணமலை மாவட்டத்திலிருந்து 700 கிலோமீற்றர் தொலைவில் கொண்டுள்ள தாழமுக்கம் என்பனவற்றால் கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அடைமழை பெய்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் அதிகாரி சின்னையா வசந்தகுமார் தெரிவித்தார்.

கடந்த 24 மணித்தியாலங்களில், கொழும்பு மாவட்டத்தில் 53.2 மில்லிமீற்றர், கட்டுநாயக்க 94.5 மி.மீ., ரத்மலானை 120.0 மி.மீ., இரத்தினபுரி 128.8 மி.மீ., மீகொடை 173.2 மி.மீ., கம்பஹா மஹாவிற்ற 232.0 மி.மீ., கம்பஹா உயிரியல் பூங்கா 283.0 மி.மீ., நிட்டம்புவ 313.6 மி.மீ., தெஹிவளை 168.0 மி.மீ., அங்வெல 210.0 மி.மீ. என்றவாறு மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தொடரும் கால நிலை மாற்றத்தினால் நாட்டின் வடக்கு, கிழக்கு, சப்பிரகமுவ, மத்திய, மேல் மாகாணங்கள் உள்ளிட்ட சில பகுதிகளிலும் மழை பெய்யக்கூடும் எனவும் அவர் தெரிவித்தார்,

அதேவேளை, இடி, மின்னலின் போது மக்கள் அவதானத்துடன் இருக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கின்றது.
மேலும் இங்கே தொடர்க...

தமிழ்ப் பேசும் மக்களின் அரசியல் விலாசம் தொலையப் போகின்றது : ஸ்ரீலமுகா

அரசாங்கம் முன்னெடுக்கப் போகும் அரசியலமைப்பு மற்றும் தேர்தல் முறைமை மாற்றங்களால் தமிழ்ப் பேசும் சிறுபான்மை இன மக்களின் அரசியல் விலாசம் தொலைந்து விடப்போகிறது. எனவே அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அறைகூவல் விடுத்துள்ளது.

அரசாங்கத்துடனும் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கான கோரிக்கையை விடுக்கவுள்ளதாகவும் காங்கிரஸ் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹசன் அலி மேலும் தெரிவிக்கையில்,

"தமிழ்ப் பேசும் அரசியல் கட்சிகளில் பிளவுகளை ஏற்படுத்த முயற்சிகளை மேற்கொண்டு வரும் அரசாங்கம் எம்மை பலவீனப்படுத்தி பெரும்பான்மையை பலப்படுத்தும் நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்து வருகிறது.

இதனை அரசாங்கத்திற்குள் பதவிகளை வகிக்கும் தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகள் புரிந்து கொள்ள வேண்டும். இதை வெளியிலுள்ள நாம் புரிந்து கொண்டுள்ளோம். உள்ளே இருப்பவர்கள் புரிந்து கொள்ளாமல் இருக்கின்றார்கள்.

இந்நிலையில் தொடர்ந்து அவர்கள் இருப்பார்களானால் அரசியலில் விலாசமே இல்லாமல் போய் விடுவார்கள். அரசியலமைப்பு மாற்றம் மற்றும் தேர்தல் முறைமையில் திருத்தங்கள் மூலம் சிறுபான்மை இன தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமைகளை பறிக்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளவுள்ளது.

திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம்

வடக்குக் கிழக்கில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு திட்டமிட்டு சிறுபான்மை இன மக்களை அடக்க முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

எனவே தமிழ், முஸ்லிம் என்ற ரீதியில் இனியும் நாம் பிரிந்திருக்காது தமிழ்ப் பேசும் மக்களாக ஓரணியில் இணைய வேண்டும். இது தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்புடன் நாம் பேச்சுவார்த்தைகளை நடத்தினோம். அது வெற்றி பெற்றுள்ளது.

அதேபோன்று இ.தொ.கா. உட்பட மலையக கட்சிகளுடனும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உட்பட அரசில் அங்கம் வகிக்கும் சிறுபான்மை கட்சிகளுடனும் பேச்சவார்த்தைகளை நடத்தவுள்ளோம்.

இவ்வாறு நாங்கள் ஒன்று சேர்ந்து அரசியல் உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்கு மேற்கொள்ளும் முயற்சிகளை, தனிநாடு கோருகிறார்கள், மீண்டும் புலிகளுக்கு உயிர் கொடுக்க முனைகின்றார்கள் என்று அரசாங்கம் சிங்கள மக்கள் மத்தியில் பிரசாரத்தை முன்னெடுக்கும்.

