8 அக்டோபர், 2010

நல்லிணக்க ஆணைக்குழு மட்டக்களப்பில் நாளை சாட்சியங்களை பதிவு செய்யும்



கற்றுக் கொண்டபாடங்களும் நல்லிணக்கமும் பற்றிய ஆணைக்குழு மட்டக்களப்பில் எதிர்வரும் 09,10,11ம் நாட்களில் சாட்சியங்களைப் பதிவு செய்யவிருப்பதாக அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட ஊடகப் பிரிவு தகவல் தெரிவிக்கின்றது. இதற்கான ஏற்பாடுகளை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் மேற்கொண்டுள்ளார்.

இதன்படி இந்த ஆணைக்குழு நாளை முற்பகல் 9 மணி தொடக்கம் பிற்பகல் 12.30 மணி வரையில் மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்திலும், நாளை மறுதினம் 10ஆம் திகதியும் முற்பகல் 9 மணி தொடக்கம் நன்பகல் 12.00மணி வரையில் ஓட்டமாவடிப் பிரதேச செயலகத்திலும், திங்கள் அன்று 11ம் திகதி முற்பகல் 08.30 மணி தொடக்கம் பிற்பகல் 11.30 மணி வரையில் செங்கலடி பிரதேச செயலகத்திலும், சாட்சியங்களைப் பதிவு செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதே வேளை 11ஆம் திகதி திங்கட்கிழமை இந்த ஆணைக்குழு களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்தில் சாட்சியங்களை பதிவு செய்ய ஏற்கனவே திட்டமிட்டிருந்த போதிலும் தற்பொழுது அது இரத்துச் செய்யப்பட்டு அப்பிரதேசத்திற்கான சாட்சியங்களை மட்டக்களப்பு மாவட்டச் செயலகம், ஓட்டமாவடி, செங்கலடி பிரதேச செயலகங்களில் நடைபெறும் அமர்வுகளில் பதிவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆணைக்குழு இலங்கை மக்களிடையே சமாதானத்தையும், இணக்கப்பாட்டையும் மேம்படுத்தும் நோக்கில் 2002.02.21ஆம் திகதிக்கும் 2009.5.19ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் இடம்பெற்ற பின்வரும் விடயங்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கையிடுவதற்காக விசாரணை ஆணைக்குழுக்கள் சட்டத்தின் பிரிவு 2இன் கீழ் ஜனாதிபதியால் கற்றுக்கொண்ட பாடங்களும் நல்லிணக்கமும் பற்றிய ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.

இந்த ஆணைக்குழு போர்நிறுத்த உடன்படிக்கை தோல்வியில் முடிவடையத் தூண்டுதலளித்த காரணிகளும் அதனைத் தொடர்ந்து இடம் பெற்ற நிகழ்வுகளும், ஆளவரும், குழுவெதுவும் அல்லது நிறுவனமெதுவும் நேரடியாக அல்லது மறைமுகமாக போர் நிறுத்த உடன்படிக்கை செயலிழப்பதற்குப் பொறுப்பு வகிக்கின்றதா?

மற்றும் அத்தகைய சம்பவங்கள் மீண்டும் இடம்பெறாதிருப்பதை உறுதிசெய்து கொள்வதற்காக அத்தகைய நிகழ்வுகளிலிருந்து நாம் கற்றுக் கொள்ளக் கூடிய பாடங்கள், சுபீட்சமும், இணக்கப்பாடும,; அமைதி நிலையும் குடி கொண்ட யுகமொன்றைத் தோற்றுவிக்குமுகமாக இலங்யையின் இனப்பிரிவுகளுக்கு இடையில் தேசிய ஐக்கியத்தையும் நல்லிணக்கத்தினையும் மேம்படுத்துவதற்கான முன்மொழிவுகள்.

என்பவற்றை பொதுவான இலக்குகளை எய்துவதற்கு அவசியமாகின்ற அத்தகைய உதவிகளையும் தகவல்களையும் வழங்குமாறு நாட்டு நலனை எதிர்பார்க்கும் சகல மக்கள் நலன் விரும்பிகளிடம் வேண்டப்பட்டதற்கமைய இந்த ஆணைக்குழு முறைப்பாடுகளை பதிவு செய்யவுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

புகலிடம் கோருவோர் குறித்துப் புதிய சட்டவிதிகள் : கனடா அறிவிப்பு

கனடாவில் புகலிடம் கோரும் அகதிகள் தொடர்பில் கனேடிய அரசாங்கம் புதிய சட்டவிதிகளை பின்பற்றவுள்ளதாக அறிவித்துள்ளது.

புகலிடம் கோரி சட்ட விரோத கப்பல்கள் அண்மைக் காலமாக கனடாவை நோக்கிப் பயணித்து வருகின்றன. இதனால் பல சட்டவிரோத செயல்களும் அதிகரிக்கக் காரணமாக அமைந்துள்ளதாக கனேடிய அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

அகதிகள் தொடர்பில் சட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு, அவை கடுமையாக நடைமுறைப்படுத்தப்படுமென அந்நாட்டின் பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 492 பயணிகளுடன் எம்.வி சன் சீ கப்பல் கனடாவை வந்தடைந்தது. 2009 ஆம் ஆண்டு சட்ட விரோதமாகக் கனடாவுக்குச் சென்ற 76 பேர் கைது செய்யப்பட்டனர்.

