12 மே, 2010

இந்தியத் திரைப்பட விழாவில் அமிதாப் கலந்து கொள்ளமாட்டார்- சீமான்

இலங்கையில் நடைபெற உள்ள இந்தியத் திரைப்பட விழாவில் பிரபல ஹிந்தி நடிகர் அமிதாப் பச்சன் கலந்து கொள்ளமாட்டார் எள நாம் தமிழர் இயக்கத்தின் தலைவர் சீமான் தெரிவித்துள்ளார். இதேவேளை இத் திரைப்பட விழாவின் தூதர் பொறுப்பிலிருந்தும் அவர் விலகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜீன் மாதம் 2ஆம் திகதி முதல் 4ஆம் திகதி வரை கொழும்பில் சர்வதேச இந்தியத் திரைப்பட விழா நடைபெறவிருந்தது. இருப்பினும் இதற்கு எதிராக போராட்டத்தை நாம் தமிழர் இயக்கத்தின் தலைவர் சீமான் அமிதாப் பச்சனின் வீட்டுக்கு முன் மேற்கொண்டார்.

எனவே இப் போராட்டத்தின் பின்னே இந்தியத் திரைப்பட விழாவில் அமிதாப் கலந்து கொள்ளமாட்டார் என அமிதாப் பச்சன் முடிவு செய்ததாக சீமான் தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

ஒட்டுசுட்டானில் இன்று மீள்குடியேற்றம்வவுனியா நகர சபைக்குட்பட்ட ஒட்டுசுட்டான் பகுதியில் தற்போது மீள் குடியேற்ற நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக முல்லைத்தீவு மாவட்ட உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஸ்ரீரங்கன் எமது இணையத்தளத்திற்குத் தெரிவித்தார்.

150 குடும்பங்களைச் சேர்ந்த 486 குடும்பங்கள் மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்காக ஒட்டுசுட்டான் பிரதேசத்திற்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.

அதேவேளை, இவர்கள் அனைவரும் முதலில் ஒட்டுசுட்டான் மகா வித்தியாலயத்தில் 3 நாட்கள் தங்க வைக்கப்படுவர். பின்னர், வசதிகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டதும் அவர்களது சொந்த இடங்களில், மீள் குடியேற்றப்படுவர் என அவர் மேலும் தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்ட, ஒட்டுசுட்டான் அரசாங்க அதிபர் பிரிவுக்குட்பட்ட 4 இடங்களில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும் இவர்களுக்கான மேலதிக வசதிகளை அரசு சார்பற்ற நிறுவனங்கள் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.

இதுவரை முல்லைத்தீவு மாவட்டத்தில் துணுக்காய், ஒட்டுசுட்டான், மாந்தை கிழக்கு, மரக்காரம்பளை ஆகிய இடங்களைச் சேர்ந்த 11,999 குடும்பங்களின் 33,636 பேர் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்
மேலும் இங்கே தொடர்க...

டயனோசரஸ் பறவையின் எலும்பு கூடு கண்டுபிடிப்பு; விஞ்ஞானிகள் ஆய்வு

15 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த டயனோசரஸ் பறவையின் எலும்பு கூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த 150 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ராட்சத பறவையின் எலும்பு கூடு விஞ்ஞானிகளுக்கு கிடைத்தது. இங்கிலாந்து மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகள் அதை ஆய்வு செய்தனர். அது பாதி பறவையின் அமைப்பையும், பாதி டயனோசரஸ் உடல் அமைப்பையும் பெற்றுள்ளது.

இறக்கைகளின் எலும்புகளில் பாஸ்பரஸ், கந்தகம் போன்ற உலோக கலவைகள் உள்ளன. பறவையின் உடல் எலும்பில் காப்பர் மற்றும் துத்தநாகம் உலோக கலவைகள் உள்ளன. இதே போன்ற அமைப்புதான் தற்போதுள்ள சாதாரண பறவைகளிலும் உள்ளது.