அந்தப் பிரசாரத்திற்கு, சிறப்புரிமைகளுக்காக அரசுடன் இணைந்துள்ள எம்மவர்களும் ஒத்து ஊதுவார்கள். அவ்வாறானவர்களும் இறுதியில் விலாசம் இல்லாமல் போய் விடுவார்கள்.

நாம் தனி நாடு கோரவில்லை. எமக்குள்ள அரசியல் உரிமைகள் பறிக்கப்படும் நடவடிக்கைகளை எதிர்த்தே பேச்சுவார்த்தைகளை நடத்துகிறோம். தமிழ்ப் பேசும் மக்களாக ஓரணியில் திரள்கிறோம். சொந்த அபிலாஷைகளை தூக்கியெறிவோம்.

இன்று எமது முஸ்லிம் காங்கிரஸுக்குள்ளும் தனிப்பட்டவர்களுடன் அரசாங்கம் பேச்சுக்களை நடத்தி தம் பக்கம் இணைக்க முயல்கிறது.

ஆனால், எம்மவர்கள் சோரம் போக மாட்டார்கள். சிறுபான்மைக் கட்சிகளைப் பலவீனப்படுத்தி நாட்டில் பெரும்பான்மை இனத்தை பலப்படுத்துவதே அரசாங்கத்தின் திட்டமாகும் " என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

தந்தை & மகனை சேர்த்து வைத்த பேஸ்புக்

லண்டன் : இங்கிலாந்தில் 37 ஆண்டுகளுக்கு முன் பிரிந்து சென்ற தந்தையை பேஸ்புக் மூலம் கண்டுபிடித்து சேர்ந்தார் மகன்.
லண்டனை சேர்ந்தஆன்டி ஸ்பியர்ஸ் (39) 2 வயது குழந்தையாக இருந்தபோது, தாயை விட்டு தந்தை பிரிந்து சென்று விட்டார். வளர்ந்த பிறகு தந்தையைப் பற்றி தாயிடம் விசாரித்தார் ஆன்டி. தந்தையின் பெயர் ‘கிரகாம் கோர்பெட்’ என்று சொல்லி வைத்தார் தாய்.
ஆண்டி சமீபத்தில் பேஸ்புக் இணைய தளத்தில் தனது பக்கத்தை உருவாக்கி, அதில் தன்னைப் பற்றிய விவரங்களைத் தெரிவித்தார். தந்தையைத் தேடுவதாக கூறி ‘கிரகாம் கோர்பெட்’ என்று டைப் செய்தார். லண்டனில் வசிக்கும் ஏகப்பட்ட கோர்பெட்களின் பெயர்களை படத்துடன் இணைய தளம் வெளியிட்டது.
அதில் தனது சாயலில்(!) இருந்த தந்தையைத் தேடிப் பிடித்து விட்டார் ஆன்டி. உடனடியாக ஒரு இமெயில் அனுப்பினார். 2 நாட்களில் ‘ஹலோ சன்!’ என்று பதில் வர 37 ஆண்டுகள் பிரிவுக்குப் பிறகு தந்தை &மகன் இணைந்தனர். இதுபற்றி ஆன்டி கூறியதாவது:
எனது தந்தை பெயரில் 15 பேரின் படங்கள் இருந்தன. அதில் ஒன்றைப் பார்த்ததும் இவர்தான் என் தந்தை என்று இதயம் சொன்னது. எனது வயதான படத்தைப் பார்ப்பது போல இருந்தது அது. உடனே, இமெயில் அனுப்பினேன். 2 நாட்களில் பதில் வந்தது. முகவரியை பார்த்து என்னைக் காண வந்தார் தந்தை.
மேலும் இங்கே தொடர்க...

ஐஸ்லாந்தின் எரிமலை : இரு பிரி. விமான நிலையங்கள் மூடப்பட்டன



ஐஸ்லாந்தில் மீண்டும் எரிமலை சீற்றம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மோசமான வானிலை மற்றும் புகை மண்டலத்தால் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் முக்கிய விமான நிலையங்களை 2 நாட்கள் மூடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் ஹீத்ரோ மற்றும் கெட்விக் ஆகிய விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் ஆயிரக்கணக்கான பயணிகள் மற்றும் உல்லாசப் பயணிகள் பெரும் பாரிய நெருக்கடிகளை எதிர்நோக்கி உள்ளதாக அங்கிருது வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் இங்கே தொடர்க...