கனடாவில் புகலிடம் கோரும் இலங்கையர்களில் விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்களும் உள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. விடுதலைப்புலிகள் அமைப்பை பயங்கரவாத சட்டத்துக்கமைய கனடா தடை செய்திருந்தது.

இலங்கை அகதிகளுடன் மற்றும் ஒரு கப்பல் கனடாவுக்குச் செல்ல இருப்பதாக கனேடிய இணையத்தளம் செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

பொன்சேகாவை விடுதலை செய்யக் கோரி புத்தளத்தில் மகஜரில் கையெழுத்து இடும் நிகழ்வு

இராணுவ நீதிமன்றத்தினால் தண்டனை விதிக்கப்பட்டு சிறைத்தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் இராணுவத் தளபதியும் பாராளுமன்ற உறுப்பினரும், ஜனநாயக தேசிய முன்னணியின் தலைவருமான சரத் பொன்சேகாவை விடுதலை செய்யக் கோரும் மகஜரில் கையெழுத்திடும் நிகழ்வு இன்று காலை புத்தளம் பஸ் நிலையம் அருகில் இடம்பெற்றது.

முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினரும், புத்தளம் மாவட்ட மக்கள் விடுதலை முன்னணியின் அமைப்பாளருமான சமன் புஷ்பகுமார தலைமையிலான குழு இந்த ஏற்பாட்டை மேற்கொண்டது.

இந்நிகழ்வில் அதிகமான மக்கள் கலந்து கொண்டு இம் மகஜரில் கையெழுத்திட்டனர்.
மேலும் இங்கே தொடர்க...

பிரிட்டனில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இந்தியர்கள் உள்பட 7 பேர் கைது

http://www.hotfrog.in/Uploads/PressReleases/Spouse-Visa-for-UK-under-Tier-4-full-time-work-visa-80670_thumb.jpg

பிரிட்டனில் சட்டவிரோதமாக தங்கி பணியாற்றிய இந்தியா மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுற்றுலா விசாவில் பிரிட்டனுக்கு வந்து விட்டு, நிரந்தரமாக பலர் தங்கி விடுவதாக அந்நாட்டு குடியேற்றத் துறையினருக்கு புகார்கள் வந்தன. இதனையடுத்து பிராட்போர்டு நகரில் உள்ள பல இடங்களில் அந்நாட்டு குடியேற்றத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

அங்குள்ள உணவு விடுதியில் சோதனை நடத்தியபோது இந்தியா மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த 7 பேர் அங்கு சட்டவிரோதமாக தங்கி இருந்தது தெரியவந்தது.

பிரிட்டனுக்கு சுற்றுலா விசாவில் வந்த அவர்கள், தங்கி இருக்க வழங்கப்பட்ட அனுமதி காலம் முடிந்த பின்னரும் தொடர்ந்து அங்கு தங்கி பணியாற்றி வந்ததும் தெரியவந்தது. அவர்களுக்கு வயது 21 இருந்து 42 வயது வரை இருக்கும்.

அவர்கள் 7 பேரையும் பிரிட்டன் போலீஸக்ஷ்ர் கைது செய்துள்ளனர். அவர்களை சட்டவிரோதமாக தங்கவைத்திருந்த உணவு விடுதி உரிமையாளருக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. நாட்டில் சட்டவிரோதமாக தங்க எவரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். இதுபோன்றவர்கள் மீது உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

முத்தேவியரும் அருள்பாலிக்கும் நவராத்திரி விழா

உற்றார் உறவினர்கள்
என் உற்றவர் அல்லர் தாயே
உன்னை அல்லாது மற்றார்
யாரும் துணையில்லையே! - சுவாமி கெங்காதரானந்தா

கொழும்பு மாநகரின் தெஹிவளையில் அருளாட்சி செய்யும் ஸ்ரீ ஆஞ்சநேயர் ஆலயத்தில் அமர்ந்து அருட்சக்தியாக கருணையுடன் அருளை வாரிவழங்கும் முத்தேவியருக்கும் இந்நவராத்திரி பூஜைகள் நடைபெறும்.

ஸ்ரீ துர்க்கா, ஸ்ரீ இலட்சுமி, ஸ்ரீ சரஸ்வதி ஆகியோருக்கு ஸ்ரீ ஆஞ்சநேய ஆலய ஸ்தாபகரான ஸ்ரீமத் சந்திரசேகர சுவாமிகள் தலைமையில் 9 தினங்களும் சிறப்பான மந்திர உச்சாடனங்களுடன் தூப தீப ஆராதனைகள் நடைபெற்று 10ஆம் நாள் விஜயதசமி அன்று முத்தேவியரின் நகர்வலம் நடைபெற அம்பாளினதும் ஸ்ரீ ஆஞ்சநேயப் பெருமானதும் சித்தம் கைகூடியுள்ளது.

ஸ்ரீ துர்க்காதேவி – புகழ், உயர்வு, மங்களம், சுகம் மோட்சம் ஆகியவற்றை அருள்பவள்.