இந்த எலும்பு கூட்டை வைத்து டயனோசரஸ் மற்றும் பறவைகளுக்கு இடையேயான உடல் அமைப்பு குறித்து ஆய்வு மேற் கொள்ளப்பட்டது. தற்போது எலும்புகள் பற்றி ஆராய்ச்சி நடைபெற்றுள்ளது. இது 15 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவை என கணக்கிடப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

லிபிய விமான விபத்தில் 8 வயது சிறுவன் உயிர்தப்பிய அதிசயம்!


லிபிய விமானம் ஒன்று டிரிபோலி விமான நிலையத்தில் இன்று விபத்துக்குள்ளானதில், 105 பேர் பலியாகினர் என்ற செய்தி வெளியானது. எனினும் விமானத்தில் பயணித்த 8 வயது சிறுவன் மட்டும் அதிசயமாக உயிர் பிழைத்துள்ளதாகச் சற்று முன்னர் கிடைத்த செய்தி தெரிவிக்கின்றது.

தென்னாப்பிரிக்காவின் ஜோன்ஸ்பெர்க் விமான நிலையத்தில் இருந்து உள்ளூர் நேரப்படி இன்று காலை 6.00 மணியளவில், 94 பயணிகள் மற்றும் 11 சிப்பந்திகளுடன், லிபியா நாட்டின் அஃப்ரிகுயா என்ற விமான நிறுவனத்தின் விமானம் ஒன்று, லிபியாவின் டிரிபோலி நகருக்கு வந்து கொண்டிருந்தது.

டிரிபோலி விமான நிலையத்தில் அந்த விமானம் தரையிறங்கும்போது, திடீரென நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானது.

விமானத்தில் பயணம் செய்த 105 பேரும் பலியானதாக முதலில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அந்த விமானத்தில் பயணித்த 8 வயது சிறுவன் ஒருவன் காயத்துடன் அதிசயமாக உயிர் பிழைத்துள்ளதாகவும், அருகிலுள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

விமானம் எதனால் விபத்துக்குள்ளானது என்பது குறித்த விவரம் இன்னமும் தெரிவிக்கப்படவில்லை
மேலும் இங்கே தொடர்க...

மேலதிக பாதுகாப்புடன் சரத் தொடர்ந்தும் இராணுவக் கட்டுப்பாட்டில் : நீதிமன்றம் உத்தரவு(பட இணைப்பு

இராணுவக் கட்டுப்பாட்டில் கடற்படைத் தலைமையகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவை இராணுவக் கட்டுப்பாட்டிலேயே மேலதிக பாதுகாப்புடன் தொடர்ந்தும் தடுத்து வைக்குமாறு கொழும்பு கோட்டை பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்தது.

இறுதிக்கட்ட மோதல் நடைபெற்றபோது வெள்ளைக் கொடியேந்தி வந்தவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளுமாறு பாதுகாப்புச் செயலர் உத்தரவிட்டதாகக் கூறப்படும் விடயம் தொடர்பில் ஜெனரல் சரத் பொன்சேகா ஊடகமொன்றுக்கு தகவல் வெளியிட்டிருந்தார்.

இது தொடர்பான விசாரணைகள் பிரதான நீதவான் சம்பா ஜானகி ராஜரட்ண முன்னிலையில் இன்று நடைபெற்றது.

இது நாட்டுக்கு பெரும் அபகீர்த்தியை ஏற்படுத்துவதாகக் குற்றம் சுமத்திய பாதுகாப்புத் தரப்பினர் சர்வதேசத்தின் மத்தியிலும் தமிழ் மக்கள் மத்தியிலும் கடும் எதிர்ப்பினை வெளிப்படுத்துவதாக அமைந்ததாகவும் மன்றில் சுட்டிக்காட்டினர். பிரதி சொலிசிட்டர் ஜெனரல் வசந்த நவரத்ன பண்டார இது தொடர்பான வாதத்தை முன்வைத்தார்.

சரத் பொன்சேகா சார்பில் மன்றில் வாதிட்ட சிரேஷ்ட சட்டத்தரணி நலீன் லத்துவஹெட்டி, பொன்சேகாவின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பு கருதி தொடர்ச்சியாக இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் வைக்கப் பணிக்குமாறு கோரினார்.