:​ இலங்​கை​யில் தமி​ழர்​கள் அதி​கம் வசிக்​கும் வடக்கு மற்​றும் கிழக்​குப் பகு​தி​யில் ராணு​வத்தை குறைக்க முடி​யாது



இலங்​கை​யில் தமி​ழர்​கள் அதி​கம் வசிக்​கும் வடக்கு மற்​றும் கிழக்​குப் பகு​தி​யில் ராணு​வத்தை குறைக்க முடி​யாது என்று பாது​காப்​புத் துறை செய​லர் கோத்​த​பய ராஜ​பட்ச மறுத்து விட்​டார்.​

முன்​ன​தாக இலங்​கை​யில் போர் நிறை​வ​டைந்து விட்​ட​தால் வடக்கு,​​ கிழக்​கில் படை குறைப்பு நட​வ​டிக்​கையை மேற்​கொள்ள வேண்​டும் என்று தமி​ழர் தேசிய கூட்​டணி கோரி​யி​ருந்​தது.​

இ​தற்கு பதில் அளிக்​கும் வகை​யில் "சண்டே டைம்ஸ்' பத்​தி​ரி​கை​யில் கோத்​த​பய,​​ கூறி​யி​ருப்​பது:​

வ ​டக்கு,​​ கிழக்​கில் ராணு​வத்தை குறைக்க வேண்​டும் என்று கூறு​வது முட்​டாள்​த​ன​மா​னது.​ ராணு​வத்​தைக் குறைத்​தால் விடு​த​லைப் புலி​கள் போன்ற பயங்​க​ர​வாத அமைப்​பு​கள் மீண்​டும் தலை​தூக்க வாய்ப்​புள்​ளது.​

முன்பு வன்னி வனப்​ப​கு​தி​க​ளில் மறைந்து இருந்து கொரில்லா தாக்​கு​தல்​களை நடத்தி புலி​கள் ஆதிக்​கம் செலுத்தி வந்​த​னர்.​ இப்​போது அப்​ப​கு​தி​யில் மிக அதிக ராணு​வத்தை குவித்​துள்​ள​தன் மூலம் அவர்​களை தலை​தூக்க முடி​யா​மல் செய்​துள்​ளோம் என்​றார்.​

அதி​கா​ரப் பகிர்வு அவ​ச​ர​மில்லை:​​ தமி​ழர்​க​ளு​ட​னான அர​சி​யல் அதி​கா​ரப் பகிர்வு குறித்த கேள்​விக்கு,​​ "வடக்கு மற்​றும் கிழக்​கில் அர​சி​யல் சீர்​தி​ருத்​தங்​களை மேற்​கொள்​வது அவ​சி​யம் தான்.​ ஆனால் இப்​போ​தைய தேவை வளர்ச்​சிப் பணி​களை மேற்​கொள்​வ​தானே தவிர அர​சி​யல் அதி​கா​ரப் பகிர்வு இல்லை' என்​றார் கோத்​த​பய.
மேலும் இங்கே தொடர்க...

மனம் வெறுத்து ஆற்றில் குழந்தையை வீசி தற்கொலைக்கு முயன்ற தமிழ் பெண் கைது



நியூயார்க்:குடும்பப் பிரச்னையில் மனம் வெறுத்துப் போன தமிழகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், தன் 19 மாத கைக்குழந்தையை ஆற்றில் வீசி, தானும் விழுந்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம், அமெரிக்காவில் நடந்துள்ளது. இருவரும் மீட்கப்பட்டுள்ளனர்; பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.தமிழகத்தைச் சேர்ந்தவர் தேவி சில்வியா. இவர் கணவர் டொமினிக் ஜேம்ஸ் பிருத்விராஜ். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றன.குழந்தைகளுடன் இந்தியாவுக்கு வர தேவி விரும்பினார். ஆனால், கணவர் தன் வேலை காரணமாக சிகாகோ, கலிபோர்னியா, நியூயார்க் என எப்போதும் பறந்து கொண்டே இருந்ததால், வீட்டைப் பற்றி அதிகம் அக்கறை காட்டவில்லை.