ஸ்ரீ லட்சுமி தேவி – அமைதி, அழகு, ஒளி, சாந்தி ஆகியவற்றை அருள்பவள். அவள் மகா விஷ்ணுவின் பத்தினி, அஷ்டலஷ்மியாகவும், திருமாலின் இடம் பொருள் அறிந்து உரையாடுபவள்.

ஸ்ரீ சரஸ்வதி தேவி - சகல வித்தைகளுக்கும் அதிபதியாய் விளங்கி வாக்கு, அறிவு, ஞானம் ஆகியவற்றை அருளி சந்தேகங்களை நீக்கக் கூடிய வடிவமாகவும், இசை நாதத்தில் மூழ்கி மக்களின் கவலைகளை கல்விஞானத்தின் மூலம் நீக்குபவள்.

ஸ்ரீ ராமகிருஷ்ணபரம்மஹம்ஸர் ஸ்ரீ காளி தேவியை வணங்கி அருள்பெற்றவர் நிலையில்லா மின்னல் போல் தோன்றி இடர் அகற்றுபவள் ஸ்ரீ காளி. பூமாதேவி, கங்காதேவி ஆகிய பல அம்சங்களைத் தாங்கி உலக இயக்கத்தை நிறைவேற்றிக்கொண்டு இருக்கின்றார்கள்.

பொறுமையுடன் சில நிமிடங்களேனும் அகக்கண்ணால் தியானித்தால் பல நன்மைகளைப் பெறலாம். பலவித முன்னேற்றம் கண்ட மனிதன் இன்றும் மனிதனாக வாழ்கின்றானா என்பது கேள்விக்குறி?

நவராத்திரி பூஜை புரட்டாதி மாதத்தில் வளர்பிறை பிரதமை முதல் நவமி வரை ஒன்பது நாளும் கைக்கொள்ளப்படுகின்றது. மகா சங்கார (பேரழிவுக்) காலத்தின் முடிவில் இறைவன் உலகத்தை உண்டாக்க விரும்புகின்றான்.

உலகைப் படைத்த இறைவன்

அப்போது இச்சை என்ற சக்தி தோன்றுகின்றது. பின் அதை எவ்வாறு என்று அறிகின்றான். அப்போது ஞானசக்தி தோன்றுகின்றது. பின் கிரியா சக்தியினால் உலகைப் படைக்கின்றான்.

இக்கருத்தையே நவராத்திரி விழா விளங்கப்படுத்துகின்றது. (இச்சை - விருப்பம், ஞானம் - அறிவு, கிரியா – செய்தல், ஆக்கல்).

பிரபஞ்சவுற்பத்திக்கு காரணமான இறைவன் அனேக மூர்த்தங்களின் உருவமாகவும் அருவமாகவும் அருவுருவமாகவும் விளங்கிய போதிலும் அவையனைத்தையும் ஒன்றாக்கித் தாயான ஸ்வரூபத்தில் வழிபடுதல்தான் பெரும்பயனைத் தருமென பிரபஞ்சவுற்பத்தி எனும் நூல் கூறுகின்றது.

பரப்பிரம்மத்தையே பராசக்தி அன்பினால் கட்டுப்படுத்தியுள்ளாள் என்பதை உலகைப் படைக்கும் பிரம்மாவையும், காக்கும் விஷ்ணுவையும் அழிக்கும் உருத்திரனையும் இவர்கட்கு மேலாகவிருக்கும் ஈஸ்வரனையும் தனக்குள் மறையும்படி செய்து மீண்டும் அவர்களை வெளிப்படுத்தி அவர்களது தத்துவார்த்தங்களை அவர்கள் மூலமாகவே இயற்றுவிக்கிறாள்.

துர்காம்பிகை -இலக்குமி,சரஸ்வதி, பார்வதி,லலிதா என்று எல்லாமாயிருக்கும் தெய்வங்களது தத்துவார்த்தமாக உபாசிப்பதற்கு சகல யோக்கியங்களும் உண்டென்றும், அவையாவும் அதற்குத் துணைநிற்குமெனவும் வித்யாரண்யர் விளக்கியுள்ளார்.

ஆன்மாவை இறைவன்பால் வழிப்படுத்த திருவருள்தான் துணை நிற்கின்றது. இந்தத் திருவருட் சக்திதான் சித் சக்தி, பராசக்தி, ஆதிபராசக்தி எனப்படுகின்றது. இதில் ஆதிபராசக்தி தான் துர்க்கையாகும்.

குழந்தைகளுக்குக் கல்விபுகட்டி நாடும், உலகமும் நலம்பெற ஏதுவாக வாழ்வோமாக
மேலும் இங்கே தொடர்க...