அதே கருத்தினை மனுதாரர்களும் முன்வைத்ததால், சிறைச்சாலையில் தடுத்துவைக்க முடியாத காரணத்தினால் ஜெனரல் சரத் பொன்சேகாவை இராணுவக் கட்டுப்பாட்டில் வைக்க உத்தரவிடுவதாகவும் அவரது பாதுகாப்பு தொடர்பில் இராணுவத்தினர் முழுக்கவனம் செலுத்த வேண்டும் எனவும் நீதவான் தெரிவித்தார்.

முன்னாள் இராணுவத் தளபதி என்ற வகையில் இந்த வழக்கினை விசேடமாகக் கொள்வதாகக் குறிப்பிட்ட நீதவான் எதிர்வரும் 26ஆம் திகதி வரை வழக்கை ஒத்திவைப்பதாகத் தெரிவித்தார்.

வழக்கு விசாரணைகளையொட்டி நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. நேற்றைய தினம் விசேட சோதனைகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

இரு யுவதிகள் மீட்பு : யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதி

வவுனியா நலன்புரி நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் யாழ். வந்த வேளை கடத்தப்பட்ட இளம் யுவதி ஒருவரும் வல்லைவெளியில் மீட்கப்பட்ட கரவெட்டியை சேர்ந்த இளம் யுவதியும் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வன்னியில் இருந்து வந்த யுவதி இனந்தெரியாத நபர்களால் கடத்தப்பட்டு பின்னர் வல்லைவெளி பிரதேசத்தில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்டார். பற்றைக்குள் மயக்கமுற்ற நிலையில் இருந்த இவரை அவதானித்த பிரதேசவாசிகள் பொலிஸாருக்கு அறிவித்தனர்.

இதனையடுத்து யுவதி மீட்கப்பட்டதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

யுவதியின் கழுத்தில் பல வெட்டுக்காயங்கள் காணப்படுவதாகவும் மேலதிக சிகிச்சைகளுக்காக இவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.

அதேவேளை, யாழ்ப்பாணத்தில் தொடர்ந்து இடம்பெறும் கடத்தல் சம்பவங்களினால் மேலதிக பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் யாழ். நகரில் இரவு, பகல் வேளைகளிலும் தொடர்ந்து ரோந்து நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபடுகின்றனர் எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

பார்வதி அம்மாள் வல்வை செல்கிறார் : சிவாஜிலிங்கம் தகவல்

பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளை வல்வெட்டித்துறைக்கு அழைத்துச் செல்லப் போவதாக சிவாஜிலிங்கம் எமது இணையத்தளத்திற்குத் தெரிவித்தார்.

அதேவேளை, இந்தியா வழங்கிய நிபந்தனையுடனான மருத்துவ உதவிகளை ஏற்றுக்கொள்ள பார்வதி அம்மாளின் இரு பிள்ளைகளும் விரும்பவில்லை என்றும் இதனால் அவரின் இந்திய மருத்துவ உதவி கைவிடப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

அத்துடன் தொடர்ந்தும் அவர் தனது கண்காணிப்பின் கீழ், வல்வெட்டித்துறை வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவார் எனவும் சிவாஜிலிங்கம் மேலும் தெரிவித்தார்.

நேற்றைய தினம் கொழும்பு வந்தடைந்த பார்வதி அம்மாள் கடந்த 10 வருடங்களாக பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

மீள்குடியேற்றத்தை விரைவில் செய்ய வேண்டும்- இந்தியா

வவுனியா முகாம்
வவூனியா முகாம்
இலங்கையில் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மீதமுள்ள தமிழர்களையும் தங்கள் சொந்த இடங்களுக்கு விரைவில் திருப்பியனுப்ப இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது.

இலங்கையில் அமைதி நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வது என்ற தலைப்பில், அப்ஸர்வர் ரிசர்ச் ஃபவுண்டேசன் சார்பில் புதுடெல்லியில் நடைபெற்ற கருத்தரங்கைத் துவக்கி வைத்துப் பேசும்போது, இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ் இந்தக் கருத்தை வெளியிட்டார்.

