1 செப்டம்பர், 2009

உறவினர்களை பார்வையிட செல்வோரை தமிழக முகாம்களில் அகதிகளாக பதிவு செய்வதால் பல்வேறு சிரமங்கள்-

தமிழக முகாம்களில் வாழும் உறவினர்களைப் பார்வையிடுவதற்காக மூன்று மாதகால விசாவில் செல்லும் இலங்கைத் தமிழர்களையும் அகதிகளாகப் பதிவு செய்வதால், அவர்கள் தாயகம் திரும்ப முற்படும்போது, புதிய சிக்கலை எதிர்நோக்க வேண்டியுள்ளது. இலங்கையில் யுத்தம் முடிவுக்கு வந்துள்ள நிலையில், தமிழக முகாம்களிலுள்ள அகதிகளைப் பார்வையிடுவதற்கு அவர்களின் உறவினர்கள் மூன்று மாதகால விசாவில் செல்வது அதிகரித்துள்ளது. இந்நிலையில், அவ்வாறு செல்வோர் முகாமிலேயே தங்குவதால், அவர்களையும் அகதிகளாக அதிகாரிகள் பதிவு செய்கின்றனர். அவர்களுக்கும் அகதிப் பதிவெண், தனிவீடு, குடும்பஅட்டை மற்றும் அடையாளஅட்டை வழங்கப்படுகின்றன. இவர்கள் விசாகாலம் முடியும் முன்பே இலங்கை செல்ல விரும்பினால், முகாம் பொலிசார், கியூபிரிவு பொலிசார், தனித்துணை ஆட்சியர், சென்னை அகதிகள் மறுவாழ்வுத் துறை அதிகாரி ஆகியோரின் சான்றிதழ்கள் பெறவேண்டும். இந்தச் சான்றிதழ்களைப் பெற குறைந்தது ஒரு மாதம் தேவைப்படும். இதனால், அவர்கள் முறையான அனுமதியின்றி படகில் இலங்கைக்குச் செல்வது அதிகரித்துள்ளது. எனவே, விசாவில் வருபவர்களின் கடவுச்சீட்டு விபரங்களைத் தனியாகப் பதிவுசெய்தால், இப்பிரச்சினையைத் தீர்க்கலாம் என அகதிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இங்கே தொடர்க...
வடமாகாண தலைநகராக மாங்குளம்
வடமாகாண தலைநகராக மாங்குளம்

வட இலங்கையின் தலைநகராக மாங்குளம்

இலங்கையின் வடமாகாணத்தின் தலைநகராக மாங்குளத்தை இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளதாக எமது செய்தியாளர் கூறுகிறார்.

இந்த விடயம் தொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டதாக கூறுகின்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், இருப்பினும் மாங்குளத்தில் இருக்கக்கூடிய குடிநீர் பிரச்சினையைக் கருத்தில் கொண்டு அதனை மீள் பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும் என்ற கருத்தும் காணப்படுவதாகக் கூறினார்.

யாழ் மாவட்டத்துக்கு வெளியே வட மாகாணத்துக்கான தலைநகரை கொண்டு செல்வதற்கு அந்த மாவட்டத்தின் சனநெரிசல் போன்ற சில விடயங்களே காரணம் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் இங்கே தொடர்க...
இனப்பிரச்சினைத் தீர்வுக்காக ஜனாதிபதிக்கு உதவத் தயார் : இரா.சம்பந்தன்




இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்காக தாம் ஜனாதிபதிக்கு உதவ தயாராகஉள்ளதாகவும் தமிழ்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

அதற்கு முன்னர் இடம்பெயர்ந்துள்ள சுமார் 3 லட்சம் பேர் உடனடியாக மீள்குடியேற்றப்படவேண்டும் அவர் கோரியுள்ளார்.

இந்தச் சந்திப்பு கடந்த வார இறுதியில் கொழும்பில் இடம்பெற்றுள்ளது.

இலங்கையின் இனப்பிரச்சினையானது அனைத்து சமூகமும் அமைதியாக வாழும் வகையில் தீர்க்கப்படவேண்டும் என இதன் போது சம்பந்தன் குறிப்பிட்டிருந்தார்.

லியாம் பொக்ஸுடனான சந்திப்பு குறித்து கருத்துரைத்த அவர் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காண ஜனாதிபதிக்கு உதவுமாறு லியாம் பொக்ஸ் தம்மிடம்கேட்டுக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார் இப்பொழுது எடுத்த முடிவை சம்பந்தர் றுமாதத்திற்குமுன்பு எடுத்திருந்தால் அகதி என்ற சொல் இருந்திருக்காது
மேலும் இங்கே தொடர்க...
தொப்பிகலையில் கைவிடப்பட்ட கால்நடைகளைத் தேட இராணுவம் அனுமதி


மட்டக்களப்பு தொப்பிகலை பிரதேசத்தை அண்மித்த பகுதியில் கைவிடப்பட்ட கால் நடைகளைத் தேடிக் கண்டுபிடிப்பதற்கு குறிப்பிட்ட உரிமையாளர்களுக்கு இராணுவம் அனுமதி அளித்துள்ளது.