சரத் பொன்சேகா சங்கடத்தில் வீழ்வதற்கு எதிர்க்கட்சிகளும் அமெ.தூதரகமுமே காரணம்:விமல் வீரவன்ச

எதிர்க்கட்சி அரசியல்வாதிகளும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகத்தின் அதிகாரிகளுமே முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை சங்கடத்தில் தள்ளியுள்ளனர். இவர்களது பேச்சினை இனியும் கேட்டுக் கொண்டிருக்காது அனோமா ஜனாதிபதியிடம் மன்னிப்புக் கோருவதன் மூலமே தனது கணவரை விடுவித்துக் கொள்ள முடியும் என்று அமைச்சர் விமல் வீரவங்ச நேற்று சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் கூறுகையில்,

சரத் பொன்சேகா என்பவருக்கு செல்யூட் அடிக்கவும் செல்யூட் வாங்கவும் மாத்திரமே தெரியும். அவருக்கு அரசியல் தெரியாது. இருந்தும் யுத்தம் தொடர்பில் நன்கு தெரியும். ஆனாலும் அரசியல் தெரியாத ஒருவரை கொண்டுவந்து எதிர்க்கட்சிகளைச் சார்ந்தவர்கள் இவ்வாறான சங்கடத்தில் தள்ளிவிட்டுள்ளனர். இதற்கு இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகத்தின் அதிகாரிகளும் உதவி புரிந்தனர்.

சரத் பொன்சேகாவை நினைக்கும் போது எனக்கும் கவலையாக இருக்கின்றது. எது எவ்வாறு இருப்பினும் இராணுவ நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு முப்படைகளின் தளபதி என்ற வகையில் ஜனாதிபதியினால் அதற்கு ஒப்புதல் அளிக்காதிருக்க முடியாது.

இராணுவ நீதிமன்றத்தின்மூலம் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள சரத்பொன்சேகா விடுவிக்கப்பட வேண்டும் என்றாலோ அல்லது தனது கணவர் தனக்கு வேண்டும் என்றாலோ அனோமா பொன்சேகா ஜனாதிபதியிடம் மன்னிப்புக் கோர வேண்டும். எதிர்க்கட்சியினரின் பேச்சினைக் கேட்டு மன்னிப்புக் கோராதிருப்பதில் பலன் ஏதும் கிட்டப்போவதில்லை.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தனது கணவர் விஜய குமாரதுங்க சிறையில் இருந்த சமயத்தில் அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவிடம் மன்னிப்பு வழங்குமாறு கோரியதையடுத்தே அவருக்கு மன்னிப்பு வழங்கப்பட்டது. அனோமாவுக்கு தனது கணவர் வேண்டுமென்றால் மன்னிப்புக் கோருவதைத் தவிர வேறு வழி கிடையாது. வீதி வீதியாக அலைவதில் நன்மையில்லை.

சரத் பொன்சேகா சிறையில் இருக்க வேண்டியவர் அல்ல. அவர் வெளியில் இருக்க வேண்டும் என்றே நாமும் விரும்புகிறோம். ஆனாலும் அவர் வெளியில் வருவதை எதிர்க்கட்சியினர் விரும்பவில்லை. இதனாலேயே பொன்சேகா மன்னிப்புக் கேட்கக் கூடாது என்று அனோமா ஊடாக தூண்டி விடுகின்றனர். பொன்சேகாவின் குடும்பத்தில் இருந்து எதிர்க்கட்சிகள் அரசியல் இலாபம் தேட முயற்சிக்க வேண்டாம் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

கியூப பிரஜைகளை விடுவிக்கக் கோரி அமெ.தூதரகம் முன் ஆர்ப்பாட்டம்

கியூப பிரஜைகள் ஐவரை சிறை வைத்திருக்கும் அமெரிக்கா அவர்களை உடனடியாக விடுவிக்கக் கோரி கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் முன்பாக தேசிய சுதந்திர முன்னணி இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியது.

அமைச்சர் விமல் வீரவன்சவுடன் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பான மனுவொன்றை அமெரிக்கத் தூதருக்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் கையளிக்க முயற்சி செய்தபோதும் அது வெற்றியளிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...

கனடாவை நோக்கி மற்றுமொரு அகதிகள் கப்பல்?


கனடாவை நோக்கி மற்றுமொரு அகதிகள் கப்பல் வரும் வாய்ப்பு அதிகமுள்ளதாக, செய்திகள் வெளியாகி உள்ளன பனிக்காலம் தொடங்கவுள்ள நிலையில், அதற்கு முன்னர் இந்த கப்பல் வரலாம் என கனேடிய அதிகாரிகள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளதென தெரிய வருகின்றது

இதனையடுத்து கனேடிய பொலிஸாரும், இராணுவத்தினரும் இணைந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வதாகவும், அதி நவீன கடலாய்வு கருவிகளை கொண்டு, இலங்கை அகதிகளுடனான கப்பல்கள் கனடா நோக்கி வருகின்றனவா? என்பது குறித்து தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டிருப்பதாகவும் தெரிவிக்கபப்டுகிறது.

ஆட்கடத்தல் காரர்கள் இன்னும் இரண்டு வார காலப்பகுதியினுள், கனடாவுக்கு ஒரு கப்பல் வரும் என முன்னெச்சரிக்கை தகவல் விடுத்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.