அதே நேரத்தில், இலங்கை மக்கள் எவ்வாறு ஒன்றுபட்டு வாழ்வது என்பதை அவர்களே பேசி முடிவு செய்துகொள்ள வேண்டும் என்பதை சர்வதேச சமூகம் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் நிருபமா ராவ் வலியுறுத்தினார்.

கூடுதல் உதவி


நிருபமா ராவ்
வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ்

மேலும், இலங்கையின் கட்டமைப்பை மேம்படுத்த இந்தியா அளித்துவரும் உதவிகள் குறித்து சுட்டிக்காட்டிய அவர், 500 கோடி ரூபாய் உதவித் திட்டத்தை முதலில் இந்தியா அறிவித்த பிறகு, 416 மில்லியன் அமெரிக்க டாலர் கடன் வழங்கியிருப்பதாகவும், மேலும் 382 மில்லியன் டாலர்கள் கடன் அடுத்து வழங்கப்பட இரு்பபதாகவும் தெரிவித்தார்.

இந்திய முறை சாத்தியமில்லை

அந்தக் கருத்தரங்கில் கலந்துகொண்ட இந்தியாவுக்கான இலங்கைத் தூதர் பிரசாத் காரியவசம், இந்தியாவைப் போன்ற ஆட்சி முறையை இலங்கையில் அமல்படுத்துவது சாத்தியமில்லை என்று தெரிவி்ததார்.

இலங்கைக்குப் பொருத்தமான வகையில், அதிகாரத்தைப் பகி்ர்ந்துகொள்ளும் வகையி்ல புதிய முறையை உருவாக்க வேண்டும். அந்த முறை தமிழர்கள், சிங்களர்கள், முஸ்லிம்கள் என அனைவருக்கும் கெளரவம் அளிக்கும் வகையிலும், சம உரிமை கொடுக்கும் வகையிலும் இருக்க வேண்டும் என்று இலங்கைத் தூதர் கூறினார்.

பின்னர் பிபிசி தமிழோசையிடம் பேசிய பிரசாத் காரியவசம்,
இலங்கையின் வடக்கே தமிழ் மக்களின் வீடுகள் மற்றும் நிலங்களை சிங்களர்கள் ஆக்கிரமித்திருப்பதாகக் கூறப்படும் புகார்களை முற்றிலுமாக நிராகரித்தார்.

இந்திய இலங்கை உடன்பாட்டின் மூலம் ஏற்படுத்தப்பட்ட 13வது அரசியல் சட்டத் திருத்தத்தைப் பொருத்தவரை, பெரும்பாலான அம்சங்கள் ஏற்கெனவே அமல்படுத்தப்பட்ட நிலையில், காவல்துறை, நிலம் உள்ளிட்டவற்றின் அதிகாரம் தொடர்பாக இன்னும் பேசி வருவதாகவும், வடக்கு, கிழக்கில் மாகாண கவுன்சில்கள் அமைக்கப்பட்டு, பொறுப்பான தலைவர்கள் வந்தால்தான் அதன்பிறகு மற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் உள்ள அரசியல் தலைவர்கள் சிலர், பிரச்சினையை அரசியலாக்காமல், சகஜநிலை மேம்பட உதவ வேண்டும் என்றும் பிரசாத் காரியவசம் வலியுறுத்தினார்.

கருத்தரங்கில் முன்னாள் அமைச்சர் பி.பி. தேவராஜ் உள்பட, .
இலங்கை, இந்தியா உள்பட பல நாடுகளில் இருந்து பிரதிநிதிகள் கலந்துகொண்டார்கள்.
மேலும் இங்கே தொடர்க...