2006 - 2007 காலப் பகுதிகளில் கிழக்கில் மேற்கொள்ளப்டப்ட இராணுவ நடவடிக்கை காரணமாக அப்பிரதேசத்தைச் சேர்ந்த கிராமங்களிலிருந்து மக்கள் வெளியேறி தற்போது மீண்டும் மீளக் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.

குறிப்பாக இம்மாத முற்பகுதியில் இறுதியாக குடியமர்த்தப்பட்ட ஈரளற்குளம் கிராம சேவையாளர் பிரிவிலுள்ள கால் நடை உரிமையாளர்கள் இது தொடர்பாகப் பாதுகாப்பு அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு வந்ததையடுத்தே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் இன்று முதல் கைவிடப்பட்ட கால்நடைகளைத் தேடிக் கண்டுபிடிப்பதற்கான அனுமதியை ஈரளற்குளம் இராணுவ முகாம் பொறுப்பதிகாரி மேஜர் ரி.ஏ.விஜயவர்தன வழங்கியுள்ளார்.

அப்பகுதி கிராம சேவை அலுவலர் சின்னத்தம்பி வீரசிங்கம் தலைமையில் நடைபெற்ற கிராம அபிவிருத்திச் சங்க அங்குரார்ப்பணக் கூட்டத்தில் கலந்து கொண்ட போதே, இராணுவ முகாம் பொறுப்பதிகாரி இந்த அனுமதி பற்றி தெரிவித்தார். மிதி வெடி அகற்றப்பட்டுள்ளதை உறுதிபடுத்தி சான்றிதழ் கிடைத்த 13 இடங்களைக் குறிப்பிட்டு, அந்த இடங்களில் கால் நடைகளைத் தேடிச் செல்லவும் மேய்ச்சலுக்கு விடவும் அவர் அனுமதி வழங்கியுள்ளார்.

ஏனைய இடங்களில் மிதி வெடி அகற்றப்பட்டுள்ளமை தொடர்பான சான்றிதழ் கிடைத்த பின்னரே, அங்கு செல்வதற்கான அனுமதியும் கால் நடைகளை மேய்ச்சலுக்கு விட அனுமதியும் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து இன்று ஈரளற்குளம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட கால்நடை உரிமையாளர்கள், கைவிடப்பட்ட தமது கால்நடைகளைத் தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்
மேலும் இங்கே தொடர்க...
ஜப்பானில் எதிர்க்கட்சி அமோக வெற்றி : அதிக வாக்குகள் பெற்றுச் சாதனை


ஜப்பானில் நேற்று முன்தினம் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் அந்நாட்டு எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி தனிப் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று மகத்தான வெற்றியீட்டியுள்ளது.

இத்தேர்தலில் ஜனநாயகக் கட்சி 480 மொத்த ஆசனங்களில் 301 ஆசனங்களை வென்று சாதனை படைத்துள்ளதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஜப்பானில் நடந்த எந்தத் தேர்தல்களிலும் அந்நாட்டின் எந்தக் கட்சியும் தனிப் பெரும்பான்மையைப் பெறவில்லை. தற்போது முதல்முறையாக ஜனநாயக் கட்சி அந்த சாதனையை நிலைநாட்டியுள்ளது.

ஜனநாயகக் கட்சியின் இந்த வெற்றியை அடுத்து, ஜப்பானை 50 வருடங்களாக ஆண்டு வந்த லிபரல் கட்சி எதிர்க்கட்சியாக மாறியுள்ளது. இத்தேர்தலில் பிரதமர் ரரோ அசோ தலைமையிலான லிபரல் கட்சி 119 ஆசனங்களை மட்டுமே பெற்று படுதோல்வியடைந்தது.

தோல்வியை ஏற்றுக்கொண்ட பிரதமர் ரரோ அசோ பதவி விலகப் போவதாக அறிவித்துள்ளதுடன் ஜனநாயகக் கட்சியின் தலைவரான யுகியோ ஹடோயாமா புதிய பிரதமராகப் பதவியேற்கவுள்ளார்.

32 வயதான யுகியோ ஹடோயாமா தமது கட்சியின் வெற்றி குறித்து வானொலியில் உரையாற்றும்போது,

"முன்னைய அரசாங்கம் பின்பற்றிய கொள்கைகளை முற்றாக மாற்றப் போவதில்லை. எனினும் இக்கொள்கைகளை ஆராய்ந்து மக்களின் எதிர்பார்ப்பையும் தேவைகளையும் கருத்தில் கொண்டு அவற்றுள் சிலவற்றை மாற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" எனக் குறிப்பிட்டார்.