இதற்கிடையில் கனேடிய வெளியுறவு துறை அமைச்சின் பேச்சாளர் லோரா மார்கேய்ஸ், இத்தகவல் தொடர்பில் ஆராய்ந்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
எனினும் எவ்வித தகவலையும் தற்போதைக்கு வெளியிட முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் இது ஒரு சாதாரண தகவலாக மாத்திரம் கூட இருக்கலாம் எனினும், தொடர்ந்தும் எச்சரிக்கையுடன் இருப்பதாக காவற்துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.

கனடாவில் 2010 ம் ஆண்டு, முற்பகுதியில் கனடாவுக்குள் நுழைந்த 85.2 சதவீதமானோருக்கு கனடா அகதி அந்தஸ்த்து வழங்கியிருப்பதாக அண்மையில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் இங்கே தொடர்க...

பொன்சேகா கோரிக்கை வைத்தால் விடுவிக்க தயார்: ராஜபக்ஷே பேட்டி




"சரத் பொன்சேகாவை விடுவிக்க வேண்டும் என சிலர் கூறி வருகின்றனர். பொன்சேகாவோ அல்லது அவரது குடும்பத்தினரோ கோரிக்கை விடுத்தால் மட்டுமே இதுகுறித்து பரிசீலிக்கப்படும்' என, இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ஷே கூறியுள்ளார்.

இலங்கை அதிபர் ராஜபக்ஷே, பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டி:இலங்கை ராணுவ முன்னாள் தளபதி சரத் பொன்சேகாவுக்கு, ராணுவ தளவாடங்கள் வாங்கியதில் முறைகேடு செய்த குற்றத்துக்காக 30 மாத சிறைத் தண்டனை விதித்து, ராணுவ கோர்ட் தீர்ப்பளித்தது. தற்போது அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை விடுதலை செய்ய வேண்டும் என சிலர் கூறி வருகின்றனர். பொன்சேகாவோ அல்லது அவரது குடும்ப உறுப்பினர்களில் யாராவது ஒருவரோ, அரசுக்கு வேண்டுகோள் விடுத்தால் மட்டுமே இது குறித்து பரிசீலிக்கப்படும்.

இதில், விதிமுறைகள் முறையாக கடைப்பிடிக்கப்படும்.கடந்த 1980ல் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்காவின் கணவர் விஜய குமாரதுங்கா, நக்சலைட் நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக, அவசர சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். இதன்பின், அவரது மனைவி வேண்டுகோள் விடுத்ததால், அவர் விடுவிக்கப்பட்டார். இந்த சம்பவத்தை தற்போது நினைவுபடுத்த விரும்புகிறேன்.இவ்வாறு ராஜபக்ஷே கூறியுள்ளார்.ஆனால், பொன்சேகாவின் மனைவி அனோமா, தனது கணவரை விடுவிக்கக்கோரி, அதிபரிடம் வேண்டுகோள் வைக்க போவது இல்லை என, ஏற்கனவே அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

டூடில் கம்பனியின் 51வீத பங்குகள் அரசு கொள்வனவு ஷெல் டேர்மினல் லிமிட்டட்டின் 100 பங்குகளும் அரசிடம்



ஷெல் லங்கா காஸ் கம்பனியின் 51 வீத பங்குகளை 63 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு இலங்கை அரசு கொள்வனவு செய்துள்ளது. அமைச்சரவை இதற்கு அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவையின் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல நேற்று தெரிவித்தார்.

ஷெல் காஸ் கம்பனியின் 51 வீத பங்குகளையும், ஷெல் டேர்மினல் லங்கா லிமிட்டட்டின் 100 வீத பங்குகளையும் இலங்கை அரசு வாங்கி யுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஷெல் லங்கா காஸ் கம்பனியின் தாய் நிறுவனம் தமது வர்த்தக நடவடிக்கை களை மறுசீரமைக்கும் நோக்குடன் இலங்கையி லிருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளது.

இதன்படி ஷெல் லங்கா காஸ் கம்பனி யின் 51 வீத பங்குகளை யும், ஷெல் லங்கா டேர்மினல் கம்பனியின் முழு பங்குகளையும் கொள்முதல் செய்வதற்கு பிரதமரின் செயலாளரின் தலைமையிலான குழுவொன்றை அரசாங்கம் நியமித்தது.

ஷெல் கம்பனியின் மூலதனமாக 37.9 மில்லியன் டொலர்களாகவே இருந்தது. களஞ்சிய வசதிகளுக்காக கம்பனி 65 மில்லியன் டொலர் களை செலவு செய்து ள்ளது. உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படு த்துவதற்காக 24 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலவு செய்துள்ளது.

இதன்படி ஷெல் கம்பனிக்குரிய பங்குகளை 63 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி 51 வீத பங்குகளை அரசுடமை யாவதுடன் எஞ்சிய 49 வீத பங்குகள் பொது மக்களுக்கு விற்கப்படும் என்றும் அரசு முடிவு செய்துள்ளது. அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்து வதில்லை என்ற அரசின் கொள்கையிலிருந்து சற்றும் விலகாமல் அதனைவிட சற்று முன்னேறிச் சென்று தனியாரின் கட்டுப் பாட்டிலிருந்த நிறுவனத்தின் பங்குகளை அரசு கொள்வனவு செய்துள்ளது.