கிளிநொச்சியின் 5 பிரதேசங்களில் 1838 பேர் நேற்று மீள்குடியேற்றம் முல்லையில் இன்று 479 பேர் குடியேற்றம்

வவுனியா நிவாரணக் கிராமங்களில் தங்க வைக்கப்பட்டிருந்த 578 குடும்பங்களைச் சேர்ந்த 1838 பேர் நேற்று (11) கிளிநொச்சி மாவட்டத்தின் 5 பிரதேசங்களில் மீள்குடியேற்றப்பட்டதாக கிளிநொச்சி மாவட்ட செயலகம் கூறியது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவில் இன்று (12) 155 குடும்பங்களைச் சேர்ந்த 479 பேர் மீள்குடியேற்றப்படவுள்ளதாக முல்லைத்தீவு அரச அதிபர் இமல்டா சுகுமார் கூறினார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் வன்னேரிக்குளம் அக்கராயன், கந்தபுரம், கண்ணகிபுரம் ஆனைவிழுந்தான் ஆகிய பகுதிகளிலே நேற்று 1838 பேர் மீள் குடியேற்றப்பட்டனர். இவர்கள் செட்டிக்குளம் நிவாரணக் கிராமத்திலிருந்து விசேட பஸ்கள் மூலம் கிளிநொச்சிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இதேவேளை இன்று (12) முல்லைத்தீவு மாவட்டத்தில், ஒட்டிச்சுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள 18 கிராமசேவகர் பிரிவுகளில 479 பேர் மீள்குடியேற்றப்படுகின்றனர்.

இதேவேளை சுமார் 35 ஆயிரம் பேரே தற்பொழுது வவுனியா நிவாரணக் கிராமங்களில் மீள்குடியேற்றத்துக்காக எஞ்சியுள்ளதாக வட மாகாண ஆளுநர் அலுவலகம் கூறியது. சுமார் 30 ஆயிரம் பேர் உறவினர்களுடன் தங்கியுள்ளனர். இவர்களும் துரிதமாக மீள்குடியேற்றப்பட உள்ளதாக அறிவிக்கப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...

ஊடகவியலாளருடன் நட்புறவைப் பேணி பணியாற்றுவதே எனது நோக்கம் அமைச்சர் கெஹலிய


ஓர் அமைச்சராக அல்லாமல் ஊடகவியலாளர்களுடன் சிறந்த நட்புறவைப் பேணி பணியாற்றுவதே எனது நோக்கமாகுமென்று தகவல் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

நாட்டை வெற்றியடையச் செய்யும் பயணத்தில் அனைவரும் ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டுமென்றும் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

லேக்ஹவுஸ் நிறுவனத்திற்கு நேற்று (11) விஜயம் செய்திருந்த அமைச்சர் ரம்புக்வெல்ல, நிறுவனத் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் பந்துல பத்மகுமார பதவியேற்ற நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். அமைச்சருடன் தகவல், ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் டபிள்யூ. பீ. கனேகலவும் கலந்து கொண்டார்.

நிறுவனத் தலைவர் பத்மகுமார, பணிப்பாளர் சபை உறுப்பினர்கள், பத்திரிகைகளின் ஆசிரியர்கள் உள்ளிட்டோர் மத்தியில் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அமைச்சர், ‘அமைச்சர், தலைவர் என்ற அடிப்படையில் அல்லாமல் சுமுகமான உறவைப் பேணி செயற்படவே விரும்புகிறேன். பெரிய அளவில் பிரச்சினைகளைத் தீர்ப்பதைவிட சுமுகமாகத் தீர்த்துவிடலாம்.

திறந்த மனசுடன் வெளிப்படையாகப் பணியாற்றுவதே எனது நோக்கம். நாட்டுக்கும் மக்களுக்கும் சேவையாற்றும் பாரிய பொறுப்பு நமக்குண்டு. அதனை உணர்ந்து அனைவரும் செயற்படவேண்டும். எவர் எதைச் செய்தாலும் இறுதியில் அனைத்துப் பொறுப்பும் அமைச்சரின் மீதுதான் சுமத்தப்படும்.