புதிய மக்கள் கட்சி மற்றும் சமூக ஜனநாயகக் கட்சி ஆகிய இரண்டு கட்சிகள் புதிய அரசாங்கத்துடன் இணைய விருப்பம் தெரிவித்துள்ளன. புதிய பிரதமர் இரு வாரங்களின் பின்னர் பதவியேற்கவுள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...
திஸ்ஸாநாயகத்தின் சிறைத்தண்டனை குறித்து அமெரிக்கா அதிருப்தி


ஊடகவியலாளர் திஸ்ஸாநாயகத்திற்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டமை தொடர்பில் தாம் அதிருப்தி கொண்டிருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ஏற்கனவே திஸ்ஸாநாயகத்தின் கைது தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கருத்துரைத்திருந்த நிலையிலேயே இந்த புதிய கருத்தை அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தின் பேச்சாளர் ரொபட் வூட் தெரிவித்துள்ளார்.

திஸ்ஸாநாயகத்திற்கு எதிரான தீர்ப்பு குறித்து அமெரிக்கா அதிருப்தி கொள்வதாகவும் தொடர்ந்தும் இலங்கையின் ஊடக சுதந்திரம் குறித்து கவனம் செலுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, ஊடகவிலாளர் திஸ்ஸாநாயகம் சிறைத் தண்டனைக்கு உட்பட்டிருக்கும் காலத்தில் அவருடைய உடல் நலன் பாதுகாப்பு தொடர்பில் இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் எனவும் ரொபட் வூட் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடந்த மே முதலாம் திகதி உலக பத்திரிகை சுதந்திர தினம் அனுஷ்டிக்கப்பட்ட வேளையில், அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா திஸ்ஸாநாயகத்தின் கைது குறித்துச் சுட்டிக்காட்டியிருந்தார். தமது பணிகளைச் செய்யும் போது குற்றவாளியாக்கப்பட்டுள்ள ஒருவருக்கு, திஸ்ஸாநாயகத்தை உதாரணம் காட்டிப் பேசியுமிருந்தா
மேலும் இங்கே தொடர்க...

சரணடைந்த, கைதான புலி உறுப்பினர்களின் புனர்வாழ்வு நடவடிக்கைக்கு

20 நிலையம்

வடக்கு, கிழக்கில் நிறுவ திட்டம்



புலிகள் இயக்கத்திலிருந்து பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்த மற்றும் மனிதாபிமான நடவடிக்கையின்போது கைது செய்யப்பட்டவர்களின் புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்கென 20 புனர்வாழ்வு நிலையங்கள் புதிதாக நிறுவப்படவுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் தயா ரத்னாயக்க நேற்றுத் தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கின் பல்வேறு பிரதேசங்களில் இந்த 20 புனர்வாழ்வு நிலையங்கள் நிறுவப்படவுள்ளன.

ஐநூறு பேர் வீதம் 20 நிலையங்களில் இவர்களுக்கு புனர்வாழ்வளிக்கப்படவுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விஷேட பணிப்பின் பேரில் தற்பொழுது பத்தாயிரம் பேருக்கும் உச்சகட்ட புனர்வாழ்வு வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். உறுப்பினர்களின் தனித்தனி விபரங்களை சேகரிக்கும் நடவடிக்கைகள் தற்பொழுது பூர்த்தி செய்யப்பட்டுள்ளது என்றும் இத ற்கு சுமார் மூன்று வாரங்கள் செலவிடப் பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

10 ஆயிரம் பேர்களில் 1777 பெண் உறுப்பினர்களும 565 பாடசாலை பருவ மாணவர்களும் அடங்குவர். இவர்களில் பாடசாலை செல்லும் வயதுடைய மாண வர்கள் தமது கற்றல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான சகல செயற்பாடுக ளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆணையாளர் தெரிவித்தார்.

தற்பொழுது 10 ஆயிரம் பேர்களும் 12 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவற்றில் நான்கு பாடசாலைகளாகும். இந்த பாடசாலைகளை கற்றல் நடவடி க்கைகளுக்காக வெகுவிரைவில் பொறு ப்புக் கொடுக்க வேண்டியுள்ளதால் தற்காலிகமாக 5 முகாம்கள் நிறுவப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடு பட்டு வந்த இவர்களது செயற்பாடுகளை யும், சிந்தனைகளையும் முழுமையாக மாற்றியமைத்து சமாதான சிந்தனையுடன் வாழ தேவையான வகையில் உச்சகட்ட புனர்வாழ்வு வழங்குவதே பிரதான நோக்கம் என்றும் மேஜர் ஜெனரல் தயா ரத்னாயக்க குறிப்பிட்டார்.

பெருந்தொகையானவர்களுக்கு இது போன்ற புனர்வாழ்வு வழங்கப்படுவது உலகிலேயே இதுவே முதற் தடவை என்று குறிப்பிட்ட அவர் பயங்கரவாதத்தை முறியடித்து அரசாங்கம் முன்னெடுத்து வரும் இதுபோன்ற திட்டங்களை பாரா ட்டும் வகையில் உலகின் பல நாடுகள், முன்னணி அமைப்புக்கள் ஒத்துழைப்புக் களை வழங்க முன்வந்துள்ளது என்றும் குறிப்பிட்டார்.

மேலும் இங்கே தொடர்க...