ஷெல் காஸ் விலை நிர்ணய விடய த்தில் இதுவரைகாலம் இருந்து வந்த நுகர்வோர் அதிகார சபைக்கும் ஷெல் கம்பனிக்குமிடையிலான இழுபறி நிலை இனிமேல் ஏற்படாது என்பதுடன், பாவனையாளர்களுக்கு நியாயமான விலைக்கு சமையல் எரிவாயுவை வழங்க முடியும் என்றும் குறிப்பிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...

சர்வதேச மட்டத்தில் அரசுக்கு அபகீர்த்தி ஏற்படுத்துவதே ஐ.தே.கவின் நோக்கம் நம்பிக்கையில்லா பிரேரணை விவாதத்தில் அமைச்சர் மைத்திரி




சர்வதேச மட்டத்தில் அரசாங்கத்தின் மீது சேறு பூசவதையும், அபகீர்த்தியை ஏற்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுதான் வெளிவிவகார அமைச்சருக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சியினர் நம்பிக்கையில்லா பிரேரணையைக் கொண்டு வந்துள்ளனர் என்று சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

வெளிவிவகார அமைச்சருக்கு எதிராக ஐ.தே.க.வினர் முன்வைத்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில் தெரிவிக்கப்பட்டி ருக்கும் சகல குற்றச் சாட்டுக்களை யும் நாம் நிராகரிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க.வினர் சபைக்குக் கொண்டு வந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்தை ஆளும் தரப்பில் தொடக்கி வைத்து உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான்கீ மூன் இலங்கை விவகாரம் தொடர்பாக தமக்கு ஆலோசனை வழங்கவென நிபுணர் குழுவை நியமிப்பதைத் தவிர்ப்பதற்கும், ஜி.எஸ். பி. பிளஸ் நிவாரணம் தொடர்ந்தும் கிடைப்பதற்கு வழி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கவும் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தவறியுள்ளார்.

அதனால், அவர் அமைச்சராக தொடர்ந்து செயலாற்றுவதில் இச்சபை நம்பிக்கை இழந்துள்ளதெனக் குறிப்பிட்டு ஐ.தே.க. எம்.பிக்களான ஜோன் அமரதுங்க, ரவி கருணாநாயக்க, லக்ஷ்மன் கிரியெல்ல, விஜயதாச ராஜபக்ஷ ஆகியோர் கையெழுத்திட்டு இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையைச் சபைக்குக் கொண்டு வந்திருந்தனர்.

இப்பிரேரணை மீதான விவாதத்தில் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தொடர்ந்தும் உரையாற்றுகையில், அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் வெளிவிவகார அமைச்சராகப் பதவி ஏற்று ஆறுமாதங்கள் கூட நிறைவுறவில்லை.

அதற்கிடையில் பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க.வினர் அவருக்கு எதிராக நம்பிக்கை இல்லாப் பிரேரணையைக் கொண்டு வந்துள்ளனர். இது நாட்டின் மீதுள்ள பற்றினால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை அல்ல. இது உள்நோக்கத்துடன் வெளிநாடுக்கு காண்பிப்பதற்காகக் கொண்டு வரப்பட்டிருக்கும் ஒரு பிரேரணையாகும்.

கல்வி அமைச்சருக்கு எதிராகவோ, சுகாதார அமைச்சருக்கு எதிராகவோ அல்லது வேறு அமைச்சர் ஒருவருக்கு எதிராகவோ நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வந்திருக்கலாம்.

அதனை அவர்கள் செய்யவில்லை. ஏனென்றால் வெளி விவகார அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை என்றால் தான் சர்வதேச மட்டத்தில் அது பேசும் பொருளாக மாறும் அதன் மூலம் சர்வதேச மட்டத்தில் அற்ப இலாபம் பெற்றுக் கொள்ளலாம் என அவர்கள் எதிர்பார்க்கின்றனர். அரசுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்த முயற்சி செய்கின்றனர். இது தூர நோக்கற்ற முறையில் கொண்டு வரப்பட்டிருக்கும் பிரேரணையாகும்.

இப்பிரேரணை மீதான வாக்கெடுப்பில் இப் பிரேரணை படுதோல்வி அடைவதுடன், தேசிய மட்டத்திலும், சர்வதேச மட்டத்திலும், அடைந்து கொள்ள, ஐ.தே.க. எதிர்பார்த்திருக்கும் எதிர்பார்ப்புகள் தவிடுபொடியாகிவிடும். ஐ.தே.க. மீது நாட்டு மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர். கட்சிக்குள் உருவாகியுள்ள நெருக்கடியைக் கூட தீர்த்துக் கொள்ள முடியாத நிலைக்கு ஐ.தே.க. தலைமைத்துவம் தள்ளப்பட்டிருக்கின்றது. ஐ.தே.க. வானது டி.எஸ்.

சேனநாயக்கா, டட்லி சேனாநாயக்கா போன்ற சிரேஷ்ட தலைவர்கள் தலைமை வகித்த கட்சி, அத்தலைவர்கள் தேசியத் துவத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து செயற்பட்டார்கள். அப்படியான நிலைமை இப்போது ஐ.தே.கவில் இல்லை.