எனவே, புரிந்துணர்வுடன் செயற்பட்டால் நாம் நீண்ட தூரம் பயணிக்க முடியும். பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளராக இருந்தபோது நான் அதனைத் தொழிலாகவோ, கடமையாகவோ அன்றி எனக்குச் சரியெனப்பட்டதைச் செய்தேன். பயங்கரவாதம் நாட்டுக்குத் தீங்கானது என்பதை உணர்ந்து செயலாற்றினேன். அதனால் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானேன். ஆனால் ஈற்றில் நான் சொன்னதுதான் உண்மையானது” என்றும் அமைச்சர் ரம்புக்வெல்ல குறிப்பிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...

மக்களுக்கு சிறந்த சுகாதார சேவையை வழங்க துறைசார்ந்தோர் பாடுபட வேண்டும்


ஜனாதிபதிசுகாதாரத் துறையில் நிலவும் பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டு நாட்டு மக்களுக்கு சிறந்த சுகாதார சேவையை வழங்குவதற்கு துறை சார்ந்த சகலரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

பயங்கரவாதத்தை வெற்றி கொண்டது போல் ஆரோக்கியமான சமுதாயத்தைக் கட்டியெழுப்புவதிலும் நாம் வெற்றிகாண வேண்டியுள்ளது. எல்லாத் துறைகளிலும் பிரச்சினைகள் உள்ளன. பேச்சுவார்த்தை மூலம் அவற்றைத் தீர்க்க முடியும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

நாடு ஐக்கியப்படுத்தப்பட்டு எதிர்வரும் 19ம் திகதியோடு ஒரு வருடமாகிறது என்பதை நினைவு கூர்ந்த ஜனாதிபதி அதற்காக பாடுபட்ட படையினரை நன்றியோடு நினைவு கூருவதோடு, இது வடக்கு கிழக்கு மக்களின் அடிப்படை உரிமைகளைப் பெற்றுக் கொடுப்பதற்கான யுத்தமேயன்றி தமிழ் அல்லது முஸ்லிம் மக்களுக்கு எதிரான யுத்தமல்ல எனவும் குறிப்பிட்டார்.

சர்வதேச தாதியர் தின நிகழ்வு நேற்று அலரி மாளிகையில் நடைபெற்றது. வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் சகல பகுதிகளிலுமிருந்து தாதியர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர்கள் மைத்திரிபால சிறிசேன, பந்துல குணவர்தன, ராஜித சேனாரத்ன, பிரதியமைச்சர் மஹிந்த அமரவீர உட்பட சுகாதாரத் துறை முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது,

தாதி என்பது ஒரு தொழில் மட்டுமல்ல. அது ஒரு உன்னதமான சேவையாகும். நாட்டைப் பயங்கரவாதிகளிடமிருந்து மீட்க அர்ப்பணிப்புடன் செயற்பட்ட படை வீரர்களைப் போலவே தாதியரும் இரவு - பகல் என பாராது தமது சேவையை வழங்கினர்.

இதனால் அந்த வெற்றியில் இவர்களும் பங்காளியாகின்றனர்.

30 வருடத்திற்குப் பின்பு எம்மால் நாட்டிலிருந்து பயங்கரவாதத்தை ஒழிக்க முடிந்துள்ளது. தனி மனித வருமானத்தை 4000 ரூபாவாக அதிகரிப்பதே எமது நோக்கம் அதற்கு ஆரோக்கியமான மனிதர்கள் அவசியம்.

இன்றைய அவசர யுகத்தில் ‘பாஸ்ட் பூட்’ “பிஹஙூசி பிச்ச்னீ”கலாசாரம் மேலோங்கி நிற்கிறது. இதனால் ஆரோக்கியமென்பது கேள்விக்குறியாகியுள்ளது. நமது இளைய பரம்பரையினர் பல்வேறு நோய்களுக்குள்ளாகுவதற்கு இதுவே காரணமாகிறது.

எவ்வாறாயினும் இறுதியில் இத்தகைய சுமைகளையும் அரசாங்கமே சுமக்க வேண்டியுள்ளது.

கொழும்பு நகருக்கு வருபவர்களையும் அந்தந்த கிராமங்களில் வைத்தே முழுமையான சுகாதார சேவையை வழங்குவதற்கு இயலுமாக இருக்க வேண்டும். கிராமப்புறங்களில் ஆரோக்கியமான மனிதர்கள் உருவாக வேண்டும்.