இம்மாதிரி தனிமை வாழ்க்கையில் நொந்த அவருக்கு, வழி ஏதும் கிடைக்கவில்லை. தனியே குழந்தைகளுடன் வாழும் போது மனமொடிந்து போன தேவி சில்வியா, அங்குள்ள ஹட்சன் ஆற்றில் தனது 19 மாத கைக்குழந்தையை வீசி, தானும் விழுந்து தற்கொலைக்கு முயற்சித்தார். குளிர் நிரம்பி சில்லிட்ட ஆற்றில் விழுந்ததும், குழந்தை நடுங்கி நீல நிறமானது.ஆனால், உடனடியாக இருவரும் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். குழந்தை அதிக குளிரான நீரில் விழுந்ததால் அதன் நிலை கவலைக்கிடமாக இருக்கிறது. 'இப்படி நடந்தாலாவது என் குழந்தையை என் கணவரிடம் சேர்க்கமாட்டார்களா என்று தான் செய்தேன்' என்று தேவி கூறியுள்ளார். மன பாதிப்பு சிகிச்சைக்காக தனி மருத்துவமனையில் தேவி இருப்பதால், அங்கிருந்தே வழக்கு விசாரணை நடந்தது.

தற்கொலை செய்ய முயற்சித்ததாக அவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. குற்றத்தை ஒப்புக்கொண்டால் தண்டனை பாதியாகக் குறைக்கப்படும். ஆனால், தேவி தன் குற்றத்தை ஒப்புக்கொள்ளவில்லை. விசாரணையில், தேவி மீதான குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டால், அவருக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைக்கும். குழந்தையை தாய் பார்க்கக்கூடாது என்று நீதிபதி உத்தரவிட்டார். தேவியின் கணவர் இன்னமும் வந்ததாக தெரியவில்லை.
மேலும் இங்கே தொடர்க...

அக்னி - 2 ஏவுகணை தீப்பிழம்பாக சீறிப்பாய்ந்தது ; அணு ஆயுதம் சுமந்து தாக்கும் வல்லமை கொண்டது






பாலசோர்: எதிரிகளின் இலக்கை துல்லியமாக தாக்கும் வல்லமை கொண்ட அக்னி -2 ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக இன்று சோதித்தது.ஒரிசா மாநிலம் பாலசோர் கடற்கரையில் இருந்து நடத்தப்பட்ட இந்த சோதனை உலக அளவில் இந்தியாவுக்கு கூடுதல் மதிப்பை உயர்த்தும் என்றால் மிகையாக இருக்க முடியாது.

ஏனெனில் கடந்த மார்ச் மாம் விண்ணில் ஏவப்பட்ட அக்னி -1 ஏவுகணை 700 கி.மீட்டர் தூரம் சென்று தாக்கும் வல்லமை கொண்டது. தற்போது இது ( அக்னி -2 ) செல்லும் தூரம் இரண்டரை மடங்கு அதிகரித்திருக்கிறது. கடந்த 2009 ம் ஆண்டில் கடலில் உள்ள எதிரிகளின் இலக்கை கப்பலில் இருந்து தாக்கும் வல்லமை கொண்ட பிரிதிவி- 2 சிறியரக ஏவுகணை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இதனையடுத்து இன்று மேலும் ஒரு சோதனை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டிருக்கிறது.



உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்த அக்னி- 2 ஏவுகணை அணுகுண்டை சுமந்து சென்று சுமார் 2 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் வரை சென்று தாக்கும் வல்லமை கொண்டது. 17 டன் கொண்ட இந்த ஏவுகணை ஆயிரம் டன் எடையை சுமக்கும் வல்லமை கொண்டது. நமது இந்திய ராணுவ தொழில்படையினர் இந்த தயாரிப்பில் முழுக்கவனம் செலுத்தினர்.



காரியத்தை கச்சிதமாக முடிக்கும் : சொன்னதை செய்யும் கிளிப்புள்ள போல இந்த இடத்தை அழித்து விட்டு வா என்று அதற்கு கட்டளையிட்டால் காரியத்தை கச்சிதமாக முடித்து விடும். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடத்தப்பட்ட இந்த சோதனை தோல்வியில் முடிந்தது. இந்த முறை இன்று ( 17 ம் தேதி ) வெற்றிகரமாக சோதனை நடத்தப்பட்டது. பதிலுக்கு ஒரு ஏவுகணையை . பாகிஸ்தான் இப்போதே வண்ணம் பூச துவங்கியிருக்கும் என்பது சம்பிரதாயம்.
மேலும் இங்கே தொடர்க...

பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு மீண்டும் ஜதேக கோரிக்கை



இராணுவத்தினால் தடுத்துவைக்கப்பட்டுள்ள கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜெனரல் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு ஜனநாயக தேசிய முன்னணி மீண்டும் அரசாங்கத்திடம் கோரியுள்ளது.

யுத்தம் வெற்றி கொள்ளப்பட்டு ஓராண்டு பூர்த்தி அடைவதை குறிக்கும் முகமாக நாளை மாலை விசேட பூஜை வழிபாடு ஒன்றை நடத்தப் போவதாகவும் ஜனநாயக தேசிய முன்னணி மேலும் தெரிவித்துள்ளது.

யுத்த வெற்றியின் காரணகர்த்தாவான தமது கணவர் தடுத்து வைக்கப்பட்டுள்ள கடற்படை தலைமைக் காரியாலய வளவினுள்ளேயே இராணுவ அணிவகுப்பு ஒத்திகைகளை தாம் பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளமை காலத்தின் கோலமே என்று ஜெனரல் பொன்சேகாவின் மனைவி அனோமா பொன்சேகா நேற்று செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார்.

தினமும், இந்த தடுப்புக் காவல் நிலையத்திற்கு இரண்டு தடவைகள் சென்று தமது கணவரைப் பார்வையிடும் போதெல்லாம் இந்த ஒத்திகைகளை தாம் காண்பதாக திருமதி பொன்சேகா தெரிவித்தார்.

எவ்வாறாயினும, இந்த கொடிய யுத்தத்தை வெற்றிகரமாக முடிப்பதற்கு தமது கணவர் ஆற்றிய பங்களிப்பை இந்த நாட்டு மக்கள் நன்கறிவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

தீர்வுத் திட்டமின்றி செனட் சபை அமைக்கப்படுவது அர்த்தமற்றது : ஐதேக

வடக்கு கிழக்கு பிரச்சினை தொடர்பில் தீர்வுத்திட்டம் ஒன்றைக் கொண்டுவராமல் முதலில் செனட் சபையை அமைப்பதில் அர்த்தம் இல்லை. எனவே அனைத்துத் தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வுத்திட்டத்துடன் செனட் சபையைக் கொண்டுவருவதையே ஐக்கிய தேசிய முன்னணி விரும்புகின்றது என்று முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

அரசியலமைப்பு திருத்தங்களின் போது செனட் சபை ஒன்றும் அமைக்கப்படும் என்றும் அனைத்து மாகாண சபைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் செனட் சபை அமையும் என்றும் அரசாங்கம் கூறிவருகின்றமை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில்,

"அரசாங்கம் அரசியலமைப்பு மாற்றம் மற்றும் செனட் சபை உள்ளிட்ட விடயங்கள் குறித்து தகவல்களை வெளியிட்டு வருகின்றது. நாட்டுக்கு பொருத்தமான அரசியலமைப்பு திருத்தங்களை நாங்கள் எதிர்க்கமாட்டோம் என்று ஏற்கனவே கூறியுள்ளோம்.

முக்கியமாக அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வுத்திட்டம் ஒன்றுக்கு அரசாங்கம் செல்லவேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம். தீர்வுத்திட்டத்தை முதலில் கொண்டுவராமல் செனட் சபையை அமைப்பது அர்த்தமற்ற விடயம் என்றே நாங்கள் கருதுகின்றோம்.

அரசியல் தீர்வுத்திட்டத்துடன் செனட் அமைக்கப்படுமாயின் அதனை ஏற்றுக்கொள்ளலாம். செனட் சபை என்பது சிறந்த விடயம் என்பதனை நாங்கள் ஏற்கின்றோம். ஆனால் அது தீர்வுத்திட்டத்துடன் வரவேண்டிய விடயமாகும்.

அவ்வாறு சகல இன மக்களும் ஏற்றுக்கொள்ளும் தீர்வுத்திட்டம் ஒன்றுக்கு அரசாங்கம் செல்லுமாயின் அதற்கு நாங்கள் ஆதரவு வழங்குவோம். தமிழ் பேசும் மக்களுக்கு நிரந்தர தீர்வு ஒன்று அவசியமாகும்" என்றார்.
மேலும் இங்கே தொடர்க...