பயங்கரவாதத்தை முழுமையாக ஒழித்துக் கட்டுவதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடவடிக்கை எடுக்கப்பட்ட போது பிரதான எதிர்க்கட்சியான ஐ.தேக. அதற்கு ஆதரவு நல்கவில்லை. யுத்தத்தில் நாம் வெற்றி அடைவோம் என முழு நாட்டு மக்களும் எதிர்பார்த்திருக்கையில், இவர்கள் நாம் யுத்தத்தில் தோல்வியுற்று நெருக்கடிக்குள் சிக்கிக் கொள்ள வேண்டுமென விரும்பினர். அவர்களது எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை. யுத்தம் முடிந்து நாட்டில் அமைதி ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது.

பிரதான எதிர்க்கட்சியான ஐ.தேக.க. வினரும், புலி ஆதரவாளர்களும் வெளிநாடுகளுக்கு வழங்கிய பிழையான தகவல்கள் தான் ஐ.நா. செயலாளர் நாயகம் இலங்கை விவகாரம் தொடர்பாக நிபுணர் குழுவை நியமிக்க வழி செய்தது என்றாலும் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ்ஸின் செயல்திறன் மிக்க நடவடிக்கைகளால் அந்த நிபுணர் குழுவே காணாமல் போயுள்ளது என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

பொன்சேகாவின் எம்.பி. பதவி வெற்றிடம்; பாராளுமன்ற செயலாளர் அறிவிப்பு






ஜனநாயகத் தேசிய கூட்டமை ப்பு கொழும்பு மாவட்ட எம். பி. சரத் பொன்சேகாவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடமாக உள்ளதாக பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகம் தம்மிக தசனாயக்க நேற்று (7) தேர்தல் ஆணை யாளருக்கு அறிவித்துள்ளார்.

பாராளுமன்ற தேர்தல் சட்டத்தின் 66-டீ சரத்தின் பிரகாரம் இந்த பாராளுமன்ற உறுப்பினர் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக பாராளுமன்ற பதில் செயலாளர் எழுத்து மூலம் அறிவித்துள்ளார். மேற்படி சட்டத்தின்64-ளி சரத்தின் படி பாராளுமன்ற பதில் செயலாளர் இதனை அறிவித்து ள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.

இரண்டாவது இராணுவ நீதிமன்றம் சரத் பொன்சேகாவு க்கு 30 மாத கடூழிய சிறைத்தண் டனை வழங்கித் தீர்ப்பளித்தது. இதற்கு முப்படைகளின் தளப தியான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த மாதம் 29ம் திகதி அங்கீகாரம் வழங்கினார். இதனடிப்படையில், பொன்சேகாவுக்கு எதிரான தண்டனை 30 ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்பட்டதோடு, அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

சரத் பொன்சேகாவின் வெற்றிடத்திற்கு கொழும்பு மாவட்டத்தில் இருந்து ஜனநாயக தேசிய கூட்டமைப்பு சார்பாக போட்டியிட்டு பட்டியலில் அடுத்ததாக உள்ள லக்ஷ்மன் நிபுனஆரச்சி நியமிக்கப்பட உள்ளதாக அறியவருகிறது.

இதேவேளை, சரத் பொன்சேகாவின் எம். பி. பதவி வெற்றிடமாக இருப்பதாக பாராளுமன்ற பதில் செயலாளர் அறிவித்திருப்பது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சபையில் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்த பிரதி சபாநாயகர் பிரியங்கா ஜயரட்ன, அரசியலமைப்பின் பிரகாரம் சட்டபூர்வமாகவே பாராளு மன்ற செயலாளர் அறிவித்துள்ளதாகக் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

வீடமைப்பு, ரயில் பாதை இந்திய வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணா வடக்கில் அபி. திட்டங்களுக்கு அடிக்கல்


உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வரவுள்ள இந்திய வெளியுறவு த்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா வடக்கில் இந்திய அரசின் உதவியினால் முன் னெடுக்கப்படவுள்ள பல்வேறு அபிவிருத்தி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவுள்ளார்.

எதிர்வரும் 29 ஆம் திகதி வட மாகாணத்திற்கு விஜயம் செய்யவுள்ள அவர் வீடமைப்புத் திட்டம், ரயில் பாதைகள் அமைக்கும் வேலைத்திட்ட ங்களுக்காக அடிக்கல் நாட்டவுள் ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறிக்கும் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் அசோக் கே. காந்திற்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளது.

யாழ். அரசாங்க அதிபர் காரியாலயத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போதே மேற்படி விடயங்கள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டுள்ளன. மடுவிலிருந்து தலை மன்னார் வரையும் ஓமந்தையிலிருந்து பளை வரையும் இந்திய அரசின் உதவியுடன் ரயில் பாதை அமைக்கப்படவுள்ளது.

எதிர்வரும் 29 ஆம் திகதி மாங்குளம் பிரதேசத்தில் நடைபெறவுள்ள அடிக்கல் நாட்டும் நிகழ்வில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா கலந்து கொள்ளவுள்ளார்.