நாட்டின் சுகாதாரத்துறை மேம்பாடடைந்துள்ளன. நவீன உபகரணங்களுடன் உலகில் சிறந்த சுகாதார பிரிவுகளும் எம்மிடமுண்டு.

மருத்துவத் தாதி சேவையைப் பொறுத்த வரை அதற்கென சமூகத்தில் ஒரு கெளரவமுண்டு. அதேவேளை அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் இத்தொழிலுக்கு அதிக கிராக்கி உள்ளது. அவ்வாறு வெளிநாடுகளுக்கு அவர்களை அனுப்பி அந்நிய செலாவணியைப் பெற்றுக் கொள்வதற்கும் சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

மத்திய மாகாண சபையில் ஐ.தே.க பிளவுபடும் நிலை தலைமை மீது உறுப்பினர்கள் சீற்றம்

மத்திய மாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவர் நியமனம் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சையால், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்குப் புதிய தலையிடி உருவாகியுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவராக கே. கே. பியதாசவை ரணில் விக்கிரமசிங்க நியமித்தமைக்கு எதிராக மத்திய மாகாண சபையின் ஐ. தே. க. உறுப்பினர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதனால், ஏற்பட்டுள்ள நிலைமையைச் சமாளிக்க முடியாமல் ரணில் விக்கிரமசிங்க திடீரென வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொண்டுள்ளதாக கட்சி உறுப்பினர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

மத்திய மாகாண சபை உறுப்பினர்களை கொழும்பு சிறிகொத்தா தலைமையகத்திற்கு வருமாறு அழைத்துவிட்டு அவர் வெளிநாடு பயணமாகி விட்டதால், கட்சி அங்கத்தவர்கள் மத்தியிலும், மாகாண சபை உறுப்பினர்களுக் கிடையிலும் கடும் அதிருப்தியான நிலை உருவாகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கி ன்றன. இவ்வாறான ஒருவரை எவ்வாறு தலைவராக ஏற்றுக் கொள்வது என்ற நிலை மத்திய மாகாண சபை உறுப்பினர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், பிரதித் தலைவர் கரு ஜயசூரியவும், பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்காவும் இப்பிரச்சினையை சமரசப்படுத்த மேற்கொண்ட முயற்சியும் பலனளிக்கவில்லை. பியதாசவை தலைவராக நியமித்ததாகவும் அதனை ஏற்றுக் கொள்ளுமாறு இவர்கள் கோரியதோடு தலைவரின் நிலைப்பாட்டை வலியுறுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த இழுபறி நிலை மத்திய மாகாண சபையின் ஐ. தே. க. உறுப்பினர்கள் மத்தியில் பெரும் பிளவை ஏற்படுத்தும் என்றும் கட்சி வட்டாரங்கள் குறிப்பிட்டன. ஐ. தே. க. தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க மத்திய மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவராக மாகாண சபை உறுப்பினர் கே. கே. பியதாசவை நியமித்த போதிலும் அதனை மாகாண சபை உறுப்பினர்கள் ஏற்றுக்கொள்ள மறுத்ததையடுத்தே இந்த இழுபறி நிலைமை ஏற்பட்டிருக்கின்றது.

இவ்வாறான நிலையில் மத்திய மாகாண சபைக்கு எதிர்க்கட்சி தலை வரை மாகாண சபையின் தலைவரே சிபார்சு செய்து ஏற்றுக் கொள்ளும் நிலைமை ஏற்பட்டிருப்பதாகவும் தெரி விக்கப்படுகின்றது
மேலும் இங்கே தொடர்க...

களனி விஹாரையில் கடத்தப்பட்ட குழந்தை மாரவிலயில் மீட்பு பின்னணியை கண்டறிய பொலிஸ் தீவிர விசாரணை


களனி விஹாரையில் ஞாயிறன்று வயதான பெண்மணியால் கடத்தப்பட்ட 2 1/2 வயது குழந்தை மாரவில பகுதியில் நேற்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய தெரிவித்தார்.

அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்கள் மிக பொறு ப்பாக செயற்பட்டதன் காரணமாகவும் பொலிஸாரின் தீவிர முயற்சியின் பயனாகவும் 48 மணி நேரத்துள் குழந்தையை மீட்க முடிந்தது என பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய நேற்று தெரிவித்தார்.

2 1/2 வயது செனுரி லிமன்சா மாபலகம என்ற குழந்தையும் அவரது பெற்றோரும் நேற்று பொலிஸ் தலைமையகத்துக்கு வரவழைக்கப்பட்டதுடன் ஊடகவியலாளர் சந்திப்பிலும் கலந்துகொண்டனர்.

குழந்தையை கடத்திச் சென்ற பெண் தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட மாரவில, மற்றும் கல்கிஸை பகுதி தொலைபேசி இலக்கங்கள் தொடர்பாகவும் கடத்தியதன் நோக்கம் தொடர்பாகவும் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய தெரிவித்தார்.

கடந்த ஞாயிறன்று களனி விஹாரையில் போதி பூஜைக்காக சென்றபோது குழந்தையை கடத்திச் சென்ற பெண், குழந்தையை விற்பதற்காக சென்றாரா அல்லது எவருடையதாவது தூண்டுதலின் பேரில் செய்தாரா என்பது பற்றி தீவிர விசாரணைகள் செய்யப்படுகின்றன.

தன்னுடன் விஹாரையில் போயா தின சில் அனுஷ்டானத்தில் ஈடுபடும் மற்றுமொரு பெண்ணின் வீட்டிலேயே ஞாயிறு இரவு குழந்தையுடன் தங்கியுள்ளார்.

மறுநாள் காலை களனி பட்டிய ஹந்திய எனும் இடத்திலுள்ள தொலைத்தொடர்பு நிலையமொன்றில் இரண்டு தொலைபேசி அழைப்புகளை எடுத்துள்ளார். இத்தொலைபேசி இலக்கங்களையும் பொலிஸார் பதிவு செய்துள்ளனர்.

மாரவில பகுதி வீடொன்றுக்குச் சென்ற பெண் குழந்தைக்கு ஒரு சோடி செருப்பு வேண்டும் என கேட்டுள்ளார். அந்த வீட்டிலிருந்த இளைஞனுக்கு பெண் தொடர்பாக சந்தேகம் எழுந்துள்ளதுடன் குழந்தை யார்? உங்களுக்கு எவ்வாறு கிடைத்தது எனக் கேட்டுள்ளார். எனக்கு தெரிந்த ஒருவர் குழந்தையை தந்தார் எனக் பெண் கூறியதும் சந்தேகம் வந்தவுடன் தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகளில் வெளியான குழந்தைதான் இது என ஊர்ஜிதம் செய்த பின் முச்சக்கர வண்டியொன்றின் மூலம் பெண்ணையும் குழந்தையையும் மாரவில பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.

மிகவும் பொறுப்புடன் செயற்பட்ட மேற்படி இளைஞனை பாராட்டியதுடன் பொலிஸ் திணைக்களம் அறிவித்த பரிசுத் தொகையையும் வழங்க நடவடிக்கை எடுப்பதாக பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.

கடந்தப்பட்ட குழந்தையின் பாட்டனார் நோய்வாய்ப்பட்டிருந்ததன் காரணமாகவே போதி பூஜை செய்வதற்கு களனி விஹாரைக்கு சென்றுள்ளனர். குழந்தை கடத்தப்பட்ட விடயம் கேள்வியுற்ற பாட்டனர் மரணமாகியதாகவும் பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.

தங்களது மகளை மீட்பதற்காக பூரண ஒத்துழைப்பை வழங்கிய ஊடகங்களுக்கும், குழந்தையை மீட்க உடனடியாக செயற்பட்ட மாரவில இளைஞருக்கும் பொலிஸாருக்கும் பெற்றோர் நன்றிகளை பொலிஸ் தலைமையகத்தில் வைத்து தெரிவித்துக் கொண்டனர்.
மேலும் இங்கே தொடர்க...