இதேவேளை, இந்திய அரசின் உதவியுடன் வடபகுதியில் 50 ஆயிரம் வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளது. இதன் ஆரம்பகட்டமாக யாழ்ப்பாணத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள 150 வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்விலும் அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா கலந்து கொள்ளவுள்ளதாக ஆளுநர் மேலும் தெரிவித்தார்.

வட பகுதிக்கு விஜயம் செய்யும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் தலைமையிலான உயர் மட்டக்குழுவினர் யாழ்ப்பாணம் உட்பட வடக்கின் பல்வேறு பகுதிகளுக்கும் செல்லவுள்ளதாக ஆளுநர் குறிப்பிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...

நல்லிணக்க குழு தலைவர் புனர்வாழ்வு முகாம்களுக்கு சென்று நிலைமை ஆராய்வு






பயங்கரவாத தடுப்புப் பிரிவினருடன் பேச்சுவார்த்தை நடத்திய நல்லிணக்க ஆணைக்குழுவின் தலைவர் சீ. ஆர்.டி. சில்வா, புனர்வாழ்வு முகாம்களுக்குச் சென்று நிலைமைகளை நேரில் ஆராய்ந்துள்ளார்.

முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள வர்களின் விடுதலை குறித்து பயங்கரவாத தடுப்புப் பிரிவினரை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்திய ஆணைக்குழுவின் தலைவர் சில்வா, ஓமந்தைக்குச் சென்று இளைஞர்களைச் சந்தித்துள்ளார்.

புனர்வாழ்வு பெற்று வரும் இளைஞர் யுவதிகள் குறித்துப் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் தெரிவித்த தகவல்களின் அடிப்படையில், ஆணைக்குழுவின் தலைவர் சீ.ஆர்.டி.சில்வா, புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்களைச் சந்தித்துள்ளாரென கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் ஓர் உயர் அதிகாரி தினகரனுக்குத் தெரிவித்தார். தடுத்து வைக்கப்பட்டுள்ளவர் களின் விடுதலை தொடர்பில் விரைவில் தீர்மானமொன்று எடுக்கப்படுமென்றும் அவ்வதிகாரி கூறினார்.

ஓமந்தை புனர்வாழ்வு முகாமுக்குச் சென்ற ஆணைக்குழுவின் தலைவர் சில்வாவுடன் மேலும் மூன்று உறுப்பினர்களும் சென்று இளைஞர், யுவதிகளுடன் கலந்துரையாடித் தகவல்களைப் பெற்றுக்கொண்டுள்ளனர். இதன் அடிப்படையில் விரைவில் முக்கிய தீர்மானமொன்றை எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஆணைக்குழுவின் உயரதிகாரி மேலும் குறிப்பிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...

ம.ம. முன்னணி கூட்டத்தில் சூடானவாதம்: இராதாகிருஷ்ணனுக்கு தலைமை பொறுப்பு வழங்க கட்சி இணக்கம்


நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வீ. இராதாகிருஷ்ணனை மலையக மக்கள் முன்னணியில் இணைத்துக் கொள்வது தொடர்பாக நடைபெற்ற கூட்டத்தில் காரசாரமான வாதப் பிரதிவாத ங்களுக்குப் பின்னர் முடிவொன்று எட்டப்பட்டுள்ளதாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

இதன்படி பாராளுமன்ற உறுப்பினர் இராதாகிருஷ்ணனுக்குத் தலைமைப் பதவியை வழங்கி அவரைக் கட்சியில் இணைத்துக் கொள்வதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாக அறிய வருகிறது.

பம்பலப்பிட்டி வெஸ்ரன் ஹோட்டலில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற கூட்டத்திலேயே இந்த இணக்கம் ஏற்பட்டுள்ளதாக கட்சியின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன. முதல்நாள் நடைபெற்ற கூட்டத்தில் காரசாரமாக விவா தம் நடைபெற்றுள்ளது. இதன்போது கட்சியின் சில மூத்த உறுப்பினர்களுக் கிடையே சூடான வார்த்தைப் பிரயோக ங்கள் இடம்பெற்றதாகவும் தகவல்கள் தெரிவித்தன.

பாராளுமன்ற உறுப்பினர் இராதாகிருஷ்ணனை கட்சிக்குள் இணைத்துக் கொள்வதில் ஓர் இணக்கத்திற்கு வராவிட்டால் கட்சியிலிருந்து விலக்கிவிடப்போவதாக முக்கிய உறுப்பினர்கள் சிலர் எச்சரித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, ஏற்கனவே பிடிவாதப் போக்கிலிருந்த சிலர் தமது நிலைப்பாட்டைத் தளர்த்தி இராதா கிருஷ்ணனைத் தலைவராக உள்வாங்குவதற்கு இணக்கம் தெரிவித்துவிட்டதாகத் தெரிய வருகின்றது.

அடுத்த கட்டமாக கட்சியின் எதிர்கால செயற்பாடுகள் எவ்வாறு அமைய வேண்டுமெனக் கலந்துரையாடப்பட்டு வருகின்றது. இது தொடர்பில் இராதாகிருஷ்ணன் எம்.பீ. யிடமும் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுவிட்டதாகவும் ‘தினகரனு’க்குத் தெரியவந்துள்ளது.
மேலும் இங்கே தொடர்க...